Quantcast
Channel: அவலங்கள்
Viewing all 126 articles
Browse latest View live

நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)

0
0
நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)
சாத்திரி (ஒரு பேப்பர்)

புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.


அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.


கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.


அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.

இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.

சொல்லமுடியாத கதை

0
0
அவனைச்சுற்றி நின்று அனைவரும் கை தட்டி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்பொழுது யாரோ அவனை தள்ளிவிட்டது போல இருந்தது . திடுக்கிட்டு விழித்தான் விமானம் சிங்கப்பூரின் சாங்கிவிமான நிலையத்தில் தரையிற்ங்கிக்கொண்டிருந்தது. தங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்தபயணிகள் விமானிக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக கைதட்டிக்கொண்டிருந்தனர் என்பதது அப்பொழுதான் அவனிற்கு தெரிந்தது

0000000000000000

நானும் விதவைதான் எனக்கு யுத்தத்தின் வலி தெரியும் எனவே சமாதானம் வேண்டும் என்றபடி சமாதான விதவைத் தேவதையாக வாக்கு கேட்டு சந்திரிகா ஆட்சியில் அமர்ந்து பேச்சு வார்தைகளும் தொடங்கி விட்டிருந்த காலகட்டம்.சந்திரிக்கா தேர்தலில் நிற்கும் பொழுதே புலிகளிற்கும் அவரிற்கும் சில இரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து சில உறுதி மொழிகளும் பரிமாறப்பட்டிருந்தது.இவை சந்திரிக்காவின் சிறுவயது தோழரும் அவரின் குடும்ப நண்பருமான குமாரசாமி வினோதன் ஊடாக நடைபெற்று முடிந்திருந்தது

000000000000000

தாய்லாந்தின் தலைநகரிற்கு வெளியே ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவனிற்கு இலங்கைக்கு போகும்படி உத்தரவு கிடைத்தது. தன்னிமிருந்த கடவுச்சீட்டுக்களையெல்லாம் எடுத்து வரிசையாய் அடுக்கி பிரித்துப்பார்த்தவன். அதில் இரண்டை தெரிவுசெய்து எடுத்து இந்தமுறை சிங்கப்பூர் கிறீன்காட் இலங்கை பாஸ் போட்டிலையே போவம்.அது நல்லது எண்டு முடிவு செய்தவன். வேறொரு கடவுச்சீட்டில் தாய்லாந்திலிருந்து வெளியேறியவன். சிங்கப்பூரில் சிறீலங்கா கடவுச்சீட்டில் உள் நுளைந்தான். அன்றிரவே மீண்டும் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு செல்லவேண்டும். இலங்கையில் சிலரிற்கு பரிசு கொடுப்பதற்காக சில வாசனை திரவியங்களை (பெர்பியூம்) வாங்கினான். உலகத்திலை எத்தினை விதமான நல்ல வாசனைத்திரவியங்கள் விதவிதமாய் இருந்தாலும் எங்கடையளிற்கும் சிங்களவனுக்கும் சாளியை விட்டால் விட்டால் வேறையொண்டும் தெரியாது எண்டு நினைத்தபடி சாளி பெர்பியூம் நலைந்து லோக்கல் றே பன் கூலிங்கிளாஸ் நாலைந்து. லஞ்சம் எல்லாம் வாங்கியாச்சு என்று நினைத்தவன். காய்..லா என்று லா போட்டபடி .அவளும் வந்து சேர அவர்களின் பொரும்பாலும் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்தஉரையாடல் தொடங்கியது. அவளுடன் சேர்ந்து சாப்பிடலாம் வா தாய்லாந்திலை நாசிகொறியிங்கும். மீ கொறியிங்கும் சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு சிரங்கூன் பக்கம் போய் அன்னபூரணாவிலை தோசை சாப்பிடுவம் என்று புறப்பட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே அவளிடம் தன்னுடைய கடவுச்சீட்டை கொடுத்தவன். வழமையாய் சொல்லுற விசயம்தான் கொழும்பிலை இருந்து வேறை யாருடையதாவது போன்வந்தால் உடைனை உன்னட்டை இருக்கிற யெர்மன் நம்பருக்கு தெரிவிச்சுவிடு அவ்வளவுதான்.

எப்படா இந்த தொழிலை விடப்போறாய் .. டா

மை கோட்..இது தொழிலில்லை லா.. இது வேறை...லா.

இதையேதான் எப்பவும் சொல்லுறாய்.லா.

இதையேதான் நீயும் திரும்ப திரும்ப கேட்கிறாய் சரி சண்டையை விட்டிட்டு வேறை ஏதாவது பேசலாமா.லா

ஓ கே இன்றைக்கு என்ன புறோக்கிறாம்.

பெரிசா ஒண்ணுமில்லை நான் இரவே கொழும்பு போறேன். லா

ஓ தோசை தின்னத்தான் கூப்பிட்டியாடா??

கோபிக்காத லா. சீக்கிரமே திரும்ப வந்திடுவன்.வந்து பெரிய விருந்தே வைக்கிறன் என்று சொல்லி கண்ணடித்தான்
சாங்கி விமான நிலையத்தில் அவளின் உதட்டில் ஒரு முத்தம் வைத்து விட்டு உள் நுளைந்தவன். யாராவது வியாபாரிகளை எதிர்பார்த்து சுற்று முற்றும் பாக்கும் போதே கொழும்பா போறீங்கள் என்றபடி ஓடி வந்தவர்கள். ஓவர்ஸ்ரேயா காசு வேணுமா என்றார்கள். அப்படி வந்தவர்களில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் பொதியை வாங்கியவன் ஓவர் ஸ்ரே யெல்லாம் இல்லை உங்க ஆளிட்டை என்னை கொழும்பிலை கொண்டு போய் இறக்கிவிடச்சொல்லி போனிலை செல்லிடுங்க. என்றான். உங்க பேர் என்ன என்றவரிடம் கடவுசீட்டில் இருந்த பெயரை ஞாபகப்படுத்தி சொல்லிவிட்டு உள் நுளைந்தான்.

0000000000000000

கொழும்பு விமான நிலையத்தில் வெளியே வந்தவன் அங்கு சிங்கப்பூர் பொதிகளிற்காக தயாராக நின்ற முஸ்லிம் வியாபாரியிடம். பொதிகளை கொடுத்தவன். தன்னை ஏதாவது நல்லதொரு லொட்ஜில் இறக்கிவிடச்சொன்னதும். அவரும் தனக்கு தெரிந்த ஒரு லொட்ஜ் இருப்பதாக சொல்லி ஜம்பட்டா வீதியில் இருந்த முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான லொட்ஜில் இறக்கிவிட்டிருந்தார். கொழும்பு போய்க்கொண்டிருக்கும் பொழுதே தான் வந்துவிட்ட செய்தியை சிலரிற்கு கைத்தொலைபேசி மூலமாக தெரிவித்துவிட்டிருந்தான்.

அன்றிரவு ஜிந்துப் பிட்டியில் இருந்த வேணிபாரில் ஒரு சந்திப்பு. அங்கு சந்தித்தவர்களுடன் தண்ணியடித்துவிட்டு அங்கேயே கோழி புரியாணியும் சாப்பிட்டுவிட்டு நல்ல போதையில் ஆட்டோவில் ஏறிவந்து லொட்ஜ் றூம் கட்டிலில் அப்படியே விழுந்தவன் கண் அயர்ந்து போகும் போதே யாரோ கதவில் பலமாக தட்டினார்கள்.எவண்டா இந்த நேரத்திலையெண்டு நினைத்தபடி கதவைதிறக்கவும் தயாராய் சாதாரண உடையில் நின்றிருந்த இருவர் பாய்ந்து அவனை கட்டிலில் தள்ளி கையில் விலங்கை போட்டவர்கள். அவனின் உடுப்பு பையை ஒருவன் துளாவ மற்றையவன் அவனின் கைத் தொலைபேசியை நோண்டினான். அவனிற்கு விடயம் ஓரளவிற்கு புரிந்தது. ஆனால் எப்படி என்று புரியவில்லை. எது எப்பிடியானாலும் ஆங்கிலத்லேயே கதைப்தாக முடிவெடுத்தவன். ஆங்கிலத்தில் நீங்கள் யார் என்ன வேணும் என கத்தினான். கள்ள நாயே என்றபடி ஒரு உதைதான் விழுந்தது. அதற்குமேல் எதுவும் பேசாதவர்கள். அவனது கடவுச் சீட்டையும் அவனது பையையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அங்கு நின்ற ரொயோட்டா டொல்பின் ரக வானில் உள்ளே தள்ளினார்கள். உள்ளே இன்னொருத்தனும் ஒரு பெண்ணும் இருந்தார்கள்.
உள்ளையிருந்த பெண் நாம்பன் மாட்டுக்கு பல்லை பிடிச்சு பாக்கிற மாதிரி அவனின்ரை நாடியை ஒரு கையாலை பிடிச்சு வலம் இடமாக திருப்பி பாத்திட்டு சிங்களத்தில் இவனை தெரியேல்லையெண்டவள். அவனிடம்.

டேய். பு....மகனே நீ புலிதானே

எக்ஸ்சியூஸ் மீ ஜ டின்ட் அண்டஸ்ராண்.

தமிழிலை கதையடா வேசைமேனே எண்டபடி அவளின் பங்கிற்கு அவனின் கதைப் பொத்தி ஒரு அறை விட்டாள்

அவனின் சேட் ஒன்றை எடுத்து ஒருத்தன் அவனது கண்ணை கட்டினான். வான் ஒரு இருபது நிமிசமாய் ஓடிக்கொண்டிருந்தது. இப்பிடித்தான் அவன் பாத்த ஒரு இங்கிலிஸ் படத்திலை கீறோவை கண்ணை கட்டி கொண்டு போவார்கள். கீறோ போகிற வழியை அக்கம் பக்கத்திலை கேக்கிற சத்தத்தை வைச்சு அடையாளம் பிடிப்பார். பிறகு அதே மாதிரி ரஜனியும் ஒரு படத்திலை நடிச்சிருந்தார். இவனும் அது மாதிரி வெளியிலை என்ன சத்தம் கேக்குதெண்டு காதை குடுத்துப் பாத்தான். ஆனால் சிங்களவன் புத்திசாலி வானிலை சிங்கள பாட்டை சத்தமாய் போட்டிருந்தான். அதலை ஒண்டும் கேக்கேல்லை.கடைசியிலை றெயின் ஒண்டு கோணடிச்ச சத்தம் மட்டும் கேட்டது. அது ஏதோ அவனிற்கு கடைசியா ஊதின சங்கு மாதிரியே இருந்தது.

வான் ஒரு இடத்தில் நிண்டது அவனை இறக்கி போனவர்கள் கண்கட்டை அவித்து விட்டதும் சுத்திவர பார்த்தான். அது போலிஸ் நிலையம் அல்ல. சாதாரண ஒரு வீடு போல இருந்தது.ஆனால் புலனாய்வு பிரிவின் இரகசிய சித்திரவதைக்கூடம் என்று மட்டும் புரிந்தது. அவனை கதிரையில் இருத்தியதும். அவள் தான் விசாரணை தொடங்கினாள். இதா பார் ஒழுங்கா உண்மையை ஒத்துக் கொண்டா நீ உயிரோடை போகலாம்.கணணியில் கிராபிக் செய்த ஒரு படத்தையும் அதே படத்தை கையால் ஓவியமாய் கீறியிருந்த படத்தையும் காட்டியபடிசெல்றா இந்த பெடிச்சியை உனக்கு எப்படி தெரியும்.நீ புலிதானே .அவளின் வட்டார வழக்கு பேச்சிலிருந்து அவள் மட்டக்கிளப்பு அல்லது அம்பாறை எண்டு புரிந்தது.

நோ சிஸ்ரர் எண்டவனிற்கு பேந்தும் பார் இங்கிலிசு எண்டு இன்னொரு அறை விழுந்தது. "சொறி "வளந்தது படிச்சது எல்லாமே சிங்கப்பூர். வேணுண்ணா என்னோடை டொக்கிமென்ன்ஸ் செக் பண்ணி பாருக்க . எனக்கு தமிழ் இப்பிடித்தான் வரும்.என்றான்.
அவளின் விசாரண நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்த மேசையில் அவனது பொருட்களை பரப்பி வைத்து அவனிடமிருந்த விசிட்டிங் காட்டுகள். அவனது சிங்கப்பூர் ஆவணங்களை மற்றையவன் பரிசோதித்துக்கொண்டிருந்தான்.

இனி சரிவராது எங்கடை வழைமையான விசாரணையை தொடங்க வேண்டியதுதான் என்று அவள் சிங்களத்தில் சொன்னதும். இருவர் வந்து அவனது உடுப்புக்களை கழற்றி நிருவாணமாக்கி அங்கிருந்த இரண்டு தூண்களிற்கிடையில் அவனது கைகளையும் காலையும் அகட்டி கட்டினார்கள்.டவின்சியின் மான் பவர்(man power) ஓவியத்தை போன்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தவனை
ஒருவன் வளைந்து கொடுக்கும் ஒரு வித பிளாஸ்ரிக் குளாயால் அவனது பின் பக்கம் முழுதும் முடிந்தவரை ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான்.அவன் ஏற்கனவே தண்ணியடித்திருந்ததால் வாங்கிய அடி நிருவாணமாக்கப்பட்ட கூச்சம் தூண்களில். தொங்கிய வலி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை.ஆனால் அவன் வாய் மட்டும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒருத்தன் சாராய போத்தலுடனும் சாப்பாட்டு பார்சல்களுடனும். உள்ளே நுளைந்தான் . வாங்கோ காசிம் நானா. என்று வரவேற்றார்கள். இவனை தொங்கவிட்டு அவர்கள் தண்ணியடிக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களின் சிங்களத்திலான உரையாடல்களில். அவளின் பெயர் ராணி.இன்னொருத்தன். உடுகொலஇவன்தான் அந்தக் குழுவின் பொறுப்பாளர்.. மற்றையவன்.பெர்ணான்டோ. அடுத்தவன் றஜித். என்பது மட்டும் அவனிற்கு புரிந்தது. கையில் சாராய கிளாசுடன் வந்த ராணி அவனின் வாயில் வைத்து பருக்கினாள்.. அவனிற்கும் அது தேவையாக இருந்தது. பின்னர் தன்து கைகளை கீழே கொண்டு சென்றவள். அவனது உறுப்பை விரலால் தட்டியபடி நீ எப்பவுமே இப்பிடித்தான் கிறீன் சேவ் செய்வியா என்றவும். மற்யைவவர்கள் கிறீன் சேவ் இல்லை கிளீன் சேவ்..ராணி தன்னுடைய வேலையை தொடங்கிட்டாள் என சொல்லி சிரித்தனர்.
மீண்டும் மேசைக்கு போனவள் ஒரு கிளாஸ் சாராயத்தை ஒரு மடக்கில் குடித்துவிட்டு திரும்ப வந்தது இனி உனக்கு தமிழ் தானாய் வரும் என்றபடி ஒற்றைக் கையை கீழே கொண்டு போனாள். இப்பொழுது அவளது உள்ளங்கையில் அவனது இரண்டு விதைகளும். உள்ளடங்கியிருந்ததுமெதுவாக கையை இறுக்கி பிசைய தொடங்கினாள். வலி உச்சத்தில் ஏறிக்கொண்டிருக்க அவன் கால்கள் நெம்பி பெருவிரல்கள் தூணைத்தொட்டது. வானத்திலிருந்த நட்சத்திரங்கள் இறங்கிவந்து அவனது தலையை சுற்றி வட்டமிட கண்கள் இருண்டது. மீண்டும் கண்விழித்தபொழுது அவர்கள் உணவருந்தியபடி இருந்தார்கள். ஆனாலும் அசையாமல் அவர்கள் பேசுவதை கேட்டான்.

தவறான ஆளை பிடிச்சிட்மோ. ??

ஏன் அப்படி சொல்லுறாய்???

அனிட்டை இருந்த விசிட்டிங் காட்டுகள் எல்லாம் பெரிய பிஸ்னெஸ் ஆட்கள். அரசியல் வாதிகள். போலிஸ் அதிகாரிகள் பெயர்கள் இருக்கு.

சும்மா எங்கையாவது பொறுக்கியெடுத்து சேர்த்து வைச்சிருந்திருப்பான். எதுக்கும் நாளைக்கு அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு கேட்டு முடிவு செய்வம்.

எதுக்கும் சலாவுதீன் வரட்டும். அவனுக்குத்தான் யாப்பாணியளை தெரியும். ..இல்லாட்டி குணாளனிற்கு கட்டாயம் தெரியும்.

குணாளன் இப்ப சி.பி.சி.ஜ.டி. நிலாப்தீனோடையல்லோ??. அவங்களிட்டை குடுக்கக்கூடாது நாங்களே கண்டுபிடிக்கவேணும்.

சிலநேரம் இவனின்ரை தொடர்புகள் பெரிய இடமெண்டால் எங்களிற்கும் பிரச்சனை இவனை அந்தப் பெண்ணோடை சிலர் பாத்திருக்கிறதா சொலலியிருக்கிறாங்கள். எதற்கும் நாளைக்கு அந்த லொச்சிற்கு நேரடியா அவனையும் கொண்டு போய் விசாரிக்கலாம். காசிம் நானா நீங்கள் இவனை படமெடுத்து மட்டக்களப்பிற்கு போய் விசாரிட்டு வாங்கோ.

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவனது இருமல் அவர்கள் பார்வையை திருப்பியது
தொங்கிய தலையை நிமிர்த்தி பிளீஸ் வோட்டர். வோட்டர்.. இவனுக்கு எப்பிடியடிச்சாலும் தமிழ் வருதில்லையென்றபடி ராணி திரும்பவும் சாராயத்தை போத்தலோடு எடுத்துப்போய் அவன் தலையை நிமிர்த்தி ஆட்டுக்கு தவிட்டுத் தண்ணி பருக்குவது போல பருக்கினாள். அவனிற்கு அதற்கு மேலும் முடியாமல் குமட்டிக்கொண்டுவரவே ஊவேக்......
வேணிபார் கோழிப்புரியாணி கூழாக பாய்ந்ததில் பாதி ராணியையும் நனைத்துவிட கோபமடைந்த ராணியின் உள்ளங்கைகளில் மீண்டும் அவனது விதைகள்.

0000000000000000000000

அதிகாலையளவில் கண் விழித்திருந்தான்.அவன் மயங்கியிருந்தானா அல்லது நித்திரையாகிப் போயிருந்தானா?என்பது நினைவில் இல்லை. அவன் எடுத்திருந்த சத்தியின் நாத்தம் அந்த அறையெங்கும் பரவியிருந்தது. தாகம் தொண்டையை அடைத்தது. அப்பொழுதுதான் அவனிற்கு உடல்வலியனைத்தும் தெரிந்தது. தலையில் பெரியதொரு பாறாங்கல்லை கட்டிவிட்டது போல பாரமாயிருந்ததோடு தலை வெடித்துவிடுகிற அளவிற்கு தலைவேறு வலியெடுத்தது. மூத்திரம் பெய்யவேண்டும் போல் முட்டியிருந்தது இருந்தது ஆனாலும் முடியவில்லை அவனது விதைகள் இரண்டும் வீங்கி நாவல் நிறமாய் மாறிவிட்டிருந்தது.மெதுவாய் முக்கியபடி சொட்டுச் சொட்டாய் பெய்து முடித்தவனிற்கு கொஞ்சம் ஆறுதலாயிருந்தது.


ஆனால் அந்த இடத்திலேயே பெய்ததால் மீண்டும் அடிவிழலாம் என அவன் எதிர்பார்த்தான். அடுத்து என்ன செய்வார்கள். கொலைசெய்து எங்காவது வீசி விடுவார்களா? அல்லது நான் யாரென்பதை கண்டு பிடித்து சிறையில் வாழ்க்கை கழியப்போகின்றதா? நேற்று அவனை சந்தித்தவர்கள் அவனை தேடியிருப்பார்களா? சிங்கப்பூரிற்கு செய்தி போயிருக்குமா? இப்படி ஆயிரம் கேள்விகளை திரும்ப திரும்ப அவன் மனதில் கேட்டுக்கொண்டிருக்கும் போதே விடிந்துகொண்டிருந்தது.
காலை கதவைத்திறந்த ஒருத்தன் நாற்றத்தில் முகத்தை சுழித்தபடி மீண்டும் கதவை சாத்தினான். சில நிமிட நேரத்தில் மீண்டும் கதவு திறந்தது அவனுடன் இன்னொருத்தன் கையில் வாளித் தண்ணீரும் துணியோடும் நின்றிருந்தான். வந்தவன் சே இவங்கள் என்ன மனிசரா மிருகங்களா இரவு முழுக்க தொங்கவிட்டிருக்கிறாங்கள் என சிங்களத்தில் திட்டிய படியே அவனது கட்டுக்களை அவிழ்த்து கிழே இறக்கவும் அவன் நிற்க முடியாமல் கீழே விழுந்து படுத்துக்கொள்ள. அவனை தூக்கியபடி சிங்களம் தெரியுமா? என்றான். அவன் பேசாமல் இருக்க யு ஸ்பீக் சிங்களம் என்றான். அவன் இல்லையென தலையாட்டி விட்டு தண்ணிகுடிக்கவேணும் என சைகை மட்டும் செய்தான். அவனை கதிரையில் இருத்தி ஒரு போத்தலில் தண்ணியை கொண்டு வந்து கொடுத்தவன். அந்த இடத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தவனை ரவி இவனை கொண்டுபோய் குளிக்கவிடு என்றான்.
அவனை குளிப்பதற்கு கூட்டிப்போன ரவி

நான் வடமராச்சி பிடிச்சு அஞ்சுமாதமாகிது டீ..ஓ .போட்டிட்டு இஞ்சை வேலைக்கு வைச்சிருக்கிறாங்கள். வெளிநாடு போக வந்தனான் சந்தேகத்திலைதான் பிடிச்சவங்கள். நீங்கள் ஊரிலை எந்த இடம்?

சிங்கப்பூர்

ஊரிலை சிங்கப்பூரா?? அது எங்கையிருக்கு?

சிங்கப்பூரிலை இருக்கு.

இந்த வாய்க்கொழுப்புக்குத்தான் பிடிச்சிருப்பாங்கள். போய் குளி.

குளித்து முடித்து வந்தவன் அந்த சிங்கள அதிகாரியிடம் வலிக்குளிசை கேட்டு வாங்கி போட்டுக்கொண்டான் அவன் பால்த்தேனீரும் வாங்கி கொடுத்திருந்தான்.
0000000000000
முதல்நாள் அவனைப் பிடித்த குழுவினருடன் மேலும் இருவர் வந்திருந்தனர். புதிதாய்வந்தவர்களில் ஒருவன் என்ன மச்சான் எப்பிடி இரிக்கிறாய். என்னை ஞாபகம் இரிக்கா என்றான். அவன் இல்லையென்று தலைமட்டுமஆட்டினான் நான் நம்பத் திறீயிலை செல்வா வீட்டிலையெல்லாம் இரிந்தனான் என்னை தெரியாதா?? மீண்டும் அவனது கேள்விக்கு இவனது தலையசைப்பு மட்டுமே பதிலானது. அவனும் உடுகொல மட்டும் வெளியேறினார்கள். சிறிது நேரத்தில் உள்ளே வந்த உடுகொல சலாவுதீனிற்கு தெரியாதாம் என்றான். புதிதாய் வந்த மற்றையவன் அவனை சுவரோடு நிற்க வைத்து கையில் ஒரு சிலேற்றில் சில இலக்கங்களை எழுதிக்கொடுத்து பிடிக்கச் சொல்லி பல கோணங்களில் படம் எடுத்தான். காசிம் நானா நீங்கள் படங்களை பிறின்ட் போட்டு மட்டக்களப்பிற்கு போய் விசாரிச்சு விபரங்களை கொண்டுவாங்கோ என்று உத்தரவிட்ட உடுகொல ராணி நாங்கள் இவனை அந்த லொட்சிற்கு அழைத்து போகலாமென்றான்.

அவன் கண்கள் கட்டப்பட்டது .இப்பொழுது அவர்கள் பயணித்தது போலீஸ் ஜீப் ஆனால் அனைவரும் சாதாண உடையில் தான் இருந்தனர் கட்டியிருந்த அவனது கண்களை அவிழ்த்தனர். போலீஸ் ஜீப் கிறீன் வீதியிலிருந்த பாரிஸ் லொட்ஜின் முன்னால் நின்றது. இது இலங்கையின் பிரபல பயண முகவரான பாரிஸ் தவம் என்பவரிற்கு சொந்தமானது. போலீஸ் ஜீப்பை பார்த்துமே அனைவரும் அறைகளிற்குள் பதுங்கிக்கொண்டனர். காரணம் அங்கிருந்தவர்கள் அனைவருமே வெளிநாடு போவதற்காக ஏஜென்சிகளிடம் காசுகட்டிவிட்டு காத்திருந்தவர்கள். கைவிலங்கிட்ட அவனை இறக்கியவர்கள். லொட்ச் மனேச்சரிடம் போய் விபரத்தை சொல்லி உடுகொல தன் கையிலிருந்த அந்த பெண்ணின் படத்தையும் அவனையும் காட்டி இவர்களை இங்கு தங்கிருந்தாரகளா? என்றான். பழைய மனேச்சர் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதால் தான் புது ஆள் வேலைக்கு சேர்ந்து கொஞ்சக்காலம்தான். அங்கை இருக்கிற பழைய ஆட்களை கேட்கச் சொல்லி சொன்னார்.
அப்பொழுது அங்கு வந்த றூம் போய்(லொட்சினை கூட்டிதுப்பரவாக்கி அங்குள்ளவர்களின் தேவைகளை கவனிப்பவன்.)அவனிடமும் அதே கேள்வியை கேட்டதும் அவனை ஆழமாக பார்த்தவன் இல்லையென்று தலையாட்டிவிட்டு லொட்சில் இருந்த மற்றையவர்களை கதவைதட்டி வெளியே வரும்படி சொல்லிக்கொண்டே போனான். வெளியே வந்த பலரும் அவனைத் தெரியாதென்றே சொன்னவர்கள் பெண்ணின் ஓவியத்தை பார்த்து தலையை சொறிந்தனர். ஒருத்தி மட்டும் அவனை அங்கு கண்டதாகவும். ஆனால் அந்த பெண்ணை தெரியாது என்றும் சொன்னாள். அவனைத் தெரியும் என்றதுமே ..இரடி வெளியாலை வந்ததும் முதல்வேலையா வந்து உனக்கு காதைப்பொத்தி போடுறன் எண்டு மனதில் நினைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்படும் பொழுது றூம் போயை பார்த்து கண்களால் நன்றி சொன்னவன். செய்தி சிங்கப்பூரிற்கு போய்விடும் என்கிற நம்பிக்கை அவனிற்கு பிறந்திருந்தது.


அவர்கள் அருகிலிருந்த பியூட்டி லொட்ச்.மற்றும் விவேகானந்தர் லொட்ச் ஆகியவற்றிலும் விசாரித்தார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தெரியாதென்றும் சிலர். பார்த்மாதிரி இருக்கு என்றும் பதில் சொன்னதால்.அவர்களிடம் ஏதோ வெறுப்பணர்வு தோன்றியிருந்தது இப்பொழுது அவனது கண்கள் கட்டப்படவில்லை ஜீப் மருதானை காவல் நிலையத்திற்கருகில் இருந்த காவல்த்துறையினரின் குடியிருப்பில் நுளைந்தது. அந்த அறையில் நுளைந்தபொழுதுதான் அவன் அங்குதான் முதல்நாள் இரவு தங்கவைக்கப்பட்டிருத்தான் என்று அவனிற்கு புரிந்தது. இப்பொழுது அவனிற்கு பசி வயிற்றை விறாண்டியது. மீண்டும் தலைவலிக்கத்தொங்கியிருந்தது.அப்பொழுது உடுகொலவின் கைத்தொலைபேசியடிக்க அதை எடுத்தவன் வெளியே போனான். சில நிமிட நேரத்தின் பின்னர் உள்ளே வந்தவன். மற்றயவர்களையும் வெளியே அழைத்தான். சிங்கப்பூரிற்கு தொலைபேசி போயிருக்குமோ என்று அவன் நினைத்துக்கொண்டான்.

00000000000000

மீண்டும் உள்ளே வந்தவர்கள் உடுகொல அவனிடம்

வினோதனை உனக்கெப்படி தெரியும்.

அவர் என்னுடைய றிலேசன் அங்கிள் முறை.

ஓ அப்பிடியா?

அவனது முகம் மாறியது உன்னை தேடி எல்லா போலிஸ் ஸ்ரேசனிற்கும் போன் போயிருக்கு.

ஓ றியலி ??

என்ன சாப்பிடுகிறாய்.

பிறியாணி.

00000000000000000

அன்றிரவு பொறளை இராணுவ மற்றும் காவல்த்துறை குடியிருப்பின் ஒரு தொடர்மாடி குடியிருப்பில் அவனது ஒற்றைக்கை மட்டும் ஜன்னலுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தது. குளித்து முடித்து சுடிதார் அணிந்து வந்த ராணி அவன் முன்னால் ஒரு முறை சுழன்றவாறு நான் எப்பிடி இருக்கிறேன் என்றாள்.. ஊகூம்..பெரிய நதியா எண்டு நினைப்பு.கோயில் தேரிற்கு சீலையால் போர்த்தது போல இருக்கு என்று சொல்லாமென நினைத்தாலும் சுப்பர் என்றான். கதவைத் தட்டிய ஒரு போலிஸ்காரன் சாராயம் பியர் சோடா இரண்டு பிரியாணி பாசலை கொடுத்து விட்டு பவ்வியமாக விடைபெற்றான்.கைவிலங்கை கழற்றியவள் விலங்கின் இரண்டு பக்கத்தையும்காப்புப் போல் ஒரு கையிலேயே பூட்டினாள். இன்றிரவு நீ என்னுடைய பாதுகாப்பில்தான் இருக்கப் போகிறாய். ஒத்துளைத்தால் உனக்கு நல்லது இல்லாட்டில் நேற்றை இடத்தில் தொங்கவேண்டிவரும் என்றாள்.

என்னவேணும் பியரா சாராயமா ?

fist பாத்றூம் next பசி சைகையுடன் சேர்த்தே சொன்னான்.

வீட்டையும் நோட்டம்விட்டான் யாரும் தப்பிஓடிவிடாதபடி யன்னல் வெளியே இரும்புக்கம்பிகளால் ஒட்டப்பட்டிருந்தது.துணியெல்லாவற்றையும் கழற்றிவிட்டு போக சொன்னாள். கழிவறைக்கு போனவன் அப்படியே குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அங்கிருந்த புளிச்ச நாத்மெடுத்த துவாயால் முன் பக்கம் மட்டும் மறைத்தபடி வந்தவனை ஏற இறங்க பார்த்த ராணி அவன் துவாயை பறித்துவிட்டு மீண்டும் கைகளை பின்பக்கமாக விலங்கிட்டு கதிரையில் தள்ளினாள்.தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இப்பொழுது அவனது விதைகள் அவளது உள்ளங்கைகளில் ஆனால் நசிக்கவில்லை .அவனின் காலகளை அகற்றி முழங்காலில் குனிந்தாள். உன்னை அவள் இவ்வளவு நசிச்சும் உனக்கு உனக்கு புத்திவரேல்லை. கீழே பார்த்து திட்டினான்.. அசையாதை அசையாதை .கொச்சிக்கடை அந்தோனியாரே வெள்ளவத்தை பிள்ளையாரே நேத்திக்கடன் வைத்தான். இரண்டு பேருமே கைவிட்டு விட்டனர். விலங்கிட்டிருந்த கைகளை சில வினாடிகள் இறுக்கப் பொத்திப் பிடித்தான் கைகளை விலங்கு அழுத்தியது மீண்டும் கைகள் லேசானது.அவளது பெருத்த உடம்பிற்கான காரணம் இப்பொழுது அவனிற்கு புரிந்தது .ம்.பரவாயில்லையே என எழுந்தவள் பியரை உடைத்து சில மடக்குகள் குடித்துவிட்டு அவனது ஒரு கை விலங்கை அகற்றி அவனது கையில் பியரை கொடுத்தாள். விலங்கின் திறப்பை ஒவ்வொருதடைவையும். பாதுகாப்பாக அங்கிருந்த அறையில் கொண்டுபோய் வைத்து கதவை பூட்டிவிடுவாள். அவளின் செய்கைகள் அனைத்தும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதொரு புலனாய்வு அதிகாரியாகவே காணப்பட்டாள்.

00000000000000

நேரம் நள்ளிரவைத் தாண்டிக்கொண்டிருந்தது வீதி விளக்கின் வெளிச்சம் மெல்லிதாய் அறையை நிறைத்திருந்தது. அந்த படுக்கையறையின் கட்டிலில் அவனின் இடக்கை கட்டிலோடு மேற்பக்கமாக விலங்கிட்ட நிலையில் கலந்து முடித்த இருவரிற்கும் மூச்சுவாங்கியபடியிருக்க. அவளின் பருத்த உடல்பாதி அவன் மீது படர்ந்திருந்தது. அவன் கன்னத்து குழியினை விரலாம் மெதுவாய் வருடியவள் .எனக்கு உன்னிலை பிடிச்சதே இந்தக் குளிதான்.

நீ புலியில்லை எண்டு விசாரணயள்ளை தெரியிது.

அப்ப விடவேண்டியதுதானே ??

காசிம் நானா மட்டக்கிளப்பாலை விசாரண முடிச்சு வந்ததும் அங்கையும் உன்னை தெரியாதெண்டு சொல்லியிருந்தா உன்னை கோட்டிலை கொண்டுபோய் ஒரு ஜச்சிற்கு முன்னாலை லோக்கல் பொலிசிட்டை குடுத்திடுவம் பிறகு உன்ரை சொந்தக்காரங்கள் யாராவது வந்து கையெழுத்து போட்டு கூட்டிக்கொண்டு போகலாம்.

எதுக்கு என்னை அரஸ்ற் பண்ணீங்க??

பட்டிலங்தையிலை வெடிச்சு செத்த பெட்டையோடை கடைசியா ஒருத்தன் இரண்டுநாள் பாரிஸ் லொட்ச்சிலை தங்கியிருக்கிறான்.அவள் மட்டக்கிளப்பு மாமங்கம். அததான் காசிம் அங்கை போயிரக்கிறார் . அவனின்ரை பொலிஸ் பதிவு ஜடென்டி காட்டிலை திருக்குமார் எண்டு பெயர் இருக்கு அந்த ஜடென்டி படத்தை எடுத்து எல்லா லொட்ச் கோட்டல்கள் பொலிஸ் ஸ்ரேசன்கள் எல்லாம் அனுப்பி வைச்சனாங்கள். அப்பதான் ஒரு லொச்சிலை அதே மாதிரி ஒருத்தன் தங்கியிருக்கிறதா தகவல் வந்திச்சி. அதுதான் நீ...

இது லொட்ச் காக்காவின்ரை வேலையா என மனதிற்குள் நினைத்தவன். ..பட்டிலந்தை.. லேடி.. திருக்குமார் ..வெடிச்சது எதுவுமே புரியல்லை.என்னை பாத்தா அவன் மாதிரி இருக்கா??

உனக்கு எதுவுமே விளங்க வேண்டாம் வேண்டாம் அதுதான் நல்லது .

ஒண்ணு கேட்டா கோவிச்சசுக்க மாட்டீங்களே நீங்க சி ஜ டியா.

இப்ப அப்பிடித்தான் ஆனால் மின்னை அப்பிடியில்லை

அப்பிடின்னா??

அவள் கைகள் அவனது மார்பை வருடியபடியே ..நானும் சிங்களவனிற்கு எதிராதுவக்கு தூக்கினவள்தான். எங்கடை ஊரிலை ஈ;பி.ஆர்.எல்.எவ்வுக்கு போன முதல் பெடிச்சி நான்தான். இயக்கத்திலையே ஒருத்தரை காதலிச்சிருந்தனான் புலியள் ஈ.பி யை தடைசெஞ்சாப்பிறகு என்னையும் அவரையும் விசாரிச்சிட்டு விட்டிட்டாங்கள். நாங்கள் கலியாணம் செய்து எனக்கு பிள்ளையும் பிறக்க அவர் கட்டாறுக்கு போயிற்றார். எல்லாம் நல்லபடியாய்தான் போய்கொண்டிருந்தது. என்ரை அவரும் லீவிலை ஊருக்கு வந்திருந்தார் அந்த நேரம் இந்தியனாமிக்கும் புலியளிற்கும் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்தியாவிலை நிண்ட பழைய இவற்ரை சினேதங்கள் ஈ.பி பெடியளும் ஊருக்கை இந்தியனாமியோடை திரிஞ்சவங்கள். இவர் வந்து நிண்டதை கேள்விப்பட்டு அடிக்கடி வந்திட்டு போவாங்கள். நாங்களும் வராதையெண்டு சொல்லோது. ஒருநாள் இரவு இதே மாதிரித்தான் நானும் அவரும் படுத்திருந்த நேரம் எங்கடை சொந்தக்கார பெடியன் ஒருத்தன் புலியிலை இருந்தவன். தீசன் எண்டு பேர் கதவிலை தட்டி என்ரை பேரை சொல்லி கூப்பிட்டான் அவசரமா துணியை சுத்திக்கொண்டு நான்தான் போய் கதைவை திறந்தன் இவரோடை கதைக்கவேணும் வரச்சொல்லுங்கோ எண்ட அவரும் பின்னாலை வந்திட்டார். என்னவெண்டாலும் இங்கை கதை அவர் வெளியிலை வரமாட்டார் எண்டு நான் அம்பிடிக்க . ஜயோ அக்கா ஒரு பிரச்சனையுமில்லை கதைக்கத்தான் எண்டு அவனும் அடம்பிடிக்க சொந்தக்கார பெடியன்தானே ஒண்டும் செய்யமாட்டானெண்டு அவரை வெளியாலை விட்டாலும் நானும் கொஞ்சம் பின்னாலை போனன் படலையடிக்கு போனதும் வெடிச்சத்தம் கேட்டிச்சு. மண்டை வெடி அவர் அதிலையே........ என்று சொல்லும் போது ராணியின் குரல் தளுதளுத்தது நின்று போய் அவனது மார்பில் சூடான சிலகண்ணீர் துளிகள் விழுந்ததை அவன் உணர்ந்தான். சில நிமிட அமைதியை அவனே கலைத்தான்.


அப்புறம் என்னாச்சு.??

அதோடை என்ரை விதியும் மாறிப்போச்சு. என்ரை மனிசனை சுட்டவனை கொல்லாமல் விடுறெல்லையெண்டு முடிவெடுத்தன். என்ரை புள்ளையை அம்மாட்டை குடுத்திட்டு ஆமியோடை போய் சேந்திட்டன்.அவனை மட்டுமே தேடினன் ஒம்பது மாதத்துக்கு பிறகு அவனை போட்டாப் பிறகுதான் என்ரை மனசு கொஞ்சம் ஆறிச்சிது.

ஓ அவனும் குளோசா?? பிறகெதுக்கு இப்பிடி நீங்க தொடந்தும்....இழுத்தான்.

பிறகு எங்கையாவது போய் என்ரை பிளையோடை வாழலாமெண்டுதான் நினைச்சனான். ஆனா புலியை பத்தி உனக்கு தெரியாது அது எங்கை போனாலும் விடாது. ஏதாவது அரபு நாட்டுக்கு போகலாமெண்டு நினைச்சன் அதக்கு என்னட்டை வசதியும் இருக்கேல்லை. வெளிநாடு போனாலும் உன்னை மாதிரி நான் படிச்ச ஆளும் இல்லை ஏதாவது வீட்டு வேலையள்தான் செய்யவேணும். அதோடை முதல்லை வெறும் மெசேச்குடுக்கிற ஆளாய் இருந்த என்னை சி.ஜ.டி யிலை சேர்த்து பயிற்சியளும் தந்து குவாட்டஸ் சம்பளம் எல்லாம் தாறாங்கள்.
என்னவோ ஒண்ணும் புரியல்லை ஆனா உங்களோடை ஸ்ரோறி பீலிங்கா இருக்கு சொறி. எனக்கு நீங்க அடிச்ச அடி ஒரே வலியா இருக்கு இன்னும் கொஞ்சம் விஸ்கி பிளீஸ் ..அப்பதான் தூங்கலாம்.
இப்ப எனக்கும் கவலையாத்தான் இருக்கு ஆனால் ஒண்டுமே செய்யேலாது என்றவள். அவன் மீதிருந்த நிரம்பிய ஆணுறையை உருவியெடுத்தவாறே துணியால் தன்னை சுற்றிக்கொண்டு அயையை விட்டு வெளியேறினாள்.

000000000000000


ஒரு கிளாஸ் நிரப்பி சாராயத்தை ஊற்றிவந்து அவனிடம் நீட்டியவள் அவன் குடித்து முடியும்வரை காத்திருந்து கிளாசை வாங்கியபடி உனக்கு இன்னொரு விடயத்தையும் சொல்லவேணும் நாளைக்கு உன்னை ஜட்சிற்கு முன்னாலை விடுதலை செய்யேக்கை நான் இப்பிடி நடந்ததா நீ வாயே திறக்கக்கூடாது அதுதான் உனக்கு நல்லது . அப்பிடி ஏதாவது நடந்தால் நீ எப்பிடியும் எங்களோடை கண்காணிப்லைதான் இருப்பாய் பிறகு கடல்லையோ களனி ஆத்திலையோ மிதக்கவேண்டிவரும். என்றவள் அவன்மீது போர்வையை போர்த்திவிட்டு "சரி படு நான் இஞ்சை வெளியிலைதான் படுத்திருப்பன்" என்படி விலங்கு சரியாய் பூட்டியிருக்கா என்று பார்த்து உறுதி செய்தவள் கதைவை பூட்டிவிட்டு போய்விட்டாள்.

