Quantcast
Channel: அவலங்கள்

இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..

$
0
0
இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் ..
புதிய தலைமுறைக்காக..  சாத்திரி.

இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா"என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது .

 இந்தக் கட்டுரை எழுதும் நேரம் வரை  தமிழர்கள் பெரும்பான்மையாக்கள் வாழும் வடகிழக்கு முழுதும்  கடையடைப்பு,பணிப்புறக்கணிப்பு ஆகியவற்றால் நகரம் வெறிச்சோடிக்கிடப்பதோடு.அங்கங்கே காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலும் போராட்டம் நடந்துள்ளது .அது மட்டுமல்லாது சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை தமிழக கட்சிகள் சில முற்றுகையிட்டு போராட்டம் என நிமிடத்துக்கு நிமிடம் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றது.

இனி விடயத்துக்கு வருவோம். அண்மைக்காலமாக யாழ் நகரத்தில் பாலியல் வன்முறை,திருட்டு,போதைப்பொருள் கடத்தல் ஆகியன அதிகரித்திருப்பதால்,நகரம் முழுவதும் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரோந்தில் ஈடுபடவேண்டும் என்று யாழ் நீதிபதி இளஞ்செழியன் கடுமையான உத்தரவொன்றினை  பிறப்பித்திருந்தார்.இந்த உத்தரவு அமுலுக்கு வந்த சில நாட்களில் 22 ந் திகதி இரவு நேரம் 11.50 வீதியில் மோட்டார் பைக்கில்  சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்களை காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
மறுநாள் காலை இது விபத்து என்றே செய்திகள் வெளியானது.இளவட்டங்கள் வழமை போல தண்ணியடிச்சிட்டு கண்மண் தெரியாமல் வண்டி ஓட்டியிருப்பாங்கள் என்று அனைவரும் நினைத்திருந்த வேளை  மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் துப்பாக்கி சூட்டு காயங்கள் இருப்பதால் கொலை என்கிற செய்தி மதியம் வெளியானது. இதன் பின்னரே பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிக்கின்றது.சம்பவம் நடந்த இடத்துக்கு ஊடகவியலார்களோ பொதுமக்களோ போக முடியாமல் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

தடவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு சென்றபோது துப்பாக்கியால் சுட்ட தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது."துப்பாக்கி சூட்டில்"மரணம் என்கிற மருத்துவர்களின் அறிக்கை ஊடகங்களில் வெளியான பின்னர்தான் தவறுதலான துப்பாக்கி சூட்டினால் மாணவர்கள் இறந்து போனார்கள்.இரவு ரோந்தில் இருந்த காவல்துறையினர் பைக்கில் வந்தவர்களை மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதால்  கொளையர்கள் என நினைத்து துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டார்கள்.சம்பவத்துடன் தொடர்புடைய 5 போலிசாரையும் கைது செய்துள்ளோம் என்கிற அறிக்கை காவல்துறை திணைக்களத்தால் வெளியிடப்பட்கின்றது .

இதனையடுத்து யாழில் தொடங்கிய ஆர்பாட்டம் ஊர்வலங்கள் மற்றைய நகரங்களுக்கும் பரவி  சென்னையையும்  தாண்டி தமிழர்கள் வாழும் நாடுகளுக்கும் பரவியுள்ளது.ஒரு காலத்தில் தமிழனுக்கு ஒரு பிரச்சனைஎன்றால் வீட்டுக்குள்ளேயே  அழுதுவிட்டு ஊருக்குள்ளேயே அந்த செய்தி அடங்கிப்போய்விடும்.ஆனால் இன்றைய தொழில்நுட்பம் ஒரு செக்கனிலேயே உலகத் தமிழரை ஒன்றிணைக்கிறது என்பது நல்ல விடயம்தான்.ஆனால் முக்கியமான இன்னொரு விடயம் என்னவெனில் 30 ஆண்டு காலப் போர் கொடுத்த இழப்பும் வலியும் மீண்டுமொருமுறை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களிடம் முகத்தில் கவலையும்.இந்த சம்பவத்தை பெரிதாக்கி மீண்டும் இன மோதலாக்கி சுயலாபம் தேட நினைப்பவர்கள் நாக்கில் எச்சில் ஊறவும் தொடங்கிவிட்டது .

இதே வேளை "வடக்கு கிழக்கில் நடக்கும் கலவரங்களுக்குப்பின்னல் முன்னைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவு உள்ளது".. என ஒய்வு பெற்ற காவலதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்தை சாதரணமாக கடந்துபோய் விட முடியாது.காரணம்இப்போதுள்ள அரசானது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளோடு,மேற்குலகின் ஆசிர்வாதத்தோடும்,குறைந்தளவு பெருன்பான்மையோடு உருவான கூட்டு அரசே.மகிந்தாவை அரசியல் அநாதையாக்க அவர்மீதும் அவரது குடும்ப அங்கதவர்கள்மீதும் தொடர்ச்சியாக பாயும் வழக்குகளாலும் கைதுகளாலும் அவர் திணறிப்போயிருந்தாலும். புலிகளை தோற்கடித்ததனால் இராணுவம்,காவல்துறை,அரச அதிகாரிகள் மட்டுமல்ல சிங்கள மக்களின் பெரும் ஆதரவு இப்போதும் மகிந்தவுக்கு உள்ளது.

இப்போதுள்ள அரசை நெருக்கடிக்குள் தள்ளி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கோடு  மகிந்த ஆதரவாளர்களே இதுபோன்ற சம்பவங்களை தூண்டிவிடுவதாகவே பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள்.அதுமட்டுமல்ல நீண்ட காலமாகவே வன்முறையில் ஈடுபடும் குழுவென ஆவா குழு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது .அது மட்டுமல்ல 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த  பின்னர் காவல்துறை அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிமைகோரிய பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் அவர்கள் காவல்துறையின் ஆதரவோடு இயங்க வேண்டும்.அல்லது இராணுவப்புலனாய்வுப்பிரிவினரே அதனை இயக்கவேண்டும் என்கிற சந்தேகத்தை பாராளுமன்றத்திலேயே பல உறுப்பினர்கள் எழுப்பியுள்ளார்கள்.

எது எப்படியிருப்பினும் நடந்த சம்பவத்திற்கு கடந்த காலங்களைப் போலவல்லாது உடனடியாக சம்பத்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு .அரச தலைவர் முதற்கொண்டு சிங்களத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகள்,பத்திரிகைகள்,மாணவர்கள் பொதுமக்கள் என கண்டனங்கள் தெரிவித்துள்ளதோடு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்கள்.எனவே இன அழிப்பு,இன்னுமொரு போராட்டம் என போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.நடந்தது சட்ட ஒழுங்குப்பிரச்சனையே.அதனை சட்டப்படி எதிர்கொள்வதோடு இனிவருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க போராட்டங்களை நடத்துபவர்கள் ஆவாகுழு போன்ற வன்முறைக்குழுக்களை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வைத்தே போராடவேண்டும் ..

காடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.

$
0
0
காடுவரை உறவு
இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக  (சாத்திரி)

குடியேற்றவாசிகளின் காடு  அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு  ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங்கத் தொடங்கியிருந்தார்கள்.


அவர்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படத் தொடங்கவே பிரான்சின் கத்தோலிக்க உதவி அமைப்பானது 1999 ம் ஆண்டின் இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சில தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் குடியேற்றவாசிகளை தங்கவைத்து உணவும் வழங்கத் தொடங்கினார்கள்.
சில பத்துப் பேரோடு தொடங்கிய முகாம்.வளைகுடா யுத்தம்,ஆப்கானில் தலிபான்கள் மீதான யுத்தம்,என்று விரிவடைத்து,அரபு வசந்தம் என்கிற பெயரில் எகிப்து,துனிசியா,லிபியா,சிரியா..உள்நாடுக் கலவரங்களாக வடிவெடுத்து இன்று ஐ.எஸ்.ஐஎஸ் .மீதான தாக்குதலாக  இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்திருப்பதைப் போலவே.இந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களால் குடியேற்றவாசிகளின் காடானது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களோடு பரந்து விரிந்து நிற்கிறது.மிக அமைதியானதும் மீன்பிடிமற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்தக் நகரம்  பலவருடங்களாகவே குடியேற்றவாசிகளால் நின்மதியிழந்து போயுள்ளது.

தங்கள் பண்ணைகள்,வயல்கள்,கடைகள்,வீடுகள் என்று எங்கும் ஒரே திருட்டு.வீதியிலும் நின்மதியாக நடமாடமுடியவில்லை.திடிரென வந்து எல்லாவற்றையும் பறித்துப் போகிறார்கள்.பணத் தேவைக்காக பாலியல்தொழில்,போதைப்பொருள் வியாபாரம் என குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை CALAIS நகரத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அந்த நகரத்து மக்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது மட்டுமலாது வெளிநாடவர்கள் மீதான உச்ச கட்ட வெறுப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.இவர்களின் வெறுப்பானது கடந்த உள்ளட்சிச் தேர்தலிலும் எதிரொலித்தது.குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துடைய தீவிர வலதுசாரிக் கட்சியான front natinal க்கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்படி குடியேற்றவாசிகளுக்கு எதிராக நகர மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது.அவர்களுக்கான கழிப்பறை ,போதிய உணவு உடை என்கிற அடிப்படை வசதிகள்,குழந்தைகளுக்கான கல்வி,பெண்களுக்கான பாதுகாப்பு  எதுவுமே இல்லை எனவே அவற்றை அரசு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக் கிறார்கள்.அதே நேரம் இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையை பிரிக்கும் 30 கி.மீ  தூரக்கடலை கடப்பதற்காக சிலர் சிறிய படகுகளிலும் நீந்தியும், இரயிலின் பின்னல் தொற்றிக்கொண்டும் ஆபத்தான பயணங்களை முயற்சி செய்து இறந்தும் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தும் கடற்கரை பகுதியில் முட்கம்பி வேலியமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .

தொடர்ச்சியான பல போராட்டங்களின் பின்னர் பிரான்சில் பதினோரு இடங்களில் முகாம்களை அமைத்து அங்கு அனைவரையும் தங்கவைப்பதோடு குடியேற்றவாசிகளின் காட்டிற்கு முடிவு கட்டுவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டம் கட்டமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகிறார்கள்.ஒரு பக்கத்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காரணம் இங்கிலாந்து என்பது என்பதுதான் அவர்களது கனவு தேசம்.அதற்குள் நுழைந்து விட்டால் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் .இதே பிரச்னை எம்மவர்களிடமும் உள்ளது.ஐரோப்பவில் மற்றைய நாடுகளில் வதிவிட அனுமதி,வீட்டு வசதி,நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் பெரும்பாலான தமிழர்கள் இங்கிலாந்து நோக்கியே ஓடுகிறார்கள்.அதற்கு காரணம் ஆங்கில மோகம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை .

இது இப்படியிருக்க எங்களின் வரிப்பணத்தை வீணடித்து எதற்காக இவர்களை வைத்து பராமரிக்க வேண்டும்?எனவே  குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என  front natinal க்கட்சியும் தீவிர வலதுசாரிகளும் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.அது மட்டுமல்ல இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே குடியேற்றவாசிகளின் பிரச்சனை யால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்த வருடம் சித்திரை மாதம் பிரான்சில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் குடியேற்றவாசிகளின் பிரச்சனையே முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது மடுமல்லாமல் அவர்களின் தலைவிதியையும் அதுவே தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.

இதே நேரம் இந்த வருடம் மட்டும் கடல் வழியாக சுமார் நான்கு இலச்சம் குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.அவர்களை சமாளிக்க முடியாமல் இத்தாலி விழி பிதுங்கி நிற்கும் அதே வேளை .அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை கை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் மூவாயிரம் பேர் வரை பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள்.இத்தாலி பிரான்ஸ் எல்லையில் இன்னொரு குடியேற்ற வாசிகளின் காடு உருவாகிக்கொண்டிருக்கின்றது ..



கக்கூஸ் ...(கதையல்ல கலாய் ...)

$
0
0
கக்கூஸ்
கதையல்ல கலாய் ...
ஜீவநதிக்காக..சாத்திரி .

வாஷிங்டன் சிட்டிசியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள் இழுத்துக்கொண்டு  வந்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
கையில் ஒரு பைலோடு செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்.கதிரையை காலால் தள்ளியபடி எழுந்த தலைவர் கோபமாக  "யோவ் என்னதான்யா நடக்குது .வழிக்கு வருவாங்களா இல்லையா"..

"இல்லை சார் ..அவங்கள் வழிக்கு வர மாட்டாங்களாம்.மன்னிக்கோணும் "என்றார்  பவ்வியமாக .

இதை சொல்லவா உனக்கு கோட்டு சூட்டு வாங்கி தந்து.டிக்கெட்டும் போட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பி வைச்சனான்.இது ஒண்டும் கந்து வட்டிக்கு காசு குடுக்கிற ஏரியா ரவுடியோ.. பணத்தை வாங்கிட்டு ஏமாத்திர பைனான்ஸ் கம்பனியோ அல்ல.. உலக த்தில உள்ள வங்கிகளுக்கே கடன் குடுக்கிற உலக வங்கி .188 நாடுளிலை கிளையும் ..88 நாடுகளில்லை வேரும் வைச்சிருக்கிறோம் தெரியுமா?".. என்று கத்தியபடி . மௌனமாக தலை குனித்து நின்ற செயலாளரின் "டை". யில் பிடித்து  யன்னலோரம் இழுத்துப் போனவர்."பார்   நல்லாப் பார் ..ஒட்டு மொத்த மீடியாவும் இங்கைதான் நிக்கிறாங்கள்."உலக வங்கியால் போடப்பட்ட திட்டம் படு தோல்வி"  என்று கொட்டை எழுத்திலையும், பிரேக்கின் நியூசிலையும்   போட்டு கிழி ,கிழி ,கிழி எண்டு கலா மாஸ்டரை விட மோசமா கிழிக்கப் போறாங்கள்.வெளியிலை தலை காட்ட முடியாது.பதவியை விட்டு விலகி பன்னி மேக்கப் போகவேண்டியதுதான்.

"சார் நீங்களே ஒரு தடவை நேரிலை போய் பார்த்தால் தான் உங்களுக்கு நிலைமை புரியும்.வரும்போதே என்னோடை பதவி விலகல் கடிதத்தை கொண்டு வந்திட்டேன்.நான் தோத்துப் போயிட்டேன் சார்.கடைசியா எனக்கு கொஞ்சம் கடன் கொடுத்தால் நானே சொந்தமா நாலு பன்னியை வாங்கி பிளைச்சுக்குவேன்"..என்றபடி கடிதத்தை நீட்டவே..அதை வாங்கி கிழித்து குப்பைக் கூடையில் போட்டவர் .."நானே ஸ்ரீலங்கா போறேன்.நான் வாறேன் எண்டு போன் பண்ணி சொல்லு"..  வேகமாக அங்கிருந்து வெளியேறினார் ஜிம் யோங் கிம் ......
000000000000000000000000000000000000000000

அன்றைய  தினக்கறள் பத்திரிகையோடு கழிப்பறைக்குள் புகுந்து கதவை சாத்திவிட்டு குந்தியிருந்தபடி பேப்பரை விரித்த அருணனுக்கு பேரதிர்ச்சி.."உலக வங்கி திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப் பட்ட நவீன கழிப்பறைத் திட்டம் கை விடப் படுமா?..உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ஸ்ரீலங்கா விரைகிறார் ..வடமாகாண சபை முதலமைச்சர் முக்கினேஸ்வரன் அவர்கள் கழிப்பறை சம்பந்தமான முக்கிய பிரச்சனைக்கு தீர்வுகாண  அனைத்து கட்சிகளையும் அழைத்துள்ளார்"..செய்தியை படித்த அருணனுக்கு லேசாய் தலை சுற்றியது. அருகிலிருந்த தண்ணி வாளியைப்  பிடித்தபடியே அவசராம இருந்து முடித்து கழுவியவன். "ச்சே  போச்சு..என்னுடைய கனவு; கற்பனை;ஆசை எல்லாமே போச்சு"..என்றபடி அங்கிருந்து வெளியேறி வேகமாக வந்து சத்தி டி.வி யைப் போட்டான்.  "நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி"  என்று பிரேக்கின் நியூஸ் போய்க்கொண்டிருந்தது..

அருணனின் பள்ளித்தோழன் பாலன் இலங்கையில் பிரச்சனைகள் தொடங்கியதுமே ஆஸ்திரேலியா போனவன்தான். இப்போ பிரச்சனைகள் முடிந்ததும் ஊருக்கு வந்து சண்டையிலை இடிந்து போயிருந்த வீட்டை முழுதுமாக இடித்து மாடி வீடாக கட்டி முடித்து குடி பூருதலுக்காக அருணனையும் அழைத்திருந்தான்.அதிசயத்தோடு ஒவ்வொரு அறையாக சுற்றிப்பார்த்துக்கொண்டு வந்தவனுக்கு "இது தான் கக்கூசு".. என்று பாலன் கதவை திறந்து காட்டியதுமே ஆச்சரியம்.வெள்ளை வெளேரென்ற பளிங்கு கற்கள்  பெரிய காண்டிகள் பதித்து வண்ண விளக்குகளோடு இருந்த கழிப்பறையில் கொமேட்டுக்கு உறை வேறு போட்டிருந்தது.தொட்டுப் பார்ப்பதற்காக கையை பக்கத்தில் கொண்டு போனதுமே சர் ...என்று தண்ணீர் பாய திடுக்கிட்டு நின்றவனை ... "பாத்தது போதும் வாடா".. என்று கையில் பிடித்து இழுத்து வெளியே கொண்டு போய் விட்டான் பாலன் .

ஒரு தடவையாவது அதிலை ஒண்ணுக்கு அடிக்க வேணும் என்று அருணனின் மனது தவியாய் தவித்தாலும் அடக்கிக்கொண்டு அவனுக்குப் பின்னால் போய் விட்டான்.விருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது வயிற்றை தடவியபடி "டேய்  லேசா கலக்குது ஒருக்கா".. என்று கெஞ்சியவனிடம். "எல்லாமே புதிசாய் இருக்கு உனக்கு இந்த  வெஸ்டர்ன்  கக்கூஸ் எல்லாம் பழக்கமிருக்காது நாறடிச்சிடுவாய்  பின்னலை பெரிய பனங்காணி இருக்கு".. என்று அனுப்பி விட்டான்.அருணனுக்கு பெருத்த அவமானமாகிப் போய் விட்டது. ஒரு நாள் ..என்றைக்கவது ஒரு நாள் இதுக்காகவே கொழும்புக்கு போய் ஹோட்டேல் போட்டு ஆசையை தீர்த்துவிடுவது என்று சபதமெடுத்திருந்தவனுக்கு."உலக வங்கியின் நிதியுதவியோடு  முகமாலையில் நவீன கழிப்பறை திட்டம்".. என்கிற செய்தியைப் படித்த போது முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்த முழு சுதந்திரத்தை அனுபவிப்பது போன்றதொரு உணர்வு. "அடே நண்பா உன்னை வெல்வேன்"..  என்று சத்தமாக கத்தியபடியே பத்திரிகையை கிழித்தெறிந்து ஆனந்ததில் துள்ளிக் குதித்தவன்
இரண்டு தடவை முகமாலைக்குப் போய் கழிப்பறை கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட இடத்தைக் கூட சுற்றிப் பார்த்து கைத் தொலைபேசியில் படமெடுத்து  பேஸ் புக்கிலும் போட்டு விட்டிருந்தான் .அத்திவாரம் வெட்டப்பட்டு அபிவிருத்தி அமைச்சரால் அடிக்கல்லும் நாட்டப் பட்ட நிலையில் .. "கழிப்பறையை முகமாலையில்  கட்டக் கூடாது இயக்கச்சியில் தான் கட்ட வேண்டும்"..என்று தமிழ் தோசைக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையை கிளப்பியுள்ளதால் நவீன கழிப்பறைத் திட்டத்தில் இழுபறி.என்பதுதான் இப்போதுள்ள பிறேக்கிங் நியூஸ் .
0000000000000000000000000000000000000000000000000000

யாழ் நாவலர் கலாச்சார மண்டபம்  அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாலர்களாலும் நிரம்பியிருந்தது.மத்தியில் மேசைமீது நவீன கழிப்பறைக் கட்டிடத்தின் வரைபடமும் அதன் மினியேச்சர் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.கழுத்தில் மாலையோடு கையில் இருந்த செவ்விளநீரை ஸ்ட்ரா போட்டு உறுஞ்சியபடி நின்றிருந்த தலைவர் ஜிம் யோங் கிம் மிற்கு  .உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி விளக்கத்  தொடங்குகிறார். "சார் இதுதான் நாங்கள் கட்டப் போகும் கழிப்பறைகள்  .இதற்கான நீர் வழங்கலை இரணைமடுக் குளத்திலிருந்து கொண்டு வரப் போகிறோம் .இதன் கழிவுகளை குழாய் வழியாக பரந்தன் வரை கொண்டு சென்று அங்குள்ள இரசாயனத் தொழிற்சாலையில் சேமித்து எரி வாயுவாக மாற்றும் திட்டம் உள்ளது அதனை யேர்மனிய  பயர் நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது.எரிவாயு எடுத்து முடிந்த மீதிக் கழிவுகள் கிளிநொச்சிவரை கொண்டு சென்று அங்கு வயல்களுக்கு பசளையாக பயன்படுத்தப்படும்" ..என்று சொல்லி விட்டு நிமிர்ந்தார் .

ஜிம் யோங் கிம் குடித்து முடித்த இளனிக் கோம்பையை  ஓடோடிப் போய் வாங்கிய கிரிதரன். "..ஐயா திட்டமெல்லாம் நல்லது ஆனால் முகமாலையில் வேண்டாம்.யாழ்ப்பாணத்தாரின்  கழிவுகளை வன்னியிலை கொட்ட அனுமதிக்க முடியாது.அதே நேரம் அவங்கள் கழுவுறதுக்கு இரணைமடுவிலையிருந்து தண்ணியும் குடுக்க முடியாது இயக்கச்சியிலை தான் கட்ட வேணும் என்று முடிக்க முன்னரே ."இது கழுவிற மேட்டர் இல்லை.துடைக்கிற மேட்டர்  இது கூடத் தெரியாமல் எம்.பி யாம்.தமிழனுக்கு குடிக்கிற தண்ணியால தான் பிரச்னை என்றால் கழுவுற தண்ணியாலும் பிரச்சனை"..என்று தாடியை தடவியபடி சிரித்தார்  தயானந்தா.
அதுவரை மினியேச்சரை உத்துபார்த்துக்கொண்டிருந்த சிவாஜிசிங்கம்   உரத்த  குரலில்.. "இது தமிழரின் கட்டிடக்கலை இல்லை,ஆரியக் கட்டிடக்கலை.கழிப்பறைக் கட்டிடம் என்கிற பெயரில்  இது திட்டமிட்ட கலாசார அழிப்பு இதற்கு அனுமதிக்க முடியாது .கக்கூஸ் என்பதே அடிமைச் சின்னம்.அதனால் தான்  1985 ம் ஆண்டே நாங்கள் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தை தாக்கும்போதே முதலாவதாக அங்கிருந்தத .கக்கூசை குண்டுவைத்து தகர்த்தோம்.எங்கேயும் எபோதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எமது கொள்கை.கடந்த தேர்தலில் மகிந்த்தாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன் .இந்த அமெரிக்க தேர்தலில் கூட ஒபாமா பெண்டாட்டி கிலாரி வெற்றிபெற நல்லூரில் ஆயிரம் தேங்காயை அசராமல் அடித்துடைத்தவன்".. என்றார்.

சிவாஜி சிங்கம் சொன்னதை அப்படியே ஜிம் யோங் கிம்  மிற்கு உதவியாளர் மொழிபெயர்த்து கூறி முடித்ததும் அவருக்கு வியர்த்து வழியத் தொடங்க கோட்டை கழற்றி கதிரையில் போட்டுவிட்டு"உண்மையிலேயே  இந்தாள் லூசா..இல்லை லூசு மாதிரி நடிக்கிறாரா. கக்கூஸ் கட்டிடத்திலை என்ன கலை வேண்டிக் கிடக்கு இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ ".என்று நினைத்தபடி முகத்தில் வழிந்த வியர்வையை  துடைத்துக் கொண்டார்.
அதற்கிடையில் கிம்  மிற்கு முன்னால் நின்றவர்கள் இரண்டாகப் பிரிந்து நின்று  "முகமாலையில் தான் கட்டவேணும் ..இலையில்லை இயக்கச்சியில் கட்ட வேணும்"என்று வாய் தர்க்கத்தில் இறங்கத் தொடங்கவே.அப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்த கனகேந்திரன் "வருகிற வழியிலை சைக்கிளுக்கு காத்து போயிட்டுது அதான் பிந்திட்டுது"..என்றவர் சைக்கிளை நிறுத்திவிட்டு.  "வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு" ..என்று கத்திக்கொண்டிருக்க.அங்கு வந்த சமந்திரன் ."டேய்  வெள்ளைக்காரன் நாடைவிட்டுப் போய் 67 வருசமாச்சு"..

 நான் சொன்னது இந்த வெள்ளைக்காரனை ..

இவர் வெள்ளைக்காரன் இல்லை.ஜப்பான்காரன் ..

பார்க்க வெள்ளையாய் தானே இருக்கிறார் .."வெள்ளையனே வெளியேறு ..வெள்ளையனே வெளியேறு"..தொடர்ந்து கத்தினார் ..

"சைக்கிள் காத்துப் போனாலும் இவங்கள் திருந்த மாடான்கள்".. என்றபடியே சமந்திரன் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.இத்தனை களோபரங்களுக்கு மத்தியிலும் ஒருவர் மட்டும் ஒரு கதிரையில் சாய்ந்து அமைதியாக கொர் ...கொர் ..விட்டுக்கொண்டிருக்க அத்தனையையும் பார்த்த ஜிம் யோங் கிம்  கடுப்பாகி உதவியாளரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறவே  "சார் உங்கடை கோட்டை மறந்துவிட்டு போறிங்கள் "..என்று சத்தம் கேட்டது.திரும்பி பார்க்காமலேயே  "அதை நீங்களே போட்டு கிழியுங்கடா".. என்று விட்டு கிழம்பிவிட்டார் .
00000000000000000000000000000000000

மீண்டும் வாஷிங்டன் சிட்டியில்  வானுயர்ந்து  நிற்கும்  உலக வங்கி தலமையக  கட்டிடத்தின்  அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்   தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்..   பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள்.கையில் எந்த பைலும் இல்லாமல் செயலாளர் தலைவர் ஜிம் யோங் கிம்   அறைக்குள் நுழைத்ததும்."சார் ஸ்ரீலங்கா போனிங்களே என்னாச்சு?வெளியே மீடியா எல்லாம் காவல் நிக்கிறார்கள் என்ன சொல்ல"...

சொல்லு ..போய் சொல்லு ..திட்டத்தை அமேசன் காட்டுக்கு மாத்தியாச்சு எண்டு போய் சொல்லு ...

அமேசன் காட்டுக்கா ?...அங்கைதான் மனிசரே இல்லையே ....

பரவாயில்லை அனகொண்டா இருந்திட்டுப் போகட்டும் ...
செயலாளர் அங்கிருந்து வெளியேறினார் ...
.......................................................................................................................................................
குமணன் வீட்டிலிருந்த பழைய கதிரை ஒன்றை எடுத்து அதன் நடுவில் ஓட்டை போட்டுக்கொண்டிருந்தான் ...



கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம் தொகுப்பிலிருந்து

$
0
0
கிட்டு பற்றி.. அன்று சிந்திய ரத்தம்  தொகுப்பிலிருந்து ..

கேள்வி ..புலிகள் அமைப்பில் சிறந்தவியூகங்களை அமைத்து சிறப்பாகப் படை நடத்துபவர்கள் என்றால் முதன்மையானவர்களாக யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்.

பதில் ..புலிகள் அமைப்பில் எல்லாத் தளபதிகளிற்குமே தனித்தமையான சிறப்புக்கள் திறைமைகள் இருந்தது.படை நடத்தலை இரண்டு விதமாகப் பிரிக்லாம் ஒன்று சரியான தகவல்களோடு திட்டமிட்டு அந்தத் திட்டத்தின்படி படைநடத்துவது அதில் இழப்பு அல்லது மாற்றங்கள் ஏற்பட்டு இலக்கை அடைய முடியாத நிலை வந்ததும் நடவடிக்கையை நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு திட்டத்தை தயாரித்து தாக்குதலை தொடருதல் இப்படி படை நடத்தும் பல திறைமையான தளபதிகள் இருந்தார்கள். ஆனால் அடுத்த வகையான படை நடத்தல் என்னவெனில் யுத்தகளத்தில் ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் மாற்றங்களை அவதானித்தபடியே  மறுதரப்பின் வியூகங்களை தகர்ப்தற்காக சண்டைக்களத்தில் நின்றவாறே யுத்தத்தை நிறுத்தாமல் யுக்திகளை உடனுக்குடன் மாற்றியமைத்து இலக்கை அடையும்வரை படை நடத்தும் இராணுவ வல்லுணர்களாக  நான் பார்த்தவர்கள் கிட்டு.பால்ராச்.கருணாவை சொல்வேன்.இவர்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்வதனால்  முதலில் கிட்டு ..

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை  புலிகள் ஆதரவு எதிர்ப்பு அல்லது அரச தரப்பு என்று யார் எழுதினாலும் கிட்டு என்கிற பெயர் தவிர்க்க முடியாதாகும். ஆளுமை உள்ள ஒருவர் .நல்லதொரு சமையற்காரன்.முற் கோபக்கரன்.  ரத்த கொதிப்புக்காரன். . திறைமையான  தளபதி. மற்றைய இயக்கங்களை மோசமாக அழித்த கொலைகாரன்.படை நடத்துவதில் சிறந்த ராணுவ வல்லுனன்.ஆணாதிக்கவாதி.சிறந்த கலைஞன் ஓவியன். இப்படி  எல்லா கோணங்களாலும் எல்லாராலும் பார்க்கப் பட்டதொரு மனிதன்தான் கிட்டு.1985 ம் ஆண்டு தை மாதம் அச்சுவேலி பகுதியில் இருந்த புலிகள் முகாம் மீது   இலங்கை இராணுவத்தால் நடத்தப் பட்ட சுற்றி வழைப்பு தாக்குதலில் அன்றைய யாழ் மாவட்ட தளபதி பண்டிதர் கொல்லப் பட்டதும் அதற்கு அடுத்ததாக  யாழ் மாவட்ட பொறுப்பை யாரிடம் கொடுக்கலாமென   பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு  நடாவை   பொறுப்பாக போடலாமென  தலைமை  முடிவெடுத்தபோது  நடா அதனை மறுத்து கிட்டு அல்லது அருணாவிடம் பொறுப்பை கொடுக்குமாறு சொன்னதால் இறுதியாக கிட்டுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.கிட்டு யாழ் மாவட்டத்தை பொறுப்பு எடுத்த காலகட்டமானது முக்கியமானதாதொரு கலகட்டமாக அமைந்தது.

இலங்கையரசிற்கெதிரான  ஆயுத  போராட்டம் என்று சுமார் முப்பத்து மூன்று  இயக்கங்கள் தோற்றம் பெற்று அதில் பல மறையத் தொடங்கியும்  ஒரு இயக்கத்தால் மற்றைய இயக்கங்கள்  தடை அல்லது அழிக்கப் படவும் தொடங்கியிருந்த கால மாகும். இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் 85 ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இலங்கை இராணுவத்தின் தொகையை விட ஈழ விடுதலை வேண்டி தொடங்கப் பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களின் தொகை அதிகமாக இருந்தது  ஆனால் அவர்களிடமான  ஒற்றுமை யின்மை என்பது  கசக்கும் உண்மை.
 ஆரம்பிக்கப் பட்ட இயக்கங்களில் இந்தியாவின் ஆசீர் வாதம் பெற்ற  ரெலோ.ஈ.பி.ஆர்.எல்.எவ்.புலிகள்.ஈரோஸ் என்பன.இந்தியாவின் நிதி உதவியோடும் அவர்களது பயிற்சிகளோடும். பெரும் இயக்கங்களாக வளரத் தொடங்கியிருந்தன.புளொட் அமைப்பானது அப்போ இந்தியஅரசின் நேரடி  உதவிகள் பெறாமல் ஒதுங்கியிருந்தது ஆனால் இந்தியாவில் பல அமைப்புகளின் உதவி அதற்கு இருந்தது.இந்தியாவின் உதவியின்றி தம்பாபிள்ளை  மகேஸ்வரனின் T.E.A  ஜெகனின்  T.E.L.E என்பன ஓரளவு பலத்தோடு இயங்கிய இயக்கங்களாக இருந்தது. இவை அனைத்தும் இணைந்த கூட்டு முயற்சியில் யாழ் குடாவில் முதலாவதாக யாழ் கோட்டை இராணுவ முகாம் இலங்கையிலேயே முதன் முதலாக  கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டதொரு இராணுவ முகாமாக மாறியிருந்தது.இதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு இயக்கங்கள் பாதுகாப்பரண் அமைத்து பாது காக்கத் தொடங்கியிருந்தனர்.

கோட்டை இராணுவ முகாமானது நகரின்  மத்தியில் அமைந்திருந்ததால்  அதன் வீதி  அமைப்பு மற்றும் நெருக்கமான கட்டிடங்கள்  இயக்கங்களிற்கு  பாதுகாப்பானதாவும் இலகுவில் கட்டுப் பாட்டிற்குள்  கொண்டு வருவது சுலபமாகவும் இருந்தது.அதே நேரம் பலாலி. நாவற்குழி.காரைநகர். பருத்தித் துறை  இராணுவ முகாம்களை   புளொட்டும். ரெலோவும் .புலிகள் அமைப்பும் காவலரண்கள் அமைக்கத் தொடங்கியிருந்தாலும் அது அமைந்திருந்த  இடம் தோட்டங்களையும் பற்றை காடுகளாவும். வெளிகளாகவும். இருந்ததால்  சிரமப் பட்டு பல இழப்புக்களை சந்தித்து அவ்வப்போது இராணுவம் வெளியேறுவதும் சண்டைகளும் நடந்து கொண்டேயிருந்தது.கிட்டு பொறுப்பு எடுத்ததுமே யாழ் குடா எங்கும் இராணுவம் மீதான தாக்குதல்களை தீவிரப் படுத்தியிருந்தார்.அதே நேரம் ரெலோ மீதான தாக்குதலை தொடுத்து அது அழிக்கப் பட்டதையடுத்து மற்றைய இயக்கங்களுடனும்  அவ்வப்பொழுது  ஏற்பட்ட  மோதல்களினால்  அவர்களும் இராணுவ முகாம்களை  சுற்றியிருந்த  தங்கள் காவல் நிலைகளை விலக்கிக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் மற்றைய இயக்கங்களின் மீதும் தாக்குதல்களை தொடுத்தும் தடையும்  செய்ததன் பின்னர்  புலிகள் மட்டுமே தனிப் பெரும் சக்தியாக உருவெடுக்கத் தொடங்கினர்.

இங்கு  மற்று இயக்கக் காரர்களிற்கும் அதன் ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை விட கிட்டு மீதே அதிக கோபம் இருந்தது. அதே நேரம் இலங்கை இராணுவத்தின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள். மன்னாரில் நடந்த தாக்குதலில் கைது செய்யப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை  இலங்கையரசிடம் ஒப்படைப்பு  செய்து  புலிகள் அமைப்பின் அருணா மற்றும் காமினி ஆகியோரை மீட்ட முதலவது கைதிப் பரிமாற்றத்தையும் கிட்டு செய்திருந்தார்.அன்றைய காலகட்டத்தில்  உள்ளுர் பத்திரிகைகள் முதல் பொதுமக்கள் அனைவர் வாயிலும் எங்கும் கிட்டு எதிலும் கிட்டு என்கிற பெயரே உச்சரிக்கப் பட்ட காலங்களாயிருந்தன.எந்த  இராணுவ முகாமில் இருந்து இராணுவம் வெளியேறியிருந்தாலும்  சிறிது நேரத்தில்  கிட்டுவின் பச்சை நிற  ரொயோட்டா லான்சர்  கார் அங்கு வேகமாக வந்து பிறேக் அடிக்கும் தனது மக்னம் ரக கைத் துப்பாக்கியை  சுழற்றியபடி  கிட்டு கீழே இறங்குவார். சில நேரங்களின் கிட்டு சாப்பிட்ட கையை கூட கழுவாது விரலை சூப்பியபடி காரை ஓடிக்கொண்டு வருவார்..   "கையை கழுவிற நேரத்திற்குள்ளை   ஆமி யாழ்ப்பாணத்தை பிடிச்சிடுவாங்கள் அதுதான் கையை கூட கழுவ நேரமில்லாமல் கிட்டு  வாறான்டா".. என்று சக போராளிகளே கிண்டலடிப்பார்கள்.கிட்டுவின் லான்சர் கார் என்கிறபோது நினைவிற்கு வரும் விடயம்  இயக்கங்கள் அனைத்துமே அன்றைய காலத்தில் பொது மக்களிடமிருந்து வாகனங்களை கடத்துவதில்  நீ நான் போட்டி போட்டு செய்து கொண்டிருந்தனர். புளொட்டும்  ரொலோவும்  யாழில் வாகனக் கடத்தலில் பெயர் பேனவர்களாக இருந்தனர்.  யாழ்ப்பாண நகரிற்கு போயிருந்த  சண்லிப்பாயை  சேர்ந்த மதன் என்கிற ரெலோ உறுப்பினர்  வீடு வருவதற்காக  ஒரு  இலங்கை போக்குவரத்து சபை  பேருந்து ஒன்றை கடத்திக் கொண்டு வந்து   வீட்டிற்கு அருகில் வைத்து அதை கொழுத்தி விட்டு வீட்டிற்கு போன  சம்பவமும் நடந்திருந்தது.

 இது போன்ற சம்பவங்களால் பொது மக்கள்  இவர்கள் மீது வெறுப்படைந்திருந்தாலும்  அவர்கள் கைகளில் ஆயுதம் ஒன்று இருந்ததால்  மனதிற்குள் திட்டியபடி மெளமாக  இருந்தார்கள். அன்றைய காலங்களில் புலிகள் அமைப்பு  தமிழ் மக்களிடம்  இருந்து  வாகனங்களை கடத்தி கெட்ட பெயர் எடுக்காமல்  அவர்கள் சிங்கள பகுதிகளில் போய் வாகனங்களை கடத்திக்கொண்டு வருவார்கள். முக்கியமாக  மடு மாதா திருவிழா தொடங்கி விட்டிருந்தால் ஒரே கொண்டாட்டம்தான்  தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் பணக்காரர்களின் வாகனங்களை  காட்டுப் பகுதிகளில் வைத்து கடத்திகொண்டு போய் விடுவார்கள்.யாழில் உருந்துளியில்  பயணம்  செய்துகொண்டிருந்த  கிட்டுவிற்கும்  சொகுசு வாகனத்தில்  பயணம் செய்ய ஆசை வந்திருந்தது தனக்கொரு வாகனத்தை கடத்திக் கொண்டுவருமாறு கட்டளையிட்டிருந்தார்.மன்னார்  கண்டி வீதியை இணைக்கும்  கெப்பிற்றி கொலாவ  பகுதியில்  மதியமளவில் தென்னிலங்கை  வாகனங்களிற்காக புலிகள் காத்திருந்தார்கள்  பச்சை நிற  ரொயோட்டா  லான்சர் காரொன்று  வந்து கொண்டிருந்தது  மரக் குற்றியை  வீதியின் குறுக்கே  உருட்டி காரை மறிந்தவர்கள்  துப்பாக்கியை நீட்டினார்கள்  காரில் இரண்டு பிள்ளைகளோடு வந்தவர்  எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு தங்களை  ஒன்றும் செய்து விட வேண்டாமென சிங்களத்தில் கெஞ்சினார். அவர்களை  இறக்கிவிட்டு புலிகள் காரை கொண்டு போகும் வழியில்  காரின் ஆவணங்களை எடுத்து பார்த்தபோதுதான் அது ஒரு தமிழரின் கார் என்று  தெரிய வந்திருந்தது.அந்த காரில்  வந்திருந்தவர் நீர்கொழும்பை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர்  அவர்  தனது கார் யாழில் கிட்டு பாவிப்பதை  உறவினர்கள் மூலம் அறிந்துகொண்டு சில காலங்களின் பின்னர் யாழ் வந்தபோது கிட்டுவிடம் சென்று பணம் தரலாம் தான் ஆசையாக  வெளிநாட்டில் இருந்தே  இறக்குமதி செய்த கார்  தனக்கு ராசியானதும் கூட எனவே அதனை தந்து விடுமாறு கேட்டிருந்தார்.அதற்கு கிட்டு நானும் இப்பொழுது ஆசையாக  ஓடித் திரிகிறேன் ராசியாகவும் இருக்கின்றது என்றபடி தனது கைத் துப்பாக்கியை  எடுத்து துணியால் துடைத்தபடி கூறவே  வைத்தியர்  தலையை குனிந்தபடி வந்தவழியே போய் விட்டார்.  இது இப்படியிருக்க...

 யாழ் குடாவின்  சிறுவர்கள் கூட  ஒழித்து  பிடித்து விழையாட்டு  கள்ளன் பொலிஸ் விழையாட்டுக்களை  கை விட்டு இடுப்பில் ஒரு கயிற்றையே   பனம் நாரையோ  கட்டிக்கொண்டு  அதில் ஒரு  தடியை  அல்லது திருவிழா துப்பாக்கியை  செருகிக் கொண்டு  கிட்டு மாதிரி நடந்து   ஆமி  இயக்கம் என விழையாடத் தொடங்கியிருந்தார்கள் இளைஞர் யுவதிகள் மனதில்  சினிமா கதாநாயகர்களின்  இடங்கள் அழிக்கப்பட்டு  கிட்டு சாகசங்கள் நிறைந்த   கதாநாயகன் ஆகியிருந்தார்..  இந்த காலகட்டமே  மாத்தையா கிட்டு விரிசல்களிற்கு காரணமாக இருந்தது என்பதோடு பிரபாகரனிற்கும் கிட்டு மீதான ஒரு எச்சரிக்கை பார்வை இருந்து கொண்டேதான் இருந்தது. அன்றைய காலத்தில் பிரபாகரன்  மாத்தையாவையே  ஆதரிப்பவராக இருந்தார் என்பதே உண்மை. ஆனால் இன்றும் மற்றைய இயக்கங்களை  அழித்ததால்தான் தம்மால் போராட முடியவில்லை  அவர்களிடம் ஜன நாயகம் இல்லை  ஆயுதங்களால் அடக்கி ஒடுக்கினார்கள்  அதனால் தமிழீழம் எடுக்க முடியவில்லையென வெளிநாடுகளில் வசிக்கும் மாற்று இயக்கஉறுப்பினர்கள் தொடர்ந்தும் சொல்லி வருகின்றார்கள். .மற்றைய இயக்கங்களிடம்  உட் படுகொலைகளோ மாற்று இயக்கங்கள் மீதான  தாக்குதல்களோ வன்முறையோ மக்கள் மீதான தாக்குதல்கள் கடத்தல் கொலைகளோ துரோகிகள் என்று மண்டையில் போட்டுத் தள்ளிய  இரத்தக் கறை படித்த கைகள்  எங்களிடம் இல்லை நாங்கள் சுத்தமான  ஜனநாயகவாதிகள் என்று யாரும் தங்கள் கைகளை உயர்த்த முடியாதவர்களே.ஆனால் உண்மை என்னவெனில்  மாற்று இயக்கங்களும் அவ்வப்பொழுது  புலிகள் மீதான தாக்குதல்களை  சிறு அளவில் நடத்தியிருந்தாலும் அன்று அவர்களால் புலிகளை அழிக்க முடியவில்லை .கை முந்தியவன் சண்டியன் என்றொரு பழமொழி  ஊரில் உண்டு புலிகளை அன்று அவர்கள் அழிப்பதற்கான ஆயுதவசதி    மனவுறுதி மற்றும் திட்டமிடல் இருக்கவில்லை  இவை அனைத்தும் புலிகளிடம் அல்லது கிட்டுவிடம்  இருந்ததால்  அவர்கள் கை முந்தி  சண்டியர்களாகி அனைத்தையும் செய்து முடித்திருந்தார்கள் .

கிட்டு கதா நாயகன்ஆனார்.இறுதியாக  புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர்   புளொட்டிற்கு  பயந்து என்.எல்.எவ்.ரி . அமைப்பினரின் பாதுகாப்பில் இருந்தபடியே  அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். வினரின் தயாரிப்பு கைக்குண்டினை கிட்டு  இரவு வேளை தனது காதலியான சிந்தியாவை சந்திக்க  சென்றிருந்தபோது  கிட்டுவை  நோக்கி மீது எறிந்திருந்தனர். ஆனால் குண்டு வெடித்த நேரம் கிட்டு கார் கதவை திறந்து வெளியே இறங்கிய நேரம் அவரிற்கு பின்னால் இருந்த அவரது மெய் பாதுகாவலர் சாந்தா மணியும் பின் கதவை திற்ததால்  வெடித்த குண்டின் சிதறல்கள்  திறக்கப்பட்ட கார் கதவுகளால் தடுக்கப்பட்டு  கிட்டுவின் காலையும் சாந்தாமணியிலன் கைகளையும் பதம் பார்த்திருந்தது கிட்டுவின் காலும் சாந்தாமணியின் கையும்  சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டிருந்தது.இததோடு கிட்டுவின் சகாப்தம்  யாழில் முடிவிற்கு வந்திருந்தது.  இந்த குண்டு வெடிப்பின் தொடர்ச்சியாக இதனை  மாற்று இயக்கங்கள்  செய்திருக்கலாமென நினைத்து கைது செய்யப் பட்ட பலரோடு சிறு குற்றங்கள் மற்றும் நிதி கொடுக்க மறுத்தனால்  கைது செய்யப்பட்டு வைத்திருந்த யாழின் பிரபல  நகைக்கடை வியாபாரி  ஒரு வரும்  தடுத்து வைக்கப் பட்டிருந்த  யாழ் ஸ்ரான்லி வீதியில்  இருந்த  அரசரட்ணம்  என்பவரின்  வீட்டில்வைத்து அருணாவினால்   64 பேர் சுட்டுக் கொல்பட்டிருந்தார்கள்.  இதனையே  கந்தன்  கருணை படுகொலை  என இன்றுவரை  அடையாளப் படுத்தப் படுகின்றது. ஆனால் இது  யாழ்  நல்லூர்  வீதியில்  இருந்த  புலிகளின்  விசாரணை  முகாம்.  கந்தன்  கருணை  என்கிற  வீட்டில் நடந்ததாகவே  பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

மாத்தையாவே இதனை செய்திருக்கலாமென வதந்திகளும் பரவியிருந்தது. ஆனால் பலம் வாய்ந்த புலிகளின் புலனாய்வு பிரிவினரால் குண்டெறிந்த  தீப் பொறி குழுவினரை  உடனடியாக கண்டு பிடிக்க முடிந்திருக்கவில்லை  காலப்போக்கில் குண்டெறிந்தவர்களின் விபரங்கள் தெரிந்தபோது  அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
இது கிட்டுவின் ஒரு பக்கம் என்றால் மறு பக்கமானது அவர்  ஜரோப்பா  வரும்வரை  ஒரு ஆணாதிக்க வாதியாகவே இருந்தார்.புலிகள் அமைப்பிற்காக பெண்களை இணைத்துக்கொள்ளும்படி  தொடர்ச்சியாக பிரபாகரன் கோரிக்கை வைத்ததுக்கொண்டிருந்தபோதும்  பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும்  பாட்டியின் அல்லது  ஒரு ஆண் துணையோடு போகின்ற  பயம் கொண்ட எமது  பெண்களால்  ஆயுதங்களை தாங்கி காடு மேடுகளில் கடினமாக  திரித்தும் எதிரியோடு போரிடும் மன நிலை அவர்களிடம் இல்லை எனவே அவர்களை  இயக்கத்தில் இணைக்க முடியாது என நேரடியாகவே  பிரபாகரனிடம் தெரிவித்திருந்ததோடு இயக்கத்தில் பெண்களை சேர்ப்பதை எதிர்க்கவும் செய்தார்.ரெலோ இயக்கத்தில் இணைந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துச் சென்று கைவிடப் பட்ட மற்றும் பெரும்பாலும்  யாழ் தவிர்ந்த மற்றைய மாவட்டங்களில் இருந்து புலிகளில் இணைந்த 53 பெண்களிற்கு  தமிழ் நாட்டில் சிறுமலை பகுதியில் பயிற்சி  முடித்து அவர்களை யாழிற்கு அனுப்ப பிரபாகரன் முடிவெடுத்திருந்ததும் அதனை கிட்டு எதிர்த்ததால் அவர்களை கரன்(சங்கரின் சகோதரர்  இவர் ஒரு திறைமையான  மாலுமி  குமரப்பா புலேந்திரன் அகியோரின்  பயண வள்ளத்தை செலுத்தியவரும் அவர்களோடு கைதாகி குப்பியடித்து இறந்து போனார்) முலம் மன்னாரில்  கொண்டுவந்து  மன்னார் மாவட்ட தளபதி விக்ரரிடம் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது.  மன்னாரில் விக்கரரின் மரணத்தோடு மன்னாரின் பெரும்பகுதி இராணுவத்தின்  கைகளிற்கு போய்விட பெண்கள் அணி வன்னிக்கு மாத்தையாவின் பொறுப்பில் கொடுக்கப் பட்டிருந்தனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து பிரபாகரன்  யாழ் வந்த பின்னரே  பெண்கள் அணியினர் யாழிற்கு வர வழைக்கப் பட்டு யாழ் கோப்பாய்  பகுதியில் முகம் அமைத்திருந்தனர்.

அதோடு பிரபாகரன்  தொடர்ந்தும் பெண்களை  இயக்கத்தில் இணைப்பதற்கான முயற்சியை  கிட்டுவிடம் சொன்னபோது அதை கிட்டு நடை முறைப் படுத்தாதனால் அதன் பொறுப்பு அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபனிடம் ஒப்படைக்கபட்டிருந்தது.
ஆனால்  எடுத்த எடுப்பிலேயே  பயிற்சி  ஆயுதம் போராட்டம்  என்று  நேரடியாக  இயக்கத்திற்கு   எமது பெண்களை  உள் வாங்குவது கடினம் என்று  புரிந்திருந்ததால் சுதந்திர பறவைகள்  என்கிற ஒரு அமைப்பை  உருவாக்கி முதலுதவி பயிற்சி  அரசியல் பரப்புரை என்று தொடங்கி பின்னர் ஆயுதப்  பயிற்சிகள் கொடுக்கலாமென முடிவெடுத்து  சுதந்திர பறைவகள் என்கிற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் யாழ் குடாவில்  சுமார் நூற்று கணக்கான பெண்களை  உள்வாங்க முடிந்திருந்தது அப்படி வடமராச்சி  பகுதியில் சுதந்திர பறைகைள் அமைப்பில் இணைந்த ஒருவர்தர்தான் Niromi de Soyza என்பவர். அவர் தமிழ்புலிகள் என்கிறதொரு புத்தகத்தை  ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதில் தான் ஆயுதப் பயிற்சி பெற்றதொரு பெண்புலி போராளி என்று எழுதியியுமிருந்தார். உண்மையில் இவர் புலிகளின் சுதந்திர பறைவைகள் அமைப்பில் இணைந்திருந்தவர்.  பெண்களிற்கான முதலாவது பயிற்சி முகாம் வடமராச்சி திக்கம் பகுதியில் தொடங்கப் பட்டு சுதந்திர பறைவைகள் அமைப்பை சேர்ந்த பெண்களிற்கு ஆயதப் பயிற்சி கொடுக்கத்தொடங்கியிருந்தனர்.அந்த பயிற்சி முகாமும் ஒப்பிறேசன் லிபரேசன் நடவடிக்கையால்  பாதியில் நின்று போக அதில் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் வீடுகளிற்கு போய் சேர்ந்துவிட பலர் இயக்கத்தில் தொடர்ந்தும் இருந்தார்கள்.அப்படி பாதி பயிற்சியின்போது  வீடுகளுக்கு  சென்றவர்களில் ஒருவர்தான் Niromi de Soyza .

 கிட்டு களத்தில் இருந்து அகற்றப் பட்ட பின்னரே பெண்கள் கட்டமைப்பு பலம் பெற்றிருந்தது. அடுத்ததாக கிட்டு லண்டன் வந்து சேர்ந்ததும்  அவரே அவரது வாழ்வின் இன்னொரு பாகத்தினை பார்க்கத் தொடங்கியிருந்தார்.லண்டன் வந்த புதிதில் கிட்டுவை   லண்டன் வாழ் தமிழர்கள் தினமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வீடுகளிற்கு விருந்திற்கு அழைக்கத் தொடங்கியிருந்தனர். கிட்டு ஒரு  போர்குற்றவாளி  பல கொலைகளிற்கு காரமானவர்  எனவே அவரிற்கு லண்டனில் புகலிடம் கொடுக்கக் கூடாது என மனிதவுரை அமைப்புக்களும் அவரால் பாதிக்கப் பட்ட மாற்று இயக்ககக் காரர்களும் சட்டரீதியான போராட்டங்களை நடாத்தத் தொடங்கியிருந்தனர். அது மட்டுமல்லாமல் புலிகளின்  அனைத்துலகப் பிரிவில் வெளிநாடுகளில் நிதி மேசடிகளில் ஈடுபட்டவர்கள் என கிட்டுவால் விரட்டப் பட்டவர்களும்  கோபத்தில் கிட்டு நடவடிக்கைககள் நடமாமாட்டங்களை  இங்கிலாந்து புலனாய்வு பிரிவிற்கு தகவல்களாக வழங்கிக்கொண்டிருந்தார்கள்.  அதே நேரம்  இந்தியாவும் கிட்டுவிற்கு  இங்கிலாந்து விசா கொடுக்காமல்  இருப்பதற்கான அழுத்தங்களை கொடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து கிட்டுவை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது  அதன் பின்னர் கிட்டு சட்ட ரீதியாக  அகதி தஞ்சக் கோரிக்கை வைத்திருந்தார்.அதுவும் நிராகரிக்கப் பட்டிருந்தது. கிட்டுவிற்கு சட்டப் பிரச்சனை என்றதுமே வீட்டிற்கு வில்லங்கத்திற்கு அழைத்து விருந்து கொடுத்தவர்கள் எல்லாரும் கிட்டுவை கண்டாலே ஒழிந்து ஓடத் தொடங்கியிருந்தார்கள். அதன் பின்னர் கிட்டு சுவிசிற்கு வந்தவர் பிரான்ஸ்  யெர்மனி என்று மற்றைய நாடுகளிலும் தஞ்சக் கோரிக்கையை  வைத்தார் இந்த நாடுகளும் அவரது தஞ்சக் கொரிக்கையை நிராகரித்து விட்டிருந்தது.யாழ் வீதிகளில் கதாநாயகனாக வலம் வந்த கிட்டு ஜரோப்பாவில் ஒழிந்து மறைந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.அதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா புலிகளுடன்  அதிகார பூர்வமற்று சில இரகசிய பேரங்களையும். அதே நேரம்  இலங்கை பிரச்சனைக்கு தமிழீழம் அல்லாத ஒரு தீர்வையும் பற்றி பேசுவதற்கு முடிவெடுத்திருந்த நிலையில் தம்முடன் பேசுவதற்கு யாராவது ஒரு புலிகளின் முக்கியமானவரை தெரிவு செய்து அனுப்பும்படி புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.வழைமையாக  இது போன்ற வெளிநாட்டவர்களுடனான ராஜதந்திர பேச்சுக்களை அன்ரன் பால சிங்கம் அவர்களே செய்வது வழைமை ஆனால் அன்றைய காலத்தில் கிட்டு ஜரோப்பாவில் விசா பிரச்சனையில் இருந்ததால் அவரை அமெரிக்க அதிகாரிகளுடன் பேசுவதற்காக  அமெரிக்கா அல்லது கனடாவிற்கு அனுப்பிவிடுவது பின்னர் கிட்டு அங்கேயே தங்கியிருந்தபடி இயங்கலாம் என நினைத்த புலிகள் அமைப்பு தமது பக்கம் இரகசிய பேச்சு வார்த்தைக்கு கிட்டுவை அனுப்புவதாக  தெரிவித்து விட்டிருந்தார்கள். கிட்டுவிற்கு ஐரோப்பில் விசா பிரச்சனை என்பதால்  அவர் பெருமளவான தமிழர்களும் தமிழ் சட்டவாளர்களும்  வாழும் அமெரிக்காவிற்கோ  கனடாவிற்கோ வந்தால் அங்கு  அகதி தஞ்சக் கோரிக்கைகையை  வைத்து விட்டு  சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களை நடத்தலாமென  அமெரிக்கா நினைத்தது.  அதே நேரம்  தாம் நடத்தும்   இரகசிய பேச்சு வார்த்தை விடயங்களும் கசியலாம் எனவே புலிகள் ஒன்று நினைக்க அமெரிக்கா  ஒன்றை நினைத்திருந்தது. அவர்கள் சந்திப்பிற்காக  தெரிவு செய்த நாடு  மெக்சிக்கோ. வேறு வழியின்றி  சுவிசில் இருந்து  மெக்சிக்கோ சென்று பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

பேச்சு வார்த்தைகள முடிந்ததும்  கிட்டு மீண்டும் ஜரோப்பிற்கு திரும்பவதற்கு எந்த நாடும் விசா வழங்கவில்லை  கிட்டு மீண்டும் பிரபாகரனை சந்திக்கப் போவதற்கான  எந்த உதவிகளையும்  அமெரிக்கவும் செய்யவில்லை காரணம்  அன்றைய காலத்தில்  புலிகளின் தந்திரமான  சர்வதேச வலையமைப்பு  எப்படிப்பட்டது என்று அவர்களிற்கும் தெரியும்.கிட்டு எப்படியும் பிரபாகரனிடம் போய் சேர்ந்து விடுவார் என்பதும் தெரியும். அதே நேரம்  கிட்டுவை பின் தொடர்ந்து  கண்காணித்து இந்த வலையமைப்புக்களை பற்றி அறிந்து கொள்ளவும் அமெரிக்கா உளவுவுப் பிரிவு தீவிரமாக இருந்தது. ஆனால் கிட்டு தந்திரமாக  உக்கிரெனிற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் போலந்தில் சில காலங்கள் தங்கியிருந்தார்.அடுத்ததாக அவர் பிரபாகரனை சந்திக்கப் போக வேண்டும். ஆனால் மீண்டும் வெறுங்கையுடன் ஊரிற்கு போக விரும்பாத கிட்டு சில ஏவுகணைகளையாவது பெற்றுக்கொண்டு போகும் முயற்சிகளில் ஈடு பட்டிருந்தார். கே.பி கொம்பனியால் கொள்வனவு செய்யப் பட்ட ஆயுதங்களோடு போய் சேருவதென முடிவானது. உக்கிரெனியில் வாங்கிய ஆயுதங்கள் தாய்லாந்திற்கு கொண்டு சேர்க்கப் பட்டதும் கிட்டுவும் தாய்லாந்து போய் சேர்ந்திருந்தார். தாய்லாந்தின் புக்கெற் பகுதியில் இருந்த சிறிய தறை முகம் ஒன்றில் இருந்து   M.V. YAHATA. என்கிற கப்பலில் அமெரிக்காவின்   சமாதான பேச்சு வார்த்தைகளிற்கான குவோக்கர்  என்கிற தீர்வு திட்ட வரைபுகளோடும்  ஆயுதங்களோடும்  கிட்டு கப்பலில் ஏறியிருந்தார். கிட்டுவோடு எப்பொழுதும் கூடவே ஒட்டியிருக்கும்    மானிப்பாயை சேர்ந்த குட்டி சிறி உட்பட புலிகள் உறுப்பினர்கள் ஒன்பது பேருடனும் கப்பல் மாலுமி சிப்பந்திகள் ஒன்பது பேருடனும் கப்பல் புறப்பட்டிருந்தது.

கப்பல் புறப்பட்டதுமே அதன் செய்தி பிரபாகரனிற்து தாய்லாந்தில் இருந்து குமாரால்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.அந்த செய்தியை  வெளிநாட்டு தொலைத் தொர்பிற்கு பொறுப்பாகவும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்த கிருபன் பெற்றுக் கொள்கிறார்.கப்பல்  சர்வதேச கடலிற்குள் இறங்கியதும் வழைமைபோல M.V. YAHATA.என்றிருந்த பெயரில் சில எழுத்துக்களை  அழித்து    AHATA என்கிற பெயரிற்கு மாறி ஆவணங்களும் மாற்றப் பட்ட நிலையில் பயணத்தை தொடந்து கொண்டிருந்தது. அதே நேரம் பிரபாகரனிற்கு தெரிவிக்கும்படி குமாரால் கிருபனிற்கு கொடுக்கப் பட்ட செய்தி முதலில் இந்திய உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவரிற்கு போய் சேருகின்றது  பின்னரே பிரபாகரனிற்குதெரிவிக்கப் படுகின்றது அதனை கொடுத்தவர் கிருபனே.கிட்டுவை போட்டுக் கொடுத்தவர் மாத்தையா என்றே பொதுவாக பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதனை செய்தது கிருபன் என்பது பலரிற்கு தெரியாத விடயம். கிருபனிற்கும்  இந்திய உளவு அதிகாரிகளிற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றும் கொஞ்சம் பார்த்து விடலாம்.
                                                          
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி பின்னர் புலிகளிற்கும் இந்திய இராணுவத்திற்கும்  சண்டை தொடங்கிய பின்னர் தமிழ் நாட்டில் தங்கியிருந்த  புலிகளின்  முக்கிய மூன்று நபர்களை  இந்திய உளவுப் பிரிவான றோ அமைப்புஅவர்களிற்கு வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்து  தங்கள் பக்கம் இழுத்து தம்வசமாக்கி புலிகள் அமைப்பை அழிப்பதோடு அதன்  தலைமைக்கு குறி வைத்தனர். அந்த முக்கிய மூன்று நபர்கள்  இஞ்சினியர் எனப்படும் மகேந்திரன். இவர் புன்னாலைக் கட்டுவனை சேர்ந்தவர்  இவரின் சகோதரர் வாசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் யாழ் குருநகர் பகுதியில் இராணுவ சுற்றிவழைப்பில் மரணம் அடைந்தவர். இஞ்சினியர்  மாத்தையாவின் நெருங்கிய நண்பர்  இவரைப் பற்றி  இன்னொரு பக்கத்தில் விபரமாக பார்க்கலாம்.அடுத்தவர்  இந்திய படை மோதல் காலத்தில் தமிழ்நாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த கிட்டு . என்னது கிட்டு றோவிற்காக இயங்கினாரா ??என பலரிற்கு ஆச்சரியமாக இருக்கும்.கிட்டு றோ அதிகாரிகளிற்கு ஒத்துளைப்பது போல் போக்கு காட்டியிருந்தார் ஆனால் கிட்டு தங்களிற்கு உண்மையிலேயே ஒத்துளைப்பதாக நம்பிய றோ அதிகாரிகள்  கிட்டுவின் வீட்டுக் காவலை விலக்கியிருந்ததோடு  அவரிற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களே  கிட்டுவை கொண்டு போய் வன்னியில் இறக்கி  பிரபாகரனை சந்திப்பதற்காக அனுப்பியும் வைத்திருந்தனர். ஆனால் கிட்டு தங்களிற்கு தண்ணி காட்டியதை  பல காலங்களிற்கு பின்னரே அதவது ராஜுவ் காந்தி கொலை  செய்யப் பட்ட பின்னரே  அவர்களிற்கு தெரிய வந்திருந்தது.அதனாலேயே இந்தியாவும் கிட்டு மீது கடும் கோபத்தில் இருந்தது இதனாலேயே  கிட்டுவிற்கு எந்த நாடும் தங்குமிட அனுமதி வழங்காமல் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த மூன்றாவது நபர்தான் கிருபன்  வடமராச்சியை சேர்ந்தவர்  இவர் பிரபாகரனிற்கு நெருக்கமானவர்.

கிட்டு  தமிழ் நாட்டில் தங்கியிருந்தாலும்  பிரபாகரன் கிட்டுவை பெரியளவு நம்பாமல் கிருபனையே  தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக நியமித்திருந்தார்.கிருபன்  மதுரையில் இருந்தபடி வேதாரணிய  கடற்கரையை  மையமாக வைத்து புலிகளிற்கு வேண்டிய பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். கிருபன் மதுரையில் தங்கிருந்ததை  அறிந்த கிட்டு  அவரை தொடர்பு கொண்டு தன்னுடைய  அதிகார தோரணையில்  சில வேலைகளை செய்யச் சொல்லி சொன்னபோது கிருபன் மறுத்ததோடு இது யாழ்ப்பாணமும் இல்லை நீ பொறுப்பாளரும் இல்லை இங்கு நான்தான் பொறுப்பாளர்  எனக்கு நீ கட்டளையிட முடியாது என்றதும் கிட்டுவும்  வழைமைபோல் தூசணத்தால் திட்டிவிட  கிட்டுவிற்கும் கிருபனிற்கும் முறுகல் உருவாகியிருந்தது. கிட்டு வன்னிக்கு சென்ற பின்னர்  கிருபன் மதுரையில் கைது செய்யப் பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கபட்டிருந்தார். ஒருநாள்  அவரை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டபோது தப்பியோடி விட்டதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் அனைத்திலும் செய்தி வெளியாகியிருந்தது. றோ அமைப்பினரே கிருபனை தங்கள் பக்கம் இழுத்திருந்ததோடு  தப்பியோடிய நாடகத்தை நடத்தி அவரை வேதாரணியம் வழியாக  வன்னிக்கு அனுப்பியும் வைத்திருந்தனர். கிருபன் உண்மையிலேயே தப்பி வந்துவிட்டதாக நினைத்த பிரபாகரனும் மீண்டும் அவரை தனது பக்கம் வைத்திருந்ததோடு அவரிடம் சர்வதேச தொலைத் தொடர்பு பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். ஆனால் கிருபன் றோ அதிகாரிகளிற்கு முழுக்க  முழுக்க விசுவாசமாக நடந்து கொண்டிருக்காவிட்டாலும்  கிட்டு மீது இருந்த தனிப்பட்ட கோபத்தை பழி தீர்த்துக் கொள்வதற்காக  கிட்டு கப்பலில் வரும் செய்தியை அவர்களிற்கு கொடுத்து விட்டிருந்தார்.

கிட்டுவின் கப்பலை கண்காணிக்கத் தொடங்கிய  இந்தியக் கடற்படை சர்வதேசக் கடலில் வைத்து கிட்டுவின் கப்பலை இடை மறித்தார்கள். இந்த செய்தி  கப்பலில் இருந்து தாய்லாந்திற்கும் வன்னிக்கும் அறிவிக்கப் பட்டது. புலிகளின் தலைமை உடனடியாக  தமிழ் நாட்டில் இருந்த தங்கள் ஆதரவாளர்களான நெடுமாறன்.வை.கோ. கொளத்தூர் மணி .சுப.வீர பாண்டியன் ஆகியோரோடு தொடர்பு கொண்டதையடுத்து  அவர்கள்  இந்திய  அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  கப்பல் சர்வதேச கடலில் போய்க்கொண்டிருப்பதால் அதனை நிறுத்த சட்டப்படி முடியாது எனவே அதனை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டனர். கப்பல் சர்வதேசக் கடலில் சென்றாலும் அதில் ஆயுதங்கள் கடத்தப் படுவதாக தகவல் கிடைத்துள்ளது எனவே இந்து சமூத்திர பிராந்தியத்தில் சட்ட விரோத ஆயுதக் கடத்தலை தடுக்கும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது. எனவே கப்பலை சோதனையிட்டு  அதில் ஆயுதங்கள் எதுவும் இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை  தொடர்ந்து பயணிக்க அனுமதிப்போம் என்று பதிலை கொடுத்திருந்தனர். புலிகள்  கப்பலில் கிட்டு சமாதான செய்தியோடு வருகிறார்  என்று மட்டுமே  இந்திய அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடு பட்ட  தங்கள் ஆதரவாளர்களிற்கு தெரிவித்திருந்ததால் அவர்களும் கப்பலில் ஆயுதங்கள் இல்லை எனவே நீங்கள் தாராளமாக சோதனையிடலாம் ஆனால் யாரையும் கைது செய்யக்கூடாது என உறுதியளிக்கவேண்டும் என கேட்டிருந்திருனர்.  இந்திய அதிகாரிகளும் உறுதியளித்திருந்தார்கள். இதற்கிடையில் கிட்டுவின் கப்பலை மறித்திய இந்தியக் கடற்படை   கிட்டு வந்த கப்பலை சோதனையிட வேண்டும் எனவே  இந்திய கரை நோக்கி செல்லுமாறு கட்ளையிட்டதும் அதை மறுத்தததோடு  தங்கள் கப்பலிற்கு அருகில் இந்திய கப்பல் வந்தால் தங்கள் கப்பலை தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டியிருந்தார்கள். அதனை  இந்திய கடற்படை கப்பலில் இருந்தவர்கள் டெல்லிக்கு  தங்கள் மேலதிகாரிகளிற்கு தெரியப் படுத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகாக காத்திருந்தனர். கிட்டு தங்கள் கப்பலை  இந்தியக் கரைக்கு செலுத்த மறுத்தததை அறிந்த  இந்திய  அதிகாரிகள்  கிட்டுவின் கப்பலில் உலங்கு வானூர்தி(கெலிகொப்ரர்) மூலம் அதிரடிப்படையினரை  இறக்கி சோதனையிட நடவடிக்கை எடுத்தனர். அந்தமான் தீவுப் பகுதியில் இருந்த இந்திய கடற்படையின் கப்பலொன்று அதிரடிப்படையினர் மற்றும் உலங்கு வானூர்தியை தாங்கியபடி கிட்டு இருந்த கப்பலை அண்மித்திருந்தது.

அடுத்ததாக என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிந்த கிட்டு  கப்பல் பணியாளர்கள் ஒன்பது பேரையும்  தற்பாது காப்பு  படகில் ஏற்றி அவர்களை போகச் சொல்லி விட்டு கப்பலில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைக்குமாறு கட்டளையிட்டு விடுகிறார்  சிறிய படகில் பணியாளர்கள்  சிறிது தூரம் சென்றதுமே  கிட்டுவின் கப்பல் பாரிய வெடிச் சத்தங்களுடன் வெடித்து சிதறத் தொடங்கியிருந்தது. கிட்டு எனும் அலையும் அவரோடு மற்றைய ஒன்பது பேரும்  இந்திய பெருங்கடலில் அடங்கிப்போனார்கள். கப்பல் பணியாளர்களை இந்திய கடற்படை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.சில வருடங்களிற்கு  பின்னர் கப்பல் பணியாளர்கள் குற்றமற்றவர்கள் என நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இன்று அவர்கள் வெளி நாடுகளில் வாழ்கிறார்கள்.

அவலங்கள் சிறுகதை தொகுப்பு ..முன்னுரை கருணாகரன் .

$
0
0
உண்மை மனிதர்களின் கதைகள்

-     கருணாகரன்



 “ஆயுத எழுத்து“ என்ற புனைவின் ஊடாக தமிழ்வாசிப்புப் பரப்பில் அதிகமாக அறியப்பட்டவர் சாத்திரி. குறிப்பாக “ஆயுத எழுத்து“ முன்வைத்த அரசியலுக்காகவும் அது வெளிப்படுத்திய உள்விபரங்களுக்காகவும் உண்டாகிய சர்ச்சைகள், விவாதங்கள் மூலமாக சாத்திரி பரவலான அறிமுகத்தையடைந்தார். அதற்கு முன்பாக அவர் “ஒரு பேப்பர்“ என்ற பத்திரிகையிலும் “அவலங்கள்” என்ற தன்னுடைய இணையத்தளத்திலும்  பத்திகளையும் கதைகளையும் எழுதியிருந்தார். அவையும் சர்ச்சைகளைக் கிளப்பியதுண்டு. சாத்திரியின் அரசியற் பார்வை, பெண்ணிய நோக்கு, வரலாற்றுக் கண்ணோட்டம், யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளும்முறை போன்றவற்றில் பலருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகளும் மறுப்புகளும் உண்டு. தனக்கெதிராகக் கடுமையான மறுப்புகளும் விமர்சனங்களும் உண்டென்று சாத்திரிக்கும் நன்றாகத் தெரியும். அவற்றின் தாற்பரியங்களையும் அவர் அறிவார். ஆனால், தன்னுடைய நிலைப்பாட்டை அவர் எதன்பொருட்டும் விட்டுக் கொடுப்பதில்லை. தான் தேர்ந்து கொண்ட முறையில் தன்னை முன்கொண்டு செல்வதிலேயே குறியாக இருப்பார். தன்னுடைய இலக்கை எட்டுவதே இதனுடைய அடிப்படை. இதற்கு ஒரு அடிப்படைக்காரணமும் பின்னணியும் உண்டு.



விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் சாத்திரி.  தாம் கருதும் இலக்கை அடைவதையே குறியாகக் கொள்வது புலிகளுடைய இயல்பும் குணாம்சமுமாகும். அதற்கிடையில் உள்ள பிரச்சினைகளில் அவர்கள் கவனமோ கரிசனையோ கொள்வது குறைவு. மைய இலக்கே கவனப்புலத்தில் துலங்கும் குறி. அதை நோக்கியே முன்னகர்வர். இதுவே புலிகளைப் பெருந்தளத்தில் அடையாளப்படுத்தியது. இந்தக் குணாம்சம் சாத்திரியிடத்திலும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். இந்தக் குணாம்சத்தை எதிர்ப்போரும் தவிர்க்கமுடியாமல் இதையும் இந்தக் குணாம்சம் உண்டாக்கும் விளைவுகளையும் கவனிக்கத் தவறுவதில்லை. சாத்திரி மீதான கவனமும் இப்படித்தான். சாத்திரியை ஆதரிப்போர் மட்டுமல்ல, அவரை எதிர்ப்போரும் அவரைத் தவறாமல் கவனிக்கிறார்கள். இதனால்தான் சாத்திரி அதிகமானவர்களால் வாசிக்கப்படுகிறார். புலிகளுடைய வீழ்ச்சிக்குப் பிறகு சாத்திரியின் எழுத்துகளைப் பற்றி, புலிகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் எதிர்நிலையில் இருப்போரிடத்திலும் ஆதரிப்பும் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு. புலிகளின் கடந்த காலத்தைத் தன்னுடைய எழுத்துகளின் வழியாக சாத்திரி, திறந்து வருகிறார். இதனால் பொதுவெளி அறியாதிருந்த புலிகளுடைய பல விசயங்கள் வெளியே தெரியவந்தன. இன்னும் அப்படி திறக்கப்பட்டு வருகின்றன. இதுவே சாத்திரி மீதான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் காரணமாகின்றன.