000000000000

காசிம்மின் மட்டக்கிளப்பு அறிக்கை N.I.B அறிக்கை எல்லாம் வந்தது அவனை மருதானை நீதவான் முன்னிலையில் புறக்கோட்டை பொலிசாரிடம் C.I.D யினர் கையளித்தனர். அங்கேயே தயாராய் நின்ற வக்கீல் கையெழுத்திட்டு அவனை விடுதலை செய்தார். அங்கு வந்த ராணி அவனிடம் தனது கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து உனக்கு எங்கை என்ன உதவி தேவையோ தராளமாய் எனக்கு போனடி தனது இலக்கத்தை கெடுத்துவிட்டு போனார்.அதன் பின்னர் அவனும் பாகிஸ்தானிற்கு தேங்காய் ஏற்றுமதி வியாபாரத்தினை அவனது பங்காளி சுமானந்த தேரரோடு தங்குதடையில்லாமல் தொடர்ந்ததோடு அடிக்கடி பொரளை ராணியின் குவாட்டசிற்கு பியரோடும். ஓல்ட் அரக்கோடும் போய்வருவதுமாய் அவர்களது நட்பு தொடர்ந்தது.

00000000000000

01.31.1996 திங்கள் அதிகாலை மீன்கள் பதனிடும் தொழிற்சாலையொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொறி ஒன்றினுள் அவன் தனியாக ஜட்டிமட்டும் அணிந்தபடி வியர்வையும் புளுதியுமாய் சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் அதிகளவு சத்தம் எழுப்பாமல் கவனமாய் ஆனால்பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தவன். நேரத்தை பார்தான் அதிகாலை இரண்டை தொட்டுக்கொண்டிருந்தது அவனிற்கு பக்கத்தில் மசாயிர் அவனிற்கு உதவிக்கொண்டிருந்தான். சரிமச்சான் எல்லாம் முடிஞ்சுது இனி பின்னாலை கருவாட்டு கூடையளை அடுக்கினால்சரி என்றபடி வேகமாக இன்னொரு லொறியிலிருந்த கருவாட்டு கூடைகளை அந்த லொறிக்கு மாற்றிஅடுக்கி முடித்தவர்கள் அங்கு தொட்டியில் நிரம்பியிருந்த தண்ணீரில் உடலை கழுவி உடுப்பை மாற்றிபடியே அவன் மசாயிரிடம்..
மச்சான் நேரமாகுது நீ லொறியை எடு நான் காரிலை முன்னாலை போறன். என்றான்.

மச்சான் உன்னை நம்பித்தான் இரிக்கிரன் ஒண்டும் பிசவாது தானே

டேய் நான் அ..அ வின்ரை ஆள் ஒண்டும் பிசவாது லொறியைஎடு எண்டவன் காரிற்கு போய் அதற்குள்ளிருந்த jony walker போத்தலை திறந்து சில முறடுகள் விழுங்கி தொண்டையை கனைத்துவிட்டு பார்த்பொழுது. மசாயிர் தலையில் தொப்பியை போட்டபடி அவனது ஜீன்சில் இருந்த கைக்குட்டையை எடுத்து நிலத்தில் விரித்து முழந்தாளிட்டு தொழுதுகொண்டிருந்தான். இவன் வேறை நேரம்காலம் தெரியாதவன்.என்று சலித்துக்கொண்டான்.
தொழுது முடிந்த மசாயிரிடம் டேய் உன்ரை அல்லா பகிடி வெற்றி தெரியாதவர். கவனம். எல்லாம் பிழைக்கபோகுது .

அதில்லடா மனசாட்சியெண்டு இரிக்கல்லே அதுதான் என்படி மசாயிர் லொறியில் ஏறி அதை இயக்கினான்.

அவர்களது வாகனங்கள் கொழும்பு நகரினுள் நுளையும் முக்கிய சோதனை சாவடியை நெருங்க காவலரணில் இருந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருத்தன் ரோச் லைற் வெளிச்சத்தை காட்டி முன்னால் வந்த காரை மறித்தான். அவனும் அவர்களும் சிங்களத்தில் உரையாக்கொண்டிருக்கும்போதே லொறி அவர்களைத்தாண்டிப்போய்க்கொண்டிருந்ததுகாரிற்குள் மக்கால்வாசியளவில் இருந்த போத்தலை எடுத்து அவர்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மசாயிருடன் இணைந்துகொண்டான். புறக்கோட்டை பகுதியில் காலை சந்தைக்காக லொறிகள் பொருட்களுடன் வந்து நிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. மசாயிரும் அந்த லொறிகளிற்கிடையில் ஒரு இடத்தில் நிறுத்தினான். அந்த லொறியை ஒருவனிடம் கையளித்து விடுவதோடு இவர்களது வேலை முடிந்துவிடும். காரை நிறுத்தியவன் ஒரு தொ.பே இலக்கத்தை அழுத்தினான். அங்கேயே மேம்பாலத்திற்கு அருகில் சாறத்தால் போர்த்துக்கொண்டு படுத்திருந்த ஒருவன் கரைநோக்கி வந்தான். சில சங்கேத மொழிகள் பரிமாறப்பட்டு இருவருமே சரியான ஆட்கள்தான் என உறுதி செய்து கொண்டபின்னர் அவன் லொறிக்கு புதியவனை அழைத்து போனாவன். மாசாயிர் கீழே இயங்கிக் கொள்ள இருவரும் லொறிக்குள் ஏறினார்கள். இங்கை சீற்றுக்கு பக்கத்திலைதான் சுவிச் வைச்சிருக்கிறன்.பிழைக்காது. அப்பிடி சிலநேரம் ஏதாவது பிழைச்சாலும் பின்பக்கமாய் ஒரு அடிகுடுத்தா போதும். என்றவனிடம் . அவன் ம்..என்று மட்டும் பதில் கொடுத்தான். விடைபெய முன்னர் அவனது பெயரை கேட்கலாமா என யோசித்தாலும் அது அவனது வேலையல்ல என நினைத்தபடி அங்கிருந்து வெளியேறினான். கார் கொழும்பிற்கு வெளியே பேலியகொடை பாலத்தை தாண்டி ஓடி கந்தானை பகுதியில் ஒதுக்குப் புறமாக ஒரு தென்னந்தோப்பில் நின்றது. கைக்கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு இருவரும் நித்திரையாகிப் போனார்கள்.

00000000000000

அவர்களது காரை யாரோ உலுப்புவது போல் இருக்கவே திடுக்கிட்டு விழித்தார்கள். எருமை மாடு ஒன்று காரில் சொறிதேய்த்தபடி நின்றது. அவன் எருமை மாடு என்று திட்டிவிட்டு நேரத்தை பார்தான் ஆறரை மணியாகியிருந்தது. சே இன்னம் கொஞ்சநேரம் நித்திரை கொண்டிருக்கலாம். என்றவன் காரை இயக்கி பிரதான வீதி நோக்கி ஓடிக்கொண்டிருக்க மசாயிர் திரும்பவும் சுருண்டு படுத்துக்கொண்டான். கந்தானை சந்திக்கு வந்தவர்கள் அங்கிருந்த முஸ்லிம் சாப்பாட்டுக்கடையில் போய் முகம் கழுவி காலைக்கடன்களை முடித்துவிட்டு ரீயும் மாலுபணிசும் சாப்பிட்டார்கள். கார் இப்பொழுது கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தது மசாயிர் காரை ஒடிக்கொண்டிருந்தான்.

மசாயிர் இதுவரைக்கும் என்னோடை இருந்து செய்த உதவிக்கு தாங்ஸ்சடா மச்சான்.

என்ன இப்பிடி சொல்லிட்ட நீ எனக்கு எவ்வளோ உதவி செஞ்சிரிக்காய். நானும் இன்னும் மூண்டு நாளிலை டுபாய் போயிடுவன்.
நீ போறவரைக்கும் காரை வைச்சிரு இன்னும் பத்துநாளைக்கு காசு கட்டியிருக்கு நீ போற அண்டைக்கு கொண்டு போய்விடு.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் இறுதி சோதனைச்சாவடி..
சரி மச்சான் இதிலை நான் இறங்கிறன். தேவையில்லாமல் கொழும்பிற்கு உள்ளை போகாதை கவனம். ஏதும் அவசரமெண்டால் மட்டும் சிங்கப்பூர் நம்பருக்கு போனடி இல்லாட்டி டுபாய் போனதும் போனடி
சரிமச்சான் சந்திப்பம் ..மசாயிரிடமிருந்து விடைபெற்றவன்.காரில் தயாராய் வைத்திருந்த பொதியை எடுத்து அதிலிருந்த ஆவணங்களை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தில் நுளைந்தவன் வழைமையான சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் தங்கியிருக்கும் கூடத்தில் தங்கியிருந்தபொழுது அவன் எதிர்பார்த்திருந்த ராணியின் அழைப்பு வந்தது. விமான நிலைய அறிவித்தல் ஏதும் செய்துவிடக்கூடாது என்று நினைத்தபடியே
கைத்தொலைபேசியை காதில் வைத்து கலோ..என்றான்.

டேய் நீ சொன்ன இடத்துக்கு வந்திட்டன் ஏதோ அவசரமா வரச்சொன்னாய் என்ன ஏது எண்டும் சொல்லேல்லை எங்கை நிற்கிறாய்.

நேரத்தை பார்த்தான்..ஓ வந்திட்டீங்களா. நான் இங்கை பக்கத்திலைதான் சதாம் ஸறீற்றிலை நிக்கிறன் ஒரே ராபிக் பத்து நிமிசத்திலை வந்துடறேன்.

என்ன விசயம் எண்டாவது சொல்லன்.

அதை நேரிலை சொல்லுறன்அங்கை நீங்கள் 1st Floor போய் mony exchange பண்ணிற இடத்திலை நில்லுங்கோ. வந்ததும் சொல்லுறன்.

சரி கெதியாய் வா.

1st Floor லையே நில்லுங்க பிறகு உங்களை தேடஏலாது

சரி சரி அங்கையே நிக்கிறன். எத்தினையோ பேரை நான் ஓடவைக்கிறன் நீ என்னை ஓடவைக்கிறாய் எல்லாம் என்ரை விதி ..

தொலைபேசியை அவன் முழுதுமாக நிறுத்தினான். சிங்கப்பூர் விமானத்திற்கான பயணிகளை தயாராகும்படி அறிவித்தார்கள். விமானத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். விமானம் ஓடுபாதையில் உருளத்தொங்கியது நேரத்தினை பார்த்தான். கொழும்புநகரம் ஒருமுறை அதிர்ந்து அமைதியானது.ஒரு தவறை இன்:னொரு தவறால் சரிசெய்திருந்தான். அது சரியா தவறா என்பதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை. அதைப்பற்றியெல்லாம் அவன் யோசிப்பதும் இல்லை.விமானம் மேலே கிளம்பியதும் போர்வையால் மூடியபடி நித்திரையாகிப்போனவனிற்கு கனவில் ராணியினால் விதை நசிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டவர்களும் அவனைச்சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கதையின் முதலாவது பந்தியை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

00000000000000000000000000000

கதை உண்மை சம்பத்தை தழுவியது

பிற்குறிப்புக்கள். 90 களில் தென்னிலங்கையில் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்படுபவர்கள் ராணியை அடையாளம் கண்பதற்கோ அல்லது விசாரணை செய்யவதற்கோ ஒரதடைவையாவது சந்திரப்பார்கள்.

சலாவுதீன்.புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவன். மட்டக்கிளப்பை சேர்ந்தவன் யாழ்ப்பாணத்தில் புலிகள் முகாம்களில் இருந்தவன். புலிகள் இயக்கத்தில் ஜிகாத் அமைப்பு ஊடுருவி விட்டது என்று அறிந்ததும். புலிகள் அமைப்பிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டு களையெடக்கப்பட்டபொழுது தப்பிவந்தஒருவன்.

குணாளன் .புலிகள் அமைப்பில் இருந்தவன் வடமராச்சி கரவெட்டியை சேர்ந்தவன். இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்திற்கு பெரும் தலையிடியாய் இருந்தவன். பின்னர் புலிகள் அமைப்புடன் முரண்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவுடன் இணைந்திருந்தான்.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.

0
0
இங்கு நான் எழுதப் போவது என்னுடைய சொந்த அனுபவங்கள் மட்டுமே அதுவும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் அனுபவங்கள். தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை பெரும்பாலும் சாதாரணமாக எவரும் எழுதவோ அல்லது மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் அது நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு. 70 களில் ஆயுதத்தினை சில இளைஞர்கள் கையில் தூக்கியபொழுது ஒட்டுமொத்த தமிழ் சமூகமுமே இது சாத்தியமா?? இவங்களிற்கு தேவையில்லாத வேலை என்று கேலி பேசியபொழுது அந்த ஒரு சிலர் ஒரு ஆயுதப் போராட்டத்தினை நடாத்தி உலகையே திரும்பி பார்க்கவைத்தனர். அதன் சரி பிழைகள் அதன் தோல்வி தோல்வியின் காரணங்கள் பலஇயக்க மோதல்கள் என்பவற்றிக்கும் அப்பால் ஒரு போராட்த்தினை நடாத்தி காட்டியதோடு மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டிற்கு போவதென்றாலும் பாட்டியின் அல்லது இன்னொருவரின் துணையோடு போய்க்கொண்டிருந்த தமிழ் பெண்கள் கைகளில் ஆயுதங்களோடு காடுகளிலும் கடலிலும் சமரிட்ட சாதனையை நடாத்தி தமிழ்கலாச்சாரம் என்றால் இப்படித்தான் என்கிற பிற்போக்குகளை தகர்த்திருந்தனர்.

ஆனாலும் இத்தனை நடந்து முடிந்தபின்னரும் 30 வருட யுத்தமும். புலம்பெயர் வாழ்வு மேலைத்தேய கலாச்சாரம் மேலைத்தேய சிந்தனைகளாவது தமிழ் சமூகத்தின் பல பிற்போக்குத்தனங்களை மாற்றியிருக்கின்றதா என்று பார்த்தால் அதன் பலாபலன் ஏமாற்றத்தினையே தருகின்றது. இப்படியான தொரு தமிழ் சமுகத்தில் அதுவும் யாழ்ப்பாண குடியில் பிறந்து இதே சமூகத்துடனானதும் ஆயுதத்தை கையில் தூக்கிய ஒரு இயக்கதிலும் ஒரு இலட்சியத்தோடு சேர்ந்து பின்னர் புலம் பெயர்ந்துவாழும் என்னுடைய சொந்த அனுபவத்தின் இன்னொரு தனிப்பட்ட வாழ்வின் பக்ககங்களே இவை. இது யாரையும் குத்திக்காட்டவோ அல்லது நானும் சமூதாயத்தை திருத்தப் போகிறேன் என்கிற பேர்வழியின் எழுத்தோ அல்ல. வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே.இந்தத் தொடரை படிக்கும் போது என்னைப் போலவே படிக்கிறவர்களும் அதே பேன்ற சம்பவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றை உங்களால் எழுதவோ அல்லது மற்றவர்களிடம் பகிரவோ முடியாமல் போகலாம் ஆனால் அந்த சம்பவங்கள் உங்கள் மனக்கண்ணில் ஒரு தடைவை நிச்சயம் வந்து போகும். அதே நேரம் நான் என்னுடைய அனுபவங்களை நாவலாகவும் எழுதத் தொடங்கியிருப்பதால். அந்த நாவலில் இந்த விடையங்களும் சேர்ப்பதற்கு இலகுவாகவும் இருக்குமென்பதால் என்னுடைய பெயரிலேயே சிறி என்கிற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி இந்தத் தொடரில் உலாவ விடுகிறேன். சிறியோடு நீங்களும் பயணியுங்கள்......

பி.கு என்னுடைய மனைவிக்கு ஏற்கனவே என்னைப்பற்றிய விபரங்கள் பெரும்பாலும் தெரிந்திருந்தது பின்னர் என்னைப்பற்றிய சகல விபரங்களையும் அவரிற்கு தெரிவித்த பின்ரே எங்கள் திருமணம் நடந்தது எனவே இதை எழுதுவதும் அவரிற்கு தெரியும் எனவே எங்கள் தனிப்பட்ட வாழ்கையிலும் எவ்வித பிரச்சனைகளும் வராது என்பதை உறுதி செய்தபின்னரே எழுதத் தொடங்குகிறேன்.

சிறியின் சின்ன வயதுப்பராயம். ஒருவயதாக இருக்கும் போதே சிறுநீரக நோயினால் தாக்கப்பட்டதில் சிறப்பாக கவனிக்கப்படவேண்டிய காரணத்தால் அவனது அம்மம்மாவினால் பொறுப்பெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றான். நினைவு தெரியாத காலத்திலேயே அம்மம்மாவுடன் வளர்ந்ததால் அவனிற்கு நினைவு தெரிய வந்த காலங்களில் அவன் அம்மம்மாவையே அம்மா என்று அழைக்கத் தொங்கியது மட்டுமல்ல எவ்வித கவலைகளுமற்ற செல்லப்பிள்ளையாக வளர்ந்துவந்த காலங்கள். அவனிற்கு அப்பொழுது ஒன்பது வயது அவனது வீட்டிற்கு அருகிலேயே நகைசெய்யும் ஒருத்தர் இருந்தார்(பத்தர் அல்லது தட்டார்) அவரிற்கு ஒரு நகைக்கடையும் இருந்தது கடையின் பிற புறத்தில் நகை வேலைகள் செய்வார்கள். அவரது மகனிற்கும் சிறிக்கும் ஒரேவயது மட்டுமல்ல இருவரும் ஒரே வகுப்பிலேயே படித்தும் வந்தனர். சிறி மாலை நேரங்களில் அவனுடன் விழையாடப் போவதோடு அங்கு நகை செய்வதையும் வேடிக்கை பார்ப்பான். நகை செய்பவர்கள் துருத்தியில் நெருப்பை பெரிதாக்கி அந்த நெருப்பை வாயில் ஒரு சிறிய குளாயை வைத்து ஊதி நெருப்புச்சுவாலையை வேகமாக ஒரு இடத்தில் குவியவைத்து அதன் நுனியில் தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ உருக்குவதை மாயவித்தைபோல பார்த்து ரசிப்பது அவனது வழமை. சிலநேரங்களில் அந்த நகை செய்பவர் தன்னுடைய மகனை தன்மடியில் இருத்தி குளாயால் நெருப்பை ஊதவைத்து பொன்னை எப்படி உருக்குவது என்று பழக்குவார் சிறிக்கும் அதைபோல செய்து பார்க்கவேண்டும் போல் இருக்கும். நீண்டநாட்களதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறியை ஒருநாள் அவர் நீயும் செய்து பாரக்கப்போகின்றாயா என்றதும் சிறிக்கு அளவற்ற சந்தோசம். அவர் சிறியை அழைத்து தனக்கு முன்னால் மடியில் இருத்தி ஒரு மரத்தண்டில் பொற்கம்பியை வைத்து குளாயை அவனது வாயில் வைத்து ஊதச்சொன்னார்.பெற்கம்பி உருகியது. வீட்டிலும் மறுநாள் பாடசாலையிலும் அவன் அதை பெருமையாக சொல்லி ஆனந்தப்பட்டான்.

பின்னர் பலதடைவைகள் அவர் தன்மடியில் அவனை இருத்தி அதேபோல ஊதவிட்டிருக்கிறார். அன்றும் ஒருநாள்மாலை அப்படித்தான சிறி நண்பனைத்தேடி அவன் வீட்டிற்கு சென்றபொழுது நண்பனின் தந்தையைத்தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை .அன்று லீவுநாள் கடை பூட்டியிருந்தது. அவர் மட்டும் நகை செய்து கொண்டிருந்தார்கடையின் பின்பகுதியில் வழைமைபோல அவரது வேலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை தன்னுடைய மடியில் இருத்தியவர் ஊதும் குளாயை கொடுத்தார். சிறியும் ஊதிக்கொண்டிருக்கும் பொழுது அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாற்றத்தை அவதானித்தான். அவரது கை அவனது தொடைகளை தழுவத் தொடங்கியபெழுது திடுக்கிட்டு எழுந்திருக்முனைந்தபொழுதுதான் பார்த்தான் அவர் உடுத்தியிருந்த வேட்டியை முழுதுமாக விலக்கியிருந்தார். ஓட வெளிக்கிட்டவனை இழுத்து பிடிக்கவே அவன் பலத்தசத்தமாய் சத்தம்போட்டு அழத்தொடங்க இங்கை நடந்ததை வீட்டிலை சொல்லாதை அப்பிடி சொன்னாயெண்டால் கடையிலை மோதிரத்தை களவெடுத்திட்டாயெண்டு எல்லாரிட்டையும் சொல்லுறதோடை மட்டுமில்லாமல் பொலிசிலை பிடிச்சு குடுத்துடுவன் என்று மிரட்டி அனுப்பி விட்டிருந்தார்.

அவன் வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை எப்படி சொல்வதென்றும் அவனிற்கு தெரிந்திருக்கவில்லை ஆனால் அவன் அன்றிலிருந்து நண்பனுடன் கதைப்பதை நிறுத்திவிட்டிருந்ததோடு மட்டுமல்லாமல். அவரை கண்டாலே அவனிற்கு வெறுப்பும் பயமும் வரும் அவரை பார்ப்தையும் தவிர்த்துவந்தான். ஆனால் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மனநிலை மீண்டுவர நீண்டகாலங்கள் எடுத்தது. இப்பொழுது அவனிற்கு பதினேழு வயது அவர் மீதான பயம் போய் விட்டிருந்தது. ஆனாலும் அந்த சம்பவத்திற்காக அவரை பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கான தருணமும்வந்தது அந்த வருடம் அவர்கள் கோயில் திருவிழா . திருவிழா முடிவதற்கிடையில் பத்தனிற்கு பாடம் படிப்பிப்பது என்று திட்டம் போட்டு அதற்கு உதவியாக இன்னொரு நண்பனையும் சேர்த்துக்கொண்டான். அன்று அவர்களது திருவிழா நாள் அன்றிரவு திருவிழா முடிந்து அவரது மனைவி பிள்ளைகள் எல்லாரும் வீட்டிற்கு போய்விட அவர்மட்டும் கடைசியாக கணக்கு வழக்கு முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு போகும் வழியில் இருந்த வீதி விளக்கை சிறி ஏற்கனவே கல்லெறிந்து உடைத்துவிட்டு இருட்டில் அவனது நண்பனுடன் பதுங்கியிருந்தான்.

அவர்களது கைகளில் தேடித்தேடி சேகரித்த காச்சோண்டி (காஞ்சவண்டி)குளைகளும் நாயுருவி குளைகளையும் சேர்த்து கடிட்டி தயாராக வைத்திருந்தார்கள். தேவாரம் பாடியபடி வந்தவரை பாய்ந்து நிலத்தில் விழுத்தி வேட்டியை உருவிவிட்டு உச்சிமுதல் உள்ளங்காலவரை கையிலிருந்த குளைக்கட்டுக்களால் அடிக்க அவரது ஜயோ சத்தத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரோச் லைற்றுடன் வரும்பொழுது அவரது வேட்டியையும் எடுத்தக்கொண்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.மறுநாள் நேற்று ராத்திரி யாரோ பத்தனுக்கு காஞ்சோண்டியாலை அடிச்சுப்போட்டாங்களாம் உடம்புமுழுக்க வீங்கிபோச்சுதாம் உடம்புமுழுக்க சுடுசாம்பல்தடவி வாழையிலை கிடத்தியிருக்காம். ஊர்சனத்தின்ரை நகையிலை சேதாரம் எண்டு பவுண் உரஞ்சுற உவனுக்கு உது வேணும் எண்டு ஊர்ச்சனங்கள் கதைத்தார்கள். ஆனால் அடிச்சவங்கள் ஏதும் கோபமெண்டால் தடி பொல்லாலை அடிக்காமல் எதுக்கு காஞ்சவண்டியாலை அடிச்சவங்கள் அதுவும் வேட்டியை ஏன் கோயில் மடத்திலை போட்டிருந்தவங்கள் என்கிற ஆராச்சிகளும் நடக்காமலில்லை. ஆனால் அடிவாங்கியவரிற்கு யார் அடித்தார்கள் ஏன் அடித்தார்கள் என்பது தெரியும் அவரும் அதை வெளியில் சொல்லவில்லை.

இங்கு பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவேளை தனக்கு நடந்ததை அன்றே கூறியிருந்தால் பெரியவர்கள் கேட்டிருப்பார்களா?? அவன் உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா அல்லது நகைக்கடைக்காரர் மோதிரத்தை களடிவடுத்துவிட்டான் என்பது தான் பெரிதளவும் நம்பப்பட்டிருக்கும். சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அதை வெளியில் சொல்லாதே என்று அவனை யே மீண்டும் அவனது உறவுகள் மிரட்டிஅடக்கியிருக்கும். அல்லது அவனது வீ¨ட்டிற்கும் நகைக்கடைக்காரரிற்கும் இதுபற்றி பேசாமல் வேறு ஏதாவது தகராறு நடந்திருக்குமே தவிர பாதிக்கப்பட்டவனிற்கான எவ்வித ஆறுதலோ உளவியல் சிகிச்சைகளோ நிச்சயம் நடந்திருக்காதது மட்டுமல்ல குற்றவாளிக்கும் எவ்வித தண்டனையும் கிடைத்திருக்காது ஏனெனில் எமது சமுதாயஅமைப்பே அப்படியானதுதான்.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.2

0
0
நட்பு

அவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்
அவன் காதில் பிடித்து முறுக்கியபடி

உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா?? வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.??

ஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன??

அவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.

நெல்லிக்காய் எங்கடைதானே

வாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.
0000000000000000
வருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் விபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.

முச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.

அப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.

அவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.

ஏனடா நடந்தது உனக்கு தெரியாதே??

இல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.

தாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.

ஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .

என்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.
பிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.

என்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.
மாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்கு கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.

அதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.
00000000000000000000
1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..
இப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.
இந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.


திருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.


அப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.
0000000000000000
மறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களிற்கு புரிந்தது. என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பாவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.

துப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகா வைஅவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். முன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.
000000000000000000000
திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.
00000000000000000000
இந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை

0
0
சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை
சாத்திரி ஒரு பேப்பர்





அண்மையில் என்னுடைய பதிவுகளில்  சிறுவர்கள் மீதான பாலியல் விடயத்திளையும் எனக்கு சிறியவயதில் நடந்ததொரு அனுபவத்தினையும் எழுதியிருந்தேன்.  அதனை படித்த பலரும் தங்களிற்கும் நடந்த சம்பவங்களை பகிர்ந்திருந்தனர்.  பொதுவாக இதனைப்பற்றி  எமது தமிழ் சமூகத்தில்  நாம் சிறந்தவர்கள். உயர்வானவர்கள் மேன்மையானவர்கள் என எம்மை சுற்றி நாமே கட்டியமைத்திருக்கும் ஒரு கட்டமைப்பினை தகர்ந்துவிடுமோ என்கிற ஒரு பயத்தினாலேயே வெளிப்படையாக எழுதுவதோ பேசுவதோ கிடையாது அப்படி யாராவது எழுதினாலும் எழுதும் ஒருவரை சமுதாயத்தை அல்லது கலாச்சாரத்தினை கெடுப்பவன் என்கிற முத்திரையை குத்தி ஒதுக்கி விடுவதே எமது சமூகத்தின் சிந்தனைப்போக்கு.ஆனாலும் எமது சமூகத்தில்  எமது குடும்ப உறவுகளாலோ அல்லது  குடும்பத்தின் நெருங்கிய நட்புக்களாலோ  சிறுவர்கள் மீதான  பாலியல் வன்முறை  நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அது வெளியில் வருவதில்லையென்பதுதான் சோகமானது. இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையே விபரிக்கலாம்.வெளிநாடுகளில் எம்மவர்கள் பணம் சேர்ப்பதை மட்டுமே குறியாக நினைத்து பெரும்பாலானவர்களின் வாழ்க்கை ஓடுகின்றது.

அதற்காக பெரும்பாலான குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளில் தனியானவர்களை தங்கவைத்து வாடைகை வாங்குவார்கள். சில வருடங்களிற்கு முன்னர் பாரிஸ் புறநகர் பகுதியில் யரடயெல ளழரள டிழளை வசிக்கும் எனது நண்பன் ஒருவனிற்கு நடந்த சம்பவத்தையும் இங்கு எழுதுகிறேன்.நண்பனிற்கு ஒரேயொரு மகள் இருந்தாள் அவளிற்கு அப்பொழுது 11 வயது ஆகியிருந்தது நண்பன் தன்னுடைய மனைவியின் நெருக்கிய உறவுக்காரர் ஒருத்தரை தனது வீட்டில் தங்கவைத்திருந்து (அவரும் திருமணமானர் மனைவி பிள்ளைகள் ஊரில் இருந்தனர்) வாடைகைப்பணமும் அதைவிட சாப்பாட்டு காசும் தனியாக வாங்கிக்கொண்டிருந்தார். ஒருநாள் நண்பனும் மனைவியும் வேலைக்கு போயிருந்த நேரம் அந்த நபர் தண்ணியடித்து விட்டு கணணியில் நீலப்படத்தை போட்டுவிட்டு அந்த சிறுமியை பார்க்கும்படி வற்புறுத்தியதோடு பலாத்காரம் செய்யவும் முயன்றிருக்கிறார் சிறுமி அவர் கையை கடித்து விட்டு தப்பியோடி குளியலறையில் புகுந்து கதவை பூட்டிக்கொண்டு இருந்துவிட்டாள். விடயம் பிழைத்துப் போனதால் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டார். பின்னர் வீடுவந்த தந்தையிடம் சிறுமி அழுதபடி விடயத்தை சொல்லவே என்ன செய்வதென்று தெரியாமல் அவர் எனக்கு போனடித்து ஆலோசனை கேட்டிருந்தார். உடனடியாக காவல்த்துறையில் முறையிட்டுவிட்டு மகளை வைத்தியரிடம் அழைத்துப்போகவும் மிகுதியை அவர்கள் பார்ப்பார்கள் என்று ஆலோசனை கூறியிருந்தேன். ஆனால் அவரது மனைவி அதற்கு உடன்படவில்லை காரணம் சம்பந்தப் பட்டவர் அவரது நெருங்கிய உறவினர்.
சொந்தத்திற்குள் சண்டை வரும் என பயந்தார்.அடுத்தது போலிஸ் வழக்கு என்று போனால் மகளின்எதிர்காலம்கெட்டுவிடும்.

இந்த இரண்டு பயத்தாலும் அவர்கள் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மகளிடமும் இந்த விடயத்தை யாருடமும் சொல்லகூடாது என மிரட்டியதோடு பாடசாலைக்கு போனால் அவர்களிடம் மகள் சொல்லி விடுவாள் அல்லது அவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்கிற பயத்தில் சிலநாட்கள் அவளை பாடசாலைக்கும் அனுப்பவில்லை. ஆனால் வழக்கு பதிவு செய்ததாகவும் போலிசார் சம்பந்தப்பட்டவரை தேடுவதாகவும் அவன் என்னிடம் பொய் சொல்லியிருந்தான். சிலநாள் கழித்து நான் அவனிற்கு போனடித்து என்ன நிலைமை என கேட்ட பொழுது போலிஸ் இன்னமும் ஆளை தேடுவதாக சொன்னான் . உடனேயே நான் அவனிடம் சம்பத்தப்பட்டவனின் பெயர் விபரம் அதே நேரம் அவனின் படம் என்பனவற்றை எனக்கு உடனடியாக அனுப்பும்படி
சொன்னதும் நண்பனிற்கு புரிந்துவிட்டது நான் எங்காவது எழுதிவிடுவேன் அல்லது வானலைகளில் கதைத்துவிடுவேன் என்கிற பயத்தில் வழக்கு பதியவில்லை என்கிற உண்மையை சொல்லியதோடு மகளும் இப்பொழுது வழமைக்கு திரும்பி பாடசாலை போகிறாள் பிரச்சனையில்லை பேசாமல் விடு என்றான்.ஆனால் நான் விடாமல் நண்பனோடு சண்டை பிடித்தபொழுது எங்கடை பிள்ளையை கவனிக்க எங்களுக்கு தெரியும் உவர் ஏன் தேவையில்லாமல் எங்கடை பிரச்சனைக்குள்ளை தலையை விடுறார் என்று அவனது மனைவியின் குரல் எனக்கு கேட்டது. நீ தவறு விடுகிறாய் இதற்கான விலை பெரிதாய் இருக்குமெண்டு நான் நண்பனிடம் சொல்லிவிட்டு தொ.பேசியை துண்டித்துவிட்டேன்.


அதன்பின்னர் நானும் அவனுடன் தொடர்பு கொள்வது கிடையாது ஆனால் சம்பவம் நடந்ததன் பின்னர் மிகவும் கெட்டிக்காரியான அந்த சிறுமி பாடங்களில் கவனத்தை செலுத்தவில்லை தாய் தந்தை பொய் சொல்லு என்று சொல்லிக் கொடுத்த பொய்யை தாய் தந்தையருக்கே சொல்த் தொடங்கினாள்.13 வது வயதில் பாடசாலை நேரம் வேறு சிலருடன் கஞ்சா பத்திக்கொண்டிருந்த அவளை காவல்துறை பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தது. கோபத்தில் தந்தை இடுப்பு பட்டியை கழற்றி மேசமாக அடித்ததில் அவளே காவல்துறையை அழைத்தாள். கவல்துறை அவனை கைது செய்தது மகள் பாராமரிப்பு நிலையத்தினால் பொறுப்பெடுக்கப்பட்டாள். அவனிற்கு ஒண்டரை வருசம் சிறை சிறையால் வெளியே வந்தவன் எனக்கு போனடித்து விபரத்தை சொல்லி எனக்கு மகளை பாக்கவேணும் ஏதாவது உதவி செய்யடா என்றான். நானும் முயற்சித்தேன் ஆனால் மகள் மறுத்துவிட்டாள்.நண்பனின் மனைவியும் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில். நான் நண்பனிடம் சொன்னது நீ அதிக விலை கொடுத்துவிட்டாய் ஒன்றுக்கும் உதவாத கௌரவம் பார்த்து நீ உன்னுடைய உற்றார் உறவினர்களிற்காகவும் போலியான மரியாதைக்காகவும் இன்று நடு றோட்டில்.

உளவியல் மருத்துவர்கள்  இது பெடோபிலியா என்கிற நோய்   இப்படியானவர்களை மருத்துவம்    மூலமே குணப்படுத்தவேண்டும் தண்டனை கொடுக்கக்கூடாது  என்கிறார்கள்.   உளவியல் மருத்துவர்களே இப்படித்தான் அண்மையில் நோர்வே நாட்டில் ஒரு தீவில்  கூட்டத்தில் புகுந்து 80 பேரிற்கு மேல் சுட்டுக்கொன்ற ஒருவனை  மனநோயாளி மருத்துவம் கொடுக்கவேண்டும் என்கிறார்கள். இதுவே மேலை நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்ட அமைப்பில்  உள்ள ஒருவர் செய்தால் வன்முறை   தண்டனை கொடுக்கவேண்டும் என்கிறார்கள். உளவியலை விட்டுவிடுவோம். ஆனால் நாம் எமது குழந்தைகளை  இப்படியானவர்களிடமிருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்.தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம்.

1)குழந்தைகளிற்கு  மற்றையவர்களின் சாதாரண தொடுகை   விபரீதமான தொடுகை இரண்டிற்குமான வித்தியசங்களை சொல்லிக் கொடுங்கள்.
2)அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.
3)ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்..
4)சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
5)நெருங்கிய  உறவினர்களாக  இருந்தாலும் அவர்கள் அனாவசியமாக  முத்தமிடுவதை தவிர்க்க சொல்லுங்கள்.
அண்மையில் இந்தியாவில்  சிறுவர் பாலியல்  துஸ்பிரயோகம் செய்த ஒருவர் மீதான வழக்கின் தீர்ப்பில்  துஸ்பிரயோகம்  செய்பவர்களின் ஆண்மையை  நீக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார். அதாவது  ஊர்பாசையிலை சொல்லப்போனால் நலமடிப்பது. இது பல நாடுகளில் சட்டமாகவே உள்ளது.  சிறுவர்களை  பாலியல் துஸ்பிரயோகம் செய்யும் ஆண்களிற்கு   இந்தச் சட்டத்தை போடலாம் ஆனால் பெண்களிற்கு  யாமறியோம் பராபரமே...

நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்

0
0
18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ---------------------------------------------------------------------------- காயங்களின் எழுத்து ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம்.அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது. இங்கு கறுப்பு, வெள்ளை , சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே.இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே ‘ரிலேட்டிவ்’ ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான்.அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும்.எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத்தெரியலாம்.இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத்தோன்றலாம்.ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும். அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது.கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை.அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே.அதாவது ஏகத்துவ அரசியலே.கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்றுக்கொள்வதில்லை.வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும்.எனவே கறுப்பு வெள்ளை அரசியலைன் இறுதி இலக்கு ஏகத்துவமே.எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான்.அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை.’டைவர்சிற்றிக்கு’ இடமில்லை. மாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது.ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம்பல் வரும்.கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது.அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப்பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு. 1.போரைப்போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள்.இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம். 2. போரை,விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப்பூசல்களையும் சகோதரப்படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது.இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத்துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த்துப்பாக்கிகள் தரும் மரணமும் தான்.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது.1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத்தொடங்கிய ஒரு போக்கே இது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள்.மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு.ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப்போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது.மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம். சயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான்.பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான்.நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபாசக்தியின் ;கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார்.அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதே வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி.வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் ‘ப்றீ செக்ஸை’ அனுபவிக்கிறார்கள்.இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள்.அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.அவர்கள் அனுபவிக்கும் ‘ப்றீ செக்ஸ்’ அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை.அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன.இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள். கருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவியலாத யுத்த சாட்சியங்கள்.இவர்கள்.ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள்.ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது. பா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது.அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது.வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக்குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல்.வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது. பணக்காரன். ஏழை, முஸ்லிம்(சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டது?அல்லது வீடு ஏன் இல்லாமல் போனது? அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை? அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள்? என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே. மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச்செருப்புகளை வாங்குகிறான்.அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப்போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போலவெருட்டுகிறார்கள்.ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான்.ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல்காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது. இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப்பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார்? தப்பிப்பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல.தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான். அதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான்.காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான்.காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான்.உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை ‘ட்ரோமா’ என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா(மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.சனாதனனின் தோம்புவும் அதுதான்.கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது , சாத்திரி எழுதியது ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது , தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான்.இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம். டச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார். “மனவடுவை மனவடுவாக அணுகாமல்அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது,அது எமக்கு நெருக்கமாகின்றது” என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி,அருவருப்பு என்பவை குறையத்தொடங்கும்.சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது.நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும் , பிணங்களும் எரித்திரியக்கடற்கரையில் ஒதுங்குகின்றன.அங்கே ஒரு எரித்திரியக்கிழவன் .முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன்.கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக்காண்கிறான்.அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால்.அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப்பொய்க்காலை ஆசைஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப்போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது. சயந்தன் ஈழத்தமிழ்க்கூட்டுக்காயத்தை எரித்திரியக்கூட்டுக்காயத்துடன் பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது.சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது. அண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான்.படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான்.சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம்.இறந்தகாலத்தை ‘போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம்.எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம். யுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம். நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது.அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது.இது ஒரு தொழினுட்ப யதார்த்தம்.இது ஒரு பொருளாதார யதார்த்தம்.இது ஒரு சமூகவியல் யதார்த்தம்.இது ஓர் உளவியல் யதார்த்தம்.இது ஓர் இலக்கிய யதார்த்தம்.இது ஓர் அரசியல் யதார்த்தம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “ இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது. நிலாந்தன். யாழ்ப்பாணம்.03/03/2012. நன்றி த.பிரபாகரன்

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.3

0
0
காதல் ..
 யுரேகா
அவனது கிராமத்தில் இருந்த ஒருசில கிறீஸ்தவ குடும்பங்களில் யுரோகாவின் குடும்பமும் ஒன்று. அவளிற்கு மூத்த ஒரு ஒரு சகோதரி இருந்தாள். யுரேகா அவனது ஆண்டுதான் பாடசாலை வேறு. சிறு வயதிலிருந்தே அவனிற்கு யுரேகாவை பழக்கம் என்றாலும் பெரியளவு அவளுடன் கதைப்பது குறைவு.அப்பொழுது அவர்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம். அதுவரை திருகோணமலையில் ஆசிரியையாக இருந்த அவனது சின்னம்மா மாற்றலாகி ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தார்.இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த அவனது பாடங்களில் சின்னம்மா அதிக கவனமெடுத்தார். அப்பொழுது யுரேகாவும் அவனது சின்னம்மாவிடம் படிப்பதற்கு வரத்தொடங்கியிருந்தாள்.அவன் மீண்டும் என்னதான் கஸ்ரப்பட்டு படிச்சாலும் கணக்குமட்டும். அவனிற்கு கணக்குவிட்டுக்கொண்டிருந்தது. யுரோகாவை பார் கணக்கிலை கலக்கிறாள் எண்டு எண்டு சின்னம்மா குட்டிக் குட்டி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.ஆனாலும் ஏறவில்லை. ஆனால் அவளிற்கு தமிழ் தடக்கியது விஞ்ஞானம் விண்ணாமாய் தெரிந்தது . அதனால் அவளும் அவனும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். பாடசாலை நேரம் சின்னம்மாவின் மேலதிக பாட நேரம் தவிர்ந்து அவன் அவளிற்கு தமிழிற்கும் விஞ்ஞானத்திற்கும் உதவுவது . அவள் கணக்கு சொல்லிகொடுப்பது. அவனது ஆசிரியரும் சின்னம்மாவும்வெருட்டி உருட்டு சொல்லி கொடுத்தபோதும் புரியாத கணக்கு அவள் அருகிலிருந்து புள்ளி வைத்து கோடு போட்டு பெருக்கி கூட்டி விடையை காட்டியபொழுது அவனின் மனதை கூட்டிப் பெருக்கி புள்ளி வைத்து கோலம் போட்டது போல் இருந்தது.அருகே அவளின் மூச்சுக்காற்று பட்டதுமே முக்கோணம். வட்டம் விட்டம்.ஆரை என அனைத்தின் பாகைகளும் பட்டென மனதில் பதிந்தது.அதே போல அவன் விஞ்ஞானம் விளங்கப் படுத்தியபொழுது அவளிடம் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தமிழ் பாடம்தான் அவர்களை இணைத்ததுஅப்பொழுது அவர்கள் படித்தது பத்தாவது.