இருந்தாலும் சாத்திரி அதற்கெல்லாம் அப்பால், இன்னும் புலிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறார். அதேவேளை அதிலிருந்து இன்னொரு வழியில் மீறிக்கொண்டுமிருக்கிறார். இந்த மீறலின் விளைவாக, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் உண்டாகியிருக்கும் தமிழ் மக்களுடைய அரசியற் பிரச்சினையை அணுகுவதிலும் அதற்கான தீர்வு முறையிலும் சாத்திரி சற்று வேறான புரிதலையும் பார்வையையும் கொண்டிருக்கிறார். அதை அவர் பகிரங்கமாகவே எழுதி வெளிப்படுத்தியும் வருகிறார். இவையும் சாத்திரியைச் சர்ச்சைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இதில் சாத்திரியின் சிறப்பான அம்சம் என்னவென்றால், அவர் தன்னை ஒளித்து, மறைத்து விளையாடுவதில்லை. ஆட்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றமாதிரி வளைந்து நெளியும் இயல்பு சாத்திரியிடம் கிடையாது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், அந்த அமைப்பிலிருந்த பலர் சத்தமின்றி ஒதுங்கி விட்டனர். வாழ்க்கைச் சிரமங்களில் அவர்களுடைய நாட்களும் மனமும் கரைந்து போய்விடுகிறது. ஒருசாரர் இன்னும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். அவர்களுடைய கற்பனைச் சித்திரங்கள் அதற்கேற்ற வகையில் விரிந்து கொண்டே போகின்றன. சிலர் அமுங்கிக்கொண்டு, தங்களுடைய கைகளில் நியாயத் தராசை எடுத்து வைத்து, எல்லாவற்றையும் நிறுத்துத் தீர்ப்பெழுதிக் கொண்டிருக்கின்றனர். சாத்திரி, இவற்றிலிருந்து சற்று வேறுபட்டு, தனக்குப்பட்டதை பகிரங்க வெளியில் வைத்து விவாதிக்கிறார். விவாதிக்கக் கோருகிறார். இப்படியான ஒரு நிலையிலேயே, அவர்  பிரபாரகனுடைய மரணம் பற்றிய குழப்பமான கதைகளின் போது, அவருக்கான அஞ்சலியைச் செலுத்தி, தான் அஞ்சலி செலுத்தும் படத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் சாத்திரி மீது சர்ச்சைகளை உண்டாக்கியது. தொடர்ந்து தமிழ் நாட்டின் “புதிய தலைமுறை“ என்ற வார இதழில் “அன்று சிந்திய இரத்தம்“ என்ற தொடரையும் எழுதினார். அதுவும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்படியே சாத்திரி சர்ச்சைகளின் நாயகனாக கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது சாத்திரி எழுதிய கதைகள் தொகுக்கப்பட்டு, ஒன்றாக வருகின்றன. இவையும் சர்ச்சைகளை உண்டாக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டேயிருக்கின்றன.



சாத்திரி யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். அங்கிருந்தே தமிழீழத்தைக் கனவு கண்டவர். அந்தக் கனவுக்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பல ஆண்டுகள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த செயற்பட்ட சாத்திரி, இப்பொழுது ஒரு பிரான்ஸ்வாசி. இலங்கையில் தனிநாட்டுக்காக, தமிழீழத்துக்காகப் போராடிய சாத்திரிக்குக் கிடைத்தது இரவல்தாய்நாட்டில் விதிக்கப்பட்ட வாழ்க்கையே.  இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான தனிநாடு காண்பிகளின் நிலவரமும் யதார்த்தமும் உண்மையும். சாத்திரியிடம் இப்பொழுதிருப்பது பிரான்ஸ் நாட்டுப் பாஸ்போட். பிரான்ஸ் குடியுரிமை. தமிழீழம் கனவாகி விட்டது. நினைவுகளில் கொதித்துத் ததும்பும் கனலாகியுள்ளது சொந்த ஊரும் போராட்டமும். சாத்திரியின் இந்தக் கதைகளும் ஏறக்குறைய அப்படியானவையே. நினைவும் கனவும் கொதிப்பும் கொந்தளிப்புகளும் நிறைந்தவை. இந்த நினைவுகளையும் கொதிப்பையும் கனவையும் அவர் காண்பிக்கின்ற மனிதர்களும் கொண்டிருக்கிறார்கள். சாத்திரியும் சாத்திரியின் மனிதர்களும் வெவ்வேறானவர்களல்ல. ஒருவருடன் ஒருவர் ஒன்றித்து வாழ்ந்தவர்கள். அது ஊரிலென்றாலும் சரி, ஊர்விட்டுப்பெயர்ந்து இந்தியாவிலோ, பிற புலம்பெயர் நாடுகளிலோ என்றாலும் சரி, பிற நாடுகளில் சந்திப்பவர்களாக இருந்தாலும் சரி, எந்தத் திசைக்குப் பெயர்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாகவே இருப்பவர்கள். எனவேதான் சாத்திரியின் கதைகள் அவரையும் அவரோடிணைந்த மனிதர்களையும் இவர்களெல்லாம் இயங்கும் காலத்தையும் சூழலையும் ஒரு தொடர்கோட்டில் மையப்படுத்தியிருக்கின்றன. இந்த மையப்படுத்தல் பல கதைகளை புனைவுக்குப் பதிலாக அ புனைவு போல உணரச் செய்கிறது. மறுவளமாக அ புனைவுகள் புனைவுருக்கமாகின்றன. இது சாத்திரியிடமுள்ள பண்பு மட்டுமல்ல, தம்முடைய அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி எழுவோருடைய பண்பாகும்.



அனுபவங்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் மையப்படுத்திப் புனைவை உண்டாக்கும்போது அடிப்படையில் ஒரு பிரச்சினை உண்டாகிறது. புனைவின் சாத்தியங்களும் நுட்பங்களும் போதாமையாக இருந்தால், அது தனியே சம்பவங்களின் விவரிப்பாகவும் ஒருவருடைய டயறிக் குறிப்பாகவும் சுருங்கித் தட்டையாகி விடும். அதற்கப்பால், அனுபவங்களையும் புதிய உணர்கையையும் வரலாற்றின் வேர்களில், காலத்தின் சுவடுகளில் வைத்து புனைவாக்கம் செய்யும்போது அது ஒரு வகையான மாயத்தன்மையைப் பெற்றுக்கொள்கிறது. இது புனைவை மேம்படுத்தி, வரலாற்றுக்கும் அனுபவத்துக்கும் புனைவுக்குமிடையில் அந்தரத்தில் மிதக்க வைக்கிறது. இந்த அந்தர மிதப்பில் மிதக்கும் வாசகர்கள், வரலாற்றிலும் அனுபவத்திலும் புதிய உணர்கை என்ற கற்பனையிலும் அவ்வப்போது தொட்டும் பட்டும் கொள்ளும்போது, ஒருவிதமான ரசாயனத்தன்மையை உணர்ந்து கொள்கின்றனர். இதுவே புனைவை அவர்களோடு ஒன்றச் செய்கிறது. அல்லது புனைவோடு அவர்கள் ஒன்றிவிடும்படியாகிறது. இப்படி வரும்போது, அவர்கள் வரலாற்றைத் தொட்டுச் செல்லும் அல்லது வரலாற்றின் மீது தனது படைப்பைக் கட்டியெழுப்பும் படைப்பாளியைச் சந்தேகிப்பதற்கோ கேள்விக்குட்படுத்துவற்கோ சந்தர்ப்பங்கள் குறைவு. கலையின் வெற்றி இங்கேதான் வலுவாகிறது.



ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”,  பாவண்ணனின் “சிதைவுகள்”, சு. வெங்கடேசனின் “காவல் கோட்டம்”,  ஜெயமோகனின் “வெள்ளையானை”, ரங்கசாமியின் “சாயாம் மரண ரயில்”, பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” சி.சு.செல்லப்பாவின் “சுதந்திரதாகம்” கி.ராவின் “கோபல்ல கிராமம்” தோப்பில் முகமதுமீரானின் நாவல்கள், அர்ஷ்யாவின் நாவல்கள், கே. டானியலின் ”கோவிந்தன்”, “அடிமைகள்”, “தண்ணீர்” சோபாசக்தி, யோ.கர்ணன் எனப் பலருடைய புனைவுகள், சயந்தனின் “ஆதிரை“, விமல் குழந்தைவேலின் ”கசகறணம்“ வரலாற்று நிகழ்ச்சிகளையும் அதனோடிணைந்த பாத்திரங்களையும் புனைவுப் பாத்திரங்களோடும் புனைவு நிகழ்ச்சிகளோடும் கலந்து நமக்கு முன்னே இன்னொரு வரலாறாகவும் புனைவாகவும் விரிந்திருக்கின்றன. சாத்திரி, ஆயுத எழுத்தில் மெய்யான மனிதர்களையும் மெய் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு, புனைவை உருவாக்கியதைப்போல, இங்கேயுள்ள கதைகளும் மெய்வரலாற்றின் அடித்தளத்தில், மெய்யான மனிதர்களுடன் மங்கியதொரு புனைகளமும் புனையப்பட்ட மனிதர்களுமாகக் கலந்து ஒரு கதைவெளியை உண்டாக்குகின்றன. இந்தக் கதை வெளியை சாத்திரி தன்னுடைய அனுபவத்தில் விரிந்த எல்லைகளின் வழியாக விரிக்கிக் காட்டுகிறார்.



2006 தொடக்கம் 2016 வரையான காலப்பகுதிக்குள் எழுப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் 1970 களில் இருந்து 2016 வரையான காலப்பகுதியைக் கொண்டியங்குகின்றன. இந்தக் காலவெளியில் ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் ஊடாடும் பிற புலங்களிலும் அவர்கள் வாழ்கின்ற நிலைமைகளில் சந்தித்த சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு, வாழ்க்கை நெருக்கடிகளே இந்தக் கதைகளின் பொருள்மையம். அதிலும் கூடுதலான கதைகளில் பெண்களுடைய பிரச்சினைகளே பேசப்படுகின்றன. சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெண்கள் எப்படியெல்லாம் ஆண் நிலைச் சமூகத்தினால் பாதிப்படைகிறார்கள், சுரண்டவும் அடக்கவும் படுகிறார்கள் என்பதைக் கவனப்படுத்தியிருக்கிறார் சாத்திரி. அநேகமான கதைகளின் தலைப்பே ”ராணியக்கா“, ”மலரக்கா”, “மல்லிகா”, ”கைரி”, ”அலைமகள்”, என்றே உள்ளன. கதைகளின் மையப்பாத்திரமே பெண்கள்தான். இதில் “கைரி“ என்ற கதை இந்தத் தொகுதியின் ஆன்மா எனலாம். மிக எளிய அடிநிலைப் பெண் ஒருத்தி, சமூக (சாதி) ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலிகொள்ளப்படுவதைச் சாத்திரி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எந்தக் குற்றமும் செய்யாத, குற்றங்களையே விரும்பாத ஒரு முதிய கூலிப்பெண் எப்படி அரசியல் படுகொலையொன்றில், அநியாயமாகப் பலியிடப்படுகிறார் என்பதையும் ஆயுதம் தூக்கியவர்கள் எப்படியெல்லாம் தீர்ப்புகளை வழங்கினர் என்பதையும் சாத்திரி எதார்த்தமாக விளக்கி விடுகிறார். கைரியைப்போல இந்த மண்ணில் பலியிடப்பட்டவர்கள் ஒன்று இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். தன்னை எல்லாவகையிலும் சுரண்டவும் பலியிடவும் முனைகின்ற அனைவரையும் நல்லவர்கள் என்று எண்ணுகின்ற கைரியின் மனம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. ஆயிரமாயிரம் விழிகளைத் திறக்க முனைகிறது. கைரியின் மனமே மனித வாழ்க்கையின் சாரம்சமாக கால நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். கோடிக்கணக்கான சாமானிய மக்களின் அறம் வாழ்க்கையோடிணைந்து, இப்படித்தான் உலகெங்கும் உள்ளது. ஆனால், அவர்களே பலியிடப்படுகிறார்கள். அப்படியென்றால், இத்தகைய பேரன்புடைய மனதை எப்பொழுதும் இந்த உலகத்தின் அதிகார அடுக்குகள் தினமும் பலியெடுத்துக்கொள்கின்றன என்று சொல்லலாமா? என்றால், நிச்சயமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இயக்கங்கள் கோலோச்சிய காலத்தில், இலங்கையில் ஆயுதம் தாங்கியவர்கள் எப்படியெல்லாம் பொது மக்களை இலக்காக்கினார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு இரத்த சாட்சியம்.



கைரிக்கு நிகரான இன்னொரு கதை “மலரக்கா“. பதின்ம வயது ஆணின் மனவுலகையும் வயது கூடிய ஆணைக் கணவனாகத் திருமணம் முடித்து வைப்பதால் ஏற்படும் பெண்ணின் வாழ்க்கை நெருக்கடிகளையும் பாலியல் பிரச்சினைகளையும் சொல்லும் இந்தக் கதையும் நம்மை நோக்கிக் கேள்விகளை எழுப்புவதே. மலரக்காவை முழுமையாகப் புரிந்த கொண்ட ஆணாக இருப்பவனே, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக, ஒரு கட்டத்தில் கூட இருக்கத்தயாரில்லாத யதார்த்தத்தையும் உண்மையையும் கோழைத்தனத்தையும் சாத்திரி தெளிவாக்குகிறார். இப்படி மறைவிடங்களில் பதுங்கும் கள்ள இதயங்களை நோக்கி ஒளியைப்பாய்ச்சும் வேலைகளே சாத்திரியின் முயற்சிகள்.



“கைரி“ முன்வைக்கின்ற நிலைக்கு மாறான இன்னொரு முன்வைப்பைக் கொண்ட கதை “பீனாகொலடா“. தமிழ்நாட்டில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்சிசுவை வெறுக்கும் சமூகக் கொடுமையை வைத்து எழுதப்பட்டது. பெண் குழந்தைகளையே பெற்றதற்காக வெறுத்து ஒதுக்கப்படும் மல்லிகா, பின்னாளில் அதே சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதற்கிடையிலான வாழ்க்கையைக் குறித்த முன்வைப்பைச் செய்யும் கதை. மல்லிகாவின் இடைப்பட்ட வாழ்க்கை மீதான பண்பாட்டுக் கேள்விகளைவிட பொருளாதார மினுக்கமே எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கிறது என்பதைக் கதை உணர்த்துகிறது.



ஈழத்திலும் ஈழத்தமிழர்கள் பெரும்பாலும் ஊடாடும் புலம்பெயர் சூழலிலும் இந்தியா மற்றும் சிங்கப்புரிலுமாக இந்தக்கதைகளின் களங்கள் விரிக்கப்பட்டுள்ளன.. ஆனால். கதைகளில் இடங்கள் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, அவற்றைப்பற்றிய கால, இடச் சித்திரிப்புகளோ, காட்சிப்படுத்தலோ குறைவு. சாத்திரியின் முயற்சியே கதைகளைச் சொல்லி விடுவதில்தான் கவனமாக உள்ளது. அவற்றைச் சித்திரிப்பதில் அல்ல. அவருக்கு கதையே முக்கியம். அதைச் சொல்லி விடவேணும். அவ்வளவுதான். அந்தக் கதைக்குள்ளால் அவர் பேச முற்படும் உண்மைகளை உணர்த்தி விடுவது. இதற்காக அவர் கதையை சுவாரசியப்படுத்துவதற்கான விசைகூடிய மொழிதலைக் கொள்கிறார். சுவாரசியமான மனநிலைகளையும் சம்பவங்களையும் சேர்த்துக்கொள்கிறார். இதில் கூடுதலான ஈர்ப்பை அளிப்பன, விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்பான கதைகள். ”முகவரி தொலைத்த முகங்கள்“ சாத்திரியின் ஆயுத எழுத்தை ஞாபகப்படுத்துகிறது. புலிகளின் ஆயுதக்கப்பல்களைப்பற்றிப் பலரும் கேள்விப்பட்டதுண்டு. அந்த ஆயுதக்கப்பல்களை ஓட்டிக்கொண்டிருப்போரைப்பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் அநேகருக்குத் தெரியாது. சாத்திரி அந்த வாழ்க்கையை இந்தக் கதையில் திறக்கிறார். இதைப்போல, இன்னொரு தளத்தில், இறுதிப்போர்க்காலத்தில், புலிகளை ஆயுத ரீதியாகப் பலப்படுத்துவதற்காக என்று கூறி, புலம்பெயர் நாடுகளில் புலிகளின் ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டார்களும் பெரும் நிதிச் சேகரிப்புகளில் ஈடுபட்டனர். இதற்காகப் பெரும்பாலான ஈழத்தமிழர்கள், தங்களுடைய சக்தியையும் மீறி, வங்கிகளில் பெருந்தொகைப்பணத்தைக் கடன்பட்டுக் கொடுத்திருந்தனர். புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் அந்த நிதி உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அந்த நிதிக்கான கணக்குகளும் காட்டப்படவில்லை. இதனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை தொடக்கம், அகதி அந்தஸ்துக்கோருவதற்காக முயற்சிக்கும் வழிமுறைத்தவறுகளின் விளைவுகள், இறுதி விளைவுகளை எப்படி உண்டாக்குகின்றன என்பது வரையில் புலம்பெயர் சமூகத்தின் கதைகளையும் அவலங்களையும் சாத்திரி பேசுகிறார். போர் முடிந்த பிறகும் பயங்கரவாத முத்திரையை எப்படிச் சாதாரணமானவர்களின் மீது சட்டம், நீதி, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் சென்று இலங்கை அரசாங்கம் குத்துகின்றது என்பதை “அகதிக் கொடி“ என்ற கதையில் வெளிப்படுத்துகிறார். இப்படி சாத்திரியின் கத்திகள் பல தரப்பிலும் விழுகின்றன. அப்படியே அது இந்தியப்படைகள், இலங்கை அரசு, அதன் படைகள் மீதும் விழுகிறது. சமூகத்தின் மீதும், பண்பாட்டின்மீதும் இயக்கத்தின் மீதும் விழுகிறது. தான் வாழும் காலத்தையும் வரலாற்றையும் அதிகார அமைப்புகளையும் விசாரணை செய்யாமல் ஒரு எழுத்தாளன் இருக்க முடியாது என்பது சாத்திரியின் நம்பிக்கை. இதற்காக அவர் தன்னையும் ஒரு வகையில் பலிபீடத்தில் வைக்கிறார். அதேவேளை இன்னும் இந்தச் “சக்கைச் சிறி” வெடிகுண்டுகளோடுதான் திரிகிறார். கந்தகம் நிரப்பப்பட்ட கதைகளின் வெடி குண்டுகளோடு.



இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒரு காலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. மறுவளமாகச் சொன்னால் உண்மை மனிதர்களின் கதைகள் இவை. என்பதால் வலியும் துயரும் மகிழ்வும் வாசனையும் அழுக்கும் தூய்மையும் விருப்பும் வெறுப்பும் இனிப்பும் கசப்பும் இவற்றில் உண்டு.




பிரபாகரன் , மாத்தையா ,அமிர்தலிங்கம் பற்றி ..அன்று சிந்திய ரத்தம் .கேள்விபதில்

$
0
0
 அன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து ..

கேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்ன??அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை கொலை செய்தது தொடர்பாக பிரபாகரனிற்கும் மாத்தையாவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட அதுவே காரணமாக இருந்தது என்றொரு கருத்து  மக்களால் பேசப்பட்டது அதைப்பற்றி உங்களிற்கு தெரிந்தவற்றை  கூறுங்கள்....


பதில் ..மாத்தையா என்பவர்  பிரபாகரனிற்கு உறவினர் மற்றும் அவரோடு நெருக்கமானவர் என்கிற தகுதியைத் தவிர எவ்வித ஆழுமையும் திறமையும் அற்ற ஒருவராகவே இருந்தார். தனக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டார் என  நம்பிய பிரபாகரன் அவரையே புலிகள் அமைப்பிற்கு பிரதித் தலைவராகவும். புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் . வன்னி மாவட்டத் தளபதி..  பெண்கள் பிரிவிற்கு பொறுப்பாளர்.என பல பதவிகளை மட்டுமல்ல பிரேமதாசா காலத்தில் பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் அமைப்பினால் தொடக்கப் பட்ட அரசியல் கட்சியான  விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பொறுப்பார் என  ஏகப்பட்ட அதிகாரங்களை கொண்டிருந்தார்.

 இத்தனை அதிகாரங்களை அவர் கைகளில் வைத்திருந்தாலும் அவரது திட்டமிடலில் உருப்படியாக  எந்தவொரு தாக்குதலைக்கூட நடத்தியிருக்கவில்லை. இவரது முதலாவது திட்டமிடலில் இவரது தலைமையில் நடந்த முதலாவது தாக்குதல்தான் 1985 ம் ஆண்டு கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல். இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்லாது புலிகள் அமைப்பில் 13 பேர் கொல்லப் பட்டிருந்தனர். அதன் பின்னர் வன்னி மாவட்ட பொறுப்பை அவர் வைத்திருந்தாலும் வன்னியிலும் பெரிய நடவடிக்கைகள் எதனையும் செய்திருக்கவில்லை.இயக்கத்தில் கிட்டுவின் வேகமான வளர்ச்சியும் புகழும் இவரிற்கு ஒரு வித எரிச்சலையே உண்டு பண்ணியிருந்தது. கிட்டுவோடு ஒரு நிழல் யுத்தத்தையே நடத்திக் கொண்டிருந்தார் கிட்டு காலை இழந்து  இந்தியா போய்விட யாழ் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பெடுத்த ராதாவும் குறுகிய காலத்தில் கட்டுவனில் நடந்த மோதலில் இறந்து போனார்.

அதற்கடுத்ததாக குமரப்பா பொறுப்பாளர் ஆகிறார்.அவரும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் கைதாகி இறந்து போகிறார்  இந்தியப் படை காலத்தில் குறுகிய காலத்திலேயே யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக  நியமிக்கப் பட்ட . இம்ரான் பாண்டியன்.(இருவரும் வேறு  வேறு நபர்கள்) மதி.(முன்னைய தெல்லிப்பளை பொறுப்பாளர்)அக்காச்சி (நீர்வேலி பொறுப்பாளராக இருந்தவர்)சுபாஸ் (மனிப்பாய்)  என மோதல்களில் இறந்து போனார்கள். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் யாழிற்கு மீண்டும் பொட்டு தலைமையில் புகுந்த புலிகள் அமைப்பு இந்திய இராணுவத்தின் எச்சங்களாக  வரதராஜப் பெருமாள் தலைமையில்  இயங்கிய  தமிழீழ தேசிய இராணுவத்தை அழித்து முடித்ததும் மாத்தையா யாழ் மாவட்ட பொறுப்பாளராகிறார்.இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால் இறுதியாக  இந்தியப் படையின் கப்பலில் தப்பியோடும்போது திருகோணமலை துறை முகத்தில் கப்பலின் வாசலில் நின்று  வரதராஜப் பெருமாள் தமிழீழப் பிரகடனத்தை செய்திருந்தார்.(இப்போ தான் தமிழீழ பிரகடனம் செய்யவில்லை என மறுத்துள்ளார்).  அதே நேரம் மணியம் தோட்டத்தில் இருந்த தமிழ் தேசிய இராணுவ முகாமை பொட்டு தலைமையிலான அணி தாக்கியபோது  அந்த முகாம் பொறுப்பாளராகவும் நிதி பொறுப்பாளராகவும் இருந்த சுரேஸ் பிரேமச் சந்திரன் தப்பியோடியிருந்தார். அவரே பின்னர் புலிகள் அமைப்பினால் அரவணைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்  இன்றுவரை இருக்கிறார்.

மாத்தையா யாழ் மாவட்டத்தை பொறுப்பெடுத்தபோது கிட்டுவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இறந்தும் இந்திய இராணுவத்திடம் கைதாகியும் நாட்டை விட்டும் வெளியேறியும் இருந்தனர். மீதமாக இருந்தவர்கள்  கிட்டு மீது இருந்த கோபத்தில் மாத்தையாவால்  பழிவாங்கும் நடவடிக்கையாக  அவர்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப் பட்டு அவர்களது பதவி நிலை பறிக்கப் பட்டு சாதாரண உறுப்பினர்களாக  முன்னரங்க காவல் நிலைகளில் நிறுத்தப் பட்டனர்.  இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே  புலிகள் தங்கள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான  பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை  பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு  வடமராச்சி அரசியல் பிரிவு பொறுப்பாக இருந்த  தமிழ்ச் செல்வனை  யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.மாத்தையா கொழும்பில் தங்கியிருந்த காலங்களில்  வெளிநாடுகளிற்கும் போக முடியாமல் புலிகள் கட்டுப் பாட்டின்  கீழ் இருந்த  தங்கள் சொந்த ஊர்களிற்கும் போக முடியாமல் கொழும்பில்  இருந்த மாற்று இயக்கக் காரர்கள் பலரை மாத்தையா பிடித்து கட்டி யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பப் பட்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்லப் பட்டார்கள்.


இதனை பிரேமதாசா அரசு கண்டும் காணமலும் இருந்திருந்தது அதே நேரம்  தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் நடந்திருந்தது. அமிரின் கொலையை  பிரபாகரனிற்கு தெரியாமல்  மாத்தையாதான் செய்தார் இதனாலேயே இரவரிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு  மாத்தையாவிடம் இருந்த புலனாய்வு பிரிவுப் பொறுப்பை பறித்து பொட்டுவிடம் கொடுத்ததாக பொதுவான கதை ஒன்று பரவியிருந்தது. அதனை பலர் இன்றும் நம்புகிறார்கள். ஆனால்   பிரபாகரனின் கட்டளையின் படியே அமிரின் கொலை நடந்தது. அமிரின்  கொலை நடந்தபோது பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம்  பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு  இந்திய  இந்தியாவுடன் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில்  தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்வரை  இந்திய இராணுவம்  வெளியேறக்கூடாது  அதற்கான கடப்பாடு இந்திய அரசிற்கு உள்ளது என  ராஜுவ் காந்திக்கு  அமிர்தலிங்கம் கடிதமொன்றை  எழுதியிருந்தார். இது பிரேமதாசாவிற்கும் எரிச்சலை கிழப்பியிருந்தது. எனவே அமிரின் கொலையை  யாரென்றே தெரியாமல் கனகச்சிதமாக முடித்து விட்டால் பிரேமதாசா அரசால் பிரச்சனை வராது  பிரேமதாசாவிடமே சொல்லி  அந்த கொலை பற்றி ஒரு விசாரணை குழுவை  அமைத்து அதனை அப்படியே இழுத்தடித்து  நீத்துப் போகச் செய்யலாம் என்பதே பிரபாகரனின் திட்டமாக இருந்தது .

ஆனால் அந்த கொலையை திட்டமிட்டு செய்யவேண்டிய பொறுப்பு மாத்தையாவினுடையது.  இங்கும் பிழைத்தது மாத்தையாவின் திட்டமிடல்தான்  அமிரை கொல்வதற்கு வேறு வழிகளை தேடாமல்  சுட்டுக்கொல்வதென்று முடிவெடுத்தவர்.   அமிருடன் தொர்புகளை ஏற்படுத்தி  பிரேமதாசா அரசுடன்  புலிகளிற்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களின அதிகாரங்களை பெறுவதற்கு  அமிர்தலிங்கமும் எம்முடன் இணைத்து போச்சு வார்த்தைகளில் ஈடு படவேண்டும் என கோரிக்கை வைத்தவர் அமிருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் அதே நேரம்  அவரை கொலை செய்வதற்கான வழி வகைகளை ஆராயும்படி வடமராச்சி பகுதியை சேர்ந்த  விசு என்பவரை மாத்தையா அனுப்பி வைக்கிறார்.  விசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்  ஒரு மேதலில் காயமடைந்தும் இருந்தார். இவரிற்கு ஒரு காதலி இருந்தார் அவர் கனடாவில் போய் குடியேறிய பின்னர் விசுவை கனடாவிற்கு அழைப்பதற்காக  அனுசரனை கடிதத்தினை அனுப்பிய பின்னர் விசு இயக்கத்தை விட்டு வெளியேறி கனடா போகும் திட்டத்தோடு துண்டு கொடுத்து விட்டு (இயக்கத்தை விட்டு வெளியேறும்  கடிதம்) போக  மாத்தையாவிடம்  கடிதத்தை கொடுத்தபோது  விசுவை  கனடா போகும் முதல் இறுதியாக இயக்கத்திற்கு ஒரு வேலை செய்யும்படி  மாத்தையா கேட்டதால் விசுவும் ஒத்துக்கொண்டு அமிரின் கொலையை செய்து முடிக்க சம்மதிக்கிறார்.

விசுவிற்கு  கனடா விசாவும்  கிடைத்து விட்டிருந்தது   விசு கொலையை செய்து தப்பி கனடா போய் விட்டால்  எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் திட்டமிடல்களின்படி அமிருடன்  விசு ஆரம்ப பேச்சு வார்த்தைகளை  தொடங்குகிறான்.  அமிர்தலிங்கம்  தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு காவல்துறையினர் காவல்  நிற்பார்கள்.  விசுவும்  அவரது இரண்டு நண்பர்களும் உள்ளே போகும் போது காவல் துறையினர் பரிசோதனை  செய்த பின்னரேயே  அவர்களை உள்ளே போக அனுமதிப்பார்கள். தொடர்ச்சியாக  சில சந்திப்புக்கள்  நடந்து முடிந்ததும்  நாங்கள் வரும் போதெல்லாம்  எங்களை உருட்டி சோதனை போடுவது  எங்களிற்கு  அவமானமாகவும் அசெளகரியமாகவும் இருக்கின்றது என விசு அமிரிடம் சொன்னதும் இனி அவர்களை சோதனை போடவேண்டாம் என தனது மெய் பாதுகாவலர்களிற்கு அமிர்தலிங்கம்  உத்தரவிட்டிருந்தார். அடுத்த தடைவை விசு அமிர்தலிங்கம் அவர்களை சந்திக்கச் செல்லும்போது  கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்தச் சென்று  அமிர்தலிங்கத்தின்  மெய் பாதுகாவலர்கள்  தன்னை சோதனை போடுகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்திருந்தார்.மெய்ப் பாது காவலர்கள் விசுவை சோதனை போடவில்லை எனவே அடுத்த சந்திப்பில் அமிரை போட்டு விடுவது என முடிவெடுத்தவர்  அமிரிடம் அடுத்த தடைவை முக்கிய விடயங்கள் பேசவேண்டும்  அத்தோடு  சில முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனவே என்னுடன் வேறு இரண்டு நபர்களும் வருவார்கள்  அதே போல    தமிழர் விடுதலைக் கூட்டணியில் முடிவெடுக்கும்  அதிகாரமுள்ள முக்கியமானவர்களையும் அன்று வரச்சொல்லுங்கள்  அதே நேரம் இந்த செய்தியை  உங்கள் மெய் பாதுகாவலர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று அமிர்தலிங்கத்திடம்  தெரிவித்துவிட்டு சென்றிருந்தார்.

1989 ம் ஆண்டு ஜுலை மாதம் 13 ம்திகதி அமிரை போட்டு விடுவதற்கான நாளை விசு தீர்மானிக்கிறார். தன்னுடன் அலோசியஸ் மற்றும் விக்கி ஆகியோரையும் அழைத்து அவர்களிடமும் ஆளிற்கொரு பிஸ்ரலை உடலில் நன்றாக மறைத்து வைக்கச் சொன்னவர்  விக்கி மெல்லிய தோற்றமுடையவன் என்பதால் அவனின் உடலில் யூ.சி ரக தானியங்கி துப்பாக்கியையும் மறைத்து அதற்கேற்றமாறு தொள தொள உடையணிந்து தயாராக அமிர்தலிங்கத்தின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் அவர்களும்  புலிகள் அமைப்புடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டம் என்பதால் யோகேஸ்வரனையும்  சிவசிதம்பரத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது  அங்கு வந்து சேர்ந்த  விசு குழுவினரிடம்  ஏதோ வித்தியசத்தை கவனித்த அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள்  அவர்களை சோதனை போடவேண்டும் என  கேட்க அதனை விசு மறுக்க இவர்களின் வாக்கு வாதத்தின் சத்தத்தை கேட்ட அமிர்தலிங்கம்  வெளியே எட்டிப்பார்த்து  அவர்களை உள்ளே விடுங்கள் என சொன்னதும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட்டு விடுகிறார்கள். வீட்டின் உள்ளே  போயிருந்த விசு குழுவினர் சிறிது நேரம் அமிர்தலிங்கம் குழுவினரோடு பேசுவது போல போக்கு காட்டியபடியே தங்கள் துப்பாக்கிகளை எடுத்து அமிர்தலிங்கம்  யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி சுடத் தொடங்குகிறார்கள்.

சத்தம் கேட்டு அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் ஓடி வந்த அதே நேரம்  முதலிலேயே  விசு குழுவினர் மீது  அமிரின் மெய் பாது காப்பாளர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதால்  அவர்கள் வாசல் கதவை விட்டு வீட்டு வசல் அருகிலேயே நின்றிருந்தார்கள். அனைவரையும் சுட்டு விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதலை நடத்த  விசுவும். அலோசியசும் அந்த இடத்தில் இறந்து போக  விக்கி  தன்னிடம் இருந்த யூ சி துப்பாக்கியால் யால் சுட்டபடி வீட்டிற்கு  வெளியே ஓடி விட. விக்கி வீதி காவலில் இருந்த ஒரு காவல்துறையை சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப் படுகிறான்.
அமிர்தலிங்கமும்  யோகேஸ்வரனும் இறந்து போக சிவ சிதம்பரம் மோசமான காயங்களுடன்  உயிர் தப்பி விடுகிறார். விசுவின் உடலை அடையாளம் கண்ட இலங்கை காவல்துறை  இதனை புலிகள் செய்ததாக  ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் புலிகள்  பிரேமதாசா அரசிற்கு கொடுத்த அழுத்தத்தால்  குழப்பமான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தது. காயத்தில் உயிர் தப்பிய  சிவ சிதம்பரம் அவர்கள்  பேச்சு வார்த்தைக்கு வந்த புலிகள் அமைப்பினரே  இதனை செய்தனர் என்று வைத்திய சாலையில் இருந்து  அறிவிக்கிறார். சிவசிதம்பரத்தின்  அறிக்கையை அடுத்து கொலையை புலிகள் செய்தாகவே உறுதியாகின்றது.

அமிர்தலிங்கத்தின் கொலையை செய்ததற்காக  பிரபாகரன்  மாத்தையாவோடு  முரண்படவில்லை.  செய்யச் சொன்ன கொலையை சரியாக செய்யவில்லை என்னதாலேயே  இருவரிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.   அன்றைய தப்பாக்கி சூட்டில் இறந்து போயிருந்தால் துரோகியாகியிருக்கவேண்டிய சிவ சிதம்பரம் அவர்கள் காலம் தாழ்த்தி  காலமானதால்  மாமனிதர்  ஆகியிருந்தார்.   துரோகிகள் போட்டுத் தள்ளுங்கள்  என கட்டளையிட்ட பிரபாகரனே  இந்த மாமனிதர் பட்டத்தை  வழங்கி கெளரவித்திருந்தார்.  இந்தக் கொலையை அடுத்து  உடனடியாக மாத்தையாவை  அழைத்த பிரபாகரன்  அவரிடமிருந்த  புலனாய்வு துறை பதவியை பிடுங்கிக் கொண்டதோடு  கிட்டுவினால் முன்மொழியப்பட்ட  பொட்டுவிடம் அந்த பதவியை ஒப்படைத்திருந்தார். அதுவரை கிட்டுவோடு மட்டுமே  பனிப்போர் நடத்திக் கொண்டிருந்த மாத்தையா தனது பதவியை பொறுப்பெடுத்த பொட்டு மீதும் தன்னுடைய கோபப்பார்வையை திருப்பத்தொடங்கியிருந்தார்.இந்தக் கோபத்தினால்  பின்னர் யுத்தம் தொடங்கிய பின்னர்  தனக்குத்தானே  தனியாக ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கியிருந்தார் . இயக்கத்திற்கென பொதுவான புலனாய்வு பிரிவு பொட்டு தலைமையில் இயங்கினாலும் தங்களிற்கென தனியாக  புலனாய்வு பிரிவை வைத்திருந்தவர்களில்  மாத்தையாவும் கருணாவும் மட்டுமே.


பிறேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை இரகசியமாக ஆரம்பித்த காலங்களில்தான்   வேலூர் சிறையிலிருந்த  இஞ்சினியர் என்கிற மகேந்திரனை  றோ அமைப்பினர்  கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விடுகிறார்கள். இவரும் தப்பி வந்ததாகவே செய்தி பரவுகின்றது.  முன்னர்  கிருபனையும் கிட்டுவையும் றோ அதிகாரிகள்  வன்னிக்கு அனுப்பியிருந்தது  தனியாக பிரபாகரனை  குறி வைக்க மட்டுமே அனால் இஞ்சினியரை அனுப்பும் போது இரண்டு திட்டங்களுடன் அனுப்பியிருந்தார்கள். கிருபன் எப்படி பிரபாகரனிற்கு  நெருக்கமோ அப்படி இஞ்சினியர் மாத்தையாவிற்கு  நெருக்கமானவர். இருவரும் நீண்டகால நண்பர்கள் இஞ்சினியரின் தாயார் புனிதவதி இவரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாட்டிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும்   பிரபாகரனின்  மனைவி  மதிவதனி இருந்தார்.  இவரது பெயர்  புனிதவதி என்றாலும் ஆரம்ப காலத்தில்  சில போராளிகள்  இவரை  நக்கலாக  வீரத்தாய்  என  அழைத்தது  காலப்போக்கில்  அவரது பெயர் வீரத்தாயாகிப் போயிருந்தது. புலிகள்  அமைப்பில்  ஆரம்பாகால பெண் உறுப்பினர்கள் என்றால் அடேல் பால சிங்கத்திற்கு   அடுத்தபடியாக  குப்பி கட்டாத  புலிப் பெண் உறுப்பினர்  புனிதவதி என்பது குறிப்பிடப் படவேண்டும்.  அது மட்டுமல்லாது பிரபாகரன் மதி  குடும்பத்தினரிற்கு பிறந்த குழந்தைகளான  சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா இருவரையும் ஒரு பேத்தியாரின் (பாட்டி) நிலையில் இருந்து பராமரித்து  வளர்த்தவரும் இவர்தான்.  ஏனெனில் பிரபாகரனின்  ஆரம்பகால இயக்க தொடர்புகாளால்  சகோதர சகோதரிகள்  உட்பட    அவரது  தாய் தந்தையரும் பிரபாகரனோடு  தொடர்புகளை  வைத்துக்கொள்ள விரும்பியிராத காலம்.

 அதே நேரம்  புலிகளால் கடத்தபட்டு  தமிழ்நாட்டிற்கு  மதிவதனி  கொண்டு சென்ற பின்னர்   தங்கள்  மானம் மரியாதை கொளரவம்  பறி போய் விட்டது என பல ஆண்டுகள் இரவரது தாய் தந்தையருமே  இவர்களோடு கதைக்காமல் முரண்பட்டு  இவர்களோடு தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள்  அதே காலப் பகுதியில் தான்   ஒரு தாயின் நிலையில் இருந்து  மதிவதனியை  பராமரித்திருந்தார் புனிதவதி அவர்கள். விடுதலைப் புலிகள்  அமைப்பானது  சாதியத்தில் குறைந்தவரால் படிக்காதவரால் தொடங்கப்பட்டு  பின்னர் பள்ளிக்கூடம் போக விரும்பாத ஒரு மொக்கு கூட்டத்தவர்களால்  இயக்கப்படுகின்றதென்கிற  யாழ்ப்பாணிய  மேட்டுக்குடி கல்வி  சமூகத்தின் பார்வையானது புலிகளின் தொடர் வெற்றிகளாலும்  அதன் மூலம் கிடைத் புகழினாலும்  அந்த மேட்டுக்குடி சிந்தனையில் மாற்றம்  ஏற்பட்ட பின்னரே  பிரபாகரனினதும்  மதி வதனியினது குடும்பத்தினரதும்  மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு  தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.  எனவே  றோவினுடைய  முதலாவது  திட்டம் பிரபாகரன் இரகசிய முகாமில் இருந்து  எப்பொழுது  தனது மனைவியை சந்திக்க வந்து போகிறார் என்கிற விடங்களை இஞ்சினியர் அவரது தாயார் மூலம்  அறிந்து  தங்களிற்கு தகவல் தருவார் அவர் அங்கு வந்து போகும் போது  அவரை போட்டு விடுவது  .

இரண்டாவது திட்டம் மாத்தையாவிற்கு நெருக்கமான  இஞ்சினியர் மாத்தையாவை பிரபாகரனிற்கு  எதிராக மாற்றி விடுவார்  அப்படி  மாற்றினால்  புலிகள்  இயக்கத்தை  உடைக்கலாம். அல்லது மாத்தையா  பிரபாகரனிற்கு  எதிராக  இயங்குவது போல   ஒரு தோற்றத்தை உண்டாக்குவது இதன் மூலமும் உடைக்கலாம்.  இது றோவின் திட்டம் .இஞ்சினியரிடம் பொதுவாகவே  எல்லாவிடயத்திலும் புழுகும் தன்மை கொண்டவர்  இஞ்சினியர்   தான் கைத்துப்பாக்கியால் சுட்டு  கெலிகொப்ரரை  கடலிற்குள் விழ்த்தினேன்  என்கிற அளவிற்கு புழுகுவார்.தான்  தமிழ் நாட்டு சிறையில் இருந்து தப்பிவந்ததாக சொன்ன கதையை   கொஞ்சம் அதிகமாகவே புழுகுகளோடு   அனைவரிடமும் சொல்லித் திரியத் தொடங்கியிருந்தார். அதன்மூலமாகவே  புலிகளின் புலனாய்வு பிரிவினர் இஞ்சினியரின் மீது  சந்தேக பார்வையை  வைக்கத் தொடங்கியிருந்தனர்.  கிட்டு இறந்த பின்னர்  வடமராச்சி தீருவிலில்  நடந்த கிட்டுவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக  பிரபாகரன் சென்றிருந்தபோது  அவரின் வாகனத்திற்கு  கண்ணிவெடி வைத்து அவரை கொல்லதற்காக திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த  கண்ணிவெடி ஒன்றினை  புலிகளின் புலனாய்வு பிரிவினர் கண்டெடுக்கின்றார்கள்.

இதே நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் புலிகளின் ஆட்பற்றாக் குறையை  போக்குவதற்காக  அவர்கள்  தமிழ்நாட்டில்  இருந்தும் ஆட்களை திரட்டி  கொண்டு வந்து யாழில் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.  புலிகளிற்கான ஆட்திரட்டல்களிற்கு தமிழ்நாட்டில்  நெடுமாறன் மற்றும் வை.கோ.போன்றவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இவர்களின் ஆட்திரட்டல் பிரச்சாரத்தின் போது  இவர்கள் செய்த  ஒரு விவேகமற்றதொரு செயல்  என்னவெனில்  அகன்ற தமிமீழம் என்கிற ரீதியில்   இலங்கையின்  வடக்கு கிழக்கோடு தமிழ் நாட்டையும் உள்ளடக்கி  பரந்த தமிழீழம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இது மூஞ்சூறு தான் போக வழியை காணமல் விளக்குமாத்தையும்  இழுத்தக்கொண்டு போன  பழமொழியை போலவே இருந்தது. இந்த பிரச்சாரம் இந்திய உளவுப்பிரிவினரிற்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் எரிச்சலையே கொடுத்திருந்தது. அதே நேரம்  புலிகள் அமைப்பினால் பயிற்றப்பட்ட  சிலரால்  தமிழ்நாட்டில்  தமிழ்த்தேசிய மீட்புப் படை  என்னும்  ஆயுதம் தாங்கிய  குழு தொடங்கப்பட்டது. அதே நேரம் தமிழ் நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பும் புலிகளிற்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருந்தது.  இந்த  அமைப்புக்களோடு  அகன்ற தமிழீழம்  என பிரச்சாரம் செய்த நெடுமாறனின்  கட்சியான  தமிழர் தேசிய இயக்கமும்  அன்றைய ஜெயலலிதா  அரசால் தடை செய்யப் பட்டது. புலிகளால் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட உறுப்பினர்களுடன்  றோவின்  முகவர்களும் இணைக்கப்பட்டு புலிகளின் பயிற்சி முகாம்களிற்கு  அனுப்பபட்டனர்.
அது மட்டுமல்லாது  இலங்கையில் இந்தியப் படை  இருந்த காலங்களில்  பணிபுரிந்த இந்திய படை வீரர்களும்  றோ  அமைப்பினால் புலிகளில்  இணைக்கப் பட்டிருந்ததோடு  இவர்களிற்கும்  தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட புலிகள் அமைப்பை சேர்ந்த இஞ்சினிர் மற்றும்  கிருபனிற்கும் இடையில் ஒரு வலைப் பின்னல் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர்.  அன்றைய காலத்தில் கிட்டு  நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் கிட்டுவுடன் தனியாக தொர்புகளை பேணி வந்திருந்தனர். தீருவிலில்  கண்ணி வெடி மீட்கப் பட்டதை தொடர்ந்து இஞ்சினியரை யும் வேறு சிலரையும்  புலிகளின் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர் இந்த கைதுகளையடுத்து  நடந்த விசாரணைகளின்போதே  புலிகள் தமிழ்நாட்டில் இருந்து  இருந்து கொண்டுவந்து  பயிற்சி கொடுத்தவர்களில்  றோவினது  உளவாளிகளும் கலந்திருப்பது  தெரியவந்திருந்தது. உடனடியாகவே  தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகைகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது  தமிழ்நாட்டில் இருந்து இயக்கத்தில் இணைந்தவர்களின்   நம்பிக்கையான 53 பேரை  மட்டுமே இயக்கத்தை விட்டு நீக்கி அவர்களை தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டு மற்றைய  தமிழ்நாட்டு  உறுப்பினர்களை  போட்டுத் தள்ளிவிட்டிருந்தார்கள்.இந்த களையெடுப்பின்போது  யாழில் சில இந்திய இராணுவத்தினர்களும்  மாறு வேடங்களில் கைது செய்யப்பட்டதனால்  மலையகத்தில் இருந்து வந்து  புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் கடைகளில் வேலை செய்த பல கூலித் தொழிலாளிகளும் சந்தேகத்தின் பெயரில் பிடித்துக் கொண்டு செல்லப் பட்டு கொல்லப் பட்டிருந்தனர்.

இஞ்சினியர் கைது செய்யப் பட்டதுமே  அவரது தாயார் புனிதவதியை பிரபாகரன்  மதிவதியின் வீட்டில் இருந்து  வெளியேற்றியதோடு சிலநாட்கள்  அவர் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் இருந்திருந்தார் ஆனால் அவரிற்கு எதுவுமே தெரிந்திருக்காததால்   அவரை தங்கள் கட்டுப் பாட்டு பகுதியில் இருந்து வெளியெறி விடுமாறு  அனுப்பி விட்டிருந்தார்கள்  இவர் பின்னர் திருகோண மலையில்  வாழ்ந்திருந்தார்.இஞ்சினியர் கைதானதையடுத்து  கிருபனும் பிரபாகரனின் மெய் பாதுகாவல் பிரிவில்இருந்த செங்கமலம் மற்றும் சுசிலன் ஆகியோர் கைதாகி விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரபாகரன் பயணம் செய்யும் வாகனம் என அடையாளம் காணப்பட்டு  இன்னொரு தாக்குதலும் பளைப் பகுதியில் நடத்தப் பட்டிருந்தது ஆனால் அதில் பிரபாகரன் பயணம் செய்திருக்கவில்லை.விசாரணைகளின் போது  பலர் மாத்தையாவே  தங்களிற்கு  பிரபாகரனை  கொலை செய்யும்படி  கட்டளையிட்டதாக சொன்னதையடுத்து மாத்தையாவை  கைது செய்வதென பொட்டு முடிவெடுத்தார்.

 மானிப்பாயில் மாத்தையாவின்  பிரதான முகாமும் அதற்கருகே  மாத்தையாவின் முகாமிற்கு பாது காப்பாக இன்னொரு முகாமும் இருந்தது  இரண்டிலுமாக  அறுபது வரையான போராளிகள்  தங்கியிருந்தார்கள். இந்த  இரண்டு முகாம்களையும்சொர்ணம் தலைமையில் பொட்டு சுமார் நூற்றைம்பது பேருடன் சென்று சுற்றி வழைத்தார் அதே நேரம் மாத்தையாதரப்பிலிருந்து  கட்டாயம் தாக்குதல் வருமென நினைத்து மாத்தையா தரப்பு போராளிகளை  சண்டையிடாது சரணடையச் சொல்வதற்காக  ஒலி பெருக்கி பூட்டிய வாகனம் எல்லாம் தயாராக கொண்டு போயிருந்தார்கள். ஆனால் சொர்ணமோ பொட்டுவோ  நினைத்ததைப்போல மாத்தையா தரப்பிலிருந்து  தாக்குதல் எதுவும் வரவில்லை அதற்கு மாறாக மாத்தையா தரப்பு பொட்டு குழுவினரை  வரவேற்றதோடு தீடீரென  வந்த விடயத்தை கேட்டபொழுது தம்பி அவசரமாக கதைக்க வேண்டுமாம் என மாத்தையாவின் கையை பிடித்தபொழுது  தானாகவே வருகிறேன்  என கூறிய மாத்தையா தனது கைத்துப்பாக்கியையும் பொட்டுவிடம் கொடுத்துவிட்டு பொட்டுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மாத்தையா தரப்பு போராளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்கள் ஆயுதங்களும் கழையப்பட்டு  அனைவரும் கைது செய்யப் பட்டு அழைத்துச் சொல்லப் பட்டனர். மாத்தையா பிரச்சனையின் போது அண்ணளவாக  350 பேர்வரை  கைதாகி விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டார்கள்.சாவகச்சேரியிலும்  கோப்பாயிலும் இரண்டு பெரிய சித்திரவதை சிறைச்சாலைகளை நடாத்திய மாத்தையா இப்பொழுது பொட்டுவின் கண்காணிப்பில் பெரும் சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியிருந்தார். தொடர்ச்சியான  சித்திரவதைகளால் அவர் மனநிலை பாதிக்கபட்டு தன்னை கொன்றுவிடுமாறு சித்திரவதை செய்தவர்களை கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நாளில் பொட்டுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் றோ உளவமைப்பிற்கும் மாத்தையாவிற்கும் நேரடி தொடர்பு இருந்தாக புலிகளின் புலனாய்வு பிரிவினரால் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

மாத்தையாவை சுற்றி றோவின் தொடர்புகளோடு உருவாக்கப்பட்ட வலைப்பின்னலில் இருந்தவர்களால் மாத்தையா றோவின் உளவாளி என புலிகளின் புலனாய்வு பிரிவினரால் நம்ப வைக்கப்பட்டு மாத்தையாவும் கொல்லப்பட்டார். மாத்தையாவை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது தங்கள் பக்கம் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி புலிகளை  பலவீனப் படுத்துவது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அவர்களது இரண்டாவது திட்டம் நிறைவேறியிருந்தது. ஆனால் பிரபாகரனை அன்றைய சந்தர்ப்பத்தில் கொல்லமுடியாமல் போய் விட்டிருந்தது. இந்தப் பிரச்சனைகளின் போது புலிகள் அமைப்பில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பலர் கொல்லப் பட சிலர் விடுதலையானார்கள். அப்படி விடுதலையானவர்கள் அரசியல் துறை பொறுப்பில் இருந்த யோகி. குட்டி நிதி பொறுப்பு.தளபதி தீபன்.ஜான் மன்னார் மாவட்ட தளபதி.சலீம் முகாம் பொறுப்பாளர்..சாந்தி மற்றும் சுதா ஆரம்பகால பெண் போராளிகள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.லோறன்ஸ் தளபதி.ஜெயம் தளபதி ஆகியோர் விடுதலையானார்கள். அதில் ஜெயம் சித்திரவதைகளின் போது அவரது கை  கால் விரல் நகங்கள்  அனைத்தும் பிடுங்கப்பட்ட நிலையில் விடுதலையாகியிருந்தார். விரும்பினால் இயக்கத்தை விட்டு எங்காவது போய் சொந்த வாழ்கையை பார்க்குமாறு பிரபாகரனால் கேட்கப்பட்டிருந்தார்  தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தெரிந்ததெல்லாம் இயக்கமும் யுத்தமும் துப்பாக்கியும்தான் எனக்கு வெளியில் போய் எங்கும் வாழமுடியாது தயவு செய்து  நீங்களே உங்கள் துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள் என பிரபாகரனை பார்த்து கெஞ்சியதை அடுத்து  அவர் மீண்டும் பழைய பதவிநிலைகள் வழங்கப்பட்டு  இறுதி யுத்தத்தின்போது  தற்கொலை செய்து கொண்டார்.

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?

$
0
0

படைப்பாளியின் கையில் இருக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பது யார்…?

 "நடு"  இணைய இதழுக்காக ..லெ.முருகபூபதி – அவுஸ்திரேலியா.

 

படித்தோம் சொல்கின்றோம்:
சாத்திரியின் தரிசனங்களாக எமது மக்களின் அவலங்கள்.       

” எனக்குத்  தற்கொலை செய்பவர்கள் மீது வாழ்க்கையில் போராட முடியாத கோழைகள் என்று கோபம் வரும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்துவிட்ட ராணியக்காவின் முடிவு எனக்கு கோபத்தைத்தரவில்லை. ஆனால், என்னிடம் இன்னமும் விடைதெரியாத ஒரு கேள்வி இந்த இளம் வயதில் இத்தனை கொடுமைகளை அனுபவிக்க ராணியக்கா செய்த பாவம்தான் என்ன…? இந்தக்கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியும் ஆகும்…”

இந்த வரிகளுடன் சாத்திரியின்ராணியக்காஎன்ற சிறுகதை முடிகிறது. இந்த ராணியக்கா மட்டுமல்ல அவரைப்போன்ற பல ராணியக்காக்களின் கதைகள்  ஈழத்தின் அனைத்து மக்களுமே என்ன பாவம் செய்தார்கள்…? என்ற கேள்விதான் ஒரு வாசகன் என்ற  நிலையிலிருந்து எம்மிடம் எழுகின்றது.
ஈழத்திற்கான போரைத்தொடங்கியவர்களில் பலர் இன்றில்லை. அவர்களைப் பின்பற்றியவர்கள் பரதேசிகளாக சென்றுவிட்டனர். சென்றவிடத்தில் ஈழத்தின் நினைவுகள் துரத்திக்கொண்டிருக்கின்றன.
சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நினைவுகள் வரும்போதெல்லாம் நீண்ட பெருமூச்சை காற்றில் பரவச்செய்துவிட்டு மற்றவேலைகளை கவனிக்கலாம்.

ஆனால், சாத்திரி போன்ற எழுத்தாளர்களினால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அவர்களின் ஆழ்ந்த பெருமூச்சுக்கள்தான் கதைகளாக வெளியே தள்ளப்படுகின்றன. எழுத்தில் பதிவாகிவிடுகின்றன.
கி.மு. – கி.பி.என்ற சொற்பதம் உலகவரலாற்றில் இடம்பெற்றுவருகிறது. அதுபோன்று போ. மு. – போ. பி.என்று நாம் எமது தமிழின வரலாற்றை எழுத நேர்ந்திருக்கிறது.
அதாவது போருக்கு முன்னர், போருக்குப்பின்னர்.
சாத்திரி இரண்டு காலங்கள் பற்றியும் எழுதிவரும் படைப்பாளி. அதனால் அவரது ஆயுத எழுத்து”படித்தோம். தற்பொழுது அவரது மற்றும் ஒரு பதிவாகஅவலங்கள்”படிக்கின்றோம். இவர் எழுதியஅன்று சிந்திய இரத்தம்”இதுவரையில் படிக்கக்கிடைக்கவில்லை.
ஈழப்போர் முடிவுற்ற பின்னர்தான் இந்த மூன்று நூல்களையும் சாத்திரி வரவாக்கியிருக்கிறார். இன்னும் சரியாகச்சொல்லப்போனால், விடுதலைப்புலிகள் களத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான் இவற்றை நூலக்குகின்றார்.

அவர்கள் தோற்கடிக்கப்படாதிருந்தால், சாத்திரியிடமிருந்து  இந்த மூன்று நூல்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்காது. விடுதலைப்புலிகளின் வெற்றியின் நியாயங்கள்தான் அவரது எழுத்தில் பேசப்பட்டிருக்கும்.
எம்மைப்பொறுத்த மட்டில்  இந்தப்போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்கள் இலங்கையின் மூவின மக்களுமே. அதிலும் ஏழை மக்கள்.  நீடித்த ஈழப்போரின் முடிவும் விடுதலைப்புலிகளின் தோல்வியும் பலரையும் சுதந்திரமாக,  எவருக்கும் பயமின்றி துணிந்து எழுதவைத்திருக்கிறது.

அதனால் போரை நீடிக்கச்செய்த தரப்புகளின் உள்விவகாரங்களும் மறைக்கப்பட்ட இரகசியங்களும்  அம்பலமாகின்றன. அதில் ஒரு தரப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த ஒருவரிடமிருந்து எழுத்துமூல வாக்குமூலம்  வரும்பொழுது, அவர் சார்ந்திருந்த தரப்பின் செயல்களின் மௌன சாட்சியாகவும்  அவரையும் இனம் காண்கின்றோம்.
சாத்திரியின் ஆயுத எழுத்து நாவல் வடிவத்தில் பேசிய அவலங்களை தற்பொழுது அதே பெயரில் சில சிறுகதைகளிலும் பார்க்கின்றோம்.
இந்தத்தொகுதியினை எதிர் வெளியீடுஎன்ற பதிப்பகம் தமிழ்நாடு பொள்ளாச்சியில் வெளியிட்டிருக்கிறது. சாத்திரி கனவு கண்ட ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இலங்கைப்படைகளிடம் வீழ்ந்த கிளிநொச்சியிலிருந்து கருணாகரன் ” உண்மை மனிதர்களின் கதைகள்”என்ற தலைப்பில் சிறந்த முன்னுரை தந்திருக்கிறார்.
அவலங்கள்  கதைகளை எழுதியவரும் – முன்னுரை தருபவரும் நீடித்த அந்தப்போரின்  மௌனசாட்சிகளே.

நீடிக்கும் போரில் முதல் கட்டமாக பெரிதும் பாதிக்கப்படுவதும்  பெண்கள்தான், இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலும் பாதிக்கப்படுபவர்கள்  பெண்கள்தான் என்பது போர் வரலாற்று  ஆசிரியர்களின் சரியான கூற்று.
அந்தப்போர், வியட்நாமில் நடந்தாலென்ன, ஈராக், லெபனான், பாலஸ்தீனம், சிரியா, காஸ்மீரில் ,  இலங்கையில் நடந்தாலென்ன முதலிலும் இறுதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது பெண்கள்தான்.
படைகளின் தேடுதல் வேட்டையில் இளைஞர்களோ ஆண்போராளிகளோ சிக்கவில்லையென்றால், அந்த வலையில் சிக்கிச்சீரழிவது அவர்களின் சகோதரிகள் அல்லது தாய்மார்தான்.

காணாமல்போய்விட்டவரை தேடிச்செல்லும் பெண்ணுக்கும் நிலை இதுதான். போரில் குடும்பத்தலைவனை இழந்த பின்னர் சுமைகளுடன் போராடுவதும் பெண்தான்.  போரினால்  விதவையாகிவிட்டால் சமூகத்தின் பார்வையில் நீடிக்கும் விமர்சனங்கள் மற்றும் ஒரு போராட்டம்.
இவ்வாறு நீடிக்கும் போர் வழங்கும் அறுவடைகள் அனைத்தும் பெண்களையே சார்ந்திருக்கிறது.

சாத்திரியும்  தமது  கதைகளில் பெண்களின் அவலங்களையே உயிரோட்டமாக பதிவுசெய்திருக்கின்றமையால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் வரலாறாகியிருக்கிறது இந்த அவலங்கள்சிறு கதைத்தொகுதி.
அவலங்கள் தொகுப்பின் முதல் கதையில் வரும் ராணியக்காதனது  நீண்ட தலைமுடியை பராமரிக்கவே தினமும் அரைமணிநேரம் செலவிடுபவர். முழுகிய பின்னர் தலைமுடியை ஒரு கதிரையில் படரவிட்டு அதனை சாம்பிராணி புகையுடன் உறவாடச்செய்பவர். தினமும் புதிய வார்ப்பு படப்பாடலை –இதயம் போகுதே– பாடிக்கொண்டிருப்பவர்.
அவ்வாறு ஊரில் வாழ்ந்த ராணியக்கா, இந்திய ஆமியிடம் அசிங்கப்பட்டு, இறுதியில் இந்தியாவிலேயே வாழநேர்ந்து, அந்த நாட்டின் தமிழ் மாநிலம் சென்னையில் வளசரவாக்கத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.
ராணியக்காவின் கதையைச்சொல்பவர், அவரது தாயகத்திற்கும் இந்திய இடப்பெயர்வு வாழ்வுக்கும் இடையில் நடந்தவற்றை சொல்லும்போது, ராணியக்காவின் கூந்தலை சித்திரிக்கிறார்.

அந்தக்கூந்தலை இந்திய சீக்கிய சிப்பாயும் பற்றிப்பிடிக்கின்றான். இறுதியில் அவர் தனது உளப்பாதிப்புக்கு எடுத்த மருந்து மாத்திரைகளே அந்த அழகிய நீண்ட கூந்தலை படிப்படியாக அகற்றிவிட்டன. இறுதியில் கூந்தலற்ற மொட்டந்தலையுடன் காட்சிதரும் ராணியக்கா, இறுதியில் இந்த உலகைவிட்டே நிரந்தரமாக விடைபெறுகிறார்.
அவரது தற்கொலை மரணம்,  அவரது கதையை எழுதியவருக்கு கோபத்தைத்தரவில்லை.

ஈழப்போரில் பல பெண்போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலைசெய்துகொண்டார்கள். ராணியக்காவும் தொடர்ந்து ஈழத்திலிருந்திருப்பின் பெண்போராளிகளுடன் இணைந்திருக்கக்கூடும். சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டாலும் அதனை வீரமரணம் என்றுதான் வர்ணிக்கும் எமது சமூகத்தில், இந்தப்போரினால் உடல் உளப்பாதிப்புக்குள்ளான ராணியக்கா அளவுக்கு அதிகமாக நித்திரைக்குளிசை எடுத்தார் என்பதனால் அவரது மரணம்  தற்கொலையாகிவிட்டது.
சயனைற்றுக்கும் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும்  நித்திரைக்குளிசைக்கும் இடையில் நூலிழை வேறுபாடுதான். இந்த வேறுபாட்டை  இச்சிறுகதையின் வாசிப்பு  அனுபவத்திலிருந்தும் தெரிந்துகொள்கின்றோம்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 06-11-2015 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட பதினொரு கதைகளையும் திகதி குறிப்பிடப்படாத அஞ்சலிஎன்ற கதையுடனும் அவலங்கள் வெளியாகியிருக்கிறது.

வழக்கமாக சிறுகதைகளை தொகுத்து வெளியிடும் படைப்பாளிகள் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் அவை வெளியான இதழ் மற்றும் ஆண்டு முதலான விபரங்களையும் தருவது வழக்கம். ஆனால், சாத்திரி தமது கதைகள் எழுதப்பட்ட காலத்தை தொடக்கத்திலேயே தந்திருப்பதன் மூலம் புதிய கதைத்தொகுப்பு நடைமுறைக்கு அறிமுகம் தந்துள்ளார்.
இவரின் கதைகளின் பிரதான பாத்திரங்கள்: ராணியக்கா, மல்லிகா, மலரக்கா, அலைமகள், கைரி முதலான பெண்கள்தான் என்றாலும் ஏனைய கதைகளும் பெண்களுடன்தான் பயணிக்கின்றன.

இவர்கள் அனைவரும் நீடித்த போரினாலும், சமூகச்சிக்கல்களினாலும், குடும்ப உறவுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள்தான். அந்தவகையில் சாத்திரி பெண்களின் குரலாக ஒவ்வொரு கதையிலும் ஒலிக்கின்றார்.
மல்லிகாஇவளின் கதையை எழுதியவர், அன்றைய சமூகத்தில் சாதி அடிப்படையில் தனது குடும்பத்தினால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டாள் என்பதைச் சித்திரிக்கின்றார். இவளது தந்தைக்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் வாசல் காவலாளி வேலை கிடைக்கிறது. அந்த வேலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் விநோதனின் புண்ணியத்தால் கிடைத்ததாகவும் சொல்கிறார்.

அத்துடன் விநோதன் வாக்குவேட்டைக்காக சுதந்திரக்கட்சியால் நிறுத்தப்பட்டார் என்ற  தொனியிலும் எழுதுகிறார். இதே விநோதனை இயக்கங்கள் அவருடைய  தொகுதி அலுவலகத்தில் சுட்டுக்கொல்ல முயன்றன.

இறுதியில் அவர் கொழும்பில் அவருடைய வீட்டின் முன்னால் ஒரு இயக்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டது அவரது மனைவி ஜெயந்தியும் அவருடைய குழந்தையும்தான் என்பது எமக்குத்தெரிந்த கதை.
மக்களுக்கு,  அதிலும் எமது சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்தவர்களுக்கு உதவியவர்களுக்கு இயக்கங்கள் அளித்த பட்டமும் தண்டனையும் அனைவருக்கும் தெரிந்த கதைதான்.

ஆனால்,  எமக்கெல்லாம் தெரியாத கதைகளை தமது நாவல், சிறுகதைகளில் தொடர்ச்சியாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் சாத்திரி.
ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகா, புலம்பெயர்ந்து கொலண்டில் வாழத்தலைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் போர் முடிந்த காலப்பகுதியில் ஊருக்குச்சென்று, ஆலயம் சென்று போரில் மடிந்த போராளி  நந்தனின் பெயரில் பூசையும் செய்து அன்னதானமும் கொடுக்கிறாள்.
இங்குதான் இந்தத்தொகுப்பின் வாசிப்பு அனுபவத்தில் தொடக்கத்தில் சொல்லப்பட்ட போ. மு. – போ. பி.என்ற காலத்தை நாம் அடையாளப்படுத்துகின்றோம்.

விடுதலை இயக்கங்கள் எமது சமூகத்தில் சில சீர்திருத்தங்களை செய்திருந்தாலும்,  அவை ஓரணியில் திரளவில்லை. திரண்டிருப்பின் வரலாறு வேறுவிதமாகத்தான் எழுதப்பட்டிருக்கும்.
ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத சமூகத்திலிருந்து வந்திருக்கும் மல்லிகாவால் அங்கு பிரவேசித்து பஞ்சபுராணம் பாட முடிந்திருக்கிறது. நாடுகடந்து சென்றாலும் ஊர் வரும்பொழுது ஆலயம் வந்து பூசை செய்யவும் அன்னதானம் வழங்கவும் முடிந்திருக்கிறது.

அவள் கைபட்ட நெல்லிக்காயை உண்ணக்கூடாது என்று தடுத்தது போருக்கு முந்திய சமூகம். அவள் தந்த அன்னதானத்தை அதே சமூகம் வாங்கி உண்ணச்செய்தது போருக்குப்பிந்திய காலம்.
இவ்வாறு காலத்தின் வேறுபாடுகளை படிமமாக பதிவுசெய்துள்ளார் சாத்திரி.
1972  இல் – யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டரில் புதிதாய் கலியாணம் செய்துகொண்ட தோற்றத்தில் அருகருகே அமர்ந்து வெள்ளிவிழா படம் பார்க்கும் அந்த இளம் தம்பதியினரை பெரிதும் கவர்ந்துவிடுகிறது  “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…”பாடல். இந்தப்பாடல் அவர்கள் இருவருடனும் கடல்கடந்தும் பயணிக்கிறது. படத்தின் நாயகியின் காதில் ஆடும் சிமிக்கியைப்போன்று தனது மனைவிக்கும் வாங்கிக்கொடுக்க ஆசைப்பட்டு,  ஆசைப்பட்டவாறே (விமானப்பயணத்தில்)  அவள் காதில் அணிவிக்கும்  கணவனின் கதை… துருக்கி -சிரியா நாடுகளின் எல்லை மலைப் பகுதியில் I.S.I.S அமைப்பின் ஏவுகணையின் சீற்றத்தில் முடிவுக்கு வருகிறது.

அந்தக்கணவன் இறுதியாகக்கேட்டதும் “காதோடுதான் நான் பாடுவேன்… காதோடுதான் நான் பேசுவேன்…”பாடல் வரிகளைத்தான்.
இங்கும் சாத்திரி இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பிக்கின்றார்.
இத்தொகுப்பில் எம்மை மிகவும் பாதித்த கதைமலரக்கா.வாழ்வில் பலரால் பந்தாடப்பட்ட மலரக்கா இறுதியில் பிரான்ஸ் நாட்டின் ஒரு புறநகரில் எழுந்திருக்கும் எம்மவர் கோயிலொன்றில் திருப்பணி செய்கிறார்.
இக்கதையை வாசித்தபோது தமிழ்த்திரைலகில் பந்தாடப்பட்ட ஒரு புகழ்பெற்ற நடிகை நினைவுக்கு வந்தார். அவர் கர்னாடகா மாநிலத்தில் ஒரு கோயிலில் இருப்பதாக ஒரு செய்தி. அவர் பற்றியும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.

மலரக்காவை ஒரு காலத்தில் நாடிச்சென்றவரே நீண்ட இடைவெளிக்குப்பின்னர் புகலிட நாட்டில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்கிறது.
எனினும் மலரக்காவுடன் மீண்டும் அறிமுகமாகியபின்னரும், தனது தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுக்கும் தயக்கத்தையும் காண்பிக்கிறது. முடிந்த கதை தொடர்வதில்லைஎன்ற பாடலும் எழுதியவரின் நினைவுக்கு வரலாம்.
மலரக்காவின் கதையை தனது மனைவியிடம் சொல்வதன் ஊடாக வாசகருக்கும் தெரிவிக்கும் பாங்கில் எழுதப்பட்ட கதை இது. மலரக்காவிடம் வழங்கிய இனிமேல் சந்திக்கப்போவதில்லை”என்ற சத்தியவாக்கை  காப்பாற்றுவதற்காகவே மீண்டும் பல வருடங்களின் பின்னர் சந்திக்க நேர்ந்தபோதும்  தொலைபேசி இலக்கத்தை பிழையாக எழுதிக்கொடுத்ததாக மனைவிக்குச்சொல்கிறார்.

” ஊகும்…. இவர் பெரிய அரிச்சந்திரன். காப்பாத்திட்டாராம். இன்னும் இப்படி எத்தனை கதை இருக்கோ…?”அவர் மனைவியிடமிருந்து பெருமூச்சுவருகிறது.
” இவரிடம் இப்படி எத்தனை கதை இருக்கோ…?”  என்ற கேள்வி எமக்கும்  எழுகிறது.

நாட்டை  மீட்பதற்கான போரில் கடல்பயணங்கள் மேற்கொண்ட ஒரு கடல் பெண் புலியின் கதை, நாட்டை விட்டு தப்பியோடி மடிந்த கதையாக முடிகிறது. போர்க்காலத்தில் ஒரு பெண்போராளிக்கு சமூகத்திலும் குடும்பத்திலும்  இருந்த  மரியாதைக்கும் போரில் தோற்றபின்னர்,  சரணடைந்து  வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலையாகி வந்த பின்னர் கிடைக்கும் அவமானத்திற்கும் இடைப்பட்ட  ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசுகிறது அலைமகள்.

இதனை 22-09-2012 இல் எழுதுகிறார் சாத்திரி.
2009 மே மாதத்திற்கும் 2012 செப்டெம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னாள் கடற்புலியான அலைமகளின் கதையின் இறுதியில், அவள் பேசும் கடைசி வார்த்தைகள் இவை:
” கலியாணமா…? இயக்கத்துக்கு போகேக்குள்ளை இருபது வயது. பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை. இரண்டரை வருசம் தடுப்பும் புனர்வாழ்வும். இப்ப வயது முப்பத்தெட்டை எட்டித்தொடப்போகுது. ஒற்றைக்கண்ணும் இல்லை. வசதியும் இல்லை. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதெண்டு தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.”
அவள் தன் கதையை இரத்தினச்சுருக்கமாகவே சொல்லி முடிக்கையில் அவளருகில் நெருக்கமான ஜேக்கப், ” நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை நானே ….”அவன் முடிக்கும் முன்பே கடலில் எழுந்த பேரலை அவர்களையும் அந்தப்படகில் வந்தவர்களின் கதையையும் முடித்துவிடுகிறது.

கடலில் எதிரிப்படையுடன் தாக்குப்பிடித்து தாயக மீட்புக்கான போரில் களமாடியவள், நாடு கடந்து தப்பி ஓடலுக்கான முயற்சியில் கடல் அலையோடு  அள்ளுண்டு போகிறாள்.
இப்படி எத்தனை கதைகளை கேட்டுக்கொண்டிருக்கப்போகிறோம்….?
இத்தொகுப்பில் கடைசி அடிஎன்ற கதை புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு, நீடித்த போருக்காக நிதிவசூலித்து உசுப்பேத்திக்கொண்டிருந்தவர்களின்  வாழ்வுக்கோலத்தை சித்திரிக்கிறது.