டேய் எனக்கொரு கட்டுரை வேணும் சொல்லித்தாவன்.

என்னத்தை பற்றி .

 மீனவர்கள் பற்றினது .

சின்னப் பிரச்சனை சொல்லுறன் எழுது

அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஒரு மீனவன் மனைவி பிள்ளைகளிடம் விடைபெற்று கட்டுமரமேறினான் என்று தொடங்கியவன் அன்றைய காலத்தில் அவன் படிக்கத்தொங்கியிருந்த மார்க்சியம். செஞ்சீனம். கியூபாவும் விடுதலையும். வியட்நாம். எரித்தியா .மாக்சிசம். நாசிசம். யூதாயிசம். சியோனிசம். கசம். பூசம். ரசம் எண்டு என்னென்ன இசங்களை கலக்க முடியுமோ அத்தனையையும் கலந்து ஒரு கட்டுரையை சொல்லி முடித்தான்.கட்டுரையை படித்த அவளதுதமிழாசிரியை தலையை சொறிந்தோடு உண்மையிலேயே நீதான் எழுதினியா எண்டு கேக்க அவளும் ஓமெண்டு தலையாட்ட .அவரும் வேறை நாலைஞ்சு ஆசிரியர்களிடம் காட்டிவிட்டு கடைசியிலை காலத்திற்கேற்ற கட்டுரையெண்டு முதலாவதாய் தேர்தெடுத்திருந்தார்கள்.அவளிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி அன்று அவனிடம் வந்தவள் நன்றி கூறிவிட்டு. ஜயோ.... உனக்கு எதாவது தரவேணுமே என்னவேணுமென்றாள். என்ன கேட்டாலும் தருவியா என்றான். ஓமடா என்ன வேணுமெண்டாலும் தாறன். என்ன வேணுமெண்டாலும்?? . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும்???எத்தினை தரம்தான் கேட்ப்பாய் அப்பிடி என்னதான் வேணும்.சரி அப்ப ஒரு அஞ்சுரூபா குடு குமார் கடையிலை போண்டாவும்சாப்பிட்டு ஒரு பிளேன் ரீயும் குடிக்கவேணும். என்றான். தனது கொம்பாசை திறந்து அஞ்சுரூபாவை எடுத்து நீட்டி விட்டு அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். டேய் தின்னி பண்டாரம் இந்த நேரம் அஞ்சுரூபாயா கேட்பாய் இப்பவாவது உன்ரை காதலை சொல்லி வேறை எதையாவது கேட்டிருக்கலாமே என்று மனம் அவனை திட்டியதுஆனாலும் அவனுடை அன்றைய சந்தர்ப சூழ்நிலைகளும் அவளது குடும்ப நிலையிலும். அவன் அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. இன்னொருநாள் அவள் அவனிடம்

 டேய் எனக்கொரு கவிதை வேணும்..

கவிதை எதைபற்றி ??

 காதல்பற்றி அவள் குரல் கம்மியது.

 காதலா??

யாரையாவது காதலிக்கிறியா??

 எனக்கில்லை என்ரை சினேகிதிக்கு அவள் ஒருத்தனை லவ்பண்ணிறாள் அதுதான் என்னட்டை கேட்டாள் நான் உன்னட்டை கேக்கிறன். வேண்டாமடி இப்பிடித்தான் நான் என்ரை சினேதனுக்கு ஒரு காதல் கவிதை எழுதி குடுத்து அது வாத்திட்டை பிடிபட்டு அவனைவிட நான்தான் சாறிட்டை(மானிப்பாய் இந்துவின் அதிபர்) குனியவிட்டு குண்டியிலை வாங்கினனான். நீ பயந்தால் வேண்டாம். இவளவை இப்பிடித்தான் பப்பாவிலை ஏத்துவாளவை சரி சொல்லுறன் எழுது அவன் சொல்ல சொல்ல அவள் எழுதினாள்.சிலநாள் கழித்து அவர்களிற்கு கணிதபாடம் கற்பிப்பதற்காக அவனது சின்னம்மா அவனது புத்தகத்தை புரட்டியபொழுது அதற்குள் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்கதொடங்கினார். அவளது முகம் மாறிப்போய் விட்டிருந்தது கடிதத்தை படித்து முடித்த சின்னம்மா அவனிடம் டேய் இது எத்தனை நாளாய் நடக்குது என்றார். இவள் இப்பிடித்தான் எங்கையாவது மாட்டிவிடுவாள் எனக்குத் தெரியும் என்று மனதில் நினைத்தபடி உவள்தான் யாரோ சினேகிதிக்கு எண்டு கேட்டாள் அதுவும் ஒருக்காதான் சொல்லிகுடுத்தனான் எண்டான். சின்னம்மா ஒண்டும் புரியாமல் இரண்டுபேரையும் மாறி மாறி பார்க்க அவள் கண்கள் கலங்க நடுங்கியபடி அங்கிருந்து எழும்பி ஓடிவிட்டாள். அவன் கடிதத்தை வாங்கி படித்தான். அதில் அவன் சொன்ன கவிதை வார்த்தைகளோடு அவள் அவனிற்காக எழுதியிருந்த காதல்கடிதம். சே.. தன்ரை காதலை சொல்லவே சொந்தமாய் நாலுவரி எழுதத்தெரியாதவள் என்ன செய்யப்போறாள் என்று அலுத்துக்கொண்டான்.
                                                   000000000000000000000000000000
 இரண்டு குடும்பத்தினரும் கூடிக்கலந்து பேசி பல்கலைக்கழகம் படித்து முடிஞ்சதும்தான் கலியாணம். றோட்டு தெருக்களிலை சுற்றக்கூடாது வீட்டிலை இருந்து கதைக்கலாம். என்கிற சில கண்டிப்பான உத்தரவுகளுடன் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை இலகுவாக அவர்களது காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதற்கு அவர்கள் காதல் புனிதமானது என்றோ அல்லது காதலை வாழவைக்கவோ இல்லை. இரண்டு பக்கமுமே வலுவான வேறு காரணங்கள் இருந்தது. யுரேகாவின் மூத்த சகோதரி கா.பொ.த உயர்தரம் படித்தக்கொண்டிருந்தபொழுது சக மாணவன் ஒருத்தனை காதலித்திருந்தாள். அவன் சைவக்காரன் வேறை. அந்த காதலை தடுக்க அவளது பெற்றோர் மென்முறை வன்முறை எல்லாம் பாவித்து தோற்றுப்போயிருந்தனர். கடைசியாள் அவள் தற்கொலை முயற்சிவரைபோய் அந்தக்கதையே கொஞ்சக்காலம் ஊர்சனங்களில் வாயில் அவலாய் நிறைந்திருந்தது. எதுவும் செய்ய முடியாமல். காதலை ஏற்றுக்கொண்டனர். காதலித்த பெடியன் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் ஆனால் அவன் கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாறமாட்டான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள். இப்படியே இழுபறிப்பட்டு பல்கபலைக்கழக படிப்பு முடிந்ததும் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்துவைத்து இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவது என முடிவு செய்திருந்தனர். அவர்களும் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்தக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் மீண்டும் இவளது காதலால் அவர்களது குடும்பக்கதை ஊர்வாயில் அவலாகிவிடக்கூடாது என்பது அவர்களது பக்கத்து கவலையோடு கூடிய காரணம்.

 இவன்பக்கத்தில் என்னவென்றால் அப்பொழுது இயக்காரரோடு அதிகமாய் திரியத்தொடங்கியிருந்தான். அந்த வருசம் சோதினையில் கோட்டை விட்டுவிடுவானொ என்று பயம்வேறை. கொஞ்சம் இறுக்கமாய் கண்டிச்சால் அடுத்தநாளோ இயக்கத்திற்கு ஓடிவிடுவானோ என்கிற கவலை அதாலை இந்தகாதலாவது அவனை கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்று நினைத்தார்கள்.இந்தக்காரணங்களால் அவர்கள் காதலில் எரிந்த பச்சைவிளக்கு வெளிச்சத்தின் பலாபலன்களை நன்றாகவே அனுபவித்தனர். சின்ன சின்ன சில்மிசங்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் தவறவிடுவதில்லை. அவளும் அளவோடு அனுமதித்திருந்தாள் என்பதைவிட அவளிற்கும் அது பிடித்திருந்தது. எல்லை மீறும்பேதெல்லாம் நுள்ளிவிடுவாள்.

எப்பிடித்தான் இவளவை அடக்கிறாளவையோ என்று அவனிற்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்கிறமாதிரி அவனது காதல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் அவனது இயக்கத்தின் தொடர்புகளை குறைக்கச்சொல்லி அவளது நச்சரிப்பும் கூடிக்கொண்டே போனது.அவளின் நச்சரிப்பு கூடும்பேதெல்லாம் அவளது உதடுகளை இவனது உதடுகள் மூடிவிடும். ஆனாலும் ஒருநாள் அவள் விடவில்லை நீ என்னை ஏமாத்துறாய் உண்மையா என்னை விரும்பிறியா?? உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது?? அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா?? பதறினாள். அவிழ்த்து காட்டினான் u சிவப்பாய் தெரிந்தது எனக்கு வேறை வழிதெரியேல்லை ureka என்றவனிற்கு.சும்மா ஏதோ கோபத்திலை சொல்லிட்டன் அதக்கு இப்பிடிபோய் செய்திட்டியே.. என்றவளின் கண்ணீர்த்துளியொன்று uஎழுத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே எரியிது இதுக்கை இவள்வேறை கண்ணீர் ஊத்தி எரியவைக்கிறாள் எண்டு அவன் எரிச்லை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தபொழுது ரீ கொண்டு வந்து வைத்து விட்டு கொடுப்பிற்குள் ஒரு நமட்டு சிரிப்புடன் அவளது தயார் போனார். தன்ரை மகளை கையிலை கையிலையே குத்திட்டான் இனி கைவிடமாட்டான் என அவர் நினைத்திருக்கலாம்.அடுத்தநாள் கோயிலடியில் அவனது கையை பார்த்த அவனது நண்பன் ஒருத்தன் டேய் என்னடா கையிலை பு னா எண்டு சூடுவைச்சிருக்கிறாயெண்டான்.

ஆங்கில எழுத்து தமிழில் அர்த்தத்தையே மாற்றிவிட்டது அப்பொழுதுதான் அவனிற்கு புரிந்தது.

 உன்ரையாளிற்கு என்னடா பேர்.??

 மலர்....

மலரெண்டால் ம எண்டெல்லோ வரும் அதென்ன பு..??

புஸ்பம் எண்டும் சொல்லலாம்.

அதுதான். டேய் அது பல்லில்லாத வாதியின்ரை பழைய பகிடி உண்மையை சொல்லடா.

 டேய் வெங்காயம் தமிழிலை யோசிக்காமல் இங்கிலிசிலை யோசி.. கொஞ்சம் உத்துப்பாத்தவன் u அட யுரேகாவா?? வாயை பிளந்தான்   
                                                            000000000000000000000000000                                                                                                                                                                                                                               
அன்று கா.பெ.த. சாதாரணம் இறுதிப் பரீட்சை எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்தான் நல்லமழை கொட்டிக்கொண்டிருந்தது . நண்பர்களிடம் விடைபெற்றவன் சைக்கிளை மிதித்தான் அந்தோனியார் கோயிலின் முன்னால் இருந்த பஸ் நிலையத்தில் சைக்கிளோடு அவள் காவலிருந்தாள். சைக்கிளை விட்டு இறங்கியவன் அவளோடு சேர்ந்து நனைந்தபடி சைக்கிளை உருட்டினான் அவளிடம் குடை இருந்தது விரிக்கவில்லை.
நல்லா எழுதினியா??

 ம்..ஏதோ எழுதியிருக்கிறன்.

 இந்த நாலுமாத லீவிலை என்ன செய்யப்போறாய்.

என்ரை எலெக்றொனிக் சாமான் திருத்திற படிப்பை தொடருவம் றிசல்ட் வந்தாபிறகு யோசிப்பம்.

 டேய் இது எங்கடை வாழ்க்கை பிரச்சனை நீ சர்வசாதாரணமாய் சொல்லுறாய்.

 அதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுறாய்.

 நாங்கள் இரண்டு பேருமே யூனிவசிற்றி போனால்தான் எங்கடை வாழ்க்கையே.

 ஓ... பெயில் விட்டால் கழட்டிவிட்டிடுவியா??

ஏனடா இப்பிடி கதைக்கிறாய் நான் எவ்வளவு கனவுகளோடை இருக்கிறன் தெரியுமா??

எனக்கும்தான் நிறைய கனவுகள் இருக்கு ஆனால் உன்னை மாதிரி சுயநலக்கனவுகள் இல்லை.
அப்பொழுது அவர்கள் மருதடி பிள்ளையார் கோயிலின் முன்னால் வந்திருந்தார்கள். எனக்குத்தெரியும் நீ என்ன நினைக்கிறாயெண்டு எனக்கொரு சத்தியம் பண்டு . என்னவெண்டு?? நீ இயக்கத்துக்கு போகமாட்டனெண்டு என்ரை தலையிலை சத்தியம் பண்டு. அந்தோனியார் அறிய நான் இயக்கத்துக்கு போகமாட்டன். அந்தோனியார் வேண்டாம் பிள்ளையார் மேலை சத்தியம் பண்ணு. அந்தோனியார்தானே உங்கடை கடவுள். அதாலைதான் சொல்லுறன் உங்கடை கடவுள்மேலை பண்ணு. சந்தர்பம் பாத்து அடிக்கிறதிலை பெட்டையள் கெட்டிக்காரியள் என்று மனசிலை நினைச்சவன். மருதடி பிள்ளையாரை திரும்பி பாத்தபடி பிள்ளையாரே உனக்குமேலை சத்தியம்பண்ண மனசுக்கு கஸ்ரமாயிருக்கு என்று நினைத்தவன் பிள்ளை......ஆர் மேலை சத்தியமாய் இயக்கத்துக்கு போகமாட்டன் அவள் தலையில் அடித்தான்.அவளிருந்த உணர்ச்சி வேகத்தில் பிள்ளைக்கும் ஆருக்கும் இருந்த இடைவெளியை கவனிக்கவில்லை.கொம்பாசை திறந்து பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டிவிவிட்டு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

000000000000000000000

அவனது நண்பன் சுரேஸ் புளெட் இயக்கதில் இருந்தவன் அவனிடம் தன்னுடைய சைக்கிளை கொடுத்து வீட்டில் கொடுத்துவிட சொல்லிவிட்டு மானிப்பாயில் இருந்த இரகசிய முகாமில் அன்புவை சந்தித்தான். நீங்கள் சொன்னமாதிரி சோதினை எழுதியாச்சு இங்கை இருந்தால் வீட்டு காரர் தேடி பிடிச்சிடுவினம். அதாலை கெதியா அனுப்புங்கோ என்றான். அன்றே அன்பு அவனை மாதகல் கொண்டுபோய் சேர்த்து பீற்றரிடம் ஒப்படைத்திருந்தான்.அவனோடு சேர்த்து ஏழுபேர்பீற்றரின் பொறுப்பில் பண்ணத்டதெரிப்பு பத்திமாதா கேயிலிற்கு அருகில் யாருமற்ற பாழடைந்த வீடு ஒன்றில் தங்கியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் சொந்தமாக வள்ளங்கள் அதிகம் இருந்ததில்லை பெரும்பாலும் கடத்தல் காரர்களின் வள்ளங்கள் அல்லது மீனவர்களிடம் வாடைகைக்கு எடுக்கும் வள்ளங்களையே பாவித்தனர். அனைத்து இயக்ககங்களின் நிலைமையும் அப்பிடித்தான். அடைமழையும் காற்றுமாக இருந்த காரணத்தால் எந்த கடத்தல் வள்ளங்களும் இந்தியாவிற்கு போகவில்லை . ஏதாவது வள்ளம் இந்தியாவிற்கு போகிறதா என ஒவ்வொருநாளும் பீற்றர் கடற்கரைக்கு போய் விசாரித்துக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருத்தர் அதிகம் கதைக்காமலேயே இருந்தனர் அதைவிட இயக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக சொந்த பெயர் ஊர் விபரம் மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது பொதுவான் விதி. ஆனால் இரண்டுநாள் பொனதுமே அவர்களிற்கு கதைக்க ஒரு விசயமும் இல்லாமல் போக தாங்களாகவே தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கியிருந்தனர்.

அதில் ஒருத்தனை காதலிச்சவள் ஏமாத்திவிட்டாளாம். அவனின்ரை காதல் கதை எங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவியது. ரெயினிங் முடிஞ்சு வந்ததும் முதல்வெடி அவளுக்குத்தான் எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அன்று அஞ்சாவது நாளாகி அடைமழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அன்று மாலை கடற்கரைக்கு போயிருந்த பீற்றர் 'இண்டைக்கு இரண்டு வண்டிபோகுது அதிலை ஒண்டிலை இடமிருக்காம் இண்டைக்கு நீங்கள் போகலாமெண்டான்' அப்பொழுதுதான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஏழுபேராக காத்திருந்தவர்களில் இரண்டா ம் நாள் ஒருத்தனும் மூன்றாம் நாள் ஒருத்தனும் வீட்டிற்கு போய்விட ஜந்து பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். ஒருத்தலும் கனக்க உடுப்பு எடுக்கவேண்டாம். காற்சட்டைக்கு மேலை ஒரு சாறம். ஒண்டுக்மேலை இன்னொன்றாய் இரண்டு சேட்டு மட்டும் போடச்சொல்லியிருந்தான். ஏதோ வெளிநாட்டிற்கு போறது போல சூட்கேசில் உடுப்பபுக்களை கொண்டு வந்திருந்தவர் கவலையோடை மூண்டாவது சேட்டை போட்டுக்கொண்டார். இரவு எட்டுமணியளவில் அனைவரையும் பீற்றர் கடற்கரைக்கு அழைத்துப் போயிருந்தவன்.அங்கு நின்றவர்களிடம் கதைத்துவிட்டு அவர்களை கடற்கரையோரமாய் இருந்த கொட்டிலுக்குள் அமர வைத்துவிட்டு போய்விட்டான் .இருவர் வள்ளங்களில் பொருட்களை ஏற்றிமுடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டிருந்தனர்.

 நேரம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பிடியே எங்களை கடற்கரையிலை விட்டிட்டு போயிட்டானோ? என்றான் ஒருத்தன். சே ..பீற்றர் அப்பிடி செய்யமாட்டான் அவனை எனக்கு நல்லாத்தெரியும். என்றான் இவன். சிலநேரம் ஆமிக்காரன் வந்தால் என்ன செய்யிறது எந்தப்பக்கமாய் ஓடுறது எண்டான் இன்னொருத்தன். ஆமிவந்தால் கடல்பக்கமாய் ஓடி தண்ணிக்கை படுக்கலாம். சே .சே எனக்கு நீந்தத் தெரியாது மற்றப்பக்கம் பனை பக்கமாய் ஓடுறதுதான் நல்லது. ஓடினால் கட்டாயம் சுடுவாங்கள் பேசமல் இப்பிடியே இருக்கிறதுதான் நல்லது அவங்கள் வந்து கேட்டால் நாங்கள் மீன்பிடிக்கிற ஆக்கள் எண்டு சொல்லுவம். இப்பிடியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே வேறு நாலு பேருடன் பீற்றரும் வந்து கொண்டிருந்தான்.அவர்களை கண்டதும்தான் அவர்களிற்கு நெஞ்சுக்கை தண்ணி வந்தது மாதிரி இருந்தது.அவர்கள் எல்லாருமாக சேந்து வள்ளங்களை கடலிற்குள் தள்ளிக்கொண்டிருக்க . அவர்களிடம் வந்த பீற்றர் என்ன பயந்துட்டியளோ..ஓட்டி ஒருத்தான் தண்ணியடிச்சிட்டு எங்கையே படுத்திட்டான் தேடி பிடிச்சுக்கொண்டுவர நேரம்போட்டுது. கெதியவாங்கோ என்று அவர்களை அழைத்துப்போய் பொருட்கள் குறைவாய் இருந்த வள்ளத்தில் நால்வரும் மற்றையதில் ஒருவருமாய் ஏறச்சொன்னான். அவனிற்கு இதுதான் முதல் கடற்பயணம். அவனிற்கு அவனுடன் வந்த மற்றையவர்களிற்கும்தான். வள்ளம் புற்படும் முன்னர் ஓட்டி அவர்களை பாத்து . பெடியள் கவனமா கேளுங்கோ நல்லா முன்பக்கமாய் போய் ஆளோடை ஆள் நெருக்கமாய் இருங்கோ. யாருக்காவது சத்தி வந்தால் அப்பிடியே பின்னாலை வந்து இந்த கயித்தை பிடிச்சுக்கொண்டு கடலுக்கை எடுக்கவேணும் சொல்லிப்போட்டன். போட்டுக்கை யாராவது சத்தியெடுத்தால் கடலுக்கை தூக்கியெறிஞ்சு போட்டு போடுவன். சத்தியெடுத்தால் கடல் தண்ணியிலை வாயை கொப்பிளிச்சுபோட்டு கொஞ்சம் குடியுங்கோ பிறகு வராது என்று பயமுறுத்தும் பிரசங்கம் ஒன்றை வைத்துவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நெஞ்சில் சிலுவை போட்டுக்கொண்டவன். வள்ளத்தில் பூட்டியிருந்த மூன்று இயந்திரத்தில் ஒன்றை இயக்கினான். அவர்களிற்கு கைகாட்டிக்கொண்டிருந்த பீற்றரும். மாதகல் கடற்கரையும் மெல்ல மறையத்தொடங்கியிருந்தது.

சாறத்தால் கழுத்துவரை போர்த்துக்கொண்டு குந்தியிருந்தவனின் நினைவுகள் அப்பொழுதுதான் அவளை நினைக்கத்தொடங்கியிருந்தது. ஜஞ்சு நாளாச்சு இப்ப எப்பிடியும் ஊருக்கே விசயம் தெரிஞ்சிருக்கும்.அவளிற்கும் தெரிஞ்சிருக்கும். என்ன செய்திருப்பாள்??. அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்..?? சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ?? சே என்னை மறக்கமாட்டாள். நான் வரும்வரைக்கும் காவலிருப்பாள்.. அவள் காவலிருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை நான் அவளுக்கு செய்து குடுத்த சத்தியம் எல்லாத்தையும் மீறிட்டன். அவள் தொடந்து படிப்பாள். என்ரை படிப்பு இதோடை முடிஞ்சுது.அதோடை இயக்கத்திலை வேறை காதலிக்கக்கூடாது எண்டு சட்டம்வேறை .அவளை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம். காதலிக்கேக்குள்ளையும் கட்டிப்பிடிக்கேக்குள்ளையும் எங்கை போனது இந்தப் புத்தி. சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.. வள்ளத்தின் மூன்றாவது இயந்திரமும் இயக்கப்பட அது கடல் நீரை இன்னும் வேகமாகக் கிழிக்கத்தொடங்கிருந்தது.அந்தக் கும்மிருட்டில் இடக்கையின் மணிக்கட்டை பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை வலது கையால் அந்த இடத்தில் தடவிக்கொண்டான்

                                                        0000000000000000

வருடங்கள் உருண்டோடி விட்டிருந்தது அவன் அவளை பின்னர் இரண்டொரு தடைவை கண்டிருந்தாலும் கதைத்தில்லை. கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று செய்திகள் அவனிற்கு கிடைத்து. ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை நான்கு வருடத்திலேயே அவளின் கணவனிற்கு மூளைப்புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்து விட்டான். சில காலங்களின் பின்னர் அவளது விலாசத்தை கண்டு பிடித்து இரத்மலானை கடற்கரை பக்கமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அவளது மாமியார் கதவைத் திறந்தார் பின்னால் மானார். நான் யுரேகாவின்ரை பிறெண்ட். யுரோகாவை பாக்கலாமோ??என்று இழுத்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற அவர்களிடம். அருணும் எனக்கு பிறெண்ட்தான் ஆனால் அவனின்ரை பிரச்சனை நடக்கேக்குள்ளை நான் வெளிநாட்டிலை. இப்பதான் வந்தனான். அதுதான் வந்தனான் .இப்பிடி பல தான்..நான்..ற்கு பிறகுதான் வாங்கோ என்றபடி கதவு திறந்தது கையில் ஒன்று பின்னால் ஒன்று யுரேகா வந்துகொண்டிருந்தாள். கொழும்புத்தண்ணிக்கு முன்னை பாத்ததைவிட கொஞ்சம் நிறமாய்தான் இருந்தாள் கொஞ்சம் உடம்பும் வைத்திருந்தது ஆனாலும் அழகு கட்டுக்குலையாமலத்தான் இருந்தது. நீயா எப்பிடி வீட்டை கண்டு பிடிச்சனி. ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள்.அதே கணம் மாமன் மாமியை பார்த்து விட்டு அகலத்தை உடைனேயே குறைத்துக்கொண்டாள். வழைமையான விசாரிப்புக்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் போது மாமியார் தேனீரை கொண்டு வந்து வைத்துவிட்டு போனதன் பின்னர். பேச்சு அவர்கள் பக்கம் பக்கமாய் திரும்பியது. கடைசியாய் உன்னை எவ்வளவோ தேடினனான் உன்ரை அம்மா கூட உன்ரை தகவல் ஒண்டும் தெரியாது எண்டிட்டா. நீ இருக்கிறியா இல்லையா எண்டு கூட தெரியாத நிலைமை. எனக்கும் வேறை வழி இருக்கேல்லை. அருணும் நல்வர் எந்தக் குறையும் இல்லை ஆனால் என்ரை விதி அவ்வளவுதான். அவளின் கண்கள் கலங்கியது. பின்னர் அவன் பேச்சை மாற்றி வேறு விடயங்களை பேசியபின்னர் விடைபெற்றபொழுது வெளியே வாசல்வரை வழியனுப்ப தனியே வந்தவளிடம். அதுவரை தொண்டையில் உருண்டுகொண்டிருந்த விடயத்தை மெதுவாய் துப்பினான்.

 யுரேகா தயவு செய்து குறை நினைக்காதை நீ விரும்பினால் நான் உ..............ன்...............னை..........க..............லி. அவன் முடிக்கவில்லை. பிளீஸ் ஸ்ரொப்பிற். என்றாள் அவள் ஸ்ருப்பிற் என்றது மாதிரி அவனிற்கு கேட்டது. நான் உன்னட்டை காதலைத்தான் எதிர்பாத்தனான். கருணையை இல்லை..நான் உன்னிலை வைச்ச காதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு. நான் சாகும் வரைக்கும் அது அப்பிடியேதான் இருக்கும். எனக்கு நல்ல புருசன் கிடைச்சார். அதே நேரம் தங்கடை மகளை பாக்கிறமாதிரி நல்ல மாமா..மாமி. என்னை பாக்கினம். இனி என்ரை பிள்ளையளை நல்லா வளக்கிறதுதான் என்ரை நோக்கம். நீ இப்பவும் உங்கடையாக்களின்ரை வேலையாய்தான் கொழும்பக்கும் வந்திருப்பாய். தயவுசெய்து இனி என்னை பாக்கஇங்கை வராதை. இதுதான் நாங்கள் சந்திக்கிறது கடைசியாய் இருக்கட்டும். என்டு படபடத்து முடித்தவள் அவனது கையை இழுத்து தனது கையில் சுருட்டி வைத்திருந்த சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு போ இனிவராதை என்றுவிட்டு வேகமாய் உள்ளே போய்விட்டாள். காதுக்கு பக்கத்தில் 50 கலிபர் ஒண்டு அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்தது தன்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தவன் கையை விரித்து பார்த்தபோது சில 500 ரூபாய் தாள்கள் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதை திரும்ப அவளிடம் கொடுக்கலாமென நினைத்து பார்த்தபொழுது கதவு சாத்தப்பட்டுவிட்டிருந்த. என்னங்கடா இவளவை காதல் அப்பிடியே இரக்குதாம் கலியாணம் கட்ட கேட்டால் மாட்டாளாம். புரிஞ்சு கொள்ளவே முடியிதில்லை. ஒரு லயன் லாகர் 75 ரூபாய்தானே கையிலை 3000 ஆயிரம் ரூபாய் இருந்தது கடற்கரை பக்கமாய் இருந்த BAR ஒன்றை நோக்கி நடந்தபோது இடக்கை மணிக்கட்டை பார்த்தான் எந்த அடையாளமும் இல்லை. பி.கு. அன்று இயக்கத்தில் மாதகல் கரை பொறுப்பாக இருந்த பீற்றர் பின்னர் சயனைற் உட்கொண்டு இறந்துவிட்டான். அதன் விபரங்கள் நான் எழுதும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.
 கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.1

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 2

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4

0
0
காமம்.
பயிற்சி முகாம்.



23 ந்திகதி  யூலை மாதம்  83 ம் ஆண்டு  வழைமைபோலவே விடிந்தது  அவனும்  அந்த ஆண்டு   க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால்  நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.

எதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.

தோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

ஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன்?? இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன?? மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி ?? கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன்?? தடுக்க முடியாதா??அடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா?? முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.
00000000000000000000000000000
அன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள்??. முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.
0000000000000000000000000000000000
பரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் அவன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது
000000000000000000000000000
அடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.

ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்

0
0



சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முடித்த புத்தகத்திற்கு பிரபலத்தின் முன்னுரைக்காக பலமாதங்கள் காத்திருந்த கதைகளையும் நான் அறிந்திருக்கின்றேன். அப்படி பிரபலமென்றின் முதுகு சொறிவோடு புத்தகத்தை ஆரம்பிக்காததையிட்டு சயந்தனிற்கு முதுகில் ஒரு தட்டு.

நாவல் ஒற்றைக்காலையிழந்த புலிகளின் முன்னை நாள் போராளியொருவன் இத்தலிக்கு கப்பலில் களவாக இடம் பெயர்கிறான் அவனிற்கு ஒரு காதலியும் இருக்கிறாள். நீர்கொழும்பு கடற்கரையில் தொடங்கும் கதை இலங்கையில் இந்தியப்படை காலத்து சம்பவங்களில் புகுந்து யாழ் இடப்பெயர்வில் விரிந்து ஓயாத அலைகளில் ஊடறுத்து சமாதான காலத்தின் சம்பவங்கை சுமந்து ஆழ்கடலில் சங்கமமாகி படித்தவர்கள் மனங்களிலும் மெல்லியதாய் கீறி ஆறாவடுவை ஏற்படுத்தி முடிந்து போகின்றது.

சயந்தனின் சிறுகதைகளை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த எள்ளல்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். அதில் இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரின் தமிழ் தேசிய இராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து பயிற்சி கொடுக்கிறார்கள் அப்படி பிடிபட்ட ஒருவன் பயிற்சி முகாமில் பொறுப்பாளரிடம் அண்ணை எங்கடை தலைவர் யார் என கேட்கிறார் அதுக்கு அவர் இது தெரியாதா வரதராஜப்பெருமாள்தான் என்கிறார். அதற்கு அவனும் அப்பாவித்தனமாய் பொன்னாலை கோயிலில் குடிகொண்டிருக்கும் வரதராஜப்பெருமாள் என நினைத்து பெருமாளே இந்தச் சனியனிகளிட்டை இருந்து தப்பிவந்தால் இந்த வருசம் உனக்கு காவடி எடுக்கிறன் என்று நேர்த்தி வைப்பான்.
அடுத்ததாய் கதையின் நாயகன் முதல் தடைவை வெளிநாட்டிற்கு களவாக புறப்பட்டு பிடிபட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார். அவரை இலங்கை விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள் அப்பொழுது உனக்கு நியூட்டனை தெரியுமா என கேட்டபொழுது அவனும் ஜந்தாம் வகுப்பு விஞ்ஞான ரீச்சரும் இதே கேள்வியை தானே கேட்டவர் என்கிற வரியை படித்தபொழுது இரயில் என்னை மறந்து சத்தமாய் சிரித்துவிட்டேன். இப்படி பல எள்ளல்களை அள்ளி விட்டிருக்கிறார்.

இனி அவரின் கதா பாத்திரங்கள் என்று பார்த்தால் குண்டுப்பாப்பா பருத்த மார்புகளையுடைய நிலாமதி இவர் போராளிகளின் கைக்குண்டினை மார்புக்குள் ஒழித்து வைத்திருந்தது ஏற்புடையதல்ல என்று நண்பர் நந்தா தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். கைக்குண்டு என்றால் அந்தக்காலத்து ரி.என்.ரி அல்லது பென்ரலைற் குண்டுகளை மனதில் வைத்து அவர் எழுதியிருக்கலாம். ஆனால் சிறிய ரக கைக்குண்டுகள் M 26..57..61 MARK 3 a2 M 33 M 63 என்பன வெறும் 400 கிறாம் எடையுள்ள சிறிய சுற்றளவை கொண்ட கைக்குண்டுகள். இவற்றை மார்பு கச்சையினுள் கீழ்ப்புறமாக மறைக்கலாம் என்றே எண்ணுகிறேன். அது அருமையான படைப்பு..மகளின் மாதவிடாய் காலத்தில் வேறு வழிகளின்றி கோயிலில் அம்மனின் பட்டுத்துணியை களவெடுத்து பாவிக்கும் சுபத்திரை .நேரு ஜயா .கப்பலில் முதலில் இறந்து போகும் சின்னப் பெடியன் பெரிய ஜயா ஆகியோர் மனதை அழுத்தி செல்கின்றார்கள். இவை நாவலின் நிறைப்பக்கங்கள் என்றால் குறை பக்கங்கள் தேவி என்கிற மனப்பிறழ்வு பெண்பத்திரம் இந்திய இராணுவத்தால் வன்புனர்பு செய்யப்பட்டு கர்பப்பம் அடைகிறாள் அவளை சுட்டுக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சொல்வதில் ஒரு தளம்பல்..

அமுதன் எப்படி இயக்கத்தை விட்டு வெளியேறினான்என்பதில் தெளிவின்மை
அதே நேரம் ஈழத் தமிழரல்லாத தமிழர்களும் இருபது வருடங்களிற்கு முன்னரேயே புலம் பெயர்ந்து விட்டவர்களிற்கு இந்தியப்படை காலம் இடப்பெயர்வு என்பன என்பது பற்றி வெறும் செய்திகளியே அறிந்திருப்பார்கள். அவர்களிற்கு அவை பற்றி மேலதிக விளக்க குறிப்பக்களை கொடுத்திருக்கலாம். உதாரணத்திற்கு நியூட்டன் என்றால் புலிகளின் முக்கியமான புலனாய்வு போராளி என்பது எத்தனை பேரிற்கு தெரிந்திருக்கும் . அதனால் அவர்களும் சிரிக்கமுடியாமல் போயிருக்கலாம். அதே நேரம் சில விடையங்களை வேகமாக நகர்த்தியிருக்கிறார். இயக்கம் வெளியேறியது .சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது.செம்மணியில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது. என்பன.செய்தித் தலைப்புக்களை படிப்பது பேல இருக்கின்றது ஆயினும் அமுதன் என்கிற முன்னைநாள் விடுதலைப் புலிப் போராளியின் செயற்கை காலினை எரித்திய முன்னை நாள் போராளியான இத்திரிசிசிற்கு கிடைக்கச்செய்து கதையை முடித்த அந்த சிந்தனைக் கோர்வைக்கு ஒரு கைதட்டு

உணர்வுகள் உறவுகள்

0
0
உணர்வுகள் உறவுகள்
அம்மம்மா

இந்தவார ஒரு பேப்பரிற்காக  சாத்திரி

.காலைச்சூரியன் எழும்போதே சேர்ந்து எழுந்து முற்றம் கூட்டி தண்ணீர் தெளிக்கும் போது அந்தத் தண்ணியை கொஞ்சம் அவன் மீதும் தெளித்து எழுப்பிட்டு குளித்து நெற்றி நீளத்திற்கும் இழுத்த விபூதிக்குறியோடு மாட்டில் பால்கறந்து போட்ட தேனீர் பித்தளை மூக்குப்பேணிகளில் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து இதை கொண்டுபோய் தாத்தாட்டை குடு என்று நீட்டி விட்டு காலைச்சாப்பாடு தயாரிப்பில் இறங்கி விடுவார்.அவனிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மம்மாவும் தாத்தாவும் நேருக்கு நேர் கதைத்ததை அவன் பார்ததேயில்லை ஏதாவது அவர்கள் கதைப்பதென்றாலும் இதைபோய் அங்கை சொல்லு என்று அவன்தான் இடையில் மாறி மாறி கதைகாவி.

இவங்களிற்குள்ளை ஏதும் சண்டையாயிருக்குமோ??என்றும் அவன் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆனால் சண்டை பிடித்ததையும் அவன் காணவில்லை. மத்தியானமானதும் தாத்தா கள்ளடிக்கப் போய விட்டு வருவார். அவர் தூரத்தில் வரும்பொழுதே முற்றத்தில் படுத்திருக்கும் வாதாபி வாலையாட்டியபடி மெதுவாய் முனகியபடி சந்தோசத்திலை நிலத்திலை விழுந்து புரளும்.. குசினிக்குள் நின்றபடியே டேய் செம்பிலை தண்ணி எடுத்து வை தாத்தா வாறார் என்று குரல் கொடுப்பார்.தூரத்தில் தாத்தா வந்து கொண்டிருப்பார். அவர் வாறது எப்பிடி வாதாபிக்கும் உள்ளை நிக்கிற அம்மம்மாவிற்கும் தெரியும் ?? வாதாபி மணத்திலை கண்டு பிடிச்சிருக்கும். அம்மமாவுக்கும் மணக்கிற சக்தி இருக்கோ எண்டு மண்டையை போட்டு குழப்பி ஒருநாள் அவாவிடமே கேட்டும் பார்த்தான்.சின்னப்பெடியன் உனக்கு விளங்காது எண்டு சொல்லி சிரிச்சார்.

தாத்தா நேரடியாக கிணத்தடிக்குப்போய் கைகால் கழுவி விட்டு வந்து செம்புத்தண்ணியை ஒரு முறடு குடித்துவிட்டு அதை கொண்டுவந்து சாப்பிட சப்பாணி கட்டியமர்ந்ததும் அவன் கொண்டுபோய் வாழையிலையை குடுப்பான். பெரும்பாலும் வழையிலைதான் சாப்பிடுவார். வாழையிலை இல்லாத காலத்திலை அம்மம்மா ஒரு ஓலைப்பெட்டியை கவித்துப்போட்டு அதில் பெரிய பூவரசம் இலைகளை மெதுவாய் நெருப்பில் வாட்டி கோப்பை போல வட்ட வடிவமாய் அடுக்கி தருவார் அதிலை என்னதான் சொதி குளம்பு ஊத்தி சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடியும்வரை கொஞ்சம்கூட கீழே ஒழுகாது .

அது மட்டுமில்லை தாத்தா செருமினால் பிடரியை சொறிந்தால்.உச்சந்தலையை சொறிந்தால்.நெஞ்சை தடவினால் அதற்கெல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அது அம்மம்மாவிற்கு மட்டுமே புரியும். அதே நேரம் அம்மம்மாவின் ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தங்கள் தாத்தாவிற்கு மட்டுமே புரிந்தவை.பால் குடித்து முடித்துவிட்டதொரு குழந்தைக்கு முதுகில் தட்டி அது ஏவறை (ஏப்பம்) விட்டதும் ஆனந்தப்படும் ஒரு தாயைப்போல் தாத்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் தானது வயிற்றை தடவி ஒரு ஏவறை விட்டால்தான் அவாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணலாம்.இரவில் சாப்பிட்டு முடிந்ததும் காலை நீட்டி சுவரில் சாய்ந்படி வெற்றிலைப் பெட்டியை எடுத்து வெற்றியலை. பாக்கு. சுண்ணாம்பு புகையிலை. எல்லாம் அளவாய் சேர்த்து பாக்குஉரலில் போட்டு இடித்து அதை ஒரு முழு வெற்றிலையில் கொட்டி சுருட்டி அதனை இரண்டாகப்பிரித்து பாதியை தாத்தாவிடம் கொடுக்கச்சொல்லி அவனிடம் நீட்டிவிட்டு பாதியை அவர் வாயில் போட்டு மென்றுவிட்டு வாய்கொப்பளித்துவிட்டு படுக்கப் போவார்.

அவர்களின் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அனைத்தையும் சரிபாதியாய் பகிர்ந்து கொண்டதன் முழு அர்த்தமுமே அவர்கள் இரவில் பகிர்ந்து கொள்ளும் அந்த வெற்றிலையில் ததத்துவமாய் பொதிந்திருந்தது அப்பொழுது அவனிற்கு புரிந்திருக்கவில்லை.அப்படியானதொரு நாளில்தான் தாத்தா நோய்வாயப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அவரது இறுதிக்கணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. அன்றிரவு தாத்தா மயங்கிய நிலைக்கு போய்விட்டிருந்தார். அவன்தான் அவசரமாக ஓடிப்போய் நடராசா பரியாரியை அழைத்து வந்தான். வந்தவர் எல்லாம் பரிசோதித்துவிட்டு சொந்தபந்தங்களிற்கு சொல்லினுப்பிட்டு பால் ஊத்துறவை ஊத்துங்கோ எண்டு சொல்லிவிட்டு அவரின்ரை பங்கிற்கு அவரும் பால் ஊத்திவிட்டு போய்விட்டார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எண்டு எல்லாரும் வரிசையாய் நிண்டு பால் ஊத்தியாச்சு. ஆனால் இன்னமும் சேடம் இழுத்துக்கொண்டுதானிருந்தது. பலர் சொல்லியும் அவர் விரும்பினபடி விதம் விதமாய் சமைச்சு போட்ட கையாலை பால் ஊத்தமாட்டன் எண்டிட்டார் அம்மம்மா ..மண் பொன் எல்லாம் உரசி ஊத்தியாச்சு நேரம் போய்க்கொண்டேயிருந்தது சேடம் இழுத்துக்கொண்டேயிருந்தது. பிள்ளை உயிர் கிடந்து தவிக்கிது இப்பிடி தவிக்கவிடாதை அடம்பிடிக்காமல் பாலை ஊத்து எண்டு ஊர்பெருசுகள் எல்லாரும் வற்புறுத்தினால் பிறகுதான் விசும்பியபடி ஒரு கறண்டியில் பாலை எடுத்து அவரது வாயில் ஊற்றினார் தாத்தாவின் மார்பு சில அங்குலம் கட்டிலில் இருந்து மேலே எழும்பி திரும்ப கீழே இறங்க மெல்லியதாய் ஒரு கொட்டாவியோடு அவரது உயிர் பிரிந்து போனது. வீடு முழுதும் ஒரே ஓலம்.
00000000000000000000

அதிகாலையே சினேகிதங்களோடை சேந்து ஊர் முழுக்க இழவு சொல்லிவிட்டு விடியமுதலேயே சுன்னாகம் இரத்தினன் வீட்டிற்கு ஓடினான். காரணம் செத்த வீட்டிற்கு வெள்ளை கட்டிறவன். ஜயர் இவையளிற்கு முதல் முக்கியமான ஒருவன் இரத்தினன். அந்த நேரத்திலை நாடகத்திற்கு வைரமுத்து . தவிலிற்கு தட்சணாமூர்த்தி மாதிரி பறையடிக்கிறதுக்கு இரத்தினன். இரத்தினின்ரை நாள் சரிவாராமல் பிணம் எடுக்கிறதை தள்ளிப் போட்ட சம்பவங்களும் நடந்திருக்கு. கறுத்த மெலிஞ்ச வலிச்ச உடம்பு வெத்திலை போட்டு சிவந்தவாய் இதுதான் இரத்தினன்.இரத்தினன் தொழில் திறமை .பக்தி இதுக்கு அடுத்ததாய் சாதியத்திற்கு எதிரானதொரு போராளியும். யார் செத்தவீட்டிற்கு கூப்பிடப் போனாலும் அவனின்ரை முதல் உத்தரவு தனக்கோ தன்னோடை வாறவைக்கோ சிரட்டையிலை தேத்தண்ணி தரக்கூடாது எண்டு கண்டிப்பாய் சொல்லிவிடுவான்.

அவனிற்காக கிளாசுகள் வாங்கித்தான் தேத்தண்ணி குடுக்கவேணும்.செத்த வீட்டிற்கு வந்ததும் வெறும் தேத்தண்ணியை குடிச்சபடி வெற்றிலையை போட்டு சப்பித் துப்பினபடியே இருப்பான் அவனின்ரை உதவியாளர் அல்லது அவனிட்டை தொழில் பழகிறவர்தான் இடைக்கிடை மேளத்தை அடிச்சபடி இருப்பினம்.கடைசி பொற்சுண்ணப்பாடல் முடிஞ்சு எல்லாரும் பந்தம் பிடித்துக்கொண்டிருக்கும் போதுதான். தேத்தண்ணி இருந்த இரத்தினன்ரை கிளாசிலை சாராயம் நிரம்பியிருக்கும். ஒரு சுருட்டை பற்றவைத்து விட்டு மேளத்தை தூக்குவான். அதுக்கு பிறகு சத்தத்தை வைச்சே இரத்தினன் அடிக்கத் தொங்கிட்டான் எண்டு எல்லாருக்கும் தெரியும்.
தாத்தா செத்த நேரம் அவரின்ரை ஆம்பிளை பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டிலை உடைனை வரமுடியாத நிலைமை அதலை அவன்தான் கொள்ளி வைக்கவேணும் தாத்தாவேறை தண்ணியடிச்சிட்டு டேய் நீ தானடா எனக்கு கொள்ளி வைக்கவேணும் எண்டு அடிக்கடி சொல்லுவார். கொள்ளி வைக்கிறதெண்டு முடிவாகிட்டுது அதுக்கு கட்டாயம் மொட்டையடிக்கவேணும். மொட்டையடிச்சால் பிறகு பள்ளிக்கூடத்திலை எல்லாரும் அவனை மொட்டைப் பாப்பா சட்டியுடைச்சான் மூண்டுபானை கூழ் குடிச்சான் எண்டு நக்கலடிப்பினம் அதாலை மொட்டையடிக்காமல் தலைமயிரை ஒட்ட வெட்டச்சொல்லி கேக்கலாமெண்டு தம்பிஜயாவை தேடிப்போனான். தம்பிஜயாவோ பின்வளவு பூவரசிலை தோல்வாரை கட்டிப்போட்டு சவரக்கத்தியை இழுத்துத் தீட்டிக்கொண்டிருந்தான்.

தம்பி ஜயா மொட்டையடிக்காமல் கொஞ்சம் ஒட்டவெட்டினால் காணும்தானே??

தம்பி இது சடங்கு சம்பிரதாயம் இதுகளை மீறக்கூடாது எண்டபடி அவன் தலையில் தண்ணியை தெளித்து வழிக்கத் தொடங்கினான். ஒருநாள் அவனின்ரை சலுனிலை பலவருசமாய் வைத்து தம்பிஜயா தேய்த்தக்கொண்டிருந்த சீனாக்காரத்தை எடுத்து கீழைபோட்டு உடைத்துவிட்டான் அதற்கு எப்பிடியும் பழிவாங்கியே தீருவான் என்பது அவனிற்கு தெரியும்.மொட்டையடித் முடித்தவன் தம்பின்ரை மண்டை வடிவான உருண்டை மண்டையெண்டு பழிவாங்கிவிட்ட திருப்தியில் சொல்லிச் சிரித்தான்.

எல்லாரது அழுகுரல்களோடையும் வேலியை வெட்டி பிணம் வீதியில் இறங்கியது வேட்டி கட்டியபடி மொட்டைத்தலை தோளில் கொள்ளிக்குடத்துடன் அவனும் ஊர் ஆண்களும் சுடலை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். பட்டினத்தார் பாடலும் எவ்வொரு சந்தியிலும் இரத்தினனின் மேளச்சமாவுமாக சுடலைக்கு போய் சேர்ந்ததும் அடுக்கியிருந்த மரக்குற்றிகளில் பிணத்தை கிடத்தி பெட்டியை பிரித்தார்கள். அவனை பிணத்தை சுற்றி வலம்வரச்சொன்ன தம்பிஜயா கொடுவாக்கத்தியால் கொள்ளிக் குடத்தில் கொத்தி அதிலிருந்து வழிந்த நீரை பிணத்தை நோக்கி தட்டிவிட்டுக்கொண்டிருந்தான். தம்பிஜயா நல்லா தண்ணியடிச்சிருந்தான் வெறிவளத்திலை அவனின்ரை மொட்டந்தலைக்கும் கொள்ளிக்குடத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கொடுவாக்கத்தியாலை பிடரியிலை கொத்திப்போடுவானோ எண்டும் பயமாக இருந்தது.கடைசியாய் தாத்தாவின் தலைமாட்டில் கொள்ளியை செருகியபோதுதான் அவனால் அடக்கமுடியாமல் அழுகை விம்மிவெடித்தது. அப்பிடியே திரும்பிப் பாக்காமல் வீட்டிற்கு போகச்சொன்னார்கள்.

எட்டுச்செலவு வரைக்கும் ஒவ்வொருநாளும் ஒப்பாரிபெண்டுகள் சொந்தக்காரரின் பட்டிணி பண்டம் எண்டு நாட்கள் போய் எட்டுச்செலவும் முடிந்து அடுத்நாள். டேய் செம்பிலை தண்ணியெடுத்து வாசல்லை வையடா எண்டு வழைமைபோல குசினிக்குள் இருந்து அம்மம்மா குரல் குடுத்தார். என்ன இது மனிசி பழக்கதோசத்திலை சொல்லுதோ எண்டு நினைக்க வாதாபியும் மெதுவாய் முனகியபடி வாலை ஆட்டியபடி நிலத்தில் கிடந்து புரண்டது.அவனிற்கு பயம் வரவே செம்பில் தண்ணியை எடுத்துவைத்துவிட்டு வீட்டிற்குள் ஓடினான். தாத்தாவின் படத்திற்கு முன்னாள் ஓலைப்பெட்டியை கவிழ்த்துப் போட்டுவிட்டு வாட்டிய பூவரசம் இலைகளை வட்டமாய் அடுக்கிக்கொண்டிருந்தார் அம்மம்மா....

சிமிக்கி

0
0
மனோகரா தியேட்டர் முதலாவது வகுப்பு இருக்கையில் நாதனும் சாவித்திரியும் படத்தில் மூழ்கிப்போருந்தனர்.மடமடக்கும் பட்டுச்சேலையில் அவளும் . வெள்ளைச் சட்டை வெள்ளைக்காற்சட்டையில் அவனும்.அவர்களை பார்தததுமே புதிதாய் கலியாணமானவர்கள் என்று சொல்லிவிடலாம்.வெள்ளி விழா படத்தில் ஜெமினிகணேசனை ஒட்டி உரசியபடி ஜெயந்தி காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான்நான் பேசுவேன் என்கிற பாடலை பாடிக்கொண்டிருந்தார். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் அனைவருமே சொக்கிப் போய் அமர்ந்திருந்தனர். நாதனின் விரல்கள் சாவித்திரியின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொள்ள திரை வெளிச்சத்தில் நாணத்துடன் நாதனை திரும்பிபிப்பார்தாள். நீரும் அசல் அந்த கீரோயின் மாதிரித்தான் இருக்கிறீர் யாரோ புது ஆள். பெயரை எழுத்தோட்டத்திலை கவனிக்கேல்லை வாற ஞாயிறு வந்து படத்தை திரும்ப பாக்கேக்குள்ளை கீரோயினின்ரை பேரை கவனிக்கவேணும். அதிலை அவா போட்டிருக்கிற மாதிரி ஒரு சிமிக்கி உமக்கும் போட்டால் அந்த கீறோயின் மாதிரியே இருப்பீர் எண்டு சாவித்திரியின் காதில் கிசுகிசுத்தான்.படம் முடிந்து வெளியே வந்து சைக்கிளில் சாவித்திரியைஏற்றிக்கொண்டு வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கும் போது அவனது மனம் முழுதும் எப்படியாவது அவளிற்கு ஒரு சோடி சிமிக்கி வாங்கி குடுப்பது என்கிற எண்ணம் மட்டும்தான் மனதில் நிறைந்திருந்தது சாவித்திரியோ காதோடுதான் பாடலை மனதிற்குள் முணு முணுத்தபடியே இருந்தாள்.

நாதன் தொலைத் தொடர்பு இலாகாவில் சாதாரண ஊழியன். சாவித்திரியை கோயிலில் அவனது அம்மா காட்டியதுமே பிடித்துபோய் திருமணம் செய்து கொண்டான். இருவர்களது குடும்பங்களும் நடுத்தர குடும்பங்கள்தான். நாதன் குடும்பத்தில் ஒரேயொருத்தன் என்பதால் அவனது வீட்டிலேயே சாவித்திரியோடு குடும்பம் நடாத்தத் தொடங்கியிருந்தான். நாலைந்து தடைவைகள் வெள்ளி விழா படத்தை அவர்கள் பார்த்து முடித்துவிட்டதொரு நாளிள் வேலை முடிந்து வீட்டிற்கு மகிழ்ச்சியோடு வந்த நாதன் சாவித்திரியை தன் தாய் தந்தைக்கு தெரியாமல் இரகசியமாக அறைக்குள் அழைத்தவன். அவளது கண்ணை மூடச்சொல்லி கைகளில் சிவப்பு ரிசு பேப்பரில் சுற்றியதொரு சிறிய பொட்டலத்தை வைத்தான். கண்களை திறந்த சாவித்திரியின் கண்கள் ஆச்சரியத்தோடு ஆனந்தக் கண்ணீரால் கசிந்தது. அவளது கைகளில் ஒரு சோடி சிமிக்கி மின்னியது.அவளது காதில் இருந்த வழையங்களை கழற்றிவிட்டு சிமிக்கியை போட்டு விட்டவன் நீர் இப்ப அசல் அந்த கதாநாயகிமாதிரியே இருக்கிறீர் எங்கை ஒருக்கா அந்த பாட்டை பாடுமன் என்றதும். வெட்கத்தில் குனிந்த சாவித்திரியின் கன்னத்தின் அருகே முகத்தை கொண்டு போனதுமே. கெதியிலை அப்பா ஆகப்போறார் இன்னும் ஆசையைப்பார் என்று வயிற்றை தடவிக்காட்டினாள். அவன் கன்னத்திற்கு கொடுக்கப்போன முத்தத்தை அப்படியே இறக்கி அவளது வயிற்றில் கொடுத்துவிட்டு இப்ப இரண்டுபேருக்கும் கணக்கு தீர்த்தாச்சு என்று சிரித்தான்.
இண்டைக்கு நல்லம்மா கிழவி என்ரை வயித்தையும் நான் நடக்கிறதையும் பாத்து ஆம்பிளை பிள்ளைதான் எண்டு சொன்னவா.

உண்மையாவே??நல்லம்மா கிழவி சொன்னால் அரக்காது என்றபடி மீண்டும் அவளது கன்னத்தை நோக்கி முகத்தை கொண்டு போகும் பொழுது ..டேய் தம்பி வேலையாலை வந்ததும் சாப்பிடாமல் உங்கை என்னடா செய்யிறாய் என்கிற அவனது அம்மாவின் குரலை கேட்டதும் அவசரமாய் உடுப்பை மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.


                                                     0000000000000000000000

ஒவ்வொரு இரவிலும் அவனது அணைப்பில் இருக்கும் சாவித்திரியின் சிமிக்கியை அவன் சுண்டி விழையாடுவததோடு அந்த பாடலை ஒருக்கால் பாடச்சொல்லி கேட்பதும் அவளும் இரண்டொரு வரிகளை முணுமுணுப்பதும் அவனிற்கு ஒரு பழக்கமாகிப் போய் விட்டிருந்தது கால ஓட்டங்கள் அவர்களிற்கு ஒரு மகனையும் மகளையும் பிள்ளைகளாக்கி மகிழ்வை கொடுத்ததோடு அவனது தாய் தந்தையரின் மரணங்களும் இயற்கையோடு கரைந்து போய்விட்டிருந்தது. நாட்டுப்பிரச்சனையில்அவனதுவேலையும்பறிபோயிருந்தாலும்.சிறிதளவுஓய்வூதியப்பணம் கிடைத்துக்கொண்டிருந்தது..அளவான வருமானம் அழகான குடும்பம். அன்பான மனைவி சாராசரி மனிதருக்கு இருக்கவேண்டிய அனைத்தும் இருந்தாலும். நாட்டின் அசாதரண சூழலும் அரசியலும் அவர்களையும் அவ்வப்பொழுது சீண்டத் தவறியதில்லை.தொண்ணூறுகளின் ஆரம்பம். பிள்ளை பிடி இராணுவத்திடமிருந்து பிள்ளையை காப்பாற்ற கையிலிருந்த பணத்தோடு நகைகளையும் அடைவு வைத்து மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பதினெட்டு வருடங்களிற்கு பின்னர் முதன் முதலாக சாவித்திரியின் சிமிக்கியும் கழன்று அடைவு கடைக்குள் போயிருந்தது. அவளிற்கு வேறு எதுவும் பேட விருப்பம் இல்லததால் வேப்பங் குச்சியை முறித்து காது ஓட்டையில் செருகிவிட்டிருந்தாள்..நாதனிற்கும் சிமிக்கி இல்லாத சாவித்திரியின் முகத்தை பார்க்கவே அந்தரமாக இருந்தது. மகன் வெளிநாட்டிலை இருந்து காசு அனுப்பினதும் முதல் வேலையா நகையளை மீட்கலாம். இல்லாட்டி நான் சிமிக்கியை மட்டுமாவது எப்பிடியும் மீட்டுத் தருவன் என்று அவள் மனதை தேற்றியபடியிருந்தார். அதே போல் பிரான்ஸ் வந்து சேர்ந்துவிட்ட மகன் பல மாதங்களின் பின்னர் அனுப்பிய பணத்தில் சிமிக்கி மீண்டதும்தான் சாவித்திரியின் முகத்தில் மகிழ்ச்சி முழுவதுமாய் மீண்டிருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வோடை மகளும் குமராகிவிட்ட நிலையில் வன்னிக்குள் புகுந்துவிட்டிருந்தவர்கள். உடனடி செலவுகளிற்காக நகைகள் அடைவிற்கு போனாலும் சாவித்திரி சிமிக்கியை மட்டும் கழற்றவேயில்லை.அதே நேரம் மகள் இயக்கத்துக்கு ஓடிடுவாளோ எண்டிற பயத்திலை மகனை நச்சரிச்சு அவளையும் ஒரு மாதிரி இலண்டனில் கட்டிக்குடுத்து விட்டிருந்தார்கள்.காலப்போக்கில் வன்னிக்குள்ளேயே புலிகளின் நிருவாகக் கட்டமைப்பில் நீதி நிருவாகத் துறையில் நாதனிற்கு பதிவாளராக வேலையும் கிடைத்துவிட வன்னியிலேயே தங்கிவிட்டிருந்தனர்.இறுதி யுத்தத்தில் பலஇலட்சம் மக்களோடு மக்களாக அவர்களும் மணிக்பாம் முகாமில் முடங்கிப் போனவர்கள். பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குகூட கையில் பணமேதும் இல்லாததால் மீண்டும் சிமிக்கியை கழற்றி அம்மானின் ஆள் எண்டவனிடம் குடுத்து கொஞ்சப்பணம் வாங்கி மகனுடன் கதைத்து உண்டியலில் காசும் எடுத்து வெளியே வந்த பிறகு அம்மானின் ஆளை தேடினால் காணக்கிடைக்கவில்லை. சிமிக்கி போன கவலையில் மீண்டும் சாவித்திரியன் காதுகளில் வேப்பங்குச்சி புகுந்து கொண்டது. கொழும்பில் தங்கியிருந்தவர்களிற்கு அவசர அவசரமாக ஸ்பொன்சர் வேலைகள் நடந்தது.

ஆனால் நாதன் மகனிடமும் சாவித்திரி மகளிடமும் போய் விட்டிருந்தார்கள். அப்பொழுதுதான் தாங்கள் தனித்தனி தீவுகளிற்குள் தூக்கி வீசப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள். தொலைபேசியில் மட்டுமே நலம் விசாரிப்புக்கள். ஒருநாள் சாவித்திரி கணவனிடம் சாதாரணமாய் சாப்பிட்டியளோ என்று தொலைபேசியில் கேட்டதற்கு. என்னத்தை எதை சாப்பிட்டாலும் வைக்கலை சாப்பிட்டமாதிரிக் கிடக்கு ருசியே இல்லையெண்டு சொல்லப்போக அது மருமகளின் காதில் விழுந்து அதை அவள் அழுதழுது என்ரை சாப்பாடு சரியில்லையாம் எண்டு மாமா மாமிட்டை சொல்லுறார். ஏதோ என்னாலை முடிஞ்சது இவ்வளவுதான் எண்டு கணவனிடம் சொல்ல அது பெரிய பிரச்சனையாகிப் போயிருந்தது. அன்றிரவு மகன் நாதனிற்கு வெளிநாடு ஜஸ் சாப்பட்டு வகை பற்றி பெரியதொரு விரிவுரையே நடத்தியதோடு உங்களிற்கு சிகரற் வாங்கித்தாறன். குடிக்க பியர் வாங்கி அடிக்கி வைச்சிருக்கிறன். வெத்திலை வாங்கி போட காசும் தாறன் இதைவிட வாழக்கையிலை வேறை என்ன வேணும் இனிமேல் மருமகளை குறை சொல்லாதையுங்கோ என்று முடித்திருந்தான். அதற்கு பிறகு நாதனும் பேச்சை குறைத்துக் கொண்டார். தமிழ் அதிகம் தெரியாத பேரப்பிள்ளையும் பள்ளிக்கூடம் போய்விட்டால் தனியே தொலைக்காட்சிதான் பொழுது போக்கு அதுவும் நாள்செல்ல வெறுத்துப் போய்விட கொஞ்சம் வெய்யிலடித்தால் வெளியில் இறங்கி உலாவுவார். சாவித்திரிக்கு தொலைக்காட்சி மட்டுமே தஞ்சமாகிப் போனது. மகள் எவ்வளவு நச்சரித்தும் காதில் தோடு போட மறுத்துவிட்டாள். எங்கையாவது வெளியில் போகும் போது மட்டும் மானம் மரியாதைக்காக மகள் தருவதை போடுபவர் வீட்டிற்கு வந்ததும் கழற்றி குடுத்துவிடுவார் மகளும் காரணம் கேட்பதில்லை சாவித்திரியும் சொல்வதில்லை.

                                                       00000000000000000000000
ஒரு வருடத்தில் நாதனிற்கு பிரான்சின் விசா கிடைத்துவிட மகன் குடும்பத்தோடு மகளிடம் போயிருந்தார். மனைவியை கண்ட அவரது மகிழ்ச்சி அவளின் காதுகளை பார்த்ததுமே மறைந்து போனது.ஆனால் அவரும் ஏதும் மனைவியிடம் கேட்கவில்லை. பிரான்சிற்கு திரும்பியதும் ஒரு முடிவு செய்திருந்தார். தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள பகுதியான லா சப்பல் பகுதில் ஒவ்வொரு கடையாக ஏறி வேலை தேடத் தொங்கியிருந்தார். அவரின் வயதை பார்த்து எல்லாருமே தயங்கினாலும் ஒரு கடைக்காரன் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலம் சாமான் அடுக்கிற வேலை. சம்பளம் மணித்தியாலத்துக்கு ஏழு யுரோ .சம்பளம் பதிய மாட்டன் விரும்பினால் செய்யலாமெண்டான். நாதனுக்கும் கிடைத்தவரை லாபம். அடுத்தநாளே பகல் நகைக்கடை கண்ணாடிகளிற்குள்ளால் கண்களை மேயவிடத் தொடங்கியிருந்தார்.
மகனிற்கும் தான் வேலைக்கு போறது தெரியாமலிருக்க தெரிஞ்ச சினேதன் ஒருதன் அம்பிட்டிருக்கிறான் லா சப்பல் பக்கம் போய் அவனோடை கதைச்சிட்டு வாறனான் என்று கதைவிட்டிருந்தார்.

ஒரு மாதம் போனதும் ராயூ யுவர்லசின் கதைவை தள்ளிக்கொண்டு உள்ளை புகுந்தவர் தம்பி எனக்கொரு சிமிக்கி வேணும் எண்டார். கடைக்காரனும் இருந்த சிமிக்கி வகை எல்லாத்தையும் அவர் முன் பரப்பினான். இதன்ன ஒண்டும் சரியில்லையெண்டு விட்டு பக்கத்திலிருந்த மோகன் .தங்கமாளிகை என்று பாரிசில் இருந்த எல்லாக்கடையும் ஏறி இறங்கிவிட்டார் அவர் தேடியமாதிரி சிமிக்கி எங்கையும் இல்லை.திரும்பவும் ராயூ யுவர்லசிற்கு நுளைந்தவரிடம் என்ன ஜயா சிமிக்கி கிடைச்சதோ?? என்றான் கடைக்காறன்.என்னத்தை குட்டி குட்டி சிமிக்கியள்தான் புது டிசைன் எண்டு காட்டுறாங்கள். தம்பி நான் சொல்லுறமாதிரி செய்து தருவியோ??
தாராளமா நீங்கள் காசை தாறியள் அதுக்கேற்றமாதிரி செய்து பொருளை தருவம்.
சரி ஒரு பேப்பரும் பேனையும் தாரும். என்றதும் நீட்டிய பேப்பரில் கண்ணாடியை சரிசெய்து விட்டு மெதுவாக நடுங்கும் கைகளால் சிமிக்கியை கீறத் தொடங்குகிறார் வாடிவா பாரும் தம்பி தோடு இப்பிடி வட்டமாயிருக்கவேணும்.கல்லு வைச்சது கீழை சிமிக்கி 5 கல்லு பிறகு 7 கல்லு பிறகு 9 கல்லு வைக்கவேணும்.
கீறி முடித்த சிமிக்கியை பாத்த கடைக்காரன் இதென்ன கர்ணனின்ரை குண்டல சைசிலை கீறியிருக்கிறியள். கோழிக்கரப்பு மாதிரி இருக்கு இப்ப இந்த சைசிலை ஒருத்தரும் போடுறேல்லை ஜயா.
தம்பி உம்மாலை முடியுமோ முடியாதோ??

எனக்கென்ன ஆனால் இந்த அளவுக்கு இதே டிசைனிலை செய்யிறதெண்டால் ஆயிரத்து இருநூறாவது ஆகும் பவுண் விலை தெரியும்தானே?

உமக்குஅந்த கவலை உமக்கு வேண்டாம்.

சரி ஜயா அட்வான்ஸ் பாதி தந்தால் பவுணை வாங்கி பொருளை செய்யத் தொடங்கலாம்.
தம்பி இந்த மாத கடைசியிலை கொண்டந்து தருவன். பிறகு செய்யத் தொடங்கும் விடை பெற்றார்.
அவரும் அட்வான்ஸ் குடுத்து சிமிக்கி செய்யத் சொல்லி எல்லாம் நல்லாய் போய்க்கொண்டிருந்த ஒருநாள் கடையில் சாமான் அடுக்கிக் கொண்டிருந்த நாதன் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு போனார்.
வீட்டுக்கு பக்கத்திலை தமிழ் கடை இருக்க இஞ்சை என்னத்திற்கு வந்தவள் என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் மருமகள் அவரை பார்த்து விட்டு மருதாணி பவுடரை எடுத்துக்கொண்டு போய் கடைக்காரரிடம் காசு குடுக்கும் பொழுது அந்த ஜயா கனநாளய் இஞ்சை வேலை செய்யிறாரோ ??எண்டதும் கடைக்காரரும் வஞ்சமிலலாமல். இப்பதான் ஒரு மூண்டு மாதமாய் நல்ல மனிசன். பாவம் பிள்ளையள் அவரை கவனிக்கிறேல்லை போலை அதுதான் இந்த வயதிலையும் வேலை செய்யிறார் எண்டொரு மேலதிக தகவலையும் சொல்லி வைத்தான்.

                                           000000000000000000000000
இண்டைக்கு வீட்டிலை சுனாமி அடிக்கப் போகுது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் நுளைந்த நாதனிடம் அப்பா உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும். எண்டதும் மருமகளும் பேரனை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுளைந்துவிட்டாள். கடைக்காரன் தான் உங்கடை சினேதனோ என தொடங்கியவன் மானம் போகுது மரியாதை போகுது. என்ன குறை விட்டம். சாப்பாடா?? சிகரற்றரா?? பியரா?? வெத்திலையா??உடுப்பா??அடுக்கிக் கொண்டே போனான். நாதனின் மௌனம் மட்டுமே பதிலானது. கோபத்தில் லண்டனிற்கு போனடித்து சத்மாய் நடந்ததை சொல்லி முடித்துவிட்டு அம்மா நீங்களே அவரிட்டை கேளுங்கோ எதுக்கு வேலைக்கு போனவெரெண்டு உங்களிட்டையாவது சொல்லுறாரோ பாப்பம் என்று தொலைபேசியை நாதனிடம் நீட்டினான். தொலைபேசியை காதில் வைத்தவர். மறுபக்கத்தில் என்னப்பா இதெல்லாம் என்கிற விசும்பிய குரலிற்கு எல்லாம் காரணத்தோடைதான் என்றுவிட்டு மகனிடம் தொலைபேசியை நீட்டிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.டேய் அப்பா என்ன செய்தாலும் ஏதாவது காரணம் இருக்குமடா அவரை பேசாதை என்றவரிடம் நீயும் அவருக்கு வக்காளத்து வாங்கு என்று கத்திவிட்டு போனை வைத்தான்.

மகளிடம் திரும்பியவர் பிள்ளை அப்பாக்கு அங்கை சரிவருதில்லை போலை இஞ்சை வீடு வசதியா தானே இருக்கு இஞ்சை கூப்பிட்டால் எனக்கும் துணையா இருக்கும் என்றதும். அதிகம் பேசாத மருமகன் உங்கடை அம்மாக்கு அப்பாவை விட்டிட்டு இருக்கேலாது போலை என்று நமட்டு சிரிப்படன் சொல்லி சிரித்ததும் சாவித்திரி கூனிக் குறுகி கூசிப் போனாள். அதற்கு பிறகு சாவித்திரியும் சரியாக சாப்பிடுவதில்லை யாருடனும் கதைப்பதில்லை ஏன் இந்த மனுசன் இப்பிடி செய்ததெண்டு அந்த கவலையிலேயெ நாட்கள் போய்க்கொண்டிருந்தது. நாதனை வேலைக்கு போகவேண்டாமென்று மகனிற்கும் அவரிற்கு சண்டை விரிசல் கூடிக்கொண்டே பேனதே தவிர இருவரும் ஆற அமர்ந்து இருந்து அவர் வேலைக்கு போவதற்கான காரணங்களை கதைக்கவில்லை. அம்மா அப்பா என்கிற உறவு பிள்ளைகளின் வாய்களில் கிழவன் கிழவியாகிப் போனது.
மட்டுமல்லாமல் உறவுகளிற்கிடையில் விரிசல்களும் அதிகரித்துப் போனது அந்த மாத இறுதியில் நாதனின் கைகளிற்கு சிமிக்கி கிடைத்துவிடும். அன்று வேலையால் வந்தவர் மகனிடம் நானும் அம்மாவும் உருக்கு போகப் போறம் அதுக்கான வேலையளை பார் என்றுவிட்டு போய்விட்டார். அவன் மீண்டும் தங்கைக்கு போனடித்து கத்தினான். அம்மவும் அப்பிடித்தான் இஞ்சை சரியா கதைக்கிறேல்லை சாப்பிடுறேல்லை கனதரம் பிறசர் கூடி தலைசுத்தி விழுந்திட்டா ஏதும் நடந்திடுமோ எண்டு எனக்கும் பயமா கிடக்கு பேசாமல் ஊருக்கே அனுப்பிறது நல்லதுபோலை கிடக்கு அங்கை என்ரை சீதன வீடும் காணியும் யாரோ தானே இருக்கினம். அவையளோடை கதைச்சு எழும்ப சொல்லிப் போட்டு பேசாமல் இரண்டு கிழட்டையும் அனுப்பி விடுறது நல்லது போலத்தான் கிடக்கு என்றாள்.

                                                       0000000000000000
பயண அலுவல்கள் தயாராகி விட்டிருந்தது நாதன் british airways இலண்டனிற்கு போய் அங்கிருந்து சாவித்திரியுன் இணைந்து கொழும்பு போவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுதம்பி நான் ஊருக்கு போறன் என்று வேலை செய்த கடைக்காரரிடம் விடை பெற்ற நாதன் சட்பளத்தை வாங்கிக் கொண்டு நகைக் கடைக்குள் நுளைந்தார். மிகுதி பணத்தை கொடுத்ததும் கடைக்காரர் ஒரு சிறிய டப்பாவை திறந்து சிமிக்கியை காட்டினான் ஜயா எப்பிடி இருக்கு நான் நினைச்சமாதிரியே இருக்கு அது சரி இவ்வளவு பெரிய சிமிக்கியை யாருக்கு குடுக்கப் போறியள். என்ரை மனிசிக்கு என்றபடி கொடுப்பிற்குள் சிரித்தவர் அதை வாங்கி சிறிய பையில் சுற்றி சட்டை பையில் பத்திரப் படுத்திக்கொண்டு வீடு நொக்கி போனவர். மகன் அவரது பொருட்கள் தயாராக எடுத்து வைத்திருந்தான் அவர்களது கார் விமான நிலையம் நோக்கி போய்க்கொண்டிருந்தது அவரோ அடிக்கடி சிமிக்கி பத்திரமாக இருக்கிறதா என தொட்டு பார்த்தபடியே இருந்தார். விமான நிலையத்தில் பேரனை கட்டியணைத்து முத்தம் இட்டு விடைபெறும்போது அவரது கண்கள் கலங்கிப்போய்விட்டிருந்தது. மருமகளிடமும் பிள்ளை ஏதும் குறையள் இருந்தால் மனசிலை வைச்சுக்ககொள்ளாதைஎன்றதும் அவளும் கலங்கித்தான் போனாள்.மகனிடம் திரும்பியவர் தம்பி பேட்டுவாறன் என்றதும் போங்கோ ஆனால் அங்கை போய் நிண்டு கொண்டு போனடிச்சு காசு காசு எண்டு உயிரை வாங்ககூடாது என்றபடி முகத்தை திருப்பிக் கொண்டான். அவரிற்கு குளைக் கம்பியால் யாரோ நெஞ்சில் செருகியது போலதொரு வலி. நெஞ்சை தடவினார் சட்டைப் பையில் சிமிக்கி தட்டுப்பட்டது.

கீத்றோ விமான நிலையம் கொழும்பு செல்லும் விமானத்தில் ஜன்னல் பக்கமாக சாவித்திரியும் அருகில் நாதனும் அமர்ந்திருந்தார்கள். சாவித்திரிதான் முதலாவதா தொடங்கினாள். நீங்கள் ஊருக்கு போவம் எண்டதும் நானும் ஏன் எதுக்கொண்டு கேக்காமல் மகளையும் பேரப் பிள்ளையையும் விட்டிட்டு பேசாமல் வந்திட்டன். எதுக்கு இதெல்லாம்??

சத்தியமா சொல்லு சாவித்திரி வன்னியிலை நாங்கள் கடைசியாஅந்த செல்லடிக்குள்ளையும் இலைக்கஞ்சி குடிக்கேக்குள்ளை இருந்த நிம்மதி சந்தோசம் இஞ்சை வந்த இரண்டு வரியத்திலை இருந்ததோ?

இல்லைத்தான் .....

சத்தியமாய சொல்லுறன் ஒவ்வொரு நாளும் சாப்பிடேக்குள்ளை எனக்கு ஏதோ கல்லையும் முள்ளையும் விழுங்கினமாதிரியெ இருந்தது ஆனால் மகனும் மருமகளும் சங்கடப் படுவினம் எண்டு எதுவும் பேசாமல் விழுங்குவன். அவரின் குரல் தளுதளுத்தது...

எனக்கு மட்டும் என்ன நீங்கள் என்னத்தை சாப்பிடுறியள் எப்பிடி சாப்பிடுறியள் எத்தினை மணிக்கு தேத்தண்ணி குடிக்கிறியள் எல்லாம் கவலைதான்.

அது மட்டுமில்லை நலைஞ்சு உடுப்பு காலையும் சப்பாத்துக்குள்ளை செருகிக் கொண்டு மிசின் மாதிரி பிள்ளையள் ஓடித்திரியிதுகள். அதுகளுக்கு எங்களையும் தனிய கவனிக்கிறது ஒரு பாரம். அதே நேரம் இந்த நடைமுறையளும் எங்களுக்கும் சரிவராது அதுதான் போறதெண்டு முடிவெடுத்தனான். அதுகள் விரும்பினால் வருசா வருசம் ஊருக்கு வந்து எங்களை பாத்திட்டு போகட்டும்.

விமானம் மேலெழும்பத் தொடங்கிவிட்டிருந்தது

நானும் அதைத்தான் யோசிச்சனான். ஆனா எதுக்கு நீங்கள் வேலைக்கு போனனீங்கள் அதாலைதானே பிரச்சனையே தொடங்கினது அதையாவது சொல்லுங்கோவன்.

சிரித்தபடி சட்டைப் பையிலிருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்து காட்டினார் மின்னிக்கொண்டிருந்த சிமிக்கிளை பார்த்து சாவித்திரியின் கண்கள் மின்னியது. ஆனாலும் இதுக்காகவா இவ்வளவு கஸ்ரப்பட்டு வேலைக்கு போனனீங்கள் மகனிட்டை கேட்டிருக்கலாம்தானே??

அப்பிடியா அப்ப நீ மட்டும் ஏன் மகள் தந்த தோட்டை வாங்கி போடேல்லை எனக்கு உன்னைப்பற்றி தெரியுமடி அதுதான் நானே வேலை செய்து அந்த சம்பளத்திலை இதை செய்தனான். என்றபடி சாவித்திரியிடம் நீட்டினார்.அவளோ காதை அவரிடம் நீட்டினாள் கண்ணாடியை கழற்றி துடைத்து மீண்டும் அணிந்து கொண்டவர் அவள் காதிலிருந்த குச்சியை மெதுவாக ஆட்டி இழுத்தெடுத்துவிட்டு சிமிக்கிகளை பூட்டிவிட்டார் அதை கவனித்த பகத்து இருக்கையில் இருந்த வெள்ளைக்காரி வலக்கை கட்டை விரலை உயர்த்திக்காட்டினாள். நாதனும் அவளிற்கு கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சாவித்திரியிடம். எங்கை அந்தப் பாட்டை ஒருக்கா பாடுமன்.

எந்தப் பாட்டை ??

அதுதான் அந்தப் பாட்டு. சாவித்திரியும் அவரது காதில் மெதுவாக நடுங்கும் குரலில் காதோடுதான் நான் பாடுவேன் காதோடுதான் நான் பேசு...................தொண்டை அடைத்தது கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். நாதனின் கை விரல்கள் அவளின் விரல்களிற்குள் புகுந்து இறுக்கிக் கொண்டது.கட்டுநாயக்காவில் தரை தட்டிய விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியபின்னரும் இருவர் மட்டும் இன்னமும் உறக்கத்திலிருந்ததை கவனித்த பணிப்பெண் அவர்களின் அருகில் சென்று உங்கள் பயணம் நிறைவடைந்து விட்டது எழுந்திருங்கள் என்று அவர்களை மெதுவாய் தட்டியவள் பயத்தில் திடுக்கிட்டு உதவி உதவி என கத்தினாள்.

யாவும் கற்பனையே

கிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2

0
0


ஒரு பேப்பரிற்காக சாத்திரி

2011 டிசம்பர் 4,5ம் திகதிகளில் தமிழ் இணையங்களில் பரபரப்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது. உதயகலா தயாபரராஜ் என்ற பெண்ணின் மோசடி, விபச்சாரம் நீலப்படமென்றெல்லாம் கதை வசனம் தயாரிக்கப்பட்டு மெகாசீரியல் நீளத்துக்கு செய்தி பரவியிருந்தது.

அதே நேரம் போரால் பாதிக்காப்பட்டு  அங்கவீனமானவர்களும்  முன்னை நாள் போராளிகளையும் வெளிநாடு அழைத்துச் செல்லதாகக்கூறி  அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு  தாய்லாந்திலும் மலேசியாவிலும் கைவிட்டு விட்டார்கள் என்கிற செய்தியும் பரவியிருந்தது .அப்படி கைவிடப்பட்டு நின்றவர்கள் சிலருடன் தொடர்புகளை  ஏற்படுத்தி   அவர்களின் வாக்கு மூலங்களை ஆதாரமாக வைத்து  இவை அனைத்தையும் பின்னால் நின்று இயக்குபவர்  மொட்டை பாஸ் என செல்லமக அழைக்கப்படும்  லண்டனில் வசிப்பவரான  ஸ்கந்த தேவாவே என்டபதை நான் ஒரு பேப்பர் மூலமாக  அம்பலப்படுத்தியிருந்தேன். அந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னராக அதனுடன் சம்பந்தப் பட்டவர்களான . ரிசி மற்றும்  ஸ்கந்தா ஆகியோடும்  தொடர்பு கெண்டு அவர்களது  கருத்துக்களையும் கேட்டிருந்தேன்.  விபரம் வெளிவந்ததுமே  ரிசி என்பவர்  அவர்  இயக்கிய  தமிழ் செய்தி இணையத்தளத்தினையும் நிறுத்திவிட்டு  தலைமறைவாகி விட்டிருந்தார். ஆனால் ஸ்கந்தாவோ  தனக்கு யாரையும் தெரியாது தனக்கும் இவற்றிற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒற்ரை வரி பதிலில் மறுத்திருந்ததோடு  ரிசி என்பவர்தான் (I.S.O.T.O.)  என்கிற தொரு அமைப்பின் ஊடாக  போரால் பாதிக்கப் பட்ட மாணவர்களிற்கு உதவுவதாக  தன்னிடம் பெரும் தொகை பணத்தினை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும்   எனக்கு மின்னஞ்சல் முலம்  பதில் தந்திருந்தார்.

அங்கவீனமடைந்த முன்னை நாள் போராளிகளை  ஏமாற்றிய விடயத்தில் சம்பந்தப் பட்டதாக  கூறப்பட்ட  உதயகலா மற்றும் தயாபர ராஜ் ஆகியோரோடு அப்பொழுது என்னால் உடனடியாக தொடர்புகளை  ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை.அதன் பின்னர்  சிலகாலங்களிற்கு பின்னர்  உதயகலா மற்றும்  தயாபராஜ் ஆகிரோடு  தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்பம் எனக்கு கிடைத்த பொழுது  செய்திகளில் வெளியானபோல் தங்களிற்கும் நடந்த மோசடிகளிற்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை அனைத்திற்கும்  ஸ்கந்தாவே பொறுப்பு என  அதற்குரிய ஆதாரங்களுடன்  தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னரும் ஸ்கந்தா அவர்களிற்கு உதயகலா எழுதியிருந்த கடிதத்தினையும் இணைத்து  அவரது பக்க கருத்துக்களை கேட்டிருந்தேன். ஆனால் அவர் நேரடியாக எவ்வித பதிலையும் தராமல் இலங்கையில் வாழும் ராதிகா என்பரிற்கு  அவற்றை அனுப்பி ராதிகா மூலமாக சம்பந்தமேயில்லாத பதில் ஒன்றினை  அனுப்பியிருந்தார்.  அவற்றை பின்னர்  பார்க்கலாம்.இனி நடந்து முடிந்த மோசடி  பற்றியும் அதில் ஸ்கந்தாவின் பங்கு  என்ன என்பதனையும் பார்ப்போம்.