“வரலாற்றுக்கடமையை செய்யத்தவறாதீர்கள்” என்று சொல்லிச் சொல்லியே தண்டலில் ஈடுபட்டு கொழுத்துப்போனவர்கள், இன்று வேறு வடிவத்தில் வரலாற்றுக்கடமைக்கு கதை அளந்துகொண்டிருக்கிறார்கள்.
அங்கே போர் முடிந்து மக்கள் நிம்மதியாக வாழத்தொடங்கினாலும் புலன்பெயர்ந்தவர்கள் தமது இருப்புக்காகவும் வாழ்வுக்காகவும் வரலாற்றுக்கடமைபற்றிப் புலம்புவதை நிறுத்த மாட்டார்கள்.
“எமது கைகள் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்என்ற தேசியத்தலைவரின் உச்சாடனத்தை புலம்பெயர்ந்த நாடொன்றின் பார்க்கில் அமைந்திருக்கும் சுவர் ஒன்றில் தனது கையில் வடிந்த இரத்தத்தினாலேயே எழுதி, அப்பாத்துரை என்ற நிதிசேகரிப்பாளனின் கதையை முடிக்கிறான் இயக்கத்தை நம்பி மோசம்போன அமுதன்.இயக்கம் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தும், வங்கியில் கடன் பெற்றும் கொடுத்து ஏமாந்துவிடும் அமுதன், அதனால் தனது இல்லற வாழ்வையும் நிம்மதியையும் இழக்கிறான். நடைப்பிணமாக அலைகிறான். 

அவனையும் அவனைப்போன்ற அப்பாவிகளையும், ஈழப்போரின் கடைசி அடி என்று சொல்லிச்சொல்லியே சுரண்டி AUDI போன்ற சொகுசு வாகனங்களில் வலம்வருபவர்களின் ஒரு குறியீடாக அப்பாத்துரை என்ற பாத்திரத்தை சாத்திரி சித்திரிக்கிறார்.
இவ்வாறான  “அவலங்கள்” தான் போரின் பின்னர்  நம்மவர் மத்தியில் எழுதப்பட்டிருக்கும் முடிவுரை எனச்சொல்லவருகிறார் சாத்திரி.
சுயவிமர்சனங்களின் ஊடாகத்தான் தனிமனிதர்களும் சமூகமும் திருந்த முடியும். சுயவிமர்சனம் சத்திர சிகிச்சைக்கு ஒப்பானது. சிகிச்சை கடினமானது. வலி நிரம்பியது. அதனால் சுகம் வரவேண்டும்.
அந்தச்சுகத்திற்காக வலிகளையும்  சகித்துப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம்  வேண்டும்.

இவை எம்மவர்களின் அவலங்களை படிக்கும் வாசகர்களுக்கும் இருத்தல் வேண்டும்.



சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நோயல் நடேசன்

$
0
0

சாத்திரியின் கதைத்தொகுதி அவலங்கள்..நடேசன். (ஆஸ்திரேலியா)

ரோமர்கள் சாபோ மலை உச்சியில் மிருகங்களைப் பலி கொடுத்து, அதை எரிக்கும்போது அங்கிருந்து வந்த மரக்கரியும்(KOH) மிருகக்கொழுப்பும் மழையில் கழுவி அருவியுடன் சேர்ந்தது. அந்த அருவியுடன் கலந்த நீரோடையில் மிதந்து வந்த மிருக எச்சங்கள் கலந்த இடத்தில் ரோமன் மகளிர் துணிகள் துவைக்கும் போது அவை எதிர்பாராமல் பிரகாசமாக வந்தன.
இதுவே சவர்க்காரம் உருவாகிய கதை. இன்னமும் சவர்க்காரம் செய்வதை சபோனிபிக்கேசன் (Saponification) என்பார்கள்.
விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட அழிவுகள் தவிர்த்து, போராட்ட முடிவில் கிடைத்த ஒரு நன்மை என்பது இயக்கப்போராளிகளாக இருந்தவர்கள் இலக்கியவாதிகளாக மாறியதாகும்.


இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல இயக்கத்தை எதிர்த்து பேனை எடுத்த என் போன்றவர்களும் தமிழ்வெளிக்கு ரோமர் காலத்தில் கிடைத்த சவர்க்காரம் போன்றவர்களே.
அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் பிரான்சில் வதியும் சாத்திரி. அவரது தொடர்பு கவிஞர் கருணாகரனால் எனக்குக் கிடைத்தது. அவரது முகநூலில் நானும் இணைந்திருப்பதால், தொடர்ந்தும் அவரை அவதானிக்கிறேன்.
2009 இல் எனக்குத் தெரிய அவர் மட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியவர். மற்றவர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்களின் கதைகேட்டு, முருகனுக்கு அந்த மறைந்துபோன தலைவனை ஒப்பிட்டு, அவர் இன்னமும் இருப்பதாகக் கொண்டாடியவர்கள். மே 2009 பின்பு கோழி திருடியவர்களாக மவுனமாகினார்கள். நல்லவரோ கெட்டவரோ ஒருவர் இறந்தபின்பு அதற்காக அஞ்சலி செலுத்துவது மரபாகிவிட்டது. இந்த மரபை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதசமூகம் பின்பற்றி வருகிறது.

சாத்திரியின் ஆயுத எழுத்து நாவலை பணம் கொடுத்து வாங்கி அவற்றை மெல்பனில் அறிமுகப்படுத்தினேன். அது உண்மை, புனைவு, மற்றும் சாகசங்களின் கலவையான நாவல் என்றாலும், தமிழ் சமூகத்திற்குத் தெரியவேண்டிய பல விடயங்கள் அதில் உள்ளன. எதிர்மாறான கொள்கையிருந்தாலும் நேர்மையுள்ளவர்களை நாம் நேசிக்கவேண்டும். அது அவருக்காகவல்ல, சமூகத்தில் நேர்மை, உண்மை, சத்தியம் இருந்தாலே ஆரோக்கியமானது.

சாத்திரியின் “அவலங்கள்” தொகுப்பின் உள்ளடக்கம் வேறுவிதமானது. இதிலிருப்பவற்றை என்னால் சிறுகதைகளாகப்பார்க்க முடியவில்லை.
சாத்திரியின் எண்ண அலைகள், மன நெருடல்கள், வயிற்றில் தொடர்ந்து சுரந்த அமிலங்களாக திரண்டு வெளியாகியுள்ளது. சாத்திரி நேர்மையாக தமது எண்ணங்களை எங்களுக்குத் தெரிவிக்கிறார்.
அரிஸ்டோட்டல் சொல்லியதுபோல் கதை சொல்பவர் தனது சத்தியத்தை நிலைநிறுத்தும்போது அவர் சொல்வதை நாம் கேட்கிறோம். இந்தத்தொகுப்பில் பெரும்பாலானவை எமது மனதில் நேர்மையான அனுதாபத்தை, முக்கியமாகப் பெண்கள் பாத்திரங்களின் மூலம் உருவாக்குகிறது.

பெரும்பாலானவை காத்தாசிஸ் (Catharsis) ஆக மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லி அமைதியாக்குவது. கூர்வாளின் நிழலில் தமிழினி செய்ததும் இதுவே.
இந்தத்தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் எமது சமூகத்தில் நாம் அடைகாத்துக்கொண்டு உறங்கிய அழுகிய முட்டைகள். ஈழத்தமிழ்ச்சமூகத்தில் சாதி, பெண்போராளிகள் மற்றும் போலித்தனமான சுயநலமிக்க அரசியல் என்பன இந்தக் கதைகளின் மையங்கள். வாசித்தால், உணர்வு உள்ளவர்களுக்குப் படுக்கையில் முள்ளாக குத்தக்கூடியவை. கவிஞர் கருணாகரன் முன்னுரையில் எழுதியதுபோல் பெரும்பாலான கதைகள் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் மிதப்பன
இந்திய அமைதிப்படையால் சிதைக்கப்பட்ட ராணியக்காவின் கதை நமக்கெல்லாம் தெரிந்தது. மூன்று வருடங்களில் இந்திய இராணுவத்தின் நடத்தையை ஒப்பிட்டு, இலங்கை இராணுவத்தைச் சிறந்தவர்கள் என தமிழ் மக்களை ஏற்கவைத்ததுடன், விடுதலைப்புலிகளின் இந்திய எதிர்ப்பு பிரசாரத்திற்கும் அந்த ஒப்பீடு துணைபோனது.

மல்லிகாவின் கதை, யாழ்ப்பாண வெள்ளாள மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் எப்படி சாதியமைப்பை பாதுகாத்தார்கள் என்பதையும், சிங்கள இராணுவம் மற்றும் அரசாங்க ஒடுக்குமுறைக்கு மத்தியில் போராடிய காலத்தில்கூட தங்களருகே இருந்த மற்றைய தமிழர்களை எப்படி அன்னியமாக நடத்தினார்கள் என்பதைக் கண்ணாடியாக காட்டுகிறது.
கோயிலுக்குள் போவதற்கு ஆயுதம் மூலம் வழி ஏற்படுத்தியது உண்மையென்றாலும், சாதியமைப்பு, ஆயுதத்திலும் வலிமையானது என்பதை போரற்ற தற்காலத்தில் உணரமுடிகிறது.

சிமிக்கி கதை, கணவன் மனைவியின் அந்தரங்கத்தை காட்டுவதுடன், சிறுகதைக்குரிய அம்சத்துடன் மனதை நெகிழவைக்கிறது. ஆனால், கடைசிவரிகள் இடறுகின்றன.
மலரக்கா கதை பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் நிகழ்வது. இப்படியான கதைகள் பல ஆங்கிலத்தில் உண்டு. சிறு வயதிலிருந்து வயது முதிர்வதை பாலியல் உணர்விலிருந்து மட்டுமல்லாது நேர்மையாக அநீதியை எதிர்த்து நிற்கும் உணர்வின் ஊடாகவும் காட்டுவது
அலைமகள் கதை இயக்கப் பெண்போராளியின் கதை. வங்காளப் பிரிவினையில் பாகிஸ்தானியப் படைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களை மணக்கும்படி அக்காலத்தலைவர் முஜுபிர் ரஹ்மான் இளைஞர்களை வேண்டுகிறார். இலங்கையில் போராளிப் பெண்களையோ அல்லது இளம் விதவைப்பெண்களையோ மறுமணம் செய்வதற்கு உற்சாகப்படுத்தவோ உதவி செய்தற்கோ எந்த அரசியல் தலைவர்களோ அல்லது நிறுவனங்களோ இல்லாத நிலையில் அலைமகளின் இறுதிமுடிவு மிகவும் யதார்த்தமாக அமைந்திருக்கிறதுகடைசிஅடி என்னும் கதை,

: 2009 மே மாதத்தில் போர் முடிவடையும் காலத்தில் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் முகவர்கள் பணத்தை மக்களிடம் கறந்த கதை. அதிகமாக பலர் ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்திலும் வங்கியில் கடன் எடுத்து ஆயுதம் வாங்க விடுதலைப்புலிகளுக்கு கொடுத்ததாக அறிந்தேன் .
கைரியின் கதை. மனநலம் குன்றிய பெண்ணைத் துரோகியாகக் கொன்ற கதை. துரோகியாக மட்டுமல்ல அத்தகையோரை, தற்கொலைப்போராளிகளாகவும் பயன்படுத்திய பெருமைக்குரியது நமது வரலாறு.

நான் படித்து வாய்விட்டுச் சிரித்த கதை அகதிக்கொடி. ஆரம்பத்தில் நகைச்சுவையாகத் தொடங்கி இறுதியில் சோகத்தில் முடிகிறது.
பீனாகொலடா (Pina colada) அண்ணாசிப்பழமும் ரம்மும் சேர்த்து தயாராகும் கரிபியன் கொக்ரெயில். இதன் பெயரில் எழுதப்படுவது தமிழ்நாட்டுக்கதை. ஆரம்பத்தில் நன்றாக வந்து, இறுதியில் தொய்ந்துவிட்டாலும் இந்தக்கதையில் மிகப்பெரிய நீதி உள்ளது. ஒருவரால் வஞ்சிக்கப்பட்டு பாழ்கிணற்றில் தள்ளப்பட்டதாக நினைத்து அழும் பெண் பிற்காலத்தில், அவளே பலரை பாழ்கிணற்றுக்குள் தள்ளுவதைத் தொழிலாக நடத்துகிறாள்.
அக்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் எவன் அதிகம் பகிடிவதைக்கு உள்ளாகின்றானோ, அவனே பின்னர் பகிடிவதையின் மன்னனாக மாறுவான். வதைக்கப்பட்ட மருமகள், கொடுமைக்கார மாமியாராவது போன்ற முரண்நகை

முகவரி தொலைத்தமுகங்கள்: ஆயுதம் கடத்தும் இயக்கக் கப்பலில் இறந்த இளைஞனை ஒரு தீவில் புதைப்பது பற்றிய கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேவேளையில் விடுதலைப்புலிகளின் பல கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் இலங்கைக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் மாலுமிகளாக இருந்து மூழ்கியவர்களது உறவினர், பெற்றோரை இந்தக்கதை எனக்கு நினைத்துப் பார்க்கத்தூண்டியது.
இப்படி பல நிகழ்வுகளை என் போன்றவர்களுக்கு நினைக்க வைத்ததே இந்தக்கதைகளில் சாத்திரியின் வெற்றி
புரட்சி: இயக்கங்களில் காட்டிக்கொடுப்புகள் பற்றி இயக்கங்களை நன்கு அறிந்தவர்களுக்குத்தெரியும்.
அஞ்சலி என்ற கதை, போதைவஸ்துக்குள் செல்லும் இளம் தமிழ் பெண்ணின் கதை.

இந்தக்கதைகளைச் சிறுகதையாக்காமல் கிறியேட்டிவ் நொன்ஃபிக்சன் Creative non fiction)என்ற நிலையில் எழுதப்பட்டிருந்தால் இவற்றுக்குரிய மதிப்பு பலமடங்கு அதிகமாக இருக்கும். தமிழில் சிறுகதை அல்லது நாவல் என்ற வட்டத்திற்கு வெளியே தமிழ்நாட்டவர்கள் வருவதில்லை. அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு இலங்கையர்களும் உண்மைக்கதைகளை சிறுகதை – நாவல் என எழுதவரும்போது, உண்மைச்சம்பவங்கள், கோயில் காளையை நலமடித்து வண்டியில் கட்டுவது போன்றதாகிவிடுகிறது.
சாத்திரியின் அவலங்கள் நாங்கள் விளையாடிய துன்பகரமான விளையாட்டின் சில கண்ணீர்த்துளிகள். இதேவழியில் போகாது இருப்பதற்காக நாம் இவற்றை வாசிக்கவேண்டும்.
—0–

demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..

$
0
0
demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம்.


பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில் தொடங்கியது.

கோவணங்கள் மட்டுமேயணிந்த சிறுவர்கள் ஒரு தென்னம் தோப்பிலிருந்து எம்மை நோக்கி ஓடி வருகிறார்கள்.."இந்த நாடு சுதந்திரமடைத்த நாளிலிருந்து நாங்கள் தமிழராக எங்கள் மொழியை பேசுகிற உரிமை எதோ ஒரு விதத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது".. என்கிற ஜூட் ரட்ணத்தின் குரலோடு ஆங்கிலேயர்கள் கனிமவளங்களை ஏற்றி செல்வதற்காக அமைக்கப்பட்ட புகையிரதப்பதையில் நிலக்கரியில் இயங்கும் புகையிரதத்தோடு படமும் நகரத் தொடங்குகிறது .பின்னர் கைவிடப்பட்ட புகையிரதப்  பெட்டிகளை பெரியதொரு ஆலமரமொன்று  ஆக்கிரமித்து வளர்ந்திருப்பதை காட்டுவதோடு இரண்டு நிமிடத்திலேயே இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்.. தென்னிலங்கையில் மருதானைக்கு அருகில் குழந்தைகள் விளையாடும் பூங்காவில் சிறிய விளையாட்டு இரயிலை கலரில் காட்டுவதினூடு எம்மை நிகழ்காலத்துக்கு கொண்டுவருகிறார். அந்த இரயிலில் ஏறி விளையாடுவதற்காக "அப்பா   இங்கை வாங்கோ".. என சத்தமாக அழைக்கிறான்.

"இது எனது மகன் .சத்தமாக தமிழில் கதைக்கும்போதெல்லாம் என்மனதின் ஆழத்தில் எங்கிருந்தோ ஒரு பய உணர்வு என்னுள் தோன்றி உடலை நடுங்க வைக்கும். காரணம் அப்போ எனக்கு ஐந்து வயது நான் தமிழில் சத்தமாக கதைதுவிடக் கூடாது என்பதற்காகவே அப்பா பல நாட்கள் என் வாயை பொத்திப்பிடித்து வைத்திருந்திருக்கிறார்". என்று தொடர்ந்து ஒலிக்கும் குரலோடு 1983 ம் ஆண்டின் யூலை கலவரத்தின் காட்சிகள் புகைப்படங்களாக நகருகின்றது.அம்மணமாக  இருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழரை சுற்றி ஆனந்தக் கூத்தாடும்சில சிங்கள இளைஞர்.   உலகத்தையே உலுக்கிப்போட்ட இந்தப்படத்தை கையில் பிடித்தபடி நடந்துவரும்  ஒரு சிங்கள புகப்படப்பிடிப்பாளர்.. "இதோ இந்த இடத்தில்தான் அந்த தமிழரை அம்மணமாக இருத்தி வைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள்.நான்தான் இந்தப்படத்தை ஒரு பேருந்தின்  பின்னல் மறைந்திருந்து எடுத்தேன்.அந்த தமிழரை காப்பாற்றாது எதற்கு படமெடுத்தாய் என என்னை நீங்கள் கேட்கலாம்.தடுக்கப் போயிருந்தால் என்னையும் அவர்கள் கொலை செய்திருப்பார்கள்.படத்தை எடுத்துக் கொண்டுபோய் காவல்துறையிடம் கொடுத்துவிட்டேன்.என்னால் முடித்து அவ்வளவுதான்"... என்கிறார்.அடுத்து அகதிகளாக தமிழர்கள் வடக்கு நோக்கி சென்ற இரயிலில் பணிபுரிந்த இரயில் திணைக்கள ஊளியர்களின் அனுபவங்களையும்.தமிழர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து,அழித்து பயந்து வாழ்ந்த வாழ்க்கைகளையும் பதிவு  செய்தவாறு நகர்ந்த ஒளிப்படக்கருவி அடுத்த முக்கிய காலகட்டத்துக்கு எம்மை அழைத்துச்செல்கிறது .

அடிவாங்கி அகதிகளாக வடக்கு நோக்கிச் சென்றவர்களில் சிங்களவர்களுக்கு எப்படியும் திருப்பியடிக்க வேண்டும்.தனித் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என ஈழ விடுதலை இயக்கங்களில் இணைகிறார்கள்.அப்படிதான் எனது மாமாவும் இயக்கத்துக்கு போனார் என்று தற்சமயம் கனடாவில் வசிக்கும் மனோகரன் என்பவரை யூட் அறிமுகப் படுத்துகிறார்.இந்த ஆவணப்படத்தின் கதா நாயகன் என்றே அவரை சொல்லலாம்.N.L.F.T அமைப்பிலிருந்த மனோகரன் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு திரும்பியவர்.குடும்பமாக அவர்கள் வாசித்த கண்டி நகருக்கு சென்று 83 கலவரத்தின்போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றிய சிங்கள மக்கள் முன்னால் போய் நிக்கிறார்.யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.தன்னை அடையாள படுத்தியதும் அவர்கள் கட்டித்தழுவி ஆனந்தக்கண்ணீர்ரோடு நலம் விசாரிக்கிறார்கள்.பின்னர் அங்கிருந்து தன்னோடு இயக்கத்திலிருந்த நண்பனைத் தேடி யாழ்ப்பாணம் போகிறார்.அவருக்கும் நண்பருக்குமான உரையாடலில் விடுதலை இயக்கங்களுகிடையிலான மோதல்கள் வன்முறைகள் பற்றிய சம்பவங்களை நினைவு மீட்டுகிறார்கள் .இவர்களோடு .T.E.L.O; P.L.O.T; E.R.O.S;L.T.T.E..ஆகிய உறுப்பினர்களும் நினைவு மீட்டல்களில் பங்கெடுக்கிறார்கள்.ஒவ்வொருவரும் இயக்க மோதல்களையும் தாங்கள் உயிர் தப்பியதையும் விபரிக்கிறார்கள்.தங்களின் இயக்கமான .N.L.F.T புலிகளால் தடை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவான மனோகரன் தோட்டத்துக்கு வேலைக்கு போகும் கூலித் தொழிலாளி போல் அழுக்கான சாரமும் தலைப்பாகையும் கட்டிக்கொண்டு பழைய சைக்கிள் ஒன்றில் தப்பிச் செல்லும் போது சாவகச்சேரி பகுதியில் காவலுக்கு நின்ற புலி உறுப்பினர் ஒருவர் தங்கள் காவலரண் அமைப்பதற்காக இரயில் தண்டவாளத்தை கிழறி எடுத்து அதனை துண்டுகளாக வெட்டிக் கொடுத்துவிட்டு போகும்படி கட்டளையிடுகிறார்.இது அவருக்கு மட்டுமான கட்டளையல்ல .

அந்தப்பகுதியால் சென்றவர்கள் அனைவருக்குமானது.ஒருவர் எட்டு தண்டவாளங்களை அறுக்கவேண்டும்  அதுவும் சாதாரணமாக  இரும்பு அறுக்கும் வாளால்.அப்படி எட்டு தண்டவாளங்களை அறுத்துக்கொடுதுவிட்டு இயக்கச்சி வழியாக இராணுவப்பகுதிக்கு தப்பிச் சென்று கனடா சென்று விடுகிறார்.
இப்படி அனைவருமே தனி நாட்டுக்கான போராட்டம் எனத் தொடக்கி பின்னர் ஒரு இயக்கம் ஒற்றுமையின்மையால் இன்னொரு இயக்கத்தை அழித்து படுகொலைகளை செய்தது மட்டுமல்ல அப்படி ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தை அழிக்கும்போது பலமான இயக்கத்துக்கு மக்களும் ஆதரவு கொடுத்தது.குறிப்பாக புலிகள்  ரெலோவை அழிக்கும்போது எந்தக் கேள்வியுமின்றி புலிகளுக்கு சோடாவும் உணவும் கொடுத்து வரவேற்றது புலிகளுக்கு உற்சாகத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் மற்றைய இயக்கங்களையும் அவர்கள் தடை செய்து அழித்து தனிப்பெரும் இயக்கமாக மாறிய புலிகள்  பின்னர் அழிக்கப்பட்டதற்கும் அதிகாரத்தோடு ஒத்தோடும் பெரும்பான்மை தமிழ்  மக்களின் மனநிலையும் ஒரு காரணம் என்கிற பொதுவான வாதத்தை அனைவரும் முன்வைகிறார்கள்.
இறுதியாக புகையிரதப்பெட்டிகளை ஆக்கிரமித்து நின்ற பெரிய ஆலமரம் வெட்டப்பட்டு அவை விடுவிக்கப் படுவதோடு மீண்டும் கொழும்பிலிருந்து யாழுக்கான பிகையிரதப் பாதை போடப்படும் காட்சியோடு படம் முடிவடைகிறது.திரையரங்கத்தில் அனைவருமே  தங்கள் கண்களை துடைத்து விட்டபடியே சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக கரவொலி எழுப்பிகொண்டிருந்தார்கள்.அப்பொழுது யூட்ரட்ணத்தை நோக்கி வந்த இளவயதுப் பெண்ணொருவர் அவர் கையைப்பிடித்து  "நான் இந்த நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவள் அப்பா இலங்கைத் தமிழர்தான் .நான் இதுவரை இலங்கை சென்றதில்லை.அப்பா அடிக்கடி தனது நாட்டைப்பற்றி சொல்வார் ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஒரு இனத்தின் துயரத்தை புரிந்து கொள்ள முடிந்தது".என்று வார்த்தைகள் முட்டி மோதி அழுகையோடு சொல்லிவிட்டு சென்றார்.  "இதை விட உங்களுக்கு வேறு விருதுகள் தேவையில்லை ".யூட் ரட்ணத்தின் தோளில் தட்டி சொல்லிவிட்டு வெளியே வந்து கனத்த மனத்தோடு கான் நகர கடலை நீண்ட நேரம் வெறித்தபடியே இருந்தேன்....


Article 0

$
0
0

சாத்திரியின் “ஆயுத எழுத்து“: ஈழ அரசியல் நாவல்களின் அனுபவப்புலம் -ஜிஃப்ரி ஹாஸன்


ஈழத்தின் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர் சாத்திரி. முன்னாள் புலி இயக்க உறுப்பினரான அவரதும், அவரையொத்த புலிகள் இயக்கத்தின் சக உறுப்பினர்களினதும் போராட்ட கால இயக்க அனுபவங்களை பேசும் ஒரு நாவலே ஆயுத எழுத்து. ஒரு நவீன நாவலொன்றின் (modern novel) பண்புகளோடு நகரும் இந்நாவலில் மையக் கதாபாத்திரத்திற்கு ஒரு பெயர் சூட்டப்படாமல் நாவல் முழுவதும் அவன்என்ற படர்க்கை ஒருமையிலேயே அழைக்கப்படுகிறான். கதையும் “தன்மைக் கதைசொல்லலன்றி (first person narration) படர்க்கை கதைசொல் (third person narration) மாதிரியிலேயே சொல்லப்படுகிறது. சாத்திரி தன் கதைகூறலுக்கு வசதியாக அதைத் தெரிவு செய்திருக்கலாம்.

சாத்திரியின் இந்நாவல் போராட்டம் சார்ந்த ஒரு வித மாயவாழ்வு சார்ந்த அனுபவப் புலத்திலிருந்து உருவான ஒரு பதிவே ஆகும். மிகைப் புனைவற்ற ஒரு நடப்பியல் (realism) அனுபவ நாவல் இது. அதற்கு அப்பால் இந்நாவலுக்கு வேறு அடையாளங்களும் உள்ளன. அதீத புனைவுத் தன்மையும், மொழியின் விளையாட்டுத் தன்மையும் இந்நாவல் கொண்டிராததனால் “ஓர் அரசியல் வரலாற்றுக் கதையாக” இதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் அநேக ஈழத்து அரசியல் நாவல்கள் அந்த எழுத்தாளர்களின் போராட்டம் குறித்த சொந்த அனுபவப் புலத்திலிருந்து உருவாகி வருபவையாக இருக்கின்றன. மிகவும் அரசியல் தன்மை மிக்கவை. தன்னனுபவம்சார் இலக்கியப் பதிவு எனும் வகைமையை தீவிரமாக முன்னிறுத்திக் கொண்டிருப்பவை.
ஆயுத எழுத்து நாவலின் நிலவியல் என்பது பன்முக வடிவங்கொண்டு ஒரு பயணத்தின் நிலக்காட்சி போலவே அடிக்கடி மாறியபடியும் இருக்கிறது. வடக்கு-கிழக்கு-தெற்கு என ஒரு விரிந்த உள்ளூர் களமும், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என ஒரு உலகக் களமும் இந்த ஒரே நாவலின் நிலவியலாக விரிகிறது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பும் தொடர்புகளும் எப்படி ஆச்சரியமூட்டத்தக்க வகையில் படர்ந்திருந்தது என்பதை ஒரு அரசியல் செய்தி போல நாவலின் சில அத்தியாயங்கள் விபரிக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்நாவல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கங்கள் உருவாகி வந்த சூழலில் ஏதேனுமொரு இயக்கத்தில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டிருந்தனர். சாத்திரியின் நாவலின் மையக் கதாபாத்திரமான அவனும்தமிழீழக் கனவோடு (சிலவேளை விளையாட்டாக) புலிகள் இயக்கத்தில் இணைகிறான்.

நாவல் முழுவதும் அவன் இரண்டு விதங்களில் செயற்படுகிறான். ஒன்று எத்தகையதொரு சந்தர்ப்பத்திலும் தனது உயிரை பாதுகாத்துக் கொள்வது. யாரைக் கொன்றேனும் தனது மரணத்தை வென்றுவிடுவது. இரண்டு புலிகள் இயக்கமே எல்லாம். அதற்காக எதையும் செய்வது என இயக்கத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக் கொடுத்த நிலை. இது ஒருவித “தயை அற்ற” இலட்சியத்துக்கு (ruthless ambition) அவனை இட்டுச் செல்கிறது. இந்த நிலையிலிருந்து காதல், காமம், நட்பு, உறவுகள், பாசம் என எந்தவிதமான மனித உணர்ச்சிகளும் அவனை அசைப்பதில்லை. அவனைத் தன் நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கச் செய்வதுமில்லை.
ஒரு போராளிக்குரிய அனைத்துக் குணச்சித்திரங்களும் அவனுக்குள்ளிருக்கின்றன. போராட்ட இயக்கங்கள் இளமைக்குரிய கனவுகளை எவ்வாறு நசுக்கின என்பதை சாத்திரி அவனைக் கொண்டே வெளிப்படுத்துகிறார். “காதல்வயப்படுவது“ போன்ற இளமையின் சராசரிக் கனவுகள் “தேச உருவாக்கம்“ எனும் இலட்சியக் கனவாக மாற்றீடு செய்யப்படுவதையும், இயக்கம் அதற்காக எடுத்துக்கொள்ளும் அதீத சிரத்தையையும் ஒரு குழந்தை மனநிலையில் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக உண்மையைச் சொல்கிறார் சாத்திரி. சராசரி மனிதத் தேவைகள் உதாசீனம் செய்யப்பட்டு ஒரு சிலரின் அரசியல் தேவையாக மட்டுமே கீழிறங்கிப் போன போராட்டத்தின் அவலத்தை இதுபோல் வேறெந்த ஈழ நாவலும் பேசவில்லை.

நாவலின் மையக் கதாபாத்திரமான அவன் இந்த இலட்சியவாதக் கனவுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதால் “மனிதத்தை“ முழுமையாக இழந்து வாசகனுக்கு வேதனையூட்டும் வகையில் காட்சியளிக்கிறான். அவனது செயல்பாடுகள் ஒரு இயக்கத்தின் நலனுக்கானவையாக மட்டுமே சுருங்கி இருக்கின்றன. மனிதாபிமானத்துக்கு அங்கு இடமிருப்பதில்லை. காதல், நட்பு, பாசம் போன்ற அடிப்படையான மனிதப் பண்புகளை அந்த இயக்கம் தன் உறுப்பினர்களிடமோ, பிற மனிதர்களிடமோ காண்பிப்பதில்லை. இயக்க உறுப்பினர்கள் கூட தமக்குள்ளேயோ அல்லது பிற மனிதர்களுக்கிடையேயோ அத்தகைய மனிதப் பண்புகளை வெளிக்காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக, அந்த “சுதந்திரப் போராட்ட“ இயக்கத்தின் அசையாத விதியாக இருப்பதைக் கண்டு ஒரு வாசகனால் உண்மையில் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.
இப்படி வாசகனை அதிர்ச்சியைடையச் செய்யும் சம்பவங்களும் விபரிப்புகளும் நாவலில் பல இடங்களில் வருகின்றன. அந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவரான சாத்திரியே அதனை ஓர் உள்ளார்ந்த விமர்சனமாக எழுதுவதன் மூலம் அவருக்குள் ஏற்பட்டிருக்கும் ஒரு “சுய விழிப்புணர்வையும்” கருத்தியல் மாற்றத்தையுமே அது காட்டுகிறது. ஈழத்தமிழர்களில் அநேகரால் கடவுளின் இடத்தில் வைத்துப் போஷிக்கப்பட்ட பிரபாகரனின் புனித பிம்பம் குறித்த தமிழ் மனச் சித்திரம் அநேகமாக இந்நாவலால் சிறிதளவேனும் மறுவரைவுக்குள்ளாக்கப்படுகிறது.
புலிகள் இயக்கம் அதன் போராளிகளுக்கு கற்றுக்கொடுத்த ஒரே பாடம் மனிதர்களை நண்பர்கள், எதிரிகள், துரோகிகள் எனும் மூன்று நிலைகளில் வைத்து நோக்குவதைத்தான். மனிதர்கள் குறித்த இந்த முக்கோண நோக்கு “மக்களுக்காக இயக்கமல்ல, இயக்கத்துக்காகவே மக்கள்” எனும் அதிதீவிர வாதமாகவே போராட்டத்தை வடிவமைத்தது.

தேச உருவாக்கத்துக்கான செயற்பாடுகள் அறரீதியான போக்கிலிருந்து திசைமாறிப் போவதை நுண்மையான அங்கதத்துடன் இந்நாவல் பேசுகிறது. வங்கிக் கொள்ளையிடல், கோயில் நகைகளை கொள்ளையடித்தல், இன்னொரு சிறுபான்மையினத்தின் பொருளாதாரத்தை அபகரித்தல், அதற்காக அந்த சிறுபான்மையினம் குறித்த போலிக் கதைகளை கட்டிவிடல், தேசம் என்ற பெருங்கனவுக்கு முன்னால் மனித உயிர்களைக்கூட துச்சமாக மதித்தல் போன்ற மானுடப் பண்பற்ற செயற்பாடுகளை நோக்கி அந்த இயக்கம் கீழிறங்கிச் செல்லத் தொடங்கும்போதே அதன் வீழ்ச்சியும் இன்னொரு புறத்தில் ஆரம்பித்திருந்ததை வாசகன் உணர்ந்து கொள்கிறான். இந்த இடத்தில் சாத்திரியின் நேர்மையான அரசியல் நோக்கு நாவலில் மேலோட்டமாகவன்றி ஆழமானதாகவே வெளிப்படுகிறது.
சாத்திரியின் இந்நாவலின் அதிக பக்கங்கள் “தேச உருவாக்கம்” எனும் பெருங் கனவால் ஒடுக்கப்பட்ட சாமான்ய மனிதர்களின் உணர்வுகளாலும், கனவுகளாலும், அவர்களின் உயிர் வலியாலும் நிரம்பி இருக்கின்றன. துன்பியல் (tragedy) வாழ்வை, அனுபவங்களைப் பேசும் ஒரு நாவலில் இந்த வகைச் சித்தரிப்புகள் தவிர்க்க முடியாதவையுங்கூட.

ஆக, ஈழப் போராட்டத்தின் வரலாற்றை யதார்த்தமாக சித்தரித்துச் செல்கிறது இந்நாவல். ஆயுதப் போராட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்றம் பெறும் கட்டத்திலிருந்து அதன் முடிவு வரைக்கும் பேசும் இந்நாவல் புலிகளின் பிரதி தலைவராக இருந்த மாத்தையாவுக்கு கடைசியில் என்ன நடந்தது என்பது பற்றி எதையும் பேசவில்லை. இந்நாவலின் மையக் கதாபாத்திரமான அவனுக்கும் மாத்தையாவுக்குமிடையில் கோள் காவி ஒருவரின் செயற்பாடு காரணமாக தற்செயலாக ஏற்பட்ட ஒரு முரண்பாட்டின் இறுதிக் கட்டமும் நாவலில் இல்லை. மாத்தையா பிற்பட்ட காலத்தில் புலிகளால் கொல்லப்பட்டார் என்பது வரலாறு. மாத்தையாவுக்கான மரண தண்டனைக்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா எனவும் வாசகன் சிந்திக்க இடம் உள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை இந்நாவல் திறந்தே வைத்துள்ளது.

இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட ஈழத் தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இந்நாவல் கூறும் அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் திரண்டிருந்தாலும் புலிகள் இயக்கம் மீதான நுண்மையான ஒரு விமர்சன நோக்கு நாவலின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்நாவலின் ஒரு உபபரிமாணமாகும். இந்த உபபரிமாணம் ஈழத்தின் இன்னொரு கதைசொல்லியான ஷோபா சக்தியின் “கொரில்லா“, “ம்” நாவல்களில் வெளிப்பட்டளவு அவரது மூன்றாவது நாவலான “பொக்ஸ்“ இல் வெளிப்படவில்லை. யுத்தம் முடிந்ததும் அது குறித்தும் ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்ற பரபரப்பே நாவலின் எல்லாப் பக்கங்களையும் நிறைத்திருக்கிறது. இதனால் “பொக்ஸ்“ முன்னையவற்றிலிருந்து பலபடிகள் கீழிறங்கிச் செல்லும் ஒரு நாவலாக தோற்றங்கொள்கிறது.
சாத்திரியின் “ஆயுத எழுத்தை“ப் பொறுத்தவரையும் போர் அனுபவப் புலம் தவிர்ந்து வாழ்வு பற்றிய வேறு நுண்ணோக்குகளோ, புதுமைகளோ நாவலில் வெளிப்படவில்லை. ஈழத்தின் சில கதைசொல்லிகளிடம் காணப்படும் இரசனையான கதைசொல்லல் மரபு சாத்திரியின் இந்நாவலிலும் உள்ளது. புனைவுத் திறன் அறவே இல்லாத எழுத்தாளர் என வாசகனால் புறக்கணிக்க முடியாதபடி “ஆயுத எழுத்து“ சாத்திரியை பல இடங்களில் காப்பாற்றவும் செய்கிறது.

புலிகள் இயக்கத்தின் வரலாற்றினூடாக ஈழப் போராட்ட வரலாற்றை பேச முற்படும் புனைவாகவே ஆயுத எழுத்தை நோக்க வேண்டியுள்ளது. வரலாற்றை ஒரு நேர்கோட்டில் சொல்லிச் செல்லும் இந்நாவல் ஒரு காலகட்ட விடுதலைப் போராட்டமொன்றின் இராணுவ மற்றும் அரசியல் போக்குகள் மீது ஒரு தனிமனித அனுபவத்தை ஏற்றிப் பேசுவதிலேயே அதிக அக்கறையாகவுள்ளது. இதனால் ஆயுத எழுத்து வாழ்க்கை வரலாறு அல்லது வரலாற்றுப் பதிவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. இப்படி வரலாற்றுப் பதிவாக இருக்கும் ஒரு நாவலில் இலக்கியத் தன்மையை அதிகமாக ஒரு வாசகனால் எதிர்பார்க்க முடியாது.

நாவலின் வரலாற்றுச் சம்பவங்களை விபரிப்பதில் சாத்திரி எடுத்துக்கொள்ளும் அக்கறையை நாவலின் புனைவுத் தன்மையில் எடுத்திருக்கவில்லை. நாவல் தன் ஆழ்புனைவுத் தன்மையை வரலாற்றிடம் இழந்துவிட்டு ஒரு கதையாக மட்டுமே வாசகன் முன்னால் தன்னை நிலைநிறுத்துகிறது. ஆசிரியனின் தன்னனுபவங்களும், அவனது குரலும் வாசகனுக்கு ஒற்றைப்படையான கதையை விபரித்துச் செல்கிறது. நாவலின் சம்பவங்கள் வாசிப்புக்கான உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்துவதைப் போல் சாத்திரியின் புனைவு மொழி தரும் உந்துதல் இரண்டாம் பட்சமானதாகவே வாசகனை உணரச் செய்துவிடுகிறது. எனினும் நாவலை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் முடிவு வரை செல்லாமல் இடைநடுவில் நிறுத்திக் கொள்ளும் சலிப்பிலிருந்து இந்நாவல் வாசகனை உண்மையில் காப்பாற்றவே செய்கிறது.

என் இனமே என் சனமே ...

$
0
0
என்  இனமே என் சனமே ...


இலங்கைத்தீவில் தனிநாடு கோரி முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடாத்திய விடுதலைப்புலிகள் அமைப்பும்.அதன் தலைவரும் இல்லாத நிலையில். உலகமே உற்று நோக்கும் "அன்பார்ந்த தமிழீழ மக்களே".. என்று தொடங்கும் பிரபாகரனின்  உரையுமற்ற ஒன்பதாவது  மாவீரர் வணக்க வாரம் தொடங்கியுள்ளது .அதே நேரம் இன்னொரு விடயம் 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர் பற்றிய எனது அனைதுக்கட்டுரைகளிலும்  விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்பதை தொடர்ச்சியாக அழுத்தமாக எழுதி வந்துள்ளேன் .இன்னமும் அதனை எழுத வேண்டிய தேவை உள்ளதால் இங்கும் அதனை முதலிலேயே குறிப்பிட்டு விட்டேன்.
2009 ம் ஆண்டுக்குப் பின்னரும்  தலைவர் பிரபாகரன் ஐயாயிரம் பேரோடு ஐந்தாம் கட்டப் போருக்கு தயாராக இருக்கிறார் .எரித்தியாவில் வான்புலிகளின் நூறு விமானங்கள் கூட குண்டுகளை ஏற்றியபடி பொட்டம்மானின் கட்டளைக்காக காத்திருக்கின்றது என்று கையை மடக்கி உயர்த்தி அடித் தொண்டையில் பலர் கத்திக்கொண்டிருந்தார்கள்.வருடங்கள் செல்லச் செல்ல ஐயாயிரம் பேரும் காணமல் போனது மட்டுமல்ல எரித்தியாவில் நின்றிருந்த விமானங்களும் மாயமாய் மறைந்து போய் விட்டது. தலைவர் ஏன் இன்னமும் வரவில்லையென்று கேட்டால்..அடித்தொண்டையால் கத்தியவர்கள் அனைவருமே டெங்கு வந்தவர்கள்போல.  "ம் ..வருவார்" ...என மூக்கால் முனகுகிறார்கள்.


அதே நேரம் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருந்த மாவீரர் நாள் கொண்டாட்டங்களும் (அவை கொண்டாட்டங்களே தான்). புலிகளமைப்பின் சொத்துக்களை பங்கு போட்டுக்கொள்ளும் சண்டையில்  ஓன்று இரண்டாகி மூன்று நான்கு என அமீபாக்கள் போல குழுக்களாக பிரிந்து மீண்டும் இப்போதைக்கு இரண்டு குழுவாக .அனைத்துலகச் செயலகம், தலைமைச்செயலகம் என்று போட்டி போட்டுஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தியபடியே  கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.இரண்டு அமைப்புமே புலம்பெயர் தமிழர்களிடத்தில் புகுந்துள்ள வைரசு கிருமிகள்  தான்.இந்த இரு அமைப்புகளும் தற்சமயம் இணைத்து விட்டதாக ஒரு அறிக்கை இராமு சுபனின் பெயரில் வெளியாகியிருந்தாலும்  இல்லை யில்லை  இணையவில்லை என்கிற குரல்களும் கேட்கின்றது .வெளிநாடுகளில் பங்கு பிரிப்பு சண்டையில் யார் தங்கள்பக்கம் அதிகம் மக்களை கவர்வது என்கிற போட்டிகளோடு மாவீரர் நாளை கொண்டாடி குத்துவெட்டுகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில் தான் கடந்த வருடம் ஏழு ஆண்டுகள் கழித்து குறுகிய கால திட்டமிடலில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் மக்களால் மீண்டும் அனுட்டிக்கப் பட்டது.

மாவீரர்களாகிப் போன தங்கள் பிள்ளைகளினதும் உறவுகளினதும் கல்லறைகளைத் தேடிய வர்களுக்கு அவை சிதைக்கப்பட்ட கற்களே கிடைத்தது.கிடைத்த கற்களையெல்லாம் பொறுக்கி குவித்து தங்கள் ஆற்றாமைகளை கண்ணீரோடு கதறியழுது அஞ்சலி செய்து முடித்திருந்தர்கள்.அழுது சிந்திய கண்ணீரைக் கூட எமது சில அரசியல் வாதிகள் சொந்தம்கொண்டாடிய கேவலமும் நடந்தே முடிந்தது.
இறுதி யுத்தத்தின் பின்னர் இறந்துபோனவொரு புலி உறுப்பினரின் படத்தை வீட்டில் வைத்து விளக்கு கொளுத்தி  அஞ்சலி செலுத்தவே முடியாத காலம் ஓன்று இருந்தது.அது எப்படி மாறியது?இலங்கைத்தீவில் தமிழர் அரசை தோற்கடித்த இரண்டாவது கைமுனு.இந்த நூற்றாண்டின் பௌத்த சிங்கள மீட்பர்  என்று போற்றப்பட்டு. நானே வாழ் நாள் ஜனாதிபதி என்று இறுமாப்போடு இருந்த ராஜபக்ஸாவை. இலங்கை அரசியல் குள்ளநரி குடும்பத்தின் வழிவந்த ரணிலும்.இலங்கையில் சீன ஆதிக்கத்தை முடிவுகட்ட மேற்குலத்தின் திட்டமிடலும் .அவர்களோடு கைகோர்த்துக்கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்று அனைத்தும் இணைத்து ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் தான் இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதே நேரம் கடந்த வருடமே மாவீரர் துயிலுமில்லங்களை புதிப்பித்தல்,திலீபனின் நினைவுத்தூபியை புனரமைத்தல் என்று பல தீர்மானங்களை வட மாகாணசபை நிறைவேற்றியிருந்தது .அண்மையில் குறுகிய காலத்தில் அதிகளவு தீர்மானங்களை நிறைவேற்றியது தமிழக சட்ட சபையா? இலங்கை வடமாகாண சபையா? என்றொரு பட்டி மன்றமே நடத்தலாம்.அதில் பேச்சாளர்களாக  சுரேஷ் பிரேமச்சந்திரன் ,கஜேந்திரகுமார் ,கஜேந்திரன் ஒரு அணியாகவும்.மறு தரப்பில் சம்பந்தர் ,மாவை ,சிறிதரன் ஆகியோரையும் பேசவிடலாம்.ஆனால்  கண்டிப்பாக  நீதிபதி இளஞ்செழியனைத்தான் நடுவராகப் போடவேண்டும்.ஏனெனில் அவர்தான் பேசிய அனைவருக்கும் இறுதியில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பார்.அதன் பின்னராவது தமிழர்களுக்கு ஏதும் விடிவுகாலம் கிடைக்க வழி பிறக்கலாம். 

மேலே பேச்சாளர்களின் பெயர்களில் சுமதிரனின் பெயரை ஏன் எழுதவில்லையென நீங்கள் கேட்கலாம்.தற்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளில் இலங்கையின் மும்மொழிகளில் நல்ல புலமையும்.சட்டமும் ,அரசியலும் செய்யத் தெரிந்த ஒரேயொரு அரசியல்வாதி அவர் மட்டுமே.கஜேந்திரகுமாருக்கும் மும்மொழியும்,சட்டமும் தெரியும் அவருக்கென்ன குறைச்சல் எண்டு என் சட்டையைப்பிடிக்க யாராவது வரலாம்.அவருக்கு மொழியும் சட்டமும் தெரிந்திருக்கலாம் ஆனால் அரசியல் சுத்தமாக தெரியாது.தெரிந்திருந்தால் 2010 ம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்.வெளியே வந்த பின்னரும் யாழ் மாவட்டத்திலேயே போட்டியிட்டுக் கொண்டிருக்க மாட்டார்.இதை எழுதியதற்காக சுமத்திரனின் செம்பு என்கிற பட்டம் எனக்கு வழங்கப்படலாம். அதைனையும் வாங்கி ஒரு கரையில் வைத்துவிட்டு தொடர்கிறேன்.


வெளிநாடுகளில் நடக்கப்போகும் மாவீரர் தின கொண்டாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார பாராளுமன்ற உறுப்பினர்  ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார்.அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். பேசத் தொடங்கும் போது வணக்கம் என்று தமிழில் சொன்னதும் கைதட்டி விசில் பறக்கும். பிறகு அவர் தன்னுடைய மொழியில் ..தமிழர்கள் அன்பானவர்கள் .பண்பானவர்கள். பயிற்பானவர்கள்.நன்றாக உபசரிப்பார்கள். அவர்கள் சுடும் தோசை இருக்கிறதே சூப்பர்..தமிழர்களின் வடை இருக்கிறதே சூப்பரோ சூப்பர்.என்னை இங்கு அழைத்தற்கு நன்றி அடுத்த எலெக்சன் வருது என்னையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ என்று விட்டு கடைசியாய் தமிழில் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விடுவார்.இந்தியாவிலிருந்து அந்த நாட்டு அரசியலையே புரட்டிப்போட்ட  மிகப்பெரும் அரசியல் தலைவர்களான வா. கௌ தமன்.  ஆர் கெ  செல்வன்மணி ..ஐய நா சபை வாசலிலேய கம்பு சுத்தி அமெரிக்காவை மிரள வாய்த்த வை கோ  ஆகியோரும் வரவளைக்கப்பட்டு அவர்களின் வீராவேசப்பேசுக்களின் எச்சில் பட்டே  பழுதாகிப் போய் விட்ட  மைக்குகளை ஒருவர் அடிக்கடி தட்டி. கலோ..டெஸ்டிங் ..வன் ..டூ ..திரீ ..சொல்லிக்கொண்டிருக்கும்போதே  மறுபக்கம் கொத்துறொட்டிக்கடை புடைவைக்கடை ஏசியன் சாமான் கடை என்று களை கட்டும் .

இவை எதுவுமில்லாமல் வியாபார நோக்கமற்றும் ஜரோப்பாவின் யாரோ ஒரு கடைசி வாங்கு பாராளுமன்ற உறுப்பினர் வரவழைக்கப் பட்டு அவர் வடைக்கதை சொல்லாமலும்..இந்தியாவிலிருந்து உணர்ச்சிகர மேடைப் பேச்சாளர்கள்சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டு வீண் சச்சரவுகளையும் சண்டைகளையும் உருவாக்காமல் அனைத்தையும் தவிர்த்து .. பல்லாயிரம் போராளிகளின் குருதியில் நனைந்து மென் மேலும் சிவப்பாகிப் போன தமிழீழ தேசியக்கொடி மாவீரர் நாள் மண்டப வாயிலில் பறக்க. மாவீரர்களின் நினைவுகளை சுமந்து மண்டபத்தில் நுளையும் போது மாவீரன் எங்கள் தலைவனின் புன்னகை படங்கள் மாலைகள் சுமந்து .மலர்களின் நடுவே  தீபங்களின் ஒளியோடு வரவேற்க. ஆண்டு தோறும் வழைமை போல கார்த்திகை 27 மதியம் கடக்கும் நேரம் "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே "என்கிற பாடல் ஒலிக்க மண்டபத்தில் மாவீரர்களது படங்கள் மீதும் அவர்களது நினைவிடங்களின் மீதும் மலர்களை அள்ளித் தூவி மனம் விட்டு அழுது அவர்களிற்கு அஞ்சலி செலுத்த நாங்கள் வரவேண்டும்.இது தவிர்ந்து எதோவெரு எம்.பிக்காகவோ. மேடைப் பேச்சிற்காகவோ கொத்து றொட்டிக்காவவோ நடாத்தப் படும் எந்தவொரு மாவீரர் நாளும் மாவீரரை மதிக்கும் நாள் அல்ல.....

அதே போல இதுவரை காலமும் வெளிநாடுகளில் நடந்தது போலவே தாயகத்திலும் இந்தத்தடவை மாவீரர் வணக்க நிகழ்வுகளை யார் முன்னே நின்று செய்வதேன்கிற குழுப்பிரிவினைகள் தொடங்கி விட்டது.வன்னியில் விளக்கேற்றி கைநீட்டி படமெடுக்க சிறிதரன் எம் பி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஏற்கனவே முன்னைநாள் போராளிகள் (முன்னைநாள் போராளிகள் என்கிற சொற்பதத்தில் எனக்கு உடன்பாடில்லை ) சிலர் இணைத்து "ஜனநாயகப் போராளிகள்". என்கிற அமைப்பை தொடக்கி கிழக்குமாகாணத்தில் மாவீரர் துயிலுமில்லங்களை துப்பரவு செய்து வருகிறார்கள்.அதே நேரம் திடீரென "  'தமிழ்த்தேசிய ஜனநாயகப் போராளிகள் "..என்கிற இன்னொரு அமைப்பு          மாவீரர் நாளுக்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டம் வேகமெடுத்த எண்பதுகளில் "ஈழம்".. என்கிற அடை மொழியோடு எப்படி முப்பதுக்குமதிகமான இயக்கங்கள் தோன்றியதோ அதைப்போலவே இப்போது அடுத்ததடுத்து அதி புதிய ..அதிநவீன ..புத்தம்புதிய ..அதி விசேஷ ..ஜனநாயகப் போராளிகள்".. என்கிற அடைமொழியோடு பல கட்சிகள் உரு வாகலாம் .எத்தனை கட்சிகள் என்னென்ன கொள்கைகளோடு உருவானாலும் .வெளிநாடுகளில் எத்தனை குழுக்களாக பிரிந்து நின்றாலும் மாவீரர்களின் தியாகங்களையும் அவர்களது அர்பணிப்பையும் தங்களுடையதே என யாரும் சொந்தம்கொண்டாட முடியாது.அவை ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் பொதுவானவை.இனமத பேதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவை.
,வீரவேசப்பேச்சுக்கள்,கொத்துரொட்டி போடும் சத்தம், செல்பி போட்டோக்கள் ,பந்தம்கொளுத் துவதற்காக அரசியல் வாதிகளின் அடிதடிகள் ,மண்ணில் விழுந்து புரண்டு அழும் தாய் ,மனதுக்குள்ளேயே மௌனமாய் விம்மிவெடிக்கும் சக தோழர்கள் .உறவுகளின் ஓலங்கள் இத்தனையையும் கடந்து. தனக்காக யாரேனும் ஒற்றை விளக்கேற்றமாட்டார்களா ? ."என் இனமே. என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா" ? என்கிற புலம்பலோடு எம் தலைவனின் ஆன்மா நந்திக்கடலோரத்தில் அலைந்து கொண்டிருக்கும் ..

அவலங்கள் நூல் குறித்து.தோழர் சம்சுதீன் ஹீரா

$
0
0
அவலங்கள் நூல் குறித்து.புதிய புத்தகம் பேசுது இதழில் தோழர் Samsu Deen Heera
 
சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவையும் ஏற்படுத்தி விடுகின்றன..

ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு சமூகம் சொல்லத் தயங்கி நிற்கும் பொருளை, அந்தச் சமூகத்தை நோக்கி, சமூகத்தின் சார்பாக, சமூகத்தின் குரலாகப் பேசவேண்டுமென்பார் சா. தமிழ்ச்செல்வன். நீண்ட நெடிய ஈழ விடுதலைப் போராட்டம் உச்சத்திலிருந்த காலத்தையும் அது வீழ்ச்சியடைந்த காலத்தையும் எவ்வளவோ இலக்கியங்கள் இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டமாக அவற்றில் பெரும்பாலான இலக்கியங்கள் நாயக பிம்பங்களைக் கட்டமைக்கவோ அல்லது ஏற்கனவே கட்டிவைக்கப்பட்டிருந்த புனித பிம்பங்களின் மீது சிறு கீரலும் விழாதவாறு கவனமாகப் பூசி மொழுகவோதான் செய்தன. அவற்றிலெல்லாம் பேசப்படாத நுண்ணரசியலை, தற்போதைய இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் நவீன இலக்கியங்கள், மக்களின் குரலில் உரக்கப் பேசத்துவங்கியிருக்கின்றன. இப்போக்கானது ஈழ இலங்கியங்களில் ஆரோக்கியமான முன்னெடுப்பையும் காத்திரமான விவாதங்களையும் வலுவாகக் கோரி நிற்கின்றன.
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் விளைபொருள். ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னைப்பாதித்த சமூகக் கூறுகளைத் தன்வழியே மக்களுக்குக் கடத்துகிற ஒரு ஊடுகடத்தி மட்டுமே. ஒரு தூய்மையான ஊடுகடத்தியாக இருக்கும் வரையில்தான் நேர்மையான படைப்புகளை ஒரு படைப்பாளனிடம் எதிர்பார்க்க முடியும்.


அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தகர்ப்பைத் தொடர்ந்து ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று உலகமே பதட்டமடைந்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்ட அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்தும் சில அமெரிக்க ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பின.
பறவை மோதினாலே உடைந்து சிதறக்கூடிய மெல்லிய உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் விமானத்தின் மூக்குப்பகுதி அவ்வளவு பெரிய கட்டிடத்தைத் துளைத்துக் கொண்டு கொஞ்சமும் சேதமில்லாமல் வெளியே வந்தது குறித்து, அந்தக் கட்டிடங்களில் வேலை செய்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான யூத ஊழியர்கள், தாக்குதல் நிகழ்ந்த அன்றைய தினம் சொல்லி வைத்ததுபோல விடுமுறை எடுத்துக்கொண்டது குறித்து, அவ்வளவு பெரிய கட்டிடம் சீட்டுக்கட்டுபோல சரிந்ததற்கான முகாந்திரம் குறித்தெல்லாம் கேள்விகளை முன்வைத்தன. தேசநலன், தேசபக்தி, பணம், சலுகைகள் என்று பல வழிகளில் அவற்றின் வாயை அடைத்தது அமெரிக்க அரசு. தொடர்ச்சியாக அப்பாவிகளின் மீது பழியையும் போர்களையும் தினித்து எண்ணெய் வளமுள்ள நாடுகளைச் சூரையாடியது அமெரிக்க வல்லரசு. சரியான தருனத்தில் பேசப்படாத உண்மைகள், பொய்களை மட்டுமல்ல பேரழிவுகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

அதுபோலவே ஈழப்போராட்ட வரலாற்றில், தங்களின் பலம் பலவீனம் குறித்த, சர்வதேச அரசியல் குறித்த புலிகளின் பொருத்தமற்ற மதிப்பீடுகள் ஒரு மாபெரும் இனப்பேரழிவுக்கு இட்டுச்சென்றது. இந்தியாவை, குறிப்பாக சில தமிழக அரசியல் கட்சிகளின் பொய்யான பிழைப்புவாத வார்த்தை ஜாலங்களையும், நம்பகத்தன்மையற்ற வாக்குறுதிகளையும் தமிழீழ அரசின் தலைமை கடைசிக்கட்டம் வரை நம்பிக்கொண்டிருந்ததாக வரும் செய்திகள் உண்மையில் ஆச்சரியமாகவே இருக்கின்றன. புலிகளின் அரசியல் குறித்து, தமிழீழ அரசின் ஆட்சி குறித்து உலகத்தமிழர்களிடையே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களின் வழியே அதுவரை ஈழப்போராட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இந்த முடிவு பேரதிர்ச்சியாகவே இருந்திருக்கும். யாருமே இந்த முடிவை எதிர்பார்த்திருக்கவோ நம்பவோ செய்திருக்க மாட்டார்கள்.

எந்த ஒரு போராட்டத்தின் வீழ்ச்சியையும் நாம் ஆராயப் புகும்போது, புறக்காரணிகளோடு அதன் அகக்காரணிகளையும் சேர்த்தே ஆராயும் போதுதான் அதன் முழுப்பரிமாணம் தெரியவரும். எவ்வித புனிதக் கட்டுமானங்களின் பெயராலும் உண்மையை மறைக்க முயல்வதென்பது அழுகிய முட்டையை அடைகாப்பது போன்று எந்தப்பயனுமற்றது. புலிகளின் வீழ்ச்சியோடுதான் அந்த செயற்கை பிம்பத்தின் வீழ்ச்சியும் தொடர்கிறது.
தான் பேச வருகிற பொருள் குறித்து எந்த அடைப்புக்குள்ளும் அடங்கிக் கொள்ளாமல் பேசவேண்டுமென்ற வேட்கையாலும் நேர்மையான உந்துதலாலும் முன்நகர்த்தப்படும் படைப்பாளிகளால் மட்டுமே சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும். அவ்வகையில் சமீபத்தில் நான் வாசித்த ’அவலங்கள்’ சிறுகதைத் தொகுப்பை ஒரு நேர்மையான படைப்பாகக் கருத முடிகிறது. சாத்திரியின் எழுத்து, ஏற்கனவே கட்டமைக்கப் பட்டிருந்த பிம்பங்களுக்கும் உண்மைக்கும் இடையே ஊடறுத்துப் பயணிக்கிறது. பொது வெளியில் பேசப்படாத புலிகளின் கடந்த காலத்தை எந்தச் சமரசமுமின்றி உரக்கப்பேசுவதன் மூலம் கற்பனை பிம்பங்களை உடைத்தெறிகிறது. புதிய விவாதங்களுக்கான வெளியைத் திறந்து விட்டிருக்கிறது. அதனாலேயே சாத்திரி பலவித எதிர்ப்புகளைச் சம்பாதித்தும் கொண்டிருக்கிறார்.
பௌத்தப் பேரினவாத ஒடுக்குமுறையக் கண்டுவளர்ந்த, இன விடுதலையை இலட்சியமாகக் கொண்ட, தமிழீழ கணவுகண்டு இயக்கங்களில் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களைப்போலவே, யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து வளர்ந்த சாத்திரியையும் வீரஞ்செறிந்த ஈழ விடுதலைப்போராட்டம் தன்னுடன் இனைத்துக் கொண்டது. புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் செயல்பட்ட சாத்திரி இப்போது பிரான்சில் வசிக்கிறார். அவரது கடந்தகால நினைவுகளைத் தொட்டுச் செல்லும் அவரது முதல் புதினமான ஆயுத எழுத்து வெளிவந்தபோதே பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டவர்.
பிரபாகரன் மரணத்தைத் தொடர்ந்து பலவிதமான குழப்பங்களும் வதந்திகளும் நிலவிய சூழலில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமான தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்ட நிகழ்வானது, எவ்வித விமர்சனங்களுக்கும் அஞ்சிடாமல் ஒளியைப்போல நேர்கோட்டில் பயணிக்கிற சாத்திரியின் உளவலிமைக்குச் சான்று. ஒரு மாபெரும் வரலாற்றுக் காலகட்டத்தின் நிகழ்வுகளையும், ஒரு பேரழிவைச் சந்தித்து நிற்கிற மக்களின் வாழ்வியலையும், தனது சொந்த அனுபவங்களையும் புனைவின் வழியே எந்தவிதப் பாசாங்குகளுமின்றி நேர்மையாகக் கடத்தத் துணிகிற யாருக்கும் தேவையான உளவலிமை சாத்திரிக்கு உள்ளது.
பதட்டத்தோடு ஓடிவருகிற ஒருவன் சட்டென நம் கைகளைப் பற்றிக் கொள்ளும்போது அந்த நபரது பதட்டம் நமக்குள்ளே கடத்தப்படுவதுபோல ’அவலங்களின்’ கதைமாந்தர்கள்; அதை வாசிக்கிற வாசகனுக்குள் ஒருவித பதட்டத்தோடு நுழைந்துவிடுகிறார்கள். அந்தப் பதட்டத்தை கொஞ்சமும் மிச்சமின்றி நமக்குள் இறக்கிவைத்து விடுகிறார்கள். சாத்திரியை வாசிக்கத் தயாராகும் ஒருவனுக்கு சாத்திரியைப்போலவே திடமான உளவலிமை தேவைப்படுகிறது. வெறுமனே அழுகைகளையும் துக்கங்களையும் எழுத்தாக்கி கழிவிறக்கம் தேடுகிற சராசரி யுக்திகளை சாத்திரி கையாளவில்லை.

ஒரு பேரழிவு ஏற்படுத்திய பெருந்துக்கத்தின் வலிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், அப்போது நிலவிய அரசியல் சூழல் ஏற்படுத்திய ஏமாற்றங்களை, துரோகங்களை, உள்ளார்ந்த வலிகளாகச் சுமந்து திரிகிற சாதாரனமான மனிதர்களின் கதைகள் இவை. அந்தக் கதைமாந்தர்கள் அரசியல் பேசவில்லை, ஆனாலும் அக்காலகட்டத்தில் செல்வாக்கு செலுத்திய அரசியல் நிலைமைகளை நமக்குப் புரியவைக்கிறார்கள். அந்தக் கதை மாந்தர்களின் வலியை, கதைக்களத்தின் அரசியலை நமக்குள் நேர்த்தியாகக் கடத்திவிடுகிற வித்தையில் சாத்திரி நிச்சயமாக வென்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். உண்மைக்கும் புனைவுக்கும் இடையேயுள்ள மெல்லிய திவலைகளின்மீது இந்தக் கதைகளை அதன்போக்கில் மிதக்க விட்டிருப்பதே சாத்திரியின் வெற்றி.
சாத்திரியின் கதாப்பாத்திரங்கள் விசித்திரமானவர்கள். வாசிக்கிற அனைவரின் மனதிலும் பல நாட்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் ஆழ்மனப் போராட்டங்கள், அவர்களின் அந்தரங்கங்கள், எதிர்கொள்ளும் சவால்கள், புலம்பெயர் வாழ்வின் வலிகள், துரோகங்கள், விரக்திகள் இவையனைத்தையும் திறந்த மனதோடு வாசிக்கிற ஒருவன், தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிற அத்துனை முன் முடிவுகளையும், புனிதக் கட்டமைப்பாக, நாயக பிம்பமாக அதுவரை ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து உருவகங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

1970 லிருந்து 2016 வரையிலான காலப்பகுதியைக் களமாகக் கொண்ட இக்கதைகள் 2006 லிருந்து 2016 வரையிலான வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் பெண்களின் பெயரைக்கொண்ட பண்ணிரெண்டு கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு. ஈழத்திலும், புலம்பெயர்ந்த பிற தேசங்களிலும் ஈழத்தமிழர்களின் துயரார்ந்த வாழ்வியலை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூக பொருளாதார பண்பாட்டுச் சிக்கல்களை வெவ்வேறு களத்தில் கதைகளாக்கியிருக்கிறார் சாத்திரி. குறிப்பாக பெரும்பாலான கதைகளில் பெண்களையே மைய அச்சாகக் கொண்டு கதைக்களத்தை வார்த்திருப்பதன் மூலம் அந்தக் களங்களில் நிலவிவந்த ஆண்மைய அரசியலை அம்பலப்படுத்துகிறார்.
இந்திய அமைதிப்படையால் இழுத்துச்செல்லப்படும் ராணியக்கா சிதைந்த நிலையில் நிர்வாணமாய்த் தெருவில் கிடக்கிறாள். அதை விவரிக்கிற ஆசிரியர் இப்படிச் சொல்கிறார்.

‘… ராணியக்கா அந்த மிருகங்களுடன் முடிந்தவரை போராடியிருக்க வேண்டும். அதனால் அவர் தலையை அசைக்க முடியாதபடி ஒரு பெரிய கல்லை தலைப்பக்கமாக வைத்து அதில் அவளது தலைமுடியைக் கட்டி, அமைதிகாக்க வந்த காந்தி தேசத்து அகிம்சாவாதிகள் தங்கள் கருணை அன்பு சமாதானம் எல்லாவற்றையுமே காமக்கழிவுகளாய் அந்த அப்பாவிப் பெண்ணின் மீது வெளியேற்றிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.’
இந்திய அமைதிப் படை ஈழத்தமிழ்ப் பெண்களிடம் செய்த அக்கிரமங்களை இதைவிட எப்படி எளிமையாகச் சொல்லிவிட முடியும்? சுயநினைவு திரும்பிய பிறகும்கூட, பலரின் பலநூறு கேள்விகளுக்கு அஞ்சி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாகவே தன் வாழ்வைத் தொடர்கிற ராணியக்கா ஒருநாள் இறந்துபோகிறாள். கதையின் இறுதியில் இப்படிக்கேட்கிறார் ஆசிரியர். ‘இவ்வளவு கொடுமைகளை தன் இளம் வயதில் ராணியக்கா அனுபவிக்க அவள் செய்த பாவம்தான் என்ன?..இந்தக் கேள்வி ஈழத்தில் பல ராணியக்காக்கள் பற்றிய கேள்வியுமாகும்.’

சாதியப்படிநிலையில் கீழடுக்கிலிருக்கும் சிறுமி மல்லிகாவுக்கு அவனது உயர்சாதி நன்பன் கொடுத்த சட்டையை அணிந்துகொண்டு பள்ளிக்குச் செல்கிறாள். கீழ்சாதிக்காரச் சிறுமி இவ்வளவ நல்ல சட்டை அணிகிறாளென்றால் அது களவெடுத்த சட்டைதானென்று மல்லிகாவோடு அவளது தந்தையையும் அடித்து உதைக்கிறார்கள். உதிரம் கலந்த எச்சிலைத் துப்பிக்கொண்டு அழுதபடியே செல்கிற மல்லிகாவில் துவங்குகிற கதை, அந்தச்சமூகத்தில் முக்கியப் பங்காற்றிய சாதியப்பாத்திரத்தையும், கோவில் நுழைவுக்குக்கூட துப்பாக்கியேந்திப் போராடிய போராட்டங்களையும் சொல்லிச் செல்கிறது.
பெரும் புயலில் பிய்த்தெரியப்பட்ட குடிசைகளைப்போல போர்களால் சிதறடிக்கப்பட்டு மூலைக்கொன்றாய்த் தூக்கியெறியப்பட்ட குடும்பங்களின் அவலங்களை, புலம் பெயர் வாழ்வின் வலிகளை, இழந்துவிட்ட பூர்வீக வேர்களின் வாசத்திற்கும், தஞ்சமடைந்த தூரதேசத்தின் வாழ்விற்குமிடையே ஊசலாடும் உணர்வுப்பூர்வமான தடுமாற்றங்களைச் சொல்லும் சிமிக்கி என்ற கதை.

கடற்புலியாய் இருந்து கண்ணை இழந்து இளமையை இழந்து நம்பிக்கையை இழந்து எல்லாம் இழந்த அலைமகளை திருமணம் செய்துகொள்ளக் கேட்கும் ஜேக்கப்பிடம் ”இயக்கத்துக்குப் போகும்போதே இருபது வயது, பதினைந்து வருட இயக்க வாழ்க்கை, இப்போ வயது முப்பத்தெட்டைத் தொடப்போகிறது, ஒற்றைக்கண்ணும் இல்லை, வசதியும் இல்லை.. இப்பவெல்லாம் மனசுக்கு முடியாதென்று தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறதில்லை ஜேக்கப்..” என்று சொல்கிற விஜியின் முடிவு உலுக்கியெடுக்கிறது. கடுங்குளிரில் உறைந்து போன விஜியைப் போலவே நமது மனமும் சிலவிணாடிகள் உறைந்துதான் போய்விடுகிறது.

புலம்பெயர் தமிழரான அமுதனைத்தேடி இருவர் வருகின்றனர். அதில் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் அப்பாத்துரையும் ஒருவர். சமீபத்தில் புலிகள் சில பகுதிகளைக் கைவிட்டு பின்வாங்கிய செய்தியை அவர்களிடம் கவலையோடு பகிர்ந்துகொள்ளும் அமுதனிடம், இது ஒரு தந்திரோபாயமான பின்வாங்கலென்றும், தலைவர் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகவும் அதுவே ‘கடைசி அடி’யாக இருக்குமென்றும் அதற்காக பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறதென்றும் சொல்கிறார் அப்பாத்துரை.
பத்தாயிரம் சுவிஸ் பிராங்க் கேட்ட அப்பாத்துரையிடம் அவ்வளவு பெரிய தொகையைத் தன்னால் தர இயலாதென்று மறுக்கிறார் அமுதன். நீங்கள் நன்கொடையாகத் தரவேண்டாம் வங்கிக் கடனாகக் கொடுத்தால் போதும் இயக்கம் தவனை கட்டிவிடுமென்று சொல்லி அமுதனின் பாஸ்போட் விசா மற்றும் சில பத்திரங்களில்கையெழுத்தும் பெற்றுச் செல்கின்றனர்.
வங்கியிலிருந்து ஒரு லட்சம் பிராங்க் கடன் பெற்றதாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிர்ச்சியடையும் அமுதன் அப்பாத்துரையிடம் அதுகுறித்துக் கேட்கிறார். இயக்கம் தேவை கருதி சிலரது கணக்கில் அதிகப் பணம் பெற்றதாகச் சொல்கிறார் அப்பாத்துரை.
ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை, முன்னேறிக்கொண்டிருக்கிறோம் வென்றுவிடுவோம் இதோ ஈழம் அமையப்போகிறது என்றெல்லாம் நம்பவைத்து அமுதனை ஏமாற்றும் அப்பாத்துரை, தன் மச்சினன் பெயரில் பிரம்மாண்டமான ரெஸ்ட்டாரண்ட் அமைத்து செட்டிலாகி விடுகிறார். அமுதன் கடன் காரனாகி, நொடிந்து, குடும்பத் தகராறு பெருகி விவாகரத்து வரை சென்று குடும்பமே சின்னாப்பின்னமாகிப் போவதை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது ’கடைசி அடி’ கதை.

புலியொருவனை இராணுவத்திடமிருந்து அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றும் கைரி என்ற கிழவியின் மகன் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற காரனத்தால் சக புலியால் கொல்லப்படுகிறாள். தேடி வந்தபோது கைரியின் மகன் அகப்படவில்லை என்கிற ஒரு காரணமே ’கைரி’ கொல்லப்படுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.
புரட்சிக்குத் துணையாய் வந்தவளுக்குப் பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குத் தப்பியோடிய சுரேந்தர் அங்கிருந்து புரட்சிகர கவிதை பேசுவதை வாணொலியில் கேட்க நேரும் மல்லிகாவின் கதை.
அகதி அந்தஸ்த்து பெருவதற்காக அமைச்சரின் காரை முற்றுகையிடுகிற நாடகத்தை அறங்கேற்றப்போய் அம்பலப்பட்டு காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படும் ரமனனின் கதை.

ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படும் ஒருத்தி பிற்காலத்தில் அவளே பலரை அந்தத் தொழிலில் தள்ளிவிடுகிற நிலைக்குப் போகிற உளவியலை, வாழ்க்கைச் சூழலைச் சொல்கிற கதை பீனா கொலடா.
ஆபத்துகள் நிறைந்த ஆயுதக்கடத்தலில் ஈடுபடும் கடற்புலிகளில் ஒருவன் நடுக்கடலில் இறந்துவிட, அவனை ஒரு தீவில் புதைத்துவிட்டு வருகிற சக புலிகளின் பாசப்போராட்டத்தைச் சொல்கிற முகவரி தொலைத்த முகங்கள் கதை.
போதை மருந்துகளுக்கு அடிமையாகிச் சீரழியும் இளம் தமிழ்ப்பெண்ணின் துயரார்ந்த முடிவைச் சொல்லும் அஞ்சலி என்ற கதை.
என ஒவ்வொரு கதையை வாசித்து முடிக்கிறபோதும் கண்களை மூடி சில விணாடிகள் பெருமூச்சு விடவைக்கும் அழுத்தமான களங்கள். ஈழப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாறானது, அதில் பங்கெடுத்தவர்கள், வென்றவர்கள், தோற்றவர்கள், இனவாதப் பாசிசத்தால் தமிழ் மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்ட போர்களால் உயிரிழந்து உடைமைகளையிழந்து வாழ்விழந்த சொத்துக்களையிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கதைகளைத் தன்னுள்ளே சுமந்துகொண்டு காட்டாற்று வெள்ளம்போலப் பயணித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கதைகள் அதைப் பற்றியவையல்ல.

இவ்வரலாற்றுப் பெரும் பயணத்தில் சொந்த இனத்தால் ஏமாற்றப்பட்ட வஞ்சிக்கப்பட்ட முகவரியற்ற அல்லது முகவரி தொலைந்த , அடையாளப்படுத்தப் படாமல் புறக்கனிக்கப்பட்ட எளிய மக்களின் கதைகள் இவை. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முகத்தை எளிய மக்களின் வாழ்வியலை அதன் உள்ளார்ந்த தன்மை சிதையாமல் அழகியலோடு இலக்கியப் படுத்தியிருக்கிற சாத்திரிக்கு நன்றிகளும் வாழ்த்துதோழர்

செய்தது நீ தானா ..

$
0
0
செய்தது நீ தானா ..
சிறுகதை ..நடு இணைய இதழுக்காக ..


விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில்  இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட  அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி  கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப்போல இளையராஜா  வாரிசுகளால் இசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே டிக் , டிக், டிக் படத்திலிருந்து “ஓ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே” பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மனத்திரையில் சவுக்குத் தோப்பில் கமலும் அவர் பின்னல் மாதவி நீச்சலுடையில்  ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென எனக்கு அவனின் நினைவு மீண்டும்  மூளை மடிப்புக்களிலிருந்து சிரமப்பட்டு வெளி  வந்தது.

அவன் உருவம் கூட சிகரெட்டின் புகையிலிருந்து கிளம்பும்  வடிவங்களைப்போல மங்கலாக  நினைவில் உள்ளது. எண்பதுகளின் இறுதி நான் தாய்லாந்தில் புக்கெட் நகருக்கு அருகில் தங்கியிருந்த காலம். தங்கியிருந்தது வீடா, குடிசையா என்று பட்டிமன்றமே நடத்தலாம். கீழ் பாதி சீமெந்து. மேல் பாதி மரப்பலகைகள் பொருத்தப்பட்டுக் கூரைக்குத் தகரம் போடப்பட்ட ஒரேயொரு சிறிய அறை. அதற்கு தகரத்தாலான கதவு. முன்னால்  மூன்று பக்கமும் மூங்கில் பாய்களால் மறைக்கப்பட்ட காற்றோட்டமான சிறிய கூடம். இந்தக் குடிசை வீட்டில் ஒரு மின்னடுப்பு சில அலுமினியப் பாத்திரங்களோடு ஆங்கிலம் மூலம் தாய் மொழி கற்றுக்கொள்ளும் புத்தகமும். பெறுமதியான பொருட்கள் என்றால் சிறிய கலர் தொலைக்காட்சியும் வி சி ஆரும் தான். அப்போ தமிழ் சேனல்கள் எல்லாம் இல்லை. எனவே சிங்கப்பூரிலிருந்து தமிழ்ப் பட கசெட்டுக்களை தபாலில் எடுத்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. அதைவிட என்னிடம் ஒரு வாக் மேனும் இருந்தது.

அன்று மதியம்  தனியொருவனுக்காக எப்படி விதம் விதமாக சமைக்க முடியும்? ஒரு வெறுப்போடு “வெந்ததை தின்று வேகின்ற உடல்” என்கிற பட்டினத்தார் பாடலைப்  பாடிய படியே மின் அடுப்பில் கொதிக்கத் தொடங்கிய உலையில் அரிசி ,பருப்பு, கீரை, வட்டமாக வெட்டிய காரட் எல்லாவற்றையும் போட்டு அலுமினிய சட்டியின் வாயை மூடி விட்டு. பொரிப்பதற்காக பொலிதீன் பையில்  கட்டி வாங்கி வந்த தவளைக் கால்களை, அதன்  பையைப் பிரித்து ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பிரட்டி ஊற வைத்து விட்டு .வாங்கி வந்த கூலான பியர் போத்தல் ஒன்றை எடுத்து மூடியை பல்லால் கடித்து திறந்து சில மிடறு  விழுங்கிய போதுதான் அன்றைய கொடும் வெக்கையும் ,சந்தைக்கு  கெந்திக் கெந்தியே நடந்து போய் விட்டு வந்த காயம் பட்ட காலின் வலியும் கொஞ்சம் குறைந்தது போலவிருந்தது. இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் உடைந்த எலும்பை தகடுகள் வைத்து பொருத்தி விட்டிருந்தார்கள். வெளிக் காயம் தான் ஆற வேண்டியிருந்தது. அதுக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே மருந்து கட்டிக் கொள்வதுதான் அன்றாட கடமை. அடுப்பில் குழையல் சோறு வெந்த பின்னர் இரவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு.  ஊற வைத்த தவளைக் கால்களை பொரித்து  இன்னொரு பியரையும் குடித்து சாப்பிட்டு விட்டால், பாயை விரித்து சுவரோடு தலைகாணியை அணைத்து  சரிந்திருந்த படியே எப்போதுமே வழைமையாக கேட்கும் வீடியோ காசெட்டை போட்டு விடுவேன். ஊமை விழிகள் படத்தின் தோல்வி நிலையென நினைத்தால் பாடல் போய்க் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டாலும், அடுத்து எங்கள் தமிழினம் தூங்குவதோ  என்கிற பாடலின் போது எப்படியும் நித்திரையாகிப் போய் விடுவேன்.

ஆனால் அன்று அடுத்த பாடல் போய் லேசாக கண்கள் செருகிக் கொண்டிருந்த போதே வாசலில் ரகு அண்ணையின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அருகிலிருந்த பியர் போத்தலை அவசரமாக தலகணைக்கு கீழே மறைத்து விட்டு எழும்பி நின்றேன். கூடவே இன்னொருத்தன். அப்போதுதான் வளர்த்த மீசையை வளிதிருப்பன் என தோன்றியது. கையில் கொண்டு வந்த பையை மார்போடு கட்டியனைத்த படியே வயதுக்கு வந்த பெண்ணைப்போல  ரகு அண்ணனுக்கு பின்னல் நெளிந்த படி நின்றிருந்தான்.
“என்ன அண்ணை  திடீரெண்டு?” என்று கேட்டதும்,
 “ஒண்டுமில்லை இவனுக்கு இங்கை மசாஜ்  பழக்கி அனுப்ப வேணுமாம். இரண்டு நாளைக்கு உன்னோடை வைச்சிரு. பிறகு வந்து கூட்டி போயிடுவன்.” என்றார்.

ஆயுத பயிற்சிக்குதானே உலகம் முழுக்க ஆக்களை அனுப்புவினம். இதென்ன புதிசா மசாஜ் பழக அனுப்பியிருக்கு ? தலைவருக்கு ஒரு வேளை நாரிப்பிடிப்பு ஏதும் வந்திருக்குகுமோ? அப்பிடியிருந்தாலும் கேரளா மூலிகை மசாஜ் தானே நல்லது.எதுக்கு தாய்லாந்து? என்று யோசித்தாலும். கேள்வி எதுவும் கேட்க முடியாதே…ரகு அண்ணா போய் விட்டார். ஆனாலும் பையை கட்டிப்பிடித்து நின்றவனிடம்,
 “உன்ரை   பையை ஒருத்தரும் களவெடுக்க மாட்டினம். எங்கையாவது வை”. என்றுவிட்டு “சாப்பிட்டியா?” என்றேன் . “ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினான்.
நான் சமைத்ததை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்கிற என்னுடைய பழி வாங்கும் உணர்ச்சி அன்றும் தோல்வியடைத்து போனது. சரி இரண்டு நாளைக்கு இங்கை தானே இருக்கப் போறான் அப்ப பாக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, எனக்காக அங்கு ஒரு பாய் தலைகாணி  மட்டுமேயிருந்ததால் அவனுக்கு என்னத்தை கொடுக்கலாமென யோசிக்கும் போதே தனது பையை திறந்து ஒரு சாறத்தை எடுத்து உதறி நிலத்தில் விரித்து விட்டு அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கி விட்டிருந்தான்.

இரண்டு நாளில் வருவதாகச் சொன்ன ரகு அண்ணன் மறு நாள் மாலையே வந்து அவனைக்கூட்டிக் கொண்டு போய் விட்டார். அந்த ஒரு நாளில் நானும் அவனும் கதைத்த வார்த்தைகளை எண்ணி விடலாம். எனக்கும் அதிகம் கதைக்கும் பழக்கம் இல்லை. ரகு அண்ணா வரும்போது சில சினிமா பட கசெட்டுக்களையும் கொடுத்துவிட்டுப் போனதால் பொழுதுபோய் விட்டது. சுமார் இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவனை ரகு அண்ணன் என்னோடு கொண்டு வந்து விட்டு . இன்னொரு பாயும் தலைகாணியும் வாங்கிக் கொடுத்து விட்டே போனார். இந்தத்தடவை நானும் அவனும் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருப்போம். ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு. கமல் நடித்த டிக், டிக், டிக் படத்தை பல தடவை பார்த்து மனப்படமாகிப் போயிருந்தாலும் அதில் மாதவியைப் பார்ப்பதற்காகவே அன்றும் கசெட்டை போட்டு ஓட விட்டேன். அதில் கமல் மசாஜ் செய்துகொள்வதைப்போல ஒரு காட்சி வரும். அப்போ தான் அவனிடம்,
“நீயும் மசாஜ் பழகினனி தானே இப்படியெல்லாம் செய்ய வருமா?” என்று கேட்டதும். கொஞ்சம் யோசித்தவன்,
“உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப்போட்டு துவாயை கட்டிக்கொண்டு குப்புற படுங்கோ.” என்றவன், சமையலுக்கு வைத்திருந்த தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு வந்து உள்ளங் கையில் எடுத்த எண்ணையை பாயில் குப்புறப்படுத்திருந்த என் பிடரியிலிருந்து சொட்டு சொட்டாக நடு முள்ளந்தண்டு வழியே வழிய விட்டுக்கொண்டு இடுப்புவரை சென்றவன், கட்டியிருந்த துவாயை சட்டென்று உருவி விட்டு தொடர்ந்தும் கால்களின் இறுதி வரை எண்ணையை பூசி முடித்தான். 

சட்டென்று துவாயை உருவியெடுத்ததை எதிர்பாக்காத நான் “டேய்”. என்றபடி எழும்ப முயன்றபோது .”அசையக் கூடாது”. என்று அவனது கட்டளை கடுமையாகவே வந்ததால் அப்படியே படுத்து விட்டேன். முள்ளந்தண்டின் ஒவ்வொரு மூட்டுகளிலும் அவனது விரல்கள் விளையாடியதில் என் முதுகிலும் டிக்,டிக், டிக் ..
கால் வரை சென்றவன் இப்போ திரும்பி படுக்கச்சொன்னான். தொடைகளுக்கு நடுவே துவாயால் மறைத்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன். இப்போ நெற்றியிலிருந்து தொடங்கினான். உடலில் புத்துணர்வு மட்டுமல்ல ஔவையார் சொன்ன பத்தாவது உணர்வும் சேர்ந்தே கிளர்ந்து நின்றது. கற்று வந்த மொத்த வித்தையையும் என்மேல் இறக்கி வைத்து விட்டு குளிக்கப் போய் விட்டான். இன்னொரு தடவை இவன் கையால் மசாஜ் செய்தால் நிச்சயம் நான் ஓரினச்சேர்க்கையாளனாக மாறிவிடுவேன் என்கிற பயம் எழுந்திருந்தது. சில நாட்களிலேயே ரகு அண்ணன் வந்து அவனை கூட்டிப் போய் விட்டார். கடைசி வரை அவன் பெயரை நான் கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் அவன் உண்மை பெயரை சொல்லாமல் வாயில் வந்த ஏதாவதொரு பெயரைத்தான் சொல்லியிருப்பான். அவனும் என் பெயரை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் இங்கேயும் அதே நிலைமைதான். நானும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டிருந்ததோடு அவனையும் மறந்து விட்டிருந்தேன் .
0000

அந்த நாட்டில் புதிதாக பதவிக்கு வந்திருந்த அரசுத் தலைவருக்கும் அதே நாட்டிலேயே தன் இனத்துக்காகப் புதிதாக அரசமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையில்  பொது எதிரியை விரட்ட  இரகசியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். அரசுத் தலைவருக்கும் அரசமைக்கப் போராடிக்கொண்டிருந்த தலைவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இருவருமே சாதியப் படி நிலைகளில் கீழிருந்து வந்தவர்கள். தன் சார்ந்தவர்களுக்கும் தன்னை நம்பியவர்களுக்கும் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் இருப்புக்கோ பதவிக்கோ  ஆபத்து என்று நினைத்து விட்டாலே அது யாராக இருந்தாலும்  போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டிருக்கும் நபர்கள். இந்த இருவருக்கிடையிலும் தான் பேச்சு வார்த்தை. பேச்சுவார்த்தையைத் தொடங்கும்போதே பொதுப் பிரச்சனையான இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று பேசிக்கொண்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரை மற்றொருவர் தீர்த்து விடுவது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனாலும் இருவருக்குமான பொது எதிரிகளை முதலில் முடித்துவிடுவோம், பின்னர் எங்கள் பலத்தை பரிசீலிக்கலாம் என்கிற ரீதியில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது .
பிரதி நிதிகளுடனான பல சுற்று பேச்சுக்கள் முடிந்த பின்னர்  நட்சத்திர விடுதியொன்றில் தலைமைச் சிங்கத்தை. தலைமை தாங்கிய சிங்கம் சந்தித்துக் கொண்டது.

 பேசி முடித்த இறுதியில்,
“நீங்கள் களைத்தது போல உள்ளது. இவன் நல்லதொரு மசாஜ் நிபுணன். நீங்கள்  விரும்பினால் இவன் உடல் பிடித்து விடுவான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.” என்றது தலைமை தாங்கிய சிங்கம். சிறிது யோசித்த தலைமை சிங்கம் தனது மெய்ப்பாதுகாவலர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அறை ஒன்றில் புகுந்து கொள்ள, அவனைத்  தனியாக அழத்துச் சென்ற பாதுகாவலர்கள் உடல் முழுதும் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறைக்குள் அனுப்பிக்  கதவைச்  சாத்திவிட்டார்கள். அவர் அதுவாம்,சைக்கிள் ஓடுவதில் வல்லுனராம் என ஏற்கனவே அவரைப்பற்றிய கிசு கிசுக்கள் பரவியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே உள்ளூர் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கிசு கிசுப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. பக்கத்து அறையிலேயே  ஐஸ் கட்டியை கரைத்துக் கொண்டிருந்த விஸ்கியை அருந்தியபடி அணைந்து போகும் சிகரெட்டில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்த படியே கைக்கடிகாரத்தை பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்துக் கொண்டது தலைமை தாங்கிய சிங்கம். அடிக்கடி நட்சத்திர விடுதியில் பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் சுவி மட்டும் தலைவரின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகும் அளவுக்கு நெருக்கம் இறுக்கமாகியிருந்தது.
முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் ,முன்னைநாள் முப்படைத்தளபதி,கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஒரு தரப்பிலும்.தனிநாட்டுக்கு வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன தலைவர் ,மாற்று அமைப்பு உறுப்பினர்கள் என இந்து சமூத்திரத்தில் மிதக்கும் தீவின்  ஆறுகளிலும் குளங்களிலும் பிணம் மிதக்கும் தீவாகிப் போனது. அப்போதுதான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் டெனிஸ் விளையாடும் நெட்டையான உள்ளூர் அழகியின்  குட்டைப் பாவாடையில் பிட்டம்   தெரியும் படமொன்று வெளியாகியிருந்தது. அதனை அப்படியே வெட்டி நான் வாசித்த வீட்டின்  தட்டையான தகர கதவில் ஒட்டியிருந்தேன். சில நாட்களிலேயே அந்த படத்தை எடுத்த பத்திரிகையாளரை காணவில்லை என்கிற செய்தியும் வந்திருந்தது.
௦௦௦௦

நகருக்கு வெளியே இருந்த ரம்புட்டான் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த ஆடம்பரமான சிறிய பங்களாவுக்குள் அவனை ஏற்றி வந்த கார் நுழைந்தது. சாதாரணமாக வெளியேயிருந்து பார்த்தால் அப்படியொரு பங்களா இருப்பதே தெரியாது. மெய்ப்பாதுகாவலர்களின் உடல் சோதனையை முடித்துக் கொண்டு அரசுத் தலைவரின் அறைக்குள் அவன் நுழைந்திருந்தான். வழக்கத்தை விட அன்று அந்த அறை முழுதும் வெள்ளை மலர்களாலும் தென்னோலை குருத்தினாலான வண்ண வண்ண வடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க நடுவே வெள்ளை வெளேரென்ற கட்டிலில் ஒற்றைத் துணியில்லாமல் உருண்டு திரண்ட கறுத்த உருவம் அவனை,
“வா நண்பா. நண்பா வா. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டேன். என் உள்ளம் உற்சாகமாக உள்ளது. அதைப்போலவே என் உடலையும் உற்சாகப்படுத்து”. என்று அழைத்தார். அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து  ஆடைகள் அனைத்தையும் களைந்து குளித்துவிட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த குடுவையை கையிலெடுத்தபடி கட்டிலுக்கு அருகே மசாஜ் செய்வதற்காகவே பிரத்தியேகமாக செய்யப் பட்டிருந்த  சிறிய வாங்கில் குப்புறப்படுத்திருந்தவரின் பின்பக்கமாக குடுவையிலிருந்த மூலிகை எண்ணையை வழியவிட்டு தொடங்கிய மசாஜ் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த கட்டிலில் முடிவடைந்திருந்தது.
இருவருமே லேசாகக் களைத்துப்போயிருந்தனர். கட்டிலில் இருந்து எழும்பியவன் குளியலறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டு வெளிய வந்தபோது, இடுப்பில் ஒரு துண்டை  மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவர் திடீரென அவன் முன்னால் வந்து நின்று கையில் இரண்டாக மடிக்கப் பட்ட வெற்றிலையில் இருந்த  மோதிரத்தை எடுத்து அவன் இடதுகை விரலில் மாட்டிவிட்டு, “இனிமேல் நீ என்னை முதலாளி என்று அழைக்கக் கூடாது. நண்பன் என்றே அழைக்கலாம்.” என்றதும், அவரின் செய்கை எவ்வித உணர்வுகளையும் கொடுத்ததாக அவன் முகத்தில் தெரியவில்லை. லேசாக சிரித்தவன், விரலில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தபடியே “உங்களை நண்பன் என்று அழைக்க மனம் வரவில்லை முதலாளி என்றே அழைக்கிறேன்.அது மட்டுமல்ல விரைவில் நானும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கவிருக்கிறேன்”.என்றபடியே அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.
௦௦௦௦௦

இப்போதெல்லாம் முதலாளிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடும் நாளாகிவிட்ட மே தினக் கொண்டாட்டத்தை நடத்த அரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தது  மட்டுமல்லாமல் ஊர்வலத்துக்கு  அவரே தலைமையும் தாங்கினார். வழியெங்கும் காவல்துறையின் பாதுகாப்போடு தலைவர் முன்னால் நடந்துவர, தொண்டர்களில் “தலைவன் வாழ்க” கோசம் நகரையே அதிர வைத்தபடி அந்த ஊர்வலம் பிரதான சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கு முன்னாலேயே அவரின் தொண்டர்கள் சிலர் சுருட்டியிருந்த கோர்வை பட்டாசுகளை வீதியில் பரப்பத் தொடங்கினார்கள். அப்போதான் எதிர்த்திசையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவனைப் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே.அதனைக் கவனித்த தலைவரோ, “அவன் எனது நண்பன். அவனை விடுங்கள்.” என்றதும், சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை நோக்கி சென்றவன், “முதலாளி நான் சொன்ன பரிசை உங்களுக்கு இப்போ தரப் போகிறேன்” என்றபடியே இறுக்கி அணைத்தபோது வீதியில் பரப்பி முடித்த பட்டாசுகளில் ஒருவன் நெருப்பை வைத்தான். பட பட வென்ற பட்டாசு சத்தங்களோடு டமாரென்ற பெரும் சத்தம்…. அவன் உடலில் கட்டியிருந்த குண்டு வெடிக்க தசைத் துண்டுகள் எங்கும் சிதறியது.
அதுவரை அனைவரும் வாழ்த்திய தலைவனும் வாழ்த்திய தொண்டர்கள் பலரும் உடல் சிதறி இறந்துபோய்க் கிடந்தார்கள்.மிகுதிப்பேர்  ஒரு தடவை வெடித்த குண்டு மறுபடி வெடிக்காது என்பதைக்கூட யோசிக்காமல் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தார்கள் ..
௦௦௦௦௦

இப்போதெல்லாம்  breaking news க்கு நடுவே பிரதான செய்திகள் சொல்லிப் பழகிவிட்ட தமிழ் ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் ஹாங் ஹாங் விமான நிலையத்தில் ஒரு விமானத்துக்காக காத்திருக்கும் மண்டபத்தில் சி என் என் தொலைக் காட்சி செய்திகளை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திடிரென போடப்பட்ட  “breaking news”அந்த நாட்டின் அரசுத் தலைவர் தற்கொலை குண்டு தாரியால் கொல்லப்பட்டுள்ளார்.தற்கொலை குண்டுதாரியின் பெயர் சுவி  என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்” .என்று ஒரு புகைப் படத்தையும் காட்டினார்கள் .”அட செய்தது நீ தானா” என்று மனதில் நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன் ..

ஓடிப் போனவள் .

$
0
0

ஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி

வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது.
இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அன்றுதான் வேலை அதிகமாகவிருக்கும். இந்தவேலையை விட்டுத்தொலைக்க வேணும் எண்டு பலதடவை யோசித்தாலும், இதில் கிடைக்கும் சம்பளத்தை நினைத்து பேசாமல் இருந்துவிடுகிறேன். கோடை வெய்யிலில் வேலையால் வியர்த்த உடம்பு,  பைக்கை ஓடத் தொடங்கியதும்  மிதமான  கடல் காற்று பட்டு இதமாகவிருந்தது. வீடு போனதும் ஒரு குளியல் போட்டுவிட்டு சில்லென்ற பியர் ஒன்றை உறுஞ்சினால்… அதுவே என் இன்றைய சொர்க்கம்  என்று நினைத்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, எதிரே கடற்கரை சாலையை  காவல்துறையினர் மறித்து தடுப்பு போட்டு வாகனங்களை வேறு பக்கத்தால் திருப்பி விட்டுக்கொண்டிருப்தை கவனித்ததும், ஐந்து நிமிடத்தில் போய் சேரவேண்டிய வீட்டுக்கு இனி இருபது நிமிடம் சுத்தி போகவேணும். எனக்கும் சொர்க்கத்துக்கும்மான  தூரத்தை அதிகரித்த அந்த அதிகாரியை திட்டியபடியே  வீடு வந்து ஆடைகளை அவிழ்த்தெறிந்து குளியல் கூண்டுக்குள் நுழைந்து தண்ணீரை தலையில் தண்ணீரை திறந்து விடும்போது கைதொலைபேசி அடிக்கும் சத்தம்.


‘ச்சே …எனக்கு மட்டும்தான் இப்பிடியா?’ குளியலறையிலோ கழிப்பறையிலோ  இருக்கும்போதுதான் தொலைபேசி அடிக்கும். கைத்தொலைபேசி  நின்று இரண்டாம் தரமும் அடித்து ஓய்ந்து. இப்போ வீட்டு தொலைபேசி. இரண்டு இலக்கமும் தெரிந்திருப்பதால் யாரோ இங்கு எனக்கு நெருக்கமான நபர் என்று மட்டும் ஊகிக்க முடித்து. ஏதும் அவசரமாகவிருக்கும். பாதிக்குளியலில்  நிறுத்தி துடைத்து விட்டு அதே அவசரத்தில் ஜட்டியை  போடும்போது கால் பெருவிரல் ஜட்டியில்  மாட்டிவிட , விழுந்து விடாமல் ஒற்றைக்காலில் ஒரு சிலசெக்கன்கள் ஆடும் அந்த நடனம் இருக்கிறதே அதை  பரதத்தில் அடக்கலாமா? வெஸ்டனில்  அடக்கலாமா ? என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒற்றைக்காலை தூக்கிய  நடராஜர் சிலையை பார்க்கும் போதெல்லாம் இவரும் என்னைப்போலவே  ஜட்டி போடும்போது அனுபவப் பட்டிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. உடை மாற்றி வந்து பார்த்தேன். யோகனும் தேவகியும் அழைத்திருந்தார்கள்.
‘திரும்பவும் எதோ குடும்பப் பஞ்சாயத்து போல கிடக்கு. யோகன் கனகாலமா ஒழுங்காத்தானே  இருக்கிறான். திரும்ப தொடங்கிட்டானோ’?
யோகனுக்கு அழைப்பு போனது. எடுத்ததுமே,


“டேய் எங்கை நிக்கிறாய் ? பெரிய பிரச்னை. ஒருக்கா அவசரமா வா…”
என்று விட்டு நிறுத்தி விட்டான். கன காலத்துக்குப் பிறகு இன்று நிறைய குடித்திருக்கிறானென்று கதையிலையே விளங்கியது. என் இன்றைய சொர்க்கம் நரகமாகப் போகிறது என்று மட்டும் தெளிவா தெரிந்தது. அவர்களின் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் வழியிலேயே உங்களுக்கு அவர்களைப்பற்றி சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.
௦௦௦௦௦௦

ஊரில் கனகரத்தினம் என்றால் தெரியாதவர் இல்லை. பரம்பரை பணக்காரர். யாழ் நகரில் இரும்புக்கடை , ஒரு சினிமா தியேட்டர், உணவு விடுதியெனப் பல தொழில்கள் செய்து கொண்டிருந்தவர். அப்படியானவருக்கு அரசியலும், அதிகாரச் செல்வாக்கும், ஊரில் ஒரு தனி மரியாதை இருக்குமெனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர். அப்பாவுக்குப் பெண்பிள்ளைகள் மேல் அதிக பாசமிருப்பதைப்போலவே மகள் மீது கனகருக்கும் அளவு கடந்த பாசம். கூடவே கொண்டு திரிவார். அவளை உடுவில்  மகளிர் கல்லூரியில் சேர்த்து, அவளுக்காகவே ஒரு புது கார் வாங்கி, டிரைவர் வைத்தது மட்டுமல்ல அவள் வளர.. வளர ..வீட்டு மதிலும் உயர்த்து கொண்டே போய், அவள் எட்டாவது படிக்கும்போது   வயதுக்கு வந்துவிட, வீட்டு மதில் கோட்டை சுவர்போலாவாகி உள்ளே நடப்பது எதுவுமே வெளியே தெரியாமல் போய் விட்டது மட்டுமல்ல அவள் வெளியே வருவதும் குறைந்து போனது. ஒருநாள் கோவில் திருவிழாவில் சேலையில் வந்திருந்த அவளைக் கண்டபோதுதான் ஊர் இளசுகள் எல்லாமே ‘அட  தேவகியா?’ இதுவென்று வாய்பிளந்து பார்த்தார்கள். அன்றுதான் நானும் அவளைப் பார்த்தேன். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து வைத்திருந்தவள் போல இருந்தது.
அதற்குப்பின்னர் தேவகியின் கார் பாடசாலைக்கு போய்வரும் போதெல்லாம் சந்தியில்  இளசுகள் கூட்டம் அவளின் பார்வைக்காக ஏங்கிக் கிடந்தது. அதிலொருவன் தான் யோகன். விடயம் கனகரின் காதுக்குபோக, உலகத்திலையே கார் யன்னலுக்குத் திரைசீலை போட்டவர்  என்கிற பெருமையை பெற்றுக்கொண்டார். தேவகியின் பார்வை கிடைக்காமல் போனாலும்  காரை பார்த்தாலே போதுமென்றோ அல்லது எதோ ஒரு நம்பிக்கையில் இளசுகள் கூட்டம்  சந்தியில் காத்து நிற்கத்தான் செய்தது. ‘நீ தேவகிக்கு பின்னால் அலையவில்லையா ?’ என்கிற உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது. எத்தனை தித்திப்பாக இருந்தாலும் அது எட்டாப்பழம் என்று எனக்குத்தெரியும். அதனால் நேரத்தை வீணடிக்கவில்லை.

ஒருநாள் வாசலில் நின்று போகிறவர் வருகிறவருக்கெல்லாம் கனகர், மகள் பத்தாவது பாஸ் பண்ணி விட்டாள் என்று இனிப்புக் கொடுத்துக்கொண்டிருந்தார். என்னையும் கூபிட்டு, “நீ பாசா?” என்று கேட்டு நீட்டிய இனிப்பை ‘ஒமென்றபடியே’ஒன்றை எடுத்துக்கொண்டு போய் விட்டேன். யோகன் பெயிலாகி வீட்டில் திட்டு வாங்கித் தனியார் கல்விநிலையமொன்றில் சேர்த்திருந்தான். அதுக்குப்பிறகு அவனை அடிக்கடி காணக் கிடைப்பதில்லை. அவன் பழக்க வழக்கங்களும் மாறிப்போய் அன்றைய காலத்தில் மிகக் கெட்டகாரியமான கள்ளை  குடிக்கவும் சிகரெட் பிடிக்கவும் பழகிவிட்டிருந்தான். இனிப் படிப்புச் சரிவராது என்று நினைத்த அவன் தந்தை அவர்களுக்குச் சொந்தமாகவிருந்த, ‘தங்கம்மா எலெக்ட்ரிகல்’ கடையில் தன்னோடே சேர்ந்து வியாபாரத்தை கவனி என்று விட்டு விட்டார். தேவகி மீதான காதல் யோகனுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்க, ஒருநாள் அவர்கள் கடைக்குப் பல்ப்பு வாங்கப்போன தேவகியின் தம்பியிடம், “கண்ணே தேவகி..  நீ மட்டும் என் காதலுக்கு ம்… ….சொல்லிவிடு. ‘தங்கம்மா எலெக்ட்ரிக்கலை’, ‘தேவகி எலெக்ட்ரிகலாக’ மாற்றி விடுகிறேன்.”                 என்றெழுதி ‘அக்காவிடம் கொடு.’என்று கொடுத்தனுப்பிய கடிதம் நேரே அப்பா கனகரிடம் போக, யோகனின் தந்தையை  தன்வீட்டுக்கு வரவழைத்து அவர் முகத்தில்  கிழித்தெறிந்த  கனகர்,

“என்ரை மகளின்ரை பேரிலை நூறு கடை திறக்கிற வசதி எனக்கிருக்கு. உன்ரை  கடை தேவையில்லை. ஊரிலை  இருக்கிறதெண்டா ஒழுங்கா இருங்கோ. இல்லாட்டி குடும்பத்தோடை  துலைசுப்போடுவன்.” என்று மிரட்டியவர், அவமானத்தால் தலைகுனிந்தபடியே அங்கிருந்து கிளம்பிய யோகனின்  தந்தையிடம், “அந்த கடுதாசியளையும் பொறுக்கிக்கொண்டு போடா  பொறுக்கி நாயே”என்றதும், விம்மி வந்த அழுகையை  முடித்தவரை அடக்கிக்கொண்டு, ‘ஒரு தறுதலையை பெத்த எனக்கு இது வேணும்.’ என்று நினைத்தபடியே  நிலமெங்கும் சிதறிக்கிடந்த கிழிந்த துண்டுகளை பொறுக்கிஎடுதுக்கொண்டு வெளியேறியவர், வீட்டுக்கு வந்து யோகனைப்பிடித்து முற்றத்து வேம்பில் கட்டி வைத்து அடித்ததை அன்று ஊரே  உச்சுக்கொட்டியபடி  வேடிக்கை பார்த்தது.
தேவகிக்கு கடிதம் கொடுக்கலாமா என்கிற குழப்பத்திலிருந்தவர்களுக்கு யோகனின் நிலையை பார்த்து, “இல்லை  வேண்டாம்” என்கிற தெளிவான முடிவுக்கு வந்திருந்தார்கள். இப்பவும் சத்தியமாக சொல்கிறேன் எனக்கு அப்படியொரு யோசனை வந்ததேயில்லை.
அந்த சம்பவத்துக்கு பிறகு யோகனை கொழும்பில் ஒரு உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். தேவகியின் தரிசனத்துக்காகச் சந்தியில் நின்றவர்களும் குறைந்து போக, ஒரு நாள் கனகரின் வீட்டுக்கு அவரின் நெருங்கிய உறவினர்கள் இறுகிய முகத்தோடு வருவதும் போவதுமாக இருக்கவே என்னவென்று விசாரித்தால்,
“கனகரின் தாய்க்கு சுகமில்லையாம் கடுமையாகிட்டுது.” என்று சொன்னார்கள்.

சரி அந்திரட்டிச் சோறு சாப்பிடலாமென நினைத்துக்கொண்டிருக்கும் போது தான்  யாருமே நம்பமுடியாத அந்த செய்தி கசிந்தது. பொதுவாகவே இது போன்ற பெரிய இடத்து சங்கதிகள் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களால் தானே கசிவது வழமை. தேவகியின்  கார் டிரைவர்  லீவன்று கள்ளடித்து விட்டு விடயத்தை மனைவியின் காதில் பெல்லடித்து விட்டார். அடுத்தநாள்  டிரைவரின் மனைவி தன் தம்பியிடம் குசுகுசுக்க, அவன் வந்து என்னிடம்  அக்கம்பக்கம் பார்த்தபடியே அந்த மாபெரும் ரகசியத்தை சொல்லி விட்டான். பிறகென்ன விடயம் மெதுவாக ஊரெங்கும் பரவத்துவங்கியது.
‘என்னது தேவகி ஓட்டிட்டாளா. ?’ ஆ ..வென்ற வாய் மூடவே பலருக்கும்  சில நிமிடமெடுத்தது. அதை விட அதிர்ச்சி, அவள் பொட்டு ரங்கனோடை  ஓடிட்டாள் என்றதுதான். ‘பொட்டு ரங்கன்’ சின்ன வயதிலிருந்தே கனகரின் இரும்புக்கடையில் வேலை பார்க்கும் மலையகத்தை சேர்ந்தவன். அங்கேயே வேலை, சாப்பாடு, படுக்கை. அவன் அழுக்குத் தெரியாமலிருக்க காக்கி உடையே அணிவான். மொட்டையென்று  யாரும் சொல்லி விடக்கூடாது என்பதுக்காக  கட்டையாக வெட்டிய முடி. யாரைப்பர்தாலும் மெல்லிய புன்னைகோடு ஒரு தலையசைப்பு. அதிகம் பேசவும் மாட்டான். எப்போதும் ஒரு சந்தனப்பொட்டு வைத்திருப்பதால் அவன் பெயரிலும் அது ஒட்டிக்கொண்டது. ஞாயிறு ஒரு நாள் லீவன்றுமட்டும் படத்துக்குப் போவான். அதுவும் கனகரின் தியேட்டரில் ஓடும் படத்துக்குத்தான். காரணம் டிக்கட் எடுக்கத்தேவையில்லை. இப்படி கனகரை சுற்றியே அவனது உலகம் இருந்ததால் கனகருக்கும் அவனில் நல்ல நம்பிக்கை வந்து விட்டிருந்தது. இப்போ கனகருக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டதால் நேரத்தோடு வீட்டுக்கு வந்து விடுவார். பொட்டுரங்கன் தான் இரவு  கணக்குப்பார்த்து கடையை பூட்டி விட்டு காசை கொண்டுவந்து கனகரிடம் கொடுத்து விட்டு போவான். நேரம் பிந்தி விட்டால் கனகரின் கார்கராச்சில் படுத்துக்கொள்வான்.
எங்கே, எப்போ, எப்பிடி வருது என்று தெரியாமல் வருவதுக்கு பெயர்தானே காதல். தேவகிக்கும் ரங்கன் மீது அது வந்துவிட ஓடி விட்டார்கள். ரங்கனோடு  ஓடி விட்டாளாம் என்றதும் ஊர்  இளைஞர்கள் எல்லோரும் கண்ணாடி முன்னால் போய் நின்று,

“எங்களிடம் இல்லாதது அப்பிடியென்ன ரங்கனிடம் இருந்திருக்குமென” வளைத்து வளைத்து பார்த்தார்கள், நானும்தான்.
தேவகி ஓடிப்போன விடயம் தெரியாமலிருக்கத்  திரை போட்டு மூடிய கார் வழக்கம்போல  பாடசாலை நேரத்துக்கு போய் வந்து கொண்டிருந்திருக்கிறது. கனகரின் தாய்க்குச்  சுகமில்லை என்றதையும் எல்லாரும் நம்பி விட்டிருந்தனர். அந்த இடைவெளிக்குள் கனகர் தனது அத்தனை  பலத்தையும், வளத்தையும் பாவித்து மலையகம் முழுவதும் தேடி ஒரு கிழமையில்  தலவாக்கலையில் தலைமறைவாக இருந்த தேவகியை கண்டுபிடித்து விட்டார். அவளை ஊருக்கு கொண்டு வராமல் அப்படியே கொழும்புக்கு கொண்டு போனதும் அடுத்த நாளே யோகனின் குடும்பமும் கொழும்புக்கு போயிருந்தனர். யோகனுக்கும் தேவகிக்கும் அவசரமாக கொழும்பிலேயே கலியாணம் நடந்ததாகத் தகவல் மட்டும் ஊரில் இருந்தவர்களுக்கு கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே தலவாக்கலையில் நடந்த தேடுதலில் தீவிரவாதி கைது என்று பொட்டு ரங்கனின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அதுக்குப்பிறகு அவனுக்கு என்ன நடந்ததென்று யாருக்கும்தெரியாது. ஆனால் கனகரோடு மோதினால் இதுதான் நடக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். அந்தக் கிழமையே நான் பிரான்சுக்கு வருவதுக்காகக் கொழும்பு போயிருந்தபோது யோகனை சந்தித்திருந்தேன். கனகர் தன்பெரும்பாலான  சொத்தைத் தன் பெயரில் எழுதித்தந்து தன் காலில் விழுந்து கெஞ்சியதால் தேவகியை கட்டிக்கொண்டதாகப் பெருமையாக சொன்னான். அவரே தங்களை லண்டனுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக சொல்லியபோதே பழிவாங்கி விட்ட திருப்தி அவன் கண்களில் தெரிந்தது. நானும் பெறாமையோடு இங்கு வந்து சேர்த்து விட்டேன்.
00000000000000000000000

நான் பிரான்ஸ் வந்து சுமார் மூன்று மாதமளவில் லண்டன் போவதாக சொன்ன யோகனும் தேவகியும் இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். ஒரே ஊரவன், உறவுக்கரனும் கூட என்பதால் வந்த உடனேயே என்னைத் தேடி போனடித்திருந்தான். அப்போ நான் பிரெஞ்சு படிக்க வகுப்புக்கு சென்று கொண்டிருந்ததால் வகுப்பு முடிந்த ஒரு மாலைப்பொழுதில் ஆளுக்கொரு பியர் கேனுடன் பூங்கா ஒன்றில் பேசத்தொடங்கியிருந்தோம். உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பதாகவும் வேலையும் வீடும் தேடுவதாக சொன்னவன், அதுக்காக என் உதவியும் கேட்டிருந்தான். நீண்ட நேரம் நான் ஆவலுடன் காத்திருந்த தேவகியை பற்றி ஒரு வார்த்தை  கூட சொல்லாதது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்க நானாகவே “தேவகி எப்பிடி இருக்கிறாள்”? என்று கேட்டதும் , ஒரு இழுப்பில் பாதி பியரை முடித்தவன்,  “ஓ…….. அந்த ஓடிப்போனவளா? அவளுக்கென்ன இருக்கிறாள்.”
“அவளின்ரை அப்பன் எங்களை லண்டனுக்குத் தான் போக அனுப்பினவன். ஆனால் அவள் படிச்சவள் கெட்டிக்காரி, இங்கிலீஸ் வேற தெரியும். அங்கை போனதும் டெவலப் ஆகிப் பிறகு என்னை விட்டிட்டு திரும்பவும் ஓடிடுவாள். அதாலைதான் நான் இங்கை வந்திட்டேன்.” என்று சொல்லி முடித்தவன் அடுத்த இழுப்பில் மீதிபியரையும் முடித்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
பிரான்சில் வந்தாரை வாழவைப்பது உணவுவிடுதி வேலைகள்தான். அப்படியொரு உணவகத்தில் யோகனுக்கு வேலையொன்று தேடிக்கொடுத்திருந்ததோடு எனது வீட்டுக்கு அருகிலேயே  ஒரு வீடும் பார்த்து கொடுத்திருந்தேன். ஆனால் யோகனுக்கு உணவு விடுதி வேலை என்பது பகுதிநேர வேலையைப்போல், ஏனென்றால் தேவகியை ஓடிப்போனவளே  என்று திட்டுவதும் அடிப்பதும்தான் முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தான். அவளின் பெயரே அவளுக்கு மறந்துபோய் ‘ஓடிப்போனவள்’ என்கிற பெயரே மனதில் பதிந்து விடுமளவுக்கு  ஸ்ரீராமஜெயம் சொல்வது போல ஒரு நாளைக்கு குறைந்தது நூறு தடவையாவது  சொல்லிக்கொண்டேயிருப்பன். அவர்களோடு நெருங்கிப்பழகும் ஒரேயொருவன் நான் தான் என்பதால் தேவகியின்  நரகவாழ்க்கை எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இரவு நேரங்களில் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலீசுக்கு போனடித்து அவர்கள் வந்து யோகனை எச்சரித்து விட்டு போனதும் நடந்திருந்தது.

“உங்களுக்கு ஏதாவது பிரச்னை கொடுக்கிறனா? நீங்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” என்று தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தேவகியிடம் கேட்டதற்கு,
“இல்லையில்லை குடித்தால் சத்தம் போடுவார் வீட்டு சாமான்களை உடைப்பார். அவ்வளவுதான். எனக்கு  உடல் ரீதியாக எந்த பிரச்னையும் கொடுப்பதில்லை.” என்று சொல்லி விட்டாள்.
சிலஇரவுகள் கடும்குளிரில் அவளை வெளியே தள்ளி கதவை சாத்தி விட்டிருக்கிறான்.  அதைப்பார்த்து யாராவது பொலிசுக்குப் போனடிதால் அன்றிரவு முழுவதும் அவனை போலீஸ்  நிலையத்தில் கொண்டுபோய் வைத்திருந்து விட்டு எச்சரித்துக் காலை அனுப்பி விடுவார்கள். பிறகு சில நாட்கள் ஒழுங்காக இருப்பான். ஆனால் அடுத்த வாரஇறுதி நாளில் மீண்டும் முருங்கையில் ஏறி விடுவது வழமையாகிப்போனது. தேவகியும் புகார் கொடுப்பதில்லை. ஒருநாள் அவன் அடித்தஅடியில் தேவகி மயங்கி விழுந்துவிடக் கொஞ்சம் பயந்து போனவன், எனக்குதான் அவசரமாக போனடிக்க, நான்தான் முதலுதவிப் பிரிவுக்கு போனடித்து அவளை வைத்தியசாலைக்குக் கொண்டுபோயிருந்தேன். அப்போதும் யோகன் வரவேயில்லை. அவளுக்கு அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் ஐந்தாவதுமாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பெண்குழந்தைக்குத் தாயாக போகிறாள் என்கிற விடயத்தை  வைத்தியர் சொன்னார். தேவகிக்குப் பிரெஞ்சுமொழி தெரியாதென்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை பிரெஞ்சில் நானே மொழிபெயர்துக்கொண்டிருந்தேன். அந்தச் செய்தியை தேவகிக்கு சொன்னதும் அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமற்ற வழமையான  இறுகியபடியே  முகத்தை வைத்துக்கொண்டு,

“இங்கை என்ன பிள்ளை எண்டும் சொல்லிடிவினமோ”? என்றாள்.
“ஓம் என்ன பிள்ளை எண்டது மட்டுமில்லை, என்ன திகதி. கரு தரித்து  இப்போ எத்தனை  சென்றி மீற்றர் குழந்தை வளர்ந்திருக்கு எண்டு எல்லாமே விபரமா சொல்லிடுவினம்.”
என்றதும், பெண் குழந்தை தானே என்று மீண்டுமொருமுறை கேட்டு உறுதிப்படுத்தியவள்  மெல்லிதாக புன்னகைத்தாள். அதன் அர்த்தத்தை என்னால்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் யோகனை திருமணம் செய்த பின்னர் அவளது முதலாவது புன்னகை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

“எப்படி மயங்கி விழுந்தாள்? உடல் முழுதும்  தழும்புகள் உள்ளது. உடலும் மிக பலவீனமாக உள்ளது. நீங்கள்தான் அவரது கணவனா?” என்று  குறுக்கு விசாரணை கேள்வியை கேட்டார் வைத்தியர். நான் கொஞ்சம் பதறிப்போய் “அவள் கணவனில்லை நண்பன்.”  என்றதும் லேசாக தலையை ஆட்டியவர், “அவரது கணவனால் அவருக்கு பிரச்சனைகள் உண்டா?” என்றார்.  எங்கள் உரையாடல் வேறு எதோ விவகாரமாக போகிறது என்பதை உணர்ந்த தேவகி  குறுகிட்டு “என்ன கேக்கிறார்?” என்றாள்,
“உடம்பில கன தழும்புகள்  இருக்காம். புருசனாலை ஏதும் பிரச்சனையோ எண்டு கேக்கிறார்”  என்றதும், “நோ….. நோ எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. நான்தான் அடிக்கடி மயங்கி விழுந்திடுறேன் எண்டு சொல்லுங்கோ.”  என்று விட்டாள்.

‘ச்சே. இந்த பொம்பிளையளே  இப்பிடித்தான். அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து பழிவாங்க கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டாள்.’ என்று எனக்கு அவள் மீதே கோபம் வந்தது. எப்படியெல்லாமோ ஒரு மகாராணி போல வாழ வேண்டியவள். கல்லானாலும் கணவன் புல்லாய் குடிச்சிட்டு அடிச்சாலும் புருஷன் எண்டு அவன்மீது பக்தியாய்  இருக்கிறாளா? இல்லை இவளுக்கு லூசாக்கிட்டுதா? என்று புரியாமலிருந்தது .
சில நாட்கள் வைத்திய சாலையிலேயே அவளை தங்கியிருக்க சொல்லி விட்டதால்  வெளியே வந்து யோகனுக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு அவன் அப்பா ஆகப்போகிறான்  பெண் குழந்தை என்று சொன்னதும், அவனோ அவசரமாக,
“என்னைப்பற்றி அந்த ஓடுகாலி ஒண்டும் சொல்லேல்லை தானே”? என்று கேட்டான்.

“இல்லை தானே வழுக்கி விழுந்ததா  சொன்னவள். ஆனால் டொக்ரருக்கு  சந்தேகம் வந்திட்டுது விடுத்ததுவிடுத்து கேட்டார். அவள் ஒண்டும் சொலேல்லை. சரியான பலவீனமா இருக்கிறாள். இனிமேல்  கொஞ்சம் கவனமாயிரு. ஏதும் நடந்தால் நீயும் உள்ளுக்கை போகவேண்டி வரும். வாழ்கையை வீணாக்காதை.” என்று முடித்து விட்டேன்.
அவன் வைத்தியசாலைப் பக்கமே போகாததால் பயந்து விட்டானா என்று நினைத்துக்கொண்டு  ஒவ்வொரு நாளும் நான் வைத்திய சாலைக்கு சென்று தேவகியோடு  உரையாடிவிட்டு  செல்வது வழமையாகிவிட்டிருந்தது. சில நாளில் தேவகியும் வீடுபோய் விட்டாள். பின்னர் மிதிலா பிறந்ததும் யோகனில் சிறிது சிறிதாக மாற்றமேற்படத் தொடங்கியிருந்தது. தேவகியில் காட்டிய அத்தனை  வெறுப்பையும் மிதிலாமேல் அன்பாகப் பிழிந்தான். என்னோடு கதைக்கும் போதும்  மிதிலா என்று தொடங்கி  மகளைப்பற்றி பேசத் தொடங்குபவன் காலப்போக்கில் மகளைப்பற்றி மட்டுமே பேசுபவனாக மாறிப்போனது மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை  குறைத்து  சத்தம்போட்டு பேசுவதைக்கூட  சுத்தமாக நிறுத்தி விட்டான். அந்த யோகனா இவன் என்று நானே ஆச்சரியப்படும்  அளவுக்கு மாறிப்போயிருந்தான். அவனுக்கு மகள் மீதான பாசத்தை பார்க்கும்போது எனக்கு கனகரின் நினைவும் வந்துபோகும். எனக்கும் திருமணமாகி  மகள் பிறந்துவிட இப்போ நாங்கள் குடும்ப நண்பர்கள். தேவகிக்கு அடியும் பேச்சும் இல்லாமல் போனது எனக்கு நிறையவே ஆறுதல். ஆனால் அவள் மட்டும் இன்னமும் செதுக்கி விட்டதைப்போலவே உணர்வுகளை கூட மாற்றி காட்டாத  எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரத் தனத்தோடு இருந்தாள். மிதிலாவுக்கு இப்போ இருபத்துநான்கு வயது. படித்து முடித்து விட்டு வீட்டுஏஜென்சியில்  வேலை பார்க்கிறாள். இப்படி எல்லாமே நல்லா போய்கொண்டிருந்த நேரத்தில் தான்  ….
0000000000000000000000000

யோகன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவை திறந்தவன், “வாடா….. வா… ”  என்று வாயிலிருந்த விஸ்கி மணத்தோடு வரவேற்றவன், “இந்த சோனியளை நாட்டை விட்டு துரத்த வேணும். அகதியெண்டு சொல்லிக்கொண்டு பிச்சையெடுக்க இங்கை வாறது. பிறகு இங்கை குண்டு வைக்கிறது.” என்று ஒரு தீவிர பிரெஞ்சு வலதுசாரியைப்போலவே  திட்டியபடி  தயாராயிருந்த கிளாசில் விஸ்கியை ஊற்றி எனக்கு நீட்டினான். தொலைக்காட்சியில்  கடந்த வருடம்  எங்கள் நகரத்தில் துனிசியா நாட்டுக்காரன்  கனரக வாகனத்தால் அடித்துக்கொல்லப்பட்ட  நூற்றுக்கும் அதிகமான பொது மக்களுக்கு பிரான்சின் அதிபர் மக்குரோன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தார். நான் உள்ளே போனதுமே அடுப்படிக்குள் நின்றிருந்த தேவகி வழக்கம் போலவே அமைதியாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். அமைதிக்கான நோபல் பரிசை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் எனக்கிருந்தால் அதனை தேவகிக்கே  பரிந்துரை செய்வேன்.

“பார் வீட்டுக்கு வந்த உன்னை வா எண்டு கூட சொல்லாமல் எவ்வளவு அமசடக்கமா உள்ளை போறாள். எல்லாம்  இந்த ஓடு காலியால வந்தது. எல்லா சோனியளையும் அடிச்சு கொல்ல வேணும்.” என்று கத்தினான்.
துனிசியன் வாகனத்தால் பொது மக்களை கொலை செய்ததுக்கும் தேவகிக்கும் என்ன சம்பந்தம் என்று நான் குழம்பிப்போய்  விஸ்கியை ஒரே மிடறில் விழுங்கியபோது, கதவை திறந்து மிதிலா வர அவளுக்குப் பின்னால் பதுங்கியபடி இன்னொரு இளைஞன் உள்ளே வருவதா விடுவதா என தயங்கிக் கொண்டிருந்த போது, “இஸ்மாயில் உள்ளே வா.” என்றாள் .
“அங்கிள் இது இஸ்மாயில். துனிசியன். என்னோடை வேலை செய்யிறான். நாங்கள் லவ் பண்ணுறம். இரண்டு பேரும்  சேர்ந்து வாழப்போறம். உங்கடை பிரெண்டுக்கு அது பிடிக்கேல்லை. அவருக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கோ.”
என வேகமாகச் சொல்லிவிட்டுத்  தன்அறைக்குள் புகுந்தாள். இப்போ எனக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் ஆனால்  முழுவதுமாக புரியவில்லை. கையில் சில பைல்களோடு வெளியே வந்து,

“அப்பா தனிய என்னுடைய டொக்கியுமெண்டுகள் மட்டும்தான் எடுத்துக்கொண்டு போறன். நீங்கள் வாங்கித்தந்த ஒரு உடுப்புக்கூட கொண்டு போகேல்லை. இஸ்மாயிலும் நானும் இனி சேர்ந்து வாழப்போறோம். உங்களுக்கு விரும்பினால் எப்பவானாலும் வந்து பார்க்கலாம்.” என்று விட்டு கிளம்பும்போது அறையின் கதவு திறந்து வெளியே வந்த தேவகி  கையிலிருந்த பணத்தை அவளின் கையில் திணித்துத்  தன்கழுத்திலிருந்த சங்கிலியையும் அவள் கழுத்தில் போட்டுவிட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். சந்தேகமேயில்லை நோபல் பரிசு அவளுக்குத்தான். ஆனால் இவ்வளவு நேரமும் யோகன் சோனகரை எதுக்கு திட்டினான் என்பது மட்டும் விளங்கியது.
மிதிலா வெளியே போவதை விறைத்து பார்த்தபடியே  இருந்தவன். அவள் போனதும் அவனது அத்தனை கோபமும் வீராப்பும் உடைந்து ஒரு குழந்தைபோல பெரும் சத்தமாய் விக்கிவிக்கி அழத் தொடங்கிவிட்டான். அவனை தட்டித்தடவி  ஆறுதல் சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் அறைக்கதவை திறந்து வெளியே வந்த தேவகி எங்களிருவரையும் மாறிமாறிப் பார்த்தவள், மிதிலா சாத்தாமல் சென்றுவிட்டிருந்த வெளிக்கதவை சாத்திவிட்டு மீண்டும் தன் அறைக்குள் புகுந்து சடாரெனக் கதவைச் சாத்திக்கொண்டாள்.
‘ச்சே என்ன பொம்பிளை இவள் ? ஒரு புருசன்காரன் பிள்ளை பிரிந்து போகிற துயரத்தில்  குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறான். ஆறுதல் சொல்லாமல் அறைக்குள் போய்க் கதவைச் சாத்துகிறாளே! கொஞ்சம்கூட  மனிதாபிமானமே இல்லாத கல்நெஞ்சக்காரி.’

என்று நினைத்தபடி கொஞ்ச நேரத்துக்கு முன்னர் அவளுக்குப் பரிந்துரை செய்த நோபல் பரிசை மீளப்பெற்றுக்கொண்டு யோகனுக்கு ஆறுதல் சொல்லிச் சோபாவில் படுக்க வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.
மகள் போன சோகத்தில் அன்று  வேலைக்கும் போகாமல் குடிப்பதும் தேவகியை திட்டுவதுமே  முழு வேலையாக செய்து கொண்டிருந்தவன், அடுத்த நாளும் காலை எழுந்து தெளியாத பாதி போதையில் கடைக்குப்போய் விஸ்கி வாங்கிக்கொண்டு வந்து கதவைத்திறந்து ‘அடியே ஓடிப்போனவளே…..’ என்று கத்தியபடி அறையை திறந்து பார்த்தான். வீட்டில் அவள் இல்லை.   விஸ்கியை  திறந்து மேசையிலிருந்த கிளாசில் ஊற்ற போனபோது அதனடியில் இருந்த கடிதத்தை எடுத்து மங்கலாகத் தெரிந்த எழுத்துக்களை கண்ணை கசக்கிவிட்டுப்  படிக்கத் தொடங்கினான்.
பேனாவால் உன் பெயரைக்கூட எழுத எனக்கு மனமில்லை …..

இத்தனை வருடங்களாக  எனக்கும் என் மகளுக்கும் இருக்க இடமளித்து உடை உணவு கொடுத்ததுக்காக நன்றி சொல்லப் போவதுமில்லை. ஏனெனில் ஊரில் தன்கௌரவமும்  செல்வாக்கும் பணத்திமிரும் சரிந்து போய்  விடக்கூடாது என்பதுக்காக கனகரத்தினம்  உனக்கு சேவகம் செய்ய என்னையும் பெரும்செல்வத்தையும் உன்னிடம் ஒப்படை த்திருந்தார். அவர் கொடுத்த பொன்னும்பொருளும் பணமும் என்னையும் என்மகளையும் காலம் முழுதும்  வைத்துச் சாப்பாடு போட போதுமானது. ஆனாலும் அதுக்குக் கைமாறாக உனக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் காமத்தைக் கரைக்க என்னைப் பயன்படுத்த அனுமதித்துள்ளேன். அதில் மகளை காப்பாற்றும் என் சுயநலமும் இருந்தது. என்வயிற்றில் வளர்வது ஆணா பெண்ணா என்று தெரியா விட்டாலும் மகிழ்வோடு சுமந்து கொண்டிருந்த எனக்கு இங்கு வைத்தியர் பெண்குழந்தை என்று சொன்னதுமே நானும் இன்னொரு தடவை  பிறந்தது போன்ற உணர்வு. என்மகளை நன்றாக வளர்த்து  நல்ல கல்வியை கொடுத்து அவள் விரும்புகிறவனின்  கையில் பிடித்து கொடுப்பதே என்னுள் முழுவதுமாகப் பரவியிருந்தது. உன் காமக்கரைசலில் ஒருகரு உருப்பெற்று விடாமலிருக்க அத்தனை அவதானமாகவிருந்தாலும்  இரண்டுதடவை  என்அவதானம் பிழைத்துப் போய் சுயமாகவே  முயற்சிஎடுத்து  கருவைக்கலைக்க நான் பட்ட வேதனையும் வலிகளும் ……வேண்டாம், அவற்றை உனக்கு விளங்கப்படுத்த வேண்டிய தேவையுமில்லை. எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் நிச்சயமாக  உன்னுடையதும்  என்தாய் தந்தை உறவுகள் அனைவர் மீதுமுள்ள வெறுப்பு அனைத்தையும் அந்தக்குழந்தை மீது காட்டி விடுவேனோ என்கிற பயம்தான் என்னை அப்படியொரு முடிவைஎடுக்க வைத்தது.

அப்படியானால் மிதிலா யாரென்று உனக்குள் இப்போது சந்தேகம் எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கும். அது என்னுடையதும் ரங்கனுடையதுமான உண்மையான காதலில்  கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள்அல்ல. இந்த உண்மையை நான் அவளிடம் சொல்லவில்லை, சொல்லப்போவதுமில்லை. உனக்கு துணிவிருந்தால் நீயே அவளிடம் சொல்லிக்கொள்ளலாம். எனது இத்தனை வருட நோக்கம், தவம் இப்போ நிறைவேறி விட்டது. நான் போகிறேன். என்னை தேடும் முயற்சியில் இறங்காதே. அதில் பயனுமில்லை. இப்போ உன் விஸ்கியை  தாராளமாக  குடிக்கலாம். சியேர்ஸ்…..
இப்படிக்கு
ஓடிப்போனவள்
கைகள் வேகமாக நடுக்கமெடுத்து போதை இறங்கி விட்டிருந்தது. தொண்டை வரண்டது போலவிருக்கக் கிளாசில் ஊற்றிய விஸ்கியை கலவையில்லாமலே ஒரே மடக்கில் குடித்தவன், ‘அது என்னுடையதும் ரங்கனுடைதுமான உண்மையான காதலில் கருப்பெற்ற குழந்தை. உன்னுடைய மகள் அல்ல.’
என்கிற வசனத்தை திரும்ப திரும்பப் பல தடவை படித்தவன், மேசையில் ஓங்கி குத்திவிட்டு   தொலைபேசியை எடுத்து அழுத்தினான்.
00000000000000000000000000

கலவி முடிந்த களைப்பு இருவரினதும் மூசுக்காற்று அறை முழுதும் பரவி ஜன்னல் கண்ணாடிகளிலும் அப்பியிருந்தது. இடுப்புவரை இழுத்து விடப்பட்ட போர்வைக்குள் என் மார்பின் முடிகளை அவள் கைகளால் கோதி விளையாடிக்கொண்டிருக்கும்போது,    இடைவிடாமல் அழைத்த தொலைபேசியை எடுத்துக் காதில்வைத்தேன்.
“மச்சான் எங்கை நிக்கிறாய்? மனிசியைக் காணேலை. கடிதமெழுதி வைச்சிட்டு எங்கையோ ஓடிப்போயிட்டாள். எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்லை. பொலிசுக்குப் போறது நல்லதெண்டுபடுது. உடன வாறியோ?”
“என்னடா சொல்லுறாய்?அப்பிடி ஒண்டும் இருக்காது. பதட்டப்படாதை. நான் ஒரு  மீற்றிங்கில  இருக்கிறன். அரை மணித்தியாலத்தில வாறன்.” போன்  கட்டானது.
“யாரது? என்ரை  புருசன் தானே?”
“ம் …..”
“என்னவாம்?”
“உன்னைக் காணேல்லையாம். பதட்டமாயிருக்கிறான். பொலிசுக்குப் போறதுக்கு என்னை வரட்டாம்.”
“நீயே  கண்டு பிடிச்சு குடுக்கலாமே?”
“எனக்கென்ன  விசரோ …அதுசரி கடிதத்திலை என்ன எழுதி வைச்சனி?”
“எல்லாமே ..”
“எல்லாமே எண்டால். மிதிலாவைப் பற்றியுமோ?”
“ம் ……”
“அடியே அவன் மிதிலாவிலை எவ்வளவு பாசமெண்டு உனக்கு தெரியும்தானே. உயிரையே வைச்சிருக்கிறான். தற்கொலை செய்தாலும் செய்துபோடுவான். எதுக்கு அதை சொன்னனி?”
லேசாக சிரித்தவள், “தற்கொலை செய்யிறதெண்டால் இவ்வளவு நேரத்துக்கு செய்திருக்க வேணும். தண்ணியை போட்டிட்டு உனக்கு போனடிச்சு விவரம் சொல்லிக்கொண்டிருக்க  மாட்டான். நண்பனிலை பாசமெண்டால் இப்பவே ஓடிப்போ.”
“சரி ..சரி .. கோவிக்காதை. அவளை மேலே இழுத்து உதட்டில் ஒரு இச் வைத்து அடுத்ததா என்ன செய்யிற திட்டம்?”
“ஓடிப்போகப் போறன்..”
“யாரோடை?”
என் வலப்பக்க மார்பு காம்பை விரல்களால் கசக்கி நுள்ளியவள், “உங்களைத் திருத்தவே முடியாதடா” என்று என்னைத் தள்ளிவிட்டாள்.
பயங்கர வலியெடுத்தாலும் காட்டிக்கொள்ளாமல், லேசாய் தடவிவிட்டு  மீண்டும் அவளை இழுத்தணைத்து, “சரி என்ன செய்யப் போகிறாய் ? அதையாவது சொல்லு.”
என்னிலிருந்து விடுவித்து முகட்டை அண்ணாந்து பார்த்த படியே, “என்னைச்சுற்றி  மனித முகங்களோடு நாக்கில் நீர்வடிய அலைந்த ஓநாய்களில் நீ மட்டும் கொஞ்சம் நல்ல ஓநாய். அதுதான் கடைசியாக  உன்னோடு இருந்திட்டு போகவந்தன்.”
“அப்போ நானும் நல்லவனில்லையா?”
“உற்ற நண்பனுக்கும் ,ஊரில இருக்கிற மனிசிக்கும் போனடிச்சு தேவகியோடை  படுத்திருக்கிறன். நான் நல்லவனா எண்டு கேள், அவையே சொல்லுவினம்.”
கேள்வி  சுருக்கென்று  குத்தினாலும் சிரித்து சமாளிப்பதைத்  தவிர வேறுவழியில்லை.
“நான் கெட்டவன் என்றால் எதுக்கு இவ்வளவுதூரம் பழகினாய்?
“உண்மையை சொல்லு உனக்கு  என்னில ஆசை இருக்கேல்லையா?”
“அது வந்து ….. “
“உன்னால இல்லையெண்டு சொல்லமுடியாது. என்னை  சாறியில கோயில்லை வைச்சு பார்த்த பார்வையிலையே எனக்கு விளங்கிட்டுது. எல்லாரையும் போல உனக்கும் அதை எனக்கு சொல்ல பயம். அந்த விசயத்தில யோகன் பரவாயில்லை. ஆனா பிறகு என்னை டொக்டரிட்டை  கூட்டிக்கொண்டு  போன பிறகு யோகனுக்கும் எனக்கும் கலியாணம் நடந்ததிகதியும்  கர்ப்பமான திகதியும் வித்தியாசமா இருக்கே? எண்டு என்னட்டை  நீ கேட்டுச் சிரித்த அந்த விசமச் சிரிப்பிலையே எனக்கு விளங்கிட்டுது.”
“ஆனா நான் உன்னை வெருட்டேல்லை …..”
“அந்த சிரிப்பை விட வேறையென்ன வேணும். எனக்குப் பொம்பிளைப்பிள்ளை எண்டு தெரிஞ்ச துக்கு பிறகு எல்லாத்துக்குமே நான் தயாராகிட்டன். அதை வளத்தெடுத்து அவள் விரும்பிறவனுக்கே கையிலை பிடிச்சு குடுக்கிற வரை உன்னால எந்த பிரச்னையும் வராமலிருக்க நானே உன்னோடை இசைஞ்சு போறதைத் தவிர வேற வழியிருக்கேல்லை…”
“பரவாயில்லையே புத்திசாலி எண்டு மனதுக்குள் பாராட்டினாலும். இந்தத்தடவை விருது எதையும் பரிந்துரைப்பதாயில்லை. சரி எங்கேதான் போகப்போகிறாய்?”
“அதெல்லாம் உனக்கு சொல்லத்தேவையில்லை. போகமுதல் கடைசியாய் இன்னொரு தடவை, ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் என்றபடி போர்வையை விலக்கி எழுந்தவள் அதே போர்வையால் என் கைகள் இரண்டையும் கட்டியவளிடம்,
“ஏய் ..என்ன செய்யுறாய் …. ?”
என் உதட்டில் அவளின்  சுட்டு விரலை அழுத்தி,
“உஸ் ……எதுவும் கதைக்க கூடாது.” என்றுவிட்டு இறுக்க கட்டிய கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி பின்பக்கமாக கட்டில் சட்டத்தில் கட்டியவள், மேலே ஏறி அமர்ந்திருந்து உதட்டில் முத்தமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தாள்.
“கள்ளி ..இப்படியெல்லாம் உனக்கு தெரியுமா?”
என்தொடைகளுக்கு நடுவே அவள் தலை அசையத்தொடங்கியதும், “இதுக்காகவாவது ஏதாவது விருது கொடுக்கத்தான் வேணும்” என்று நினைத்தபடியே இன்பவலியில் லேசாய்க் கண்ணை மூடியபோதுதான் அந்த மரணவலி ..
“ஐயோ…..”.
உடைந்த குழாயிலிருந்து தண்ணீர் சீறியடிப்பது போல தொடை நடுவே இரத்தம் சீறிக்கொண்டிருக்கத் தாங்கமுடியாத வலியில் உடலைப் புரட்டிப்புரட்டிக் கால்களைக்   கட்டிலில் அடித்துக் கட்டியிருந்த கைகளையும் விடுவிக்கும் முயற்சியோடு கத்திக்கொண்டிருக்க, எழுந்து பக்கத்திலிருந்த குப்பைக் கூடைக்குள் துப்பியவள், பல நாள் பட்டினி கிடந்த சிறுத்தையொன்று  கிடைத்த  மானைக் கலைத்து வேட்டையாடிக் களைப்பை மறந்து பசிக்குச் சாப்பிட்டு முடித்த பின்னர் ருசிக்காக வாயில் வழியும் இரத்தத்தை நாவால் சுழற்றி நக்குவதைப்போலவே தன் வாயில் வழிந்த இரத்தத்தை  நாவால் துடைத்து  உச்சுக்கொட்டி ருசித்து விழுங்கிவிட்டு,
“இது இருக்கிறதால தானே உங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆட்டம் ?” என்றபடி தலகணையை எடுத்து என் முகத்தில் அழுத்திப்பிடிக்க, மூச்சுத் திணறிக் கண்கள் இருண்டு அடித்துக்கொண்டிருந்த கால்கள் சோர்ந்துபோய் உடல் குளிர்ந்து லேசாகி  பறக்கத் தொடங்கியது போலதொரு உணர்வு.
அசைவுகள் அனைத்தும் அடங்கியதும் தலகணையை எடுத்துப் பார்த்தவள், அவசரமாக உடைகளை அணிந்தபடி வெளியேறிவளின் உருவம் நிழலாய் தெரிய எனது  வாய் முணுமுணுத்தது, “ஓ …டி …ப் …போ…ன ..வ ..ளே …….. !”

பிரபாகரனுக்குப் பின் இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?


பேச்சியம்மன்-சிறுகதை

$
0
0

பேச்சியம்மன்-சிறுகதை-சாத்திரி   நடு இணைய சஞ்சிகைக்காக ..

 
%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%எங்கள் ஊரின் பண்டதரிப்பு போகும் வழியில் ஒரு சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்து மீண்டும் ஒரு கையொழுங்கையால் நடந்தால் ஒதுக்குப்புறமாக  ஒருபக்கம் தோட்ட காணிகளையும் மறுபக்கம் பனங்கூடலையும் கொண்ட அக்கம் பக்கம் வீடுகளற்ற  பகுதியில் பனங்கூடலுக்கு  நடுவில் ஒரு வேப்பமரத்தை பின்னிப்பிணைந்த பிரமாண்டமான ஆலமரம். அவற்றின் கிளைகள் பிரியுமிடத்தில் நடுவே ஒரு பனை மரம் வேறு வளர்ந்திருந்தது. அந்த மும்மரத்தின் அடியில்தான் பேச்சியம்மன் கோவில். அதை யார் எப்போ கட்டினார்கள் என்கிற விபரம் எதுவும் ஊரில் யாருக்கும் தெரியாது. ஒருவர் மட்டும் குனிந்துதான் உள்ளே போகலாம். அவ்வளவு சிறிய கோவில். ராசையா பூசாரி மட்டுமே ஒவ்வொருநாளும் மாலையில் உள்ளே போய் விளக்கேற்றி விட்டு சங்கெடுத்து ஊதுவார். அந்த வெளிச்சத்தில் மங்கலாக ஒரு கருஞ்சிலை தெரியும். அந்த சங்குச் சத்தம் மனதில் ஒரு திகிலை தரும். பேச்சியம்மனுக்கு பூசை,பொங்கல்,திருவிழா என்று எதுவும் கிடையாது. அங்கு போகவே பொதுவாக எல்லோருக்கும் பயம். வீடுகளில் யாருடையதாவது பசு கன்று போட்டால் அதனோடு சேர்ந்துவரும் இளங்கொடியை ஒரு சாக்கில் கட்டி கொண்டுபோய் அந்த ஆலமரத்தில் கட்டி விடுவார்கள். பசு அதிக பால் தருமென்பது அவர்களது நம்பிக்கை. அதை விட ஒன்னுமொரு நம்பிக்கையும் இருந்தது.திருமணமாகி நீண்டநாட்கள் பிள்ளை பிறக்காத பெண்களின் தூமைச்சீலையை அதில் கட்டி விட்டால் விரைவில் குழந்தை பிறக்கும் என்பதும் நம்பிக்கை. மரத்தடியை சுற்றி, அதை தின்ன வரும் காகங்களும் இலையான் குழவி என ஒரே சத்தமாகவும் நாத்தமாகவும் இருக்கும். ஊரில் வீடுகளிலோ தோட்டங்களிலோ களவு போனால் சனமும் போலிசை நம்பியதை விட பேச்சியம்மனையே நம்பினார்கள். ஒரு முழம் பருத்தி நூலை மூன்றாக மடித்து மஞ்சள் குங்குமத்தில் நனைத்து நேர்த்திவைத்து ராசையா பூசாரியிடம் இழை கட்டி விட சொல்லி கொடுத்து விடுவார்கள். பேச்சியம்மனின் கையிலோ காலிலோ அந்த நூலை கட்டி விட்டால் களவெடுத்தவனின் கையோ காலோ வழங்காமல் போய் விடும். கழுத்தில்  கட்டினால் அவ்வளவுதான் ஆளே இல்லாமல் போய்விடும். ஆனால் ஊர் மக்கள்  கழுத்தில் கட்டுமளவுக்கு அவ்வளவு மோசமானவர்கள் அல்ல. பெரும்பாலும் கையிலேயே கட்டும்படி சொல்வார்கள். மென்போக்குள்ள சிலர் விரலில் கட்ட சொல்வதுமுண்டு. 

மக்கள் அந்தப்பக்கம் போகாததுக்கு இன்னுமொரு காரணமும் உண்டு. கையொழுங்கை பிரியுமிடத்தில் நின்ற நூற்றாண்டுகளை கடந்து நிக்கும் பெரிய புளியமரம். ஆறு ஏழு பேர் சேர்ந்தால் தான் அதன் அடிப்பக்கத்தை கட்டிப்பிடிக்கலாம். மரத்தின் கிளைகளில் காய்த்து தொங்குவதைப்போல நூற்றுக்கணக்கான தேன்குழவிக் கூடுகள். இதனாலேயே அதுக்கு ‘தேனிப்புளியடி’ என்கிற காரணப்பெயர். கீழே ஆளுயரத்துக்குப் பல கறையான் புற்றுகள். அதற்குள் குடியிருக்கும் பலரகப் பாம்புகள். மரத்தின் பொந்துகள் எங்கும் கூடு கட்டியிருக்கும் மூத்திரக்குழவி. அது போதாதென்று அருகிலிருக்கும் பனைமரங்களில் பந்து போலத் தொங்கும் கருங்குழவி கூடுகள். இவைகள் சிறகடிப்பு வீணையின் ஒற்றை நரம்பிலிருந்து எழும் சத்தம் போல இரைந்தபடியே எப்போதுமே அச்சத்தை தருவதாக இருக்கும். இரவு நேரத்தில் பேச்சியம்மன் அந்த புளியமரத்தில் வந்து  குந்தியிருந்துவிட்டு போவதாக ஒரு கதை ஊரில் உலாவிக்கொண்டிருந்தது ,அதனைச் சிலர் பார்த்துமிருகிறார்கள். அப்படிப் பார்த்து காச்சல் வந்து பேச்சு மூச்சில்லாமல் படுக்கையில் விழுந்து வைத்தியம் எதுவும் சரிவராமல் பேச்சியம்மனுக்கு நேர்த்தி வைத்து விளக்கேத்த தேங்காய் எண்ணெயும் திரியும் பூசாரியிடம் கொடுத்த பின்னர்தான் காச்சல் மாறியிருக்கிறது. அதே புளியமரத்தடியில் பேச்சியம்மன் சிலரை அடித்து கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. 