ஸ்கந்ததேவாவே , ரிஷி என்ற ரிசாந்தன் அல்லது ரிஷி ஆகிய இருவரும்  gatherpage என்கிற அமைப்பினை தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து நடாத்தி வந்தனர். இந்த  gatherpage இல் 20 வரையிலான இளம் பெண்களை வைத்து பல்கலைக்கழகமாணவர்கள், கல்விகற்கும் மாணவர்களுக்கு உதவுவதாகக் கூறி நடாத்தி வந்தனர். சமநேரத்தில்  I S O T O என்ற அமைப்பினை ஸ்கந்ததேவாவின் மகளின் பெயரிலும், ரிஷியின் பெயரிலும் பிரித்தானியாவில் பதிவு செய்து நடாத்தத் தொடங்கினார்கள்.

இதேநேரம் நம்பிக்கையொளி என்றொரு அமைப்பினை லண்டனில் ஸ்தந்ததேவாவின் மனைவி கமலாவின் பெயரில் (வியாபார நிறுவனம் என்ற பதிவோடு) பதிந்து கொண்டார். நம்பிக்கையொளி மூலம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியென்ற பெயரில் ஊடகங்கள் மூலமும், மக்களிடமும் பண வசூலிப்பு ஸ்கந்ததேவாவும் அவரது குழுவினரும் செய்து வந்தனர். இதில் சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போக மீதப்பெரும்பகுதிக்கு கணக்கில்லாது போனது.

இச்செயற்பாட்டின் மூலம் நிகழ்ந்த ஊழல்கள் மக்கள் மத்தியில் தெரியவர இவ்வருடம் பெப்ரவரிமாதம் வாழைக்குட்டி கொடுத்து தாயக மக்களை வாழ வைக்கிறோம் என்ற பெயரில் நம்பிக்கையொளியை தொண்டு நிறுவனமாக பதிவு செய்து மீண்டும் மக்களை ஏமாற்றிப் பண வசூல் பண்ண புறப்பட்டுவிட்டது ஸ்கந்ததேவா கூட்டணி. ஏமாறுபவர்கள் உள்ளவரை ஸ்கந்தா போன்றவர்களும் இருந்து கொண்டேயிருப்பார்கள். அது போகட்டும். உதயகலாமீது எப்படி கள்ளப்பட்டம் விபச்சாரப்பட்டம் சூட்டப்பட்டது என்பதனைப் பார்ப்போம்.

உதயகலா துடிப்பும் துணிச்சலும் மிக்க  ஒரு பெண். இந்தப்பெண்ணை ஸ்கந்தா கூட்டணியின் முகவர்கள் அணுகுகிறார்கள். சமூக முன்னேற்றம் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தமது நிறுவனங்கள் மூலம் செய்து வருவதாகவும் தமது நிறுவனம் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

தமது நிறுவனத்தில் பணியாளாக உதயகலாவை இணையுமாறும் மாதாந்தம் சம்பளம் தருவோம், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஊர்கள் தோறும் சென்று எடுத்துத் தருமாறும் வேண்டுகிறார்கள். தரப்படுகிற விபரங்களுக்கு, உரியவர்களுக்கு நம்பிக்கையொளி, i s o t o  இரண்டும் உதவிகளைத் தருமென்றும் கேட்டுள்ளனர். மக்களுக்கான உதவிகள் மூலம் தனக்கும் ஒரு வேலை வாய்ப்புக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் உதயகலா ஸ்கந்தாவின் பணிப்பில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். இவர்கள் சொல்கிற இடங்களுக்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை உதயகலாவும் சேகரித்து அனுப்பத் தொடங்கினார்.

இத்தோடு நின்றுவிடாமல் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியாகச் செய்வதாகவும் ஸ்கந்தா கூறியுள்ளார். வெளிநாடு போக விரும்புகிற போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் 2 முதல் 3 லட்சம் வரையான பணத்தையும் சேகரிக்குமாறும் பணித்தார். உதயகலா சுவிசிலிருந்து வந்திருப்பதாக மக்களிடம் அறிமுகமாகும்படியும் பணித்தார்கள் ஸ்கந்தாவும் அவர் பின் நின்ற கும்பலும்.


ஸ்கந்தா மீதிருந்த நம்பிக்கையில் உதயகலாவும் செயற்படத் தொடங்கினார். அத்தோடு வெளிநாடுகளிலிருந்து பலரை உதயகலாவுடன் ஸ்கந்தா தொலைபேசத் தொடர்புபடுத்திவிட்டார். தமது பணி மக்களுக்கானது அதில் உதயகலாவின் பங்கு தங்களுக்கு வேண்டும் என்பதனையும் வெளிநாட்டு முகவர்கள் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து மக்களுக்காக இயங்குவோரென பலர் ஸ்கந்தாவின் ஏற்பாட்டில் உதயகலாவுடன் பேசியிருக்கிறார்கள். இப்போது முழுமையான நம்பிக்கை ஸ்கந்தா கூட்டணிமீது உதயகலாவுக்கு வந்துவிட்டது.

ஸ்கந்தாவினதும் அவரது கூட்டணியினரின் சொற்படி பல ஊனமுற்றவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் சேகரித்து அவர்கள் சொன்னபடி கொழும்பில் இட ஒழுங்குகள் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஒழுங்குகளையும் ஸ்கந்தாவின் ஆலோசனைப்படி உதயகலா பொறுப்பேற்றுச் செய்து கொண்டிருந்தார். வடக்கு கிழக்கு இரு பகுதியிலும் ஸ்கந்தா வழங்கிய தரவுகளோடு உதயகலா சென்று வெளிநாட்டுக்கு ஆட்கள் சேர்த்ததோடு ஸ்கந்தாவின் பெயரால் வழங்கப்பட்ட WheelChair, பண உதவிகளும் பல ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. றால் போட்டு சுறாபிடித்த ஸ்கந்தாவின் சூழ்;ச்சியை நம்பிய உதயகலாவும் ஸ்கந்தாவின் சொற்படி இயங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வேளையில் பயவாநசியபந என்கிற அமைப்பில் ரிஷியாலும் ஸ்கந்தாவாலும் இயக்கப்பட்ட அலுவலகத்திலும் அது சார்ந்த இடங்களிலும் பெண்கள் துஸ்பிரயோகம் ஏமாற்று வேலைகள் , ஆட்களைக் கொல்வதற்கான திட்டமிடல்கள் போன்ற வேலைகள் நடைபெறுவதனை பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் மூலம் உதயகலா அறிந்து கொள்கிறார்.  gatherpage  அலுவலகத்தில் நடைபெறுகிற ஊழல்கள் ஸ்கந்தாவுக்கு தெரியாமல் நடப்பதாக நினைத்த உதயகலா இவ்விடயம் பற்றி ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினார்.

ஆயினும் ஸ்கந்தாவால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த உதயகலா gatherpage இல் நடக்கிற துஸ்பிரயோகங்கள் நிறுத்தப்படாவிட்டால் அதுபற்றி இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப் போவதாக ஸ்கந்தாவுக்கு தொலைபேசியில் மிரட்டினார். அத்தோடுgatherpage  இற்கு நேரே சென்று அங்கு பணியாற்றிய கஸ்தூரி , ராதிகா போன்ற பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

கஸ்தூரி , ராதிகா இருவரும் உதயகலாவுடன் முரண்பட்டு ஸ்கந்தாவுக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. விடயம் இப்பெண்களுக்கு இடையில் கைகலப்பு வரை சென்றுவிட உதயகலா பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்போவதாக தொலைபேசியை எடுக்க கஸ்தூரி திடீரென gatherpage அலுவலகத்தில் இருந்த எழுத்துப்பிரதி ஆவணங்கள் யாவற்றையும் தீயிட்டெரித்தார். விடயங்கள் உடனுக்குடன் ஸ்கந்தா கூட்டணிக்கு கஸ்தூரி , ராதிகா மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

விடயத்தைச சமாளிக்க ஸ்கந்தா உதயகலாவுடன் சமாதானம் பேச முயன்றார். உதயகலா விடாப்பிடியாக இந்த மோசடியை இணையங்களுக்கும் அச்சு ஊடகங்களுக்கும் அறிவிக்கப் போவதாகக் கூறினார். விடயத்தின் நிலமையைப் புரிந்து கொண்ட ஸ்கந்தா உதயகலாவை அமைதியாகச் சிலநாள் இருக்கும்படியும் தவறுகளை விசாரித்து முடிவுக்கு வருவோம் எனவும் வேண்டிக் கொண்டார். ஆனால் தொடர்ந்து இந்த மோசடிக்காரர்களுடன் தான் இயங்கமாட்டேன் எனக்கூறிய உதயகலா நம்பிக்கையொளியுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறினார்.

gatherpage இல் நடைபெறுகிற மோசடி வெளியில் உதயகலா மூலம் வெளிவராது இருக்க ஸ்கந்தா தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் மூலம் அவசர அவசரமாக உதயகலா தயாபரராஜ் மோசடி, விபச்சாரம் என செய்தியைப் பரப்பி மின்னஞ்சல் மூலமும் பரப்புரையை மேற்கொண்டார். வெறுமனே ஸ்கந்தாவின் மோசடியை வெளியில் சொல்லுவேன் என்ற உதயகலா மீது முழுப்பழியும் விழுந்துவிட ஸ்கந்தா கருணாநிதி கணக்கில் ஒரு புனைவையும் அவிழ்த்துவிட்டார். அதுதான் 28ஆயிரம் பிரித்தானியப் பவுண்ஸ்களையும் ரிஷியிடம் கொடுத்து ஏமாந்ததான கதை. உதயகலாவுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிராத ரிஷியை உதயகலாவுடன் தொடர்புபடுத்தி செய்தியை ஆளாளுக்கு ஊடகங்கள் கதையெழுதி வெளியிட்டிருந்தன.

ஸ்கந்தாவை நம்பி வெளிநாட்டுக்கு போகும் கனவோடு கொழும்பில் தங்கியிருந்தவர்களுக்கு விடயத்தைச் சொல்வதெப்படியெனத் தவித்த உதயகலா வெளிநாடு அனுப்பும் முகவர் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னதோடு பணத்தைக் கொடுத்தவர்கள் உதயகலாவையே சுற்றத் தொடங்கினார்கள். பெருந்தொகை பணத்தை உதயகலா முன்னின்று பெற்றுக் கொடுத்தமையால் அதற்கான பதிலையும் உதயகலாவே சொல்ல வேண்டியிருந்தது.

இந்தப்பணப்பிரச்சனை வந்ததும் ஸ்கந்தாவையும் ஸ்கந்தாவின் முகவரான மட்டக்களப்பின் முகவருக்கும் தொலைபேசியெடுத்து தான் பொறுப்பு நின்று பெற்றுத் தந்த பணத்தை உரியவர்களுக்குத் திருப்பிக் கொடுக்குமாறு வேண்டினார். ஸ்கந்தா எதற்கும் தான் பொறுப்பில்லையெனத் தப்பிக்க பல பொய்களைச் சொன்னார். இறுதியில் உதயகலா மோசடி விபச்சாரம் என்ற செய்தியை தான் இணையங்களுக்கு கொடுக்கவில்லையென்று சத்தியம் செய்தார். gatherpage இல் பணியாற்றிய பெண்பிள்ளைகளில் சிலரது பெயரைச் சொல்லி அவர்களே செய்தியை வெளியில் போட்டதாகவும் சொன்னார்.

செய்தி வந்த அவமானத்தால் தயாபரராஜ்ஜின் குடும்பம் அவரை வெறுத்து ஒதுக்கிவிட்டது. அத்தோடு சகோதரனுடன் இருந்த உதயகலாவின் தாயாரை உதயகலாவின் சகோதரன் வீட்டில் இருந்து வெளியேறச் சொல்லிவிட்டார். அந்தத்தாய் இன்று வரையும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே ஆதரவற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாபரராஜ் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். இதேபோன்ற நிலமையில் உதயகலாவும் மன அழுத்த நோய்க்கு ஆளாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவமானத்துடன் வாழ முடியாத துயரத்தில் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் முடிவில் உதயகலா தயாபரராஜ் இருந்த நேரம் கடவுள் காட்டிய வழிபோல அவர்கள் பட்ட துன்பங்கள் யாவும் வெளியுலகிற்கு கொண்டுவரும் வகையிலான சந்தர்ப்பம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது.





தொடரும்.....
அடுத்த தொடரும் அங்கங்களில்.....
1) தயாபரராஜ் உதயகலா மோசடியானவர்களா புலிகள் தண்டித்தார்களா ?
2) உதயகலாவுடன் ரிஷி தொடர்புபடுத்தப்பட்டது எப்படி ?
3) தயாபரராஜ் எப்படிக் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது ?
4) ஸ்கந்தா தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பதாக கூறும் குழலி (றஜிதன் ஜோதி) யார் ?
5) குழலியின் அண்ணனின் மகனான ஜோய்க்கும் ரிசிக்கும் என்ன சம்மந்தம் ? ஜோயிடம் ரிஷியின் முகவரான நிதர்சன் என்பவர் பெற்ற பணத்துக்கு என்ன நடந்தது ?
6) இந்த நாடகத்தில் ஸ்கந்தா தயார்படுத்தியயவர்கள்  யார் ?
 பிற்குறிப்பு :-
தொடர்ந்த மர்மங்களுக்கான பதில் இனிமேல் தொடரும்......மேற்படி மோசடிகள் தொடர்பான சகல புகைப்பட ஆதாரங்கள் ஒலிப்பதிவுகள் யாவும் எஎன்னிடம் உள்ளது. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடக் காத்திருக்கிறோம்.
Photobucket


Photobucket

கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3

0
0
கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3
இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி

வாசகர்களே  இந்தப் பாகத்தில்  மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர்.  தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட  மக்களிற்கு உதவுதாக  கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற  அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம்  தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு  போராளிகள்  காயமடைந்தும்  அங்கவீனர்களாகவும்  இலங்கையரசிடம் சரணடைந்ததன்  பின்னர்.  அவர்களிற்கு ஏதாவது  உதவவேண்டும்  என்கின்ற  நோக்குடன்  கனடாவில் இருக்கும்  ஒரு புலிகள் அமைப்பின்  முன்னைநாள்   போராளியால்  வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள்  புலிகள் அமைப்பு போராளிகள்   பலரையும் இணைத்து உருவாக்கபட்டதுதான்  இந்த நம்பிக்யொளி அமைப்பு.இது பின்னர்  பிரான்ஸ். பிரித்தானியா டென்மார்க்  என்று ஜரோப்பா மற்றும்  ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும் விரிவாக்கப்பட்டு அந்தந்த  நாடுகளில்   ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டு  அதற்கென ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப் பட்டதோடு அந்தந்த நாடுகளில் அந்த அமைப்பை பதிந்து இயங்கவும். அதே நேரம்  முன்னை நாள் போராளிகள் அல்லது புலிகள் என்கிற  எவ்வித  அடையாளங்களுமின்றி பாதிக்கப்பட்ட போராளிகளிற்கு உதவுவதுதான் இதன் நோக்கம்.  அன்றைய காலத்தில்  நேசக்கரம் என்னும் அமைப்புடன் இணைந்து  நானும் தாயகத்து மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த காலகட்டம்.(தற்சமயம் அந்த அமைப்பில் இல்லை)

நம்பிக்கையொளி அமைப்பினை உருவாக்குவதற்காகவும் அதன் சட்ட வரைபுகளிற்காகவும் எனது உதவியினையும்  அந்த கனடிய நண்பர் நாடியிருந்தார். அதனடிப்படையில்  நம்பிக்கையொளியின்  உருவாக்கத்திற்கும் மற்றும்.உதவி கோருபவர்களின்  விபரங்களை பரிமாறுதல் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் ஒருவரிற்கே மீண்டும் கிடைக்கமல் அவற்றை சரிபார்த்தல் என  பல வழிகளிலும் நம்பிக்கையொளி அமைப்பிற்கு உதவிகளும் செய்திருந்தேன். இப்படியான காலகட்டத்தில் தான்  இலண்டனில் நம்பிக்கையொளி அமைப்பினை  தான் பதிந்து  தருவதாக ஸ்கந்தா  முன்வந்திருந்தார். இவர் ஏற்கனவே புலிகள் அமைப்பு ஆதரவாளர் என்பதோடு  பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினராக இருந்ததாலும்  நன்கு அறியப்பட்டிருந்தார். எனவேதான் பதிவு பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது.  இதே நேரத்திலேயே  ஸ்கந்தா ரிசியையும் பலரிற்கு அறிமுகப்படுத்தி  ரிசியின்  பொறுப்பில் I T S O  ம் உருவாக்குகின்றார்.இதன்பின்னர்  தாயகத்திலிருந்து  முன்னை நாள் போராகளாகவிருந்து  சரணடைந்தவர்கள் மற்றும் சரணடைந்து  விடுதலை பெற்றவர்களை வைத்து   நம்பிக்கையொளி நிறுவனம்  பாதிக்கபட்டவர்களின் தகவல்களை சேகரிக்கதொடங்கியது.  அப்படி சேகரித்த தகவல்களை  வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்று  உதவிகளை பெற்று  வழங்கிவந்தனர்

.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே நடந்தது.  ஆனால் நாள் செல்லச் செல்ல  நம்பிக்கையொளி அமைப்பின் இலண்டன் கிளை  மற்றைய நாட்டு  உறுப்பினர்களுடன்  தொடர்புகளை ஏற்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும். தன்னிச்சையாக செயற்பட ஆரம்பிக்கத் தொடங்குகின்றனர்.  பாதிக்கப்பட்ட  காயமடைந்த போராளிகளின் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை  போட்டுக்hட்டி மக்களிடமும் வர்த்தகர்களிடமும்  சேகரித் பெரும் தொகை  பணத்தின் விடயங்களையோ தாயகத்திற்கு அனுப்பிய  தொகை என்பனவற்றை  அந்த அமைப்பை தொடங்கி  இயக்கிவந்த கனடிய உறுப்பினரிற்கோ மற்றைய நாட்டு உறுப்பினர்களிற்கோ  தெரிவிக்காமலும்  தகவல்களை பரிமாறாமலும் நடக்க தொடங்கிவிட்டிருந்தனர். சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியில் சிறிய தொகை மட்டுமே  பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டு  அவர்களிடமிருந்து  கடிதங்களும்  படங்களும் எடுக்கப்பட்டு  சில தமிழ் இணைய ஊடகங்களில் விளம்பரப் படுத்தியிருந்தனர்.  இப்படி நம்பிக்கையொளி இலண்டன் பிரிவு ஸ்கந்தாவின் கைகளில்  முழுதுமாய்  வீழ்ந்த பின்னர் இவரால் தனது நம்பிக்கை பாத்திரமானவன் என நினைத்து  ரிசியை  முதன்மைப் படுத்தி  உருவாக்கப்பட்ட  I.T.S.O  கிழக்கு  மகாணத்தில் கடந்த வருடம் 2011 ம் ஆண்டு தைமாதமளவில்  ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு  காரணமாகவும்  பெருமளவு நிதியிளை நம்பிக்கையொளி அமைப்பும்  I.T.S.O வம் சேர்த்தனர். இதற்காக பல தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்  உதவியிருந்தார்கள்.   இதில்  நம்பிக்கையொளி அமைப்பை விட   ரிசியிடமே எம்மவர்கள் பெரும்தொகை பணத்தினை  வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிற்காக கொடுத்திருந்தனர். காரணம் ரிசி தான் ஒரு பல்கலை கழக மாணவர் என்றும்  இலண்டனிலும் தனது பல்கலைகழக படிப்பை தொடர்வதாகவுமே கதைவிட்டு திரிந்தவர். எனவேதான்  படித்தவன் அதுவும் பல்கலைகழக மாணவன் என்றாலே  எம்மவர்களிற்கு ஒரு ஈர்ப்பு பல்கலைகழக மாணவன் ஏமாற்றமாட்டான் என்கிற  ஒரு  மாயை. ஆனால் அப்படி சேர்த்த பணம் அத்தனையையும்  ரிசி தனது  இலங்கை வங்கி  கணக்கிற்கு அனுப்பிவிட்டிருந்தார்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான தமிழர் நலவாழ்வு நிறுவனம்( tamil health orginitation) I T S O இன் இலங்கையிலுள்ள அதன் வங்கிழ கணக்கிற்கு  (  commercial dilakanda  srilanka)ஒரு இலட்சம்  ரூபாயை வழங்கியுள்ளதாக  அதன் இணைத்தளத்தில் கணக்கு காட்டியுள்ளது   இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு  எப்படி நிறுவனத்தின் பெயரில் வங்கி  கணக்கு திறக்கப்பட்டது  அந்த கணக்கில்  பணம் எப்படி போடப்பட்டது என்பதனை  தமிழர் நலவாழ்வு  நிறுவனம்தான்  விளக்கவேண்டும்.இந்த விடயத்தை அறிந்த ஸ்கந்தா   தனக்கு பங்குதராமல் மொத்தமாய் ஆட்டையை போட்ட ரிசி மீது கடுப்பாகிறார். இங்கு இவர்கள் மோதல் தொடங்குகின்றது.இங்கு ஒருவர் மொல்லைமாரி என்றால் மற்றவர் முடிச்சவிக்கி எனவே  இருவரும் உதவி நிறுவனத்தின் கணக்கு விபரங்களை பகிரங்கமாக கேட்க முடியாத  நிலை எனவே யாரை எங்கே காலை வாரலாமென தருணம் காத்திருக்கின்றனர். ரிசி தொழிலுக்கு  புதிது என்பதால் ஸகந்தா தனது அனுபவத்தையும் தொடர்புகளையும் பாவித்து  ரிசியை ஓரம் கட்டதொடங்கியதோடு அவர் தொடர்ந்தும்  தொழிலில்  நீடித்து  பணம் சுருட்டவிடாமல்   அவரை  தமிழின துரோகியாக்கி தமிழ் ஊடகங்கள் ஊடாக செய்தியை கசிய விடுகிறார்.

அப்பொழுதுதான்  ஏற்கனவே ஸ்கந்தாவுடன்  பிரச்சனை பட்டுக்கொண்டிருந்த உதயகலாவின் பெயரும் இலவச இணைப்பாக்கப்பட்டு  செய்திகள் வெளியாகின்றது.  ஆனால் செய்திகள் வெளியானதுமே  இவை அனைத்திற்கும் பின்னணி  ஸ்கந்தாவே என்பதனை அறிந்து முதன் முதலாக ஒரு பேப்பர்  கிணறு தோண்டக் கிழம்பிய பூதம் முதலாவது பாகத்தில்  அம்பலப்படுத்தியிருந்தது.. அதே நேரம் கடந்த ஒரு பேப்பரிற்கு  பாகம் இரண்டினை எழுதி முடித்துவிட்டு  ஸ்கந்தா தரப்பு நியாயங்களை  தெரியப்படுத்துமாறு  ஸ்கந்தா அவர்களிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு நேரடியான பதில் எதனையும் தராது அந்த மின்னஞ்சலை தற்சமயம்  யாழ்ப்பாணத்தில்  வசிக்கும் ராதிகா என்பவரிற்கு அனுப்பி ராதிகா என்பவரிடமிருந்து  எனக்கு ஒரு மின்னஞ்சலும்  மேற்படி  கட்டுரை சம்பந்தமாக  சில விபரங்கள் தரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி   ஒரு தோ.பே  இலக்கத்தையும் இணைத்திருந்தார்.  அவருடன் நான்  தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தியபொழுதுதன்பெயர் ராதிகா என்றும் தானும்   அலுவலகத்தில் வேலை செய்தவர் என்றும் ஸ்கந்தா என்பவர் எந்த தவறும் செய்யவில்லையென்றும்  உதயகலாவே  பலரிடம்  பணமோசடி செய்தார்  அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்  நூறு பேரின் பெயர் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள்ஆதாரமாக  இருப்பதாக  கூறியதும். அவற்றை  என்னிடம் அனுப்பி வைக்கும்படியும்  நானே அவர்களுடன் நேரடியாக  கதைத்து  இருதரப்பு நியாயங்களையும் ஒரு பேப்பர் மூலமாக வெளிக்கொண்டு வருவேன் என சொல்லியிருந்தேன்.

அதற்கு அவரோ நூறு பேரின் பெர் விபரங்களும் உடனடியாக தரமுடியாது முதலாவதாக பத்துப்பேரின் விபரங்களை  அனுப்புவதாகவும்  இதில் செய்திகளில் தனது பெயர்  வெளிவரக்கூடாது  என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார்.  அவர் தரும்  ஆதாரங்கள்  உண்மையாக இருப்பின்  அவரது பெயர் வெளியிடமாட்டேன் என கூறியிருந்தேன்.பின்னர் அவர் 17 பேருடைய பெயர்களையும்  தொ.பே இலக்கங்களையும்  இன்னொரு  மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருந்தார். அது யாருடைய மின்னஞ்சல்  முகவரி என்பதனை பின்னர் பாக்கலாம்.  எனக்கு கிடைத்த 17 இலக்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த  முனைந்தேன். பல இலக்கங்கள் வேலை செய்யவில்லை . அதில் இரண்டு இலங்கங்கள்  ஒருவருடையது.  அவர் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைத்தது அவரது தகவல்களின்படி  ராதிகா  மற்றும் அவரது காதலன் நியூ சீலன் ஆகியோரின்  உதவியுடன் வவுனியாவை சேர்ந்த  ஜேர்ச் மற்றும் கிரிஜா என்பவர்களது கணக்குகளிலும்  நியூ சீலனின் கணக்கிலும் தாங்கள் பணத்தை வைப்பிலிட்டதாக கூறினார். நியூ சீலனின் கணக்கில்  பணம் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தினையும் இங்கு இணைக்கிறேன்.

Posted Image

ராதிகா என்பவர் அனுப்பிய  விபரங்களில்  ஒரேபெயர் இரண்டு தடைவை குறிப்பிட பட்டிருந்ததும் பல இலக்கங்கள்  வேலை  செய்யாததனாலும் மீண்டும் அவருடன்  தொடர்பினை ஏற்படுத்தி விபரம் கேட்டபொழுது அந்த  விபரங்களை தானும் குழலி என்பவருமே சேர்ந்து தயாரித்ததாகவும் அதே நேரம் தங்கள்  வேலைபழு காரணமாக  தவறுகள் நடந்து விட்டதாக சப்பை கட்டு கட்டினார்.
இனி உதயகலாவிற்கும் ரிசிக்கும் என்ன தொடர்பு என்பதனை பார்க்க முன்னர்  செல்வி சபாரத்தினம் கஸ்தூரி என்பவரை   அடுத்த  தொடரில் உங்களிற்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
தொடரும் ...................

கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

0
0
கிணறு தோண்ட கிழம்பிய பூதம் இறுதிப்பாகம்.

ஒரு பேப்பர் சாத்திரி

இதுவரை  நான்கு தொடர்களில் ஸ்கந்தா  மற்றும் ரிசி  என்பவர்களது கூட்டணி எப்படி  புலம்பெயர் மக்களையும் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களையும்   திட்டமிட்டு எப்படி மோசடி செய்து பணம் சுருட்டினார்கள் என்பதோடு பின்னர் அவர்கள் இருவருக்குமிடையில் யாரையார் ஏமாற்றுவது என்று ஏற்பட்ட போட்டியில்   ஸகந்தாவே வெற்றி பெற்றார் என்பதனையும்  பார்திருந்தோம்.   இன்றைய நிலையில் ரிசி  இங்கிலாந்தில் தலைமறையு வாழ்க்கை  வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.  ஆனால் ஸ்கந்தா  இன்னமும் பந்தாவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.  இவர்கள் இருவராலும்   தாயகத்தில்  இவர்களது மோசடிகளிற்கு  பாவிக்கப்பட்டவர்களும் இவர்களால் கைவிடப்பட்டு நிற்கின்றார்கள்.   அவர்களை விடுவோம் ஏனெனில் அவர்களும் இவர்களது ஆசை வார்த்தைகளிற்கு மயங்கி  இவர்களின் மோசடிக்கு துணை போனவர்கள்தான்  ஆனால் இவர்களால் பாதிக்கபட்டவர்கள்  யுதத்தில் மோசமாக பாதிக்கபட்டும்  உடல் அவயவங்களை  இழந்த மக்களும்  முன்னை நாள் போராளிகளுமே. அவர்கள்  இனி அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்  அல்லது செய்ய முடியும் என்று எதுவுமே தெரியாமல் விதி விட்ட வழி என்று  வாழ்நாளை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  அதே நேரம்  இந்த  மோசடிக்கு  முக்கியமாக பயன்படுத்தப் பட்ட உதயகலா மற்றும் கஸ்தூரி ஆகியோர் தங்கள் கைப்பட எனக்கு எழுதியிருந்த  கடிதத்தின்  விபரங்களை சுருக்கமாக இங்கு தந்து இத்தொடரை முடிவிற்கு கொண்டுவருகிறேன்.. முதலில் உதயகலா எழுதிய கடிதத்தின் சுருக்கம்..



வன்னியில்  நடந்த இறுதி யுத்தத்தின் போது  சரணடைந்து   முகாமிலிருந் விடுதலையாகி வெளியே வந்து   குடும்பத்துடன்  இணைந்த பின்னர்  ஒரு தொழில் நிறுவனத்தில்  இணைந்து  பணியாற்றிக் கொண்டிருந்த வேளை  போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு  உதவுவதாக  சொல்லிக் கொண்டு  ஸ்கந்தா மற்றும்  ரிசி  ஆகியோர்  தனது  முகவர்கள்  மூலம் தன்னை தொடர்பு கொண்டு  பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை  சேகரித்து தருமாறும்  பின்னர் தங்கள் உதவியினை  பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கி  உதவி வழங்கப்பட்டதற்கான  ஆதாரங்களை  தங்களிற்கு அனுப்பி வைக்குமாறும்.  இதனை சேவையாக செய்தாதலும்  அதற்கான  ஒரு கூலி வழங்கப்படும் என்பற்கிணங்க  அவர்களின் முகவரான  கஸ்தூரி முலம்  கோரிக்கை  விடுத்திருந்தனர். அதற்கிணங்கவே  பாதிக்கப்பட்டவர்களின்  விபரங்களை  நான் சேகரித்து  இலண்டனிற்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். 


ஆனால் நான் அனுப்பிய விபரங்களில்  உள்ளவர்களில்  உள்வர்கற்கான  உதவிகள்  கிடைத்தாலும்  அவர்களிற்கு கிடைத்த உதவியினை விட  இரண்டு மடங்கு எதவிகள் கிடைத்ததாக  உதாரணத்திற்கு   அவர்களிற்கு  5000 ரூபாய் கொடுத்திருந்தால் 10000 ரூபாய்  கொடுத்ததாக  ஆதாரகடிதங்களை பெற்று  அனுப்புமாறு  நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன் அது மட்டுமல்லாது  ஸ்கந்தா மற்றும் ரிசி ஆகியோரின் கோரிக்கைக்கு  இணங்கவே  பாதிக்கப்பட்டவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்காக   பலரை தெரிவு செய்து  அவர்களிடம் ப ஒரு தொகை பணத்தினை பெற்று  ஸ்கந்தாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர்களை சில ஆசிய நாடுகளிற்கு அனுப்பியும் வைத்திருந்தேன்  அதன் பின்னர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்வேண்டியது  ஸகந்தாவின் கடைமை பயணிகளிடம் பெற்ற பணத்தினையும்  ஸகந்தாவின் முகவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பு செய்து வி்டேன்.  ஆனால் ஸ்கந்தா ரிசி   ஆகியோர் கூட்டாக  ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பதனை அறிச்ததும் யாழில் இயங்கி அலுவலகத்தினை மூடிவிட்டு  அவரின் முகர்களுடனான  கஸ்தூரி மற்றுஓம் ராதிகா ஆகியோரோடு  நான் பிரச்சனைப்பட்டதும் என்னை  துரோகியாக்கி ஏமாற்றுக்காரியாக்கி இணையங்களில் செய்தியினை வெளியிட்டுவிட்டனர்..   என்று இப்படியாக     உதயகலா   இரண்டு பக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்.....
அடுத்ததாக கஸ்தூரி எழுதியவை......


 முள்ளியவளை கிரமத்திற்கு வந்திருந்த  உதயகலா அங்கு பாதிக்கப் பட்ட மக்களை அணுகி தான் சுவிசில் இருந்து ந்திரப்பதாகவும் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவு  தன்னை  பாதிக்கப்பட்டவர்களிற்காக உதவும்படி அனுப்பியதாக கூறிக்கொண்டு  பிள்ளைகள்  கற்பதற்கான புத்தகங்கள்   சிடிக்கள்  எனபன விற்பனை செய்தார். பின்னர்  பாதிக்கப் பட்டவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ஒரு குடும்பத்திற்கு  3 இலட்சம் வீதம் வாங்கி கொண்டவர் அவர்களை  கொழும்பிற்கு அழைத்துச்சென்று  நீர்கொழும்புப் பகுதியில் தங்க வைத்திருந்தார் சிலரை வெளிநாடுகளிற்கும் அனுப்பி வைத்திருந்தார்.  நீர் கொழும்பில் தங்கியிருந்தவர்கள் தங்களை வெளிநாட்டிற்கு  ஏன் இன்னமும் அழைத்து செல்லவில்லையென்று பிரச்சனை கொடுத்தபோது  அவர்களை  உல்லாச விடுதிகளிற்கு அழைத்து சென்று அவர்களிற்கு மது வாங்கி கொடுத்து தானும் அவர்களோடு மது அருந்தி உல்லாசமாக இருந்து அவர்களை  ஏமாற்றினார். அதுமட்டுமல்லாது  முகாம்களில்  அடைபட்டு கிடந்தவர்களையும் வெளியே எடுத்து விடுவதாக கூறி பலரிடம் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார். பணத்தினை கொடுத்தவர்கள் உறவினர்களும் வெளியே வராததால் உதயகலாவிடம் போய் விபரம் கேட்டபொழுது உங்களை  புலி என்று சொல்லி 4ம் மாடிக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாது  அதில் சிலரை நீர் கொழும்பில் உள்ள விடு ஒன்றிவைத்து அடித்து தன்புறுத்தியும் இருக்கிறார். இதனால் பலர் மனநோயாளியாகியுள்ளனர்.  அது மட்டுமல்லாது பல கடை முதலாளிகளையும் சில சிங்களவர்மூலமாக  உளவு பிரிவினர் என்று சொல்லி மிரட்டி பணம் வாங்கியுள்ளார். இவரிற்கும்  ரிசிக்குமே தொடர்புகள் உள்ளது தமக்கும் ஸ்கந்தாவிற்கும்  எவ்வித தொடர்புகளும் இல்லையென்று  ஒரு கொலிவூட்படம் தயாரிக்கக் கூடிய ரேஞ்சிற்கு கஸ்தூரியின் கடிதம் 4 பக்கத்தில்  கிடைத்திருந்தது.


இங்கு கடிதம் எழுதிய உதயகலா  தான் பணத்தினை ஸ்கந்தா குழுவினரிற்கு பணம் வங்கிகளில் இட்டதற்கான  பல ஆதாரங்களை இணைத்திருந்தார். அதுமட்டு மல்லாது அவர் ஸ்கந்தா ரிசி ஆகியோருடன் இணைந்து வேலை செய்ததற்கான ஆதாரங்களும் அனுப்பியிருந்தார்.்்ஆனால் கஸ்தூரி உதயகலா பற்றிய குற்றச் சாட்டுகளிற்கு எவ்விதமான  ஆதரங்களும்  தரவில்லையென்பதுடன்.தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்யென்று எழுதியிருக்கிந்தார்.  தமக்கும் உதயகலாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல்  உதயகலா செய்த மோசடிகள் மட்டும் எப்படி அவரிற்கு தெரிந்திருக்கின்றது  என்பது  கேள்விக்குறி????உதயகலாவால் ஏமாற்றப் பட்டவர்களின் விபரங்களை அனுப்புவதாக கூறியவர்  பின்னர் எதனையும் அனுப்பவில்லையென்பதுடன். அவரின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது  இந்தத் தொடர் ஒரு பேப்பரில் வெளிவந்த நாள் முதல்  ஸ்கந்தா மற்றும்  ரிசி போன்றவர்கள் தங்கள் பக்க விளக்கங்களையும்  எம்முடன் தொடர்பு கொண்டு தாராளமாக தந்தால் அதனையும் நாங்கள் பிரசுரிப்போம் என  அவர்களிற்கு தனியாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தோம்.  ஆனால் ஸ்கந்தா அவர்கள்  எம்மை மறைமுகமாக மிரட்டும் பாணியில் பலருடன் தொடர்பு கொண்டு  இந்த கட்டுரையை நிறுத்தும்படி எனக்கு ஒரு அழுதத்தினை  கொடுக்க மயற்சித்ததோடு  ஒரு பேப்பர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் பலர் மூலமாக  அறிவித்திருந்தார்.

அவர் இவ்வளவு சிரமப் பட்டிருக்கத் தேவையில்லை டின்னுடனோ அல்லது ஒரு பேப்பர் ஆசிரியர் குழுவினருடனோ  நேரடியாக தொடர்பகளை ஏற்படுத்தி தனது பக்க நியாயத்தினை தாராளமாக வைத்திருக்கலாம். எது எப்படியோ தேசியம் என்கிற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுகின்றோம் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் செய்த மோசடியினை ஒரு பேப்பர் வெளிக்கொண்டு வந்து  அதனை தடுத்து நிறுத்தியுள்ளதோடு  அவ்களை  மக்களிற்கு அடையாளம் காட்டியுமுள்ளது. இனிவரும் காலங்களில் இவர்கள் போன்றவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்கும்படி வேண்டிக் கொள்வதோடு  யாராவது இவர்கள் போன்றவர்களிடம்  ஏமாற்றப்பட்டிருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் ஒரு பேப்பரை தொடர்பு கொண்டால்  அவற்றை உறுதிப்படுத்திய பின்னர் ஒரு பேப்பர் அதனை   பகிரங்கப்படுத்தும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.

நானும் பில்லாவும்.

0
0
நானும் பில்லாவும்.
சாத்திரி ஒரு பேப்பர்.

Posted Image

நான் வேலையிடத்தில் நின்றபொழுது ஒரு குறுந்தகவல் என்னுடைய நண்பி ஒருத்தியினுடையது. அவர் பிரான்சின் .pathe திரைப்பட நிறுவனத்தின் எனது பிராந்தியத்திற்கான நிருவாக இயக்குனராக இருக்கிறாள். படம் பார்ப்பதற்கான  ஓசி ரிக்கற்றுக்கள் அடிக்கடி தருவாள். அவளது குறுஞ் செய்தி என்னவெண்டால்  ஒரு பொலிவூட் படம் ஒண்டு எங்கடை நிறுவனம் வாங்கியிருக்கு  வாற ஞாயிற்று கிழைமை  படம்  நான் நிக்கமாட்டன் வக்கேசனிலை போறன் அதாலை றிக்கற் உன்ரை தபால் பெட்டியிலை போட்டு விடுறன். இதுதான் தகவல். போலிவுட் படமெண்டால் ஏதாவது கிந்திப் படமாயிருக்கும் ஏனெண்டால் சாருக்கான் நடிச்ச படமெண்டு இஞ்சை ஓடினது  இல்லாட்டி slum dog millionaire மாதிரி வெள்ளைக்காரன்  இந்தியாவிலை போய் எடுத்த படமாயிருக்கும் எண்டுதான் நான் நினைச்சன். காரணம் என்ரை இடத்திலை என்ரை குடும்பத்தை விட்டால் வேறை இரண்டு தமிழ் குடும்பம்தான் தூரத்திலை இருக்கினம். அதாலை தமிழ் படம் எடுத்து ஓடுறதுக்கான சாத்தியம் எதுவும் இல்லை. வீட்டை வந்து தபால் பெட்டியை திறந்து பாத்தால்  பில்லா 2 எண்டு எழுதி ஒரு நோட்டிசும் 3 றிக்கற்றும் இருந்திச்சிது  எனக்கு சரியான புளுகம். ஏனென்டால் எங்கடை சிற்றியிலை ஓடுற முதல் தமிழ்படம் அதுவும் பிரெஞ்சு கொம்பனியே எடுத்து போடுறாங்கள்.

அதைவிட ஓசி றிக்கற் வேறை இதுக்கு மேலையும் படத்தை பாக்க போகாமல் விட்டால் நான் தமிழனேயில்லை எண்டு முடிவுக்கு வந்திட்டன். ஆனால் தலையின்ரை படம் பேர் வேறை பில்லா  படத்திலை தலை எப்பிடியும் ஒரு பிஸ்ரலாலை மகசீன் மாத்தாமலேயே ஆயிரம் குண்டுகளால் குறைஞ்சது  50 பேரையாவது சுட்டுத்தள்ளுவார்.  வன்முறை காட்சிகளாக இருக்கும் அதாலை மகளை விட்டிட்டு நானும் மனிசியும் போறது எண்டு முடிவெடுத்தன். பொதுவா பிரான்சிலை ஓடுற படங்களிற்கு வயது கட்டுப்பாடு 10..12...16..18...வயது எண்டு நாலாய் பிரிச்சிருப்பாங்கள். அந்த வயதுக்குட்பட்டவையை உள்ளை விடமாட்டாங்கள்.  ஆனால் பில்லா படத்துக்கு இந்தியன் சென்சார் போட் குடுத்த  U சேட்டிபிக்கற்ரை பாத்திட்டு பிரெஞ்சு காரன்  வயது கட்டுப்பாடு எதுவும் போடேல்லை. சரி இப்ப தியேட்டர் வாசல்லை வந்து இறங்கியாச்சு தியேட்டர் நிருவாகம்  ஒருமாதமாய் விளம்பரம் செய்ததிலை 60 கிமீற்றர் தூரத்திலையிருந்தும் தமிழாக்கள் வந்திருந்திச்சினம்.பலவருசம் காணாத பலரையும் காணக்கூடியதாய் இருந்தது. ஆனாலும் மெல்லிதாய் ஒரு தலையாட்டல் ஒரு புன்னகை இதோடை சரி மிஞ்சிப் போனால் எப்பிடி இருக்கிறியள் எண்டொரு கேள்வி அவ்வளவும்தான். ஒரு 50 அல்லது ..60 எங்கடையாக்கள்  பாண்டிச்சேரி தமிழர்கள் ஒரு இருபது பேரளவில் இருந்தனர் அதோடை 12 பிறெஞ்சுக்காரர் எண்ணிப் பாத்தனான்.