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் இந்தப்பக்கம் யாராவது போவார்களா ?.
அந்த மரத்தோடு சேர்ந்திருந்த பெரிய காணியின் நடுவில் செட்டிநாடு மற்றும் கேரள பாணி கலந்து சுண்ணாம்பால் கட்டப்பட்ட பெரிய நாற்சார வீடு. அந்த வீட்டு உரிமையாளர் பல வருடங்களுக்கு முன்னரே சிங்கப்பூரில் சென்று குடியேறிவிட்டதால் அங்கு யாருமில்லை. அதை தாண்டி கொஞ்ச தூரம் போனால் இரண்டு குடிசைகள் முதலாவது , மகனோடு தனியாக வசிக்கும்  கசிப்பு ராசாத்தியின் வீடு.  ராசாத்தியிடம் உள்ளூர் சாராயம் மட்டுமில்லை வெளிநாட்டு சாராயம் கூட கிடைக்கும். கள்ளிறக்கும் தொழில் செய்த அவரின்  கணவன் சாதி சண்டையில் இறந்துபோய்விட வருமானத்துக்காக அவர் தொடங்கியதுதான் சாராய வியாபாரம். சிங்கப்பூர் காரரின் வீட்டில் யாரும் இல்லாததால் சாராய போத்தல்களை மறைத்துவைக்கும் இடமாக பாவித்து மட்டுமல்ல அதனை பாதுகாக்க இரண்டு நாட்டு  நாயை வேறு வளர்த்து விட்டிருந்தார். அந்த வீட்டை தாண்டி சில நூறு மீற்றற்றில் அடுத்த குடிசை பால்ரொட்டி நாகம்மாவினுடையது. நாகம்மா பிறந்து சில காலத்திலேயே  தாயார் இறந்துபோக மகளை கவனிக்கவாவது வேறொரு திருமணம் செய்துகொள்ள பலர் வலியுறுத்தினாலும் மகளை நானே கவனிக்கிறேன் என்று  திருமணமும் செய்துகொள்ளாத   ஊரில் பெயர்போன சமையல்காரன் சித்திரவேலு. ஊரில் நடக்கும் சடங்குகளுக்கு கோவில் திருவிழாக்களுக்கு சமையல் வேலைசெய்வதை தவிர விவசாயமும்செய்தார். நாகம்மாவும் படிப்பை இடையில் விட்டுவிட்டு தகப்பனோடு சேர்ந்து சமையல் வேலைக்கு போகத்தொடங்கி அதை கற்றுக்கொண்டதோடு சொந்தமாகவே பல காரங்களும் செய்யத்தொ டங்கியிருந்தார். பலகாரம் தான் அவரது ஸ்பெசல். அதுவும் முக்கியமாக பால்ரொட்டி செய்வது. இளமையில் அழகாகவும் துடுக்காகவுமிருப்பார். தோட்டத்திலிருக்கும் வாழைக்குலை  காய்கறிகள் எல்லாம் எடுத்து சைக்கிள் கரியரில் கட்டி சந்தைக்குக் கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார். அது மட்டுமல்ல அந்த புளிய மரத்துக்கு கீழால் சென்றுவரும் துணிச்சலான ஒரு சிலரில் நாகம்மாவும் ஒருவர். அப்படியிருந்த நாகம்மாவை திடீரென சில நாட்கள் ஊரில் காணவில்லை. அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் சித்தவைத்தியம் செய்யப் புத்தளத்தில் ஒரு  மௌலவியிடம் கொண்டுபோய் விட்டுள்ளதாகச் சித்திரவேலர் ஊரில் சொல்லியிருந்தார். சில மாதங்களின் பின்னர் நாகம்மா ஊருக்கு திரும்பி வந்திருந்தாலும் பழைய துடுக்குத்தனம் எதுவுமில்லாமல் அதிகம் வீட்டை விட்டு வெளியே வராமலும் இருந்துள்ளார். 

“சில காலத்திலேயே வெளியூர் போய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தார்களாம். அது நாகம்மாவின் குழந்தைதான், யாரோ அவளை ஏமாற்றி விட்டார்கள். வெளியூரில் போய் பிள்ளை பெற்றுக்கொண்டு வந்துள்ளாள்“ என்று ஊரில் ஒரு கதையும் உலாவியது.
அப்போதுதான் காற்றும் மழையும் பலமாக அடித்த ஒரு இரவில் ஊரை கலக்கிய அந்தக்கொலை நடந்திருந்தது . ஊரிலேயே மிகப்பெரிய சண்டியன் மணியத்தை அந்த புளியமரத்தின் அடியில் பேச்சியம்மன் அடித்து கொலை செய்திருந்தது. மணியன் பெரிய சண்டியன். உயரமான, பருமனான, முறுக்கிய மீசையோடு பார்க்க பயப்படும் ஒரு உருவம்.  ஏகப்பட்ட வழக்குகள் அவன்மீது பதிவிலிருந்தாலும் அரசியல் ,போலிஸ் செல்வாக்கோடு வெளியே வந்து விடுவான். வெளியே வந்ததும் அவன் மீது வழக்குப் போட்டவர் உரை விட்டு எங்காவது ஓடிவிடுவார். இல்லாவிட்டால் மணியம் அடித்தே கொன்று விடுவான். அதனால் பலர் வழக்கு போடவே பயந்தார்கள். போலீசாரிடமே கப்பம் வாங்கும் ஒருவன் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மணியத்தைத்தான் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது. செய்தி பரவி ஊரே கூடிமெல்லிய மழைத் தூறலில் நனைத்தபடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, தகவலறிந்து சங்கானை போலிஸ் அதிகாரி ஆறுமுகம் தலைமையில்ஒரு குழு வந்திருந்தாலும், அவர்களும் புளிய மரத்துக்கு கீழே போகப்பயத்தில் ஆளையாள் பார்த்துக்கொண்டிருந்தபோது, சித்திரவேலர் குழவி குத்திவிடாமலிருக்க ஒரு சாக்கை முதுகுப்புறம் போர்த்திக்கொண்டு பெரிய வடக்கயிறு ஒன்றின் நுனியை இடுப்பில் கட்டியபடி தவழ்ந்து போய் அதை  சடலத்தின் காலில் கட்டிவிட்டு மீண்டும் தவழ்ந்து வந்துவிடக் கையிற்றைப் பலரும் சேர்ந்துசடலத்தை இழுத்தெடுத்தார்கள். தலை பிளந்திருந்தது. சடலத்தினருகே முறிந்த புளியங்கிளை ஒன்றும்கிடந்ததால் பேச்சியம்மன் புளியம் கிளையையை முறித்து அதனால் மணியத்தின் தலையிலடித்து கொலை செய்து விட்டது என்கிற முடிவுக்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

 அவன் குடும்பத்தினரைத் தவிர மணியம் செத்தது ஊரில் எல்லோருக்கும் ஒரு ஆறுதல் தான். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் ஒரு நின்மதிப் பெருச்மூசோடு சடலத்தை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தவர், சில நாட்களிலேயே “பேச்சியம்மன் கனவில் வந்து தானே அந்த கொலையை செய்ததால் வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டாமென சொன்னதாக” சொல்லி பைலை மூடி விட்டாராம். அதே வருடத்திலிருந்து கோவில் திருவிழா நாளில் நாகம்மாள் மீது பேச்சியம்மன் இறங்கி உருவாடத் தொடங்கியதாம். இந்த சம்பவங்கள் நடக்கும்போது நான் அப்போ சிறுவன். எனவே பின்னர் எனக்குத் தெரிந்த நாகம்மா பற்றி சொல்கிறேன்.
எப்போதும் சாணி போட்டு மெழுகியிருக்கும் ஒரேயொரு அறை மட்டும் கொண்ட பனையோலையால் வேயப்பட்ட சுத்தமான குடிசை. அருகிலுள்ள சிறிய தாழ்வாரம் தான் அடுப்படி. திண்ணையில் ஒரு கயித்து கட்டில். அதனருகே பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டியும் இடுப்பளவு உயரமான சல்லடைபோட்ட இரும்புக்கரண்டியும் சாத்தி வைக்கப்பட்டிருக்கும். முன்னால் விசாலமான முற்றத்தை தாண்டி பலவகை பூங்கன்றுகள் சுற்றிவர நிற்கும் பனைமர துலாவுடன் கூடிய கிணற்றடி. அதற்குமப்பால் சிறிய வீட்டுத் தோட்டம். எனக்குத் தெரிந்து ஊரில் முதலாவது பகுத்தறிவாளர் நாகம்மாதான். கோவிலுக்கெல்லாம் போக மாட்டார். காலையில் எழுந்ததும் கிணற்றடியில் உள்ள கமுகமரத்தில் கட்டித் தொங்கும் உமிக்குடுவையிலிருந்து சுட்ட உமியில் பல் தீட்டி குளித்து ஈரத் துணியோடு சுத்தமாக விளக்கிய பித்தளை செம்பில் நீர் நிரப்பி அதுக்குள் பலவகை பூக்களையும் பிடுங்கிப்போட்டு நடு முற்றத்துக்கு வந்து செம்பிலுள்ள பூக்களை முற்றத்தில் போட்டு தண்ணீர் தெளித்த பின்னர் சூரியனை அண்ணாந்துபார்த்து தலைக்கு மேல் கைகளை கூப்பி வணங்கிவிட்டு அன்றைய வேலைகளை தொடங்குவார். நாகம்மா மேல்சட்டை போடமாட்டார். சேலையால் மார்புக்கு மேல் குறுக்கு கட்டியிருப்பார். பெரும்பாலும் பச்சை சேலைதான். 

ஊரில் என்ன மங்கள நிகழ்வு நடந்தாலும் நிகழ்வு தொடங்குவதுக்கு மூன்று நாளுக்கு முன்னரே பால்ரொட்டி சுட்டு முதலாவதாக நன்றாக மொரமொறவென பொன் நிறத்தில் பொங்கி வரும் பால் ரொட்டியை அடுப்புக்கல்லில் நெருப்புக்கு படைத்தது விட்டே  பின்னர் நிகழ்வுக்கு வேண்டிய பலகாரங்களை சுடுவது வழமை. அப்படி முதலாவதாக சுடும் பால் ரொட்டி எண்ணெயில் போடும்போது பொங்காமல் சரியான பதத்துக்கு வேகாமல் வந்தால் அப சகுனம். அந்த நிகழ்வு சரியாக நடக்காது ஏதும் குழப்பங்கள் வருமென்பது ஒரு நம்பிக்கை. அதனாலேயே பலகாரம் செய்வதில் கைதேர்ந்த நாகம்மாவை எல்லோரும் அழைப்பது வழமை. முதல்நாள் பால் ரொட்டி சுடும் நிகழ்வுக்கு அவர் பணம் வாங்கமாட்டார். அவரின் வீட்டுக்குப்போய் வெற்றிலையில் ஒரு ரூபாய் வைத்து அழைக்கவேண்டும். அதை இரண்டு கைகளாலும் வாங்கி கைகளை உயர்த்தி ஆகாயத்தை நோக்கி கும்பிட்டு விட்டு அதை கொண்டுபோய் பலகாரம் சுடும் பெரிய இரும்புச்சட்டிக்கு பக்கத்தில் வைத்து மீண்டும் வணங்கிவிட்டுச் சரி சொல்லிவிட்டால் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்துவிடுமென்கிற மகிழ்ச்சியோடு அழைக்கப்போனவர் திரும்புவார். முடியாதென்று சொல்லிவிட்டால் …….மீண்டும் நாகம்மா சம்தம் சொல்லும்வரை அல்லது வேறொருவரை வெளியூரிலிருந்து அழைத்து வரும்வரை சில நிகழ்வுகள் தள்ளிப்போனதுமுண்டு. நாகம்மாளின் மகள் கல்யாணி ஊர் பாடசாலையில் என்னோடு ஒரே வகுப்பில்தான் படித்தாள். அவளும் நாகம்மாள் போலவே துணிச்சல்காரி. தனியாக அந்த புளியமரத்தை கடந்து பாடசாலைக்கு வந்து போவாள். நாகம்மாவும் என் அம்மாவும் நல்ல நண்பிகள் என்பதால் கல்யாணியும் எனக்கு நல்ல நண்பியாகிவிட்டிருந்தாள். காலப்போக்கில் சித்திர வேலர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இறந்துபோய்விடக் கல்யாணி நாகம்மாவுக்கு உதவியாக சமையல் வேலைகளுக்குப் போக தொடங்கியிருந்தாள். 

 ஊர் பாடசாலையில் என் உறவினர்களும் ஆசிரியர்களாக இருந்ததால் அவர்களோடு ஏற்பட்ட தகராறில் நான் எட்டாவது படிக்கும்போதே அப்பா என்னை மானிப்பாய் இந்துவில் கொண்டுபோய் சேர்த்து விட்டார். அதற்குப் பிறகு கல்யாணியையும் நான் அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. ஒருநாள் மாலை ஊரிலிருந்த மிகப்பெரிய அரிசி மில்லிலிருந்து சைக்கிளின் பின்னல் ஒரு மூட்டையை கட்டியபடி கல்யாணி வந்து கொண்டிருந்தாள். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்து பேசிய நினைவு. மில்லில் கீழே சிதறிக்கிடக்கும் தவிடு மற்றும் மாவை கூட்டி அள்ளிக்கொண்டு போய் மாட்டுக்கு உணவாக கரைத்து வைத்தால் நன்றாகப் பால் தரும் அதுதான் ஒவ்வொரு நாளும் மில்லுக்கு வந்துபோவதாக சொல்லிவிட்டுபோனாள். மில் முதலாளியின் மகன் சுரேசும் என் பாடசாலையில்தான் படித்தான். அவன் என்னை  விட ஒருவகுப்பு அதிகம். ஆசிரியர்களே சைக்கிளில் வந்து கொண்டிருந்த காலத்தில்  பாடசாலைக்கு பைக்கில்வந்த ஒரேயொருமாணவன் அவன்தான். செல்வ செழிப்பும் திமிரும் அவனிடமிருந்தது. அவனை சுற்றி ஒரு ஓசிக் கூட்டம் எப்போதுமிருக்கும். மாணவிகளும் அவனை ஒரு கதா நாயகன் போலப் பார்த்தால் எனக்கு இயல்பாகவே அவன்மீதொரு எரிச்சல் பெறாமை வளர்ந்து விட்டிருந்தது. எப்படியாவது அந்த வருட கோவில் திருவிழாவில் நண்பர்களோடு சேர்ந்து அவனுக்கு இருட்டடி போடுவதென்று முடிவெடுத்திருந்தேன். அந்த வருட திருவிழாவும் தொடக்கி விட்டிருந்தது. நானும் அவனுக்கு இருட்டடி போடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள் காலை சுரேசை புளியடியில் பேச்சியம்மன் அடித்து கொன்று விட்டது என்கிற செய்தி கிடைத்தது. எனக்கு லேசாக உள்ளுக்குள் உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தாலும் சைக்கிளை எடுத்து புளியடிப்பக்கமாக மிதித்தேன். பிணத்தின் காலில் கயிறை கட்டி தூரத்தில் நின்று இழுத்தெடுத்துக்கொண்டிருந்தார்கள். 

ஒப்பாரி அழுகை சத்தத்தோடிருந்த சனக்கூட்டத்தை விலக்கி மெதுவாக எட்டிப்பார்த்தேன்.மண்டைபிளந்திருந்தது.நேற்றிரவு நித்திரையிலிருந்தவனை  பேச்சியம்மன் தான் இழுத்துக்கொண்டு வந்து புளியடியில் அடித்துக் கொன்று விட்டது என்று பேசிக் கொண்டார்கள். பேச்சியம்மன் கொல்லும் அளவுக்கு அவன் மோசமானவன் இல்லையே என்கிற சந்தேகமும் மக்களிடமிருந்தது.
ஊரில்விவசாயிகளிடமெல்லாம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தால் தான் மில் முதலாளியை பழிவாங்க அவரின் ஒரே மகனை பேச்சியம்மன் கொன்று விட்டதாக சந்தேகத்துக்கான பதிலையும் அவர்களே கண்டு பிடிதுக்கொண்டார்கள். போலிஸ் அதிகாரி ஆறுமுகம் இப்போ ஒய்வு பெற்று விட்டதால் அவரிடத்திலிருந்த ரணசிங்க என்கிற சிங்கள அதிகாரி பிணத்தை வைத்திய சாலைக்கு அனுப்பும் வேலைகளை செய்து விசாரணைகளை தொடங்கியிருந்தார். பேச்சியம்மன் செய்த கொலையை விசாரணை செய்தால் அது சும்மா விடுமா என்ன .. ?
அப்போ விடுதலை இயக்கங்கள் வளரத் தொடங்கிய கால கட்டம் எதோ ஒரு இயக்கம் நடத்திய தாக்குதலில் ரணசிங்காவும் கொல்லப்பட சுரேசின் வழக்கும் காணாமல் போய் விட்டது. சில நாட்களில் கல்யாணிக்கு உடல் நிலை சரியில்லையென்று நாட்டு வைத்தியம் செய்ய அவளை  நாகம்மா புத்தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அறிந்தேன். சில மாதங்களின் பின்னர் கல்யாணி ஊர் திரும்பியிருந்தாள். இந்த கதையை படிக்கும் நீங்களே இப்போ ஓரளவு ஊகித்திருப்பீர்கள். ஆம் நீங்கள் நினைத்தது போலவே சில நாட்களில் கல்யாணியும் ஒரு ஆண் பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டு வந்திருந்தாள். அதுக்குப் பின்னர் ஊர் நிலவரங்கள் மாற்றமடைய நானும் வெளி நாடு வந்து விட்டேன். பேச்சியம்மன் பற்றிய கதைகளும் காணாமல் போய் விட்டிருந்தது.
இப்போ சுமார் முப்பதாண்டுகள் கழித்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஊர் திரும்பியிருக்கிறேன். அதுவும் ஒரு கொண்டாட்டதுக்காக, அது தங்கை கட்டிமுடித்த புது வீடு குடிபுகுதல்நிகழ்வு. நீண்ட காலத்தின் பின் உறவுகளை சந்தித்த மகிழ்ச்சியோடு வீடு குடி புகுதலுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போதான் எனக்கு அந்த சந்தேகம்,
“என்ன பலகாரம் எதுவும்சுடேல்லையா”? என்று கேட்டதுக்கு, யார் அதெல்லாம் இப்ப செய்து மினக்கெடுகினம்? பலகாரம் சாப்பாடு எல்லாம் ஓடர் குடுத்தாச்சு. அவர்களே அண்டைக்கு எல்லாம் கொண்டு வந்து பரிமாறிட்டு போவினம். எங்களுக்கு ஒரு வேலையுமில்ல.”  என்ற தங்கையின் பதில் ஏமாற்றமாக இருக்கவே,
“சரி சடங்குகளுக்கு நாள் பலகாரங்கள் பால் ரொட்டி இதெல்லாம் சுடுவினமே, அது கூட இல்லையா ?”என்றேன். 

“பால் ரொட்டி எண்டிற பலகாரமே இப்ப கனபேருக்கு மறந்து போச்சு. அண்ணை இப்பவும் அந்தக்காலத்திலேயே நிக்கிறார்.” எண்டு நக்கலாக சிரிக்க.
“இப்ப யாரும் சுடுறேல்லையோ? இல்லை சுடத் தெரியாதோ…….. ?”  என்ற என் கேள்விக்கு. “உண்மையை சொன்னா இப்ப யாருக்கும் சுட தெரியாது” என்ற அம்மாவின் பதில் குறுக்கே வந்தபோதுதான் எனக்கு மீண்டும் நாகம்மாவின் நினைவு வந்தது. அவரைப்பற்றி நான் கேட்க முதலே,
“முந்தி எண்டால் நாகம்மா இருந்தது. அவளும் செத்து போனாள். இப்ப மகள் இருக்கிறாள். அவளும் பால் ரொட்டி சுடுறதில கெட்டிக்காரி தான், ஆனால் நாகரீகம் மெத்திப்போனதில  ஒருத்தரும் இப்ப கூப்பிடுரேல்ல”என்று பெரு மூசோடுஅம்மா சொல்லி முடிக்க, “கல்யாணிதானே….. இப்ப எங்க இருக்கிறாள்.. ? “அவள் அதே நாகம்மாவின்றை வளவில்தான்.” என்று பதில் வந்ததுமே, “நீ என்னவெண்டாலும் செய். ஆனால் ‘நாள் பலகாரம்’ கட்டாயம் சுடவேணும். நான் கல்யாணியை போய் பார்த்திட்டு வாறன்..” என்றபடி, அங்கு நின்ற யாரோ ஒருவரின் சைக்கிளை எடுத்து மிதிக்க, “உனக்கு இடம்வலம் நினைவிருக்கோ ..”? என்று பின்னல் ஒலித்த அம்மாவின் குரலுக்கு, “என்ரை ஊரிலை எனக்கு இடம் தெரியாதோ”? என்றபடி மிதித்தேன். பூவரசம் வேலிகளெல்லாம் மதில்களாகவும் வெற்று காணிகள் கட்டிடங்களாகவும் நிறையவே மாறிப்போயிருந்த ஊரில் வீதிகள் கறுப்பு வெள்ளை படம்போல மனதிலிருந்தது. புளியடி ஒழுங்கைமட்டும் மாறாமல்  பல வருடமாக யாரும் பாவிக்காததால் புதரும் பற்றை காடுமாக வளர்ந்திருந்தது. முன்பு போலவே வேறு பாதையால் சுற்றி போயிருந்தாலும் கல்யாணியின் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறியபடி விசாரித்து கண்டு பிடித்து போய்  சந்தேகத்தோடு வீட்டு இரும்பு படலையில் தட்டினேன். 

மெலிந்த தலை நரைத்து இப்போ பாடகி ஜானகியை பார்த்தது போல ஒரு உருவம் உள்ளிருந்து வந்து  யாரது என்றது .. “கல்யாணி … “என்று இழுத்ததும், “ஓம் நான் தான். நீங்கள்……… ? என்றாள். உள்ளே நாய் ஏதும் இருக்கிறதா என பார்த்துவிட்டு தைரியத்தோடு படலையை திறந்து உள்ளே போய் சைக்கிளை நிறுத்திவிட்டு சிரித்தபடி நிற்க. என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவள், 

“மன்னிக்கோணும் எனக்கு யாரெண்டு தெரியேல்லை” எண்டாள். “நான் தான் உன்னோட படிச்ச சிறி..  நாகேசின் மகன்.” என்றதும், சட்டென்று பல்லாயிரம் சூரியகாந்திப்பூ ஒரே நேரத்தில் மலர்ந்தது போல மாறிய புன்னகையோடு, “வாங்கோ .. வாங்கோ .. வந்திருக்கிறதா கேள்விப்பட்டனான். நானே வர இருந்தனான்.” என்று கதவை அகலத் திறந்து வரவேற்றாள். அப்படியே சுற்றிவர நோட்டம் விட்டேன். நாகம்மாள் வாழ்த்த குடிசை வேயப்பட்டு சாணியால் மெழுகி சுத்தமாக இருந்தது. அதே கயிற்றுக்கட்டில் அதேயிடத்தில் அருகில் அதே பெரிய இரும்புச் சட்டியும் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த கரண்டியில் சந்தனப்பொட்டு, கீழே காய்ந்துபோயிருந்த சில மலர்கள். கிணற்றடியும் சுற்றிவர பூசெடிகளும் ,பனைமரத் துலாவை காணவில்லை. மோட்டர் போடப்பட்டிருந்தது. வீட்டுத்தோட்டமிருந்த நிலத்தில் சிறிய இரண்டு அறை கொண்ட அழகான கல்யாணியின் கல்வீடு கட்டப்பட்டிருந்தது. உள்ளே போய் வழக்கமான விசாரிப்புக்களிடையே, “தனியாவா இருக்கிறாய்”? என்று கேட்டதுக்கு, 

 “ஓம்…..  மகன் கனடாவிலை. கலியாணமும் கட்டி மூண்டு பிள்ளையள். ஒவ்வொரு வருசமும் வந்து போவான். என்னையும் அங்கை இருக்க சொல்லி கூட்டிக்கொண்டு போனவன். எனக்கு அங்கை பிடிக்கேல்லை. திரும்பி வந்திட்டன். உங்கட அம்மாவும் பிரான்சுக்கு வந்திட்டு பிடிக்காமல் திரும்பி வந்ததா சொன்னவா”.
“ஓம்…….. அம்மாக்கும் வெளிநாடு பிடிக்கேல்லை. எனக்கும்தான் பிடிக்கேல்லை. ஆனால் என்ன செய்ய”? என்கிற ஆதங்கத்தோடு, நான் வந்த விடயத்தை சொன்னேன்.
“என்னது……… பால் ரொட்டி சுடவா?” என ஆச்சரியமாக கேட்டாள். “ஏன் உனக்கு சுடத் தெரியாதோ … » ?
“இல்லையில்லை இப்பவெல்லாம் ஒருத்தரும் செய்யிறேல்லை. என்னையும் கூப்பிடுறேல்லை.  இரும்பு சட்டியும் கறள் பிடிச்சுப்போச்சு.. “
“நான் கேட்டால் வருவாய் தானே … “
“உங்களுக்கு இல்லாமலே……..”என்றவளிடம்,
“அதென்ன நீங்கள் நாங்கள் எண்டு திடீர் மரியாதை? நீ .. நான் எண்டே சொல்லு.” 

என்றபடி வரும்போதே கடையில் தயாராய் வாங்கி வந்த வெற்றிலை பாக்கை பையிலிருந்து எடுத்து இரண்டு ஆயிரம் ரூபாய் தாள்களையும் நடுவில் வைத்து நீட்டினேன். லேசாக சிரித்தவள், “சில்லறை இல்லையா?” “ஓம் இருக்கே……” என்றபடி கால்சட்டை பையில் கையை விட்டு துளாவியதில் ஒரு ரூபாய் நாணயம் அகப்பட எடுத்து  இந்தா என்றதும், “சரி வெளியே வா……..” என்றவள், முற்றத்தில் போய் நின்று, “ஒரு ரூபாயை மட்டும் வெத்திலையில் வைச்சு குடு………”.
அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல் பின்னாலேயே போய் ஒரு ரூபாயை மட்டும் வெற்றிலையில் வைத்து பக்குவமாக நீட்டினதும், அதை வாங்கியவள் வானத்தை அண்ணாந்து பார்த்து வணங்கிவிட்டு அங்கிருந்த செம்வரத்தை மரத்திலிருந்து ஒரு பூவையும் பிடுங்கி சேர்த்துக் கொண்டுபோய் இரும்பு சட்டியும் கரண்டியும் இருந்த இடத்தில் வைத்து வணங்கி விட்டு, “சரி எப்ப வரவேணும்…… ? அவள் சரி சொன்ன மகிழ்ச்சியில் “இண்டைக்கே……” என்றேன். 

“சரி போ………. நான் இதெல்லாம் எடுத்து கழுவிக்கொண்டு வாறன்.”
அன்று மாலை வீட்டுக்கு வெளியே அடுப்பு வைத்து கல்யாணி பால்ரொட்டி சுடுவதை உறவுகள் எல்லாருமே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள். எல்லாருக்கும் அதை உடனே சாப்பிட்டு விட வாயூறினாலும் குடி புகுதலன்று சாமிக்கு படைக்காமல் சாப்பிடக்கூடாது என்று அம்மா கறாராகச்  சொல்லி விட்டார். அனைத்தையும் அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த  என் மகளிடம்  அதிலொன்றை களவாக கையில் கொடுத்த கல்யாணி, “எங்காவது ஓடிப்போய் ஒழிச்சு நின்று சாப்பிடு.” என்றதும் என்ன செய்வதென்று தெரியாமல் என்னை பார்த்தவளுக்கு லேசாய் தலையசைத்து சம்மதம் சொன்னதும் மாயமாய் மறைந்து விட்டாள். நிகழ்வுகள் எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்து நீண்ட காலத்துக்கு பின்னர் உறவுகள் அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சிவேறு. விடுமுறை முடிந்து பிரான்சுக்குத் திரும்ப நாலு நாட்களே இருந்தது. மாலை நேரம்  பழைய நண்பனொருவனைப் பார்த்துவிட்டு வரலாமென சைக்கிளில்  கிளம்பி பிரதான வீதியால் சந்தியை கடக்கும்போது, மூன்று பைக்குகளில் ஆறு இளைஞர்கள் கதைத்தபடி நின்றிருக்க, அவர்களை தாண்டும்போது ஒருவன் கையை காட்டி மறிக்க, திடீரென இன்னொருவன் பைக்கில் செருகியிருந்த வாளொன்றை உருவி சைக்கிள் கைப்பிடி பகுதியில் ஓங்கி வெட்டி விட்டு, “நீ யார் ? ஊருக்கு புதிசா இருக்கு.” என்றான். சட்டென்று நான் கையை எடுத்து விட்டதால் தப்பித்தேன். கொஞ்சம் பிசகியிருந்தாலும் என் கையில் வெட்டு விழுந்திருக்கும். அதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்காததால் சைக்கிளை கீழே போட்டுவிட்டு, “நான் இந்த ஊர் தான். வெளி நாட்டிலை இருந்து வந்தனான்.” எண்டு தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தபோது. வாளால் வெட்டினவன், “உன்ர பேரென்ன”? என்று விசாரணையை தொடங்கும்போதே எதிரே வந்துகொண்டிருந்த கல்யாணி, “டேய்……… அவரை விடுங்கோடா. பரதேசியள். உங்களுக்கு இதே வேலையா போச்சு……..”  என்று கத்தியபடியே வர  சனமும் கூடத்தொடங்க அவர்கள் பைக்குகளில் ஏறி சத்தம் போட்டபடியே போய் விட்டார்கள். 


என்னை பழைய நிலைக்கு கொண்டுவந்து கீழே கிடந்த சைக்கிளை எடுத்தபோது அருகில் வந்துவிட்ட கல்யாணி,
“உனக்கு ஒன்டுமில்லைத்தானே”? கோபம் அவமானம் இரண்டையும் அடக்கியதால் வார்த்தைகள் வராமல் இல்லையெண்டு தலையை மட்டும் ஆட்டினேன்.
“வெளிநாட்டு காசு……. ஆளுக்கொரு பைக்கும் போனும். வேலை வெட்டியில்லை. மண்டையிலை கோலம் போட்டு கலரும் அடிச்சுக்கொண்டு ரவுடித்தனம் செய்யிறதுதான் வேலை. நாசமா போவார். என்ர மகன் வந்து நிகேக்கையும் அவனோட பிரச்சனைப்பட்டு காசு பறிச்சுப்போட்டங்கள். உவங்களுக்கு நல்ல சாவே வராது.” என்று திட்டித்தீர்த்தவள்,
“சரி நீ இந்த நேரம் எங்கை போறாய் … »? எனக்கு இன்னமும் பேச்சு வரமறுத்தது. தொண்டையை செருமி சரி செய்துகொண்டு, “ஒரு சிநேகிதனை பார்க்க போனன்”. சரி….. பார்த்துப்போ.” என்று விட்டு போய் விட்டாள். வேடிக்கை பார்த்தவர்களும் கலைந்துபோக அப்படியே வீடு திரும்பிவிட்டேன். இரண்டு நாளாக அந்த நிகழ்வே மனதில் கிடந்தது உழன்றுகொண்டிருந்தது. “என்ன ஒரு மாதிரியிருக்கிறாய்” ? என்று வீட்டில்கூட கேட்டு விட்டார்கள். இரண்டு நாள் கழித்து மனது கொஞ்சம் லேசாகிவிட்டிருந்தது. நாளை ஊரை விட்டுவெளிக்கிட வேண்டும். நேற்றிரவு அடித்த மழை இன்னமும் லேசாக தூறியபடிஇருந்தது. கல்யாணி பலகாரம் சுட்டதுக்கு பணம் வாங்க மறுத்து விட்டதால் அவளுக்காக ஒரு பச்சை நிற சேலை வாங்கி வைத்திருந்தேன். வாள்வெட்டு மன உளைச்சலில் அது  மறந்து விட்டது. கொண்டுபோய் கொடுத்து விடை பெற்று வரலாமென நினைத்து அவசரமாக வெளிக்கிட்டு பிரதான வீதியிலிருந்து புளியடி ஒழுங்கையை கடக்கும்போது ஒரே சனக்கூட்டமாக இருந்தது. போலிஸ் வாகனமும் நின்றிருக்க, யாரோ ஒருவனின்உடலை.காலில்கயிறுபோட்டு கட்டியிழுத்துக்கொண்டிருந்தார்கள். 

எட்டிப்பார்த்தேன். மூன்று நாளுக்கு முன்னர் என்னை மறித்து வாளால் வெட்டிய அதே இளைஞன். சட்டென்று எனக்கு தலையில் யாரோ ஓங்கி அடித்தது போல ஒரு உணர்வு. என்னையே எல்லோரும் பார்ப்பது போலவும் இருந்தது. “யாரோ இழைகட்டியிருகிறாங்கள். பேச்சியம்மன் கனகாலத்துக்குப் பிறகு ஒருத்தனை பலி வாங்கியிருக்கு”. என்று கூட்டத்தில் கதைப்பது காதில் விழுந்தது. சைக்கிளை எடுத்து அங்கிருந்து வேகமாக மிதித்தேன். வீட்டு முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்யாணி,
“நேற்றிரவு சரியான மழை. செடியெல்லாம் சரிஞ்சு போய் கிடக்கு.”என்றவள், “என்னை பார்த்து என்ன பேயடிச்ச மாதிரி வந்திருக்கிறாய்  …. “? இல்லை,
“பேச்சியம்மன் அடிசிட்டுதாம். வாற வழியிலை பார்த்தன்”.
“ஒ………… சனம் இப்பவும் இதையெல்லாம் நம்புதோ……… ?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் சனத்துக்கு எப்பவுமே ஒரு நம்பிக்கை தேவையாயிருக்கு”.  இந்தா………  என்று சேலையை அவளில் கைகளில் கொடுத்தேன்.  பிரித்து பார்த்தவள்,
“அம்மாவுக்கு பிடிச்ச நிறம்,  எனக்கும் பிடிக்கும். சரி எப்ப திரும்ப போறாய் … “? “நாளைக்கு.”
“சரி இனி இங்கை வராதை. நல்லபடியா போ………….. “என்றவள் வீட்டுக்குள் போய் விட, கொட்டிலில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சமையல் கரண்டியை பார்த்தேன். அது சுத்தமாக கழுவி பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

புத்தா-(மகனே )சிறுகதை-

$
0
0

புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக ..

 
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%
 
பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. 

பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட்டியில் நிரப்பப் பட்டிருந்த தண்ணீரை ஒரு வாளியில் அள்ளிக்கொண்டு போய் கழிப்பறையில் வைத்து விட்டு “அப்பா தண்ணி ரெடி” என்று கத்தினான் குமார. இது அவனது அன்றாட நிகழ்ச்சி நிரலில் முக்கியமானது. இதை எப்போ தொடங்கினான் என்று தெரியாது. அவனுக்கு விபரம் தெரிய வந்த நாளில் ஒரு நாள் காலை வழமையாக பியசீலி தொட்டியிலிருந்து தண்ணீரை அள்ளியதுமே “அம்மா நான் கொண்டு போய் வைக்கிறேன்.” என்று அந்த வாளியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுபோய் கழிப்பறையில் வைக்கத் தொடங்கியிருந்தான். இப்போ மூன்று வருடங்களாக அந்த வேலையை ஒரு கடமையாக ஒருவித மன நிறையோடு அவன் செய்து வருகிறான். சத்தம் கேட்டதுமே குணதாச படுக்கையிலிருந்து எழுந்து பக்கத்திலேயே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஊன்று கோல்களை எடுத்து இரண்டு பக்கமும் கைகளுக்கிடையில் வைத்துகொண்டு எழும்பி கொஞ்சம் தடுமாறினாலும் சுதாகரித்துக்கொண்டு ‘டக்….. டக்….’ என்கிற சத்தத்தோடு ஒற்றை காலை நிலத்தில் தடவியபடியே கழிப்பறைக்கு போவதை பல் தேய்த்தபடியே அவர் எங்கும் விழுந்துவிடக்கூடாது என்கிற அக்கறையோடு குமார கவனித்துக்கொண்டிருந்தான். 


“குமார……. பன்சாலைக்கு போகவேணும் கெதியா வா ” என்கிற பியசீலியில் சத்தம் கேட்டு அவசரமாக தொட்டி தண்ணீரில் குளித்து முடித்தவன், அவள் எடுத்து வைத்திருந்த வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு அவனது ஆடையை போலவே வெள்ளை வெளேரென முற்றத்தில் மலர்ந்திருந்த நித்தியகல்யாணி பூக்களை பிடுங்கி ஒருதட்டில் நிரப்பியவன் சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு, வரவேற்பறையின் மூலையில் பொருத்தப்பட்டிருந்த பலகையின் மேல் சிறிய கண்ணாடி கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் சிலைக்கு முன்னால் காய்ந்து போயிருந்த பூக்களை எடுத்து எறிந்து விட்டுப் பியசீலி கொடுத்த தேநீரை குடித்து முடிந்ததும் அவள் தலை வாரி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். காலைக்கடனை முடித்து முகம் கழுவிவிட்டு தட்டில் குமார வைத்த பூக்களை எடுத்து கண்ணாடிக் கூண்டில் அமர்ந்திருந்த புத்தர் முன்னால் வைத்து வணங்கிவிட்டுக் கதிரையில் வந்தமர்ந்த குணதாச முன்னால் பூக் கூடையை தூக்கியபடியே ஓடிப்போய் நின்றான். “உன் கோபத்தை குறைத்து நல்ல புத்தியை கொடுக்கும்படி புத்த பிரானை நன்றாக வேண்டிக்கொள்.” என்று பியசீலி வாரிவிட்ட தலையை லேசாய் கலைத்துவிட்டு ஒரு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குணதாச கடை திறக்கவேண்டியதில்லை எனவே தொலைக்காட்சியை போட்டுவிட்டு கதிரையில் சாய்ந்துவிட பியசீலி சமையலில் இறங்கிவிட்டாள். 


சிறிது நேரத்திலேயே வீதியில் எதோ சத்தம் கேட்டது “நோனா….. நோனா….. ஓடியாங்க உங்களோட மகன் என்னோட மகனை போட்டு அடிக்கிறான். தயவு செய்து ஓடியாங்க”. என்கிற சத்தத்தோடு அதே தெருவிலிருக்கும் ரமணி ஓடி வந்துகொண்டிருந்தாள். சத்தம் கேட்டு சமையலறையிலிருந்த பியசீலி வெளியே போய் ரமணியோடு சேர்ந்து ஓடினாள். குமார கொண்டுபோன மலர்தட்டு கீழே விழுந்து பூக்கள் எங்கும் சிதறிப்போய் கிடக்க அவன் ரமணியின் மகனை குப்புறப்போட்டு முதுகில் ஏறியிருந்து மாறி மாறி குதிக்கொண்டிருந்தான். பெரும்பாடு பட்டு அவனை பிரித்தெடுத்த பியசீலி “எதுக்கடா அவனை அடிக்கிறாய்? உனக்கு கோபம் குறைந்து நல்ல புத்தி கொடுக்க தானே பன்சாலைக்கு போ என்று அனுப்பினேன். எதுக்கடா?” என்றபடி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாலும் அது அவனுக்கு வலிக்கவில்லை . 

“அம்மா அவன் அப்பாவை கிண்டல் பண்ணினான்.அப்பா போல தாண்டி தாண்டி நடந்து காட்டினான். அதுக்காக அடிச்சது பிழையா?” என்று சத்தமாகவே கேட்டான் . 


“இல்ல நோனா அவன் நேற்று பந்து விளையாடும்போது உண்மையிலேயே மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதுதான் தாண்டியபடி நடக்கிறான்”. என்று பயந்தபடியே ரமணி சொல்லி முடிக்க. 


“சரி உன்னைப்பார் ஒரே அழுக்கு, இனி பன்சாலை போகவேண்டாம்.” என்றபடி கீழே விழுந்திருந்த தட்டை தூக்கியவள் குமாரவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வரும்போதே தடியை ஊன்றியபடி குணதாச பாதி வழிக்கு வந்து விட்டிருந்தான். “என்ன நடந்தது?” என்கிற அவனது கேள்விக்கு, “எல்லாம் உங்களாலைதான் .” என்றுவிட்டுப் பியசீலி வேகமாக கடந்து சென்றுவிட, தடியை ஊன்றி வேகமாக நடந்ததால் தோள் பட்டைகள் வலியெடுக்க அப்படியே கொஞ்ச நேரம் குனிந்து நின்று ஆறுதல் படுத்திக்கொண்டு மீண்டும் வீட்டிற்குதிரும்பியிருந்தான். வீட்டுக்குள் நுழையும்போதே பியசீலிக்கும் குமாரவுக்கும் நடந்த கோபமான உரையாடல் அவன் காதில் விழுந்தது. 

“அம்மா நீ சொல்வது போல அவர்கள் ஒன்றும் நல்லவர்களில்லை. அவன் வேணுமெண்டே அப்பாவை கிண்டலடித்தான்..” 


“இல்லை மகனே அவர்கள் நல்லவர்கள். “எங்களுக்கு நிறைய உதவியிருக்கிறார்கள் ..” 


“இல்லை கெட்டவர்கள்…. அவர்களால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை. அவரை பார் எவ்வளவு சிரமப்படுகிறார்?” 

“அது வேற. இது வேறடா. புரிஞ்சுகொள் ……” 


“இல்லை அவர்கள் எல்லாமே அப்பிடிதான். அவர்களை அடிக்க வேணும். முடிந்தால் கொலை கூட …..” 

“டேய்…… நீ கூட ………?” 

என்று பியசீலி ஆத்திரத்தில் கத்தும் போது உள்ளே வந்து விட்டிருந்த குணதாச “வேண்டாம் நிப்பாட்டு……..” என்று அதை விட சத்தமாக கத்தினான். வேகமாக வீட்டினுள் புகுந்து தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு பின்புறமாக சென்ற குமார சுவரோடு பந்தை அடிக்கத் தொடங்கியிருந்தான். அவனுக்கு கோபம் வரும்போதெல்லாம் தன் கோபத்தை குறைக்க அவன் செய்யும் வேலையது. சுவரில் பந்தை அடித்து அடித்து அது டமாலென வெடித்த பின்புதான் அவன் கோபம் ஆறும்.
பந்து சுவரில் மோதும் சத்தம் கேட்கத் தொடங்கிருந்தது. குணதாச கைத்தடிகளை கீழே போட்டு விட்டு நிலத்தில் அமர்து கொண்டு “என்ன பியசீலி நீ கூட….?” என்று சொல்லும்போதே அவன் கண்கள் கலங்க தொடங்கியிருந்தது. 

“இல்லை இப்போ அவன் வளர்த்துவிட்டான். எல்லாம் தெரிந்துகொள்ளும் வயதும் வந்து விட்டது. இனிமேலும் எல்லாத்தையும் மறைக்க முடியாது. அவனாக தெரிந்து கொண்டால் எங்கள் மீது வெறுப்பு வரும். எனவே சொல்லிதானே ஆகவேணும் ..?”
“சரி சொல்லலாம். கொஞ்ச நாளில பள்ளிக்கூட விடுமுறை வந்துவிடும். நாங்கள் எல்லோரும் ஒரு சுற்றுலா போகலாம். அப்போ நானே பக்குவாமா அவனுக்கு சொல்லுறேன். அதுவரை பொறுமையா இரு”. டமாலென்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது. சரி இன்னொரு பந்து வாங்கவேண்டும் என்றபடி பியசீலி வீட்டின் பின்புறமாக போனாள்.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ 

இதே கிராமத்தில் இதே காணியில் இருந்த சிறிய குடிசையில் தன் தாய் சகோதரியோடு தான்  குணதாச வாழ்ந்தான். தந்தை யாரென்றோ அதைப்பற்றி அறியும் ஆவலோ அவனுக்கு இருந்ததில்லை. நீ வயிற்றில் இருக்கும்போதே, “அப்பா யாரோடோ ஊரை விட்டு ஓடிப்போய் விட்டார்.” என அம்மா சொன்னதை தவிர வேறெந்த தகவலும் அவனுக்கு தெரியாது. தேயிலை பதனிடும் சிறிய தொழிற்சாலை ஒன்றில்தான் அவன் அம்மா வேலை செய்தார். குணதாசவுக்கும் படிப்பில் பெரிய ஆர்வமில்லாததால் எட்டாவது வகுப்போடு நிறுத்திவிட்டு அம்மாவோடு அதே தொழிற்சாலைக்கு வேலைக்கு போக தொடக்கி விட்டிருந்தான். அவன் அக்கா பத்தாவது படித்து விட்டு வீட்டிலிருந்தபோது பன் சாலையில் வணங்க வந்த ஒரு போலிஸ் காரர் அவளைப் பிடித்துப்போய் பெண் கேட்டு வந்து திருமணமும் நடந்து அவர்களோடு அம்மாவும் கண்டி நகருக்கு போய்விட. வாழ்கையில் எந்த இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நாட்களை கடதிக்கொண்டிருந்த குணதாசவுக்கு தேயிலை தொழில்சாலையில் வேகமாக சுற்றிக்கொண்டிருந்த இயந்திரத்தின் பட்டி அறுந்து தோள்பட்டையில் அடிதபோதுதான் வாழ்கையின் முதல் வலி தெரிந்தது . அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போனதும் வலியை குறைப்பதுக்காக மென்மையான வலியோடு ஊசி மருந்தை செலுத்திய தாதி பியசீலியை முதன் முதலாக சந்தித்தான். பின்னர் அவளை சந்திப்பதுக்காகவே வலிக்கான வழியை தேடி கண்டுபிடித்து வைத்திய சாலையின் வாடிக்கையாளன் ஆனான். 

தினமொரு வலியோடு தன்னை சந்திக்கவே வழி தேடி வருவதாக பியசீலி உணர்ந்துகொண்ட தருணத்தில் அவளுக்கும் அவனை பிடித்துப்போய் விடவே, “அடிக்கடி அடிபட்டு வராதே அன்பே. அன்போடு நானே உனை தேடி வருகிறேன். அப்பாவை வந்து பார்.” என்று அவள் சொல்லி விட்டாள். அவன் அவளின் அப்பாவை தேடிப்போனான். அவரோ, “வேலையென்ன? சம்பளமென்ன? இப்போவெல்லாம் வசதியான பெண்களை வழைத்து போட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கிறதே உங்களுக்கு வேலையாய் போச்சு. போய் முடிந்தால் ஒரு வசதியான வீட்டை கட்டி முடி. அப்போதான் என் மகளை கட்டிக்கொடுக்க முடியுமென்று கறாராக சொல்லி விட்டார்”.
கூரை பிய்ந்து தொங்கிய குடிசையில் குந்தியிருந்து யோசித்தான். தேயிலை கொம்பெனியில் வேலை செய்து கூரை கூட வேயமுடியாது. வீடு எப்பிடி காட்டுறதாம்..? அப்போ தான் வாகனத்தில் வந்தவர்கள் வீசி விட்டு போன விளம்பரத்தை எடுத்தான். ‘எம் தேசத்தை நாமே மீட்க வேண்டும். இருக்கும் இந்த தீவு மட்டுமே எமக்கான இருப்பிடம். நான்கு பக்கமும் கடலால் மட்டுமல்ல எதிரிகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். இது அவசர தேவை. அதிக சம்பளம்.’
படித்து முடித்ததுமே கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி கைகளை மடக்கி மேலே உயர்த்தி தசைகள் புடைக்கிறதா என பார்த்து விட்டு அடுத்த நாளே அந்த விளம்பரதிலுள்ள விலாசத்துக்கு போவதென முடிவெடுத்திருந்தான். அன்றிரவே அவன் கனவில் அந்த இடத்தில் ஒரு மாடி வீடு பிளஸ் மொட்டை மாடியில் பிய சீலியை அணைத்தபடி அவன்……….
000000000000000000000 


இராணுவத்தில் சேர்ந்து விட்டிருந்தவன் பயிற்சிகள் முடிந்ததுமே கட்டாய சேவையாக வடக்குக்கு அனுப்பப் பட்டிருந்தான். புதிதாக சேர்ந்தவர்களின் கடமையே இரவுநேர காவல் நிலைகளில்தான் தொடங்கும். சண்டை தொடக்கி விட்டால் முன்னுக்கு செல்பவர்களும் அவர்கள் தான். மூன்று வருடங்கள் லீவு எடுக்கமால் அவ்வப்போது பியசீலிக்கு மட்டும் கடிதமெழுதி அனுப்பி விட்டு கல்வீட்டை கட்டி காதலியை மனைவியாக்கும் கனவோடு கடமையிலிருந்தானே தவிர நாட்டை பற்றிய கவலையேதுமிருக்கவில்லை. சண்டை தொடங்கி விட்டாலே எரிச்சலாவிருக்கும். முடிந்தவரை எங்காவது பதுங்கி விடுவான். “சண்டையில் என்ன கிழித்தாய்?” என்று அவன் அதிகாரி கேட்கும் கேள்விக்காக வானத்தை நோக்கி சுட்டு விட்டு துப்பாக்கி ரவை தீர்ந்த கணக்கை காட்டுவான். சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாமென பேச்சு அடிபட்டுகொண்டிருந்த நேரம் தொடர்ச்சியாக விடுமுறையே எடுக்காத அவனுக்கு விடுமுறை கிடைத்தது. நேரடியாக பியசீலியின் வீட்டுக்கு சென்றவன் அவள் தந்தையிடம் “இதோ பொறுப்பான வேலையிலிருக்கிறேன். நல்ல சம்பளம். நாளையே ஒரு இஞ்சினியரை அழைத்துவந்து வீட்டுக்கு பிளான் கீறி அத்திவாரம் போடப்போகிறேன். தனி வீடு அல்ல மாடி வீடு”. என்று வாசலில் நின்றபடி சத்தமாகவே சொன்னான். 


இராணுவ உடையில் துப்பாக்கியோடு வேறு வந்திருக்கிறான். இதுக்கு மேலையும் முடியாது என்று சொன்னால் சுட்டாலும் சுட்டு விடுவான் என்கிற பயத்தில் உடனே அவர் ‘சரி’ சொல்லிவிட, எளிமையாக அவர்களின் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. வீடு கட்டும் வேலைகளும் ஆரம்பித்து விட்டதால் அவன் பியசீலி வீட்டிலேயே தங்கியிருந்தான். ஒரு மாத லீவு ஓடித் தீர்ந்துவிட அவளை வங்கிக்கு அழைத்துப்போய் அவள் பெயரை தன் கணக்கில் இணைத்தவன், “பணத்தை எடுத்து வீட்டு வேலைகளை கவனித்துக் கொள். அடுத்த விடுமுறைக்கு வரும்போது புது வீட்டுக்கு குடி போய் விடலாமென்றவன்.”, புதிய காதல் மனைவியை கண்ணீரோடு விடை பெற்றான். அப்போ சமாதான காலமென்பதால் அவனுக்கு அடிக்கடி விடுமுறை கிடைத்தது. கீழ் தளம் மட்டுமே கட்டி முடிக்கப்படிருந்த வீட்டுக்குள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை போய்க்கொண்டிருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற கவலை மனதுக்குள் புகுந்து கொள்ளத் தொடங்கியிருந்தது .
அங்கங்கே சிறு மோதல்களும் நடந்து பேச்சு வார்த்தை குழம்பி மீண்டுமொரு யுத்தம் தொடங்குவதுக்கான அறிகுறிகள் தோன்றியிருந்ததால் விடுமுறையில் போயிருக்கும் இராணுவத்தினர் அனைவரையும் உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அறிவித்தல்களும் வெளியாகியிருந்தது. சண்டை தொடங்கி விட்டால் இனி அடிக்கடி விடுமுறை கிடைக்காது எனவே வைத்தியரை போய் பார்த்து விடலாமென்று உள்ளுரிலிருந்த வைத்தியசாலையில் போய் பரிசோதனை செய்து பார்த்தார்கள். குறைபாடு குணதாசவிடமே என்றதும் அவனுக்கு மடியிலேயே ஒரு குண்டு விழுந்து வெடித்தது போலவிருந்தது. 

“இல்லை இவன் சரியில்லை. கொழும்பு போய் பெரிய வைத்திய சாலையில் பார்க்கலாமென்று” பியசீலி அவனை தேற்றினாள். மீண்டும் ஒரு சிறு நம்பிக்கையோடு கொழும்பு போனார்கள். அந்த வைத்தியசாலை பரிசோதனை முடிவுகளும் குணதாசவை நோக்கியே கையை நீட்டியது. அவன் வாழ்நாளில் நினைவு தெரிந்து முதன் முதலாக அழுதான். முழுதாய் உடைந்து போனவனை பியசீலி அணைத்து அழைத்து வந்தாலும் வீட்டில் மாட்டியிருந்த இராணுவ உடையில் கம்பீரமாக நின்றிருக்கும் அவனது படம் அவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பது போலவேயிருந்தது. கண்ணை மூடும் போதெல்லாம் பியசீலியின் தந்தை, “நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ? உனக்கெதுக்கு ராணுவ உடுப்பு? கையில துப்பாக்கி தூ ………” என்று துப்புவது போலவேயிருந்தது. ஒரு நாள் முழுதும் துவண்டுபோய் வீட்டிலேயே படுத்திருந்தவனுக்கு பியசீலியின் நிலையை யோசித்தான். பாவம் என்னை நம்பி வந்தவள், அவளை சமாதானப் படுத்த வேண்டும்என்பதுக்காக, “சரி விடு. எல்லாம் புத்தபகவான் பார்த்துக்கொள்ளுவார். மருத்துவத்தால் மாற்ற முடியாததையும் அவர் மாற்றுவார்.” என்று தேற்றியவன், மறு நாளே சில வேலைகளை திட்டமிட்டு செய்யத் தொடங்கியிருந்தான். வீடு மேல் தளம் கட்டுவதை இப்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் பெயரில் ஆயுள் காப்புறுதி செய்துவிட்டு அன்றே வேலைக்கு திரும்பி விட்டிருந்தான். 


சில நாட்களிலேயே யுத்தமும் தொடக்கி விட்டிருக்க அவனை மன்னார் தளத்துக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். இராணுவம் மன்னாரிலிருந்தே களமுனையை திறந்து விட்டிருந்தது. இந்தச் சண்டையில் எப்படியும் செத்துப்போய் விடவேண்டும் அப்போதான் அவளுக்கு காப்புறுதி பணம் கிடைக்கும். வேறு யாரையாவது திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்பது மட்டுமே அவனது நோக்கம். இதுவரை காலமும் பதுங்கியிருந்து வானத்தை நோக்கி சுட்டவன் இப்போ முன்னுக்கு வந்து மூர்க்கமாகக் களமாடத்தொடங்கியிருந்தான். அவனது திறமையை பார்த்த அதிகாரியே அசந்துபோய் ஊடுருவி தாக்கும் சிறிய குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்திருந்தார். இராணுவம் மடுவைத் தாண்டி பல குறுக்கு பாதைகளாலும் கிளிநொச்சியை அண்மித்துக்கொண்டிருந்தது. அவனும் யுத்த களத்தில் திறமையால் குவித்த வெற்றிகளை பாராட்டி குறுகிய காலத்திலேயே ஒரு படையணியை வழிநடத்தும் அதிகாரியாகி விட்டிருந்தான். பியசீலிக்கு அவ்வப்போது குறுஞ் செய்தி அனுப்புவதோடு அவனுக்கு கிடைத்த பாராட்டுக்களும் பதவிகளாலும் ‘நான் வீரமான ஒரு ஆண்மகன். எனக்கு எந்தக்குறையுமில்லை.’ என நம்பத் தொடங்கியிருந்தான்.
கிளிநொச்சியின் பாரிய மண் அணையை உடைத்து உள்ளே புகுந்த அணியில் அவனது அணியும் முக்கியமானது. பொது மக்களை சரணடையும்படி அறிவித்தல் கொடுத்ததுமே எங்காவது ஒரு வழி கிடைக்காதா என காயங்களோடும் பசியோடும் ஏங்கயிருந்த மக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கியிருந்தார்கள். இராணுவத்தினர் ஆண்களை, பெண்களை, வயதானவர்களை, காயமடைந்தவர்களை எனத் தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். 

நடைப்பிணங்களாக நகர்ந்து கொண்டிருந்தவரிசையில் ஒரு சலசலப்பு. அவன் என்னவென்று விசாரித்தான். யாரோ ஒரு இளம்குடும்பம் பெண் நிறைமாத கர்ப்பிணியாம். கணவன் அவளை தனியாக விடமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அனைத்தையும் கவனிதுக்கொண்டிருந்தவன் நேராகப்போய் அடம்பிடிதுக்கொண்டிருந்தவனை எட்டி உடைத்து விட்டு இழுத்துக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான். “ஐயா பெறு மாசம் ஐயா. இண்டைக்கோ நாளைக்கோ பிறந்திடும். அவள் வேற நோஞ்சான இருக்கிறாள். நான் பக்கத்திலை பாத்துக்கொள்ளுறேன். விடுங்கோ ஐயா.” எண்டு புலம்பியபடியே இருந்தவனை இராணுவத்தினர் தள்ளிக்கொண்டு போனார்கள்.
அவள் மொத்தமாக அழுது கண்ணீர் தீர்ந்திருக்க வேண்டும். வயிற்றைப்பிடித்தபடி பற்களால் உதட்டை கடித்து கண்களை மூடி நின்றிருந்தவளை இராணுவ பெண்ணொருத்தி அழைத்துக்கொண்டு போனாள். இரவானதும் சரணடைவு நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள் வரும்படி அறிவித்தார்கள். இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கிகளின் சத்தம் அன்று கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அவர்களது தலைநகரம் வீழ்ந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் முற்றாக முடித்துவிடுவோம் என்று வெற்றிக்களிப்பில் நிறைந்திருந்த தன் அணியினர்ருக்கு வாழ்த்து சொன்னவன். தற்காலிக தங்குமிடமாகப் பாதி இடிந்தவீடு ஓன்றில் ஓய்வெடுக்க சென்றிருந்தான். ஜெனறேற்றரில் ஒரேயொரு பல்ப்புமட்டும் மெல்லிய வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. லேசாகக் கண்ணயர்த்து போகும் நேரம் மீண்டும் சலசலப்பு. வேகமாக வந்த ஒருவன் சலூட் அடித்துவிட்டு, “சேர் .. சரணடைந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப்போகிறது. வலியில் கத்துகிறாள் என்ன செய்யலாம்? ” என்றான்.
பல நாட்களுக்கு பின்னர் கழற்றி மாட்டியிருந்த சட்டையை போட்டுக்கொண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு போனவன் வலியில் துடிதுக்கொண்டிருந்தவளைப் பார்த்தான். அவன் அடித்து விரட்டியவனின் மனைவியேதான். “ராணுவ மருத்துவருக்கு தகவல் கொடுங்கள். அவளை என் தங்குமிடத்துக்குத் தூக்கிவாருங்கள்.” என்று கட்டளையிட்டு விட்டு மீண்டும் இருப்பிடம் திரும்பி விட்டான். 

அவளைக் கொண்டுவந்து நிலத்தில் கிடத்தி விட்டிருந்தார்கள். வைத்தியர் வந்து சேரும்போது வலியில் முனகிக்கொண்டிருந்தவள் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள். வைத்தியர் வந்ததுமே அவள் நாடித்துடிப்பை தொட்டுப்பார்த்து விட்டு வேகமாக இயங்கத் தொடங்கினார். குளுக்கோஸ் பையை எடுத்து ஒரு தடியில் கட்டி ஊசியை குழாயில் இணைத்து அவள் கையில் நரம்பை தேடிப்பிடித்து ஏற்றி விட்டு. சிறு பிளேட்டை எடுத்து அவளின் அடி வயிற்ரைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தவர், அதே பிளேட்டால் தொப்பிள் கொடியை வெட்டி விட்டு தண்ணீர் வேணுமென்றதும் குணதாசவே வாளியில் தண்ணீரை கொண்டு வந்து வைத்தான். அதில் குழந்தைதையை அமிழ்த்தி கழுவத்தொடங்கியதுமே அழத் தொடங்கியிருந்தது. “குழந்தைக்கு பால் கொடுக்க உடனே ஏற்பாடு செய்யுங்கள்” என்று வைத்தியர் சொன்னதுமே, காவலுக்கு நின்ற ஒருவனை அழைத்து, “கைதானவர்களில் பால் கொடுக்கக் கூடிய தாய் யாராவதிருந்தால் உடனே வேகமாக அழைத்து வா..” என்று கட்டளையிட்டான். சில நாட்களுக்கு முன்னர் பிறந்த கைக்குழந்தையோடு ஒரு தாயை அவன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவன் சைகை செய்ததுமே ஒருவன் அவளிடமிருந்த குழந்தையை வாங்கிக்கொள்ள அழுதுகொண்டிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்ததும் அங்கிருந்து ஓரமாக அவள் சென்றுவிட குழந்தையின் அழுகை சத்தம் நின்று போய் விட்டிருந்தது. 


தன் கடமைகளை முடித்த வைத்தியர் அவனிடம் வந்து, “தையல் போட்டிருக்கிறேன். நிறைய இரத்தம் வெளியேறியிருக்கிறது. ஏற்கனவே அந்தப்பெண் பலவீனமாக இருக்கிறாள். உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் உயிருக்கு ஆபத்து. வசதியுள்ள பெரிய வைத்திய சாலைக்கு எடுத்துப்போங்கள்.” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் சல்யூட் அடித்து விட்டு விடை பெற்றுக்கொண்டான்.
வைத்தியர் போனதும் சுற்று முற்றும் பார்த்தான். மங்கலான வெளிச்சத்தில் காவலுக்கு நின்றவர்களும் குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண்ணும் சிறிது தூரத்திலேயே நிற்பது தெரிந்தது. அறைக்கு திரும்பி அசைவற்றுக்கிடந்த அவளையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் வெளியே பார்த்தான். அருகாக யாருமில்லை. கதவை மெதுவாக சாத்தி விட்டு இடுப்பிலிருந்த சிறிய கத்தியை எடுத்து அவளின் அடி வயிற்றின் கீழே செருகி மேல் பக்கமாக இழுத்தான். அப்போதுதான் போடப்பட்டிருந்த தையல்கள் கத்திக்கு வழி விட்டு இலகுவாக ஒவ்வொன்றாக அறுத்துக்கொண்டு சில அங்குலங்கள் அதையும் தாண்டி வந்து நின்றது. கத்தியை இழுத்தெடுத்து குளுக்கோஸ் குழாயை அறுத்தவன், அதிலிருந்து வழிந்த குளுக்கோசில் கழுவி மீண்டும் இடுப்பில் செருகி விட்டு குனிந்து பார்த்தான். அவள் அவனை வெறித்துப் பார்த்தபடியே உடல் ஒரு தடவை அசைந்தது. எதோ சொல்ல முயற்சித்தது போலவிருந்தது. கழுதுப்பக்கத்தில் விரல்களை வைத்துப் பார்த்தான். நாடித் துடிப்பு அடங்கிப்போயிருந்தது . 


வெளியே வந்து லேசாக விசிலடித்ததும் ஓடி வந்த பாது காவலனிடம், ‘அவள் இறந்து விட்டாள். கொண்டு போய் புதைத்துவிடு.’ என்று சைகையிலேயே சொன்னதும், இயந்திரம் போல இயங்கிய பாதுகாவலன் இறந்தவளின் உடலை அவள் கிடத்தியிருந்த துணியிலேயே சுருட்டி தோளில் சுமந்தபடி இருளில் மறையத் தொடங்கியிருந்தான். அவளுடலில் வழிவதற்கு இரத்தம் இருந்திருக்கவில்லை. 

வெளியே பாலுட்டி முடித்திருந்தவளிடம் அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டுபோய் உள்ளே படுக்கசொன்னதும் அவள் குழந்தைகளோடு உள்ளே நுழைந்து இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி நித்திரையாகிப்போனாள். அரையிருளில் அறுந்துபோன குளுக்கோஸ் குழாயிலிருந்து இன்னமும் துளிகள் விழுந்துகொண்டிருந்தது.
0000000000000000000000000 


நீண்ட நாளின் பின் குணதாச தொலைபேசியில் பிய சீலியை அழைத்ததும் அதிகாலை நேரம் பயத்தில் பரபரத்து, “உங்களுக்கு ஒன்றுமில்லையே…….? என்றவளிடம் , “இல்லை காலை விடிந்ததும் ஒரு வண்டியை பிடித்துக்கொண்டு கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டு வவுனியா வந்துவிடு. இராணுவ அலுவலகத்துக்கு போக வேண்டாம். ரயில் நிலைய பக்கமாக வந்துவிடு. அங்கேயே காத்திரு. நான் வந்துவிடுகிறேன்.” என்று விட்டு தொலை பேசியை துண்டித்து விட்டான் .
நடந்த முழு உண்மையையையும் பியசீலியிடம் சொல்ல முடியாது. எனவே அவளுக்கு சொல்வதுக்ககவே ஒரு கதையை தயார் செய்ய வேண்டியிருந்தது .யோசித்தான். கதை இதுதான் : 

‘பயங்கரவாதிகளிடமிருந்து அப்பாவி பொது மக்களை மீட்டுக்கொண்டிருந்தோம். அப்போ ஒரு கர்ப்பிணி பெண்ணும் கணவனோடு ஓடி வந்துகொண்டிருந்தாள். அப்போ பயங்கரவாதிகளின் சூடு பட்டு கணவன் இறந்து போய் விடக் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணை மட்டும் என்னால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அன்றிரவே குழந்தை பிறந்துவிட பலவீனமாக இருந்த அந்தப்பெண் இறந்து விட்டாள். எவ்வளவோ முயன்றும் என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. புத்த பிரானே எமக்காக இந்த குழந்தையை என் கையில் கொடுத்ததாக நினைத்தேன். இனி இவன் எங்கள் குழந்தை……” இதை பலமுறை அவன் சொல்லிப் பார்த்துக்கொண்டான். 


அதிகாலையே எழுந்தவன் நித்திரையிலிருந்த பெண்ணிடம், “உன் குழந்தையை கொண்டுபோய் முகாமில் உன் உறவினர் அல்லது தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு வா.” என்றவன் பழைய துணியால் சுற்றியபடி நித்திரையிலிருந்த குழந்தையை தன்னுடைய இராணுவ சீருடை ஒன்றில் சுற்றி கையில் எடுத்து பார்த்தபடியே நிற்றிருக்கும்போதே அவள் வந்து விட்டிருந்தாள். குழந்தையை அவள் கையில் கொடுத்து ஜீப்பில் ஏற சொன்னவன், வண்டியை இயக்கியதும் அது ஏ 9 பாதையால் ஓடத் தொடங்கியிருந்தது. வழி நெடுகலும் அங்காங்கு இருந்த இராணுவ தடை கம்பங்கள் எல்லாமே அவனின் அடையாளத்தை உறுதி செய்து வழி விட்டுக்கொண்டிருந்தது. வவுனியா இரயில் நிலையத்துக்கு அருகில் வந்தவன் தொலைபேசியில் பியசீலியை தொடர்பு கொண்டதுமே, அருகிலிருந்த ஒரு வாகனத்திலிருந்து இறங்கி சுற்று முற்றும் பார்த்து விட்டு, வண்டியிலிருந்தவளிடம் குழந்தையை வாங்கும்போதே அது வீரிட்டு அழத் தொடங்கியிருந்தது. கொஞ்சம் பலவந்தமாகவே குழந்தையை பிரித்தெடுக்கும் போது அவள் உதடுகளை கடித்து கண்களை மூடிய படியே பேசாமலிருந்தாள். பியசீலியின் கைகளில் குழந்தையை கொடுத்தவன், பியசீலிக்காக சொல்வதுக்கு தாயார் செய்து வைத்திருந்த கதையை வேகமாக சொல்லி முடித்துவிட்டு , 


“நீ ஊருக்கு போக வேண்டாம். அமாவிடம் விபரம் சொல்லியுள்ளேன். நேராக அவர்கள் வீட்டுக்கு போ. போகிற வழியில் குழந்தைக்கு வேண்டிய பால்மா, பால் போச்சி வாங்கி கொள்.” என்றவனிடம் குழந்தைக்கு என்ன பெயர் என்ற பியசீலியின் கேள்விக்கு, “குமார………..” என்று விட்டு ஜீப்பில் போய் ஏறிக்கொண்டான். 

மீண்டும் கிளிநொச்சி சென்றுகொண்டிருந்த வாகனத்தை யாருமற்ற காட்டுப் பகுதியில் நிறுத்தி அவளை கீழே இறங்கசொன்னவன் துப்பாக்கியை அவள் தலையில் வைத்தான். எந்த அசைவுமற்று நின்றவளிடம் “உனக்கு சாக பயமில்லையா?” என்றதும் அவளது உதடுகள் லேசாய் விரிந்தது. அதை சிரிப்பென்று அவன் எடுத்துக்கொண்டான். “என்ன பெயர்?” என்று அவளிடமிருந்து வந்த உணர்வுகளற்ற குரலுக்கு. “என்பெயரா….?” என்று கோபமாய் கேட்டான். 

“இல்ல… உன் பெண்சாதி பெயர் ..” கம்பீரமாய் துப்பாக்கியை நீட்டியபடி நின்றிருந்தவன் கொஞ்சம் தடுமாறி, 

“எதுக்கு….? என்றான். 

“அந்தக் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கொள்ள சொல்.” என்றதும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் செருகிவிட்டு, “சரி வந்து ஜீப்பில் ஏறு.” என்றான்.அவள் ஏறி அமர்ந்ததும் ஜீப் நகரத்தொடங்கியது.
இருவரிடமும் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகளை வீணாக்க இருவருமே விரும்பவில்லை. ஜீப் மீண்டும் கிளிநொச்சி முகாமுக்குள் நுழைந்ததும் அவளை இறங்கி போகசொன்னவன்,
“உன் விசாரணைகளை விரைவாக முடித்து விடுதலை செய்ய சொல்கிறேன். நீ போகலாம்.” என்றதும் தன் பிள்ளை இருக்கும் இடத்துக்கு வேகமாக போய் கொண்டிருந்தவளிடம், 

“கொஞ்சம் நில்லு.” என்றவன், அருகில் போய்,
“அவள் பெயர் பியசீலி…… குழந்தையை பத்திரமா பார்த்துக்கொள்வாள். இதை பற்றி நீ யாரிடமும் சொல்லக்கூடாது. போ என்றான்.”
எபோதாவது செத்து தொலைந்து விட வேண்டும் என்பதுக்காகவே முன்னரங்கில் மூர்க்கமாக படை நடத்தி வெற்றிகளை குவிதுக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் நகரத் தொடங்கியிருந்தான். ஒரு துப்பாக்கி ரவை கூட உரசிப் பார்க்கமேலேயே வாழ்க்கை வெறுத்துப்போயிருந்த காலங்கள் கடந்து போய் விட்டிருந்தது. இனி வாழ்ந்து விட வேண்டுமென முடிவெடுத்திருந்த அன்றிரவே அவனுக்கு பக்கத்தில் விழுந்து வெடித்த குண்டுச் சத்தத்தில் எழுந்த வலியோடு மயங்கிப் போயிருந்தான். ராணுவ வைத்திய சாலையில் கண்விழித்த போது, ஒற்றை காலடியில் குழந்தையோடு பியசீலி நின்றிருந்தாள். வலப்பக்கமாக பெரும் வலி. வலக்கால் பக்கமாக தொடைக்குக் கீழே வெள்ளை போர்வை மட்டுமே தெரிந்தது. ஆனாலும் விரல்கள் இருக்குமென்கிற நம்பிக்கையோடு அசைத்துப் பார்த்தான். முறிந்த பல்லியின் வால் போல அவனது தொடை மட்டும் கொஞ்சம் அசைந்தது. என்ன நடந்ததென ஞாபகங்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்றாக கோர்த்து பார்க்க முயன்றதில் குண்டு வெடித்தது வரை மட்டுமே ஞாபகத்தில் வந்தது. அறுந்து போயிருந்த நினைவு மீண்டும் ஓட்ட வைத்ததில் ஒற்றைக் கால் இல்லாதவனாகப் படுக்கையில். அதுக்கு மேல் அவனால் நினைவுகளை மீட்க முடியவில்லை. பியசீலி குழந்தையை அவனருகில் கிடத்தியதும், அது இரண்டு கால்களையும் அடித்து எதோ சத்தம் போட்டபோது அவன் ஒற்றைக் கால்வலியை மறந்து போனான். 


காயம் ஆறும்வரை சில மாதங்கள் வைத்திய சாலையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் வெளியே வீதியெங்கும் பட்டாசு சத்தம். காவலரணில் நின்றிருந்த இராணுவத்தினரும் வானத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். வைத்திய சாலை ஊழியர்களும் மகிழ்ச்சியோடு ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடி முடித்த மறுநாள் வைத்திய சாலைக்கு வந்திருந்த ராணுவ அதிகாரி காயமடைந்திருந்த அனைத்து வீரர்களின் வாயிலும் ‘பயங்கர வாதத்தை வென்று அரக்கனை கொன்று விட்டோம்.’ என்ற படியே பால்ச்சோற்றை ஊட்டி விட்டுச் சென்று விட்டார். 


காயம் ஆறிப்போனதும் வீடு திரும்பியிருந்தவனுக்கு காயமடைந்த இராணுவத்தினருக்கு கொடுக்கும் ஊக்கதொகையும் வேறு தொழில் தொடங்குவதுக்காக கைத்தொலைபேசி திருத்தும் பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டது. கிடைத்த தொகையில் வீட்டுக்கு முன்னாலேயே சிறிய தொலைபேசி திருத்தும் கடை ஒன்றை போட்டுக் கொண்டவனுக்கு ஒய்வுதியமும் கிடைதுக்கொண்டிருந்ததால் வாழ்க்கை சுமுகமாகப் போய்கொண்டிருந்தது. நாட்கள் செல்ல நடந்த சம்பவங்களும் நினைவிலிருந்து விலகிப்போய் இன்றுவரை நிம்மதியாகவே இருந்தான். இன்றைய சம்பவம் மீண்டும் அவனை பழைய நினைவுகளுக்கு இழுத்துக்கொண்டு செல்லவே, அடுத்த லீவுக்குக் குடும்பமாக கிளிநொச்சிக்குச் சுற்றுலாபோய் பியசீலிக்கு அவன் சொல்லி வைத்திருந்த அதே கதையை அங்குவைத்து நம்பும் படியாக குமாரவுக்கு சொல்லிவிடுவதென முடிவெடுத்திருந்தான்.
0000000000000000000000000000 


வாகனம் கிளிநொச்சி நகரை அண்டியிருந்தது. குணதாசவுக்கும் பியசீலிக்கும் நடுவில் கையில் பந்தை வைத்து உருட்டியபடியே குமார வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குணதாசவோ இறுகிய முகத்தோடு பல வருடங்களுக்கு பின்னர் ஒரு இடத்தைக்காட்டி “இதோ……. இங்குதான் நீ கிடைத்தாய்.” என மீண்டும் சொல்லப்போகும் அந்த கதையையே மனதுக்குள் திரும்ப சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
கிளிநொச்சி சந்தியில் சனக்கூட்டமாகவும் சத்தமாகவும் இருக்க, சந்தியில் இருந்த உணவகத்தில் ஏதாவது சாப்பிடலாமென நினைத்து வண்டியை நிறுத்துமாறு சொல்லிவிட்டுத் தன் கைதடியைகளை எடுத்துக்கொண்டு இறங்கிய போது, வீதியின் மறுபக்கம் சனக்கூட்டமாக இருந்தது. “அங்கே என்ன நடக்கிறது?” என்று ஒருவரை கேட்டதும் , “ஒ……… அதுவா? காணமல் போனவர்களுக்கான போராட்டம். இதுவே இவங்களுக்கு வேலையா போச்சு.” எண்டு சொன்னபடி போய் விட்டார். குமார வண்டியிலிருந்து இறங்கும்போது கையிலிருந்த பந்து நழுவி வீதியில் குறுக்கே உருண்டோட தொடங்கியதும் அதை பிடிப்பதுக்காக அவன் வீதியில் பாய மறுபக்கமிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஓன்று பிரேக் அடித்து நிக்க, ஓடிப்போன குமார திரும்பவும் மறுபக்கம் வந்து விழுந்திருந்தான். என்ன நடந்தது என எல்லோருமே யோசிக்க முதல் அது நடந்து விட்டிருந்தது. அனைவருமே உறைந்து போய் நின்றிருக்கும் போது குணதாச வீதியில் கிடந்தவனை பார்த்தார். குறுக்கே ஓடிய குமாரவை காப்பாற்ற அவனை தள்ளி விட்டு பேருந்தில் ஒருவர் அடி பட்டு கிடந்திருந்தார். யாரோ போனடித்து விட்டிருக்க அம்புலன்ஸ் அவரை ஏற்றிக்கொண்டு போனதும் அங்கு வந்த போலிசார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து விசாரிக்க தொடங்கியிருந்தார்கள். குறுக்கே போன குணதாச தன் இராணுவ அடையாள அட்டையை காட்டி “என் மகனில் தான் பிழை. அவரை விட்டு விடுங்கள்.” என்றதும் போலிசாரும் “விசாரணைக்கு அழைக்கும்போது வரவேணும்.” என்று அவனை விட்டு விட்டார்கள். 


குமரவை காப்பாற்ற குறுக்கே விழுந்தவன் கையில் வைத்திருந்த எதையோ எறிந்து விட்டதை கவனித்திருந்த குணதாச அதை போய் எடுதுப்பார்த்தான். ஒரு பதாதையில் படம் ஒட்டியிருந்ததது. கீழே சிலவசனங்கள் . அந்த படம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது. அன்றைய இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவனிடம் எதையோ சொல்ல முயற்சி செய்து அப்படியே அடங்கிப்போனவளின் முகம். இன்னும் அவனின் நினைவிலிருந்தது. அங்கிருந்த ஒருவரிடம் “என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டான். “என் மனைவியும் பிள்ளையும் எங்கே……”? என்று எழுதியிருக்கு என்று சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அந்த படத்தை தனியாக பிரித்தெடுத்து சட்டைபைக்குள் மறைத்து வைத்துக்கொண்டான் . 

உணவகத்தில் சாப்பிட அமர்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியவில்லை. பியசீலியும் குமாரவும் கூட சரியாக சாப்பிடவில்லை. அரை குறையாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்திருந்தவர்கள் வண்டியில் ஏறியதும் “திரும்பவும் ஊருக்கே போ………” என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட எதுவும் புரியாமல் அவனும் வந்த வழியே வண்டியை செலுத்த தொடங்கியிருந்தான். குணதாச மடியிலேயே தலை வைத்து படுத்திருந்த குமார,
“அப்பா……. எல்லாம் என்னால தானே…? அவருக்கு ஒண்டும் ஆகியிருக்காதே..?” என்றான். இல்லை ஒண்டும் ஆகியிருக்காது. அவர்களும் நல்லவர்கள் தான்”. என்று சட்டையை தடவிப் பார்த்துக் கொண்டான் குணதாச. ஊரை அடைந்திருந்தபோது இரவாகி விட்டிருந்தது. நீண்ட நேர மௌனத்தை உடைத்தவன், “இன்றைக்கு கொஞ்சம் குடிக்கவேண்டும்.” என்று பியசீலியிடம் மெதுவாக அனுமதி கேட்டான். அவளும் எதுவும் சொல்லவில்லை. வாகனம் சாராய கடையை அண்மித்தபோது றைவரின் தோளில்த் தட்டிப் பணத்தைக் கொடுத்தான். வண்டியை நிறுத்தியவன் ஓடிப்போய் வாங்கி வந்து அவனிடம் கொடுத்து விட்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டான். இரவு பியசீலி அறைக்குள் போய் படுத்துவிட, அவன் குடிப்பதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்த குமாரவை “வா…” என்று அழைத்தவன், அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டு, அப்பா இப்போ உனக்கொரு கதை சொல்லப் போகிறேன்.” என்று சொல்லத் தொடங்கியிருந்தான்
000000000000000000000 

மறுநாள் காலை வழமையை விட தாமதமதமாக எழும்பிய குமார குணதாசவை பார்த்தபோது அவன் மூலையில் சிறிய கண்ணாடி கூண்டிலிருந்த புத்தர்சிலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதில் புதிதாக பிடுங்கி வைக்கப்பட்டிருந்த நந்தியாவட்டை பூக்கள் நிரம்பியிருந்தது. அருகில் ஒரு பெண்ணின் படம். ” குமார முகம் கழுவி விட்டு வா. தேநீர் தயார் செய்கிறேன்.” என்கிற பியசீலி சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் பந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக சென்றிருந்தான். பந்து சுவரில்மோதும் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. குணதாச பியசீலியை திரும்பிப் பார்த்தான். அவள் முகட்டை வெறித்துப்பார்த்தபடி சுவரில் சாய்ந்திருந்தாள். குணதாச நினைவு தெரிந்து வாழ்கையில் இரண்டாவது தடவையாக அழ ஆரம்பித்திருந்தான். டமால் என்று பந்து வெடிக்கும் சத்தம் கேட்டது .

Article 0

$
0
0

‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி  

நடு இணைய சஞ்சிகைக்காக ....
%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%
 
வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது  தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ளலாமல் காலை வணக்கம் சொல்லியபடி  படிவத்தையும் பணத்தையும் என் அடையாளஅட்டையையும் நீட்டினேன்.  நீண்ட முக்கில் கண்ணாடி போட்டிருந்த பெண் அதை வாங்கி  சரிபார்த்தபடி, 

“நீங்கள் மொறோக்கரா ? என்றாள். 

“இல்லை…ஏன் ?” 

“மொறோக்கோவுக்குப் பணம் அனுப்புகிறீர்கள், அதான் கேட்டேன்.” 

“மொறோக்கர் தான் மொறோக்கோவுக்கு பணம் அனுப்பலாம் என்கிற புதுசட்டம் ஏதும் வந்திருக்கிறதா… ? நான் பல தடவை அனுப்பியிருகிறேனே?”  என்று கொஞ்சம் எரிச்சலாகவே கேட்டேன். 

“அப்படி எல்லாமில்லை. சும்மாதான் உங்களை பார்த்தால் மொறோக்கர் போல தெரியவில்லை. அதான் கேட்டேன்.” என்றபடி, பணத்தை வாங்கி கணணியில் விபரங்களை பதிவு செய்து  ஒரு படிவத்தை கையில் தரும்போது,
“என்னுடைய மூதாதையர்கள் மொறோக்கர்கர்கள். அதுதான் கேட்டேன். வேறொன்றும் தவறாக நினைக்க வேண்டாம்.” என்றபடி நீட்டினாள். 

“ஓ………  சரி மன்னிக்கவும். எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. அந்த பதட்டம், நன்றி.”
என்றபடி அதை வாங்கி அங்கேயே மேசையில் வைத்து கைத்தொலைபேசியில் படமெடுத்து மொறோக்கோ இலக்கத்துக்கு அனுப்பிவிட்டு, வேகமாகப்  போய் வாசலில் கிடந்த பத்திரிகை கடிதங்களை பொறுக்கியபடி கடையை திறந்து, கோப்பி மெசினை இயக்கிவிட்டு பத்திரிகையை தலைப்புக்களை மட்டும் மேலோட்டமாக  பார்த்தேன். 

ஓய்வுதிய வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராகத்  தொடரும் போராட்டம். ஈரான் அமெரிக்க  முறுகல் வலுக்கிறது.  எரித்துக்கொல்லப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுப்பிரிவு எச்சரிக்கை. அவுஸ்திரேலியா தீ விபத்து, பல இலச்சம் விலங்குகள் உயிரிழப்பு என்று தொடர்ந்தது. 

“ச்சே……  வருசக்கடைசியானா ஒரே  இழவுச்  செய்தி. இந்த வருசம் விமான விபத்து, சுனாமி இரண்டும் தான் நடக்கேல்ல”. என்றபடி பத்திரிகையை ஏறிந்து விட்டு கோப்பியை உறுஞ்சியபடி அவளின் இலக்கத்துக்கு போனடிதேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. மீண்டும் சில தடவை முயற்சி பண்ணிப்  பார்த்து விட்டுப்   “பணம் அனுப்பி விட்டேன்.அதன் விபரமும் போட்டோ எடுத்து அனுப்பி விட்டேன்”. என்று செய்தி வைத்து விட்டுக் கதிரை மேசைகளைத் துடைத்து ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தேன்.
‘இருவர் உள்ளே நுழைந்தார்கள். மேசை கதிரை அடுக்க முதலே காலங் காத்தாலையே குடிக்க வந்திட்டாங்கள்’.  என்று நினைக்கும்போதே முன்னால் வந்து நின்ற இருவரும், சட்டென்று அடையாள அட்டையை தூக்கி காட்டி, 

“டளிடாவை உனக்கு எப்படி தெரியும் ?” என்றார்கள். 

இரகசிய பொலிசாரின் திடீர் கேள்வியில் கொஞ்சம் தடுமாறிப் போனாலும் சமாளித்துக்கொண்டு, 

“தெரியும். கடைக்கு அடிகடி வருவாள். அவ்வளவுதான்.” என்றதும், 

“இப்போ சிறிது நேரத்துக்கு முன்னர் நீ அவளுக்கு பல தடவை போனடித்திருக்கிறாய். பணம் அனுப்பியதாக செய்தி வைத்திருக்கிறாய். என்ன பணம்? யாருக்கு அனுப்பினாய்?” 

இந்தக் கேள்வியில் எனக்கு லேசாய் தலைசுற்ற ஆரம்பித்திருந்தது.
“அது அவளின் அம்மாவுக்கு. அவளே அனுப்பச்சொல்லி கொடுத்திருந்தாள். அவ்வப்போது உதவியாக கேட்பாள். நானும் அனுப்புவேன்.” என்று சொன்னபடி, ஓடிப்போய் பணம்அனுப்பிய படிவத்தை  எடுத்துக் காட்டினேன். 

அதை பார்த்தவர்கள். “சரி நீ கடைசியாக எப்போ அவளை பார்த்தாய்?” 

“நேற்று இரவு எட்டு மணியளவில் கடைக்கு வந்து ஊருக்கு அனுப்பச்சொல்லி பணம் கொடுத்து விட்டு போனாள். பின்னர் நான் வேலை முடிந்து போகும்போது பதினோரு மணியளவில் அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்து தலையாட்டி விட்டு போய் விட்டேன்.” 
என்றதும், என் பெயர் விபரங்களை பதிவு செய்தவர்கள். புறப்படும்போது, 

“அவளுக்கு என்ன நடந்தது ? என்றதும், 

“உனக்கு செய்தி பார்க்கும் பழக்கம் உண்டா ?” 

“ஓம்……… ஒவ்வொரு நாளும் பார்ப்பேன்.” 

“அப்போ செய்தியை பார்த்து அறிந்து கொள்.” என்று விட்டு போய் விட்டார்கள்.
நான் அவளுக்கு போனடித்தது இவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரே குழப்பமாக இருந்தது. ஒரு வேளை  அவளைக்  கைதுசெய்து வைதிருக்கிரர்களா?  ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்களா? குழப்பமாக இருந்தது. பாஸ்கலுக்கு போனடித்துக் கேட்கலாமென நினைத்து அவனது இலக்கத்தை அழுத்தினேன்.  அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
“மிகஅவசரம். என்னோடு தொடர்பு கொள்.”  என செய்தி வைத்து விட்டு வேலையை தொடங்கினாலும்  மனம் ஒரு நிலையிலில்லை.
00000000000000000 

அவளை பல வருடங்களாக தெரியும். நான் வழமையாக வேலைக்கு போய் வரும் கடற்கரை வீதில் சிகரெட் புகையை ஊதிக்கொண்டே சுயிங்கத்தை மென்றபடி வியாபர புன்னகையை வீசி நிக்கும் பாலியல் தொழிலாளிகள் எனக்கு பழகிப்போனதொன்று. இரவு பகல், விடுமுறை பண்டிகை என்று எல்லா காலத்திலும் இவர்களை காணலாம். அப்படிதான் நான் வேலை செய்யும் மதுச்சாலைக்கு அருகில் அவளை சந்தித்தேன். அவளும் வழமை போல வாயில் சுயிங்கம், வியாபாரப் புன்னகையோடு என்னை பார்ப்பாள்.
இப்பிடி எவ்வளோ பார்த்திருப்போம் என்று நினைத்தபடியே நானும் கடந்து போய்க் கொண்டிருப்பேன். ஒரு குளிர்கால இரவு, அடை மழை, கடையிலும் யாருமில்லை. வெளியே இருந்த கதிரை மேசைகளை உள்ளே எடுத்து வைக்கப் போயிருந்தபோது, மழைக்காக சுவரோரத்தில் ஒரு பல்லியைப்போல  ஒட்டிக் கொண்டிருந்த  அவளைப் பார்த்ததும், ‘வா……….’ என சைகை செய்தேன். நனைத்த கோழிக் குஞ்சைப்போல ஓடி வந்தாள். உள்ளே வந்தவளுக்கு ஒரு கோப்பியை  போட்டு நீட்டியதும், பர்சை திறக்க போனவளிடம், 

“வேண்டாம் இருந்து ஆறுதலாக குடி”. என்று விட்டுக்  கிளாஸ்களை துடைக்கத் தொடங்கியிருந்தேன். 

‘நன்றி’. சொல்லி விட்டு கோப்பியை உறுஞ்சியபடி,
“நீங்கள் இந்தியாரா…………?” 

“இல்லை.” 

“அப்போ……….  மொரிசியரா?” 

“இல்லை.” 

“அப்போ எந்த நாடு…….. ?” 

“நிச்சயமாக பிரெஞ்சுகாரர் இல்லை. ஆனால், இப்போ பிரெஞ்சு குடியுரிமை”. 

“நாட்டை சொல்ல விருப்பமில்லையா ?” 

“அப்பிடியில்லை. சொல்லி பெருமைப்படவும் அதில் ஒன்றுமில்லை. நான் ஸ்ரீ லங்கன். உன்னைப்பார்தால் மொரோக்கன் போலவிருக்கிறது.  என்ன பெயர்?”

“எப்படிக் கண்டு பிடித்தாய் ?” 

“பெண்களைப் பார்த்தாலே ஓரளவுக்கு நாடு கண்டு பிடித்து விடுவேன். உன் பழுப்பு நிறம். கரும் சுருண்ட முடி. முட்டைக்கண்கள். குறைந்த உயரம். சிறிய  அளவான …” 

“போதும் நிறுத்து. என் பெயர் டளிடா”. 

திடீரென அவளிடம் திரும்பி, 

டளிடவா………..? எனக்கு மிகவும் பிடித்த பாடகியின் பெயர். நீ டளிடாவை அறிந்திருகிறாயா?” 

லேசாக சிரித்தவள்,
“இல்லை ஒரு பாடகி என்று மட்டும் அம்மா சொல்லியிருக்கிறார். நானும் ஒரு பாடகியாக வர நினைத்து அந்த பெயரை வைத்திருக்கலாம்.” 

“அறுபதுகளில் தன் குரலால் உலகை கட்டிப்போட்ட ஒரு பாடகி. எண்பதுகளில் பாரிஸ் நகரில் தனிமையில் காலத்தை கழித்துக் கொண்டிருந்தவள், ஒருநாள் ஒரு கோப்பை விஸ்கியில் விசத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டிருந்தாள். காரணம் இன்றுவரை தெரியவில்லை. அவள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.” 

‘ம்.’என்றவள், பின்னர் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
நான் கிளாஸ்களை துடைத்து அடுக்கி முடிந்ததுமே மழையும் லேசாகி விட்டிருந்தது. அவளும் கோப்பியை குடித்து முடித்திருந்தாள். நான் சாவியை கையிலெடுத்தும், கடையை பூட்டப் போகிறேன் என்று தெரிந்து கொண்டு நன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். எங்களின் முதல் சந்திப்பு அதுதான். அதுக்குப்பின்னர் நான் அவளை கடந்து போகும்போது அவள் வீசும் வியாபார புன்னகை, நட்பு புன்னகையாக மாறியிருந்தது.
0000000000000000000000 

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள். எனக்கு வேலை அதிகம் . தொடங்கும்  நேரம் முடியும் நேரத்துக்கு வரையறை இல்லை.  அவளுக்கும் அதே போலதான். அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாத . எப்போதாவது பார்த்துக்கொள்ளும் போது லேசான தலையாட்டல். கொடுங் குளிர் காலத்தில் கொட்டும் மழை இரவொன்றில்தான் மீண்டும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. 

இப்போ அவள் கைகளில் கோப்பியல்ல, விஸ்கி. என் கைகளில் வழக்கம் போல துடைக்கப்படும் கிளாஸ். 

“உன் பெயரை சொல்லவில்லையே………?” 

“நீ கேட்கவேயில்லையே ………?” 

“சரி சொல்லு.” 

“சாத்திரி.” 

“காலியாணமாச்சா……….?” 

“ம்.  ஒரு மகளும். பெயர் மீரா.” 

திடுக்கிட்டவளைப்போல  விஸ்கி கிளாசை உறிஞ்சிவிட்டு,
“என்ன பெயர் சொன்னாய் ?” 

“மீரா.” 

“என் மகளுக்கு பெயர் மேரா. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?” 

“தெரியுமே…….  உலகம் முழுதும் உள்ள மொழிகளில் அனைத்திலும் உள்ள ஒரேயொரு பெயர். ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்று அர்த்தம். 

விரக்தியாய் சிரித்தவள், கிளாசை  நீட்டினாள்.  அதை பாதி நிரப்பி ஐஸ் கட்டிகளை போட்டு நீட்டியபடியே,
“உனக்கும் கலியாணமாச்சா……?” 

 “ம்……….  ஆச்சு.  ஆனால் ஆகேல்ல.” 

‘இவளென்ன வடிவேலு மாதிரியே…’
என்று நினைத்தாலும் நான் எதுவும் கேட்கவில்லை. கிளாசை முடித்துவிட்டு, ஐம்பது யூரோவை எடுத்து மேசையில் எறிந்து விட்டு போனவளிடம்,
“ஏய்……… மிச்ச காசு.” என்று மிகுதியை நீட்ட..

தலைக்கு மேலால் கையை ஆட்டி வேண்டாமென சைகை செய்துவிட்டுத் தள்ளாடியபடி போய்க்கொண்டிருந்தாள். சரி அடுத்த தடவை வரும்போது கொடுக்கலாமென அதை தனியாக எடுத்து வைத்திருந்தேன்.
அடுத்தடுத்த சந்திப்புக்களில் அதுவும் கொஞ்சம் போதை ஏறும்போதுதான் தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கியிருந்தாள். அப்பா இல்லை. அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவள். 

“திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த குழந்தைக்குத்  திடீரென எதோ காய்ச்சல் வந்தது. வைத்திய சாலையில் கொண்டு போய் காட்டினேன். அதுவரை நன்றாக இருந்த குழந்தை சோர்ந்து போய் எப்போதும் தூங்கிக் கொண்டேயிருக்க தொடங்கியது. எதோ வைரஸ் காச்சல் என்றார்கள். எனக்கு அதன் விபரம் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் பார்வையே போய் விட்டது . அது மட்டுமில்லை மெலிந்து படுத்த படுக்கையாகி விட்டது. என் குடும்பம் பாவம் செய்ததால் சைத்தான் குழந்தையாக பிறந்து விட்டது என்று  கணவன் சில மந்திரவாதிகளிடம் கொண்டு போய்க்  காட்டினான். அவர்களும் ஏதேதோ செய்தார்கள் சரிவரவில்லை. அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டு போய் விட்டான். குழந்தையைமீண்டும் வைத்தியரிடம் கொண்டு போனேன். அவள் வியாதிக்கு எதோ பெயர் சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சத்திர சிகிச்சை செய்தால் மீண்டும் பார்வை வந்து விடும். அதுவும் பல கட்டமாகத்தான் செய்யவேண்டும் என்றபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஆனால் சிகிச்சைக்கு அவர்கள் சொன்ன தொகையை கேட்ட போது தான் வந்த வேகத்திலேயே நம்பிக்கை திரும்பவும் போய் விட்டது. அம்மா தான் தன் கதைகளை சொல்லி எனக்குள் மீண்டும் நம்பிக்கையை வரவளைத்தாள். குழந்தையை அம்மாவிடம்  கொடுத்து விட்டு வேலை தேடி நகரத்துக்கு போன போதுதான் ஒரு முகவர். ‘பிரான்ஸ் போனால் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னதும் அதை நம்பி இங்கு வந்து விட்டேன்.” 

இவை நீங்கள் சுவாரசியமில்லாமல்  படித்து முடித்ததை போலவே அவள் வேகமாக சொல்லி முடித்தது. 

அடுத்து அவள் மெதுவாக அடுத்தடுத்த சந்திப்புக்களில் சொன்னது:
“என் முகவரே கடவுச் சீட்டு எடுத்து ஒரு வாரம் பிரான்சுக்கான சுற்றுலா விசாவில் அழைத்து வந்து ஒரு விடுதியில் தங்க வைத்து விட்டு கடவுச் சீட்டை பிடுங்கி வைத்துக் கொண்டான். ஒரு கிழமை முடிந்ததும் என்னிடம் வந்தவன்,
“இப்போ உனக்கு விசா முடிந்து விட்டது. இனி ஊருக்கு போக வேண்டுமானால் முதலில் ஜெயிலுக்கு போக வேண்டும். அதை விட நான் சொன்னபடி கேட்டால் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. உனக்கும் வேகமாக அதிக பணம் தேவை. எனக்கும் தான். ஏனென்றால் உனக்காக நானும் நிறைய செல்வழித்திருக்கிறேன். உன்கருப்பு முடி , பழுப்புத்  தோல் நிறத்துக்கு இங்கு நல்ல கிராக்கி. இரண்டு பேருமே ஒரு உடன்படிக்கைக்கு வருவோம்.  நீயும் முரண்டு பிடிக்க கூடாது.” என்றான்.
“எனக்கும் அப்போ வேறு வழியிருக்கவில்லை. அவனே வாடிக்கையாளர்களை கூட்டி வருவான்.  நான் அறையை விட்டு எங்கேயும் போகமுடியாது. சாப்பாடு தண்ணி கூட வாடிக்கையாளரைப்போலவே அறைக்கு வந்து சேரும்.  எனக்கும் குடும்பத்துக்குமான தொடர்பு குறைவுதான். எப்போதாவது அவனின் தொலைபேசியில் தொடர்பெடுத்து சில நிமிடங்கள் மட்டுமே பேச தருவான். ஆனாலும் அவனும் நல்லவன்.  வீட்டுக்கு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அதனால் எனக்கும் அவனிடம் நம்பிக்கை வந்து விட்டிருந்தது. அதுக்காகவே நானும் அவன் சொன்னபடியெல்லாம் நடக்கத் தொடங்கியிருந்தேன்.  இப்படியே மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அறைக்கு தேடி வருபவர்கள் குறையத் தொடங்கினார்கள். உலகின் தொழில் நுட்பம் எப்படி வேகமாக மாறி வருகிறதோ அதுபோலவே எங்கள் தொழிலின் நுட்பத்தையும் மாற்றவேண்டியிருந்தது. நான் வீதிக்கு வந்து விட்டேன். இப்போ எனக்கும் கொஞ்சம் நின்மதி. வெளி உலகம். நிறைய மனிதர்களோடு பேசிப் பழகலாம். அதை விட முக்கியம், எல்லா பணத்தையும் அவனிடம் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு இருநூறு யுரோ அவனுக்கு கொடுத்தால் போதும். நான் எவ்வளவு சம்பாதித்தாலும் அது எனக்கே. ஆனால் அறை வாடகை, சாப்பாடு என்செலவு . 

“இப்போதான் நீ வெளியே வந்து விட்டாயே ? பிறகெதுக்கு அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும்?” 

“தெரியாத மாதிரியே கேக்கிறியே………..? இந்த மாதிரி தொழில் நம்பிக்கை மட்டுமே மூலதனம். ஒருவரை ஒருவர் ஏமாத்திறதா சந்தேகம் வந்தாலே அவ்வளவுதான். யாரோ ஒருத்தர் உயிரோடு இல்லை. எனக்கோ  ஊரில் உள்ள குடும்பத்துக்கோ ஏதும் நடந்து விடக்கூடாது என்கிற பயம் தான்.” 

என்று விட்டு, விஸ்கி கிளாசில் கடைசி துளியை அண்ணாந்து நாக்கால் துடைத்து விட்டு,
“கணக்கில் எழுதிக் கொள்.” என்றவள் சிகரெட்டை பற்றவைத்து ஊதியபடியே வழமையான  இடத்தில் போய் நின்று கொண்டாள். 

இப்போது அவள் என் வாடிக்கையாளர். கற்பனையைக்  கண்டபடி ஓட விடவேண்டாம். அதாவது கடைக்கு மட்டும். அப்படியான நாளில் தான்  ‘ஒருஉதவி’ என்று கேட்டிருந்தாள். 

“என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. கொஞ்சம் பணம் அம்மாவின் பெயருக்கு அனுப்பி விட முடியுமா?”
என்றாள். அன்றிலிருந்து இன்றுவரை அது தொடர்கிறது. அது மட்டுமில்லை ஒருநாள் கொஞ்சம் பதட்டமாகவே வந்தவள், இன்னொரு உதவி என்றாள். 

“என்ன சொல்லு.” 

“கொஞ்சம் அதிகமாகவே பணம் அனுப்பவேண்டும். மகளுக்கு கண் சிகிச்சை செய்யப்போகிறார்கள். பணம் அறையில்  இருக்கிறது.  நீ வந்தால் எடுத்து கொடுத்து விடுவேன்.” 

“நீயே கொண்டு வந்து கொடேன்.” 

“இல்லை அது அதிகபணம். எவ்வளவோ சிரமப்பட்டுச் சேகரித்தது. யாராவது பறித்து விட்டால்…….? அது என் மகளின் எதிர்காலம். அதுதான் பயமாக இருக்கிறது.” 

“நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று நினைக்கவில்லை. சரி வேலை முடிந்து போகும் போது வருகிறேன்.” 

வேலை முடிந்து போகும்போது அவள் வழமையாக நிக்குமிடத்தில் பார்த்தேன். நின்றிருந்தாள்.  அவளை காரில் ஏற்றிக்கொண்டு அவள் காட்டிய பாதையில் போய்க்கொண்டிருந்தேன்.அதிக தூரமில்லை. வண்டி பழைய நகரத்துள் நுழைந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தோம். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முந்திய நகரம்.  எனக்கு பழக்கமான நகரம்தான். குறுகிய சாலைகள். எலாப்பக்கமும்  படிகட்டுகளும், பழைய கட்டிடங்களும் மட்டுமே. கோடை காலத்தில் உல்லாச பயணிகளால் நிரம்பி வழியும் தேவதைகளின் நகரம். குளிர் காலத்தில்  குப்பையைக்  கிளற வரும் பெருச்சாளிகளை விட வீதியில் யாரையும் காண முடியாது.  அப்போ அது பேய்களின் நகரம். 

ஒரு பழைய மரக்கதவைத் தள்ளி திறந்தவள், லைட்டைப் போட்டுவிட்டு முதலாம் மாடிக்கு ஏறிப் போய் நின்று விட்டு, “இங்கேயே நில்.” என்றவள் இரண்டாம் மாடிக்குப் போய் அங்கிருந்த ஒரு பூச்சாடியில் கையை வைத்து திறப்பை எடுத்துக் கொண்டு வந்து அறையை திறந்தாள். 

“திறப்பை எதுக்கு பூச் சாடியில் வைத்திருகிறாய்……?” 

“ஒரு தடவை என் கைப் பையை இரண்டு சிறுசுகள் பறித்து விட்டார்கள். கஞ்சாவோ கட்டையோ புகைப்பவர்களா இருக்கலாம். பாவம் அவர்களுக்கு பணத் தேவை. அதிலிருந்த பணம், வீட்டு திறப்பு எல்லாமே பறி போய் விட, நான் வீட்டுக்கு உள்ளேயே போக முடியாமல் இரவு முழுவதும் இந்த படியிலேயே படுத்திருந்து விட்டு அடுத்த நாள் மேல் வீட்டுக் காரரின் உதவியோடு கதவை உடைத்து பூட்டை மாற்றி விட்டேன். அதுக்குப்  பிறகு திறப்பை எங்காவது ஒளித்து வைத்து விட்டு போவேன்.” என்றபடி கதவைத் திறந்து, “உள்ளே வா.” என்றழைத்தாள். 

மிகச் சிறிய அறை. எல்லா வாசனைத்திரவியங்களும் கலந்த ஒரு வாசனை. ஒரேயொரு சோபா மட்டுமே. அதை விரித்து கட்டிலாகவும் பயன்படுத்தலாம். சிறிய அலமாரி. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிக்கு முன்னால் அவளது அலங்காரப் பொருட்கள். கொண்டோம் பாக்கெட்டுகள். அதுக்கடுத்து குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்த டூ இன் வண் அறை. “இரு.” என்றபடி, அவசரமாக சோபாவின் கீழே கிடந்த ஜட்டி ஒன்றை காலால் ஒரு முலையில் தள்ளிவிட்டு,  “
சிறிது நேரத்துக்கு முன்னர் வந்து விட்டுப் போனவன் ஒருவனுடையது. எதோ அவசரத்தில் இதை போட மறந்துவிட்டு போய் விட்டான். சில நேரம் அதை தேடி திரும்பவும் வரலாம்”. என்று சிரித்தவள்,
அறையை பார்த்தாயா? ஏதாவது குடிக்கிறயா? என்று கேட்க மாட்டேன். இங்கு எதுவுமில்லை.” 

இன்னொரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சப்பாத்து பெட்டிகளில் ஒன்றை எடுத்து அதிலிருந்த சப்பாத்து ஒன்றினுள் கையை விட்டு இழுத்தாள். சுருட்டி வைக்கப்பட்டிருந்த யூரோ நோட்டுக்களை என்னிடம் நீட்டியவள்,
“ஏழாயிரம் வரையுள்ளது. முடிந்தளவு விரைவாக அனுப்பிவிடு.” என்றாள். 

‘ஏழாயிரமா………..?’ என மனதில் உள்ளே திடுக்கிட்டாலும் காட்டிக் கொள்ளாமல்.
“பணத்தை எதுக்கு சப்பாத்துக்குள் ஒழித்து வைத்திருக்கிறாய் ?” 

“எனக்கென்ன வங்கி கணக்கா இருக்கு போட்டு வைக்க. அதைவிட வரும் வாடிக்கையாளர்கள்  யாராவது நான் குளியலறைக்குள் போனதும் களவெடுத்துக்கொண்டு ஓடி விடுவார்கள். ஒரு தடவை நடந்திருக்கிறது. அதுக்குப் பின்னர் தான் இப்படி ஒழித்து வைக்கிறேன். ஆனாலும் எப்போதும் ஒரு பயத்தோடு அடிக்கடி சரி பார்த்துக்கொள்வேன். பணத்தை நாளைக்கே அனுப்பி விடுவாயா……..?” 

“அதிகமான பணம் ஒரேயடியாக முடியாது. இரண்டு மூன்று தடவை பிரித்து தான் அனுப்பலாம். உன் அம்மாவின் பெயர் விலாசம், தொலைபேசி இலக்கம் எல்லாம் என்தொலைபேசிக்கு அனுப்பிவிடு.” என்றபடி அவளை மீண்டும் ஏற்றிய இடத்தில் கொண்டுபோய் விட்டு  பணத்தை கடையில் கொண்டுபோய் வைத்து விட்டு போய் விட்டிருந்தேன். 

இப்போநான், அவளின் வங்கியாக மாறி விட்டிருந்தேன். அவ்வப்போது கொண்டு வந்து கொடுக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். கொடுக்கும்போதெல்லாம் ஒரு துண்டில் திகதி தொகை எழுதி அவளுக்கு காட்டி விட்டு தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைத்து விடுவேன். பணம் அனுப்பி இரண்டு வாரம் கழித்து மகிழ்ச்சியாக வந்தவள், பாருக்கு முன்னால் கதிரையை இழுத்துப் போட்டு விட்டு ‘ஒரு விஸ்கி’ என்றாள். 

“என்ன மகிழ்ச்சியாக இருகிறாய் போல…” 

“ஓம்……. மகளுக்கு ஒரு கண்ணில் சிகிச்சை முடிந்து ஓரளவு பார்வை வந்து விட்டதாம். போனில் சொன்னாள். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டுமாம். முடிந்தளவு விரைவில் அடுத்த கண்ணையும் சிகிச்சை செய்யச்சொல்லி வைத்தியர் சொல்லியிருக்கிறாராம். 

விஸ்கியை ஊற்றி கொஞ்சம் கோலா கலந்து நீட்டியபடி, 

“பிறகென்ன மகிழ்ச்சியான செய்தி. அடுத்த கண்ணையும் செய்ய வேண்டியது தானே…….? 

“எனக்கும் ஆசை தான். அதுக்கு இன்னுமொரு பத்தாயிரம் யூரோக்கள் வேணுமே…….? 

“பத்தாயிரமா…….? உன்னிடம் இப்போ வெறும் ஆறுநூறு தானே இருக்கு?”
“ம்…….அதை சேர்க்க இன்னும் மூன்று நாலு வருசம் தேவைப்படும். சரி பார்க்கலாம்.” என்று தொடங்கிய உரையாடலோடு குடித்துக்கொண்டேயிருந்தாள். 

இடையில் கடைக்கு வந்தவனொருவன்,
“அவளிடம் என்ன போகலாமா ?”  என்றதும்.
“நான் இன்று லீவு என்னை குடிக்கவிடு. போடா. என்று திட்டி அனுப்பிவிட, அவனோ என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியேறி விட்டான்.
கடை சாத்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. இப்போ குளிர் காலமென்பதால் அதிக வாடிக்கையாளர்களில்லை. வந்திருந்த மதுப்பிரியர்களும் தள்ளாடியபடி விடை பெற்றார்கள். 

“சரி கடை சாத்த வேண்டும்”. என்றதும், 

நீ வேலை நேரத்தில் குடிக்க மாட்டாய் எனக்குத் தெரியும். ஒரு நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து  நிறைய குடிக்க வேண்டும். சரியா………?” என்றபடி நடக்கத் தொடங்கியிருந்தாள். கடையை சாத்தி விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டிருந்த நேரம் கீல்ஸ் சப்பாத்துக்களைக் கழற்றி கையில் பிடித்தபடி தள்ளாடிய படியே போய்க்கொண்டிருந்தவளிடம்,
“ஏய்…………  வந்து ஏறு. வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.” என்றதும், அதுக்காகவே காத்திருந்தவளைப்போல ஓடி வந்து ஏறிக்கொண்டவள். வீடு வந்ததும், 

வீட்டுக்கு வாயேன். போன தடவை வந்த போது எதுவும் கொடுக்கவில்லை. இப்போ ஒரு ஒரு போத்தல் விஸ்கி உள்ளது. ஒரு கிளாஸ் குடித்து விட்டு போ.” 

“வேண்டாம்……… நீ நிறைய குடித்திருக்கிறாய். போ. இன்னொரு நாளைக்குப்  பார்க்கலாம்.” 

“என்ன……… பயப்பிடுறியா ? நான் ஒண்டும் செய்ய மாட்டேன். வா.” 

ஒரு பெண் ஒருவனைப்பார்த்து பயப்பிடுறியா என்கிற ஒரு வார்த்தையே அவனை உசுப்பி விடும். 

“எனக்கா………..பயமா……..?” என்றபடி அவள் பின்னல் போயிருந்தேன்.

 புதிதாக இருந்த விஸ்கியை எடுத்து என்னிடம் நீட்டி,
“நீயே திற.” என்றபடி இரண்டு பிளாஸ்டிக் கப்புகளை எடுத்து நிலத்தில் வைத்து விட்டு, அவள்  நிலத்திலேயே குந்திவிட சமஅளவில் விஸ்கியை ஊற்றிய போது தான், ‘ஐயையோ  கலக்க எதுவுமே வாங்கவில்லை .மறந்து விட்டேன்’. என்றவளிடம், “பரவாயில்லை.” என்றபடி ‘சியஸ்’ சொல்லி ஒரே மடக்கில் விழுங்கி விட்டேன். 

லேசாய் எரிந்தபடி இதயத்தை ஊடறுத்து இறங்கியது. “இன்னும் கொஞ்சம்……” என்றாள். அடுத்த தடவை எரியவில்லை. “சரி போகிறேன்.” என்று எழுந்தபோது, தட்டுத்தடுமாறி எழுந்தவள் என்னை  இழுத்து இறுக்கி அணைத்துக் கொள்ளத்  தள்ளி விடவும் முடியாமல், அணைக்கவும் முடியாமல் அசையாமல் நின்றிருக்க.

 ஒரு கை என்சட்டைக்குள் நுழைந்து முதுகில் வருடிக் கொடுக்க, உள்ளே போன விஸ்கியும் அவளின் அரவணைப்பும் சூடேறத் தொடங்கியிருந்தது. 

“உனக்கு கட்டிப் பிடிக்கத் தெரியாதா……….. ? “என்று காதருகில் லேசாக கேட்டாள். 

“இல்லை விடு…….. நான் போக வேணும்.” 

அவளின் மறுகை என் பிடரியில் தழுவி தலையை பலவந்தமாக இழுத்து குனிய வைத்து உதட்டில் முத்தமொன்று கொடுத்தபோது, எனக்கு என் மேலேயே சந்தேகம் வரத் தொடங்கியிருந்தது. ‘இதுக்குமேல் போனால் எல்லாமே கட்டுப்பாட்டை இழந்து விடும். ஓடு’ என்று உள் மனது துரத்தியது.
“மனைவி காத்திருப்பாள் போகவேணும்.” என்றபடி கொஞ்சம் பலவந்தமாகவே அவளை விடுவித்துக்கொண்ட போது சோபாவில் அமர்ந்து.
“என்ன பயந்துட்டியா………?” என்றபடி விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

 வேகமாக வெளியே வந்து காரில் ஏறி உள்ளே லைட்டை போட்டு கண்ணாடியில் முகத்தை பார்த்தேன். அவளின் லிப்ஸ்டிக்  உதட்டில் ஓட்டியிருந்ததது. தண்ணீர் போத்தலை எடுத்து முகத்தைக் கழுவித்  துடைத்து விட்டுக் காரில் ஏறினாலும் மீண்டும் வெளியே வந்து சட்டையை கழற்றி நன்றாக உதறிப்போட்டுக் கொண்டேன். 

ஏனென்றால் சாப்பாட்டில் நீள முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்திருக்கும்  உறவு நீடிக்குமாம் என்று மனைவி சாவகாசமாக சொல்லி விடுவாள். என் சட்டையில் ஒருநீள  முடி இருந்தால் காற்றில் வந்து விழுந்தது என்று தப்பிக்க முடியாது. நீலப்பட நாயகனைப்போலவே என்னை பார்ப்பாள். அதனால் கால்சட்டையையும் கழற்றி உதறி போட்டுக்கொண்டு வீடு போனாலும், டளிடாவின் பெர்பியூம் வாசனை என்னில் ஒட்டியிருப்பது போலவேயிருந்தது. நல்லவேளை மனைவி நித்திரை. மெதுவாக குளியலறையில் நுழைந்து ஆடைகளை அவிழ்த்து அழுக்கு கூடையில் போட்டு விட்டு ஒரு குளியல். படுத்து விட்டேன். 

மறுநாள் கடைக்கு வரும்போதே புதுமணப் பெண்ணைப்போல வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவள், 

“என்ன நேற்று நன்றாக உறங்கினாயா ?” என்று கிண்டலாகவே கேட்டாள். 

 “என்ன நக்கலா……….? உனக்கு சரியான போதை போல. 

“உண்மையை சொல்லவா… ? எனக்கு அவ்வளவு போதையில்லை. ஆனால் முதன்முதலாக என் மனதுக்குப்பிடித்த ஒருவனை  கட்டித் தழுவிக்கொண்டேன். 

கொஞ்சம் திடுக்கிட்டவனாகவே, 
“என்னது ………?” 

“பயப்பிடாதே. அவ்வளவும் தான். இனி அப்படியொரு தர்ம சங்கடத்தை உனக்கு நான் கொடுக்க மாட்டேன்.” என்று விட்டு போய் விட்டாள். கோடையும் குளிருமாக மூன்று வருடங்கள் ஓடிப்போயிருக்கும். அவ்வப்போது  வழமை போல பணம் அனுப்பவும் சேமிப்பில் வைக்கவும் வந்து போய்க்கொண்டிருந்தவள், இந்தவருடக்  குளிர் காலத்து இரவொன்றில் கொஞ்சம் சோர்வாக வந்தவளிடம், 

“என்ன கோப்பி போடவா ?” என்றதும், 

“இல்லை எனக்கு விஸ்கி.” என்றாள். 

“உன்னை வீட்டில் மட்டும் கொண்டு போய் விட மாட்டேன்.” என்றபடி விஸ்கி கிளாசை நீட்டியதும், 

“சிரிக்கும் மனநிலையில் நானில்லை.” என்றபடி அதை உறிஞ்சியவளிடம், 

“ஏன் ஏதும் பிரச்சனையா…………? 

“ம். ஓரளவு சரி வந்த பார்வையும் மகளுக்கு மீண்டும் மங்கலாகிப் போய்க்கொண்டிருக்கிறதாம். உடனடியாக அடுத்த சிகிச்சை செய்தாக வேண்டும். இப்போதைக்கு எதோ ஊசி போட வேண்டுமாம். அதுக்காக கொஞ்சம் பணம் தருகிறேன். நாளை அனுப்பி விட முடியுமா?” எனப்  பணத்தை நீட்டினாள். அதை வாங்கியபடி,
“சிகிச்சையை செய்ய வேண்டியதுதானே… ? சேர்த்திருக்கும் பணத்தை அனுப்பி விடலாமே…….? 

“எவ்வளவு சேர்ந்திருக்கிறது……..?”
நான் குறித்து வைத்த துண்டை எடுத்துப்பார்த்து விட்டு.
“இப்போதைக்கு ஆறாயிரத்து இருநூறு.” 

“இன்னும் குறைந்தது இரண்டாயிரம் தேவை. அதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?” 

“என்னிடமும் இப்போ அவ்வளவு தொகை இல்லை. யாரிடமாது கேட்டுப் பார்கிறேன். கிடைத்தால் நல்லது.” 

“சரி விடு. எல்லாம் அவன் நினைத்தபடி நடக்கட்டும்.” என்று மேலே காட்டியவள், வெறும் கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பிவிட்டு, 

“நீ இங்கு வந்து எவ்வளவு காலமாகிறது ?” 

“ஏழு வருசமிருக்கும்.” 

“அதுக்கான ஆதரரம் ஏதாவது இருக்கா ?” 

“பாஸ்போட் மட்டும்தான். அதுவும் என்னிடமில்லை.” 

“நன்றாக யோசித்துப்பார். வேறை ஏதாவது…….?” 

“வேறை ஏதாவதென்றால் ஆரம்பத்தில் வீதியில் நிக்கும்போது சில தடவை வீசா இல்லாததுக்காக என்னை கைது செய்திருகிறார்கள்.” 

“மேசையில் தட்டிய நான், 

“அது போதும். எப்போதாவது இரவு தடுத்து வைதிருந்தார்களா? நீதிபதி ஒருவர் முன்னால் கொண்டுபோய் உன்னை நிறுத்தியிருந்தர்களா?” 

“அது முதல் தடவை. அப்படி நடந்தது.” 

“அப்போ உன்னை விடுதலை செய்யும்போது ஏதாவது பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதில் ஒரு பிரதி உன்னிடம் கொடுத்தார்களா ?” 

“எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய்………?” 

“கேட்டதுக்குப் பதில் சொல்லு.” 

“ம்…….. கொடுத்தார்கள். அதை எங்கேயோ தொலைத்து விட்டேன். 

“அது போதும். நாளைக்கே உன் அம்மாவுக்கு போனடித்து உன் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தை உடனடியாக அனுப்பி வைக்கச் சொல்லு.” 

“எதுக்கு…….? 

“பிரான்சில் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்த ஆதாரத்தோடு நிரூபித்து வதிவிட உரிமை வாங்கி விடலாம். அது மட்டுமில்லை, உன் மகளை இங்கு வரவழைத்து சிகிச்சை கூட செய்து விடலாம். 

“உண்மையாகவா……..? அவள் கண்கள் விரிந்தது. 

“உண்மை. விண்ணப்ப படிவங்கள் ஒன் லைனிலேயே எடுக்கலாம். நான் அதை செய்கிறேன். அதே நேரம் உன்னை இத்தனை வருடங்களாக தெரியுமென மூன்று பிரெஞ்சுக்காரர்களின் கடிதம் வேண்டும். ஒன்று நான் எழுதலாம். உனக்கு தெரிந்த இருவரின் கடிதம் எடுக்க வேண்டியது உன் பொறுப்பு.” 

கொஞ்சம் யோசித்தவள்,
“வழமையாக கொண்டோம் வாங்குகிற பாமசிக் காரரிடம் வாங்கலாம். இன்னுமொருவர்…….ஓகே. அவரிடமும் வாங்கலாம்.” 

“யாரந்த முடி திருத்தும் கடை வைத்திருக்கும் கிழவன் தானே……..?” 

“உனக்கெப்படித் தெரியும்.” கொடுப்பினுள் சிரித்தாள். 

“அடிக்கடி உன்னோடு கதைத்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறேன். நல்ல மனிதர் தான்.  பிள்ளைகள் இல்லை. மனைவி பல வருடங்களுக்கு முன்னர்  இறந்து விட்டார். நான் கூட முன்னர் அவரிடம் தான் முடி வெட்டிக் கொள்வேன். இப்போ அவருக்கு வயசாகி விட்டதால் கை நடுங்குகிறது. அதனால் அவரிடம் போவதில்லை.” 

“நல்ல மனிதர் தான். பேச்சுத் துணைக்காக என்னிடம் அடிக்கடி வருவார். பின்னர் வாரத்தில் ஒவ்வொரு புதன் கிழமையும் கடையை சாத்தி விட்டு சமையல் செய்து வைத்து  என்னை அழைப்பர். பகல் முழுவதும் அவரோடேயே கழிப்பேன். பணம் வேண்டாமென மறுத்தாலும் பலவந்தமாக திணித்து அனுப்பி விடுவார்.” 

“அதெல்லாம் இருக்கட்டும். கடிதத்தை வாங்கி விடு. அது சரி, பின்னர் போலிஸ் உன்னை கைது செய்வதில்லையா?” 

“இல்லை. எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு. அவர்களுக்கு வேண்டியதை அவ்வப்போது கொடுத்து விட வேண்டும்.” 

“கொஞ்சம் அதிர்ச்சியாகவே, என்னது இலஞ்சமா……….? இந்த நாட்டு போலீசா…….? 

“நீ நினைப்பது போல பணமாக இல்லை. அவர்கள் இரகசியமாக தனித்தனியாக  அழைப்பார்கள். நாங்களும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். அவர்களும் எங்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். ஒரு எழுதப்படாத ஒப்பந்தம்.” 

“உண்மையாகவா………?” 

“உன் நண்பன் பாஸ்கல் கூட அவ்வபோது அழைப்பான். அவனிடம் கேட்டு விடாதே. அவன் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவுதான். பாவம் தெருவில் என்னோடு நிக்க வேண்டும்.” என்று சிரித்தபடி கிளாசை நீட்டினாள். மீண்டும் நிரப்பினேன். 

“எனக்காக அந்த டளிடா பாடலை ஒருக்கா போடுகிறாயா ?” என்றதும் யூ டியுப்பில் அதை எடுத்து ஓட விட்டேன்.
Je ne rêve plus, je ne fume plus
Je n’ai même plus d’histoire
நான் இனி கனவு காணவில்லை, இனி புகைப்பதில்லை
என்னிடம் இப்போது ஒரு கதை கூட இல்லை
நீங்கள் இல்லாமல் நான் அழுக்காக இருக்கிறேன்
நீங்கள் இல்லாமல் நான் அசிங்கமாக இருக்கிறேன்
நான் ஒரு ஓய்வறையில் அனாதை போல இருக்கிறேன்
நான் இனி என் வாழ்க்கையில் வாழ விரும்பவில்லை
நீங்கள் வெளியேறும்போது என் வாழ்க்கை முடிகிறது
எனக்கு இனி வாழ்க்கை இல்லை, என் படுக்கை கூட இல்லை
இது ஒரு நிலைய தளமாக மாறுகிறது
நீங்கள் கிளம்பும்போது
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
நீங்கள் எப்போது என்று உங்களுக்குத் தெரியாது
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது
அது விரைவில் இரண்டு ஆண்டுகள் ஆகிறது
நீங்கள் கவலைப்படவில்லை என்று
ஒரு பாறை போல
பாவம் போல
நான் உங்களிடம் தொங்குகிறேன்
நான் சோர்வாக இருக்கிறேன்
அவர்கள் இருக்கும்போது மகிழ்ச்சியாக நடிப்பது
நான் ஒவ்வொரு இரவும் குடிப்பேன்
ஆனால் அனைத்து விஸ்கிகளும்
என்னைப் பொறுத்தவரை எங்களுக்கும் அதே சுவை இருக்கிறது
எல்லா படகுகளும் உங்கள் கொடியை சுமக்கின்றன
நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை
எனக்கு உடல் நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
நான் உங்கள் இரத்தத்தை உங்கள் உடலில் ஊற்றுகிறேன்
நீங்கள் தூங்கும் போது நான் ஒரு இறந்த பறவை போல இருக்கிறேன்
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
இன்னும் உங்கள் தோலுக்கு முன் எனக்கு திறமை இருந்தது
இந்த காதல் என்னைக் கொல்கிறது
அது தொடர்ந்தால்  தனியாக இறந்துவிடுவேன்
ஒரு முட்டாள்தனமான குழந்தையைப் போல என் வானொலியின் அருகில்
பாடும் என் சொந்தக் குரலைக் கேட்பது
எனக்கு உடல்நலமில்லை
முற்றிலும் நோய்வாய்ப்பட்டது
இரவில் என் அம்மா வெளியே சென்றது போல
அவள் என் விரக்தியுடன் என்னைத் தனியாக விட்டுவிட்டாள்
எனக்கு உடல் நலமில்லை
அது சரி, எனக்கு உடல் நலமில்லை
எனது எல்லா பாடல்களையும் நீங்கள் இழந்துவிட்டீர்கள்
என் வார்த்தைகளையெல்லாம் நீ வெறுமையாக்கினாய்
என் இதயம் முற்றிலும்  சரியில்லை
சுற்றிலும் தடுப்புகள் உள்ளன
என் உடல் நலமில்லை ஏன்  என்று கேட்கிறீர்களா?
 
அவளும் சேர்ந்தே பாடியவள், அடுத்த கிளாசையும் முடித்து விட்டு,  “பணத்தை மறக்காமல் அனுப்பி விடு.” என்று விட்டு போய் விட்டாள்.
வேலை முடிந்து போகும்போது தொலைத்துவிட்ட எதையோ தேடுபவளைப்போல  சிகரெட்புகையை ஊதியபடி  லேசாக தள்ளாடிய படியே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். அன்றிரவு குளிர் வேறு அதிகமாக இருந்தது. கடலில் அலை வேறு அதிகமாக இருந்தது. மழை பெய்யுமென வானிலை அறிக்கை வேறு போனில் காட்டிக் கொண்டிருந்தது. காரை நிறுத்தி வீட்டில் கொண்டு போய் விடவா என கேட்க நினைத்தாலும், அன்றைய அனுபவத்துக்கு பிறகு நான் அப்படியொரு முயற்சியை எடுத்ததில்லை. எனவே கையசைத்து விட்டு போய் விட்டேன். அதுதான் நான் கடைசியாகப் பார்த்தது.
Ooooooooooooooooooooooooo 

அன்று பாஸ்கலின் வரவுக்காகவே காத்திருந்தேன். இந்தக் கிராமத்தின் காவல்துறை அதிகாரி அவன், நீண்டகால நண்பன். இரவு அவன் வரும்போதே, “செய்தி தெரியுமா?” என கேட்டபடி வந்தான். 

“என்ன ஸ்ட்ரைக் தானே……..? 

“இல்லை……… டளிடா விடயம்.” 

“அதுக்குதான் உனக்கு போனடிதேன். காலை இரண்டு சிவில் போலிஸ் வந்து விசாரித்து விட்டு போனார்கள் என்ன நடந்தது?” 

“ஓ………. தெரியாதா? அவள் இறந்து போய் விட்டாள். யாரோ நேற்றிரவு அவளை கொண்டுபோய் காட்டுப்பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு எரித்துக் கொன்று விட்டார்கள்.” 

இழவுச் செய்திகள் எனக்கு புதிதில்லை தான். ஆனாலும் அது டளிடா என்றதும் லேசாகத்  தலை கிறுகிறுத்தது. 

“நிச்சயமாக தெரியுமா ? அது அவள் தனா?” 

“ம்.  அவள்தான். நானும் சம்பவ இடத்துக்கு போயிருந்தேன். அவளின் கைப்பை பற்றைக்குள் கிடந்தது. அதில் அவள் தொலைபேசி இருந்தது. அதிலுள்ள விபரங்களை வைத்துத்தான் அடையாளம் கண்டோம். ஏனென்றால்  டயரை போட்டு கொளுத்தியிருக்கிறார்கள்.  உடல் அடையாளம் காண முடியாதவாறு எண்பது வீதம் எரிந்து விட்டது.” 

“என்ன கொடுமை. யாரென்று தெரியுமா………?” 

“காட்டு பகுதிக்கு செல்லும் வீதியில் உள்ள சி சி டி வி காமராவையும் அவள் உடல் கிடந்த இடத்தில் இருந்த கார் டயர் அடையாளத்தையும் வைத்து ஒருவனை கிரைம் பிரிவு கைது செய்திருக்கிறார்கள். அவன் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்றின் உறுப்பினர். விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு அவ்வளவு தான் தெரியும்.” 

“ஏன் செய்தான்……….?” 

“நிச்சயமா ஒருத்தன் தனியாக செய்திருக்க முடியாது. விசாரணை முடிவில்தான் தெரியும். வெளிநாட்டவர்களைக் குறிப்பாக பாலியல்தொழில் செய்யும் பெண்களை, அதுவும் இஸ்லாமியப்  பெண்களை குறிவைத்து இயங்குகிறார்கள். அது அவர்களுக்கு இலகுவான இலக்கு. கைது செய்யப் பட்டாலும் இலகுவாக கொஞ்ச நாள் தண்டனையோடு வெளியே வந்து விடுவார்கள்.” 

“என்ன……. நீயே இப்பிடி சொல்கிறாய்?” 

“ம்……இறந்து போனவர் சட்டத்துக்கு புறம்பாக இங்கு தங்கியிருந்தவர். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்தவர். அவர் சார்பாக வாதாட கூட யாரும் வர மாட்டார்கள். இவ்வளவும் போதுமே குற்றவாளிக்கு.” 

“ஆனால் சட்டம் என்று ஒண்டு இருக்கு தானே……?” 

லேசாக சிரித்தபடி, “ஒரு பியர்.” என்றான். 

அவனுக்காக கிளாசில் நிரப்பிய பியரின் நுரையைப் போலவே அவளின் நினைவுகள் அத்தனையும் என்னுள் ஒருதரம் பொங்கி அடங்கியது. மூளையின் ஓரத்தில்சின்னதாக ஒட்டியிருந்த அவள் மகளின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாவது போலவிருந்தது. அவனுக்கான பியரை வைத்துவிட்டு கழிப்பறையில் போய் முகத்தை இரண்டு கைகளிலும் ஏந்திய குளிர் நீரால் அடித்து கழுவி துடைத்து விட்ட பின்தான் அடுத்து என்ன செய்வது என்று சிந்திக்க முடிந்தது. ஒரு முடிவெடுத்தேன். 

அவளின் மத முறைப்படி இறந்துபோனால் உடல் சூடு ஆறுவதுக்கு முன்னரே மசூதிக்கு கொண்டுபோய் வாழ்நாளில் ஏதும் பாங்கள் செய்திருந்தால் அதுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்தித்து புதைத்து விடுவார்கள். அப்போதான் ஆன்மா சொர்க்கம் போகும் என்பது அவர்களது நம்பிக்கை. உடல் கிடைக்கா விட்டால் என்ன செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்கள் முறைப்படி உடலை எரித்து சாம்பலை கடலிலோ ஆற்றிலோ நீரில் கரைத்து சடங்கு செய்வார்கள்.
பியரை உறுஞ்சிக் கொண்டிருந்த பாஸ்கலிடம் போய்,
“அவள் எரிக்கப்பட இடத்திலிருந்து கொஞ்சம் சாம்பல் மட்டும் எடுத்துக் கொடுக்கிறாயா……?” 

திடுகிட்டவன், “என்ன என் வேலைக்கு முடிவு கட்ட போகிறாயா…………?” 

“இல்லை. ஒன்றும் பிரச்னை வராது. கொஞ்சாமா ஒரு பிடி மட்டும்………..” 

“விசாரணை முடியும்வரை அதெல்லாம் முடியாது. இப்போ அந்த இடம் கிரைம் பிரிவின் கட்டுப் பாட்டிலிருக்கு.” 

“இருக்கட்டுமே……….நீ கூட அவளை பாவித்திருக்கிறாய். அந்த நன்றிக்காவது செய்.” 

“ஓ…….. சொல்லி விட்டாளா? சரி நாளை கொண்டு வந்து தருகிறேன்.” 

ஆனாலும் எனக்கு அவனில் நம்பிக்கையில்லை கடுதாசியை கொளுத்தி அந்த சாம்பலை கொண்டுவந்து கொடுத்து போலிஸ் புத்தியை காட்டி விடுவான். எனவே,
“சரி வேண்டாம். சனமேயில்லை. பியரை குடித்து முடி. கடையை பூட்டி விட்டு இரண்டு பேரும் போகலாமென முடிவெடுத்து இரண்டு பேருமே போனோம். அவன் காட்டிய இடத்தில காரை நிறுத்திவிட்டு போனில் உள்ள டோச் வெளிச்சத்தில் நடந்துபோய்  ‘போலீஸ்’ என என எழுதப்பட்டிருந்த சிவப்பு வெள்ளை நாடா கட்டியிருந்த இடத்தில் கொஞ்சம் சாம்பலை அள்ளி தயாராய் கொண்டுபோயிருந்த பொலிதீன் பையில் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டிருந்தோம். 

அடுத்தநாள் காலை தபால்நிலையத்தில் பணத்தை அனுப்பிய பின்  மொரோக்கோ இலக்கத்துக்கு விபரத்தையும் அனுப்பி விட்டு கடையை திறந்து  விஸ்கி போத்தலின் மூடியை திறந்து வாயில் கவிழ்த்து அது தொண்டை வழியே களக்  களக் என்று இறங்கும் சத்தம் நீண்ட நாளின் பின்காதில் கேட்டது. பாதி முடிந்து விட மீதியை எடுத்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு  முடி திருத்தும் கடைக்கு போயிருந்தேன்.  கடை பூட்டியிருந்தது. அண்ணாந்து பார்த்தால்  கிழவன் கடற்கரையை பார்த்தபடி வீட்டு பல்கனியில் நின்றிருந்தார். பெரிய டைடானிக் ஜாக் எண்டு நினைப்பு. 

“ஓய்ய்…….என்ன கடை பூட்டா ?”  என்றதும், 

“ஓம்.  இன்று புதன் கிழமை. கடை லீவு என்றார். 

அவள் இனி வர மாட்டாள். வந்து கடையை திற.”  என்றதும் வேகமாக வந்து கடையை திறந்து என்னை உள்ளே தள்ளி,
“என்ன சொன்னாய் ? நான் காத்திருப்பது உனக்கு எப்பிடித் தெரியும்?” என்றவரிடம், 

“முதல்ல மயிர வெட்டு. பிறகு சொல்லுறேன்.” 

சாதாரணமாவே கை நடுங்கும் அவருக்கு இன்னமும் வேகமா நடுங்கத் தொடங்கியிருந்தது. 

“எப்பிடி வெட்ட வேணும்………. சொல்லு.” 

“மொட்டை.” 

“என்னது…….? மொட்டையா? நீ குடித்திருக்கிறாய். உளறாதே ………” 

“சொன்னதை செய்.”  என்றதும், மெசினை எடுத்து வழித்தார். கண்ணாடியில் மொட்டைத்தலையைச்  சரி பார்த்த போது நிலத்தில் கொட்டியிருந்த மயிரையெல்லாம்  கூட்டிக் கொண்டிருந்தார். எல்லா இனத்தினதும் மதத்தினதும் சாதியினதும்  மயிரெல்லாம் குப்பையாய் ஒரு மூலையில் குவிந்து கிடந்தது. 

“சரி இப்பவாவது சொல்லேன். எப்பிடித் தெரியும்? ஏன் வர மாட்டாள்?” 

“அவளுக்காக என்ன சமைத்து வைத்திருக்கிறாய் ?” 

 லேசான வெட்கத்துடன், “அவளுக்கு பிடித்தமான  மட்டன் தஜின் செய்து வைத்திருக்கிறேன்.” 

“சரி போய் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வா.” 

கொஞ்சம் தயங்கிய படியே மேலே வீடுக்கு போய் ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் மட்டன் தாஜின்  கறியும் அதுக்கு மேல் ஒரு பாண் துண்டையும் வைத்து கொண்டு வந்து நீட்டியவர், இனியாவது சொல்லலாம் தானே என்பது போல பார்த்தார். 

“செய்தி படித்தாயா ? பெண் எரித்துக்கொலை.” 

“ம்……… படித்தேனே.” 

“அது அவள்தான்.  இனி வர மாட்டாள்.” 

“ஓ………. ஏசுவே……. யார் செய்தது?” 

“யாரோ உன்னைப்போலவே ஏசுவை நம்பும் ஒருத்தன்.”
அவரின் கண்களில் வழிந்த கண்ணீரை எனக்கு தெரியாமல் திரும்பி துடைத்துக் கொண்டார். 

“என்ன அழுகிறாயா ? இவ்வளவு அன்பு வைத்திருந்தால் நீ அவளை திருமணம் செய்திருக்க வேண்டும். சரி இந்த கிண்ணம் உனக்கு தேவையா?
‘இல்லை.’ என்று தலையசைத்தபடி  கதிரையில் அமர்ந்தவர், அங்கிருந்து வெளியேறிய என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். 

வெளியேவீதியை தண்டி  வந்து  கடலைப் பார்த்தேன். மெல்லிய அலைகள் மட்டுமே. மீனைத் தேடி வளைய வரும் நீர் காகங்களைத் தவிர யாருமில்லை. நிலத்தில் மண்டியிட்டு போத்தலை திறந்து மேலும் சில மிடறுகளை விழுங்கி விட்டு, 

“ஓ………. அல்லாஹ் உனை எப்படி தொழுவதென்று எனக்குத் தெரியாது. டளிடா தெரிந்தோ தெரியாமலோ பாவங்களை செய்திருக்கலாம். அவள் பாவங்களை மனித்து சொர்க்கத்தினுள் அனுமதிக்குமாறு ரிழ்வான் மலக்கிடம் கட்டளையிடும். அவள் ரூஹ்   சாந்தியடையட்டும்.” 

என்றபடி சாம்பலை எடுத்து கடலில் தூவி,  மிச்சமிருந்த விஸ்கியையும் கடலில் தெளித்துவிட்டு. 

‘டளிடா நீ என்னை எவ்வளவு நேசித்தாயோ அவ்வளவு நானும் உன்னை உன்னை நேசித்தேன்’ என்றபடி மட்டன் தஜினை கிண்ணத்தோடு கடலில் விட்டேன். அது தள்ளாடிய படியே அசைந்து கொண்டிருந்தது. கடல் நீரை கொஞ்சமெடுத்து தலையில் தெளித்து விட்டு.  நான் மொட்டையடித்த காரணத்தை மனைவி கேட்பாள் என்ன சொல்லலாமென  யோசித்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.

நானும்அவனும்

$
0
0
நானும்அவனும்
….................................

ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி ….


இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற்றி ஒரு இழுவை இழுத்து விட்டு கணணியை திறந்தேன் ஏனென்றால் இப்பிடியான சந்தர்ப்பங்களில் தான் எனக்கு கற்பனை தானாக வந்து கொட்டி ஏதாவது எழுதத் தோன்றும்..

அபோதான் கண்களை கூச வைக்கும் ஒரு பெரு மின்னல்.. சாத்தியிருந்த யன்னலையும் ஊடறுத்து அறை முழுவதையும் பகலாக்கி செல்ல .மழையின் கோரம் அதிகரித்திருந்தது அடுப்படியில் திறந்திருந்த கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டு அதை சாத்தி விட்டு வரலாமென எழுந்து போயிருந்தேன். ஏனெனில் அது பின்னால் உள்ள சிறிய தோட்டத்துக்கு செல்லும் பாதை மழையின் கோரத்தால் எலியோ பூச்சிகளோ அதுவழியாக உள்ளே வந்துவிடும் . கதவை சாத்திக் கொண்டிருக்கும்போது இதுவரை நான் கேட்டிராத பெரும் இடியோசை .சின்ன வயதில் நான் சொன்ன அருச்சுனா ()பத்து நினைவுக்கு வருமளவு சத்தம் அதே நேரம் மின்சாரமும் போய்விட மீண்டுமொரு மின்னல் அப்போதான் அந்த உருவத்தை தோட்டத்தில் பார்த்தேன் .

கொஞ்சம் திகைத்துப் போயிருந்தாலும் . கடவுளையோ பேயையோ நம்புகிறவனில்லை என்பதால் யாரோ கள்ளன் தான் வந்திருக்கிறான் என நினைத்து இருட்டில் தட்டித் தடவி வந்து என் போனை எடுத்து அதிலிருந்த டோச் வெளிச்சத்தை அடித்தபடி. கள்ளன் வந்தால் தாக்குவதுக்காக கதவுக்கு பின்னாலேயே மறைத்து வைத்திருந்த கொட்டானை எடுத்துக்கொண்டு டோச் வெளிச்சத்தில் தோட்டத்தை பார்த்தேன் . கொட்டும் மழையில் நெடிய, கறுத்த, ஆடைகளேதுமற்ற அம்மணமான அந்த உருவம் நின்றிருந்தது .அண்ணாந்து பார்த்தேன். மழைத்துளிகள் என் கண்ணில் வீழ்த்து மங்கலாக தெரிந்த அந்த உருவத்தை எங்கேயோ பார்த்த மாதிரியிருந்தது .."என்னடா நலமா".. என்று என்னைப் பார்த்து அது கேட்ட அதே நேரம் அதன் பின்னாலிருந்து வெளிவந்த சிவந்த கண்களையுடைய பெரிய கறுத்த நாயொன்று என் மீது பாய்ந்து அதன் கால்களை என் மார்பில் வைத்து முகத்தை நக்க தொடங்க.. அது வரை என் பின்னாலேயே பதுங்கியிருந்த என் பூனை மீனு பயத்தில் மழையென்றும் பாராமல் தோட்டத்தில் பாய்ந்து பின் மதிலையும் தாண்டி ஓடி விட்டிருந்தது .

இப்போ எனக்கு நினைவுக்கு வந்து விட்டிருந்தது "ஓ நீயா ..எத்தனை வருடங்களாகி விட்டது என்ன இப்பிடி திடீரெண்டு சரி உள்ளே வா" ..என்றதும்

அவன் வாசலால் குனிந்து உள்ளே வர நாயும் பின்னாலேயே உள்ளே வந்தது ..அதுக்கிடையில் நான் ஓடிப்போய் படுக்கையறை கதவு சாதியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு வந்தேன்.நனைந்து போயிருப்பாய் என்றபடி துவாயை எடுத்து நீட்டியபோது அவன் உடல் காய்ந்து விட்டிருந்தது நாய் மட்டும் உடலை ஒரு உதறு உதறி விட்டு படுத்துக் கொண்டது ..சோபாவில் சரிந்திருந்தவனின் இடுப்பில் துவாயை போட்டு விட்டு .எத்தனை வருசமாச்சு எப்படி என்னை தேடி வந்தாய் என்றேன்.

இத்தனை வருசமாச்சு என்னை நீ தேடி வந்தாயா. முறைத்தான் .

எனக்கு ஊருக்கு வர முடியாது ஆனா உன்னைப்பற்றி அடிக்கடி அம்மாவிடம் விசாரிப்பேன் ,.

என்ன சொல்லு  வா ..

புளிய மரத்தடியில வெறும் சூலமா ஒரு கொட்டிலுக்கு கீழ இருந்த உனக்கு இப்ப வசதி வாய்ப்பு எல்லாம் வந்திட்டுதாம். கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்து ஐயர் வந்து பூசை செய்யுறாராம் எண்டு சொன்னா..

வேற என்ன சொன்னவா ..

சின்னதா ஒரு தேரும் செய்து கொண்டிருக்கினமாம் ..

அதுவும் உண்மை தான் .அதை விட வேற ஒண்டும் சொல்லேல்லையோ ..

இல்லையே ..

நான் குடியிருந்த புளிய மரத்தையே தறிச்சுப் போட்டாங்கள்

அட நாசமறுப்பு.. என்னத்துக்கு தறிச்சவங்கள் ..

எனக்கு கோயில் கட்ட தான் ..

அந்தப்பெரிய மரத்தை எப்பிடி தறிச்சவங்கள் ..

மிசின் வைச்சு அரிஞ்சு தள்ளிட்டான்கள் ..

அட கடவுளே ….

ஓம் கூப்பிட்டனியே …

இல்ல ....ஓம்... நீ கடவுள் எண்டதை ஒரு செக்கன் மறந்து போனன் .மிச்சத்தை சொல்லு ..



நான் செவிடு எண்டு நினைச்சு ஒவ்வொரு நாளும் சவுண்ட் பொக்ஸ் வைச்சு பாட்டு போடுறாங்கள் .விளங்காத சமஸ்கிருதத்தில பூசை வேறை

ஏன் உனக்கு சமஸ்கிரதம் விளங்காதோ ..

அடேய் நான் தமிழ்க்கடவுளடா எனக்கெதுக்கு சில்லெடுத்த சமஸ்கிருதம்.அதுவும் அவன் எனக்கு கணபதி கோமத்தை சொல்லிக்கொண்டு இடைக்கிடை வைரவராய நமகா ..எண்டு அடிச்சு விட. விசர் சனமும் அது வைரவர் மந்திரமெண்டு நினைச்சு கும்புடுதுகள் . அதைவிட மோசம் இப்போவெல்லாம் பச்சையரிசி பொங்கல் அவல் மோதகம் . எனக்கே சுகர் வந்திடும் போலவிருக்கு வடை எப்போவாவது ஒருதரம் கண்ணுல காட்டுறாங்கள் அதையும் படைசுப்போட்டு தொட்டால் சுடுவேன் எண்டு ஐயர் தீபத்தை முகத்துக்கு முன்னாலேயே காட்டுறான் .