தியேட்டருக்குள்ளை போய் இருந்தாச்சு எனக்கு வலப்பக்கம் ஒரு பாண்டிச்சேரி குடும்பம் இடப் பக்கம் கொஞ்சம் வயதான பிரெஞ்சு சோடியொண்டு.பிரெஞ்சுக்காரி என்னை பாத்து நமஸ்த்தே எண்டாள் நான் வணக்கம் எண்டன். வெள்ளைக்காரி குழம்பிட்டாள் அதுக்கிடையிலை என்ரை மனிசி புகுந்து நமஸ்தே போட்டு வைக்க நான் பிரெஞ்சிலை  பொன்சு(bonjour) எண்டிட்டு பேசாமல் இருந்திட்டன். படம் எழுத்தோட்டம் தொடங்கிச்சுது  இராணுவ ராங்கி. கெலி கொப்ரர் .துவக்கு சூடு எண்டு எழுத்தோட்டம் போகத் தொடங்கவே இது ஈழத் தமிழனிட்டையிருந்து தொடங்கப் போகுதெண்டு எனக்கு விளங்கிட்டுது .மணிரத்தினம் மாங்குளத்திலை மலையை காட்டினமாதிரி இதிலை மன்னாரிலை மலையையோ இல்லாட்டி யாழ்ப்பாணத்திலை தொப்பிக்கலை காட்டையோ காட்டப் போறாங்கள் எண்டு நினைச்சு நிமிந்து இருந்தன்.ஆனால் படம் பயங்கர சண்டையிலை தொடங்கிச்சுது ஒரே விசிலடி கைதட்டல் கனபேர் தலையெண்டும் தலைவா எண்டும் கத்தினாங்கள். நானும் மனிசியும் பக்கத்திலையிருந்த பிரெஞ்சுக்காரியும் ஒருத்தரை யொருத்தர் பாத்தம். கனகாலத்துக்கு பிறகு  எங்கடை படம் பாக்கிற மகிழ்ச்சி அதுதான் கத்துறாங்கள் எண்டு பிரெஞ்சு காரியிட்டை சொல்ல அவள் அதை அடுத்ததாய்யிருந்த தன்ரை மனிசனிட்டை கடத்தினாள்.

அஜித் ஒருத்தனின்ரை கழுத்திலை கத்தியை வைச்சு சறக்கொண்டு அறுக்க பின் வரிசையிலை தாயின்ரை மடியிலையிருந்த ஒரு பெண் குழந்தை 3 வயதுதானிக்கும் வீரிட்டு அழத் தொடங்கிச்சிது. அதை அவர் ஓராட்டி பாத்து களைச்சு வெளியாலை தூக்கி கொண்டு போயிட்டார். ஒரு படத்திலையே சண்டை வன்முறை காதல் காமம் உணர்வு எண்டு எல்லாத்தையும் கலந்து அரைச்சு குடுக்கிற தமிழ் படங்களிற்கு குழந்தையளை அதுவும் 12 வயதுக்கு குறைஞ்சவையை கூட்டக்கொண்டு போக கூடாது எண்டது என்ரை கருத்து. சண்டை முடியத்தான் கதை தொடங்கிச்சுது தமிழ்நாட்டு கடற்கரையிலை அஜித் அகதியாய் படகிலை வந்து இறங்குவார். ஈழத்தமிழ் கதைச்சு கொலைவெறி வரப்பண்ணப் போறான் எண்டு நினைச்சன் நல்லவேளை அப்பிடியொண்டும் நடக்கேல்லை.முகாமிலை பதியிறவரிட்டை தான் பவளத்துறையிலை இருந்து வாறதாய் சொல்லுவார். எனக்கு சந்தேகம் மனிசியை மெல்ல சுரண்டி பவளத்துறையா பருத்தித்துறையா? எண்டன்.

உனக்கு காதும் மங்கிப்போச்சுது பவளத்துறையாம் எண்டாள்.அப்ப அவர் ஈழத்து அகதியில்லை இந்தியாவுக்கு கீழை இலங்கையை தவிர வேறையொரு நாடும் இருக்கு எண்டு அப்பதான் எனக்கு தெரிஞ்சிது. என்ரை பூகோள வாத்தி  பூலோகம் சுத்திப்போட்டான் சொல்லித்தரேல்லை. அங்கையும் தமிழர் இருக்கினம் சண்டை நடக்கிது அங்கையிருக்கிற பவளத்துறையிலையிருந்துதான் இவன் அகதியா வந்திருக்கிறான். எதுக்கும் வீட்டை போன உடைனை  கூகிழ் மப்பிலை தேடிப்பாக்கவேணும் எண்டு நினைச்சபடி படத்தை பாத்தக்கொண்டிருந்தன். அதுக்கிடையிலை பிரெஞ்சக்காரிக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது அவள் என்னட்டை  மன்னிக்வேணும் ஒரு சந்தேகம் எண்டாள். என்னை மாதிரி எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன் பக்கத்திலை இருக்கேக்குள்ளை  தாரளமாய் கேக்கலாமெண்டன்.  இந்த கதை இந்தியாவிலை எந்த பகுதியிலை நகருது எண்டாள். இது  சவுத் இந்தியா தமிழ் நாட்டு கடற்கரையிரை நகருது ஆனாலும் நத்தை வேகம் எண்டன். ஆனால் அடுத்த சந்தேகம். அவர் எந்த நாட்டிலையிருந்து அகதியா வாறார் எண்டாள். அது சஸ்பென்ஸ்  படத்தின்ரை கடைசியிலைதான் சொல்லுவாங்கள் எண்டு நான்தான் கதைவசனம் எழுதினமாதிரி சொன்னன்.

தொடந்து  நடந்த சண்டைக்கு இடைவேளை விட்டாங்கள். இங்கத்தைய படங்களுக்கு இடைவேளை விடுறேல்லைதானே . அதாலை இடைவேளையோடை கன வெள்ளையள் படம் முடிஞ்சுதெண்டு வீட்டை போட்டாங்கள். எனக்கு பக்கத்திலை இருந்தவைக்கு படம் முடியேல்லையெண்டு சொன்னதாலை அவங்கள் போகேல்லை. கடைசியா நாலு வெள்ளையள்தான் மிச்சம். படத்திலை கீழை பிரெஞ்சிலை மொழி பெயர்ப்பு ஓடிக்கொண்டிருந்ததாலை அஜித்தை பார்வதி ஓமணகுட்டன்  மாமா எண்டு கூப்பிறநேரமெல்லாம் பிரெஞ்சிலை oncle(uncle)எண்டு மொழி பெயர்ப்பு  போய்க்கொண்டிருந்தது ஆனால் இரண்டு பேரும் லவ்பண்ணி பாட்டும் தொடங்க  பக்கத்திலை இருந்த பிறெஞ்சுக்காரி குளம்பிட்டாள். உங்கடை ஊரிலை மாமனை கட்டுறவங்களா? எண்டாள். ஜயோ இது என்ரை ஊரில்லை  இந்தியா அங்கை இப்பிடித்தான் வரைமுறை  பழக்கவழக்கம் தெரியாததுகள் மாமனையும் கட்டுங்கள் மச்சானையும் கட்டுங்கள் .அவங்கள் கட்டுறாங்களோ இல்லையோ  சினிமாகாரர் வருசக்கணக்கா  இப்பிடித்தான் காட்டுறாங்கள் எண்டு சொல்ல நினைச்சனான்.

பார்வதி ஓமணகுட்டன்
ஆனால் என்ரை மனிசி பெங்களுர்காரி  பிறகு அவள் என்னை  டேய் நீ என்ரை மாமனா உன்னை எப்பிடி நான் கட்டினான் எண்டு கேட்டால் வில்லங்கமாயிடும் .அதோடை இரவு நுளம்புக்கடியோடை பல்க்கனியிலைதான் படுக்கவேணும். அது..அது  வந்து இஞ்சை புருசன் பெண்சாதி செல்லமா  மை பேபி எண்டு கூப்பிடுற மாதிரி அங்கை மாமா எண்டு சும்மா கூப்பிடுறவை அதைத்தான் மொழி பெயர்த்தவன் பிழையா மொழி பெயர்த்துப் போட்டாங்கள் எண்டன் அப்பாடா.. படம் ஒரு மாதிரி முடிஞ்சு வீட்டை வந்ததும் முதல் வேலையா கொம்புயூட்டரை போட்டு கூகிழ் மப்பிலை உலகப்படத்தை எடுத்தன். இண்டைக்கு  பவளத்துறையை  கண்டு பிடிக்காமல் விடுறேல்லை ஏனெண்டால் இப்பிடித்தான்  கொஞ்ச காலத்துக்கு முதல்  இவன் நடிச்ச படம் ஒண்டை பாத்திட்டு  அத்திப்பட்டியை  தேடி களைச்சுப்போனன். இந்தியாக்கு கீழை உள்ள நாடுகளை நேட்டம் விட்டன் . ஆ கண்டு பிடிச்சிட்டன்  படத்தை கொஞ்சம் பெரிசாக்கினன்.  அப்பதான் விளங்கிச்சிது  மெளசை வேகமாய் இழுத்திட்டனெண்டு  ஜயோ அது அவுஸ்ரேலியா..

என்னடா  படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பாங்கள் படிச்சிட்டு படத்தை பாக்க போகலாமெண்டு நினைச்சிருப்பியள்.  படத்திற்கு விமர்சனம் எழுதலாம் ஆனால் சண்டைக்கு  எப்பிடி விமர்சனம் எழுதிறது அதுக்கு இராணுவ ஆய்வுதான் எழுதலாம். அது எனக்கு தெரியாது

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 5

0
0




சிங்கப்பூரும் சிங்காரிகளும்(காமம்)

இலங்கையில் பிரேமதாசா அரசுடன் புலிகள் நடத்திய இரகசிய பேச்சுக்கள்  உத்தியோக பூர்வ பேச்சு வார்தையாக மாற்மடைந்து கொண்டிருந்த காலகட்டம்.  சிங்கப் பூர் விமான நிலையத்தில் உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்திருந்த  புலிகள் அமைப்பை சேர்ந்த பலரும் பயணிகள் விமானம் மாறுவதற்காக  காத்திருக்கும் மண்டபத்தில்  ஒரு மணி நேரத்தில் சந்தித்து விட்டு பின்னர் வெவ்வேறு பகுதிகளிற்கு பிரிந்து செல்லும்படியாக விமானப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தது  அப்படி பதிவு செய்யப் பட்டி ரிக்கற் ஒன்று அவனிற்கும் கிடைத்திருந்தது. அவன் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய நேரம் புலிகள் அமைப்பின் மூளை  எனப்படுபவர் தனது மனைவியுடன் வந்திருந்தார் . இன்னொரு பெண் இரண்டு குழந்தைகளுடன் சுவீடனிலிருந்து வந்திருந்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்த அனைவரும் கலகலப்பாக கதைத்துக்கொண்டிருக்கும் போதே தாய்லாந்திலிருந்த வந்த விமானத்தில்  புலிகளின் முதுகெலும்பு என வர்ணிக்கப் பட்டவர் வந்து இறங்கியிருந்தார்.அதேயளவு சம நேரத்தில் இந்தோனிசியாவிருந்து வந்த விமானத்திலும் ஒருவர் வந்திறங்குகிறார்.முதுகெலும்பை கண்டதுமே அனைவரது முகங்களும் இறுகி சீரியசாகின்றது. வந்தவர் நேரடியாக மூளையிடம் போய் கைகொடுத்து மற்றவர்களிடமும் நலம் விசாரித்துவிட்டு  மூளையை தனியாக அழைத்தக்கொண்டு கதைப்பதற்காக ஒரு லோஞ்சிற்குள் நுளைந்து விடுகிறார். அவரை  அவன் நேடியாக பார்ப்பது இது இரண்டாவது தடைவை அவனை  ஒரு வினாடி பார்த்து விட்டு பேசாமல் போய்விட்டார்.   அவர் தனக்கும் கை தந்து கதைப்பார் என்று சில வினாடிகள் எழுந்து நின்று காத்திருந்தவனிற்கு ஏமாற்றம். ஒரு நாளைக்கு என்னை தேடி வந்து கதைக்கிறமாதிரி செய்யிறன் என்று மனதிற்குள் சவால் விட்டபடியே போசமல் மீண்டும் அமர்ந்து அங்கு கிடந்த மகசீன் ஒன்றை எடுத்து பெர்பியூம் விளம்பரத்து அரை குறை  அழகியொருத்தியின் படத்தை அங்குலம் அங்குலமாக ஆாய்ந்து கொண்டிருக்கும்போது அவனிற்கு முன்னால்  ஒருவர் நின்று எப்பிடி சுகம் என்றார் நிமிர்ந்து பார்தான்.

நெடிய  கறுத்த உருவம் சுருள் முடி  கோட் சூட் அணிந்து  நின்றவர்  என்னோடை வாரும் என்று இன்னொரு லோஞ்சிற்குள் அழைத்து சென்றவர் என்ன குடிக்கிறீங்கள் என்றார். பிளேன் ரீ என்றதும். ஓடர் கொடுத்து விட்டு நான்தான் உதயன் என்று தன்னை அறிமுகம் செய்தவர். உம்மடை கால் எப்பிடியிருக்கு காது  எல்லாம் சரியாயிட்டுதா என்று அவனை விசாரித்த பொழுதே அவனது அத்தனை விபரங்களும் அவர் கையில் உள்ளது என்று அவனிற்கு புரிந்து போனது மட்டுமல்ல அவரை பற்றி அவரது சாகசங்கள் பற்றியெல்லாம் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர். இந்த உலகப்பந்தில் அவர் கால்படாத இடங்களே இல்லையென்று சொல்லாம்.இப்பொழுது அவரே அவனிற்கு முன்னாலிருந்து கதைப்பது அவனாலேயே நம்ப ஆச்சரியமாக மட்டுமில்லாது  மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிரெஞ்சு கதைக்க பழகிட்டியா என்று பிரெஞ்சிலேயே கேட்டார்.  ஓமென்றவனிற்கு பிரெஞ்சிலேயே அவன் செய்யவேண்டி விடயங்கள் பற்றி விபரித்து  கையில் கொஞ்ச டெலர்களையும் கொடுத்து விட்டு கவனமாய் செலவழிக்கவேணும் அடிக்கடி கேக்கக்கூடாது  என்றுவிட்டு ஒருவரின் விலாசத்தை கொடுத்து அவரை போய் சந்திக்கும்படி சொல்லி விடை பெற்றார். பின்னர் அங்கு சந்தித்த அனைவருமே பல்வேறு நாடுகளிற்கு பிரிந்து பயணிக்க அவன் மட்டும் சிக்கப்பூரில் வெளியேறினான். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வெளியேறும் போது நல்வரவு என்று தமிழில் எழுதி தொங்கவிடப் பட்டிருந்த  பதாதகையை பார்த்தவன்.

விரைவிலை எங்கடை விமான நிலையத்திலையும் இப்பிடி தமிழிலை எல்லாம் எழுதும் காலம்  வருமென்று நினைத்தபடி வெளியே வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தவன் யன்னல் வழியே  கண்களால்  சிங்கப்பூரை மேய்ந்தான்.இங்கு  வருவது இரண்டாவது தடைவை முதல் தடைவை வந்தபொழுது நாலு நாட்கள் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் விடுதி ஒன்றில் ஓய்வு பின்னர் நாட்டைவிட்டு போய்விட்டிருந்தான். இனித்தான் சிங்கையை  அனுபவித்து பார்க்கப் போகின்றான் என்பது மட்டுமல்ல அவனது வாழ்க்கையில் பல அனுபவங்களையும் பெறப்போகும் இடம்.சிங்கப்பூரிற்கு 1819 ம் ஆண்டு பிரித்தானியர் ராபல்ஸ் என்பவர் வரும்போது  மலேசியாவில் இறந்து போனவர்களை புதைக்கும் சுடுகாடாகத்தான் பெரும்பாலும் சிங்கை இருந்ததாம். பிறகு 1965 ம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் லீ குவான் யூ  தேர்தல் அறிக்கையாக  தான் ஆட்சிக்கு வந்தால் சிங்கப் பூரை சிலோன் போல் மாற்றுவேன் என்று உறுதிகொடுத்திருந்தாராம். ஆனால் சிறிலங்கா இன்று சுடுகாடாகமாறிப்போய் இருக்கிறது சிங்கப்பூர் எங்கையயோ போய்விட்டது.

சிங்கைக்கு தலைநகரம் கிடையாது  அதன் பிரதான இடம் என்று அழைக்கப்படும் ஒச்சார்ட் வீதியில் இருந்த விலாசத்தை  தேடிப்போயிருந்தான் அது பலமாடிகளை கொண்டதொரு வர்த்தக நிலையம். அதன் மாடிப்பகுதி ஒன்றிலிருந்த  பாரிய எலெக்றோனிக் கடை ஒன்றுதான் அவன் தேடிப்போயிருந்த விலாசம். அங்கிருந்த பணியாள் ஒருவரிடம் அலி அகமத் என்று கேட்டதும்  கடைக்குள் இருந்த கண்ணாடி அலுவலகத்தை காட்டினான்.மத அடையாளங்களுடன்  சிறு தாடிசிவந்த தடித்த மனிதரொருவர் அமர்ந்திருந்தார். அலுவலகத்தினுள் நுளைந்தவன் தன்னை அறிமுகம் செய்ததும் தயாராய் வைத்திருந்த சில பத்திரங்களை எடுத்து நீட்டியவர் நிரப்பி கையெழுத்து போட்டு குடுங்க தம்பி என்றார். சிங்கையில் நீண்ட நாட்கள் தங்கவேண்டுமானால் ஒன்று வேலை  அல்லது மாணவ விசா தேவை அவன் வேலை எதுவும் செய்தாயில்லை எனவேதான் மாணவ விசாவிற்கான அனுமதி பத்திரமும்  எலொக்றொனிக் பொறியியல் படிப்பதற்கு தனியார் கல்வி நிறுவனமொன்றின் நுளைவு அனுமதி பத்திரங்களும் இருந்தது  தனது கடவு சீட்டை எடுத்து அதில் இருந்த விபரங்களை பதிந்து கையெழுத்திட்டு நீட்டினான்.போட்டோ  என்றார் எடுத்து நீட்டினான்.  சரி தம்பி ஒரு வாரத்திலை வாங்க எல்லாம் வந்திடும் என்ன தேவையென்னாலும் போனடிக்காதீங்க நேரடியாவே வாங்க  நான் இல்லேன்னா அதே அந்த பெண்கிட்டை விடயத்தை சொல்லிட்டு போங்க என்று கடையில் கல்லாவில் இருந்த பெண்ணை காட்டியவர். ஒரு விசிட்டிங் கட்டை எடுத்து நீட்டி இவரை போய் பாருங்க இவர்  உங்களுக்கான அடுத்த ஒழுங்ககளை செய்து தருவார் என்று சொல்லி அங்குபோவதற்கான வழி முறையையும் சொல்லியவர். எப்பிடி போவிங்க என்றார். பஸ்சிலைதான் என்றதும் அவ்வளவு சிரமபடவேண்டாம் என்றவர் யோசித்து விட்டு இருபது வெள்ளியை எடுத்து நீட்டி ரக்சிலையே போயிடுங்க என்றார். விடைபெற்றான்.

விசிட்டிங் காட்டில் விலாசம் தோ பா  யோ (toa payoh) என்றிருந்தது  ரக்சி காரனிடம் காட்டிவிட்டு ஏறி அமர்ந்தான். சில நிமிடங்கள் ஓடிய ராக்சி ஒரு சீன விடுதி ஒன்றின் முன்னால் நின்றது ரக்சிகாரனின் கணக்கை தீர்த்துவிட்டு உள்ளே நுளைந்து வரவேற்பு பகுதியில் நின்றிருந்த பெண்ணிடம்  ஆங்கிலத்தில் அலி அகமத்  அனுப்பினார் என்றான் . அவள் ஒரு பெட்டியை எடுத்து நீட்டினாள்  ஒரு கைத் தொலைபேசி மோட்டோரேலா மொடல் பற்றியுடன் சேர்த்து  குறைந்தது ஒன்றரை கிலோ வரும். இப்ப உள்ளவைகள் போல இடுப்பில் செருகவோ பொக்ற்றில் வைக்கவோ முடியாது  அதை தனியாக ஒரு பையில்தான் தூக்கி கொண்டு போகவேணும்.



இப்ப உள்ள மாதிரி சிம்காட் சிஸ்ரம்வேறை இல்லை அதாலை வேறை நாட்டுகாரர் சிங்கையில் இணைப்பு எடுக்க முடியாது  யாராவது சிங்கப்பூர் காரரின் பெயரில்தான் இணைப்பை எடுக்கலாம். அந்த விடுதி சீனரின் பெயரில்தான் இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது . கைத்தொலைபேசியை உருட்டி பார்த்துக்கொண்டிருந்தவனிடம் நீங்கள் போகலாமென்றாள் .

எங்கை போறது ??

அதைப்பற்றி எனக்கு தெரியாது .ஆனால் இங்கு தங்க முடியாது

மலிவான  விடுதி ஏதாவது இங்கை கிடைக்குமா??

வெளியேறி வலப்பக்கமாக நடந்து போ 500 மீற்றரிலை ஒரு லொட்ச் வரும் அங்கு இடமிருக்கா என்று கேட்டுப்பார்.  போய்வா என்றாள்

லொச்சில் இடமிருந்தது  அதுவும் ஒரு சீனனின் லொச்தான் அவன் அறையை காட்டினான்  ஒண்டரை மீற்றர் அகலம். இரண்டு மீற்றர் நீளம் .சிறிய கட்டில்  மேலே இரண்டு அறைக்கு பொதுவாக ஒரு காத்தாடி . குளியலறை கழிவறை எல்லாமே பொதுதான்.  நாளிற்கு ஏழு  வெள்ளியென்றான்.சிங்கை ஒரு பொதுவுடைமை நாடு என்பதும் அப்பொழுதான் அவனிற்கு புரிந்தது. அது மட்டுமல்ல அங்கு அப்படியானதொரு இன்னொரு உலகம் இருப்பதும் அப்பொழுது தான் அவனிற்கு தெரியும். கைத் தொலைபேசியை சார்ச்சரில் வைத்துவிட்டு கொண்டு வந்த பொதியை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு படுக்கையில் சாய்ந்தபொழுது  கை தொலைபேசி அடித்தது  வாழ்நாளில் முதன் முதலாக கைத் தொலைபேசியில் பேசப் போகின்றான் எடுத்து காதில் வைத்து கலோ என்றதும். நான் உதயன்  என்றது குரல்.

000000000000000000000000000000000000000000000000000000000
ஏதும் தலைபோற அவசரம்  எண்டால் மட்டுமதான் இந்த போனை  பாவிக்கவேணும் மற்றபடி நாளைக்கு உனக்கு வசதியான சனம் அதிகம் இல்லாத இடமாய் இருக்கிற ஒரு பொது போன் பூத் ஒன்றிலை போய் பாத்து  அதுகின்ரை நம்பரை எனக்கு தந்துவிடு மற்றாக்களிற்கும் அந்த நம்பரையே குடுத்துவிடு இனி அந்த நம்பரிலை தொடர்பிலை இருப்பம் என்று விட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

அடுத்தநாள் தோ.பா யோ  சந்தைக் கட்டிடப் பகுதியில் போய் சுற்றிப்பார்த்தான்  அது இரவும் பகலும் சனம் நிறைந்து கலகலப்பாக இருக்கும் ஒரு இடம். அங்கு ஒரு ஓரமாய் வயதான மலே இனத்தவரின் புத்தகக் கடை ஒன்று அங்கு பத்திரிகைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்கும் கடை மாலையில் பூட்டிவிடுவார். அதற்கு அருகில் ஒரு தொலைபேசிக்கூடு இருந்தது அருகிலேயே  சீமெந்து வாங்கும் ஒன்றும் இருந்ததால் அந்த தொலைபேசிக் கூண்டை தெரிவு செய்து அதன் இலக்கத்தை குறித்தக்கொண்டான். அதற்கு பின்னர்  தேவைக்கேற்ப அந்த இலக்கத்திற்கு அழைப்புக்கள் வரும். அவனும் வகுப்பிற்கு போக ஆரம்பித்திருந்தான் காலை இரண்டு அல்லது  மூண்டு மணிநேரம்தான் வகுப்பு அது முடிய  மதியம் அளவு சாப்பாடு ஆசையாய் ஒரு  பியர் குடிக்க நினைத்தால்  அளவு சாப்பாடை கைவிட்டு 50 சதத்திற்கு வெள்ளைச்சோறும் 50 சதத்திற்கு  பருப்பு சாம்பாரும் பொலித்தீன் பையில்   கட்டித்தருவார்கள்.மிச்சக் காசில்  ஒரு பியர் வாங்கலாம் சாப்பிட்டு விட்டு லாச்சில் ஒரு குட்டித் தூக்கம் மாலையில் வந்து அந்த சீமெந்து வாங்கில் குந்தினால் இரவு பத்து அல்லது அதற்கு மேலும் நித்திரை வரும்வரை அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருப்பான். அது அவனது வெளிவேலைகளின் ஆரம்ப காலம் என்தால் அதிக வேலைகளும் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. பொழுதை போக்குவதற்காக  றேடியோவுடன் கூடிய வோக்மன் ஒன்று வாங்கியிருந்தான். அதற்குப் பின்னால் ஒரு வில்லங்கமே வரப் போகிறதென்று தெரிந்திருந்தால் அதனை வாங்காமலேயே விட்டிருப்பான் ஆனால் என்ன செய்ய விதி.


சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இரவு நல்ல நிகழ்ச்சிகள் போடுவார்கள். அவை பெரும்பாலும் இலங்கை வானொலியை ஒத்ததாகவே இருக்கும்.அதிலொரு நிகழ்ச்சிதான்  நேயர் விருப்பம்.நேயர்கள் விரும்பிய பாடல்களை தொலைபேசி மூலம் கேட்டதும் ஒலிபரப்புவார்கள்.  இருவர் நடத்தும் அந்த நிகழ்ச்சியில் தேவராஜ்  என்பவர்  இலங்கையில் மூளாயை  பூர்வீகமாக கொண்டவர். ஆனால் அவர் இலங்கைக்கு பேனதே கிடையாது.சிங்கையில் உள்ளுர் தொ.பே கட்டணம்  மிக மலிவு 10 சதம் போட்டு விட்டு அதிக நேரம் பேசலாம். அவனும் விரும்பிய பாடலை கேட்பதற்காக போனடித்திருந்தான் அவனது கதையிலேயே யாழ்ப்பாணத்தவன்  என அடையாளம் கண்டுகொண்ட தேவராஜ் நீங்கள் சிலோன்தானே என்றார்  பின்னர் ஊரை விசாரித்தார் அவனும் வாயில் வந்த புன்னாலைக் கட்டுவன் என்று சொல்லி வைத்தான். பின்னர் ஒவ்வொரு இரவும்  அவன் அந்த நிகழ்ச்சியை தவற விடுவதில்லை பாடல் கேட்பதற்காக போனடிக்கத் தொடங்கியிருந்தவன்  இன்னொன்றையும் கவனிக்கத் தொடங்கியிருந்தான்  ஒரு பெண்  ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்களையே  தொர்ந்தும் கேட்பார்.

தான் விரக்தியில் இருப்பதாக  நிகழ்ச்சி நடத்துபரிடமும் சொல்லியிருந்தாள். அன்றைய காலகட்டத்தில் தான் வானொலியில் இன்னொரு நிகழ்ச்சியையும் இரவு  11 மணிக்கு பின்னர் அறிமுகப் படுத்தியிருந்தனர். அந்த நிகழ்ச்சி மேலைத்தேய வானொலிகளில் நடக்கும் நிகழ்ச்சி  போல் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை  குடும்ப பிரச்சனைகளையும் வானொலியில் பெயரை குறிப்பிடாமலோ அல்லது குறிப்பிட்டோ சொல்லுவார். அந்த நிகழ்ச்சியை ஒரு பெண்ணும் ஆணும்  அதோடு ஒரு மன நல ஆலேசகர் ஒருவருடன் இணைந்து நடத்திக்கொண்டிருந்தனர். பிரச்சனைகளை சொல்பவர்களிற்கு  மன நல ஆலோசகரும் ஏதாவது உப்பு சப்பில்லாத  ஆலோசனைகள் உதாரணமாக எல்லாரிடமுமே தியானம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அது மட்டுமல்ல நேயர்களும் போனடித்து  தங்கள் ஆலோசனைகளை ஆறுதலை சொல்லலாம் அடுத்தவனின்ரை பிரச்சனையை கேட்பதென்றால் எல்லாரிற்குமே ஒரு ஆர்வம்தானே அதனால் அவனும் அந்த நிகழ்ச்சியை கேட்பதுண்டு பெரும்பாலும் பெண்களே பிரச்சனைகளோடு வருவார்கள். அப்படியானதொரு நாளில் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த பெண்குரலை உற்று கேட்டுக்கொண்டிருந்தான்.அந்தப் பெண் தழுதழுத்த குரலில் தனது கணவனின் பெண் தொடர்புகள் பற்றியும் அவர் வீட்டிற்கே வருவது இல்லையென்றும் தனக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக கூறி தனக்கு தற்கொலை செய்யவேண்டும் போல் உள்ளது என்று சொல்லி முடித்தாள்.

ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்கள் கேட்கும் அதே பெண்குரல்தான் அடையாளம் கண்டு பிடித்துவிட்டான். உடைனையே வானொலி நிலையத்திற்கு பேனடித்தவன் தியானம் செய்யச்சொல்லிக்கெண்டிருந்த உளவியல் ஆலோசகரிடம்  வணக்கம் சொன்னவன் என்னங்க இப்பிடி எல்லாரிட்டையும் தியானம் செய்யுங்கள் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறீங்களே  கடைசியில் சிங்கை  பெண்கள் சாமியார் மடமாயிடுமே என்றதும். அவரே சிரித்துவிட்டார். உங்கள் ஆலோசனைதான் என்ன என்றார்? தினமும் இப்பிடி கனபேர்  பிரச்சனைகளோடை வருகிறார்களே அதற்கு சிங்கையின் அதிக வேலை. தனிமை என்பன முக்கிய காரணங்கள். இப்படி பிரச்சனைகளோடு வருபவர்களிடையே  நீங்களே  ஒரு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் தங்களிற்குள் மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறைந்து விடும் என்றவன் தற்சமயம் கதைத்த பெண்ணிற்கும் தனிமை தான் பிரச்சனை என்று தெரிகின்றது   எனது தொ.பே இலக்கத்தை தருகிறேன் விரும்பினால் அவர் தொடர்பு கொள்ளலாம் தாராளமாக மனம்விட்டு  கதைக்கலாம்  என்று சொல்லி இலக்கத்தையும் கொடுத்தான். வீதியோரத்து இலக்கம்தானே யார் போனடிச்சா அவனுக்கென்ன ?


மறுநாள் வழைமைபோல சோகப்படல் ஒன்றை ஒலிபரப்ப கேட்டுவிட்டு போயிருந்தாள்.  வானொலிக்கு போனடித்தவன்  வாழும்வரை போராடு  என்கிற பாடலை சற்றுமுன் சோகப் பாடல் கேட்டவரிற்கு சமர்ப்பிக்கிறேன்  அதனை ஒலி பரப்புங்கள் என்று கேட்டிருந்தான். பாடல் போய்க்கொண்டிருக்கும் போதே  கூண்டு தொலைபேசி ஒலித்தது. காதில் வைத்து கலே என்றான். நமஸ்காரங்க என்றது பெண்குரல்.

வணக்கம்   அப்பாடா இப்பவாது போனடிச்சீங்களே மகிழ்ச்சி.

றெம்ப நன்றிங்க

எதுக்கு ??

எனக்காக பாட்டு போட சொன்னதற்கு.

அதுசரி உங்களோடை பேர்தான் என்ன?

தனலக்சுமி

தனம் ரெம்ப இருக்குமோ?

அதெல்லாம் றெம்ப இருக்குங்க ஆனா மனசுலை நிம்மதிதான் இல்ல  என்று அவனது கேள்வியின் முழு அர்தமும் புரியாமல் அப்பவியாய் பதில் சொன்னாள். அன்று சில நிமிடங்கள் மட்டுமே நடந்த உரையாடல்  முடிவிற்கு வர மறுநாள் மீண்டும் தொலைபேசியடித்தது. உங்களோடை சோகத்திற்கு  காரணம் தான் என்னங்க நேரடியாகவே கேட்டுவிட்டிருந்தான்.  அது ரெம்ப பெரிய கதைங்க  உங்களிற்கு  ஏதாவது வேலையிருக்கும்  எதுக்கு என்னோடை கதையெல்லாம்  என்றாள். அவனிற்கு  அந்த சீமெந்து வாங்கில் இருந்து தேய்ப்பதைத் தவிர வேறை முக்கியமான வேலை எதுவும் இல்லை.  பரவாயில்லீங்க சொல்லுங்க என்றான்.  சொல்லத் தொடங்கினாள். பல மணி நேரமாக  அவள் சொன்ன கதையை  சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.  அவள் கணவர் ஒரு தொழில் அதிபர்  சிங்கையிலும்  கொங் கொங்கிலும்  மும்பையிலும் அவரிற்கு அலுவலகங்கள் இருந்தது அதுவும்  சினிமாத்துறையில்.  அவரது நிறுவனம் தான் பாடல் இசை தட்டு வெளியிடும் முன்னணி  நிறுவனம். அது மட்டுமல்ல இந்திய படங்களின் வெளிநாட்டு வினியோகம் .

இந்தி தமிழ் மொழி  படங்களையும் தயாரித்திருந்தார்கள். அவரிற்கு சிங்கையிலும்  கொங்கொங்கிலும் சீன பெண்களோடு  உறவும் அதனால் குழந்தைகளும் உண்டு  அதைவிட சினிமாத் துறையில் பல பெண்களோடும் தொடர்புகள். அதனால் தங்கள் மகனை வழிக்கு கொண்டு வரலாமென நினைத்தும் தங்களிற்கு குடும்ப வாரிசு வேண்டும் என்கிற காரணத்தாலும் அவரின் தாய் தந்தையர்  தமிழ் நாட்டின்  நெய்வேலிக்கு சென்று   தங்கள் உறவில் பொருளாதாரப் பிரிவில்  படித்துக்கொண்டிருந்த  கிராமத்து  சூழலில்  வளர்ந்த தனலக்சுமியை  பேசி முடித்திருந்தனர். அவள் சங்கீதமும் நடனமும் கூட கற்றிருந்தாள். வெளிநாடு வசதியான இடம்  சீர் வரிசை எதுவும் இல்லை இருபது வயதுகள் வித்தியாசம்.அவளின்  படிப்பு இடை நிறுத்தப் பட்டது . தாய் தந்தையரின் வற்புறுத்தலா அல்லது அவளின் அழகா ஏதோவென்றில்  அவனும் தாலி கட்டிவிட்டிருந்தான். அவள் சிங்கை வந்து  மகளும் பிறந்த பொழுதுதான்  கணவன் வீட்டிற்கு வராத காரணங்கள்  புரிந்தது  அதனை  ஆராய்ந்த பொழுது அடிக்கடி சண்டைகள்.  எப்போதாவது வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தான்.  மாமா  மாமியின் அன்பான கவனிப்பு  வசதியான வாழ்க்கை  அவள் குழந்தையின் சிரிப்பு   அவளை வாழவைத்துக்கொண்டிருந்தது . இதெல்லாம் இல்லாட்டி நான் எப்பவோ செத்திருப்பேனுங்க  என்று முடித்திருந்தாள்.

அந்த தொழிலதிபரின் மனைவியா என அவனிற்கும்  ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பின்னர் நாளிற்கு நாள் நிமிடங்கள் அதிகரித்து மணித்தியாலங்களை  விழுங்கத் தொடங்கியிருந்தது. அவள் பாட்டு படித்து காட்டுவாள்   அவனும் ஆரம்பத்தில் அம்புலிமாமா ஜோக்கில்  தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தமாதிரி  ஜோக்குகள்  சொல்ல ஆரம்பித்திருந்தான் அவளிற்கும் பிடித்திருந்தது விழுந்து விழுந்து சிரித்தபடி அப்புறம் என்பாள். அவனிற்கு நின்றுகதைப்பதால் கால்வலியெடுத்து குந்தியிருந்து கதைக்கத் தொடங்கினான். வயர் கொஞ்சம் நீளமாக இருந்தால் சீமெந்து வாங்கில் படுத்திருந்தபடியே கதைக்கலாமெண்டு நினைப்பும் வந்தது .
ஏனுங்க எத்தனை நாளிற்குத்தான் இப்பிடி போனிலையே பேசிறது நேரிலை பாக்கவே முடியாதா?
அவன் அப்படி கேட்க மாட்டான ??என எதிர் பாத்திருந்தவள் போல்  நாளைக்கு பாக்கலாமே என்றாள்.

எங்கை பாக்கிறதாம்.

நான் அதிகமா தனியா எங்கையும் வெளிலை போனதில்லீங்க இங்கை பக்கத்திலையே West Coast Plaza வந்திடுங்களேன். அங்க முதல் மாடியிலை உள்ள கோப்பிக்கடையிலை பாக்கலாமே.

எனக்கும் சிங்கப்பூர் அவ்வளவா தெரியாது அது எங்கைங்க இருக்கு?

யுரோங் பக்கமுங்க.

எப்பிடியோ தேடிப்பிடிச்சு வந்துடறேன் ஆனா எப்பிடி உங்களை அடையாளம் கண்டு பிடிக்கிறதாம்.?

நான் சுடிதாரிலை இருப்பேன்.

றெம்ப முக்கியமான அடையாளம் சிங்கப்பூரிலை சீனாக்காரிகூடத்தான் சுடிதார் போடுறாங்க.

வெள்ளை சுடிதார் மேலை சிகப்பு சோல் போட்டு வாறேன் அது உங்களிற்கு ஈசியா இருக்கும்  நீங்க?

எப்பவாவது தோய்க்கிற கறுப்பு ஜுன்ஸ்  மேலை சிகப்பு ரீசேட் ஓகேயா?

சரிங்க நாளைக்கு சந்திப்பம்..
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஆனாலும் அவனிற்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே அது அப்பாவிப் பெண்தானா அல்லது ஏதாவது வேறை மாதிரி கும்பலாயிருக்குமோ என்பததான் அது .எதக்கும் நேரத்தோடையே போய் மறைந்திருந்து நோட்டம் விடுவது என்று தீர்மானித்திருந்தான். அவன் சொன்னது போல் சிவப்பு ரீ சேட் போடாமல் வெள்ளை ரீ சேட்டுடன் போனவன் முதலாம் மாடியில் இருந்த துணிக்கடை ஒன்றில் இருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவள் சொன்ன நேரத்திற்கு ஓடும் மாடிப்படிகளில்  ஒரு சோடி தனங்கள் தெத்திவிழையாட ஓடிவந்துகொண்டிருந்தது ஒரு வெள்ளைச் சுடிதார். அவள்தான் தனலக்சுமியா இருக்கலாமென முடிவெடுத்திருந்தாள். பெத்தாங்களா  இல்லை அளவெடுத்து செய்தாங்களா என்று அதிசயிக்கும் அங்கங்கள் அளவாகவும் அழகாகவும்  அசைந்துகொண்டிருந்தது.அவள் அழகிற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டிக்கொடுத்து விட்டு காலடியிலேயே காத்திருக்கலாம். அப்படியிருக்க ஒரு கோடீஸ்வரன் தாலியை கட்டிட்டு அப்பப்ப வந்து தொட்டுட்டு போறானே என்று அவனிற்கு கோவமும் வந்தது. கோப்பிக் கடையருகில் வந்தவள் பதட்டத்தோடு சுற்றிவர பாத்துக்கொண்டிருந்தபோதே அவளோடு யாரும் வரவில்லையென உறுதி செய்தவன் அவளருகில் வந்து வணக்கமுங்க மன்னிச்சுங்க  சிகப்பு ரீசேட் அழுக்காயிட்டுது அதுதான் வெள்ளையிலை வரவேண்டியதாயிட்டுது என்றான்.

உங்க பேச்சை பாத்தா பெரியாளா இருப்பிங்க  என்று நினைச்சன் ஆனா சின்ன பையனா இருக்கிறீங்களே  என்றாள்

உலகமகா அவமானம். நானும்தான்  உங்களை வயசான கிழவியா இருப்பீங்க எண்டு நினைச்சன்  ஆனால் சின்னப் பெண்ணா இருக்கிறீங்கள் என்றான்.

வெட்கத்தோடு சரிங்க யாராச்சும் பாத்தாலும் நான் போயிடுறேனே?
என்னது இதுக்கா இவ்வளவு தூரம் வந்தனான் சரி வாங்க கடைஉள்ளை போய் ஓரமாய் உக்காந்து கூலாய் ஏதாவது குடிக்கலாம்.

சில நிமிட சந்திப்புத்தான் அவள் பயந்தவளாகவும் படபடப்போடுமே இருந்தாள். அந்த சில  நிமிடங்களிலேயே அவள் இருக்கும் குடியிருப்பு எத்தனையாம் மாடி என்ன இலக்கம் எப்போது தனியாக இருப்பாள் என்கிற விபரமெல்லாம் தெரிந்து கொண்டிருந்தான்.  விடைபெற்றவளிடம் என்னங்க இனி எப்போ சந்திக்கிறதாம் என்றான்.