சரி .உலகம் முழுக்க சுத்தி நாய் களைச்சுப் போய் விட்டுது அதுக்கு கொஞ்சம் தண்ணி வைக்கிறாயா.. என்றதும் நான் ஓடிப்போய் பூனையின் கிண்ணத்தை கழுவி தண்ணீரைஅதில் வைத்ததும் நாய் லபக் லபக்கென்று குடிதுக்கொண்டிருக்கும்போதே வேறொரு லபக் லபக் சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தேன் .மேசையிலிருந்த விக்கியை போத்தலோடு எடுத்து அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருந்தான். "வைரவா நீயா" ..என்றதும் பெரிய மீசையை வருடி விட்டு "என்ன நீயா நானா"எண்டு. உன் பாட்டன் எனக்கு தினமும் சிரட்டையில் கள்ளும் நண்டு மீன் பொரியல் என படைத்தது விட்டுதான் அவனே சாப்பிடுவான் விசேட நாளில ஆட்டுக்கறியும் கிடைக்கும் ம்.. அதெல்லாம் ஒரு காலம் ..பெருமூச்சொன்றை விட்டான் ..



ஒரு உடுப்பு கூட போடாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கிறியே வெட்கமாயில்ல..


இல்ல...ஏனென்டால் பட்டுத் துணியில எனக்கு கோவணம் வேற கட்டி விடுறாங்கள்.அதுதான் எனக்கு வெட்கமாயிருக்கு

குளிரேல்லையோ எண்டு கேட்டலும் இடக்கு முடக்கா ஏதும் பதில்தான்வரும் ..சரி இவ்வளவு தூரம் என்னை எதுக்கு தேடி வந்தனி ?..

எனக்கு நீயொரு கோயில் கட்டவேணும்...
நான் அதிர்ந்துபோய் "வைரவா என்ன விளையாடுறியா"நானிருக்கிறதே வாடகை வீடு .கனடாப்பக்கம் போய்ப்பார் ..அங்கைதான் ஐயப்பன் தொடக்கம் அம்மா பகவான்னெண்டு ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் கோயில் கட்டி வைசிருகிறான்கள் .கட்டாயம் உனக்குமொரு கோயில் யாராவது கட்டியிருப்பான்கள் ..


இப்பதானே சொன்னான் உலகம் முழுக்க சுத்தி வாறனெண்டு .அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை ஒரு வைரவர் கோயில் கூட இல்லை .

என்னட்டை அவளவு வசதியில்லையே வைரவா ..


நீ நினைக்கிற மாதிரி பெரிய கோயில் எல்லாம் வேண்டாம் எதோ ஒரு மரத்துக்கு கீழை ஒரு சூலம் மட்டும் போதும். எந்த சத்தம் சந்தடியுமில்லாமல் இருந்தாலே போதும் நீ விரும்பினா விஸ்கியோ வோட்காவோ அப்பப்போ ஒரு வடை மாலை அது போதும் .மொத்தத்தில என்னை நிம்மதியா இருக்க விட்டாலே போதும்.

உனக்கொரு ஐடியா சொல்லவா ..

ம் சொல்லு …

எதுக்கு.. கோயில் குளமெண்டு அலையாமல் பேசாமல் பேஸ் புக்கில ஒரு அக்கவுண்ட் திறந்து அதிலையே குடியிருக்லாமே ..

வைரவர் விழுந்து விழுந்து சிரிக்க நாய் வேற அவ்.... என்று உளையிட்டது ..

எதுக்கு இப்ப சிரிக்கிறாய் ..

அடேய் நான் பேஸ் புக்கில் குடியிருக்க தொடங்கினால் ஒவ்வொரு நாளும் ஒரு செல்பியாவது போடுவேன் அப்போ உங்கள் பிழைப்பு என்னாவது …...

அதுவும் உண்மைதான் வைரவா உன் உயரத்துக்கும் கலருக்கும்.. அதுக்கும் ..எல்லா லைக்கும் உனக்குத்தான் விழும் ..அதை விட உலகத்தில் உள்ள எல்லா வடையும் மாலையா வந்து உன் கழுத்தில தான் விழும் ..


வைரவர் மீண்டும் சிரித்தார் ...


சரி வைரவா உனக்கு வீட்டு தோட்டத்திலேயே நான் கோயில். ச்சே .. ஒரு சூலம் நடுகிறேன் கவலைப்படாதே என்றதும் எழும்பி மீண்டும் விஸ்கி போத்தலை வாயில் வைத்து உறிஞ்சி விட்டு வெளியே போக . நாயும் பின்னல் ஓடவே மீண்டும் ஒரு பெரும் மின்னல் தோன்றி மறைய அதன் வெளிச்சத்தில் கண்ணை மூடி திறந்து பார்த்தேன். வைரவரையும் அவரின் வாகனத்தையும் காணவில்லை

வைரவ ராசாவே உன் அற்புதமே அற்புதம். உன் நாமத்தின் பெயராலே.உன் வார்த்தையின் பெயராலே . சாத்தான்கள் விலகியோடட்டும்உனக்காக நாளை சூலம் நடுகிறேன் . என்று வாய் முணு முணுக்க தொடங்க ..

வைரவர் வீட்டுக்கு வந்திட்டுப்போனதை இப்பவே உடனே ஓடிப்போய் மனிசியை தட்டியெழுப்பி சொல்லமா எண்டு யோசித்தாலும். "ச்சே சும்மா தண்ணியை போட்டிட்டு புலம்பாதை" .. எண்டு எட்டி உதை விழும்.நாளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லலாமெண்டு என்று நினைத்து பேசாமல் படுத்து விட்டேன் ..

ஆனாலும் நித்திரை வரவில்லை . வைரவருக்கு சூலம் நடுறதெண்டால் அவருக்கு பிடிச்சது பொதுவா புளிய மரம்தான் .இந்த ஊரில.. இந்த நாட்டிலையே புளிய மரமில்லை .வீட்டு தோட்டத்தில நிக்கிறது ஒரு வாழை மரம் . அடுத்தது தோடை மரம் .வாழை மரத்துக்கு கீழை சூலத்தை நட முடியாது ஏனென்டால் குளில் காலத்தில அது பட்டுப்போகும். அப்பிடி நிண்டு பிடிச்சாலும் குலை போட்டதும் வாழையை வெட்டும் போது வைரவருக்கும் வெட்டு விழும் . அதால தோடை மரத்துக்கு கீழயே நடலாம் அதுவும் புளித்தோடை தான். புளிக்கு புளி வைரவருக்கும் லொக்கேசன் செட்டாகும் .சூலத்துக்கும் சிரமப்பட தேவையில்லை கன காலமா கார் கராச்சுக்குள்ள நீள இரும்புக் கம்பியொண்டு கிடக்கு அதை இரண்டா வெட்டி ஒண்டை வளைச்சு மற்றதை நிமித்தி நடுவிலை ஒட்டி விட்டா போதும் வைரவர் ரெடி என்று நினைக்கும் போதே அந்த மகிழ்ச்சியில் நித்திரையாகிப் போனேன் .

காலை கண்விழித்தபோது மனிசி குளியலறையில் பல் தீட்டிக்கொண்டிருந்த நேரம் வைரவர் வந்ததை சொல்லாமா என்று யோசித்தேன். வேண்டாம் எல்லா கடவுளையும் கிண்டலடிக்கிறதா எனக்கு மேல ஒரு குற்றச்சாட்டு இருக்கு அதால சூலத்தை தோடை மரத்துக்கு கீழ நட்டு .வடை மாலை போடும்வரை சஸ்பென்சாக வைத்து விட்டு சொல்லாமென நினைத்து ..அவரிடம் போய் "என்னப்பா எனக்கு கொஞ்ச நாளாவே வடை சாப்பிட வேணும் போலவிருக்கு" .. எண்டதும் வாயிலிருந்த பிரஸ்சை எடுத்து விட்டு தொட்டியில் துப்பியவர் ..."உனக்கு எப்ப பாத்தாலும் இதே நினைப்பு அதுவும் காலங் காத்தாலை" .. என்று அக்கிளில் ஒரு குத்து விழுந்தது ..

மீண்டும் பல்லு தீட்ட தொடங்கியவரிடம் .."இல்லை உண்மையாவே உளுந்து வடை சாப்பிட வேணும் போலவிருக்கு வேலை முடிஞ்சு வந்ததும் பத்து வடையாவது சுட்டு வைக்கேலுமோ"என்றதும் .மீண்டும் பிரஸ்ஸை வாயிலிருந்து எடுத்து தொட்டியில் துப்பியதுமே . குத்து விழலாமென நினைத்து சட்டென்று இரண்டடி பாய்ந்து நின்று கொண்டேன் .."சரி சரி போ" ...என்றார் .தோட்டத்தில் வந்து நின்று தோடை மரத்துக்கடியில் எந்த பக்கமாக வைரவரை நடலாமென யோசித்தாலும் நம்ம வைரவருக்குத்தான் வாஸ்து ஆகமம் எல்லாம் கிடையாதே எதோ ஒரு பக்கம் ஊன்றி விட்டா போதும் .மரத்தடியை கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன் .மனம் முழுதும் வைரவர் நினைப்பிலேயே நிரம்பியிருந்தது போகும் வழியில் இருந்த தேவாலயத்தின் உச்சியில் இருந்த சிலுவை கூட சூலம் போலவே தெரிந்தது பிதா, சுதன், பரிசுத்த வைரவரின் பெயராலே ஆமென் என்று சூலம் போட்டுக் கொண்டேன் ..

வேலை முடிந்து வீடு வந்ததுமே வடை வாசம் மூக்கை துளைத்தது.வண்டியை விட்டிறங்கி கராச்சுக்குள் புகுந்து இரும்பை தேடத் தொடங்கியிருந்தேன் காணவில்லை .தேடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த மனைவி ..

என்ன வேலையால வந்ததும் கராச்சுக்குள்ள நோன்டிக்கொண்டிருக்கிறியள் ..

இங்கின ஒரு இரும்புக்கம்பி கிடந்தது அதை தான் தேடுறன் ..

அதுவா கன காலமா கிடந்தது கறள் பிடிச்சுப்போய் கிடக்கெண்டு பழைய சமான் லொறி வரேக்குள்ள எடுத்து போட்டிடேன் ..

எனக்கு நேற்றிரவு விழுந்த இடிச்சத்தம் இப்போ காதில் கேட்டது ..வைரவா ஏனிந்த சோதனை இருந்த ஒரேயொரு இரும்புக்கம்பியையும் மனிசி தூக்கி எறிந்சிட்டுது நான் என்ன செய்வேன் . புதுசா கம்பி வாங்கி உனக்கு சூலம் செய்து கோயில் வைக்கிற அளவுக்கு என்னட்ட வசதியில்லை என்னை மன்னிசுக் கொள் என்று வேண்டி விட்டு சுட்ட வடை வீணாகிப் போக கூடாது தானே என்பதுக்காக அதை துக்கிக் கொண்டு போய் தோட்டத்தில் உள்ள மேசையில் வைத்துவிட்டு சாப்பிட கதிரையில் அமர்ந்ததும் எங்கேயோ இருந்த தேனீ ஓன்று விர் என்று வடையில் வந்து குந்த .. "கன காலத்துக்கு பிறகு நானே இப்பதான் வடை சாப்பிட போறேன் .ச்சே ..போ" ..என்று நான் கையால் விசுக்கி கலைக்க..வேகமாகமேலே எழும்பி ஒரு சுற்று சுற்றி விட்டு என்னை நோக்கி வந்தது ..

ஐயோ ..சாமி கண்ணை குத்திட்டுது என்று கண்களை பொத்தியபடி கத்தினேன் …..

நேர்காணல்

$
0
0
சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார்.
போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம்
எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்டும்.. அதுவேளை வெறும் கற்பனைகளிலும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலும் தொடர்ந்தும் இருந்து விட முடியாது என்று சொல்லும் சாத்திரிக்கு தமிழ்ச் சூழலில் எதிர்ப்பும் விமர்சனங்களும் உண்டு.
இதனால் சாத்திரியின் எழுத்துகள் கடும் சர்ச்சைகளை உண்டு பண்ணி வருகின்றன. ஆனாலும் அவர் பின்வாங்கவேயில்லை. அண்மையில் (2015 ஜனவரியில்) தான் எழுதிய “ஆயுத எழுத்து“ என்ற புதிய நாவல் ஒன்றைச் சாத்திரி சென்னையில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு நிகழ்வே பல எதிர்ப்புகளின் மத்தியில்தான் நடந்தது. இந்த வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த சாத்திரியிடம் பேசினேன்.
- கருணாகரன்
——————————————————————————————————————————————————————————————————————-
1-உங்களுடைய நாவல் ஆயுத எழுத்தை சென்னையில் வெளியீடு செய்வதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு அமைப்பினர் ஈடுபட்டிருந்தார்கள். இறுதியில் சேப்பாக்கத்தில் காவல்துறையினரின் பாதுகாப்போடு நிகழ்வு நடந்ததை பார்த்தேன் .இந்த நாவலை எதிர்க்கும் அளவுக்கு என்ன முக்கியமான விடயங்கள் என்ன இதில் உண்டு ? யார் எதிர்க்கிறார்கள்?
இந்த நாவலை நான் எழுதி வெளியிட தீர்மானித்த போதே அதுக்கான எதிர்ப்புகள் கிளம்பும் என எதிர்பார்த்ததுதான். பொதுவாகவே விமர்சனம் என்கிற ஒன்றை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாதபெரும்பாலானவர்களை கொண்ட ஒரு சமூகமாகத்தான் தமிழ் சமூகம் உள்ளது.தவறுகளை தட்டிக் கேட்காமலும் அதை மழுப்பி மறைத்து விட பழக்கப் பட்டவர்களாகவே நாம் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளோம்.இந்த மன உணர்வு தான் எனது நாவலையும் எதிர்க்கத் தூண்டி யிருக்கலாம்.
காரணம் முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தில் நடந்த சில தவறான சம்பவங்களை – தவறான விடயங்களை – எனது நாவலில் பதிவு செய்துள்ளேன் . அந்தச் சம்பவங்கள் – அந்த விடயங்கள் – வெளியே வந்துவிடக் கூடாது அவைகளை மீள் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பதில் தமிழகத்தை சேர்ந்த தீவிர தமிழ் தேசிய வாதிகளாக காட்டிக் கொள்ளும் சிலர் முனைப்புடன் செயற்படுகின்றனர் .அவர்களே எனது நாவல் வெளியீட்டையும் தடுக்க முயன்றனர்.ஆனால் நான் வெளியீட்டு மண்டபத்துக்கு செல்லுமுன்னரே தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு எந்த அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பை பலப்படுத்தியதோடு நிகழ்வு எந்தவித இடையூ றும் இன்றி நடக்க உதவினார்கள் .
2 – வெளியீட்டில் கலந்து கொள்வதாகத் தெரிவித்திருந்த பேச்சாளர்கள், திரைப்பட இயக்குனர் வீ.சேகரும் திராவிடர் கழகத்தை சேர்ந்த அருள்மொழியும் பங்கெடுக்காது விட்டதன் காரணம் என்ன?
வீ . சேகர் நிகழ்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் என்னோடு சில விடயங்கள் தனியாக பேசவேண்டும் என வீட்டிற்கு அழைத்திருந்தார்.அவரது வீடிற்கு சென்றிருந்தேன். எனது நாவல் வெளியீட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என பழ .நெடுமாறனும் இயக்குனர் கௌதமனும் அழுத்தம் தருவதாகவும் தான் நாவலை முழுமையாக படித்துவிட்டேன் அதில் தனக்கு சங்கடமான விடயங்கள் எதுவும் இல்லை ஆனால் நாவலை படிக்காமலேயே இவர்கள் ஏன் அப்படியொரு அழுத்தத்தினை தன்மீது பிரயோகிக்கின்றார்கள் என்று புரியவில்லை என்று கூறியவர், தான் இப்போ இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் திரைத்துறையில் அடிவாங்கி நீண்ட காலமாக எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு இப்போதான் தனது மகனை வைத்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் யாரையும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. தனது நிலையை புரிந்துகொள்ளுமாறு என் கைகளை பிடித்து கேட்டுக் கொண்டார்.சுமார் இரண்டு மணிநேரம் அவரோடு பேசிய பின்னர் அவரது நிலை புரிந்தது. நிகழ்வுக்கு அவர் வராது விடுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்து விட்டு வந்துவிட்டேன்.அதன்பின்னர் எனது நிகழ்வை வீ.சேகர் புறக்கணித்தார் என்றொரு அறிக்கையை இயக்குனர் கௌதமன் வெளியிட்டதாக புலம்பெயர் தேசத்து இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது .
அடுத்ததாக அருள்மொழி அவர்கள் தான் கலந்து கொள்ளாத காரணத்தை தனது முகப்புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்ன காரணம் என்னவெனில் எனது நிகழ்வில் பங்கெடுக்க சம்மதம் தெரிவித்திருந்தாலும் அதில் பங்கெடுக்கும் மற்றவர்கள் பெயர்களை அழைப்பிதழில் சரியாக கவனிக்கவில்லை என்றும் நிகழ்வுக்கு கேர்னல் ஹரிகரன் வருவதால் ஒரு இந்திய இராணுவ அதிகாரியோடு ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வது தனது கட்சி சார்ந்து பல சர்ச்சைகளை கிளப்பும்.அவற்றை தவிர்க்கவே நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.இது தவிர தனக்கு வேறு அழுத்தங்களோ பிரச்சனைகளோ இல்லை என்று தெரிவித்திருந்தார் .இதுதான் நடந்தவை.
3 -புத்தக கண்காட்சியில் ஆயுத எழுத்தை விற்பனை செய்யக் கூடாது என்று சிலர் புத்தக கடைகளில் வந்து விற்பனையாளர்களை அச்சுறுத்தியிருந்தார்கள் .இது பெருமாள் முருகனுக்கு ஏற்பட்டதைப்போல கருத்து சுதந்திரத்தை மீறும் செயல் என்று நீங்கள் எதிர்ப்புக்காட்டமல் விட்டது ஏன்?
சென்னை புத்தக கண்காட்சியில் எனது நாவலை சுமார் பதின்மூன்று கடைகளில் விற்பனைக்காக கொடுத்திருந்தேன்.அதில் நான்கு கடைகளில் மட்டுமே சிலர் வந்து மிரட்டிவிட்டுப் போயிருந்தனர் .மிரட்டப்பட்டவர்கள் புத்தகங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார்கள்.ஆனால் பெருமாள்முருகனுக்கு நடந்த அளவுக்கு எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை என்பது மட்டுமல்லாது இது போன்ற பல பூசாண்டி விளையாட்டுக்கள் எனக்கு பழகிப்போன ஒன்று என்பதால் நான் சிறு பிள்ளைத்தனமான இந்த செயல்களை கண்டுகொள்ளவில்லை .
4 -ஆயுத எழுத்து நாவலை புலம்பெயர் தமிழர்கள் சிலரும் எதிர்க்கிறார்கள்.இந்த எதிர்ப்பின் அடிப்படை என்ன ? இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் ?
இங்கு எனது நாவலை எதிர்க்கும் புலம் பெயர் தமிழர் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.391 பக்கங்களை கொண்ட ஒரு நாவலின் அட்டைப் படத்தினை மட்டும் இணையத்தில் பார்த்துவிட்டு அதன் உள்ளே என்ன எழுதப்பட்டிருகின்றது என்பதை தீர்மானிக்கும் தீர்க்கதரிசிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் தூரநோக்கு சிந்தனைகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .இவர்களின் எதிர்ப்பினை சமாளிக்க ஐ.நா சபைக்கு நடந்துபோய் ஒரு மனு கொடுக்கலாமா என யோசிக்கவ முடியும்?
5-புலிகள் அமைப்பில் செயல்பட்ட நீங்கள் அந்த அமைப்பின் வீழ்ச்சிக்கு பின்னர் இப்படியான விமர்சனங்களை முன் வைப்பது நல்லதல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.இது தொடர்பாக உங்கள் பதில் என்ன?
ஆம் , இது போன்ற கருத்தினை முன் வைப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டு தலைவர் வருவார் தமிழீழம் வாங்கி வருவார் அல்லது இணையத்தில் ஈழம் பிடிக்கலாம் என்கிற கற்பனையில் வாழும் சிலரே புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் இயக்கம் மீது விமர்சனம் வைக்க வேண்டாம் என்கின்றனர் .2009 ம் ஆண்டுக்கு பின்னர் புலிகள் அமைப்பின் இறுதிக்கால செயற்பாடுகளை விமர்சிக்கும் படைப்புகள் அல்லது கட்டுரைகளை எழுதிய .நிலாந்தன் , கருணாகரன், தமிழ்க்கவி ,யோ.கர்ணன் போன்றவர்கள் மீதும் இதே கருத்து வைக்கப் பட்டது மட்டுமல்லாது அவர்களை துரோகிகள் பட்டியலில் இணைத்து அவதூறுகளும் அள்ளி வீசப்பட்டது.அதேதான் எனக்கும் நடக்கின்றது.
ஆனால் புலிகள் இல்லாத காலத்தில் தான் நான் அவர்கள்மீது விமர்சனம் வைக்கிறேன் என்பது தவறு.புலிகள் இருந்தபோதும் அமைப்பில் இருந்தபடியே உள்ளே நான் விமர்சனங்களை வைத்திருக்கிறேன் .எனது விமர்சனம் என்பது பிரபாகரன் திருமணத்தில் இருந்து தொடங்குகிறது மேலும் பல விடயங்களை நாவலில் பதிவு செய்துள்ளேன். அப்போது ஒரு கட்டமைப்பு இருந்தது. நிருவாக பிரிவுகள் அதற்கான பொறுப்பாளர்கள் இருந்தார்கள். ஆகவே எனது விமர்சனங்கள் கருத்துக்களை நேரடியாக பிரபகரனிடமோ அல்லது நிருவாக பொறுப்பாளரிடமோ தெரிவித்து அதற்கான தீர்வுகளும் கண்டிருக்கிறேன் .ஆனால் இன்று புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இல்லாது போய் விட்டபின்னர் விமர்சனங்களை பொதுவெளியில் மட்டுமே வைக்க முடியும்.ஏனெனில் இப்போ புலிகளின் பிரதிநிதி என்று யாரும் இல்லை.
6. நீங்களும் பிறரைக் கடுமையான முறையில்தானே விமர்சிக்கிறீர்கள். விமர்சனத்துக்கு அப்பாலான முறையில் தனிநபர் மீதான தாக்குதல்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதைப்போல ஒரு காலத்தில் நீங்களும் மாற்றுக்கருத்தாளர்களை மதிக்காமல் நடந்தவர் என்ற அபிப்பிராயமும் உள்ளதே?
விமர்சனம் என்றால் அது கடுமையாகத்தான் இருக்கும்.அப்படி இருந்தால்தான் அது விமர்சனம் ஆகும்.கடுமை இல்லையேல் தடவிக்கொடுதல் ஆகிவிடும்.அடுத்தது தனி நபர் தாக்குதலில் ஈடுபடிருந்தேன் என்பது உண்மைதான்.அதனை நான் மறுக்கவில்லை.அதற்கு பின்னாலான காரண காரியங்களும் இருந்திருக்கின்றது. அவற்றையெல்லாம் சொல்லி என்னை நான் நியாயப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.காரணம் அன்று பாடப் புத்தகங்களை தூக்கி வீசி விட்டு ஒரு நோக்கத்துக்காக துப்பாக்கிகளை சுமந்தபடி இடையில் எதிரே வரும் எதையும் பற்றிக் கவலைப்படாமல் தட்டித் தள்ளி விட்டபடி விவேகமற்ற வேகத்தோடு இலட்சியத்தை மட்டும் இலக்காக வைத்து நடந்து கொண்டிருந்தோம்.
அதிலிருந்து அப்படியே எழுத்துக்கு வந்த நானும் கையில் துப்பாக்கியோடு நடக்கின்றதைப்போலவே எதைப்பற்றியும் கவலைப்படாதவனாய் பத்திரிகை ,சஞ்சிகை எனப் பொது வெளியில் எழுதிக்கொண்டிருந்தேன்.இலக்கை நோக்கி நடக்கும்போது இடையில் தடக்குப்படுபவை எல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்பதே எனது நினைப்பாக இருந்தது.இலக்கு சூனியமாகிவிட்ட பின்னர் அந்த சூனிய வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும்போது வலிக்கத்தான் செய்கிறது.எமது தோல்விக்கு இவைகளும் ஒரு காரணமோ என எண்ணி எல்லாவற்றையும் மறு பரிசீலனை செய்யத் தோன்றுகிறது.ஒரு வேளை இலக்கை அடைந்திருந்தால் இந்த வலி இல்லாது போயிருந்திருக்கும்.
அடுத்ததாக மாற்றுக் கருத்தாளர்களை நான் மதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முன்பு ஒரு விடயம் என்னைப்பொறுத்தவரை மாற்றுக் கருத்தாளர் என்று யாரும் கிடையாது. எல்லோருமே கருத்தாளர்கள் தான்.பலரின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர்களோடு உரையாடுவதிலும் நட்பு பாராட்டுவதிலும் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் ஐரோப்பவில் ஒரு சிலர் தங்களை தாங்களே மாற்றுக் கருத்தாளர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு தங்களுக்கென எந்தவித அரசியலோ நோக்கமோ இலக்கோ எதுவுமின்றி எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் தங்களை முன்னிலைப் படுத்துவதே நோக்கமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள்.எதுக்கும் யாருக்குமே பிரயோசனமற்று வெறும் கருத்துக் கந்தசாமிகளாக வாழும் சிலரை நான் மதிக்கவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றே கருதுகிறேன் .
7-இந்த நாவலில் சொல்லப்படும் விடயங்களும் அதில் வரும் பெயர்களும் உண்மையானவைகளாக இருக்கின்றது.இப்படி நீங்கள் உண்மை சம்பவங்களை பதிவுசெய்து விட்டு அதனை ஒரு புனைவு என்று எப்படி சொல்லமுடியும்?
உங்கள் கேள்வி நியாயமானதுதான் ஈழத்தின் போரியல் நாவல்கள் எல்லாமே அனேகமாக உண்மைச்சம்பவங்களின் பதிவுகளாகத்தான் வெளிவந்துள்ளது.அண்மையில் வெளியான தமிழ்க்கவியின் ஊழிக்காலம் .யோ கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள்,குணா கவியழகனின் நண்சுண்டகாடு என்பனவும் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பை சிறிது புனைவு கலந்து நாவல் வடிவில் கொடுத்துள்ளனர் .எனது ஆயுத எழுத்தும் அதேபோன்று சிறிது புனைவுகள் ஊடாக பல உண்மைச்சம்பவங்களை பதிவுசெய்துள்ளது.முழுக்க முழுக்க உண்மைச்சம்பவங்களின் தொகுப்பாக வெளிவந்தால் அது ஒரு ஆவணமாக மாறிவிடுவதோடு நாம் சொல்லவந்த விடயம் பலரையும் சென்றடையாது போய்விடும்.அடுத்ததாக அது சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என்பதால் உண்மைச்சம்பவங்கள் நாவல் வடிவில் எழுதப்படுவது தேவையாக இருக்கின்றது.
8-ஆயுத எழுத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் பற்றிய விபரங்களை பதிவாக்கியிருக்கியிருக்கிறீர்கள் இதனை உங்கள் சாட்சியமாக கொள்ளமுடியுமா ?அல்லது உங்கள் தரப்பில் இருந்து சொல்லப் படும் நியாயமாக கொள்ளமுடியுமா ?
எனது சாட்சியமாகவும் எனது தரப்பு நியாயமாகவும் இரண்டு வகையிலும் எடுத்துக் கொள்ளலாம் .
9 -அடுத்ததாக எதாவது நாவல் எழுதும் திட்டம் ஏதும் உள்ளதா?
நிச்சயமாக.. .என்னுடைய அனுபவங்களில் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் மட்டுமே இந் நூலில் பதிவு பெற்றுள்ளது. .ஆயுத எழுத்து நாவலில் விடுபட்டுப்போன பல விடயங்கள் உள்ளது அவற்றை வைத்து அடுத்த நாவலை விரைவில் எழுதுவேன். எதிர்ப்புகள் தீவிரமாக செயற்பட வைக்கின்றன..
10 -சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்துப் படைப்புகள், புலம்பெயர் தமிழர் படைப்புகள் பற்றி உங்கள் பார்வை என்ன?
இந்தத் தடவையும் சென்னை புத்தக கண்காட்சியில் ஈழத்து மற்றும் புலம்பெயர் படைப்பாளிகளின் படைப்புக்கள் நிறையவே வந்திருந்தது மகிழ்ச்சி.ஆனால் தங்கள் படைப்புக்களை சந்தைப்படுத்தும் விடயத்தில் சிலரே வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு நாவல் சந்தைப்படுத்தலில் வெற்றி பெற்று பலரது கைகளையும் அது சென்றடையும் போது தான் அந்த படைப்பே வெற்றி பெறுகிறது.இல்லாவிட்டால் நானும் ஒரு நாவல் எழுதினேன் என்கிற நின்மதியோடு அந்தப் படைப்பாளி காணமல் போய் விடுவான் .எனது நாவல் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம்தான்.
11-நாவல் தவிர்ந்த எழுத்துகளிலும் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். ஆயுத எழுத்தைப்போல அந்தக் கதைகளிலும் உண்மைச் சம்பவங்களை ஆதாரமாகக் கொண்ட விடயங்கள் பேசப்படுகின்றன. இவையெல்லாவற்றுக்கும் மறுப்பாக – எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. இதில் எது உண்மை என்று எப்படி வாசகர்கள் தீர்மானிப்பது ?
இங்கு ஒரு விடயத்தினை சொல்ல விரும்புகிறேன் நான் எனது எழுத்துக்களால் இந்த உலகத்தையோ சமூகத்தையோ திருத்தவந்த மகான் அல்ல.எனக்கு தெரிந்த பார்த்த பல சம்பவங்களை புனைவுகளோடு பதிவாக்குகிறேன்.எனது படைப்புகள் பொது வெளிக்கு வந்தபின்னர் அது எனக்கு சொந்தமானது அல்ல.அதைப் படிப்பவர்கள் எதிக்கலாம் .மறுக்கலாம்.பாராட்டலாம் அது அவரவர் விருப்பம்.ஒரு வாசகன் எனது படைப்பை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிக்க முடியாது .
12-தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை எப்படி உருவாக்கமுடியும் ? விமர்சனம் என்ற பெயரில் நடக்கின்ற அவதூறுகளை நாம் அனுமதிக்க முடியாது என்று ஒரு தரப்பினர் சொல்வதில் நியாயம் இல்லை என்கிறீர்களா ? அவர்களுடைய நியாயத்தை எப்படி மறுக்கிறீர்கள் ?
தமிழ்ச்சூழலில் விமர்சன மரபை உருவாக்கத் தேவையில்லை.அளவில் குறைவானதாக இருந்தாலும் ஒரு நாகரிகமான விமர்சன சூழல் கடந்த தலைமுறைவரை நல்லதொரு நிலையிலேயேஇருந்திருக்கின்றது.ஆனாலும் விமர்சனமே தேவையில்லை அல்லது விமர்சனம் வைக்கவே கூடாது என்கிறவர்களையும்.விமர்சனம் என்கிற பெயரில் விசமங்களை வைக்கும் பெரும்பான்மையை கொண்ட சமூகமாகத்தான் எமது சமூகம் இருக்கின்றது.இதற்கு வளர்ந்துவிட்ட தகவல்தொழில்நுட்பமும் சமூகவலைத்தளங்களும் பெரிதும் துணையாக இருக்கின்றது.அவதூறுகளை அனுமதிக்க முடியாதுதான். ஆனால் முகமூடிகள் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் அவதூறுகளுக்கெல்லாம் நின்று நிதானித்து பதில் சொல்லிக் கொண்டிருப்பது நேரவிரயமாகவே நான் கருதுகிறேன்.இவைகளுக்கெல்லாம் பேசாமல் கடந்துபோவதே புத்திசாலித்தனம் என நினைக்கிறன் .
13-உங்கள் எழுத்துகளை புலிகள் அமைப்பில் செயற்பட்ட ஒரு போராளியின் சாட்சியங்கள் என்று கொள்ளப்படுவதா ? அல்லது புலிகளை எதிர்க்கும் ஒருவருடைய விமர்சனங்கள் என்று பார்க்கப்பட வேண்டுமா ? அல்லது ஒரு வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க முனையும் படைப்பாளியின் மனவெளிப்பாடுகள் என்று கவனிக்க வேண்டுமா ? அல்லது ஈழவிடுதலைப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கும் தோல்விக்கும் காரணமான விடயங்களை மீள்பார்வைக்குட்படுத்தும் ஒருவனின் செயல்கள் என்று கொள்ள வேண்டுமா ?
இந்தக்கேள்விக்கான பதில் ஏற்கனவே சொன்னதுதான். என்னை புலி என்பார்கள்.. நான் புலியில்லை என்பார்கள் . என்னை எழுத்தாளன் என்பார்கள் , இன்னும் சிலர் விமர்சன எழுத்து என்பார்கள். எனக்குத் தெரிந்தது நான் எழுதுகிறேன் படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
14-உங்கள் நாவலில் மற்ற இயக்கங்களை நீங்கள் சித்தரிக்கும் பார்வையில் அந்த இயக்கங்களை சார்ந்தவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுவது தவிர்க்க முடியாததல்லவா?
யார் வேண்டுமானாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவரானாலும் தாரளமாகத் தங்கள் விமர்சனங்களை வைக்கலாம். இனிமேலும் விமர்சனங்களை வைக்கக்கூடாது என்றோ அல்லது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற சமூகமாகவோ நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது.விமர்சனங்களை வைக்காமல் எனக்கேன் வம்பு என்று பலர் ஒதுங்கிப் போனதும் வைக்கப்பட்ட விமர்சனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டதும் எமது தோல்விகளுக்கு ஒரு காரணம் என்று கருதுகிறேன் .
ஆனால் இந்த நாவலை படித்த இரண்டு பேர் எனக்கு வேறுவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்கள்.ஒருவர் ரெலோ அமைப்பு போராளி.சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவர் தொடர்புகொண்டு என்னிடம் சொன்னது என்னவெனில் சிறிசபாரத்தினத்தின் இறுதிக்கண ங்களை தங்கள் அமைப்பைச் சேர்ந்த எவருமே இதுவரை பதிவு செய்திருக்கவில்லை. அதனைப் பதிவாக்கியதுக்கு நன்றி என்றார். இன்னொருவர் தமிழகத்தில் வசிக்கும் ஈ .பி .ஆர் .எல் .எப் . நண்பர். எனது நாவலில் ஈ .பி .ஆர். எல் .எப் பற்றிய பகுதி வரும்போது ஒரு புலிப்போராளி பொறுப்பாளரிடம் போய் ஈ .பி அமைப்பை எப்போ தடை செய்யப்போகிறோம் எனக் கேட்பார். அதற்குப் பொறுப்பாளர் சும்மா இருக்கிற பல்லியை அடித்து பாவத்தை தேடக் கூடாது. கொஞ்சநாள் பொறுப்போம் என்று சொல்வார் . அந்த வசனத்தைச் சுட்டிக் காட்டிய நண்பர் சிரித்தபடியே உங்களுக்கெல்லாம் அந்த நேரம் எங்களைப் பார்த்தால் பல்லி போலவா இருந்தது? என்று கேட்டார் .
முழுக்க முழுக்க ஆயுத பாணிகளாக இருந்த புலிகள் அமைப்பு பெரும் பலத்தோடு இருந்த ரெலோ அமைப்பை அழித்து முடித்த இறுமாப்பில் இருந்த நேரம் பெருமளவு ஆயுதங்கள் இல்லாதிருந்த மற்றைய இயக்கங்கள் எல்லாமே அவர்களுக்கு பல்லிதான். இது புலிகள் அமைப்பில் இருந்த ஒவ்வொருவரினதும் மனநிலையாக இருந்தது. அது தவிர்க்க முடியததாகவும் இருந்தது என்பதே எனது பதில். இதுவரை இப்படியான கருத்துக்கள்தான் வந்திருக்கிறது. இனிவரும் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் வரலாம் .வரவேண்டும்.
15-நீங்கள் எழுதுகின்ற போது, பெண்களை உடல்சார்ந்து அதிகமாக எழுதுகிறீர்களே. இதுவொரு கண்டனத்திற்குரிய பார்வை இல்லையா?
இங்கு ஒரு விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன். நான் முற்றும் துறந்த முனிவனோ உணர்வுகள் அற்றுப்போன சடமோ அல்ல. அதே நேரம் ஊருக்காக ரொம்ப நல்லவன் வேடம் போடவேண்டிய தேவையும் எனக்கில்லை. நான் இயற்கையாகவே இருக்க விரும்புகிறேன். என்னைப்பொறுத்தவரை . ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு அழகு உள்ளது. அதை நான் ரசிக்கிறேன். அதை அப்படியே எழுதுகிறேன். அவ்வளவுதான். அப்படி ரசிக்காவிட்டால், எழுதாவிட்டால் நான் நல்லவன் என்று அர்த்தம் கிடையாது. என்னில் எதோ குறைபாடு உள்ளது என்றுதான் அர்த்தம் .
பாலியல் வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம், பிள்ளைவரம் வேண்டி கோவிலுக்கும் சாமியர்களிடமும் போகும் அறிவியல் அற்ற, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற பெரும்பான்மையினரை கொண்ட சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம் .. அதேநேரம் பழைய இலக்கியங்களில் எழுதிவிடாத எதையும் நான் புதிதாக எழுதவில்லை. அவைகளோடு ஒப்பிடும்போது நான் எழுதுபவைகள் ஒன்றுமே அதிகப்படியானவை இல்லை.
16-விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படாது இருந்தால் இந் நேரம் நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருப்பீர்கள்? இப்படியான எழுத்துக்களை எழுதி இருப்பது சாத்தியமா?
விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது போன பின்னர் நான் எழுதவரவில்லை. அதற்கு முன்பிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். விடுதலைப் புலிகள் இருந்தாலும் தமிழீழம் கிடைத்திருந்தலும் எழுதிக்கொண்டுதான் இருந்திருப்பேன். நான் முன்னரே சொன்னதுபோல புலிகள் அமைப்பின் குறைகளையும் விமர்சனங்களையும் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வைத்துவிட்டு எனக்கு சரியென்று பட்டதை எழுதிக்கொண்டிருப்பேன் .
17-பிரான்ஸில் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகள் நிறையப்பேர் உள்ளனர். அதற்கேற்ற மாதிரி பல நிலைப்பாடுகளும் அணிகளும் உள்ளன. கி.பி. அரவிந்தன், ஷோபாசக்தி தொடக்கம் இன்றைய ஆக்காட்டி அணியினர் வரையில். இலக்கியத்தில் இவர்களின் முக்கியத்தும், ஐக்கியம், செயற்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்.
வாசிப்புத் தன்மையை அதிகமாக கொண்ட நாடக பிரான்ஸ் இன்னமும் இருக்கின்றது. நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் பெரும்பாலானவர்கள் கணணிக்குள்ளும் கைத்தொலைபேசிக்குள்ளும் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பயணங்களின்போதும் பூங்காக்களிலும் இன்னமும் கையில் சஞ்சிகையோ புத்தகமோ படிப்பவர்களைப் பெரும்பாலாக இங்கு காணமுடியும். அதே பழக்கம் தமிழர்களிடமும் இங்கு இருப்பது மகிழ்ச்சியான விடயம் .ஆனால் தமிழ்ப்படைப்பாளிகள் பெரும்பாலும் தனித் தனித் தீவுகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் ஒரு பொதுநிகழ்வில் கூட பலரை ஒன்றாக பார்க்கமுடியாது என்பது மட்டுமல்ல மறைந்துவிட்ட ஒரு படைப்பாளியின் அஞ்சலி நிகழ்வு கூட பல பிரிவுகளாக நடாத்தப்படும் நிலைதான் இங்குள்ளது.
அடுத்ததாக இரண்டு பெயர்களை நீங்கள் நேரடியாக குறிப்பிட்டு கேட்டதால் அவர்கள் பற்றியும் சொல்லி விடுகிறேன் .கி .பி . அரவிந்தன் அவரது தனிப்பட்ட சில காரணங்களால் எழுத்துலகில் இருந்தும் பொதுவெளியில் இருந்தும் ஒதுங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தது ஷோபாசக்தி. இவர் நல்லதொரு கதைசொல்லி. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஒரு குழப்பவாதி. தன்னுடையது மட்டுமே எழுத்துக்கள் , மற்றயவை எல்லாம் கழிவறைச் சுவரில் இருக்கும் கிறுக்கல்கள் என்பதுபோலவே மற்றைய படைப்பாளிகளின் படைப்புகள் மீதான இவரது விமர்சனம் இருக்கும். மற்றைய படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சிக்காது படைப்பாளிகளை விமர்சிப்பவராக இருக்கிறார்.அதனாலேயே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் என்கிற பேதமின்றி பெரும்பாலானவர்களை அவர் பகைத்துக்கொண்டுள்ளார். இது அவருக்கு ஆரோக்கியமானதல்ல. இதே நிலை தொடருமானால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு காணாமல் போய் விடக் கூடும். ஆனால் வயதும் அனுபவங்களும் மாற்றத்தைக் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கிறேன் .
இறுதியாக… பிரான்ஸ் நாட்டில் இதுவரை பல சஞ்சிகைகள் பத்திரிகைகள் தோன்றி காணாமல் போய்விட்டன. சில தொடர்ந்தும் வெளிவருகின்றன. அதேபோலத்தான் அண்மையில் ஆட்காட்டி சஞ்சிகை மட்டுமல்ல முகடு என்றொரு சஞ்சிகையும் சில இளையோரால் வெளியிடப்படுகின்றது. இது வரவேற்கப் படவேண்டிய விடயம். ஆனால் குறிப்பிட்ட சிலரே அதில் தொடர்ந்து எழுதி ஒரு குழுவாத சஞ்சிகையாக மாறிவிடாது பரந்துபட்ட எழுத்தாளர்களை ஊக்குவித்து தொடர்ச்சியாக வெளிவருவதே சஞ்சிகையின் வெற்றியாகும். பொறுத்திருந்து பார்க்கலாம் .

சபீதா-சிறுகதை

$
0
0

 

சபீதா-சிறுகதை-சாத்திரி

சாத்திரி 

இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே பெரும்பாலானவர்களின் மனதில் இருக்கும் குரூரம் இது போன்றவற்றை இரசிக்கத் தோன்றும் என்றும் உளவியல் சொல்கிறது. எனக்கு அது பற்றியெல்லாம் ஆழமாகத் தெரியாது. உணவுச் சங்கிலி இப்படிதான் உலகம் இயங்குகின்றது என்றது மட்டும் தெரியும். அன்றும் சிறுத்தையொன்று மானை துரத்தத் தொடங்கியிருந்தது. ஆனால், மான் எப்படியோ உச்சிவிட்டு ஓடிவிட ஏமாற்றத்தோடு  சிறுத்தை என்னையே பார்ப்பதுபோலவிருக்க,  ‘ச்சே  ..மான் தப்பிவிட்டது’ என்று வலக்கை முஸ்டியை இறுக்கிப் பொத்தி இடக்கையில் குத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன்.

கடையத் திறந்து கதிரைகளை வெளியே அடிக்கிக் கொண்டிருக்கும்போதே வழமைபோல முதுகில் புத்தக சுமையோடு ஓடி வந்த ஜோய் லேசாய் மூச்சு வாங்க வணக்கம் சொல்லி விட்டு நிற்க. சிறிது தூரத்திலேயே புன்னகைத்தபடி சபீதா வந்துகொண்டிருந்தாள். பூவைப்போல வட்ட வடிவில் செருகி வைக்கப்பட்டிருந்த லாலிபாப் ஒன்றை எடுத்து அவன் கையில் கொடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு குனிந்து நின்ற என்கன்னத்தில் ஒருமுத்தம் கொடுத்துவிட்டு அதைப்பிரித்து  வாயில் வைக்க, அப்போதான் அருகில் வந்து சேர்ந்த சபீதா  வணக்கம் சொல்லிவிட்டு  ‘வேலைக்கு நேரமாகி விட்டது போகிறேன்’ என்றபடி ஜோயை இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கியிருந்தாள்.

கொரோனா வந்ததால் சபீதாவைப்போலவே நிறைய தோழிகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தத்தோடு சொல்லும் வணக்கத்தை இழந்து விட்டிருந்தது பெரும் கவலை. அப்போதான் நகர சபையில் வீதி துப்பரவு வேலை செய்யும் ராபிக் வந்துகொண்டிருந்தான். என் காலை வாடிக்கையாளர்களில் முக்கியமானவன்.  என்ன வேண்டுமென்று கேட்கத்தேவையில்லை. கிளாசை எடுத்துக் குழாயை திறந்து நுரை ததும்பும் பியரை நிரப்பி மேசையில் வைத்து விடுவேன். அதை உறுஞ்சிய படியே ஜோயை இழுத்தபடி போய்க்கொண்டிருந்த சபீதாவையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘ அவளின் உடையும் நடையும் ‘ .. என்றவன் அரபியில் சில கெட்ட வார்த்தைகளைத் துப்பிவிட்டு மீண்டும் பியரை உறுஞ்சினான். அரபியில் கெட்ட வார்த்தைகள் எனக்கும் புரியும் என்பதால்,

“அவளை ஏன் எப்போதும் வெறுப்பாகவே பார்க்கிறாய் ?”  என்றதும்,

“அவளைப்பார். பர்தா தான் போடவில்லை, இந்தளவு குட்டைப்பாவாடை தேவையா? இதெல்லாம் மார்க்கத்துக்கு விரோதமானது, உனக்குத் தெரியுமா?” என்றவனிடம்,

“நீ பியர் குடிப்பது கூட மார்க்கத்துக்கு விரோதமானது தான், அதுவும் காலங்காத்தாலேயே…”  நான் சொல்லி முடிக்க முதலே,

“எனக்குத் தெரியும். அவள் கணவனும் இறந்து விட்டான். உன்னோடுதான் நல்ல நெருக்கமாக இருக்கிறாள்.” என்றபடி பியரை உறுஞ்சினான். முட்டாள்களின் கடைசி ஆயுதம் அவதூறு என்பதால் அவர்களோடு  விவாதம் செய்வதை எப்போதுமே நான் விரும்பியதில்லை. லேசாய் புன்னகைத்தபடியே என் வேலையை தொடர்ந்தேன்.

சபீதாவை எனக்கு பல வருடங்களாகவே தெரியும்,நல்ல நண்பியும் கூட. மருத்துவ தாதி. அல்ஜீரிய தம்பதிகளுக்கு பிறந்த பிரெஞ்சுக்காரி. அவள் தோலின் பழுப்பு நிறத்திலும் பெயரிலும் மட்டுமே இன்னமும் அல்ஜீரியாவின் மிச்சம் சொச்சமாகவுள்ளது. ஒரு போத்துக்கல் நாட்டவனை திருமணம் செய்திருந்தாள்.  அவனும் நல்லவன்தான். ஆனால் போதைக்கு அடிமையாகி விட்டிருந்தான். போதையின் பழக்கத்தால் அவன் செய்து கொண்டிருந்த நோயாளர் காவுவண்டி ஓட்டும் வேலை பறிபோனது மட்டுமல்லாமல் சாரதி அனுமதிப்பத்திர உரிமையும் பறி போனதால்  வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாமல் போதையின் பாதையிலேயே போய்க்கொண்டிருந்தான். வீட்டில் தொடங்கிய அவர்களுக்குள்ளான சண்டை வீதிகளிலும் தொடரச் செய்தது. போதைப்பொருள் வாங்கப் பணம் கேட்டு கெஞ்சியபடியே, அவனும் திட்டிய படியே அவளும் போகும் காட்சிகளை அவ்வப்போது பார்க்கலாம். சில நேரம் கோபத்தில் பணத்தை எடுத்து வீதியில் எறிந்து விட்டு அழுதபடி அவள் போய்க்கொண்டிருக்க, அவனோ சிரித்தபடி அதை பொறுக்கிக்கொண்டு போவான். போதையேறியதும் கடற்கரையிலுள்ள அந்தோனியார் கோவில் வாசல் தான் அவனது இருப்பிடம். அங்கே வந்து படுத்துக் கொள்வான். அவள் வேலை முடிந்து போகும்போது அவனை அடித்து இழுத்துக்கொண்டு போவாள்.

‘எதுக்கு இவனோடு கிடந்தது மாரடிக்கிறாய் பேசாமல் துரத்தி விடேன்’ என்று நானே ஒரு தடவை அவளிடம் சொல்லியிருக்கிறேன்.

“உனக்குத் தெரியுமா, அவனிடமிருக்கும் இந்தப்பழக்கத்தை தவிர  மிக நல்லவன். ஜோய் மீதும் மிக அன்பாக இருக்கிறான். இன்னமும் அவனை காதலிக்கிறேன்.” என்று கண்கள் கலங்க அவள் சொன்னபோது,

’என்ன காதலோ… எனக்கு விளங்கவில்லை. சரி எதோ செய்’ என்று சொல்லி விட்டிருந்தேன். அதன் பிறகு அவனைப்பற்றி பேச்செடுப்பதில்லை. ஜோய்க்கு ஒவ்வொரு நாளும் லாலிபாப் கொடுத்து முத்தம் வாங்குவதோடு  சரி. அது எப்படி தொடங்கியது என்றும் சொல்லி விடுகிறேன். அன்று அவன் பாடசாலை முதல் நாள் போகும் வழியில் சபீதா என்னோடு கதைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த லாலிபாப்பை  கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த நான், ஒன்றையெடுத்து அவன் கையில் கொடுக்கவும் அம்மாவை அண்ணாந்து பார்த்தான். ‘வாங்கிக்கொள்’ என்று அவளின் சம்மதம் கிடைத்ததுமே குனிந்து நீட்டிய என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தபடி வாங்கிக் கொண்டான். அவள் நீட்டிய அதுக்கான பணத்தை நான் வாங்கவில்லை. அன்றிலிருந்து இந்தப்பழக்கம் தொடங்கியது, நான் பணம் வாங்குவதில்லை என்பதால் வாரச்சந்தையில் ஏதாவது வாங்கி ஜோயின் கைகளில் கொடுத்து என்னிடம் சேர்ப்பித்து அவளும் கணக்கை தீர்த்துக்கொண்டிருந்தாள்.

அப்படியான குளிர்கால இரவொன்றில் வேலை முடிந்து ஜோயையும் அழைத்துக்கொண்டு போய் அந்தோனியார் கோவில் வாசலில் படுத்திருந்த கணவனை கோபமாய் அடித்து எழுப்பியிருக்கிறாள் அவன் அசையவில்லை. அவளின் அலறல் கேட்டு நானும் ஓடிப்போய் பார்த்தேன். அவன் அசையவேயில்லை. நோயாளர் காவு வண்டியொன்றில் அவனை ஏற்றி அனுப்பி விட்டிருந்தேன். அவன் இறந்துபோனது அவளுக்கு கவலையும் மகிழ்ச்சியுமில்லா ஒரு வெறுமைமையை கொடுத்திருந்தது. மனக்காயங்களுக்கு காலமே மிகப்பெரிய மருந்து என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல ஒரு வருடம்  ஓடியிருக்கும், சபீதாவையும் காலம் மாற்றி விட்டிருந்தது. வழமையான காலைப்பொழுதொன்றில் பியரை ராபிக் உறிஞ்சிக்கொண்டிருக்க, ஓடி வந்த ஜோய்க்கு லாலிபொப்பை  எடுத்துக் கொடுத்து அவனின் முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தேன். பின்னால்  இன்னொருவனோடு வந்துகொண்டிருந்த சபீதா, அருகில் வந்ததும் ‘இவன் பெயர் அலெக்ஸ். என் காதலன்’ என்று வெட்கம் கலந்த புன்னகையோடு அறிமுகப் அறிமுகப் படுத்தியதும் கிளாஸ் உடைந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். ராபீக்கின் பியர் கிளாஸ் உடைந்து கிடக்க, ‘கை தவறி விட்டது மன்னித்துக்கொள்.என்றான்’. சபீதாவின் புதிய காதல் கேள்விப்பட்ட கோபத்தில் உடைத்திருப்பானென்று எனக்குத் தெரியும். ‘சரி பரவாயில்லை என்றபடி’, அலெக்சிடம் என்னை சபீதா அறிமுகம் செய்ததும் ஒரு புன்னைகையோடு வணக்கம் சொல்லி விட்டு, உடைந்த கிளாஸ் துண்டுகளை ஒரு தட்டில் துணியால் வழித்துப்போட்டுக் கொண்டிருக்கும் போதே, லாலிபாப்பை வாயில் வைத்திருந்த ஜோயின் தலையை தடவியபடி, ‘உனக்கு மிகவும் பிடிக்குமா?’ என்று சிரித்தபடியே அலெக்ஸ் பணத்தை எடுத்து நீட்டினான். அந்தச் சிரிப்பும் பணத்தை நீட்டிய விதமும் எனக்கு எதோ உறுத்தலாகவே இருக்க சபீதாவை பார்த்தேன். அவள் சங்கடத்தால் நெளிந்தபடியே,

“இல்லை…… அவன்பணமெல்லாம் வாங்க மாட்டான்” என்றாள்.

“இதுவரை  எப்படியோ ஆனால் இனிமேல் பணம் கொடுத்து விடு.” என்றபடியே மேசையில் பணத்தை வைத்து விட்டு,  இன்னொரு லாலிபாப்பை எடுத்து உரித்து தன் வாயில் வைத்தவன், ‘போகாலாம்’ என்றான். முதல் சந்திப்பே அவனோடு எனக்கு ஒட்டவில்லை .போய்க் கொண்டிருந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது தூரம் போயிருந்த சபீதாதிரும்பிப் பார்த்தாள். அவள்  கண்ணில் கெஞ்சல் தெரிந்தது.

வழித்தெடுத்த கிளாஸ் துண்டுகளை குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பியரை கொண்டுபோய் ரபீக்கின் முன்னால் வைத்ததும்,

“பார்த்தியா ..பார்த்தியா……..முதல்ல போத்துக்கல் காரன், இப்போ பிரெஞ்சுக் காரன். அதுவும் திமிர் பிடிச்சவன். இப்போ கூட அவளுக்கு என்னை கண்ணுல தெரியேல்லை, ஒரு வணக்கம் கூட இல்லை”. என்று பியரை உறுஞ்சினான் ராபிக்.

“உனக்குத்தான்  ஊரில் மனைவி பிள்ளைகள் இருக்கிறார்களே! பிறகெதுக்கு புலம்புறாய் ..?”

“அது ஊரில ..இங்க நான் தனியாத்தானே இருக்கிறேன். இரண்டாவது சந்தர்ப்பத்தை எனக்குத் தந்திருக்கலாமே….?

“உன்னை மாதிரி சந்தர்ப்பத்துக்கு அலையிறவனுகள் தான் கலாசார காவலர்கள்” என்று விட்டு என் வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டிருந்தேன் .

அதன் பின்னர் ஓடி வரும் ஜோய்க்கு லாலிபாப் கொடுக்கும்போதெல்லாம் பின்னல் சபீதாவோடு வரும் அலெக்ஸ் பணம் கொடுப்பதும் அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்காமல் அதை நான்  வாங்குவதும் ராபிக் கிளாசை உடைப்பதுமாக போய்க்கொண்டிருந்தது.

நீண்ட காலத்துக்கு பின் சபீதா மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது. வழமை போல அன்று வந்தவள், ‘வேலையிடத்தில் ஒரு பயிற்சி முகாமுக்காக வேறொரு நகரத்துக்கு மூன்று நாட்கள் போகவேண்டியிருக்கு. ஜோய் வழமை போல அலெக்ஸ்சோடு வருவான்’ என்கிற தகவலை சொன்னதும் கூடவேயிருந்து என்னைப் பார்த்து சிரித்த அலெக்சின்  மூஞ்சையில் குத்த வேணும் போலவேயிருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டேன். கிளாஸ் உடையும் சத்தம் கேட்டது.

அடுத்த நாள் நகரின் மத்தியூடாக சென்று கொண்டிருந்தபோது புகையிரத நிலையத்துக்கு முன்னாலிருந்த பாலியல் பொருட்கள் விற்கும் sex shop னுள் அலெக்ஸ் நுழைவதை கவனித்தேன். சாபீதா ஊரில் இல்லை இவன் எதுக்கு இங்கே போறான் என்று யோசித்தாலும் சரி எனக்கெதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி என்று கடந்து போய் விட்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டிருந்தது. அன்று காலையும் வழமை போல தேநீரை எடுத்துக்கொண்டு வந்து டி வியை போட்டேன். பரந்து கிடந்த புல் வெளியில் மான் கூட்டமொன்று மேய்ந்து கொண்டிருக்க, கூட்டத்தில்  மேய்ந்து கொண்டிருந்த மானொன்றில் குட்டியொன்று பால் குடித்துக்கொண்டிருந்தது. அடுத்த கோணத்தில் மரத்தில் சில குரங்குகள் காய், பழம் என்று சப்பித் துப்பிக் கொண்டிருக்க, அப்பிடியே கமெரா வேறு பக்கம் திரும்பியது. உற்றுப் பார்த்தபோதுதான் ஒரு சிறுத்தை தரையோடு தரையாக பதுங்கியிருந்தது தெரிந்தது. நான் உசாராகி விட்டிருந்தேன். அது பதுங்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்பும் லேசாக அதிகரிக்கத் தொடக்கி விட்டிருந்தது. அது  பால் கொடுத்துக்கொண்டிருந்த மானை  நெருங்கி விட்டது. இனி ஒரே பாச்சல் தான். என் மனம்  ‘பாய் ..பாய் …’ என்று சொல்லிக் கொண்டிருக்க,  மரத்திலிருந்த குரங்குகள் சிறுத்தையை கவனித்து விட்டு சத்தம் போட்ட படி பாய்ந்து ஓடத் தொடங்க, மான் கூட்டமும் சிதறி ஓடத் தொடங்கியது. ‘ச்சே ..சனியன் பிடிச்ச குரங்கு.’ மேசையில் ஓங்கியடித்து விட்டு தொடர்ந்து கவனித்தேன். குட்டி மான் ஓடாமல் அங்கேயே நின்றபடி சுற்றிவர பார்த்துக் கொண்டு நின்றது. துரத்தில் நின்று தாய் மான் குட்டியை பார்த்து தவித்துக்கொண்டிருந்தது. இப்போ கமெரா சிறுத்தை, மான் குட்டி, தாய் மான் என்று மூன்றையும் மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தது. இப்போ எனக்குள் இருந்த வெறி அடங்கி குட்டி மான் மீது பரிதாபம் வரத் தொடங்கியிருந்தது. எப்படியும் சிறுத்தை அதைக் கொன்று விடும் என்று நினைத்து அதை பார்க்க விருப்பமில்லாமல் டிவியை நிறுத்த ரிமோட்டை எடுத்தேன். குட்டியருகே போன சிறுத்தை, அதை ஒரு வலம் வந்து விட்டு மணந்து பார்த்து அதன் நெற்றியில் ஒரு தடவை நக்கி விட்டு வந்த வழியே போய்க்கொண்டிருந்தது. மிருகத்துக்குள்ளும் இரக்கம் இருக்குமா என்று எனக்குள் ஒரே ஆச்சரியம்.

வேலைக்கு கிளம்பி விட்டிருந்தேன், சபீதா வீட்டை  கடக்கும் போது வரிசையாக காவல்துறை வாகனமும் தீயணைப்பு வண்டிகளும் நின்றிருக்க வண்டியை ஓரம் கட்டினேன். அருகில் போக முடியாதவாறு போலீசார் தடுப்பு போட்டிருந்தார்கள். பிணப்பையில் பொதி செய்யப்பட்ட உடலொன்றை காவுவண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அவசரமாக சபீதாவின் போனுக்கு அழைத்தேன். நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த போலிஸ்காரரிடம், ‘என்னாச்சு’ என்றதும், விறைப்பாக ‘ஒரு வன்முறை இடத்தை விட்டு நகருங்கள்’ என்றார். அதுவரை அங்கு நின்றிருந்த ஒரு பெண்மணி மெதுவான குரலில்  இந்த குடியிருப்பில் ஒரு நர்ஸ் இருக்கிறாள். எங்கேயோ போய் விட்டு இன்று காலையில் தான் வந்தவள். தன் காதலனை கொலை செய்து விட்டாளாம். ஏனென்று தெரியவில்லை என்றாள். அப்போ விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துவரப்பட்ட  சபீதா என்னை கவனித்திருக்க வேண்டும். தலையை குனிந்த நிலையிலேயே காவல்துறை வாகனத்தில் ஏறிக்கொள்ள, பின்னாலேயே பெண் போலிஸ் ஒருவர் ஜோயை அணைத்தபடி அழைத்துக்கொண்டு வந்து இன்னொரு வாகனத்தில் ஏற்றினார். அவன் வாயில் லாலி பாப் …….

புனிதப்போர்-சிறுகதை

$
0
0

 

புனிதப்போர்-சிறுகதை-சாத்திரி

சாத்திரி
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

2005-ம் ஆண்டு யூலை மாதம் 25 நள்ளிரவை தாண்டிய நேரம் பிரான்சின் அதிபருக்கு உளவமைப்பன டி ஜி எஸ்  சின் தலைவரிடமிருந்து அவசரமாக சந்திக்கவேண்டும்  மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரும் உடனிருந்ததால் விரும்பத்தக்கது என்றொரு தகவல் வந்திருந்தது.சிறிது நேரத்தில் அதிபரின் வீட்டிலேயே அந்த இரகசிய சந்திப்பு நடை பெற்றது. ஆப்கானிலிருந்த பிரெஞ்சு இராணுவத் தளத்திலிருந்து சங்கேத மொழியில் புலனாய்வு பிரிவு அனுப்பிய அந்த செய்தியை உளவமைப்பின் தலைவர் விபரமாக சொல்லி முடித்தபின்னர்,

“எல்லாமே தயார் நிலையிலுள்ளது. திட்டம் கூட வகுத்து விட்டார்கள்.உங்களின் சம்மதம் மட்டுமே போதும். நாளை காலை சூரியன் உதிக்கும்போது உலகம் முழுவதுக்குமே மகிழ்ச்சியான செய்தியை எங்கள் படை வீரர்கள் கொடுப்பார்கள்.”

என்று விட்டு அதிபரையே உற்றுப்பார்த்தார். எதுவும் பேசாத அதிபரோ மூன்று சம்பெயின் கிளாஸ்களை எடுத்து மேசையில் வைத்தவிட்டு பிரிஜ்சை திறந்து சம்பெயினை எடுத்து முடிந்தளவு சத்தம் வராமல் திறந்தவர் கிளாசில் ஊற்றி பொங்கும் நுரைகளோடு இருவர் கைகளிலும் கொடுத்து,’இது உங்கள் திட்டம் வெற்றியடைவதுக்காக’ என்று  சியஸ் சொல்லி சிரித்தார்.

000000000000000000000

அரபிக்கடலில் நங்கூரமிட்டிருந்த மிதக்கும் இராணுவத் தளமான சாள் டி கோல் விமானம் தாங்கி கப்பலில் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வீச்சு விமானங்களில் இரண்டு ரஃபேல் எம் மாடல் விமானத்தின் எரிபொருள் மற்றும் பொருத்தப்பட்டிருந்த ஏவு கணைகள் எல்லாம் சரி பார்க்கப் பட்டிருந்தது. சீருடை அணிந்து ஹெல்மெட்டோடு ஜோனும் பிலிப்பும் தயார் நிலையில் நின்றிருந்தனர். ஜோன் முதலாவதாகவும் முப்பது செக்கன்  இடைவெளியில் பிலிப் இரண்டாவது விமானத்தையும் கிளப்ப வேண்டும். இருவருமே விமானத்தில் ஏறி அமர்ந்ததும் ஜோன் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு சட்டைப் பையிலிருந்த படத்தை எடுதுப்பார்தான். மகன் ரயனை அணைத்தபடி காதல் மனைவி சோபி சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் கிளம்புவதுக்கான சமிக்கை கிடைத்தது. ‘இது என் தேசத்துக்கான யுத்தம் இதில் நான் வெற்றி பெற வேண்டும் என் இலக்கு தவறிப்போய் விடக்கூடாது’ என்று நினைத்தபடி வானத்தை அண்ணாந்து பார்த்து சிலுவை போட்டுக்கொண்டவன், கை கட்டை விரலை உயர்த்திக்கட்டி விட்டு காற்றை கிழித்துக்கொண்டு கப்பலை விட்டு கிளம்பினான். திட்டத்தின் படி இலக்கை முதலில் அவன் தாக்க வேண்டும். இலக்கு தவறினாலோ,ஏதும் பிசகினாலோ, ஏன் அவன் விமானம் சுடப்பட்டலோ அடுத்து வரும் பிலிப் அந்த இலக்கை தாக்க வேண்டும். எது எப்பிடியோ ஜோனுக்கு இதுதான் கடைசி தாக்குதல். புற்று நோயால் அவதிப்படும் தன் மனைவியை அருகிலிருந்து கவனிக்க பதவி விலகல் கடிதத்தை ஏற்கனவே கொடுத்து விட்டான். இந்த தாக்குதலில் தான் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதுக்காகவே விமானம் கிளம்பிய பின்னர் இன்னொரு தடவை சிலுவை போட்டுக்கொண்டான். சில நிமிட பறப்பின் பின்னர் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் நேவ்மலைப்பகுதியில் இருந்த அவன் இலக்கு ராடர் திரையில் மங்கலாக தெரிந்த அதே நேரம் ராணுவ கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்தும் கட்டளை கிடைத்தது. செங்குத்தாக விமானத்தை கீழிறக்கி இலக்கின் மீது இரண்டு ஏவு கணைகளையும் பாயவிட்டவன் அதே வேகத்தில் மேலே கிளம்பித் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே, இலக்கை அடைந்து விட்டோம். அடுத்த விமானமும் தளம் திரும்புமாறு சங்கேத மொழியில் கட்டளை கிடைத்திருந்தது.

தளம் திரும்பியவனை அத்தனை வீரர்களும் சேர்ந்து தோளில் தூக்கி கொண்டாடினார்கள். அவனோ சட்டைப்பையிலிருந்த படத்தை எடுத்து. ‘என் காதல் மனைவியே என் செல்லக் குழந்தையே நான் வெற்றி பெற்று  விட்டேன்.இதோ வந்து விடுகிறேன்’. என்றபடி முதமிட்டவனை உயரதிகாரி தன் அலுவலகத்துக்கு அழைத்தார். அவர் முன் சல்யூட் அடித்து நின்றவனின் தோளில் தட்டி பாராட்டியவர் சாட்டிலைட் மூலம் கிடைக்கப்பட்டிருந்த காணொளியை கணனியில் காட்டினார். மலையடிவாரத்திலிருந்த சிறிய கட்டிடமொன்றை ஏவுகணை தாக்கி வெடித்து பந்து போல் கிழம்பிய புகை மண்டலம் ஓய்ந்த பின். கட்டிடம் இருந்த இடத்தில்  ஒரு பள்ளம் தெரிந்தது. ஆனால் ஜோன் ஒன்றை கவனித்தான், அவன் ஏவிய ஏவுகணை  கட்டிடத்தை தாக்க சில வினாடிக்கு முன் புள்ளியாய் ஒரு உருவம் கட்டிடத்திலிருந்து வெளியேறுவது போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் பார்த்தபோது கலவரமாகவும் இருந்தது. சிறிது நேரத்திலேயே உளவுப்பிரிவின் செய்தி வந்துவிடும் என்று அவன் கையை அழுத்திப்பிடித்து அமைதியாக்கினார் அதிகாரி. சிறிது நேரத்திலேயே தாக்குதல் வெற்றி என்கிற என்கிற செய்தி உளவுப்பிரிவிடமிருந்து வந்துவிட்டிருந்தது.

000000000000000000000

கடந்த காலங்களில் ஆபிரிக்க அரபு நாடுகளில் அவன் நடத்திய தாக்குதல்களுக்காக பாராட்டி கொடுக்கப்பட்டிருந்த கேடயங்கள் பதக்கங்களோடு  புதிதாக இன்னொரு பதக்கமும் அந்த வரவேற்பறையை வடிவாக்கிக்கொண்டிருக்க, அவனது சீருடையும் அங்கேயே தொங்கிக்கொண்டிருந்தது.

‘அல்கெய்தாவின் முக்கிய தளபதியான ஓமர் அப்துல்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டான். அவனது மனைவி குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.’’என்கிற செய்தி உலகம் முழுதும் அலறிக்கொண்டிருக்கும் போது, மகன் ரயனை ஒருபக்கமும் மெலிந்து போய் முடியெல்லாம் உதிர்ந்த தலையில் துணியொன்றை கட்டியிருந்த மனைவி சோபியை மறுபக்கமும் அணைத்தபடி செய்தியை பார்த்துக்கொண்டிருந்தான் ஜோன். அப்போ அவன் பக்கம் திரும்பியவள்,

“ஜோன் எனக்கொரு சத்தியம் செய்து கொடுப்பாயா..?”

“உனக்காக என்ன வேணுமானாலும் செய்வேன். என் காதலே .. சொல்.”

“ஒரு வேளை நான் இறந்துபோனால் நீ இன்னொரு துணையை தேடிக்கொள். அடுத்து மகன் ரயனை ஒரு போதும் உன்னைப்போல் ஒரு ஆள்கொல்லி விமானியாக்கி விடாதே. யுத்தம் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நான் படும் வேதனைகளை உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதன் விளைவுதான் எனக்கு இந்த நோயாக மாறியிருக்கக் கூடும்.”

சொல்லும் போதே வார்த்தைகள் அடைத்து கலங்கியவளை இழுத்து நெற்றியில் முதமிட்டவன்,

“சே .. என்ன இது. நானிருக்கிறேன். உனக்கு ஒன்றும் நடக்காது. ரயனை நிச்சயமாக விமானியாக்க மாட்டேன். பிரிவின் வேதனை எனக்கு நன்றாகவே தெரியும்.” என்றபடி அவள் கண்களை துடைத்து விட்டான் .

உலகின் சிறந்த ஆள்கொல்லி விமானி  இப்போ சிறந்த சமையல்காரனாகி விட்டி ருந்தான். அவனின் அன்பு அரவணைப்பு அத்தனையும் இருந்தாலும் சோபியை  காப்பாற்ற முயுடியவிலை. சோபியின் மரணம் ஜோனை வெகுவாகவே பாதித்திருந்தாலும், ரயனை கவனித்துக்கொள்ள அதிலிருந்து மீண்டு வரப் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. இப்போதெல்லாம் அவனின் அன்றாட கடமையாக காலை எழுந்து சமையல் செய்து ரயனை தயார்ப்படுத்தி  பாடசாலையில் கொண்டுபோய் விட்டு விட்டு, வழியில் உள்ள பூக்கடையில் வெள்ளை ரோஜா மலர்க் கொத்தொன்றை வாங்கிக் கொண்டு சோபியின் கல்லறைக்கு சென்று அதை வைத்துச் சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து விட்டு நேராக விசா வழங்கும் அலுவலகத்துக்கு வந்து விடுவான்.

இங்குதான் எனக்கு ஜோன் அறிமுகமாகியிருந்தான். கடந்த காலங்களில் ஆபிரிக்கா அரபு நாடுகளில் பணியாற்றியதால் அரபியை சரளமாக கதைக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக்கொண்டிருந்தான். தன் தேசத்துக்கென நடத்திய குண்டுத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப் பட்டார்கள் அதிலெத்தனை அப்பாவிகள் குழந்தைகள் என்கிற கணக்கெல்லாம் அவனுக்குத்தெரியாது. யுத்தகளதில் உயிர்கள் என்பது வெறும் இலக்கங்களே. அந்த இலக்கங்களின் பின்னால் உயிரோடு கலந்த உணர்வுகளும் உறவுகளும் இருந்திருக்கும் என்பதை சோபியின் இழப்பின் போதுதான் உணர்ந்திருந்தான். அவற்றுக்கெல்லாம்  ஏதாவது கைமாறு செய்ய நினைத்தவன், யுத்தம் நடக்கும் ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு வதிவிட உரிமை வாங்கிக் கொடுக்க மொழிபெயர்ப்பு வேலைகளை இலவசமாகவே செய்யத் தொடங்கியிருந்தான். அது அவன் மனதுக்கும் பிடிதிருந்தது. அந்த இடதில் உனக்கென்ன வேலையென நீங்கள் யோசிக்கலாம். ஜோனைப்போலத்தான் சம்பளமில்லாத உத்தியோகம். என் நகரதில் வசிக்கும் எம்மவார்களுக்காக மொழிபெயர்ப்புக்கு செல்வேன். அப்படியான நேரதில் வேறு வேலைகள் ஏதுமிருப்பின் கூட்டிச்சென்ற நபரை அறிமுகப்படுத்தி விபரத்தை சொல்லி விட்டு சென்றால் ஜோன் எல்லாமே செய்து கொடுப்பான். மற்றும்படி  யுத்தம் பற்றிய கதைகளை தவிர்த்து மிகுதி எல்லாமே கதைப்போம். காலம் எல்லாவற்றையும் விழுங்கியபடி தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் அகதிகளாக எம்மவர்கள் வருவதும் குறைந்துவிட, நானும் விசா அலுவலகம்  போகும் தேவையில்லாததால் ஜோனை சந்திப்பதும் குறைந்து போய் விட்டிருந்தது. இந்த  வருட ஆரம்பத்தில் கையில் மலர்க்கொத்தோடு சோபியின் கல்லறைக்கு சென்றுகொண்டிருந்த வழியில் சந்தித்தவன், ‘ ரயன் காவல்துறையில் சேர்ந்து பயிற்சிக்காக சென்றிருப்பதாகவும் அவன் விமானப் படையில் சேராதது சோபிக்கு மகிழச்சியாக இருக்கும்’ என்று சொல்லி சிரித்துச்சென்றான்.

000000000000000000000

அன்றும் வாழமை போல விசா அலுவலகம் சென்றிருந்தவனை நோக்கி, ‘அஸ்சலாமு அலைக்கும்’ என்றபடி முன்னால் வந்து நின்றவனை பார்த்தான். பரட்டைத் தலை, இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடை  அழுக்காகி கசங்கிப்போயிருந்தது. இருபது மதிக்கத்தக்க களைத்துப் போயிருந்த முகம்.

“நான் ‘மசூத்’ ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறேன்.” என்றான். ஆப்கான் என்றதுமே ஜோனுக்கு அவன்மீது ஒரு அக்கறை அவனையறியாமலேயே வந்திருந்தது.  கடவுச்சீட்டை வாங்கி அகதி விண்ணப்ப படிவத்தில் பெயர் விபரம். அகதிக்கோரிக்கைக்கான விபரங்களை எழுதி அவனிடம் கையெழுத்து வாங்கியவன், அவனின் படத்தையும் இணைத்து அலுவலகத்தில் கொடுத்து தற்காலிக விசா ஒன்றை வாங்கிக்கொடுத்தான். மறுநாள் அவனை வரச்சொல்லி மகன் ரயனின் அதிகம் பாவிக்கப்படாத உடைகளையும் எடுத்துப்போய் கொடுதிருந்தான். பின்னர், மசூத்தை  சந்திக்கும் போதெல்லாம் அக்கறையோடு விசாரித்து பணஉதவிகள் கூட அவ்வப்போது செய்திருக்கிறான்.

இன்று ஜோனுக்கு முக்கியமான நாள். வழமையை விட நேரத்துக்கே எழுந்து பரபரப்பாகவே இருந்தான். காரணம், காவல்துறை பயிற்சியை முடித்து வந்திருந்த ரயன் இன்று கடமையை பொறுபேற்கப் போகும் நாள். சீருடை அணிந்தபடி கம்பீரமாக முன்னே வந்து நின்றவனை கட்டியணைத்து முத்தமிட்டான்.

“வா முதலில் உன் அம்மாவிடம் போய் ஆசிகள் வாங்கிக்கொண்டு அப்படியே தேவாலயத்திற்கும் சென்று வணங்கிவிட்டு  நீ உன் பணிக்காக செல்… நான் விசா அலுவலகம் செல்கிறேன்.” என்றவன், போகிற வழியிலேயே வழமைபோல் பூக் கடைக்குச் சென்று வழமையை விட அதிகமான மலர்களால் செய்த பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு சவக்காலைக்கு சென்று சோபியின் கல்லறையில் காய்ந்து கிடந்த மலர்களை சுத்தம் செய்து புதிய மலர்க்கொத்தை வைத்து மண்டியிட்டான். கண்மூடி தலை குனிந்து,

‘என் காதல் மனைவியே எங்கள் காதலின் அடையாளம் ரயன் இதோ நிற்கிறான். உனக்கு வாக்கு கொடுதபடியே அவனை இராணுவதில் இணைக்காமல் காவல்துறை அதிகாரியாக்கி என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி உன்னோடு வந்து சேரும் காலத்தை நாட்களாக எண்ணிக் கடப்பதைத் தவிர எனக்கு வேறு பணிகள் ஏதுமில்லை.

என்று சிலுவை போட்டுக் கொண்டு கண்களில் வழிந்த நீரை ரயனுக்குக்கு காட்டிக் கொள்ளாமல் துடைத்துக்கொண்டவன் அடுத்ததாக ரயனோடு தேவாலயதிநூள் நுழைந்திருந்தான். தேவாலயத்துக்கேயுரிய நிசப்தத்தில்  பத்துப் பேரளவில் பிரார்த்தனையில் இருந்தனர். அவர்கள் ஏற்றி வைத்த மெழுகு வர்த்திகளின் ஒளியில் என்னால் எதுவுமே முடியாதென கையை விரித்தபடி சிலுவையிலறையப்பட்ட  ஏசுநாதர் மங்கலாகத் தெரிந்தார். வரிசையாக அடுக்கப் பட்டிருந்த வாங்குகளின் கடைசி வரிசையில் ரயன் நின்று கொள்ள. மெழுகு வர்திகளை  ஏற்றுவதுக்காக ஜோன் முன்னே சென்றிருந்தான். அப்போ பின் பக்கமிருந்து சலசலப்பு சத்தம் கேட்டு திரும்பிய ஜோன் திடுக்கிட்டு நின்றான். ரயனின் கழுதில் கத்தியை ஒரு கை அழுத்திப் பிடித்திருக்க மறு கை அவனின் தலை முடியை கொத்தாக பிடித்து பின்பக்கமாக  இழுத்து அண்ணாந்த நிலையில் வைத்த படி மசூத், ‘யாரும் வெளியே போகக்கூடாதென’ அரபியிலும் அரை குறை பிரெஞ்சிலும் கத்திக்கொண்டிருந்தான். கையிலிருந்த மெழுகு வர்த்திகளை  எறிந்துவிட்டு முன்னே சென்ற ஜோன்,

“மசூத் இங்கே என்ன செய்கிறாய்..?  உன் மூளையை  தவறவிட்டு விட்டாயா? என்று கத்தினான். மசூத்தும் ஜோனை அங்கு எதிர்பார்திருக்கவில்லை.

“நீ இங்கே என்ன செய்கிறாய்? இது எனக்கு கணக்கு தீர்ப்பதுக்கான நேரம்.”

“மசூத் உன் பிடியிலிருப்பது என் மகன். அவனை விட்டுவிடு. கத்தியை கீழே போடு.”

“இல்லை எனக்குத் தெரியும். நீ மிக நல்லவன், இவனைக் காப்பாற்ற பொய் சொல்கிறாய்.”

“அவன் என் மகன் தான். இதோ இங்கிருக்கும் கர்த்தர் மீது சத்தியமாக சொல்கிறேன் என்னை நம்பு.”

லேசாக புன்னகைத்தபடியே,

“அது கடவுளல்ல, சாத்தான். அது வெறும் சிலை,  ஹராம். அல்லாஹ் ஒருவனே இறைவன். இறுதியாக ஒரு சந்தர்ப்பம் தருகிறேன், வெளியே போய் விடு.”

“அவசரப்படாதே மசூத் நீ வாழ வேண்டிய இளைஞன், அதுக்கான வழிகள் ஏராளம் இங்கு நிறைந்து கிடக்கிறது. உனக்கு நானே உதவுகிறேன். தயவு செய்து சொல்வதைக்கேள்.”

“இங்கு நடப்பது புனிதப் போர் ஜோன். உனக்கது புரியாது. நான் வாழ்வதுக்காக இங்கு வரவில்லை. நான், என் நாட்டில்  ஒரு குண்டு வீச்சில் எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவன். என் குடும்பதில் அத்தனை பேரும் கொல்லப் பட்டபோது ‘அல்லாஹ்’ என்னை மட்டும் காப்பாற்றியிருக்கிறானென்றால் ஏதோ காரியம் அவனுக்கு நடக்க வேண்டியிருந்திருக்கிறது, அது தான் இது.”

“யுத்தத்தில் புனிதமென்று ஏதுவுமில்லை, சிலரின் சுயநலனே உள்ளது. அதுக்கான பலியாடுகள் நாங்கள்.” என்றபடி ஜோன் மசூத்தை நோக்கி முன்னேறினான். வெளியே காவல்துறை வாகனத்தின் சைரன் ஒலி கேட்கத்தொடங்கியிறருந்தது.

“ஜோன் உனக்கான நேரம் மட்டுமல்ல இங்குள்ள அனைவரோடும் சேர்த்து எனக்கான நேரமும் முடிந்து விட்டது என்னை மன்னித்துக் கொள்.” என்றபடி வியர்த்து வழிந்துகொண்டிருந்த ரயனின் கழுதில் இருந்த கத்தியை மேலும் ஆழமாக அழுத்தி ‘சரக்’ என்று இழுத்தவன் ‘அல்லாகு அக்பர்…….’ என்று கத்தினான். பெரும் வெடியோசை சத்தத்தால் அந்தப் பகுதி மட்டுமல்ல கை விரித்து நின்ற கர்த்தரும் அதிர்ந்து போனார். ஜோனின் உடலையும் குண்டுச்சிதறல்கள் துளைத்துச்செல்ல மயங்கிச் சரிந்தவனின் கண்ணில் மங்கலாக நேவ் மலைப் பகுதியிலிருந்த கட்டிடதிலிருந்து புள்ளியாய் ஒரு உருவம் வெளியேறிக்கொண்டிருந்தது.

பிற் குறிப்பு :

29.10.2020 அன்று நான் வசிக்கும் நீஸ் நகர தேவாலயதில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவதை வைத்து இக்கதை எழுதப்பட்டது .


நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி

$
0
0

 

நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி

கோமகன் : அதென்ன சாத்திரி ………. ?

சாத்திரி : அது என்னுடைய நண்பன் ஒருவனின் புனை பெயர்தான். திருகோணமலை குச்சவெளி கரையோர கிராமத்தை சேர்ந்தவன். சிறந்த  மாலுமி. சிறந்த போராளி நிச்சயம் ஒரு சிறந்த சமையல்காரனாக இருப்பான் என்று சொல்வார்கள், அதே போல அவனும் சிறந்த சமையல்காரன். ஒரு கடல் விபத்தில் இறந்து போய் விட்டான். அந்த சம்பவமோ அவன் பெயர் விபரமோ வெளியே தெரிய வந்திருக்கவில்லை. அப்படிப் பலர் இருக்கிறார்கள். பின்னர் நான் எழுத தொடங்கியபோது அவனின் புனை பெயரை எனதாக்கிக் கொண்டேன்.

சாத்திரி
ஓவியம் : எஸ். நளீம்

இன்னுமொரு காரணமும் உண்டு:

பொதுவாக எமது மக்கள்  ஒரு செயலை அல்லது நிகழ்வை செய்ய முன்னர் ஊரிலுள்ள சாத்திரியார் ஒருவரிடம் போய் நல்ல நேரமோ ஆலோசனையோ கேட்கும் பழக்கமுள்ளது. அவர் வாயில் வந்த எதை சொன்னாலும் அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்கிற ஒரு நம்பிக்கை மக்களிடமுண்டு. அதே போல கடுமையான என் கட்டுரைகள் வெளியாகும் போது சாத்திரியார் சொன்னா சரியாகத்தானிருக்கும் என்கிற மனோ நிலைக்கு மக்கள் பொருந்திப்போய் விடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருந்ததும் ஒரு காரணம்.

கோமகன் : எழுத்துப்பரப்பில் நீங்கள் ஒரு கலகக்காரராகவே அறியப்பட்டிருக்கின்றீர்கள்கலகம் செய்வதில் அவ்வளவு விருப்பமா என்ன ?

சாத்திரி : நான் கலகம் செய்ய வேண்டுமென்று நினைத்து வீதியில் வந்து கம்பு சுத்துவதில்லை. சிறிய வயதில் என் நண்பியொருத்தி பாடசாலை சீருடை போடவில்லையென சாதியின் பெயர் சொல்லி ஆசிரியை அடித்து பாடசாலையை விட்டு வெளியேற்றியதை பார்த்து தங்கையின் சீருடையைக்  களவெடுத்து நண்பிக்கு கொடுத்து வீட்டில் அடி வாங்கியதிலிருந்து, 83-ல் தெற்கில் கலவரம் நடந்தபோது அதுக்கு  எந்த சம்பந்தமும் இல்லாமல் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் மாணவனாக இருந்த நான் போராட போகவேண்டுமென்று முடிவெடுத்ததில் இருந்து, எல்லோரும் கண்டும் காணாமல் போகின்ற அசாதாரண சம்பவங்களை நின்று ஏன் என்று கேட்கிற அந்த உணர்வு எழுத்துகளிலும் வெளிப்பட்டிருக்கும். ஏன் எதுக்கு என்று கேட்கிற எல்லோருமே  மனித வரலாற்றில் கலகக்காரர்களாகவே அறியப்பட்டிருகிறார்கள். அதன் வரிசையில் ஏதோ என்னால் முடிந்தது. அது கலகமாக மற்ரவர்களுக்கு தெரியலாம்!

கோமகன் : நீங்கள் ஒரு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டுஇது தொடர்பாக…………?

சாத்திரி : உண்மைதான். நானே சொல்லிக்கொண்டதில்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. காரணம், நெளிந்து போயிருக்கும் இலக்கியத்தை தட்டி நிமிர்த்துகிறேன் என்றோ, இலக்கியம்  ஒரு பக்கமாகவே காய்ந்து கொண்டிருக்கே அப்பிடியே நெம்பிக்  கிளப்பி மறுபக்கமும் காயப்போடுகிறேன் என்று சொல்லிக்கொண்டோ. தமிழைத் தண்ணியூற்றி  வளர்கிறேன் என்று சொல்லிக்கொண்டோ எழத வரவில்லை. எனக்கு தோன்றியதை எழுதினேன். எழுதுவேன் … அதனால் தான் தட்டையான உருண்டையான மேடு பள்ள விமர்சனங்களை சிரித்துக்கொண்டே கடந்து விடுகிறேன்.

கோமகன் : இலக்கை நோக்கி செல்பவரைத்தான் இலக்கியவாதி என்று சொல்வார்கள்அனால் உங்கள் கருத்தின்படி பார்த்தால்இலக்கு இல்லாதவர் எப்படி எழுத்தாளராக முடியும் ?

சாத்திரி : அதனால் தான் சொன்னேன் எனக்கு எந்த இலக்குமில்லை.  நான் இலக்கிய வாதியுமில்லை என்று. எனவே நான் எழுத்தாளனுமில்லை. கிறுக்கி விட்டுப்போகும் கிறுக்கன் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

கோமகன் : யாழ் இணையத்தின் கருத்துக்களத்தின் நாங்கள் இருவரும் இணைந்திருந்தோம்இன்றும்கூட நீங்கள் அதில் மூத்த உறுப்பினராக இருக்கின்றீர்கள்அந்த வகையில் யாழ் இணையம் தொடர்பாக உங்கள் அனுபவங்கள் எப்படி இருந்தது ?

சாத்திரி : யாழ் களம் பலரைப்போலவே எனக்கும் கணனியில் தமிழை எழுதக் கற்றுக்கொண்ட இடம் மட்டுமல்ல கிறுக்கத் தொடங்கிய இடமும் கூட. வெளிநாடுகளில் எம்மவர்களின் சமூக அவலங்களை ‘ஐரோப்பிய அவலம்’ என்ற பெயரில் நான் எழுதி இயக்கிய நகைச்சுவை நாடகமாக்கியபோது பெரும் வரவேற்பை  பெற்றுக்கொடுத்த இடம் மட்டுமல்ல நிறைய நட்புகளையும் பெற்றுக்கொடுத்த இடம்.

2009-ல் ஏற்பட்ட தமிழரின் தோல்வியானது பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு ஏமாற்றத்தையும் சோர்வையும் கொடுத்திருந்தது. பலர் அன்றைய யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளமறுத்தார்கள். நான் உண்மை நிலவரங்களை எடுத்துச் சொல்ல முயன்றபோது முரண்பாடுகளே அதிகரித்தது. அந்த சோர்வு எனக்கும் வந்தபோது நானும் கொஞ்சம் கொஞ்சமாக யாழ் களத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதனை இன்றும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவல் எழுதவேண்டிய முகாந்திரம் தான் என்ன?

சாத்திரி : பெரிய புரட்டிப்போடும் காரணம் எதுவுமில்லை. பொது வெளியில் அறியப்படாத எனக்குத் தெரிந்த சில விடயங்களை எழுதத் தோன்றியது. எனக்கும் நேரமிருந்தது, அவ்வளவு தான்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவல் ஏன் கேர்ணல் ஹரிஹரன் முன்நிலையில் வெளியீடு கண்டது?

சாத்திரி : ஹரிகரன் முன்னிலையில் வெளியிடஅவர் ஒன்றும் என் குலசாமியோ இனத்தலைவரோ அல்ல. நூல் விமர்சனத்துக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஏழுபேரை அழைத்திருந்தேன். அதில் இயக்குனர் வீ.சேகர் தீவிர தமிழ்தேசியவாதிகளின் அழுத்தத்தால் கலந்து கொள்ளவில்லை. திராவிட கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி ஹரி கரனுடன் ஒரே மேடையில் அமரமாட்டேன் என்று மறுத்து விட, தோழர் ஆதவன் தீட்சண்யா ,பத்திரிகையாளரும் இலங்கை பிரச்சனையில் நீண்ட அனுபவமும் கொண்ட  பகவான் சிங், மனிதவுரிமை செயற்பாட்டாளர் அக்கினி சுப்பிமணியம், இலங்கை யுத்தத்தில் நேரடி அனுபவம் கொண்ட கருணாகரன் இவர்களோடு கேணல் ஹரிகரனும் கலந்து கொண்டிருந்தார்.

கோமகன் : உங்கள் கருத்துப்படி பார்த்தாலும் மற்றையவர்களைதவிர்த்து  கேர்ணல் ஹரிகரன் இந்தியப்படை காலத்தில் உங்களுக்கு எதிர் முகாமில்  நேரெதிரில் யுத்தகளத்தில் சந்தித்த ஒருவர்அவரை நிகழ்வுக்கு அழைத்தது தானே பலராலும் விமர்சனத்துக்கு உட்படுத்தப் பட்டது?

சாத்திரி : உண்மை. நான் அவரை விருந்தாளியாக அழைக்கவில்லை, விமர்சகராகவே அழைத்திருந்தேன். அடுத்து நேர்எதிரில் யுத்தம் செய்த இலங்கையரசோடும்  இந்திய அரசோடும் தான் புலிகள் பலதடவை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவரை புலிகளுக்கு எந்த சிக்கலும் இருந்திருக்கவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு உள்ளே வரும்போது அது உள்ளே வருபவருக்கே இலாபமாக அமையும். புலிகளுக்கும் அதுதான் நடந்தது. உள்வீட்டு பிரச்சனை தொடக்கம் உலகப்பிரச்னை வரை உள்ளே வரும். மூன்றாம்நபரே இலபமடைகின்றனர். அதனால் தான் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட  நாங்களே மனம்திறந்த ஒரு கலந்துரையாடலை நடத்துவது மட்டுமல்ல அரசியல் வாதிகளின் தவறான வழிகாட்டல்களால் இலங்கையில் இந்தியப்படைகளால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை  ஒதுக்கொண்டிருந்ததோடு அதுபற்றி விரிவாகவும் பேசியிருந்தார். எனக்கு கிடைத்த வெற்றியாகவே நான் அதனை கருதுகிறேன். மற்றும்படி சிலரின் வெற்றுக்கூச்சல்களை  நான் கவனத்திலெடுப்பதில்லை.

கோமகன் : ஆனால் ஜெயமோகன் போன்றோர் இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்கின்றார்களே?

சாத்திரி : யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட என் போன்றோர் நீண்ட காலமாகவும் சம்பத்தப்பட்ட இராணுவத் தளபதிகளும் அதிகாரிகளும் காலம் தாழ்த்தியாவது உண்மைகளை ஒத்துக்கொண்ட பின்னரும் ஜெமோ போன்றவர்கள் அடித்து சத்தியம் செய்வதுக்கான காரணம், அவர்களே இந்திய தேசியத்தை தோளில் தூக்கி சுமப்பது போலவொரு கற்பனையில்  வாழ்கிறவர்கள். அவர்கள் உண்மையை ஒத்துக்கொண்டால் அந்த வினாடியே இந்திய தேசியம் சுக்குநூறாய்  சிதறிவிடும். அது மட்டுமில்லை அவர் கற்பூரம் கொளுத்த தீபெட்டி, தீ குச்சு எடுத்துக்கொடுத்து விட்டு பய பக்தியோடு அவரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிக்கும் எங்கள் இலக்கியச் செம்புகளும் ஒரு காரணம்.

கோமகன் : ஆயுத எழுத்து நாவலில் நீங்கள் சொல்ல நினைத்தது அத்தனையும் சொல்லி முடித்து விட்டீர்களா?

சாத்திரி : இல்லை. முதலில் அது நாவலா இல்லையா என்பதை படிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். அடுத்து, நான் சொல்ல நினைத்ததில் நாற்பது வீதம்தான்  சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். முக்கியமாக, எல்லோராலும் ‘சகோதர படுகொலை’ என்று அழைக்கப்பட்ட டெலோ மீதான தாக்குதல். யாழில் முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பன. இந்த இரண்டு தரப்புமே புலிகள் மீதான வசைபாடலையும் ஆதங்கத்தையுமே கொட்டித் தீர்த்தனரே தவிர யாரும் சரியான முறையில் அதனை பதிவு செய்திருக்கவில்லை. இவையிரண்டையும் நான் ஆயுத எழுத்தில் பதிவு செய்திருக்கிறேன் என்கிற திருப்தி எனக்குண்டு.

கோமகன் : ஆனால் நீங்கள் புலிப்பார்வையில் தான் ஆயுதஎழுத்தை முன்னெடுத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றதே ?

சாத்திரி : நான் என் கண்னால் தானே பார்க்க முடியும். அப்படியே எனக்கு இன்னொருவர் கண்தானம் செய்திருந்தாலும் என் மூளை மடிப்புகளில் இருந்தவை தானே வெளியே வரும்.

கோமகன் : அப்போ மீதி அறுபது வீதம் எப்போ உங்கள் எழுத்தில் வருமென எதிர்பார்க்கலாம் ?

சாத்திரி : அது தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் யுத்தங்களை சந்தித்து தோற்றுப்போன அத்தனை நாடுகளும் அத்தனை இனங்களும் அதிலிருந்து பாடங்களை கற்று பிழைகளை சரி செய்து  தங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி வேகமாக முன்னேறியிருக்கின்றன. ஆனால்  முப்பது வருடங்கள் கொடுமையான யுத்த அனுபவங்களை கொண்ட நம்மவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் மிக வேகமாக ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்றிருகிறார்கள். சாதியம், சீதனம், பெண்ணடிமை, வன்முறை, போதைப்பொருள் பாவனை என்று புலிகள் காலத்தில் புதைக்கப்பட்டிருந்த அத்தனையையும் தோண்டியெடுத்து புளி போட்டு மினுக்கிப் பூசை செய்துகொண்டிருகிறார்கள். கடந்தகால அனுபவங்களோ எழுத்துக்களோ எம்மவர்களை வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு அற்றுப்போய் விட்டதால் அனுபவங்களை எழுதுவதால் பிரயோசனமில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டேன்.

கோமகன் : பாரிஸில் இடம்பெற்ற ஆயுத எழுத்து வெளியீட்டு நிகழ்வில் என்னதான் நடந்தது ?

சாத்திரி : பாரிஸில் தமிழ் இலக்கியத்தை ஏகபோக குத்தகைக்கு எடுத்து வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகரும், எழுத்தாளரும், தலித்திய வேடம் போடும் கத்தோலிக்க வெள்ளாளருமான சோபாசக்தி என் நிகழ்வை குழப்ப சிலரோடு சேர்ந்து ஒரு முயற்சியை எடுத்தார். அந்த முயற்சி பற்றிய உரையாடல் பதிவு எனக்கு கிடைத்திருந்தது. இப்போதும் என்னிடமுள்ளது. அது எனக்கு தெரிந்து விட்டது என்றதும் முக நூலில் என்னை தடை செய்து விட்டு ஒடிவிட்டார். இப்போதும் எங்காவது கருத்துரிமை, பேச்சுரிமை பற்றி வகுப்பெடுதுக்கொண்டிருப்பர் என நினைக்கிறேன். ஆனாலும் நிகழ்வு நல்லபடியாகவே நடந்து முடிந்தது.

கோமகன் : சமகால இலக்கிய செல்நெறி குறித்து உங்கள் அவதானிப்புகள் தான் என்ன?

சாத்திரி : வளர்ந்து விட்ட நவீன தொழில் நுட்பம் நிறையப்பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவரவர் தாங்கள் நினைத்ததை உடனேயே எழுதிவிடலாம். அண்மையில் கூட ‘சாவு குருவி’ என்றொரு கதை படித்திருந்தேன். யாரோ சிந்துஜன் என்பவர் எழுதியிருந்தார். அதன் பாதிப்பிலிருந்து வெளியேற சிறிது நேரமெடுத்து. அப்படி வித்தியாசமான எழுத்து நடையோடு பலர் வருகிறார்கள். ஒரு நல்லது இருக்கும்போது ஒரு கெட்டது இல்லாமல் எப்படி? அது என்னவென்றால்: எழுத்தாளர் என சொல்லிக்கொள்ளும் சிலர் நீட்டி நிமிர்ந்து படுக்க முடியாமல் குப்புறவே படுத்திருப்பார்கள் என நினைகிறேன். ஏனென்றால் ஒரு கதையை அல்லது நாவலை எழுதி விட்டு நண்பர்கள் நாலுபேரை வைத்து மாறி மாறி முதுகு சொறிந்து கொண்டேயிருப்பது. முதுகு புண்ணாயிடாது……..?

கோமகன் : ஒரு பிரதிக்கு அழகியல் தேவையில்லை என்று எனக்கு முன்பு ஒருமுறை சொல்லியிருந்ததாக நினைவு உண்டுஅழகியல் இல்லை என்றால் அது ஒரு கட்டுரையாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதே ?

சாத்திரி : அழகியல் தேவையில்லை என்று முற்றாக மறுக்கவில்லை. முன்பு போல அதிக வர்ணிப்புகள் தேவையில்லை என்று தான் சொல்லியிருந்தேன். ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நடப்பது போன்றதொரு சிறுகதையை எழுதுவதானாளால் பாரிஸ் நகரம் அதன் சூழல் எப்படியிருக்கும் என்கிற விபரிப்பே பாதிக்கதையில் இருக்கும். சொல்லவந்த கதையின் விடயம் பாதியில்தான் வரும். இப்போ அதே பாரிஸ் நகரத்தில் கதை தொடங்குகிறது என்றதும் வாசகன் கூகிளில் பாரிஸ் நகரத்தை ஒரு வட்டமடித்துவிட்டு கதையை வாசிக்கத் தொடங்கி விடுவான்.

இன்னொரு உதாரணம்: “காலை கதிரவன் மெல்ல கண்விழிக்க, மெல்லப்படிந்திருந்த பனியை உதறி எழுந்த சேவலின் கொக்கரக்கோ கூவலும், குருவிகளின் பாடலும் ,யாரோ முற்றத்தை கூட்டும் விளக்குமாற்று ஈக்கின் கீறல் சத்தமும் என்னை கண் விழிக்க வைத்தது.” என்று எழுதுவதுக்கு பதிலாக : “காலை கண் விழித்தேன்.” என்று தொடக்கி சொல்ல வந்த விடயத்தை  சொல்லி விடலாமென நினைப்பவன் நான். என் எல்லா கதைகளும் அப்படியே எழுதியிருக்கிறேன். என் எழுத்தின் குறை நிறை இரண்டுமே அதுவாகவுமிருக்கும்.

கோமகன் : இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பவர்களில் உங்களை யாராவது பாதித்து இருக்கின்றார்களா?

சாத்திரி : இந்தக்கேள்வியை இரண்டு விதமாக எடுக்கலாம். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று விளங்காமல் தலையை சொறிய வைக்குமளவுக்கு மிக மோசமாக சிலர் பாதித்திருக்கிறார்கள். அவர்கள் காணமல் போய் விடுவார்கள் அல்லது  திருத்திக் கொள்வார்கள். நன்றாக எழுதும் புதியவர்கள் பலர் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை சொல்லி நானே முதுகு சொறிந்து விடாமல் அவர்களாகவே வெற்றி பெறுவார்கள் என எண்ணுகின்றேன்.

கோமகன் : எழுத்துலகில் உங்கள் ஆசான் அல்லது நீங்கள் விரும்பிப் படித்தது யாருடைய எழுத்துக்களை?

சாத்திரி : டால்ஸ் டாய், மார்சிம் கார்க்கி ,வோல்தேயர்,மார்க் ட்வைன் என்று அடித்து விடத்தான் ஆசை. ஆனால் என்ன செய்ய? நான் அதிகம் படித்தது எஸ் போ வையும், செங்கை ஆழியன், மாத்தளை சோமு, சட்டநாதன் இவர்களோடு நிச்சயமாக கல்கி, சுஜாதாவை படிக்காமல் யாரும் இருக்க முடியாது.

கோமகன் : நீங்கள் எழுதிய திருமதி செல்வி சிறுகதையைக் கிழித்து தொங்கப்பட்டிருந்தார்கள்அப்படி என்னதான் வில்லங்கமாக அதில் எழுதினீர்கள்ஏன் அப்படியொரு விமர்சனங்களை அது சந்திக்க வேண்டி வந்தது ?

சாத்திரி : ஒரு உண்மை சம்பவத்தை கதையாக்கியிருந்தேன். யுத்தம் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பந்தாடுகிறது என்பது தான் அந்தக் கதை. எப்போதும்போலக் கலாச்சாரக் காவலர்கள் கம்பு சுத்தினார்கள்  அவ்வளவுதான். வழமைபோல அவர்கள் சுற்றிய சுற்றில் எனக்கு நல்ல காற்று வந்தது.

கோமகன் : நீங்கள் தயாரித்த ஐரோப்பிய அவலங்கள்  நாடகத்தொடர் பல விமர்சனங்களையும் வெற்றியையும் உங்களுக்கு ஈட்டித்தந்ததுஅதனை ஏன் உங்களால் தொடர முடியவில்லை?

சாத்திரி : ஐரோப்பிய அவலங்கள் நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது உண்மைதான். பதின்மூன்று நாடகங்கள் எழுதி இயக்கியிருந்தேன். அது என் நண்பர்களுடனான ஒரு கூட்டுத் தயாரிப்பு. பல்வேறு சிந்தனையும் திறமையும் உள்ள சிலர் இணையும்போது அப்படியான படைப்புகள் இலகுவாக கொடுக்கலாம். அந்த  கூட்டிலிருந்து ஒருவர் பிரிந்து போகும்போது வருகின்ற சலிப்பு ஏமாற்றம் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது. மீண்டும் புதிய நபர்களோடு அதை முயற்சி செய்ய முயலும்போது கால இடைவெளியும் சேர்ந்து முன்பைப் போல ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது. அதோடு காணமல் போய்விடுகிறோம். இது பல வெற்றிகளை கொடுத்த சினிமா கூட்டணிகள் தொடக்கம் ஐரோப்பவில் எம்மவர்களிடம்  பெரும் வரவேற்பை பெற்ற ‘படலைக்கு படலை’ நாடகம் வரை பொருந்தும்.

கோமகன் : ஏறத்தாழ 2005/06 என எண்ணுகின்றேன்நீங்கள்சயந்தன்சபேசன்ரவி என நால்வர் கூட்டணி ஊடகத்துறையில் கோலாச்சியிருந்தீர்கள்பின்னர் ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து போனீர்கள்இந்தப் பிரிவுக்கு ஏதாவது காரணங்கள் இருந்ததா ?

சாத்திரி : ஊடகத் துறையில் நான்கோலேச்சினேன் என்று சொல்ல முடியாது. சில கட்டுரைகள் பெரும் சர்ச்சைகளை  கிளப்பியது உண்மை. அதே நேரம் சாத்திரி என்றொரு நபரை பலரும் அடையாளம் கண்டு கொண்டனர். மற்றும்படி நாங்கள் சேர்ந்தோ பிரிந்தோ போகவில்லை. அவரவர் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

கோமகன் : எப்படியான சர்ச்சைகளைக் கிளப்பியது ?

சாத்திரி : நிறைய கட்டுரைகள் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதில் முக்கியமானது  21,05,2009 அன்று பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய பின் நான் அவருக்கு எழுதிய அஞ்சலிக்கட்டுரை தீவிர தமிழ்த்தேசிய வாதிகளையும் புலிகளில் பெயரால் வாழ்ந்து கொண்டிருந்தவர்களையும் கடும் கோபத்துக்குள்ளாக்கியது. அடுத்ததாக புலிகளின் சொத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முரணில் பாரிஸில் புலிகளின் பொறுப்பாளர் சுட்டுக்கொல்லப் பட்டதை விபரமாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இவற்றால் ஏகப்பட்ட மிரட்டல்கள் அவதூறுகளை சந்தித்தேன். எல்லோருமே இப்போ காணாமல் போய் விட்டார்கள். நான் எழுதிக்கொண்டே  தான் இருக்கிறேன்.

கோமகன் : பிரான்சிலும் சரி வேறு எந்த இடங்களிலும் சரிசாத்திரி குழுமம் ஷோபாசக்தி குழுமம் என்று இலக்கியப்பரப்பு பிரிந்து போய் இருப்பதாக சொல்கின்றார்களே……. இது உண்மையா உண்மையானால் ஏன் இப்படியான ஒரு நிலை வந்தது ?

சாத்திரி : மற்றையவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு குழு என்று எதுவும் கிடையாது. என்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. எப்போதும்  தனியாகவே தான் இயங்கிக்கொண்டிருகிறேன். மற்றும்படி எப்போதும்போல ஒரு நண்பர் கூட்டம் என்னோடிருக்கும்.

கோமகன் : ஒருமுறை ஷோபாசக்தி என்னிடம் உங்களைப்பற்றி காட்டமான முறைப்பாடுகள் செய்து கொண்டிருந்த பொழுதுஅவரை உங்களுடன் பொதுவிவாதத்திற்கு அழைப்பு விடுத்தேன்அப்பொழுது சயந்தன் உடன் இருந்தார்அது இற்ரை வரை நிலுவையில் உள்ளதுஇது தொடர்பாக …………..?

சாத்திரி : நான் எப்போதும் எவருடனும் பகிரங்கமாக விவாதிக்க தயாராகவே உள்ளேன். முகநூலிலேயே கருத்தாட முடியாமல் தடை செய்துவிட்டு போன ஒருவரோடு எப்படி பகிரங்கமாக விவாதிக்க முடியும்? ஓடுபவரை கலைத்துப்பிடித்து விவாதிக்க முடியாதே…………!

கோமகன் : லண்டனில்  இடம்பெற்ற 40 ஆவது புலம்பெயர் இலக்கியசந்திப்பில் உங்களது அனுபவங்கள் எப்படி இருந்தது?

சாத்திரி : முதன் முதலாக பொதுவெளியில் கலந்துகொண்ட ஒரு கூட்டம் என்பதை தவிர புதுமையான அனுபவங்கள் ஏதுமில்லை. ‘ஒழித்திருந்து எழுதுகிறவன்’ என்று நீண்ட காலமாகவே ஒரு அவப்பெயர் இருந்தது. அதையும் கழுவித் துடைக்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டேன்.

கோமகன் : அந்தப் புலம்பெயர் இலக்கியசந்திப்பில் என்ன காரணத்துக்காக இலக்கியப் பிதாமகர்கள் என்று சொல்லிக்கொள்வோர்கள் உங்களை மறுதலிப்பு செய்ய வேண்டிவந்தது ?

சாத்திரி : என் எழுத்துக்களைத் தவிர வேறென்ன காரணம் இருக்கக் கூடும்? சுற்றி நின்று மன்னிப்புக் கேள் என கூச்சல் போட்டார்கள். நான் எப்போதும்போல கூச்சல்களை கவனதிலெடுக்கவில்லை.

கோமகன் : இந்தப் புலம்பெயர் இலக்கிய சந்திப்புகள் ஏறத்தாழ 49 பாகங்களாக உலகில் பல இடங்களில் நடந்து இருக்கிறதுஇந்த சந்திப்புகள் எழுத்துப் பரப்பில் ஏதாவது மாற்றங்களைஅல்லது புதிய கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறதா ?

சாத்திரி : உண்மையில் இந்த புலம்பெயர் இலக்கிய சந்திப்பானது பரந்துபட்ட அனைவருக்குமான ஒரு சந்திப்பு அல்ல. இது ஒரு குழுச்சந்திப்பு. குறிப்பிட்ட ஒரு சிலரே எல்லா நாடுகளிலும் ஓன்று கூடுவார்கள். அவர்களின் நிகழ்ச்சி நிரலிலேயே எல்லாம் நடக்கும் ஓன்று மட்டும் நிச்சயாமாகச்  சொல்வேன், இந்த இலக்கிய சந்திப்பானது மாறி மாறி முதுகு சொறிதலையும் .புதிய புதிய முரண்களையுமே இதுவரை வளர்த்துள்ளது . ஒரு  படைப்பாளியோ படைப்போ சரியான முறையில் அறிமுகப்படுதவோ கௌரவிக்கப் படவோ இல்லை. எறியப்படும் மீன்கழிவுக்காக சந்தையோரத்தில் அடிபடும் நாய்களைப்போலவே ஒவ்வொரு சந்திப்பும் முடிந்திருக்கிறது.

கோமகன் : போர் முடிந்து 11 வருடங்களை கடக்கப்போகின்றோம்இன்றும் கூட இடர்காலங்ளில் மட்டும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களை உயர்த்துகின்றோம்.‘ என்று கூறியவாறு ஒரு பகுதியினர் தாயகத்தில் அலைகின்றார்கள்அதற்கு டயபோராஸ் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றார்கள்இவ்வளவு காலம் சென்றும் தாயகத்தில் ஒரு நிலையான பொருண்மியப் பொறிமுறையை ஏன் செயல்படுத்த முடியாதுள்ளது ?

சாத்திரி : இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் ‘நேசக்கரம்’ என்கிற உதவி அமைப்பு ஒன்றோடு சேர்ந்து இயங்கிய அனுபவத்தின் அடிப்படையில் சிலவிடயங்களைச் சொல்கிறேன்: யுத்தம் முடிவடைந்து முகாம்களில் இருக்கிறவர்களுக்கு பின்னர் அதிலிருந்து வெளியேறியவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகள் என்பது முக்கியமே. ஆனால், மோசமாகக் காயமடைந்த மாற்று திறனாளிகளைத் தவிர்த்து மற்றையவர்களுக்கு அன்றாடத் தேவைகளைச் தொடர்ச்சியாகக்  கொடுப்பது அந்த மக்களையே சோம்பேறிகளாக்குவதாகவே இருக்கும். அதே நேரம் உதவி கொடுப்பவர்களுக்கு பெறுபவர்களுக்குமிடையில் உள்ள இடைத் தரகர்களின் மோசடிகளும் நிறையவே நடக்கின்றது. எனக்குச் சொந்த அனுபவம் கூட இதில் உண்டு.

புலம்பெயர் தமிழர்களின் பெரும் நிதிபலம் இருந்தும் நிலையான பொருண்மிய பொறி முறை உருவாகாமல் போனதன் முழுக்காரணமும் இடைத் தரகர்களால் தொடர்ச்சியாக உதவி கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதும். அதையும் மீறி நேரடியாகவே பொருண்மிய திட்டங்களோடு சென்றவர்களுக்கு அங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததுமே முக்கிய காரணம். அப்படி திட்டங்களோடு சென்றவர்களிடம் அதனை நிறைவேற்ற அதிகளவு கையூட்டு கேட்டதால் மனம் நொந்துபோய் திரும்பி வந்த பலரை எனக்கும் தெரியும்.

கோமகன் : தமிழகத்தில் உங்களுக்கு நிறையவே இடதுசாரி நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்அனால் நீங்கள் ஈழம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகள் பற்றியோ அவர்கள் வைக்கின்ற கடும் விமர்சனங்களுக்கு பதில்களை சொல்லாது இந்த நேர்காணலின் உடாகக் கடந்து செல்வதாகச் சொல்கின்றேன் ……….

சாத்திரி : தமிழகத்தில் எனக்கு நிறைய இடதுசாரி நண்பர்கள் இருப்பதும் அவர்கள் ஈழம் புலிகள் பற்றி விமர்சனங்கள் வைப்பதும் உண்மை. அவர்களின் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. காரணம், ஈழப்போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆயுதப்போராட்டம் தொடங்கிய ஆரம்பத்திலேயே இலங்கைத் தீவை பிரிக்கும் ஈழவிடுதலைப்போரட்டதுக்கு தங்கள் ஆதரவில்லை. சமஸ்டி முறையிலான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொள்ள இந்திய அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். எந்த ஈழ ஆயுதக்குழுவுக்கும் எமது ஆதரவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்து விட்டிருந்தனர்.

ஈழ விடுதலை அமைப்புக்கள் புலிகள் உட்பட தங்களை சோஷலிச அமைப்புகள் என்று கூறிக்கொண்டாலும்  தீவிர இடதுசாரி கொள்கைகளோடு இயங்கிய E.P.R.L.F  மற்றும் .E.R.O.S  அமைப்புகளுக்கு கூட அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. ஆனாலும் சி.மகேந்திரன் போன்றோர் தங்கள் தனிப்பட்ட ஆதரவினைக்  கொடுத்திருந்தார்கள் என்பதனையும் இங்கு மறுப்பதற்கில்லை. ஆகவே ஈழம், புலிகள் அமைப்புக்கு ஆதரவில்லாதவர்கள் என்று தெரிந்து கொண்டே அவர்களோடு எனக்கு நட்பு இருக்கின்றதென்றால் நிச்சயமாக அது கட்சி கொள்கை சாராத தனிப்பட்ட நட்புகளே. அதானால் தான் நானும் கட்சி அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

கோமகன் : அனால்முன்னர் ஈழ விடுதலையையும் புலிகளையும் தீவிரமாக ஆதரித்த தி மு  கட்சியை சேர்ந்தவர்கள் கூட புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் கடும் விமர்சனங்களை வைக்கிறார்களே.. அவற்றுக்கு கூட நீங்கள் எந்தவிதமான பதிலையும் தரத் தயாராக இல்லை என்ற மாதிரியல்லவா சொல்கின்றார்கள் ?

சாத்திரி : உண்மையும் அதுதான். இப்போ சமூகவலைத்தளங்களில்  அப்படி எழுதுபவர்கள் எல்லோருமே இளைய தலைமுறையினர். அவர்களுக்கு  தி மு க கட்சிக்கும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் குறிப்பாக  விடுதலைப்புலிகளுக்கும் இருந்த தொடர்புகள் மற்றும் நெருக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுக்கு பல ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம். உதாரணத்துக்கு ஓன்று மட்டும்:

ஈழத்தில் இந்தியப்படை காலம்  புலிகள் அமைப்பானது அதன் தலைவர் உட்பட இந்தியப்படைகளால் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த நேரம். வெளியே இருந்து தரை வழியாக எந்தப் பொருளும் உள்ளே போகமுடியாத இறுக்கமான நிலைமை. துப்பாக்கி சத்தங்களால் அந்தப் பகுதி விலங்குகளும் பறவைகளும் கூட அந்த இடத்தை விட்டு வெளியேறிய நிலையில் மிகுதியிருந்த விலங்குகளும் புலிகள் அமைப்பால் வேட்டையாடி முடிந்த நிலை. உணவுக்கு பெரும் தட்டுப்பாடு.

கையிருப்பில் இருந்த அரிசியை வைத்து அதில் இலைகளைப் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடித்தவாறே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அரிசியும் முடிந்து போகும் நிலை வந்ததும் உடனடியாக அரிசி அனுப்பும்படி தமிழகத்துக்கு செய்தி அனுப்பப் பட்டிருந்தது. தமிழகத்தில் புலிகளின் வழங்கல் பிரிவுக்கு அப்போ கிருபன் என்பவர் பொறுப்பாக இருந்தார் (இவர் பின்னர் மாத்தையா பிரச்சனையில் புலிகளால் கொல்லப்பட்டார்.)

கிருபன் வேதாரணியம் பகுதியிலேயே இருந்து இயங்கிக்கொண்டிருந்தார். அப்போ அவரிடம் கையில் பணமும் இருக்கவில்லை. தகவல் கிடைத்ததும், ஆறுகாட்டுத்துறை பகுதில் புலிகள் ஆதரவாளர் ஒருவரிடம் போய் விடயத்தை சொல்லி உதவி கேட்டார். அவர் ஒரு தி மு க உறுப்பினர் என்பதால் உடனே ஒரு கடிதத்தை எழுதி கிருபனிடம் கொடுத்து அதனை கொண்டுபோய் தி மு க முக்கிய புள்ளி ஒருவரிடம் கொடுக்கும் படியும் அவர் வேண்டிய உதவிகள் செய்வார் என சொல்லி அனுப்பி வைத்தார்.

கிருபனின் கடிதத்தை படித்த அந்த முக்கிய தி மு க உறுப்பினர் கிருபனுக்கு வேண்டிய அரிசி மூட்டைகளை கொடுத்தனுப்பி விட்டிருந்தார். கிருபன் போன பின்னர்தான் “வெறும் அரிசியை கொண்டுபோய் பையன்கள் என்ன பண்ணுவாங்கள்?” என யோசித்தவர் மீண்டும் கிருபனை தொடர்பு கொண்டவர்,

“தம்பி வெறும் சோற்றை மட்டும் தின்று விட்டு சண்டை பிடிக்க முடியுமா ? வந்து மீதி பொருளையும் எடுத்துப்போங்க………….” என செல்லமாய் கடிந்தபடியே பருப்பு,பயறு,கடலை என அனுப்பி வைத்தார். அவை வன்னிக்கு போய் சேர்ந்ததும் பொருட்களை பார்வையிட்ட பிரபாகரன்,

“அரிசி கேட்டால் பருப்பும் சேர்த்து அனுப்பியிருக்கிறாங்கள்”. என்று சொல்லி சிரித்த படியே உடனடியாக அனைத்து அணிகளுக்கும் பிரித்து அனுப்புமாறு கட்டளையிட்டார்.

இந்த சம்பவத்தை பின்னைய காலங்களில் கடற்புலித் தளபதி சூசை, பொட்டம்மான் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நினைவு கூர்ந்திருந்தனர். ஆனால் பொருட்களை கொடுத்துதவிய அந்த நபர் யாரென பெரிதாக வெளியே யாருக்கும் தெரியாது. அவர் வேறு யாருமல்ல தஞ்சையை சேர்ந்த கோ. சி . மணி அவர்கள். அடுத்தது, அப்படி அவர்கள் எழுதுவதுக்கு  முழுக்காரணமும்  நாம் தமிழர் கட்சியுடனான கருத்து மோதல்களே தவிர  ஈழத் தமிழர்கள் அல்ல. அவர்கள் புலிகளின் பெயரால் இறந்து விட்ட  கலைஞரை திட்ட, இவர்கள் இவர்கள் பதிலுக்கு இறந்து விட்ட பிரபாகரனையும் இல்லாத புலிகள் அமைப்பையும் திட்டுகிறார்கள். இரண்டுமே ஒருவித முட்டாள்தனம் என்பதால் அதை கடந்து போய் விடுவதே நல்லது.

அடுத்து நான் முக்கியமான இன்னொரு விடயத்தையும் சொல்லியே ஆக வேண்டும்:  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அதன் முழுப்பழியும்  தி மு க  வின் மீதே விழுந்தது. சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த ஜெயலலிதாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போன்றதொரு சந்தர்ப்பம் அப்பொழுது கிடைத்தது. திமுக வினர் கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டனர். காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் அடித்து உதைக்கப்பட்டு அவர்களும் சொத்துக்களும் சூறையாடப்பட்டது. எது வித எதிர்பார்ப்புகளுமின்றி தமிழன்  என்கிற உணர்வால் மட்டுமே உதவியவர்கள் உதைபடும்போது எம்மால் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆகவே அவர்கள் இப்போ திட்டும் போதும் கை கட்டியிருப்பதை தவிர வழியில்லை.

அதே நேரம், பெங்களூர் மட்டுமில்லை  கர்நாடகத்தின்  கடைக்கோடியிலிருந்த  ஹுப்ளி , பெல்கம் நகரங்களில் வாழ்ந்த தமிழர்கள் கூட தாக்கப்பட்டு துரத்தப்பட்டார்கள். உயிர் தப்பினால் போதுமென்று தமிழ்நாட்டுக்கும்  மும்பைக்கும் குடிபெயர்ந்த குடும்பங்கள் ஏராளம். அவர்கள் ஈழம், புலிகள், பிரபாகரன்  என்கிற பெயர்களே கேள்விப்படாதவர்கள். அவர்கள் தாக்கப்பட்டத்துக்கு தமிழர் என்கிற காரணத்தை தவிர வேறென்ன இருக்க முடியும்? அவர்களுக்கெல்லாம் எம்மால் என்ன செய்ய முடிந்தது?

கோமகன் : அனால்ஈழத்தின் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது மத்தியில் காங்கிரசோடு கூட்டு வைத்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்த முடியவில்லை என்பது தானே இன்றுவரை அவர் மீதுள்ள குற்றச்சாட்டாகப் பார்க்கின்றேன்கலைஞரால் அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியுமா என்ன 

சாத்திரி : நிச்சயமாக இல்லை. இன்றுவரை கலைஞரை திட்டித்தீர்ப்பவர்களும் இருக்கிறார்கள். இறுதி யுத்தம் நடந்தபோது தமிழர்கள் அனைவருமே, நான் உட்பட வெறும் உணர்வுகளால் மட்டுமே நிரம்பியிருந்தோம்.   ஏதாவதொரு அதிசயம் நடந்து விடாதா என அனைவருமே ஏங்கியிருந்த நேரம் அது. அப்பொழுது யுத்தத்தை நிறுத்த உண்ணாவிரதமிருந்த கலைஞர் மீது எனக்கு கூட கோபம்  இருந்தது. ஆனால், இந்திய தேசம் என்பது 29  மாநிலங்களையும் 07 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு துணைக்கண்டம். அதில் ஒரேயொரு மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சரால், அது யாராகவிருந்தாலும் தனது அதிகாரங்களை தாண்டி அடுத்த நாட்டில் நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. அவரது அதிகாரம் எல்லாம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். மத்திய அரசுக்கு கடிதமெழுதலாம். அறிக்கை விடலாம். அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது.

ஈழத் தமிழர் விடயத்தில் காலங் காலமாக அனைத்து தமிழ் நாட்டு முதலமைச்சர்களும் இதைத்தான் செய்தார்கள், இனிமேலும் இதைத்தான் செய்ய முடியும். அது மட்டுமல்ல; மத்தியில் ஆட்சியிலிருந் காங்கிரசே நினைத்திருந்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் உலககின் முக்கிய 32 நாடுகள் இணைந்து  இலங்கைத்தீவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்து 2001 ம் ஆண்டிலிருந்தே மிக நுணுக்கமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள். பேச்சு வார்த்தை தொடங்கும் போதே பிரிக்காத இலங்கைக்குள் ஒரு தீர்வை புலிகளின் சம்மதத்தோடு ஏற்படுத்துவது. அவர்கள் மறுத்தால் ஒட்டுமொத்தமாக அவர்களை அழித்து ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது என்கிற திட்டம் மேற்குலகால் முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலென்ன பா ஜ க ஆட்சியிலிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

கோமகன் : சரி ஒரு கேள்வி உங்களிடம் கேட்கவேண்டும் என எண்ணுகின்றேன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வரலாற்று ஆவணப்படம் என்று சொல்லப்படும் ‘மேதகு’ பார்த்து விட்டீர்களா? அது பற்றி உங்கள் கருத்து என்ன?

சாத்திரி : இதுதான் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று எடுத்தவரே சொல்லக் கூடாது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால், ஈழத் தமிழர் பற்றியோ அவர்கள் போராட்ட வரலாறு பற்றியோ ஒரு இந்தியரால், ஏன் அவர் தமிழ் நாட்டுக்காரராக இருந்தாலும் சரி ஒரு போதும் இரத்தமும் சதையுமாக உணர்வோடு கலந்து ஒரு திரைப்படத்தை எந்தக்காலத்திலும் எடுக்க முடியாதென்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பவன் நான். கடந்த காலங்களில் ஈழம் பற்றி வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் அதனை நிரூபித்திருக்கின்றது. அடுத்தது அந்தப் படத்தைப் பார்த்துத்தான் பிரபாகரனின் வரலாற்றை தெரிந்து அளவுக்கு வரலாறு பற்றிய வறட்சி எனக்கில்லை .

கோமகன் : நீங்கள் சொல்வது போல உணர்வோடு கலந்த வரலாற்றை ஈழத் திரைப்பட இயக்குனர்களால் எடுக்க முடியுமென்று நினைக்கிறீர்களா?

சாத்திரி : அதுக்கான சூழல் நிச்சயமாக ஆங்கில்லை. ஆனால், அப்படியொரு வரலாற்றை படமாக்கும் வசதியும் வளங்களும் புலிகள் காலதில் அவர்களிடமிருந்தது. இனிவரும் காலங்களில் அதுக்கான சாத் தியங்கள் குறைவே .

கோமகன்: நீங்கள் சொல்கின்ற வசதியும் வளங்களும் அதுக்கான சூழலும் புலம் பெயர் தமிழர்களிடம் ஏராளமாக இருக்கின்றதே, அவர்கள் நினைதால் செய்யலாமே?

சாத்திரி: இந்தக் கேள்விக்கு சத்தகமாக சிரிப்பதை தவிர என்னிடம் வேறு பதிலில்லை நன்றி வணக்கம் .

கோமகன் : இப்பொழுது வந்திருக்கின்ற கோரோனோ காலத்து உலக ரீதியிலான  ஓய்வுகள் என்ன விதமான படிப்பினைகளை சனங்களுக்கு கொடுத்திருக்கின்றது மீண்டும்  ஒருமுறை உலக ஒழுங்குகள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா ?

சாத்திரி : கொரோனா காலம் பொதுவாக சனங்களுக்கு என்ன படிப்பினை கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஐரோப்பாவாழ் தமிழர்களுக்கு எனக்கு உட்பட வாழ்க்கை வெறுத்து விட்டது.  ஊரில் போயிருக்கலாம் என்கிற ஒரு உந்துதல் எல்லோருக்குள்ளும் வந்துவிட்டது. மற்றபடி உலக ஒழுங்கு என்று பார்த்தால் உலகம் முழுவதுமே இதோடு சிறு தொழிலாளிகள் காணமல் போகும் அபாயம் ஒன்று உண்டு. இனி வருங்காலத்தில் நடுத்ததர வர்க்கமும் காணாமல் போய் ஏழை பணக்காரன் என்று இரண்டு வர்க்கம் மட்டுமே இருக்கும் சாத்தியமே அதிகம். உலக வல்லரசு என்று மார் தட்டிக்கொண்டிருந்த நாடுகளுல்லாம் உலக வைரஸ் நாடுகளாகி விட்டன இந்த வல்லரசு ஒழுங்கும் மாறலாம்.

கோமகன் : ஒரு போராளி என்ற வகையில் மௌனிக்கப்பட்ட யுத்தம் எங்கள் சனத்தை மாற்றியிருக்கின்றதாஅதில் இருந்து ஏதாவது படிப்பினைகளை பெற்று இருக்கின்றார்களா?

சாத்திரியுத்தம் இல்லை. குண்டுச் சத்தம் ஓய்ந்திருக்கின்றது. அச்சம் இல்லை. உயிர் உடமை இழப்புகள் இல்லை. பொருளாதார தடையில்லை. தங்கு தடையில்லாத போக்குவரத்து எல்லாப் பொருள்களும் எல்லா இடமும் கிடைக்கின்றது. ஆனால், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பெருகி விட்ட போதைப்பொருள் பாவனை, அதனால் நடக்கும் அன்றாட வன்முறைகள். நிருவாக சீர்கேடு. இவை  எதையும் வெளியிலிருந்து யாரும் வந்து செய்யவில்லை. அனைத்துமே உள்ளுரில் இருப்பவர்களால் தான் நடகின்றது. எல்லாவற்றுக்குமே எல்லோருமே இசைந்து வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். இவைகளையே மக்கள் பெற்ற படிப்பினையாக பார்கிறேன்.

சாத்திரி பற்றிய சிறுகுறிப்பு :

புலம்பெயர் தமிழ் எழுத்துப்பரப்பில் கலகக்காரராகவே தன்னை முன்நிறுத்தியவர் சாத்திரி . இவருடைய அதிரடி எழுத்துக்களுக்காகவே இவர் பலத்த விமர்சனங்களையும் பெரும் வாசகர் வட்டத்தையும் கொண்டவர். இதுவரையில் ஆயுத எழுத்து என்ற நாவலையும் அவலங்கள் என்ற சிறுகதை தொகுப்பையும் அன்று சிந்திய இரத்தம் என்ற கட்டுரைத்தொகுப்பையும் இலக்கியப்பெருவெளிக்கு தந்திருக்கின்றார்.

02 ஆடி 2021

கோமகன்-பிரான்ஸ்


ஆயுத எழுத்து நூல் வெளியீட்டுக்கு வ.கவுதமன் என்கிறவரின் எதிர்ப்பு பத்திரிகை அறிக்கை

$
0
0
என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! எங்கேயாவது, எப்பொழுதாவது தமிழ் இனத்திற்கு ஒரு விடியல் பிறந்து விடாதா என உலக தமிழினம் காத்து கிடக்கின்ற வேளையில் எதிரிகள் இடைவிடாது துன்பங்களையும், துயரங்களையும் தந்து கொண்டேயிருப்பது ஒரு புறமென்றால், எம் இனத்தில் பிறந்து எம் மொழி பேசும் வேறு சிலரோ அதனினும் கொடிய நிகழ்வுகளில் ஈடுபடுவதுதான் துயரத்திலும் துயரமாக மனசெல்லாம் வலிக்கிறது. 2009 வரை எங்கள் ஈழ தலைமையையும், எங்கள் போராளிகளின் புனிதத்தையும் புகழ் பாடியவர்களும், அல்லது வாய்மூடி மவுனித்து கிடந்தவர்களும் இப்பொழுது மார்த்தட்டிக் கொண்டு படைப்புகள் செய்து நீதிமான்களாக காட்டிக்கொள்வது என்பது வெட்கத்திலும் வெட்கக்கேடான செயல். "ஆயுத எழுத்து"இந்த படைப்பு யாருக்கு சாதகமாக எழுதப்பட்டது. தமிழினத்திற்காகவா? தமிழினத்தை அழிக்க நினைக்கின்ற எதிராளிகளுக்காகவா? "சனல்4 "தயாரித்த ஆவணப்படத்தினை வெள்ளையர்களே அதுவும் ஐநா மன்றத்தில் பார்த்து கதறி கதறி அழுதார்களே, அதனைப்பற்றி தமிழ் இரத்தம் ஓடுகின்றவர்கள் எத்தனை பேர் எழுத்தில் ஆவணமாக்கினீர்கள்! எம் போராளி பெண்களை ஆடை களைந்து இறந்த நிலையில் சிங்கள காடையர்கள் வன்புணர்ச்சி செய்தார்களே... எத்தனை பேர் எழுத்தில் செதுக்கினீர்கள்! எங்கள் நிலம் இன்றும் பறிக்கப்படுகிறதே, எங்கள் சகோதரிகள் நான் எழுதி நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே இதனைப்பற்றி ஏன் உங்கள் விரல்கள் எழுதவில்லை? எழுதாது... உங்கள் விரல்கள் அடங்கி உள்ளங்கைகள் எங்கள் எதிரிகளிடம் "பலமாக"கைக்குலுக்கியிருக்கின்றன. என் மண்ணை, எங்கள் மக்களை, எம் உரிமைகளை - ஆளவந்த, அழிக்க வந்த,அபகரிக்க வந்தவர்களை எதிர்ப்பதற்க்குத்தான் எங்கள் தலைமை ஆயுதப்போராட்டத்தை கையிலெடுக்க நேர்ந்தது. அதற்காகத்தான் எங்கள் குடும்பத்திலிருந்தே எங்கள் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து போராடினார்கள். இவ்வளவு பேசும்,எழுதும் நீங்கள் சொல்லுங்கள் - எங்கள் போராளிகள் யாராவது ஒரு சிங்கள பெண்ணை சிதைத்ததாக ஆதாரம் காட்ட முடியுமா? ஒரேயொரு அப்பாவி சிங்கள குடும்பத்தையாவது கொண்று போட்டதாக ஆவணங்களை எடுத்து வைக்க முடியுமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் போராளி தெய்வங்களை கொச்சைப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்னை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் வி.சேகர் "ஆயுத எழுத்து"புத்தக விவாதத்தில் அவரும் பங்குபெறுவதாக அறிந்து சொல்ல முடியாத வேதனையோடு அவரை தொடர்பு கொண்டு நான் பேசிய போது "உன் உணர்வை புரிஞ்சுக்கிறேன், இரவு அந்த படைப்பை படித்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன்"என்றார்- நேற்று 6.01.2015 மதியம் 1.30க்கு நான் அந்த விழாவை புறக்கணிக்கின்றேன், தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கெடுக்க மாட்டேனென்று உறுதியளித்தது- மனதுக்கு ஆறுதலாக இருந்தது, மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாருக்கும் இல்லாத அக்கறை இவனுக்கு மாட்டும் ஏன் என்று என் இனத்தில் எதிரிகளும் என் இனத்திற்குள்ளாகவே வாழும் விதண்டாவாதிகளும் கேட்கக்கூடும் . தமிழன் ஒருவனுக்கு இந்த உலகின் எந்த மூலையில் தீங்கு நேர்ந்தாலும் அதனை தட்டி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற முறையிலும் , அதுவும் அந்த தவறு நாங்கள் வாழ்கிற தமிழ் மண்ணில் நடக்கும் போது கைக்கட்டிக் கொண்டு சும்மா வேடிக்கை பார்க்கமுடியாது என்கிற நிலையிலும், எல்லாவற்றிக்கும் மேலாக தாய்தமிழ் மண்ணில்"இனி என்ன செய்ய போகிறோம் ""இறுதி யுத்தம்" : விழவிழ எழுவோம்"எங்கள் அப்பா இப்படி எண்ணற்ற ஆவண படைப்புகளினுடாக தமிழர் மனங்களில் தணலாக எரியவிட்ட ஆவண படைப்பாளன் என்கின்ற உரிமையிலும் இதற்கு கண்டனம் தெரிவிப்பது எனது தார்மீக உரிமை என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கின்றேன் 09-01-15 அன்று நிகழ்விக்கும் நிகழ்வில் பங்கு கொள்ளது மானத்தோடு வெளிவந்த இயக்குநர் வி.சேகர் அவர்களை போன்று -எம் மண்ணுக்காகவும் , மக்களுக்காகவும் வாழ்கின்றேன் என்று சொல்பவர்கள் அந்த விழாவினை புறக்கணித்து வெளிவரவேண்டும். இல்லையென்றால் காலம் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டும். "இவர்கள் எம் இனத்தின் துரோகிகள்"என்று. நன்றி இப்படிக்கு வ. கௌதமன்

துவாரகா என்னும் தூ வானம் .. யாரால் .. எதுக்காக ..

$
0
0
துவாரகா என்னும் தூ வானம் .. யாரால் .. எதுக்காக .. இலங்கையில் உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்து விடுதலைப் புலிகளின் தலைவரும் அவரது மனைவி பிள்ளைகள் அனைவருமே குடும்பத்தோடு கொல்லப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் மழை விட்டாலும் தூவானம் விடவில்லையெனபாதைப்போல அவ்வப்போது பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் நான் அவரோடு பேசினேன் என்று வருடா வருடம் யாராவது ஒரு புரளியை கிளப்பிக்கொண்டிருப்பார்கள். அப்படி புரளி கிளப்புகிறவார்களில் தமிழ் நாட்டிலிருக்கும் நெடுமாறனும் . காசியானந்தனும் முக்கியமானவர்கள். வழமை போல இந்த வருட ஆரம்பத்திலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் மேலதிகமாக அவர் விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்றொரு அறிவிப்பையும் செய்து விட்டிருந்ததால் தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அவர் வருவாரா என்றொரு சலசலப்பு ஏற்பட்டது . இன்றைய அவசர உலகில் அந்த செய்தியும் அப்படியே அனைவருக்கும் மறந்து போனது. ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இது பற்றியெல்லாம் எந்தக்கவலையுமில்லை ஏனெனில் அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதோடு இன்றைய அவர்களின் தேவைகளும் வாழ்வியலும் வேறொரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டது மட்டுமல்ல யுத்தம் என்கிற வார்த்தையையே அவர்கள் வெறுக்கிறார்கள் . பிரபாகரன் வருகிறார் என்கிற அறிவிப்பை எல்லோரும் மறந்து விட்டிருந்தவேளை யுத்தத்தில் மரணித்த புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்தபோது அதே நெடுமாறனும் காசியானந்தனும் ஒருஅறிவித்தலை வெளியிட்டார்கள் இந்தத்தடவை பிரபாகரன் அல்ல அவரின் மகள் துவாரகா உயிரோடு இருக்கின்றார் அவர் மாவீரர் தினத்தன்று மக்களுக்கு உரையாற்றுவார் என்கிற அறிவிப்புதான் அது . சரி இந்த அறிவிப்புகள் எதற்கு .. யாரால் என்று பார்த்து விடலாம் .. புலிகள் தோற்றக்கடிக்கப்பட்டு அதன் தளபதிகளும் தலைமையும் அவர் குடும்பமும் கொல்லப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் புலிகளினதும் அவர்களின் பினாமிகளின் பெயர்களில் இருந்த பல மில்லியன் சொத்துக்களை பிரித்தெடுப்பதிலும் இறுதி நேர யுத்தத்தில் மக்களிடம் பெறப்பட்ட பணத்தை பங்கு போட்டுக் கொள்வதிலும் அந்த அமைப்பின் வெளிநாட்டில் இயங்கிய கிளை அமைப்புகளான அனைத்துலக செயலகம் . தலமை செயலகம் . தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆகியவற்றுக்குள் மோதல்கள் இடம்பெற்றதோடு அனைத்துலக செயலகத்தின் பிரான்ஸ் பொறுப்பாளர் பரிதி என்பவர் கொல்லப்படும் அளவுக்கு நிலமைகள் மோசமாக இருந்தன. சொத்துக்களை பிரித்தெடுப்பதுக்காக கால அவகாசம் தேவைப்பட்டதாலும் அதற்குள் நடந்த பிரச்சனைகளை மக்களுக்கு மறைப்பதுக்காகவுமே பிரபாகரன் இறந்து விட்டார் என்கிற செய்தியை மறுத்து அவர் உயிருடன் இருக்கிறார் விரைவில் வருவார் என முதன் முதலில் அறிக்கை விட்டதே இந்த அமைப்புக்கள் தான் . இந்த மோதல்களினால் அந்தந்தநாட்டு காவல்துறை தலையிட்டதும் இது புலிகளின் பினாமி சொத்துக்களுக்கான சண்டை என்றறிந்து சில சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப் பட்டது. முதலுக்கே மோசம் வந்து விட்டாதென்று சண்டையிட்டவர்கள் விழித்துக்கொண்டு மேல் மட்டங்களிலிருந்த பொறுப்பாளர்கள் சமாதானமாகி சொத்துக்களை பிரித்தெடுத்துக்கொண்டு வெவ்வேறு திசையாக சென்று விட .. மக்களிடம் இறங்கி வேலை பார்த்து அவர்களிடம் நிதி சேகரித்துக் கொடுத்த அடுத்த நிலையிலிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் .. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அது போல நிதி சேகரித்து கொடுத்து அதில் ஒரு பகுதியை பொறுப்பாளர்களிடமிருந்து பெற்று வேலைக்கு செல்லாமல் அதிலேயே வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக்கு செல்வதென்பது பெரும் சிரமாக இருந்தது. எனவேதான் மீண்டும் மக்களிடம் நிதி சேகரிக்க புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டார்கள். சிறையிலிருக்கும் போராளிகளை வெளியே எடுக்கிறோம் . யுத்தத்தில் காயமடைத்த போராளிகளுக்கு உதவி . மறு வாழ்வு உதவிக்கு என்று இவர்களின் நிதி சேகரிப்புகள் தொடர்ந்து கொண்டே தானிருந்தது. ஆனால் கடந்த கால அனுபவங்களால் மக்கள் இவர்களை நம்பாமல் முடிந்தளவு நேரடியாகவும் தங்கள் உறவுகள் மூலாமாகவுமே உதவிகளை செய்யத் தொடங்கி விட்டிருந்தார்கள். இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் சிலர் சேர்ந்து பெரியளவில் ஒரு நிதி சேகரிப்பை செய்துவிட்டு அதோடு ஒதுங்கி விடுவது என்கிற முடிவை எடுக்கின்றனர் அப்படி சுவிஸ் நாட்டை சேர்ந்த அப்துல்லா என்கிற செல்லையா ஜெயபாலன் தலைமையில் கிருபாகரன் (பிரான்ஸ் ) சேரமான் என்கிற சிறீஸ் கந்தராஜா (இங்கிலாந்து ) அருணா (இவர் பிரபாகனின் மனைவி மதி வதனியின் மூத்த சகோதரி இங்கிலாந்து ) இன்பரசா (இலங்கை ) சிவாஜிலிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கை) மற்றும் தமிழக்கத்திலிருந்து நெடுமாறன். காசியானந்தன். வ. கவுதமன் ஆகியோர் ஒரு கூட்டணி அமைக்கின்றார்கள். இப்படி அவர்கள் அமைத்த பெரிய கூட்டணியின் குரல் தரவல்ல அதிகாரிகளாக நெடுமாறனும் காசியானந்தனும் நியமிக்கப் படுகிறார்கள்.வழமை போல இவர்கள் கூட்டணியில் சேர்ந்து கொள்ளும் வை. கோவும் .. திருமாவும் இம்முறை நழுவி விட்டிருந்தார்கள் . அவர்கள் ஆளும் தி. மு. க கூட்டணியில் அங்கம் வகிப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் . சீமானையும் இந்தக் கூட்டணியில் இணைப்பதுக்காக சில முயற்சிகள் நடந்தது . ஆனால் அவரே பிரபாகரன் உயிரோடு இல்லை என்கிற துணிவில்தான் ஆமைக்கறி . அரிசிக்கப்பல் என்று கதை விட்டு தன் அரசியலை நடத்திக்கொண்டிருக்கும்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லும் கூட்டணியில் சேர்ந்து தனக்குத தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள மாட்டார் . அதனால்தான் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்கிற நிருபர்களின் கேள்விகளுக்கு அப்படியா வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நழுவிப் போய்கொண்டிருந்தார் நெடுமாறனும் காசியானந்தனும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரபாகரன் வருகிறார் என்று அறிவித்த பின்னர் இவர்கள் திட்டத்தின் படி இந்த வருட மாவீரர் தினத்தில் பிரபாகரனின் குரலில் ஒரு உரை ஒலிப்பதிவை தயாரித்து வெளியிடுவதே இவர்களின் நோக்கமாகும் . அதுக்காக தமிழகத்தில் சில மிமிக்கிரி கலைஞர்களை நாடியிருக்கிறார்கள் . அவர்களோ .. பிரபாகரன் குரலா ஐயையோ ஆளை விடுங்க சாமி என்று ஓடிவிட்டார்கள். அதை விட வேறு சிக்கல்களும் இருந்தது தமிழக உளவுத்துறையிடமோ காவல் துறையிடம் மாட்டினாலோ அவ்வளவுதான் . அடுத்த சிக்கல் கதைப்பவர் யாழ்ப்பாண பேச்சுமொழியிலும் கதைக்க வேண்டும். எந்தவொரு தமிழகத்தவராலும் யாழ்ப்பாண பேச்சு மொழியில் கதைக்கவே முடியாது ஏதாவதொரு உச்சரிப்பில் பிழை விட்டு விடுவார். இது பொதுவாகவே ஒரு வட்டார வழக்கில் பேசும் மொழியை இன்னொரு வட்டார மொழி பேசுபவரால் நூறு வீதம் சரியாக பேச முடியாது இது எல்லா வட்டார மொழிகளுக்கும் பொருந்தும். எனவே அந்த திட்டம் கி விடப்பட்டது .. ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்கள் அடுத்ததாக துவாரகாவை களமிறக்க முடிவு செய்தனர். இம்முறை சற்று மாறுதலுக்காக வழமையான நெடுமாறன் காசியானந்தனை தவிர்த்து அருணா மூலம் துவாரகா உயிரோடு இருக்கின்றார் அவரோடு பிரபாகரன் மதி வதனி மட்டுமல்ல 150 போராளிகளும் கூடவே இருக்கின்றார்கள் நான் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன் என்கிற அறிவிப்பை வெளியிட்டார் .அதனை பார்த்த எல்லோருமே இவர்களுக்கு பைத்தியம் முத்தி விட்டது என்று நினைத்து தங்களுக்குள் சிரித்தபடி கடந்து போய் விட்டிருந்தனர். அந்த அறிவிப்புக்கு பெரியளவில் எதிர்வினை எதுவும் வராததால் மக்கள் அதனை நம்பி விட்டதாக நினைத்தவர்கள் துவாரகாவையும் அவரது செல்லக் குரலுக்கான தேடலையும் தொடங்கினார்கள் அவர்களின் தேடலில் கிடைத்தவர்தான் சுவிஸ் நாட்டில் வசிக்கும் மித்துஜா என்கிற பெண் . இவர் விவாகரத்து பெற்று ஒரு குழந்தையோடு தனியாக வாழ்ந்து வருபவர் மட்டுமல்ல ஒரு ஏமாற்றுப் பேர்வழி . இவர்தான் துவாரகா என்னும் பெயரில் உரையாற்றியிருந்தார் . அதனை யாரும் நம்பவில்லை என்பதோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்கள் கடும் எதிர்பினையும் வெளியிட்டதையடுத்து இவை யாவும் இந்தியா உளவுத்துறையின் சதி வேலையென சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர் .. உண்மையில் இந்தியா இப்படியொரு வேலையை செய்திருப்பின் நான்கு திட்டமிட்டு ஓட்டு மொத்த இந்தியா முழுதும் அலசி துவாரகாவின் உருவத்தையொத்த ஒருவரை தேடிப்பிடித்து அவருக்கு மேலும் சிகிச்சைகள் மூலம் துவாரகா போலவே மாற்றியமைத்து ஒரு ஈழத்து பெண்ணை பேச வைத்து அதனை அவர்கள் தயார் செய்த துவாரகாவின் வாயசைவுக்கு ஏற்றதுபோல எடிட் செய்து எல்லோரும் நம்பும் படியானதொரு காணொளியை தயாரித்திருக்க முடியும் அதுக்கான வசதியும் தொழில் நுட்பமும் இன்று உண்டு . இப்படி அவசரமாக தயாரிக்கப்பட்ட மோசமான காணொளியை வெளியிட்டிருக்க மாட்டார்கள் .. அடுத்து இலங்கை விடயத்தில் இலங்கையில் இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இந்தியா நேரடியாக முதலீடுகள் மூலமாக தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கி விட்டது எனவே இது போன்ற சிறு பிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட வேண்டிய தேவையில்லை இன்றைய வளர்ந்து விட்ட தொழில் நுட்ப காலத்தில் அப்படி செய்யவும் முடியாது அம்பலப்பட்டு விடும் .. உடலை வளைத்து வேலை செய்யாமல் அடுத்தவர் பணத்திலேயே வாழ்ந்து பழக்கப் பட்டு விட்டவர்களே இனியும் மக்களை ஏமாற்ற முடியாது எனவே இனிமேலாவது உழைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்