எனக்கு இப்பிடி வெளிலை சந்திக்க றெம்ப பயமா இருக்கு எங்க மாமா மாமி யாராவது பாத்தா பெரிய பிரச்சனையாயிடும்.

அப்போ சந்திக்கபோறதேயில்லையா?

மெளனமானாள்.

சரிங்க இரவு பேனிலையே பேசலாம் விடைபெற்றான்.

அன்றிரவு போனடித்துக்கொண்டேயிருந்தது அவன் எடுக்கவேயில்லை  அந்தப் பக்கமாய் வந்த ஒரு சீனன் ஒருவன் எடுத்து காதில் வைத்து கலோ என்றான் அதற்கு பிறகு போனடிக்கவில்லை அவன் சிரித்துக்கொண்டான்.

அடுத்தநாள் அவளது குடியிருப்பை தேடிப்பிடித்து போயிருந்தான் வசதியானவர்கள் வாழும் இருபது  மாடிகளைக் கொண்ட ஆடம்பரக்குடியிருப்பு  காவலாளிகள்  பாதுகாப்பு கமறாவெல்லாம் பூட்டியிருந்தது. முதல் மாடியில் பல அலுவலகங்கள் இருந்ததால் இலகுவாக உள்ளே புகுந்துவிட்டிருந்தவன் லிப்ற்றில் ஏறி 16 வது மாடிக்கு வந்தவன் அவனது வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். துவாரம் வளியாக பார்த்தவள் ஆச்சரியத்துடன் கதைவை திறந்து நீங்களா என்றவள் உள்ளை வாங்க பரபரப்பானாள். எப்படி வீட்டை கண்டு பிடிச்சிங்க?

அதுதான் நேற்றே சொல்லிட்டிங்களே

நல்லவேளை இப்பதான் மாமி வந்து மகளை எடுத்துக்கொண்டு போனாங்க

அதுவும் நேற்றே சொல்லிட்டிங்களே

ஓ அதுதான் புடுங்கி புடுங்கி கேட்டீங்களா? அதுசரி எதுக்கு  நேத்து போன் எடுக்கலை?

காத்திருக்கிறது மட்டுமில்லை  காக்க வைக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கு

என்வோ போங்க எனக்குத்தான் மனசே சரியில்லை. என்ன சாப்பிடுறீங்க என்றவாறு  பரபரப்பானவள் இன்னிக்கு மதியம் சாப்பிட்டுதான் போகணும்  சமையலில் இறங்கியவள் நான் வெஜுரேரியன் காய் மட்டும்தான் சமைக்க தெரியும் பரவாயில்லையா?

நானும்  வெஜுரேரியன்தான்  நான் (non) வெஜுரேரியன்  ..பசிக்கு எது இருக்கோ  எல்லாமே சாப்பிடுவேன்.

சமைத்து முடித்தவள் மேசையில் அவனிற்கு மட்டும் பரிமாறிவிட்டு காத்திருந்தவளிடம்.ஏன் உங்களிற்கு பசிக்கலையா

அதில்லை ஆம்பிளைங்களிற்கு பரிமாறிவிட்டு அவங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடறதுதான் எங்க ஊர் வழக்கம்.

மற்றவங்க பசியோடை பாத்துக்கொண்டிருக்க  சாப்பிட்டால் வயித்தை வலிக்குமாம் அதலை சேந்து சாப்பிடுறது எங்க ஊர் வழக்கம் எனக்கு வயித்து வலிவேண்டாம் சும்மா உங்காருங்க

சாப்பாட்டை போட்டு விட்டு அமர்ந்தவளிற்கு ஒரு பிடி உணவை எடுத்து வாயருகே நீட்டிளான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டாள் ஆனாலும் கண் மூடி வாய்திறந்தாள் தொண்டைவளியே உணவு உள்ளிறங்கும் போது கண்கள் கலங்கியிருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் போனடித்து மாமியார் அப்போதைக்கு வரமாட்டார் என்பதை உறுதி செய்தாள் அவர்களும் அதே மாடிக்குடியிருப்பில் வேறு பகுதியில் தான் குடியிருந்தார்கள்.போவதற்கு புறப்பட்டவனிடம்  உங்களிற்கு ஏதாவது அவசர வேலையிருக்கா என்றவளிடம்.

எனக்கென்ன வேலை  அவசரம் ஒண்டும் கிடையாது சோபாவில் அமர்ந்தான்

அப்ப கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமே அமர்ந்தாள் அதே சோபாவில்தான் கொஞ்சம் இடைவெளி

ஏதாவது  ஜோக்  சொல்லுங்களேன்.

ம்ம்ம்...ஜோக் வேண்டாம் அது போனிலை சொல்லுறன்.இப்ப  ஒரு சின்ன விடுகதை

விடை சரியா சொன்னா என்ன குடுப்பீங்க

என்ன வேணுமானாலும்..என்னை வேணுமானாலும். ஆனா தோத்திட்டா எனக்கு இங்கை ஒரு முத்தம் குடுக்கவேணும் தன் உதடுகளை காட்டினான்.

சீய்ய்ய்..செல்லமாய் கோபித்தவள் சரி சொல்லுங்க

வென்றாலும் தோற்றாலும் இலாபம்தான் எனவே ஈசியாய் ஒரு விடுகதை ..எல்லா ஆங்கில எழுத்தக்களிலும் றெம்ப கூலாக இருக்கும் எழுத்து எது??

ம்ம்...கொஞ்சம் யோசித்தவள் விடை தெரிந்திருக்கலாம். ஆனாலும் தெரியாது உதட்டை பிதுக்கினாள்.
சரி தோத்திட்டாய் எங்கை குடு.. உதட்டை காட்டினான்

முதல்லை விடையை சொல்லுங்க

B தான் ஏனெண்டா அதுதானே  Aக்கும்  C க்கும் இடையிலை இருக்கு

அட ஆமால்ல

எங்கை குடு குடு ஊம்ம்ம்..

அங்கையெல்லாம் முடியாது கன்னத்திலைதான்

சரி ஏதோ பரவாயில்லை கன்னத்தை காட்டினான்.

உதட்டை குவித்து கிட்ட நெருங்கியவனிள் கண்கள் முடிக்கொள்ள அவன் சட்டென கன்னத்தை திருப்பி தன்உதடுகளை அவள் உதடுகளோடு ஒட்டினான்  அவளிற்கோ பிரிக்க விருப்பமில்லை சோபவில் சரித்தான்.மெல்ல அவன் கைகளை விலக்கியவள்  மெல்லிய குரலில் இங்கை வேணாம்.
விசாலமான படுக்கையறை துள்ளிவிழுந்தால் தூக்கியெறியும் சொகுசு பஞ்சுமெத்தை. ஆரம்பிக்கும் ஆனந்த சயனத்தில் அவன். அவள் யன்னல் திரைகளை இழுத்தாள் பகல் இரவானது அவிழ்த்தஅவள் அங்கு நிலவானாள்.அலுமாரியை திறந்து காற் சலங்கைகளை கால்களில் மாட்டிக்கொண்டாள். அவள் மேனியில் அச் சலங்கைகள் மட்டுமே ஆடையாக

என்ன இது ??

எனக்கு மகிழ்ச்சியோ கவலையோ  சலங்கையை கட்டிக்கொள்வேன்.இப்போ நான் றெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இப்ப இது றெம்ப முக்கியமாக்கும் என நினைத்தவன் கையை நீட்டினான். அவன் கைகளில் அவள் வீணையானாள் மீட்டத்தொடங்கினான். முத்தத்தை  நெற்றியில் தொடங்கியவன் உதட்டை கடந்து கழுத்துவழியிறங்கி இடையை தொட்டபோதுதான் ..றெம்ப பெரிய இடத்திலை வாயை வைக்கிறமோ? ஏதாவது பிரச்சனை வந்தால் ???.  சே முழுக்க நனையிறதெண்டு முடிவெடுத்தாச்சு மொட்டாக்கு இனியெதுக்கு.முன்னேறினான். அவள் சலங்கை ஒலிக்க ஆரம்பித்தது. இந்தநேரம்  சீர்காளியின்ரை ஒரு மணிக்கொருமணி  எதிர் எதிர் ஒலித்திட எண்டிற பாட்டை  சிங்கப்பூர் வானொலியிலை போட்டால் எப்பிடியிருக்கும். .. பலநாள் பாலைவனத்தில் தாகத்தோடு  தண்ணியின்றி அலைந்த ஒரு ஒட்டகம் பசும் சோலையில் நீர் நிலையை கண்டது போல் தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினாள்.அடித்து ஒய்ந்தது  சலங்கை அவன் அணைப்பில் அவள்.

ஏய் ...

ம்...

றெம்ப சூடயிருக்கே

எது ??

அறைதான்

ஏசியை கொஞ்சம் கூட்டிவிடேன்.

குளிரை   கூட்டியவள் மீண்டும் கூடினாள்.
அன்ரிரவு வானொலிக்கு போனடித்து மகிழ்ச்சியான பாடல் ஒன்றையும் கேட்டிருந்தாள் நிகழ்ச்சி நடத்தியவரிற்கே ஆச்சரியம்.
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இரண்டு மாதங்கள் அவனிற்கு அனேகமாக ஒவ்வொரு நாளுமே அவள் வீட்டில் விருந்துதான் இப்பொழுதெல்லாம் அவனிற்கு சாப்பாட்டு காசு மிச்சம் அது மட்டுமல்ல தாரளமாக பியரும் அடிக்க அவள் அவ்வப்பொழுது அவன் சட்டைப் பையில் வைக்கும் பணம் உதவியது. இப்பொழுதெல்லாம் சிங்கப்பூர் வானொலிக்கு  இரண்டு நேயர்கள் குறைந்து போய்விட்டிருந்தனர். ஆனால் அவனிற்கு வேலைகள் அதிகரித்திருந்தது மட்டுமல்ல அடிக்கடி வெளிநாடுகளிற்கும் பயணிக்க வேண்டியிருந்தது கொள்வனவு பொருட்களை சேகரித்து வைப்பதற்காக  தனியாக ஒரு வீடும் தேடிக்கொண்டிருந்தான் அப்படியானதொரு நாளில்தான் அவள் வீட்டிற்கு சென்றிருந்தவனை
என்னங்க கொஞ்சம் இங்கை வாங்களேன். முதன் முதலாக சாமியறைக்குள் அழைத்து சென்றவள் அங்கு தட்டில் இருந்த இரண்டு மெட்டிகளை அவன் கையில் கொடுத்து இதை மாட்டிவிடுங்களேன்..

என்னது ?

மெட்டி இது கூட தெரியாதா?

அது தெரியிது இப்ப எதுக்கு இதைமாட்டி விடணும்.

தெரிஞ்சோ தெரியாமலே பிடிக்காத தாலியை கட்டிக்கிட்டேன்.  ஆனா அதை  கழற்ற மனசு இல்லை  அதாலை மெட்டியை கழற்றிட்டு  மனசுக்கு பிடிச்சவர் கையாலை போட்டுக்கபோறன்.அவன் கைகளில் திணித்தாள்.

நிலைமையின் விபரீதம் இப்பொழுதுதான் அவனிற்கு புரியத் தொடங்கியது. சங்கடமான நிலைமை  சரி தாலியா கட்டப் போறம் மெட்டிதானே மாட்டி விடுவம்.  மாட்டி விட்டான்.அன்று அவன் அணைப்பில் இருந்தவள் ..என்னங்க எனக்கு இப்பிடியே செத்துடணும் போல இருக்கு..ஏய் லூசு  என்ன உளறுறாய்??  வீட்டு அழைப்பு மணி அடித்தது.. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள் போய்  துவாரம் வளியாக பாத்தவள்  ஜயையோ மாமியும் மகளும்  அவளிற்கு காத்தாலை லேசா உடம்பு சரியில்லை என்றவள் .திரும்ப ஓடிவந்து அவனை குளியலறைக்குள் தள்ளி கதவை சாத்தி விட்டு போயிருந்தாள்.
அப்பொழுதான் அவன் மண்டையில் உறைத்தது ஜயோ  வசல்லை செருப்பை கழட்டி விட்டிருந்தனே  கவனிச்சிருப்பாங்களோ?? என்ன செய்யலாம்.

குளியலறை யன்னலை திறந்து எட்டிப்பார்த்தான் 16 ம் மாடி தலை சுத்தியது குதிச்சால் எலும்புகூட மிஞ்சாது. என்ன செய்யலாம்.?? அப்பதான்  அவனிற்கு ஊர் பிள்ளையாரின்  ஞாபகம் வந்தது  மருதடியானே உனக்கு சின்ன வயசிலை தேங்காயெல்லாம் உடைச்சு கற்பூரம் கொளுத்தியிருக்கன் என்னை காப்பாத்து. அவள் மாமியாரை சமாளித்து அனுப்பி விட்டிருந்தாள். உடைகளை  அவசரமாய் எடுத்து அணிந்தவன் வெளியேறியபோது அவள் குழந்தை அவனை பார்த்து புன்னகைத்தது அந்தப் புன்னகை அவனை ஊடுருவி மனதில் என்னவோ செய்தது. இனி அவளிடம் போவதில்லை  முடிவெடுத்தான் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000


அப்பொழுது அவன் அடிக்கடி மலேசியாவிற்கும் போய் வருவதால் ஈசூன்  (yishn)பகுதியில் வீடு எடுத்திருந்தான். வானொலியில்  அவள் மீண்டும் சோகப் பாடல்கள் கேட்கத்தொடங்கியிருந்தாள். அவன் பாடல் எதுவும் கேட்பதில்லை. அவனது குடியிருப்பிற்கு கீழே உள்ள கோப்பிக்கடையில்  தினமும் பத்திரிகையை கையில் எடுத்தபடி பிளேன் ரீ குடிப்பது  அவனது வழைமை. அன்றும் அப்படி பத்திரிகையை புரட்டியவன்   ..மாடியில் இருந்து குதித்து இளம் தாய் தற்கொலை  படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.   மனது லேசாய் வலித்தது  நானும் ஒரு காரணமோ .  யோசித்தான்.   சே இதையெல்லாம் யோசிச்சு கொண்டிருந்தால் அடுத்த வேலை நடக்காது.
இப்பொழுதெல்லாம் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள். ஆனாலும் அங்கு நிற்கும் போது வழைமையாக பத்திரிகையை எடுத்தபடி பிளேன்ரியோடு அமர்ந்தவன் முன்னால்

காய்.யு ஆர் ரமிலியன்.??

சிங்கையில் இப்பிடித்தான் ஆங்கில அகராதியிலேயே இல்லாத சொற்கள் எல்லாம் கேட்கலாம்.
நிமிர்ந்து பார்த்தான் சப்பை முகம் பழுப்பு நிறம்.மலே பெண்போல தெரிந்தாள் கைகளால் மார்போடு  கட்டியணைத்த பைபிள்.

நோ நான் ஜப்பானிஸ் ஆனா தமிழ்பேப்பர் படிப்பன்.

யூ ஆர் வெரி பனி'funny) லா...ஜ ஆம் போலின்   வலக்கையை நீட்டினாள்.

தொடரும் ஆனால் இப்போதைக்கில்லை.....

 முன்னைய பதிவுகள்இங்கு அழுத்தவும்

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

0
0
இரவீந்திரன் ...நட்பு

டேய் றோஸ்  ..என்று கூப்பிட்டால் கோவிக்காமல்  தலையை இடப்பக்கமாக சற்று சரித்து சிரித்தபடியே .என்ன? என்பான். றோஸ்  அவனது பட்டப்பெயர்.காரணம் பார்ப்பதற்கு நல்ல வெள்ளை  வகுப்பில் வாத்தியாரிடம் அடிவாங்கி அழும்போதோ அல்லது  கோபம் வந்தாலோ அவன் முகம் சிவந்து றோஸ் நிறமாக மாறிவிடும். மெதுவாகத்தான் கதைப்பான்.அவனது பழக்கவழக்கங்கள்  கொஞ்சம் பெண்மைத் தன்மை கலந்ததாக இருக்கும். கதைக்கும் போதும் அடிக்கடி நாக்கால் கீழ் உதட்டை ஈரமாக்கிக் கொள்ளும் பழக்கமும் உண்டு. அவன் சொந்தப் பெயர் ரவீந்திரன் சங்கானை  ஓழாம் கட்டையடியை சேர்ந்தவன்.அவனது தந்தை விபத்தில் இறந்துபோக தாயார் இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு அவர்வழியில் போய்விட ரவீந்திரனையும் அவனது தம்பியையும்  அவனது தந்தையின் தாயார் அப்பம்மாவே  கவனித்ததோடு படிப்பித்தும் கொண்டிருந்தார். அவரிற்கு நிரந்தர வருமானம் எதுவும் கிடையாது கூலிவேலைகள் செய்துதான் குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அவனும் ரவியும் ஒரே வகுப்புத்தான்  அவர்கள் ஒன்பதில் படித்துக்கொண்டிருந்த பொழுது ரவியின் அப்பம்மா காச நோயால் பாதிக்கப்பட  ரவி  படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். சங்கானை சந்தியில் காரைநகர் வீதியில் இருந்த பிடைவைக்கடையில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அவனது குடும்ப நிலை கருதி வகுப்புக்களிற்கு வரமலேயே அவன் சோதனை எடுக்க பாடசாலை நிருவாகம் வசதி செய்து கொடுத்திருந்தது. பகலில் வேலை இரவில் ஏழாம்கட்டை பற்குணம் ரீச்சர் இலவசமாகவே பாடம் சொல்லிக் கொடுத்ததால் பத்தாம் வகுப்புவரை முடித்தவனிற்கு அதற்குமேல் தொடர முடியவில்லை.வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். அவனும் ரவியின் கடைக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று இடைக்கிடை சந்தித்து கதைப்பது வழைமை காலப்போக்கில் அதுவும் குறைந்து போனது.

0000000000000000000000000

இந்தியப்படைகள் யாழ்குடா முழுவதையும் கைப்பற்றிவிட்டதொரு நாளின் மாலைப் பொழுதில் பிறேமும் அவனும் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது ..டேய் றோஸ் எப்பிடியடா இருக்கிறாய் சைக்கிளை நிறுத்திய ரவி அதே தலையை சரித்த சிரிப்புடன் ஆனாலும் கொஞ்சம் கலவரத்தோடு இருக்கிறனடா.ஆனா நீங்கள் இதுக்குள்ளை ஓடித்திரியிறீங்கள் அவங்கள் எல்லா பக்கமும் நிக்கிறாங்கள் கவனமடா என்றான்.

எங்களை விடு நீ இப்பவும் புடைவைக்கடையிலை துணிகிழிக்கிறவேலைதானோ?

ஓமடா என்ன செய்ய அப்பம்மாக்கும் இப்ப துப்பரவா ஏலாது உந்த புடைவைக்கடை சம்பளத்திலை ஒண்டும் செய்யஏலாது அதுதான் சவுதிக்கு போறதெண்டு முடிவெடுத்திருக்கிறன்  கொஞ்ச காசும் சேத்து வைச்சிருக்கிறன். முதலாளியும் கொஞ்சம் உதவிசெய்யிறதாய் சொல்லியிருக்கிறார். போய் சேந்திட்டனெண்டால் தம்பியையும் வடிவா படிப்பிச்சிடுவன்.அப்பம்மாவையும் கடைசி காலத்திலை நல்லபடியா பாக்கவேணும்.அதுதான் என்ரை ஆசை.

சரியடா சவுதி போனதும் எங்களை மறந்திடாதை கடிதத்திலை எங்களுக்கும் ஒரு வசனம் எழுதிவிடு .

உங்களை  எப்பிடி மறப்பனடா அதுசரி நீங்கள் எவ்வளவு காலத்தக்குஇப்பிடி திரியபோறியள்??

ஆருக்கு தெரியும் சரி சந்திப்பமடா விடைபெறுகிறார்கள்.

  000000000000000000000

ரவி மருந்து குடிச்சு செத்திட்டானாம் பாவம் பேத்தியார்காறி  விழுந்து பிரண்டு அழுதுகொண்டிருக்காம் வந்தவன் சொன்ன தகவல்.

மருந்து குடிச்சவனா??எதுக்காம்.அவனிற்கு ஆச்சரியம்.

சங்கானை மீன்கடை சந்தி சீக்கியனாம்.

அந்த சென்றியிலை இருக்கிற சீக்கியனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறன்.பின்னேரங்களிலை கசிப்படிச்சிட்டு றோட்டாலை போற வாற எல்லாருக்கும் அடிக்கிறவனாம் பெட்டையளோடையும் சேட்டையாம். அதாலை பெட்டையள் அந்தபக்கத்தாலேயே பொறேல்லையாம்.ரவிக்கு என்னதான் நடந்ததாம்.??

அது வடிவாய் தெரியாது ஆனால் பக்கத்து சைக்கிள் கடையிலை வேலை செய்யிற பெடியன்தானாம் ரவியை வீட்டிலை கொண்டுபோய் விட்டவன் அவனை கேட்டால் முழுக்க தெரியும். தகவல் சொன்னவன் போய்விட்டான்.

அவனும் பிறேமும் சைக்கிளை அந்த சைக்கிள் கடை பெடியனின் வீட்டை நோக்கி மிதித்தார்கள்.

சைக்கிள் கடையில் வேலை செய்யும் பெடியன் மிரட்சியோடு நடந்ததை விபரிக்க தொடங்கினான். அண்ணை அண்டைக்கும் சீக்கியன் நல்லா கசிப்படிச்சிட்டு இருந்தவன்  ரவியண்ணை மத்தியனம் தன்ரை சைக்கிள் ரியூப் ஒட்டத்தந்திட்டு வேலை முடிஞ்சு சைக்கிளை எடுக்க வந்தவர். அந்த நேரம் அந்த சீக்கியன் ரவியண்ணையை செக் பண்ணவேணும் எண்டு சென்றி பொயின்ருக்குள்ளை கூப்பிட்டான். ரவியண்ணை சென்றி பொயின்றுக்கை போன உடைனை சாக்காலை வாசலை மூடிப்போட்டான் . பிறகு கொஞ்ச நேரத்தாலை மேலை சேட்டு இல்லாமல் துவக்கோடை வந்து கடையிலை இருந்த கிறீஸ்பேணியை (டப்பா) தூக்கிக்கொண்டு போனான். முதலாளியும் கடையை சாத்திப்போட்டு என்னை போகச்சொல்லிட்டார். ரவியண்ணையின்ரை  சைக்கிள் நிண்டதாலை நான் அதை எடுத்துக்கொண்டு கொஞ்ச தூரத்திலை வந்து காவல் நிண்டனான்.

என்னது கிறீஸ்பேணியா?? இவங்கள் மனிசரே இல்லை.பிறகு என்ன நடந்தது??

ரவியண்ணை நோ சேர் ..பிளீஸ் சேர் ..எண்டு கெஞ்சின சத்தம் கேட்டது கொஞ்ச நேரத்தாலை அழுதபடி உடுப்பை போட்டபடி நடக்க ஏலாமல் நடந்து வந்தவர் தன்னாலை சைக்கிள் ஓட ஏலாது தன்னை வீட்டைகொண்டு போய் விடச்சொன்னார் கொண்டுபோய் விட்டனான்.அடுத்தநாள்தான்  ரவியண்ணை மருந்து குடிச்சிட்டாரெண்டு கேள்விப்பட்டனான்.

அதுசரி சீக்கியனுக்கு ஆர் கசிப்பு வாங்கி குடுக்கிறது??

கொஞ்சம் தயங்கியபடி நான்தானண்ணை .

காசு தாறவனோ??

றோட்டிலை போறவையிட்டை பறிச்சு தருவான்.

யாரிட்டை போய் வாங்கிறனி?  பெயரை சொன்னான் . சரி நீ போ என்றவன் பிறேமை திரும்பி பார்த்தான். பிறேம் தலையை அசைத்தான்.
0000000000000000000000000
அன்று மாலை பிறேமும் அவனும் சைக்கிளில் நாகநாதன் டிஸ்பென்சறிக்கு முன்னால் வந்திறங்கி நின்றபடி நோட்டம் விட்டனர்.அவர்கள் நின்ற இடத்திலிருந்து  சுமார் 600 மீற்றர் தூரமளவில்தான் அந்த காப்பரண் இருந்தது. சிறிய குடில்போல் அமைக்கப்பட்டு மண்ணால் மெழுகியிருந்தது. சீக்கியன் பிரதான வீதியை கவனித்தபடி இருந்தான். டிஸ்பென்சறிக்குள் நின்றிருந்த மருத்துவ தாதி தேவியக்கா வெளியில் எட்டிப்பார்த்தவர். டேய் பெடியள் என்ன இந்தப் பக்கம் என்றபடி வெளியே வந்தார்.

காச்சல் மருந்து எடுக்கவேணும் அதுக்குத்தான் வந்தனாங்கள்.

உங்களை பாத்தால் காச்சல் காரர் மாதிரி தெரியேல்லை.இரண்டு பேரிலை யாருக்கு காச்சல்?

காச்சல் எங்களிற்கில்லை உங்களுக்குத்தான்  இன்னும் கொஞ்ச நேரத்திலை வரப்போகுது சிரிக்கிறார்கள்.

குறுக்காலை போவாரே என்னடா செய்யப் போறியள். என்னத்தையெண்டாலும் செய்யுங்கோ   டிஸ்பென்சறிக்குள்ளை  மட்டும் கால் வைக்கக்கூடாது  சொல்லிப் போட்டன்... செல்மாய் திட்டியபடி உள்ளோ போகிறார்.

தேவதையிளம் தேவி ஊரை சுற்றும் ஆவி  காதலான கண்ணீர் காணவில்லையா...ஓஓஓ நீ யில்லாமல் நானா.. பாடுகிறான்.
காச்சல் துன்பம் எண்டால் என்னட்டை தானே வருவியள் வாங்கோடா அப்ப நஞ்சுஊசிதான் அடிப்பன்.  என்று திரும்பிப் பார்த்து சொல்லிவிட்டு   உள்ளே போய்விடுகிறார்.

சிறிது நேரம் காத்திருந்தார்கள் முழங்காலில் ஒரு பிளாஸ்ரிக் கானை தட்டியபடியே சைக்கிள் கடைக்கார சிறுவன் வந்து கொண்டிருந்தவன் அவர்களை கண்டதும் மிரண்டவனாய் அண்ணை என்ன இஞ்சை நிக்கிறியள்?

எங்கை கசிப்பு வாங்கத்தானே..

ஓமண்ணை

கானை என்னட்டை தா..

அண்ணை  ஒண்டும் செய்துபோடாதேங்கோ பிறகு சீக்கியன் எனக்கு அடிப்பான் அண்ணை.

பயப்பிடாதை என்றபடி கானை வாங்கியவன் டிஸ்பென்சரி கிணற்றில் அள்ளிய தண்ணீரால் பாதி நிரப்பியவன். சில நிமிடங்கள் பொறுத்திருந்துவிட்டு  தனது பிஸ்ரல் தயார் நிலையில் இருக்கிறதா என பார்த்து உறுதி செய்து பின்பக்கத்தில் செருகிக் கொண்டவன்.  சிறுவனிடம் டேய் இந்த இடத்திலையே நிக்கவேணும் என்றவன் பிறேம் நீ சைக்கிளை  சரியா இடத்துக்கு கொண்டு வா என்றுவிட்டு காவலரணை நோக்கி நடக்கத்தொடங்குகின்றான்.

காவலரணிற்கு முன்னால் வந்துவிட்டவனிடம் சீக்கியன் அவனையும் அவனின் கையிலிருந்த கானையும் பார்த்துவிட்டு சோட்டா  லடுக்கா  ககாகே (சின்ன பையன் எங்கே) என்றான்  கையிலிருந்த  பிளாஸ்ரிக் கானை  அவனை நோக்கி எறிந்தவன் சோட்டா லடுக்கா  உன்ரை கொம்மாவை தேடி போயிருக்கிறான் என்றபடி பின்னாலிருந்த பிஸ்ரலை உருவி இயக்குகிறான். றோட்டால் போய்க்கொண்டிருந்த பலரும் விழுந்து படுக்க பலர் ஒழுங்கைகளிற்குள்ளால் ஓடிக்கொண்டிருந்தனர். நூறு மீற்றர் தூரத்திலிருந்த இன்னொரு காவலரணில் இருந்த ஆமிக்காரன் முகாமை முகாமை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தான். அவனது பிஸ்ரல் இயங்கி முடிக்கவும் பிறேம் சைக்கிளை  கொண்டு வந்து அவனருகில் பிறேக் அடிக்கவும் சரியாக இருந்தது. சைக்கிளில் ஏறப்போனவன்  ஏதோ நினைத்தவனாக  சைக்கிளில் தொங்கிய  துணிப்பையில் இருந்த கைக்குண்டுகளில் ஒன்றை எடுத்தவன் கீறீசா பூசுறாய் என்றபடி  சரிந்து கிடந்த  சீக்கியனின் தொடைகளிற்கிடையில் வைத்து அதன் கிளிப்பை உருவி எறிந்து விட்டு சைக்கிளில் பாய்ந்து ஏறினான். காவலரண் அதிர்ந்து அடங்கியது.  அவர்கள் சங்கானை  சுடலையை கடந்து சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபொழுது  ரவீந்திரனின்  கனவுகள்  கற்பனைகளோடு  அவனது உடலும் எரிந்து முடிந்து சாம்பலில்  இருந்து புகைமட்டும் வெளிவந்துகொண்டிருந்தது அந்த தேசத்தை போலவே.



பி.கு.  நண்பன் ரவீந்திரனின் நினைவுகளோடு இதனை எழுதி முடித்திருந்தாலும்.  இன்று நினைத்து பார்க்கும்போது  எங்கோ பிறந்த சீக்கியன்  இரண்டு உயிர்களுமே  அனியாயமான இழப்புக்கள்தான்.        
முன்னைய தொடர்களை படிப்பதற்கு இங்கு அழுத்துங்கள்                                                                           

ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல்.

0
0
ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய  மடல்.
சாத்திரி ஒரு பேப்பர்.

முன்னை நாள் தமிழ் தேசிய  கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ.  வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி  பகிரங்க மடலும் அறிக்கையும்  எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர்.  கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென  அண்மையில்  ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை  படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும்.

ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து  அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே  அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்திற்கு முன்னாடி றீவைண் பண்ணி அப்படியே திரும்ப ஓடவிடுங்க. .ஓட விடுவோமா??  விடுதலைப் புலிகளில் மட்டு அம்பாறை பொறுப்பாளர்  கருணா விடுதலைப் புலிகளோடு முரண்பட்டு  தான் பிரிந்து போய் விட்டதாக அறிவித்திருந்த நேரம். மட்டு அம்பாறை  மாவட்டங்களில்  இருந்த புலிகளின் முகாம்களில் தலைவர் பிரபாகரனின் படங்களை அகற்றிவிட்டு தன்னுடைய படங்களை வைக்குமாறு கட்டளையிட்டிருந்த நேரம்.மகளிர் அணிக்கு பொறுப்பாக இருந்த நிலாவினி  தனக்கும் கருணாவிற்கும் இருந்த கள்ள உறவு காரணமாக தன்னுடைய விசுவாசத்தினை கரணாவிற்கு காட்டுவதற்காக  தேசியத் தலைவரின் படங்களை உடைத்தும் கிழித்தும் எறியுமாறு கட்டளையிட்டிருந்தார். ஆனால் தலைவரது படங்களை பல முகாம்களில் போராளிகள் கழற்றி பத்திரமாக ஒழித்து வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது.  அப்படி கருணா அறிவித்த சில நாட்களில்  கிழக்கு பாராளுமன்ற  உறுப்பினர்கள் பலர் வன்னிக்கு போய்விட மற்றையவர்கள் மொனமாக இருந்த காலகட்டம். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக நீங்கள் உங்கள் தலைமையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை நடத்தியிருந்தீர்கள். மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தினை கிழித்தெறிந்தது மட்டுமல்லாது ஒரு படி மேலே போய்  தலைவரின் கொடும்பாவியையும் கொழுத்தியிருந்தீர்கள் என்பதனை மறுக்க முடியாது  காரணம் அன்று அந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அன்று செய்தி சேகரிக்க வந்த பல பத்திரிகையாளர்களர் இன்று வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள்.

அன்றைய சம்பவத்திற்கு பின்னர் கருணாவிற்கு ஆதரவாக நடந்த அடையாள உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டிருந்தீர்கள்.பின்னர்  மட்டு அம்பாறையில் கருணாவின் அதிகாரம் கலைக்கப்பட்ட பின்னர்   புலிகளின் தலைமை தாராக்கி சிவராம் ஊடாக தொடர்பு கொண்டு உங்களை வன்னிக்கு வருமாறு அழைத்திருந்தனர். அப்பொழுது வன்னிக்கு சென்ற சந்திரநேரு சந்திரகாந்தனுடன்  வன்னிக்கு சென்றிருந்தீர்கள். புலிகள் உங்களை வன்னிக்கு அழைத்தற்கு காரணம்  கொழும்பில் புலிகள் ஒரு ஆடம்பர மாடிக்குடியிருப்பு ஒன்றினை உங்கள் பெயரில்  வாங்கி அதனை தங்கள் பாவனைக்கு பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த மாடிக்குடியிருப்பினை  வாங்குவதற்கான  புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இலண்டன் கிளையில் இருந்தே பணம் வழங்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக பேசுவதற்காகவே அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது. வன்னியில் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் கஸ்ரேவை சந்தித்த நீங்கள் கிழக்கில் நடந்த சம்பவங்களிற்காக கஸ்ரேவை கட்டிப்பிடித்து பல தடைவை மன்னிப்பும் கேட்டிருந்தீர்கள்  அப்பொழுது  மற்றை பாராளுமன்ற  உறுப்பினர்களான் கனகரத்தினம்.செல்வராசா கஜேந்திரன் மற்றும் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரும் உடனிருந்திருந்தனர்.

அன்று இரவு உங்களை சந்தித்த பொட்டு அம்மான்  நீங்கள் செய்த வேலைக்கு உங்களை போட்டுத் தள்ளியிருக்கவேணும் ஆனால் உங்கள் தேவை இன்னமும் எங்களிற்கு இருக்கிறது என்றபொழுது  உங்களுடன்  அதே சந்திரகாந்தனும். துரோணர் மற்றும் சாத்தப்பனும் அங்கு இருந்திருந்தனர். அன்று உங்களை  புதுக்குடியிருப்பிற்கு  அழைத்து சென்றவரே தற்சமயம்  தலைமை செயலகம் என்று  சொல்லிக் கொண்டு  இலண்டனில் வசிக்கும்  சங்கீதன்தான் இவையெல்லாம் வெளிநாடு வந்ததும்  இங்கிலாந்தின் உறைபனிக் குளிரில் உங்களிற்கு மறந்து போயிருக்கலாம் ஆனால் இப்பொழுது படிப்படியாக  ஞாபகம் வரத்தொடங்கியிருக்கும்.

நீங்கள் வெளிநாடு வந்த சில காலங்களில் உங்கள் பெயரில் இருந்த  புலிகளின் கொழும்பு வீடு மருமகனின்  பொறுப்பில் இருந்தது  அதனை அறிந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் உங்கள் மருமகனை கைது செய்து  அந்த வீட்டையும் கையகப்படுத்தியிருந்தனர்.  ஆனால்  புலிகளின் முடிவிற்கு பின்னர்   அன்று மகிந்தாவுடன் நெருக்கமாக இருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கிசோர்  மூலமாக மகிந்தாவுடன்  தொடர்புகளை ஏற்படுத்தி உங்கள் வீட்டினை  மீள பெற்றதுடன் உங்கள் மருமகனும் விடுவிக்கப்பட்டுவிட்டார். இப்போ பல கோடி பெறுமதியான புலிகளின் சொத்து உங்கள் கைகளில். வெளிநாட்டில் மகிந்தாவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்படியே  மகிந்தாவுடன்  டீலை போட்ட நீங்கள் கில்லாடிதான் போங்கள். அது மட்டுமல்ல  பின்னர்  புலம்பெயர் தேசத்தில்  நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி அதை வைத்து உருப்படியாக ஏதாவது செய்யலாமென நினைத்து அதற்கான  தேர்தல்கள் நடந்த பொழுது அதனை உடைப்பதற்கென்றே  திட்டமிட்டு அதற்குள் புகுந்து வேட்பாளராகியிருந்தீர்கள்.  உங்கள் சுயமுகம் தெரியாமல்  பழைய தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற நினைப்பில்  வாக்குகளை போட்டுவிட்டார்கள்.

ஆனால் தேர்தல்கள் முடிந்த கொஞ்ச காலங்களிலேயே உங்கள் சுயமகம் தெரிந்தது  நாடு கடந்த அரசை இரண்டாக உடைக்க முயற்சித்தீர்கள் அதிலிருந்து  பலருடன் வெளியேறுவதாக அறிக்கையும் வெளிவந்தது  ஆனாலும் பெரியளவில் உங்கள் பருப்பு வேகவில்லை.   அப்பப்போ பகிரங்க மடலும் அறிக்கைகளும் வெளிவந்துகொண்டேதான் இருந்தது.  சில காலங்களிற்கு முன்னரும் ஒரு  அறிக்கை  விட்டிருந்தீர்கள் காரணம் சிறீலங்கா அரசிற்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டு  ஏன் இன்னமும்  சிறீலங்கா அரசின் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை பெறுகிறீர்கள் என  ஒரு பத்திரிகையாளர் கேட்தற்காக  வெளிவந்த அறிக்கை  அது .அதில் நீங்கள் சொல்லியிருந்த காரணம்  கிழக்கு மாகாணத்தில் முன்னை நாள் போராளிகளை எந்த உதவி அமைப்புக்களும்  கவனிப்பதில்லை  எனது பாராளுமன்ற ஓய்வூதியத்தை  முன்னை நாள் போராளிற்காக  செலவிடுகிறேன் அதற்காகத்தான் அந்த ஓய்வூதியத்தை பெறுகிறேன் என்று  சொல்லியிருந்தீர்கள்.  அந்த அறிக்கை வெளி வந்த ஒரு சில நிமிடங்களிலேயே   ஒரு தொண்டர் அமைப்பு  உங்களிடம் இருக்கும் கிழக்கு மாகாண முன்னை  போராளிகளின் விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றோம் என மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

அதற்கு உங்கள் பதில் எதுவும்  இன்றுவரை கிடைக்கப் பெறவில்லை அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில்  நீங்கள் யாரிற்கு உதவினீர்கள் என்கிற  விபரங்கள் கூட இல்லை   அப்படியானால் நீங்கள் யாரிற்கும் உதவவும் இல்லை  எங்களிடம் உதவிகோருபவர்களி்ன்  விபரங்களும் இல்லை  அரசாங்க ஓய்வூதியப்பணம் உங்கள்  வங்கி கணக்கிற்கு  பத்திரமாக போய் சேருகின்றது. அப்படித்தான் அண்மையில் கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். கிழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பறக்கணித்தாலும் அங்கு தேர்தல் நடக்கத்தான் போகின்றது அங்கு சிறீலங்கா சுதந்திர கட்சியும்  முஸ்லிம் காங்கிரசும் வெற்றியடைந்து  தமிழரின் அங்கீகாரமானது கேள்விக்குறியாகிவிடும் இதுதான்  சிறிலங்கா அரசு எதிர்பார்ப்பது. அதைத்தான் நீங்கள் செய்யச்சொல்கிறீர்கள்.   அப்போ உங்கள் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது யார்??
வழைமையாக நான் எந்தக் கட்டுரைகள் எழுதினாலும் சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாக  தொடர்புகொண்டு அவர்களது கருத்தையும் கேட்டபின்னரே கட்டுரையை வெளியிடுவது வழைமை ஆனால் நான் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை காரணம்   நீங்கள் யார் ??பெரிய அரசியல்வாதியாச்சே  மறுநாளே மறுப்பறிக்கை வெளியிட்டு விடுவீர்கள்எனவேதான் பரம இரகசியமாக சில கேள்விகளை இங்கு வைக்கிறேன் அதற்கான பதில்களை  படுத்திருந்து யோசிப்பீங்களோ றூம் போட்டு யோசிப்பீங்களோ தெரியாது  ஆனால் எந்த நேரமும் ஒரு பேப்பரிற்கு அனுப்பி வைக்கலாம்.

1)கருணா பிரிவின் போது கிழக்கு மாகாணத்தில் இருந்த அத்தனை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்களும் மெளனமாகவோ அல்லது  கருணாவிற்கு எதிர்ப்பு தெரிவித்போது நீங்கள் மட்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின்  கொடும்பாவியை  கொழுத்தியது ஏன்?

2)புலிகளின் பணத்தில் வாங்கப்பட்ட கொழும்பு வீட்டினை  மீட்பதற்காக மகிந்தவுடன் பேரம்பேசியபடியே  வெளிநாடுகளில் தமிழ் தேசியம். போராட்டம் என எப்படி உங்களால் ஊடகங்களில் மக்கள் தலையில் மிளகாயும் இஞ்சியும்  அரைக்க முடிந்தது.

3)இலங்கையரசிற்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு இன்னமும் எதற்காக பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதிய பணத்தினை பெற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள்.

4)உங்கள் ஓய்வூதிய பணத்தினை பாதிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்காக செலவிடுவதாக அறிக்கை விட்டிருந்தீர்கள் இதுவரை அதனால் பயன் பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவீர்களா

5)நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து போட்டியிட்டு விட்டு சொற்ப காலத்திலேயே  அதனை உடைக்க முனைந்தது எதற்காக

6)கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து  கிழக்கு முழுதும் உள்ள நிருவாக ஆட்சி அலகுகளும் சிங்களத்திடம் போய் சேர்ந்துவிட்டால் உங்களிற்கு இலாபம் கிடைக்கலாம் ஆனால் கிழக்கு மக்களிற்கு என்ன இலாபம்

உங்கள் பதில்களை எமக்கு இரகசியமாகவே அனுப்பி வைக்கலாம்  அதனை நாமும்  இரகசியமாக பிரசுரிப்போம்.
கேள்வி அவ்வளவுதான்  பதிலிற்காக  வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் சாத்திரி.

அலை மகள்.

0
0
அலை மகள்.

அன்றைய பூரணை நிலவு அள்ளியெறிந்து கெண்டிருந்த வெள்ளொளியில்  மெல்லலைகள்  வீசிக்கொண்டிருந்த முல்லைக்கடலின்  ஓருபகுதி கைகளையும் கால்களையும் அகலப்பரப்பி அண்ணாந்து படுத்திருந்தபடி ஆயிரமாயிரமாய்  மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பூரணையின்  பூரணநிலை  பூரித்துப் போயிருந்தாள் அலைமகள். ஆகாயத்தை  பார்த்தபடியே  கடலில் கைகால்களை விரித்து மிதப்பதென்றால் அவளிற்கு அளவற்ற ஆசை.  கரையில் நின்றிருந்த பயிற்சியாளர் இரண்டாவது தடைவையும் விசிலடித்து  கையில் சிறிய சிவப்பு வெளிச்சத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டார் அவள் அசைவதாய் தெரியவில்லை.  கையிலிருந்த நடைபேசியில்(வோக்கி)தூரத்தே காவலிற்கு நின்ற  கடற்புலிகளின் படகோடு தொடர்பு கொண்டதையடுத்து  படகு அவளை நோக்கி  வந்துகொண்டிருந்தது.  அதன் அருகான வருகையை உணர்ந்து தன்னிலைக்கு திரும்பியவள் தலையை  திருப்பிப்பார்த்தாள்.  கரைக்கு போகும்படி  படகிலிருந்து கட்டளை வந்தது. நீந்திக் கரை வந்து சேர்ந்தவளிடம்.

அலை உமக்கு எத்தினை தரம் விசில் அடிக்கிறது காது கேக்கேல்லையோ ''கோபமான பயிற்சி ஆசிரியர்.  மன்னிச்சு கொள்ளுங்கோ மாஸ்ரர்  அண்ணாந்து ஆகாயத்தையே பாத்துக்கொண்டு படுத்திருந்ததிலை கவனிக்கேல்லை நேரம் போனதே தெரியேல்லை தயங்கியபடி சொல்லி முடித்தாள். விட்டால் விடியும் வரைக்கும் வெள்ளி பாத்தக்கொண்டு படுத்திருப்பீர்.   சரி மற்றாக்கள் வெளியாலை வந்து உமக்காக காத்துக்கொண்டு நிக்கிறனம் கெதியா போய் உடுப்பை மாத்திக்கொண்டு ஓடிவாரும்  கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு போய்விட்டார்.  மறைப்பில் சென்று உடலில் இறுக்கமாக அணிந்திருந்த நீச்சல் உடைகளை மாற்றி சீருடைக்குள்  நுளைந்தவள்  ஓடிவந்து  வாகனத்தில் ஏறிக்கொண்டாள். வாகனம் அவர்களது முகாமை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தது.

ஒன்றரை வருடங்களாகத்தான் அவளிற்கு  அலைமகள்  என்கிற பெயர் அதற்கு முன்னர் சோபனா. அதுவும் செந்தப்பெயர் கிடையாது.  அவளது சொந்தப் பெயர் விஜிதா.  அவள் படிக்கிற  காலங்களில் அவளது அழகான அகன்ற  கண்களை  பார்த்து  எல்லாருமே  அன்றைய காலத்தில் பிரபலமாகவிருந்த நடிகை சோபனாவின் கண்கள்  போல இருக்கிறதென்று  சொல்வார்கள். அவள் இயக்கத்தில்  சேர்ந்து பயிற்ச்சிக்கு போனபோது அவளுடன் இருந்தவர்களும்  அவளது கண்களைப்பார்த்து  சொபனாவை போல இருக்கிறாய் என்று சொன்னதால் தனது இயக்கபெயராக சோபனா என்று வைத்துக்கொண்டாள். ஓயாத அலை கிளிநொச்சி  சண்டையின்போது  வீழ்ந்து வெடித்த  எறிகணையொன்றின் துண்டொன்று அவள் இடக்கண்ணை  ஊடறுத்து போனதில் சிகிச்சை முடிய  அழகான  அகன்ற இடக்கண் இருந்த இடத்தில் ஆழமான குழியொன்று இடம்பிடித்தது. அதற்கு பின்னர் அவளை யாராவது சோபனா என்று அழைத்தாலே அவளிற்கு நக்கல் பண்ணுவது போல இருக்கும்.

சில காலங்கள் போக  கடற்புலியில் இணைந்தாள் கடுமையான பயிற்சிகள். பயிற்சி முடிவின் இறுதிநாள் நடந்த போட்டிகளில் நீண்ட நேரம் மூச்சடக்கி சுழியோடுதல்  குறுகிய  நேரத்தில் நீண்ட தூரம் நீந்துதல். அதிக நேரம் கடலில் அசையாமல் படுத்திருந்தல் என்று அனைத்திலும் முதலாவதாக வந்தவளிற்கு கடற்படை தளபதி நேரில் வந்து  நீச்சல்காரர்கள் பயன்படுத்தும் கடல் ஆழத்திலும்  நேரம் பார்க்கக்கூடியதும் தண்ணீர் உள்ளேபோகாத கைக்கடிகாரம் பரிசாகக் கிடைத்தது. அந்தக் கடிகாரத்தை அனைவரிற்கம் காட்டி பெருமை அடித்துத் திரிந்தவள் பெரும் கடற்சண்டைகளிலெல்லாம்  தனது திறைமைகளையும் வெளிக்காட்டியதொரு காலத்தில் சமாதானம் என்கிற அறிவிப்பு வந்தது. பேச்சு வார்த்தையாம் செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. அவளிற்கோ யார் பேசுகிறார்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நீண்டகாலம்  பார்க்காத தனது தாயாரையும் ஒரோயொரு மூத்த சகோதரனையும் யாழ்ப்பாணத்தில் போய் பார்த்துவிட்டு வர அனுமதி வாங்கியிருந்தவள். இயக்கம் யாழ்ப்பாணத்தை கைவிட்டபின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலாக போயிருந்த அரசியல் பிரிவுக்காரரோடு அவளும் சேர்ந்தே போயிருந்தாள்.

கட்டிப்பிடித்து தூக்கியும் மாலைபோட்டு  ஏன் சிலர் ஆராத்தி எடுத்தும் வரவேற்றிருந்தனர். அந்த ஆர்ப்பாடங்களோடு இடம்பெயர்ந்து  கோப்பாயிலிருந்த  மனது குடும்பத்தை தேடி கண்டு பிடித்து போனபோது  ஓடிவந்து கட்டிப்பிடித்து  கொஞ்சிய அம்மா..  தங்கையை கண்ட மகிழ்ச்சியில்  வளவில் கோழியை கலைத்துக்கொண்டு ஓடிய சேவலை  பாய்ந்து பிடித்து அடித்து குழம்பு வைக்க அண்ணியிடம் கொடுத்து விட்டு  என்ரை தங்கச்சி  கடற்புலி பெரிய பொறுப்பாளர் வேறை  எண்டு அக்கம் பக்கமெல்லாம் பெருமையடித்த அண்ணன்.  இரண்டு நாட்களே தங்கிவிட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பிவிட்டாள்.மீண்டும் சண்டை தொடங்கி விட்டிருந்த நாளொன்றில் கடல் கரும்புலிகளிற்காக பெயரை கொடுத்து கடிதமும் எழுதி கொடுத்து விட்டு படகோட்டும் பயிற்சிகளும் எடுத்துக்கொண்டிருந்தாள்.. முன்பெல்லாம் பெயர் கொடுத்திருந்தாலும் கடிதம் அனுப்பி பலகாலங்களின் பின்னர் அரிதாகவே அழைப்புவரும். ஆனால் கிளி நொச்சியை விட்டு இயக்கம் பின்வாங்கிய பின்னர் அழைப்புக்கள் அடிக்கடி வரத்தொடங்கியிருந்தது.அன்று அவளிற்கும்  அவளது முகாமில் பெயர் கொடுத்திருந்த இன்னொருத்திக்கும் அழைப்பு வந்திருந்தது. அன்றிரவு  இவர்கள் இருவருடன்  இரண்டு ஆண்களாக  நான்கு பேர் அவருடனான விருந்தின் பின்னர் ஜஸ்கிறீமும் குடித்து   சில புகைப்படங்கள் என சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் வாகனமொன்று நால்வரையும்  தாங்கிய படி போய்க்கொண்டிருந்தவேளைதான்  அவர்களிற்கான  இலக்கு என்ன  என்பதை ஒருவர் விளங்கப்படுத்தினார்.

முல்லையின் கடற்பகுதியொன்றில்  இறங்கியவர்கள்   வெடி மருந்து நிரப்பி தயார் நிலையில்  இரு சிறிய வேகப் படகுகளில் ஏறியதும் தங்களிற்கு தந்திருந்த தொலைத்தொடர்பு  கருவிகளை  தங்களோடு இணைத்து அவை சரியாக இயங்குகின்றதா என சரி பார்த்துக்கொண்டார்கள். அவளோடு படகில் ஏறியவன்  தன்னை நீலவாணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவன்  அவனே படகை இயக்கினான் .கையை  உயர்த்திக் காட்டிவிட்டு படகை  வேகமெடுத்தான். முன்னால் கடற்புலிகளின்  படகுகள் பாதுகாப்புகொடுத்தபடி வழிகாட்டியபடி போய்க்கொண்டிருந்தது.
அவர்களது இலக்கு  முல்லைக் கடலில் புதிதாக கொண்டு வந்து வந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த  நவீன ராடர்கள் பொருத்தப்பட்ட தாக்குதல் கப்பல்தான் இவர்களது இலக்கு . இலக்கை  நெருங்கத் தொடங்கியதுமே  கப்பலை சுற்றிவர பாதுகாப்பில் ஈடு பட்டிருந்த டோராக்கள் விழித்தக்கொள்ள சண்டை தொடங்கியது . கடற்புலி படகுகள்  கடற்படையின் டோராக்களை  கப்லை விட்டு தூரமாக இழுத்துச்செல்ல போக்கு காட்டியபடி சண்டையை  தொடர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை கடற்படைக்கு  அது பழகிப்போன தந்திரமாகிவிட்டிருந்தது.  டோராக்கள் கப்பலை சுற்றியபடியே  சண்டை நடந்தது கப்பலில் இருந்தும் பீரங்கிகளை ஏவியபடி இருந்தார்கள்.மற்றைய படகு வேகமாக கப்பலை நோக்கி போய்க்கொண்ருந்தபோதே  டோராவின் தாக்குதலால் வெடித்து சிதறிப்போனது. அதுவரை தூரமாக  படகை வெட்டி வெட்டி ஓடிக்கொண்டிருந்தவன்  அவளிடம்  இப்பிடியே சும்மா சுத்திக்கொண்டு இருக்கேலாது மற்றது  வெடிச்சிட்டுது  நாங்களும் அடிப்பம் எண்டு எனக்குநம்பிக்கையில்லை  அதாலை நீ கடல்லை குதி நான் தனியா முயற்சி பண்ணிப் பாக்கிறன் என்றவனிடம்  குதிக்கமாட்டன் என்று அடம் பிடித்தாள்.

அலைமகள் சொல்லுறதை கேள் நீ இருந்தல் இன்னொரு இலக்கை  அடிக்கலாம் அல்லது இண்டைக்கு இது சரிவராட்டில் திரும்ப நீயே திரும்ப அடிக்கலாம் வீணாய் எதுக்கு இரண்டு பேரும் சாவான்.அதக்குத்தான் சொல்லுறன் குதி என்று கத்தினான். ஆனாலும் அவள் அசையவில்லை. படகின் வேகத்தை குறைத்து வெட்டி திருப்பியவன் கொஞ்சம் நிலை குலைந்த அலைமகளை கடலில் தள்ளிவிட்டு  படகின்  வேகத்தை கூட்டினான் சில நிமிடங்களில் அந்தப் படகும் வெடித்து சிதறியது இலக்கு கைகூடவில்லை. கடலில் நீந்திக்கொண்டிருந்த  அலைமகளை  அருகில் வந்த கடற்புலிகள் படகில் தூக்கி போட்டபொழுது  தலையில் இரத்தம் வளிந்து கொண்டிருந்தது சிறிது நேரத்தில் மயங்கிபோய்விட்டாள். படகில் இருந்து விழும்பொழுது அவள் தலை படகில் மோதி வலப்பக்கம் பக்கவாட்டாக வெடித்துப்போய்விட்டிருந்தது. கரைக்கு கொண்டு வந்தவர்கள் அவளை வைத்திய சாலையில் சேர்த்துவிட்டு போய்விட்டார்கள். களமும் காட்சிகளும் வேகமாக மாறிக்கொண்டிருந்தது.

   000000000000000000000000000000000000000000

வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து  26 பேரை ஏற்றி வந்த பேரூந்து யாழ்நகரத்தில் அவர்களை இறக்கிவிட்டு போய்க்கொண்டிருந்தது. அவர்களை அங்கு நின்றவர்கள் எல்லாருமே வேற்றுக்கிரக வாசிகளைப் போலவே  பார்த்தார்கள்.அவர்களது உடையும் கையிலிருந்த தொண்டு நிறுவனமொன்றின் பைகளும் அவர்களை புனர்வாழ்வு காரர் அல்லது முன்னை நாள் காரர்  என்று அடையாளப் படுத்தியிருந்தது. அவரவர்  தனியாக  விடைபெறாமலேயே மெளனமாக பிரிந்து போக அவளும் யாழ் நகரத்தை  ஒரு தடைவை பார்த்தாள் நிறையவே மாறிப் போயிருந்தது. பில்லா 2 என்ற பிரமாண்டமான கட்டவுட்டில்  அஜித் பிஸ்ரலைக்காட்டி மிரட்டிக்கொண்டிருந்தார்  அப்படியொரு  மொடலை  அவள் பார்த்தேயில்லை என்ன மொடல் பிஸ்ரலாக இருக்கும்  யோசித்தாள்.  எண்டாலும்  இது இப்ப தேவையில்லாத வேலை  அங்கிருந்து நகர்ந்தாள். அவளையே பலரும் பார்ப்பது போல இருந்த. நல்லவேளையாக புனர்வாழ்வு முகாமில் தொண்டு நிறுவனமொன்று அவளிற்கு கறுப்பு கண்ணாடி வாங்கிக்  கொடுத்திருந்த படியால் அவளது இடக்கண் குழி யாரையும் மிரளவைக்கவில்லை. அங்கு நின்றவரிடம் கோப்பாய்க்கு போவதற்கான  பேரூந்து  இடத்தை கேட்டு பேரூந்தில் ஏறி அமர்ந்தாள்.

தடுப்பில் இருக்கும் போதும் பிறகு புனர்வாழ்வு முகாமிலையிருந்தும்  தனது விபரங்கள் எழுதிய கடிதங்கள் கொடுத்து விட்டிருந்தாள்.  அந்த இரண்டரை வருசத்திலை ஒருதடைவை கூட வந்து பாக்கேல்லை.அவளிற்கு அண்ணனிலும் அம்மாவிலும் கோபம்தான் .சிலநேரம் கடிதம் குடுத்தாக்கள் கொண்டு வந்து குடுத்துவிட்டிருக்க மாட்டினம். இல்லாட்டி  வீட்டுக்காரருக்கு  வந்து பாக்கிறதக்கு இடம்வலம் தெரியாமல் இருந்திருக்கும்.என்று தனக்குதானே சமாதானமும் சொல்லிக்கொண்டாள். வீடு வந்து சேரும்போது  இரவாகத் தொடங்கியிருந்தது.  வீட்டிற்கு போனவளை அம்மா ஓடிவந்து கட்டியணைக்கவில்லை. அண்ணன் மகிழ்ச்சியில் சேவலைத்தேடி ஓடியிருக்கவில்லை. ஒரே மெளனம் அவரவர் குனிந்தபடி இருக்க அண்ணிதான் தொடங்கினாள்.
சனியன் செத்து துலைஞ்சிட்டு எண்டு நிம்மதியா இருந்தனாங்கள்  இப்ப என்னத்துக்கு இஞ்சை வந்தது. ஒரு வருமானத்திலை நாங்களே மூண்டு பிள்ளையளை  வளக்க படுகிற பாடு அதக்குள்ளை இதுவேறை  யார் வைச்சு சாப்பாடு போடுறதாம். பிடி பட்ட பெட்டையளுக்கெல்லாம் என்ன நடந்தது எண்டு கேள்விப்பட்டனாங்கள். உவளை மட்டும் சும்மா விட்டிருப்பாங்களோ  இனி ஆமிக்காரன் வேறை தேடி வீட்டை வரப்போறாங்கள்....

அண்ணி கதைக்கிறதை  யோசிச்சு கதை .அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் ஆற்றாமை எல்லாத்தையும் சேத்து கத்தினாள்.

அப்பொழுதுதான் அண்ணனிற்கு வீரம் வந்திருந்தது" அண்ணியை  எதுக்கடி கத்துறாய் சும்மா உள்ள பெட்டையளையே கரை சேக்க படுகிற பாடு எனக்கு வயசுக்கு வாற வயசிலை  ஒரு பெட்டை வேறை இருக்கு. உனக்கு  வயசும் வட்டுக்கை போட்டுது  இதுக்கை நீ தடுப்பாலை  வந்திருக்கிறாய் ஒற்றைக் கண்வேறை இல்லை உன்னை யாரடி கட்டுவாங்கள். நாங்களா உன்னை  இயக்கத்திலை சேரச்சொன்னாங்கள் நீயாத்தானே  ஓடிப்போனனி  என்னாலை எல்லாருக்கும் சோறு போட ஏலாது எங்கையாவது போய் துலை. என்றவன் உள்ளே போய்விட்டான்.
அதுவரை மொளமாக நின்றிருந்த அம்மா அருகில் வந்து மெதுவாக " பிள்ளை  உன்னை  பாக்க வரேல்லை எண்டதுமே உனக்கு விளங்கியிருக்கவேணும். ஆம்பிளை பிள்ளையெண்டாலும் பரவாயில்லை ஆனால்..என்று இழுத்த அம்மாவை.   அம்மா நீயுமா.வேண்டா வெறுப்பாக பார்த்தவள் வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கியிருந்தாள்.இரவும் தனிமையும் எப்பொழுதுமே அவளை பயமுறுத்தியதில்லை. சந்திக்கு வந்தவள் தன்னுடன் தடுப்பில் இருந்து வெளியேறிய நண்பி கொடுத்துவிட்டிருந்த சிறுப்பிட்டி விலாசம் அவளிடம் இருந்தது.

0000000000000000000

சிறுப்பிட்டியில்  நண்பியின் வீட்டில் தங்கியிருந்தவளிற்கு பிரச்சனைகள் இருக்கவில்லை. ஆனாலும்  எத்தனை நாட்கள் மற்றவர்களிற்கு பாரமாக இருப்பது என்று மனது உறுத்திக்கொண்டிருந்தது.இப்போ  மீண்டும் விஜித்தாவாக மாறி விட்டிருந்தாள்.நண்பியின் அண்ணன்கள் இரண்டுபேர்  பிரான்சில் இருந்ததால்  அவளையும் அங்கு கூப்பிட  ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தது. அவளும் போய் விட்டால்  அந்த வீட்டில்  எந்த உரிமையோடு  தான் அங்கு இருப்பது என்கிற  பெரியகேள்விக்கு  ஒரு வழி கிடைத்தது. ஒஸ்ரேலியாக்கு கப்பல்லை போகலாமாம்.காசும் கனக்க இல்லை நம்பிக்கையான ஆக்கள்தான்  என்கிற தகவல். பண ஏற்பாடுகள்  அவளது நண்பியின் உதவியோடும்   அவளும் முயற்சிகள் செய்து  முடித்திருந்தனர் இனி பயண ஏற்பாடுதான். அவளிற்கு புதியதாய் இன்னொரு நம்பிக்கை பிறந்திருந்த இரவுப்பொழுதொன்றில் அவளை ஏற்றிப் போவதற்கு ஒரு ஆட்டோ வந்திருந்தது.

நீண்டகாலத்தின் பின்னரான இன்னொரு கடற்பயணம்.  இது நாட்டிற்கானது அல்ல நாட்டை விட்டு தப்பியோடுவதற்கானது. விருந்தும் இல்லை ஜஸ்கிறீமும் இல்லை.சீருடையும் இல்லை. சிறிய  கைப்பையில் சில உடுப்புக்கள் அடையாள அட்டை .புனர்வாழ்வு முகாம் சான்றிதழ்  இவைகள்தான் நண்பி கையசைத்தாள். கடற்கரையொன்றில் ஆட்டோ இறக்கிவிட்டு போய்விட  சிறிய படகொன்றில் துடுப்பு போட்டபடி நாலைந்து பேராக ஏற்றி கொஞ்ச தூரத்திலேயே நின்றிருந்த ஒரு றோலர் படகில் கொண்டு போய் சேர்த்தார்கள்.  றோலரில் ஏறியவள் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் இயந்திரத்தை இயக்கியக்கிக்கொண்டிருந்தவனை பார்த்ததும் ஆச்சரியம். "கடல் அரசன்  எப்பிடியிருக்கிறாய்"  என்றவளிடம் அருகில் வந்தவன் காதருகில் இப்ப கடல் அரசனெல்லாம் கிடையாது  வெறும் ஆண்டி. . என்ரை பெயர்  ஜேக்கப் என்றதும் தனது தவறை உணர்ந்தவளாய் நாக்கை கடித்தவள் என்ரை பெயர் விஜி என்றாள்.  அவனும் அவளோடு கடற்புலியில்  இருந்தவன் .குடாரப்பு  தரை இறக்கத்தில் திறைமையாக செயற்பட்டான் என்று பரிசும் வாங்கியிருந்தவன் அதிவேகப் படகுகளை  லாவகமாக செலுத்துவான்.  இப்பொழுது பழைய  றோலர் ஒன்றின்  இயந்திரத்தை  இயக்கிக் கொண்டிருந்தான்.

றோலர் நகரத் தொடங்கியது.  படகில்  பெண்கள்  குழந்தைகள்  என நாற்பத்தியாறு பேர் இருந்தனர். அவள்  தடுப்பிலும்   புனர்வாழ்விலும் பார்த்த சில  முகங்களும்  தெரிந்தது. படகின் பாதியை எரிபொருளும் சாப்பாட்டு சாமான்களும் தண்ணீர் கான்களும். நிரப்பியிருந்தது. ஒரு  இரவும் ஒரு பகலும் ஓடி முடித்த றோலர் இரண்டாவது நாளின்  இரவில்  இயந்திரம் இயங்க மறுத்தது. ஆளாளிற்கு முகத்தில் கலவரம். ஜேக்கபிடம் போனவள் என்ன பிரச்சனை என்றாள்.  ஏதாவது சின்னப் பிரச்சனையாத்தான் இருக்கும் தொடந்து ஓடினதாலை இஞ்சின் சரியான சூடாயிருக்கு ஆறினால் பிறகுதான்  கை வைக்கலாம். நாங்கள் பெருங்கடலுக்கை வந்திட்டதாலை இனி பிரச்சனையில்லை  ஆறுதலாய் நிண்டும் போகலாம்  விடிஞ்சு  வெளிச்சம் வந்தால்தான்  வடிவாய் பாக்கலாம் என்றான் .அதைக்கேட்டபின்னர்தான் அனைவரிற்கும் நிம்மதி.  அன்று பெளர்ணமி நாள் நல்ல வெளிச்சமாக இருந்தது  கடலின் அசைவும் அதிகமாவே இருந்தது  கடல் அசைவு ஒத்துவராமல்  சத்தியெடுத்தவர்கள்.  அழுத குழந்தைகள் என்று எல்லாருமே நித்திரையாகிப் போயிருந்தார்கள்.

அண்ணாந்து வானத்தைப்பார்தபடி நின்றிருந்தவளின் அருகில் வந்தஜேக்கப்  என்ன விஜி அண்ணாந்து பாத்தபடி யோசினை  உமக்கு  ஒஸ்ரேலியாவிலை  சொந்தக்காரர் யாரும் இருக்கினமோ?

இல்லை உனக்கு?

எனக்கும் ஒருத்தரையும் தெரியாது  

அதுசரி எனக்கு ஆரம்பத்திலையிருந்தே ஒரு சந்தேகம் நாங்கள் ஒழுங்கா ஒஸ்ரேலியா போய் சேருவமா?

ஏன்  என்னிலை நம்பிக்கையில்லையோ?

உன்னிலை நம்பிக்கையிருக்கு ஆனால் இந்த பழைய றோலர் படகிலைதான் நம்பிக்கையில்லை.

செத்துபோயிடுவம் எண்டு பயப்பிடுறியா.

பயமா? மெல்லிதான் புன்னகைத்தவள். ஊரிலை தினம் தினம் சாகிறதை விட இப்பிடி கடல்லை ஒரு நாளிலை செத்துப்போகலாம்.அதுக்குத்தான வந்தனான்.

அப்ப எதுக்கு இவ்வளவு செலவு பேசாமல் குளத்திலையோ கிணத்திலையோ விழுந்திருக்கலாமே நக்கலாகவே கேட்டான்.

ஓசியிலை தற்கொலை செய்யிற அளவுக்கு நான் ஒண்டும் கோழையில்லை.

சரி சரி ரென்சன் ஆகாதை  சும்மா பகிடிக்குத்தான்.   உனக்கு  ஒரு அண்ணன்  இருக்கிறதாய்  சொன்ன ஞாபகம். ஒஸ்ரேலியாவிலையும் ஒருத்தரையும் தெரியாதெண்டுறாய் இப்பிடி தனியா வேறை  வெளிக்கிட்டிருக்கிறாய்  என்ன செய்யப் போறாய்.?

ஒரு பெருமூச்சை உள்ளிழுத்த விட்டபடி   புனர்வாழ்வு முகாமிலையிருந்து வெளியேறிய பின்னர் நடந்து முடிந்தவற்றை  அவனிடம் சொல்லி முடித்தாள்.

அனைத்தையும் கேட்டு  முடித்தவன் அவளிடம் சரியாத்தான் கஸ்ரப் பட்டிருக்கிறாய்  ஒவுஸ்ரேலியாபோனதும் யாரையாவது கலியாணம் கட்டிக்கொண்டு அடுத்த வாழ்க்கையை ஆரம்பிக்கப் பார்

கலியாணமா?  இயக்கத்துக்கு போகேக்குள்ளை  இருபது வயது  பதினைஞ்சு வருசம் இயக்க வாழ்க்கை  இரண்டரை வருசம் தடுப்பும்  புனர்வாழ்வும். இப்ப வயது முத்பத்தெட்டை  எட்டித்தொடப் போகுது ஒற்றைக்கண்ணும் இல்லை வசதியும் இல்லை. இப்பவெல்லாம்  மனசுக்கு முடியாதெண்டு  தெரியிற எதையும் நான் முயற்சிக்கிறேல்லை ஜேக்கப்.

அவளருகில்  இன்னமும் நெருக்கமானவன்  நீ சம்மதம் எண்டால் சொல்லு உன்னை  நானே ...

அவன் முடிக்க முதலேயே எழுந்த பேரலையொன்று  படகை  தூக்கி பக்கவாட்டாக போடவே  படகு உடைந்து  மூழ்கத்தொடங்கியது.  தண்ணீரிற்குள் அமிழ்ந்து போன அவளும்  சுதாகரித்துக்கொண்டு நீந்தி மேலே வந்து பார்த்தாள்.  ஒரே ஓலக்குரல்கள்.  வரமாட்டார்கள் என்று தெரிந்தும்  அந்தோனியாரையும் பிள்ளையாரையும்   மாதாவையும் அம்மாளையும்  காப்பாற்றச்சொல்லி  அழைத்த குரல்கள்.நீந்தத்தெரிந்தவர்கள் எங்கே போவதென்று தெரியாமல் ஆளிற்கொரு பக்கமாய் நீந்தத்தொடங்கியிருந்தாரகள்.  மிதந்துகொண்டிருந்த  பிளாஸ்ரிக் கான்கள்  உடைந்த படகின் பலகைகளையெல்லாம் தேடித் தேடி  தத்தளித்தவளிர்களிடம் கொடுத்துக்கொண்டிருந்த ஜேக்கப் விஜியை கவனித்தவன் அவசரத்தில்  அவளது பெயரையும் மறந்து "அலை அந்த பிள்ளையை காப்பாத்து என்று கத்தினான். தாயொருத்தி தனது பிள்ளையை தலைக்கு மேலே தூக்கியபடி தாண்டுகொண்டிருந்தாள். ஒரு செக்கன்கள் அமைதியாக அனைத்தையும் பார்த்தவள் அந்த இடத்தை விட்டு நீந்தத் தொடங்கினாள் . " அலை போகாதை அலை இவங்களை காப்பாத்து..போகாதை  ..... எடியேய் போகாதையடி ஜேக்கப் கத்திக்கொண்டிருந்தான். தனது மனதிற்கு முடியாது என்று தோன்றும் எதையும் முயற்சிப்பதில் அவளிற்கு இப்போதெல்லாம்  ஆர்வமில்லை.

இந்தப் பெருங்கடலில்  கடல் நீரின்குளிரிலும் இந்த செக்கனில் போகாத உயிர்கள் சில நிமிடத்திலேயோ  அல்லது சில மணித்தியாலங்களின் பினன்னரோ போகத்தான் போகின்றது. அதோ அவசரமாய் நீந்திக் கொண்டிருப்பவர்களிற்கும் இந்த நிலைதான் .  நீந்துவதற்கு இடைஞ்சலாக இருந்த நீள பாவாடையையும் கைநீள சட்டையையும் உருவியவள்  இங்கு என்னை பார்ப்பதற்கு எந்த கலாச்சாரக் கண்களும் இல்லை என நினைத்தபடியே  கடலில் நழுவ விட்டபடி வேகமாக நீந்தினாள். இப்பொழுது அவளிற்கு எந்த இலக்குகளும் இல்லை  அவலச்சத்தங்களிலிருந்து தூரமாக போய்விடவேண்டும் அது மட்டுமே நோக்கம். நீண்ட நேரம் நீந்தியிருப்பாள் இப்பொழுது கடலின் இரைச்சலைத்தவிர அவளது காதிற்குள் எதுவும் இல்லை. அப்படியே  திரும்பி கை கால்களை  அகலவிரித்து அண்ணாந்து  படுத்துக்கொண்டாள். அழகிய நிலவும்  அதைச்சுற்றி ஆயிரமாயிரம் நட்சத்திரங்களும். இந்த உலகம் எவ்வளவு அழகானது அதே நேரம் அவ்வளவு பயங்கரமாதும்கூட.  எனக்கு மட்டும் ஏன் பயங்கரத்தின் பக்கங்கள் மட்டும்  அதை நானாகத் தேடிப்போனேனா? அல்லது  அவை என்மீது வலிந்து திணிக்கப்பட்டவையா?? அவளின் ?கேள்விக்கு அவளேதான் பதிலும் சொல்லியாக வேண்டும். எவ்வளவு நேரம் அப்படியே ஆகாயத்தை பார்தபடி இருந்திருப்பாள் எனத்தெரியாது  கடல் குளிரில் உடல் விறைக்கத் தொடங்கி கை கால்கள் சோர்வடைந்து  அவளது இடக்கண் குழியில் கடல் நீர் நிரவத்தொடங்கியிருந்தது.

Posted Image

சிலநாட்கள் கழித்த பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் ..கரையொதுங்கும் சடலங்கள் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்தர்களுடையதாக இருக்கலாம்.



யாவும் கற்பனை அல்ல

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்

0
0
முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்
சாத்திரி ஒரு பேப்பர்

யுத்தம் முடிந்து ஆண்டு  மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட  மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு  தங்கள் உறவுகளை பார்க்கவும்  வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை  செலவிடவென  செல்லும்  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி  நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால்  இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை  தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால்  அப்படிப் போகின்றவர்கள்  போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு  திரும்பி வந்தால்  எவ்வித சிக்கல்களும் இல்லை.  
போகிறவர்கள் தங்கள்  தேவைகள் அல்லது  வேலைகள் தவிர்ந்து  வேறு விடயங்களில்  மூக்கை  நுளைப்பது பிரச்சனையாகிப் போகின்றது.  அதில் முதலாவது   போகின்றவர்கள்  அவர்களிற்கு தெரிந்த அல்லது  அவர்கள் கண்ணில்  படும்  காயமடைந்து அங்கவினர்னகளாகி அல்லது மாற்றுத் திறநாளிகளாக  வாழும் முன்னை நாள் போராளிகளை படமெடுத்து விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பியதும்  அதனை தங்கள் தளங்களில் அல்லது முகப் புத்தகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.

பதிபவரது நோக்கம் என்னவாக இருக்கும் என்பதற்குமப்பால். அதனை பார்ப்பவர்கள் அதற்கு லைக் போட்டு பார்வைகளை  கூட்டுகின்றார்கள். அண்மையில் ஊரிற்கு போயிருந்த ஒருவர்  கைகள் இரண்டு இயங்காத முன்னை நாள் பெண் போராளியொருவர்  வாளிக் கயிற்றினை  வாயால் கவ்வி இழுத்து  கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளுவதை  படமெடுத்து  தனது முகப் புத்தகத்தில் பதிந்திருந்தார். அந்தப் படத்திற்கு சுமார் நூற்று முற்பதற்கும் மேற்பட்டவர்கள் லைக்  பண்ணியிருந்தார்.   அதனை பார்த்த எனக்கு உண்மையில் எதுவுமே புரியவில்லை.  வாயால் தண்ணி அள்ளுவதற்காக லைக் போட்டார்களா? அல்லது அவரது கைகள் இரண்டும்  இயங்காதற்கு  லைக் போட்டார்களா?? அல்லு மன்னை நாள் பெண் போராளி என்பதற்காகவா? அல்லது அந்தப் படம் தத்துரூபமாக எடுக்கப்பட்டதற்கா?  தனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி  தனது கணவனையும் வாழ்வையும் தொலைத்து  இரண்டு கைகளும் இயங்கமுடியாத நிலையிலும் நம்பிக்கையோடு தன் வாழ்நாளை  எதிர் கொள்ளும்  ஒரு பெண் போராளியின் படம்  லைக் பண்ணக்  கூடியததாகவா இருக்கின்றது?  இதனை  நண்பர் ஒருவரிடம் நான் கூறி கவலைப்பட்டபொழுது அவர் சொன்ன விடயம். அம்மா இறந்து போனார்  என்று ஒருவர்  முகப் புத்தகத்தில் தனது தயாரின் படத்தை போட்டு மரண அறிவித்தல்  போட்டிருந்தாராம். அதற்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லைக் பண்ணியிருந்தார்களாம்.

 அதை விட இது பரவாயில்லையென்றார். இரண்டாவது விடயம்.  இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர்   இலங்கையரசு  தனது வெற்றியை  பறைசாற்றவும். தம்மை யாரும் வெல்ல முடியாது  தங்களோடு  மோதுபவர்களிற்கு இதுதான் முடிவு என்கிற  மமதையை   தன் குடிமக்களிற்கும் உலகிற்கும்  சொல்வதாற்காக முல்லைத் தீவில்  புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை சேகரித்து ஒரு கண்காட்சி  இடத்தையும்.  பிரபாகரன் வசித்த  அதி உச்ச பாதுகாப்பு வசதியுடன் அமைந்திருந்த  நிலக் கீழ்  வீட்டையும்  கடற் புலிகளின்  பயிற்சி பெற்ற நீச்சல் குளத்தையும்  சுற்றுலா மையங்களாக்கியிருக்கின்றது அனைவரும் அறிந்த விடையம்.  தங்கள் இராநுவம் வெற்றி கொண்ட இடங்களை  பார்த்து மகிழ்வதற்கு தினமும்  தென்னிலங்கையிலிருந்து  பெருந்தொகை சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். இதுவும் அறிந்த விடையம்தான்.

 ஆனால்  எம்மவர் அறியாத விடயம் வெளிநாடுகளில் இருந்து செல்லும்  எம்மவர்களும் வாகன ஒழுங்குகள் செய்தும்  தனியாகவும்  பெருமளவில் இந்த இடங்களை பார்வையிட செல்கிறார்கள். அவற்றை கண்டு  மகிழ அவை  எமது வெற்றிச் சின்னங்களும் அல்ல  களித்து மகிழ அவை எமது சுற்றுலா  தலங்களும் அல்ல. எமது இனத்தின் அவலத்தை  எமது  முப்பதாண்டு கால விடுதலை யுத்தத்தின் தோல்வியை  எமது மாவீரர்களின் கனவை எமது உறவுகளின் உணர்வுகளை என அனைத்தையும் அழித்து புதைத்த இடங்கள் அவை.அவற்றை எப்படி கண்கொண்டு பார்க்க முடியும்? முடிகிறதா உங்களால்.
ஆனால் இலங்கையரசு வெளிநாடுகளில்  இருந்து  இவற்றை பார்க்கப் போகும்  தமிழர்களின்  விபரங்களை மட்டும் பதிந்து விட்டு அவர்களிற்கு ஒவ்வித சோதனை கெடுபிடிகளையும் செய்வதில்லை என்பதோடு  அவர்களை இன் முகத் தோடு வரவேற்கவும்  முடிந்தளவு  தமிழில் உரையாடக்கூடிய  இராணுவத்தினரையும் இந்த இடங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். இதே நேரம் உள்ளுரில் உள்ள ஒரு தமிழர் இந்த இடங்கிளிற்கு போவதென்றால்  பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

 அப்படி வெளிநாட்டிலிருந்து பொய் வந்தவர் இங்கு வந்து மற்றவர்களிடம். ஊருக்கு போவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆமிக்காரன் கைப்பையை கூட திறந்து பாக்கேல்லை. தமிழிலையே சிரிச்சு கதைக்கிறாங்கள் என்றதும். அந்தக் கதையை கேட்டவர் அடுத்த  விடுமுறைக்கு  இலங்கைக்கு போவதற்கு மலிவு விலையில் றிக்கற் தேட ஆரம்பித்து விடுவார். இங்கிருந்து இலங்கையரசின்  உளவியல் யுத்தம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் தங்கள் புகலிடக் கோரிக்கைகளில் புலிகளாலும் தங்களிற்கு உயிர் அச்சுறுத்தல் என்றுதான்  80 வீதமானவர்களிற்கு மேற்பட்டவர்கள்  வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அப்படி வாக்கு மூலம் கொடுத்து  அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு  பின்னர் போராட்டங்கள் ஊர்வலங்களில் கொடியை பிடித்தக்கொண்டு எங்கள் தலைவன் பிரபாகரன்  புலிகள் மீதான தடையை நீக்கு என்று கத்தியதும் அதை கேட்டு மக்கள்  திரண்டு விட்டார்கள் என்று  பயந்து போய் நடவடிக்கை எடுப்பதற்கு  வெள்ளைக்காரன்  என்ன கேணைப்பயலா?

புலிகள் மீதான தடை கொண்டு வருவதற்கு  ஒவ்வொருவரும்  புலிகளாலும் தங்களிற்கு உயிராபத்து  என்று கொடுத்த வாக்குமூலங்களும் ஒரு காரணம். அது மட்டுமல்ல  வெளிநாடுகளில் நடந்து முடிந்த ஊர்லங்கள் ஆர்ப்பாட்டங்களிற்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு  வெளிநாடுகள் போசாமல்  வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும்.  இதே போலத்தான்  முல்லைத் தீவிற்கு சுற்றுலா பயணிகளாக படையெடுக்கும்  எம்மவர்களது விபரங்கள் அனைத்தையும் திரட்டி ஒரு வருடத்தில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தங்களால் வெற்றி கொள்ளப் பட்ட பயங்கரவாதத்தின் வெற்றிச்சின்னங்களை பார்வையிட்டு படமெடுத்து சென்றார்கள்  எனவே வெளிநாடுகளில் யாரோ ஒருசில தமிழர்கள்  எம் மீது போர்குற்றம் விசாரணை என்று ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் புலிகளின் எச்சங்கள் என்று சுலபமாக தன்து பிரச்சனைகளை முடித்துக் கொள்ளும். அதே நேரம் இங்கேயும்  தலைவர் பிரபாகரன் வாழ்ந்த நிழக்கீழ் வீட்டையும்  புலிகளின் ஆயுதங்களின் படங்களும் முகப்புத்தகத்தில்  போட்டு லைக்குகள் போய்க்கொண்டு இருக்கின்றது.

இறுதியாக.  யுத்தத்தில்  பல்லாயிரக் கணக்கான   பாடசாலைகள் நாசமடைந்து  இன்னமும் அவை திருத்தப்படாமல் மாணவர்கள் இடிந்த கட்டங்களிலும் கொட்டில்களிலும் மழைவந்தால் எழுந்து நின்றும் கல்வியை தொடந்து கொண்டிருக்கின்ற நிலைமையே தொடர்கின்றது ஆனால் அவைக்கு அருகில் உள்ள கோயில்கள் எல்லாமே புனரமைக்கப் பட்டு கோபுரங்கள் கட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு குளங்களும் புதுப் புது வடிவங்களில் அமைக்கபட்டு வருவது மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய்  எமது வாழ்விடங்களை அழித்து எம் மக்கள் தலைகளில் குண்டு மாரி பொழிந்த  இலங்கை விமானப்படை  உலங்கு வானுர்திகளை பல இலட்சங்கள்  கொடுத்து வாடைகைக்கு அமர்த்தி சில  நிமிடங்கள் மட்டுமே  வானத்தில் வட்டமிட்டு கோயில்கள் மீது பூமாரி பொழிய வைக்கின்றனர். எமது அடுத்த சந்ததியையும் மொழியையும் காப்பாற்றப் போவது கல்வி மட்டுமே அதுவே எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்.  கோயில்களோ சாமிகளோ அல்ல.  அதற்காக கோயில் கூடாது என்று சொல்லவில்லை  கோயில்கள்.  பணம் மெத்திப்போய் கூத்தடிப்பவர்களின் கூடாரமாகிவிடக்கூடது .சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே  உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.

Viewing all 126 articles
Browse latest View live